புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
31 Posts - 50%
heezulia
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
29 Posts - 47%
mohamed nizamudeen
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
73 Posts - 57%
heezulia
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டுக் காதலர் - (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 07, 2011 4:51 am

( விளக்கம் கீழே காண்க)

செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள்
சொரிவது எனவிழி நீர்வழிய
மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும்
எழுமெழில் முகமதில் தீ பரவ
தழுவிடு எனையென பருவமும் அவனிடம்
கொலை கொலையென மனம்தான் அழிக்க
எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும்
எழிலுறும் வகையென இவளிருந்தாள்

சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு
சிலையெனும் வடிவெடு ஆரணங்கே
கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில்
குறுநடை பழகிட வருமெனவே
பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும்
பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க
குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென
குடமிரு வளை யயல் கோபமிட்டான்

அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும்
அதிசய மலையுது நீரின்றியே
மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்
மகிழ்வென நீந்திடும் மதிகுலைய
உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு
உளதுயர் தெளிவெடு மீனசைய
விலையில திவளெழில் சிதைவது கொடிதென
விளைவது ஏதென இவன் வினவ

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்

எவனுன துடைமையை இருவிழி நீருற
எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்
அவனது தருவனோ அதைவிட அவனது
எடுபொருள் கவரென இவனுரைத்தான்
நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென
இவளெழில் வதனமும் பூமலர
அவனிலை இவனென எடுஉன திதயமும்
எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்


*************************************

பொருள்
அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும்
அதிசய மலையுது நீரின்றியே
மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்
மகிழ்வென நீந்திடும் மதிகுலைய
உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு
உளதுயர் தெளிவெடு மீனசைய
விலையில திவளெழில் சிதைவது கொடிதென
விளைவது ஏதென இவன் வினவ

அலைகடல் அதிசயிக்கத் தக்க வகையில் பெரியது. அதைவிட இந்த அதிசயம் பெரியது.
அதாவது நீரில்லாமலேயே அவளுடலில் அலையை க்காணும் அதிசயமென கூறி (அலைபோலும் மேனி. அலைபோல வளைந்த மேனி, அலைந்து திரியும் மேனி , அலைபோல உணர்வுகள் கொள்ளும்மேனி, எப்படியாவது எடுத்துக்கொள்ளுங்கள்)
அந்த அதிசயித்தில் மனம் கவர வானில் முகிலிடையே நிலவு நீந்துவது போலும் , தாங்களும் தண்ணீரில் நீந்தவேண்டுமே என்ற எண்ணத்தைவிட்டு உலைகொதி நீரிலிட்ட உயிரினம் துடிப்பதுபோல அசைந்தமீன்கள் போன்ற கண்களில் நீர்வழிய அழகு கெடுகிறதே என்று அத காரணத்தை வினவினான்

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்


இழிவு! எருதுடன் எடு கயிறு உளன் (உடையவன்)( எமன்போல )
எனதிரு (என்னிடமுள்ள) பொருளினை `திருவுடன்` என்பதில்
`வு`அழித்து வரும் (திருடன்) இனத்தவன் எனது உயிர்துடிப்பான
ஒலியிடும் பொருளை (இதயத்தை) திருடிவிட்டதால் அழுதேன். அதற்கு என்ன செய்யலாம் எனக்கேட்க

எவனுன துடைமையை இருவிழி நீருற
எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்
அவனது தருவனோ அதைவிட அவனது
எடுபொருள் கவரென இவனுரைத்தான்
நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென
இவளெழில் வதனமும் பூமலர
அவனிலை இவனென எடுஉன திதயமும்
எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்

கன்னமிட்டோன் - களவு செய்தவன்
முடிவில்.. அவன் அல்ல! அது இவன் நீதான் எனக்கூறி எடு உன் இதயத்தை என்று
அவள் இதழ்களை அவன் கன்னத்தில் பதித்து முத்தமிட்டாள்.
(களவுசெய்தாள் - கன்னமிட்டாள்)

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 6:49 am

அருமையான கவிதை....உங்கள் விளக்கதிற்கு பிறகே தெளிவாக புரிந்தது கிரிகாசன்.... திருட்டுக் காதலர் - (கவிதை) 224747944

உங்களை போன்ற சிறந்த கவிஞர்கள் மத்தியில் உலா வருவதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 07, 2011 12:00 pm

பிஜிராமன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்! தங்கள் போன்றவர்கள்
ரசித்து ஊட்டமிடுவதாலேயே எனது கவிதை மீண்டும் மீண்டும் உயிர் கொண்டு வாழ்கிறது. அதற்கு நன்றிகள் கூறி மாளாது
நன்றிகள்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 07, 2011 12:15 pm

கிரிகாசன் எனக்கு இப்படி பட்ட வார்த்தைகளை படித்தால் உண்மையாக அர்த்தம் தெரியாது....அதிகம் இப்போது தமிழில் ஆர்வம் வந்ததுன் காரணமே ஈகரையில் இணைந்ததில் இருந்து தான்,... தமிழை விட ஆங்கிலம் தான் வேகமாக படிப்பேன்...இப்போது தமிழில் வேகமாக படிக்கிறேன்..எழுதுகிறேன்.
அதற்க்கு காரணம் ஈகரையும், உங்களை போன்ற கவிஞர்களுமே....

அர்த்ததுடன் விளக்கம் தந்தமைக்கு முதலில் பாராட்டுக்கள்...
வரிகளில் சிறு பிழையும் இன்றி அனைத்தையுமே தூய தமிழில் விளக்கியுளீர் ...நன்றிகள்...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக