புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது! Poll_c10முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது! Poll_m10முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது! Poll_c10 
64 Posts - 58%
heezulia

41 Posts - 37%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது! Poll_c10முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது! Poll_m10முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது! Poll_c10 
106 Posts - 60%

62 Posts - 35%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது!

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 01, 2011 12:05 pm

பழிவாங்கும் நோக்கில் அதிமுக போடும் பொய் வழக்குகளைக் கண்டித்து இன்று தடையை மீறி திமுகவினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.

இதில் திமுகவின் முன்னணி தலைவர்கள் முக ஸ்டாலின், துரை முருகன், கேஎன் நேரு, தாமோ அன்பரசன் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க.வினர் மீது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து ஆகஸ்டு 1-ந் தேதி ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெறும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்தது. தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் மாநிலம் தழுவிய அறப்போர் நடத்துவார்கள்.

மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெறும். அதில் தி.மு.க.வினர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.

முக ஸ்டாலின்

வடசென்னையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அறப்போர் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. மாவட்டங்களில் போராட்டத்துக்கு தலைமை தாங்குவோர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. வினரின் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட தி.மு.க.வினர் முடிவு செய்தனர்.

வட சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக இன்று காலை 8.30 மணியில் இருந்தே தொண்டர்கள் குவிய தொடங்கினர். சுமார் 10 மணியளவில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் 10.30 மணிக்கு வந்தார். அதன் பிறகு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

குஷ்பு பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்தில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., முன்னாள் அமைச் சர்கள் பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன்,வட சென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். குஷ்புவும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்கை சிவம், சேகர்பாபு மற்றும் நிர்வாகிகள் வக்கீல் துலுக்கானம், இளைய அருணா, நெடுமாறன். செஞ்சி சண்முகம், மலர் விழி, தேவராசன், கிரி ராஜன், துரைசாமி, சங்கர், அன்பழகன், கணேசன், சொ.ஜெய்சங்கர், கவுன் சிலர் சிவலிங்கம் உள்பட ஏராளமான தி.மு.க. பிரமுகர்கள் திரண்டனர்.

துணை மேயர் சத்திய பாமா, மகளிர் அணி நிர்வாகிகள் குருவம்மாள், சிம்லா பாபு, சகுந்தலா, சூரியா, கவுன்சிலர் தேவகி, லதா, ராஜேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் மீனா உள்ளிட்ட பெண்களும் கலந்து கொண்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

லாரியே மேடையானது

போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்தில் மேடை எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. ஆனால் ஒரு லாரியை மேடையாக்கி தி.மு.க. நிர்வாகிகள் அங்கு நிறுத்தி இருந்தனர்.

மேயர் சுப்பிரமணியன்

தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வசந்தி ஸ்டான்லி எம்.பி., அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சரும் மாநில மகளிர் அணி புரவலர் புலவர் இந்திரகுமாரி, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், ஜின்னா, ஆயிரம்விளக்கு உசேன் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் செய்த வசந்தி ஸ்டான்லி எம்.பி., மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

காஞ்சிபுரம்....

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட்டில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிந்தனர். அங்கு அவர்கள் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி, வைத்திலிங்கம், எஸ்.டி. உக்கம்சந்த், சன்பிராண்ட் ஆறுமுகம், நகர செயலாளர் சேகர், படப்பை மனோகரன், பாலவாக்கம் விசுவநாதன் உள்பட 1000-த்திற்கும மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூரில்...

திருவள்ளூர் பஜார் வீதியில் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில்...

சேலம் சத்திரம் பகுதியில் இருந்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த இன்று பேரணியாக வந்த செல்வகணபதி எம்.பி. உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாநகராட்சி அருகே இருந்து ஊர்வல மாக புறப்பட்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழ் செல்வன், சின்னத்துரை, கே.ஆர்.ஜி.தனபாலன் மற்றும் நிர்வாகிகள் உள்பட நுற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு சேலம் மாநகராட்சி துணை மேயர் பன்னீர்செல்வம், சூரமங்கலம் மண்டல குழு தலைவர் சரவணன், கவுன்சிலர் மணிமேகலை குப்புசாமி உள்பட 27 பேர் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இன்று தடையை மீறி முன்னாள் அமைச்சரும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் ராஜா, முத்துசாமி மற்றும் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நகராட்சி தலைவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்...

திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வெள்ளக்கோவில் சாமி நாதன், திருப்பூர் மேயர் செல்வராஜ், மாநகர துணை செயலாளர் நாகராஜ், பி.எஸ். மணி, முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி - நேரு கைது...

திருச்சியில் இன்று காலை 10 மணிக்கு, மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் கலெக்டர் ஆபீசு முன்பு திரண்டனர். அங்கு, அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், பொருளாளர் கே.கே.எம்.தங்கராஜா, துணை மேயர் அன்பழகன், அவைத் தலைவர் வண்ணை அரங்கநாதன், மற்றும் நிர்வாகிகள் செவ்வந்தி லிங்கம், கவுன் சிலர்கள் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் கலந்து கொண்டனர். போலீஸ் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு உள்பட ஏராளமான தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கைது

மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்த 200 தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தஞ்சையில் கோ.சி.மணி, ராமநாதபுரத் தில் சுப.தங்கவேலன் ஆகியோர் தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் கைதானார்கள்.

வேலூரில்...

வேலூர் மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று கைதானார்கள்.

தூத்துக்குடியில் பெரியசாமி, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்து கைதானார்கள்.

நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 01, 2011 12:14 pm

குஷ்புவும் ,,,தலைவர்கள் வரிசையில் சேர்ந்துட்டங்களா ? என்ன கொடுமைடா சாமி (அண்ணா இருந்திருந்தால் நிச்சயம் வருந்தி இருப்பார் )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Aug 01, 2011 12:17 pm

என்ன கொடுமை சார் இது

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 01, 2011 12:18 pm

ரபீக் wrote:குஷ்புவும் ,,,தலைவர்கள் வரிசையில் சேர்ந்துட்டங்களா ? என்ன கொடுமைடா சாமி (அண்ணா இருந்திருந்தால் நிச்சயம் வருந்தி இருப்பார் )

ஆக்சுவலா, குஷ்பூதானே வாந்தியெடுக்கனும்! முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது! 440806

முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 12:22 pm

முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது! 56667 சினிமாய் விட இங்கு சுலபமாய் பேர் கிடைக்குமே ரபீக் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 12:22 pm

முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது! 56667 சினிமாய் விட இங்கு சுலபமாய் பேர் கிடைக்குமே ரபீக் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 01, 2011 12:30 pm

சிவா wrote:
ரபீக் wrote:குஷ்புவும் ,,,தலைவர்கள் வரிசையில் சேர்ந்துட்டங்களா ? என்ன கொடுமைடா சாமி (அண்ணா இருந்திருந்தால் நிச்சயம் வருந்தி இருப்பார் )

ஆக்சுவலா, குஷ்பூதானே வாந்தியெடுக்கனும்! முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது! 440806

எடுத்த வாந்தியே போதும் !! இனிமேல் எடுத்தா நாடு தாங்காது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 01, 2011 12:36 pm

அண்ணா வளர்த்த கட்சி இன்று நடிகையின் கையில்..! ஒன்னும் புரியல

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Aug 01, 2011 2:38 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக