புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புச் சகோதரிக்கு Poll_c10அன்புச் சகோதரிக்கு Poll_m10அன்புச் சகோதரிக்கு Poll_c10 
21 Posts - 66%
heezulia
அன்புச் சகோதரிக்கு Poll_c10அன்புச் சகோதரிக்கு Poll_m10அன்புச் சகோதரிக்கு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புச் சகோதரிக்கு Poll_c10அன்புச் சகோதரிக்கு Poll_m10அன்புச் சகோதரிக்கு Poll_c10 
63 Posts - 64%
heezulia
அன்புச் சகோதரிக்கு Poll_c10அன்புச் சகோதரிக்கு Poll_m10அன்புச் சகோதரிக்கு Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அன்புச் சகோதரிக்கு Poll_c10அன்புச் சகோதரிக்கு Poll_m10அன்புச் சகோதரிக்கு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அன்புச் சகோதரிக்கு Poll_c10அன்புச் சகோதரிக்கு Poll_m10அன்புச் சகோதரிக்கு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புச் சகோதரிக்கு


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 20, 2009 10:31 am

அன்புச்
சகோதரி மீனுவுக்கு (தாமதத்திற்கு மன்னிக்கவும்)


From
meenuga To nandhtiha, Thu Sep 10, 2009 3:29 pm


தமிழ்
பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை


by
meenuga Yesterday at 12:45 am


இந்த தமிழ் என்ற கவிதையை நான் நந்திதா அவர்களுக்காக இங்கு ஈகரைல போடுறேன்.. அவங்களின் தமிழ்
பற்று ,அவர்களின் தமிழும எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு..இதில் தப்பு இருக்கலாம் இந்த
கவிதையில்.. இருந்தால் மன்னிக்கவும்.. அன்புடன் மீனுகா.



தமிழ்

தழிழரின் நாவினில்
தவழ்ந்திடும் தமிழ்
தரணியின் களனியில் (கழனியில்)
தழைத்திடும் தமிழ்
உலகத்தின் பிறப்புடன்
உருவான தமிழ்
தொன்மையின் சான்றிலும்
தொலையாத தமிழ் (துலங்கிடும் தமிழ்)
பிஞ்சுக் குழந்தையுடன்
கொஞ்சும் தமிழ்
மனசை மயக்கும்
மழலைத் தமிழ்
அன்னை மடியில்
அன்புத் தமிழ்
ஆசான் கரத்தில்
அறிவுத் தமிழ்
நண்பனின் மூச்சில்
நட்புத் தமிழ்
மடந்தையர் கண்களில்
மயங்கிடும் தமிழ்
காதலின் பேச்சில்
கவிதைத் தமிழ்
மன்னவர்சபையில்
மானத் தமிழ் (மன்னிய தமிழ்= மன்னிய நிலை பெற்ற்)
வள்ளுவன் எழுத்தில்
வாய்மைத் தமிழ்
பாரதி சொல்லில்
பற்சுவைத் தமிழ்
ஓளவையின் மொழியில்
அறிவுரைத் தமிழ்
கவிஞரின் உள்ளத்தில்
கனிந்திடும் தமிழ்
சங்ககாலம்வித்திட்ட
சாதனைத் தமிழ்
விளைகின்றமண்ணில்
வீரத் தமிழ்
கடலின் அலையிலும்
கவிபாடும் தமிழ்
காற்றின் ராகத்தில்
கலந்திட்ட தமிழ்
மழையின் சாரலாய்
மகிழ்திடும் தமிழ்
வற்றாத ஆறாக
வழிந்தோடும் தமிழ் (வாழ்ந்திடும் தமிழ்- ஆறு கரைகடக்கலாகாது(
பூவின் மென்மையாய்
புன்னகைக்கும் தமிழ் (பூக்கும் தமிழ்)
பூவுலகம் சூட்டும்
புகழ்மாலைத் தமிழ்
வானத்தில் சிறகடிக்கும்
வசந்தகாலப்பறவைத் தமிழ்
சாத்வீக குணத்தின்
சாந்தத் தமிழ்
அன்பின் மார்க்கத்தை
ஆற்றுகின்ற தமிழ்
வறுமையின் பிடியிலும்
வாழ்ந்திடும் தமிழ்
அடிமையை எதிர்த்திடும்
ஆணவத் தமிழ் (ஆளும் தமிழ்)
உறவுகள் வாழ்ந்திட
உதவிடும் தமிழ்
மரணத்தின் படுக்கையில்
மரிக்காத தமிழ்
மறுஜென்ம பாதையில்
மறையாத தமிழ்
ஆண்டவன் தந்துவிட்ட
அகராதித் தமிழ்
குறையாத சுவை தமிழுக்கே
குன்றாத மொழி தமிழுக்கே (குன்றாப்புகழ் தமிழுக்கே)
அழியாதஅழகு தமிழுக்கே
அணையாத தீபம் தமிழுக்கே
எங்கும் தமிழ்
எதிலும்தமிழ்
என்றும் நிலைத்திட
எல்லாம் வல்லவனின்
ஆசியை பெற்று
அகிலம் நிலைபெறும்.

அடைப்புக்குறிக்குள் இருப்பது என் கருத்து. ஏற்பதும் தள்ளுவதும் இதனை எழுதிய மீனுவின் உரிமை


இதோ
என்னுடைய சிறு கவிதை அன்புச் சகோதரிக்காக


ஒன்றரை அடியில் உலகை அளந்தது உன்னத தமிழல்லவா
உலகத்திற் கந்த பொதுமறை தந்து முயர்ந்தது தமிழல்லவா
மன்றினில் நடித்தான் மதியினைத் தரித்தான் மதித்த தமிழல்லவா
மாலவ னடியார் நாவினில் மலர்ந்து மகிழ்ந்த தமிழல்லவா
குன்றினில்அமர்ந்த குமரக் கடவுள் கொடுத்த தமிழல்லவா
குறுமுனி அமர்ந்த பொதிகையி னின்றும் குதித்த தமிழல்லவா
வென்றிட வேண்டி வந்தவர் கூட வியந்த தமிழல்லவா
விரிநீருலகி லிதுவே முதன் மொழியென் றிசைபெறும் தமிழல்லவா
முத்துதிர் திரைபுரள் முந்நீர்க் கரைதனில் முளைத்த தமிழல்லவா
முத்தமி ழென்றே உலகினில் நிற்க முனைந்த தமிழல்லவா
சித்தர்கள் சிந்தைத் தெளிவினைச் சொன்னது செம்மைத் தமிழல்லவா
சிவனடியார்கள்திருவுளம்பற்றிச் சிறந்தது தமிழல்லவா
இறைவனும் தமிழும் வேறில்லை யென்றே இயம்பிய தமிழல்லவா
இசையினைக் கூட்டி ஈசனை யேத்திய தீழத் தமிழல்லவா (இசையினைக் கூட்டி ஈசனை ஏத்தியது ஈழத் தமிழல்லவா)
மறையவன் மகற்கு முலைப்பாலீந்து வளர்த்த தமிழல்லவா
மாண்டவள் உயிரை மீட்டுக் கொடுத்தது மங்காத்தமிழல்லவா
எல்லாஉயிரும் சமமென் றியம்பியது எம்முடைத் தமிழல்லவா
ஏதிலியாயின்று ஏங்கி நிற்பதும் இனிய தமிழல்லவா
கல்லாமனிதன் காட்டு விலங்கென் றறைந்தது தமிழல்லவா
கற்கும் சிறார்கள் பதுங்கு குழியில் கரந்ததும் தமிழல்லவா
காட்டையும்திருத்திக் கழனியாக்கிக் களைத்ததும் தமிழல்லவா
கஞ்சிக்கின்றி கையேந்தி நிற்பதும் கன்னித் தமிழல்லவா
நாட்டையும் மாட்டையும் இழந்து எங்கோ நலிவதும் தமிழல்லவா (மாடு-செல்வம்)
நாமகள் தானும் கற்றிட விரும்புதல் நம்முடைத் தமிழல்லவா
எல்லையில் காவியம் படைத்திவ் வுலகில் எழுந்தது தமிழல்லவா
என்றுமுள்ளது மீடிலா தெனும்புக ழேற்றது தமிழல்லவா
முல்லைக்குத் தேர் தரு வள்ளலை ஈந்தது முதுமொழி தமிழல்லவா
அல்லலுற்றின்று அவனியி லலைவது அருமைத் தமிழல்லவா

தமிழும் தமிழனும் வேறில்லை தரணியில் அவற்கொரு நாடில்லை
அமிழ்தினும் இனிய தோழர்களே அரைக் கணமாவது சிந்திப்பீர்


அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 12:02 pm

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய நந்திதா அக்கா ,மீனுவுக்காக நீங்க இங்கே போட்டு உள்ள சிறு கவிதை ..இது சிறு கவிதை இல்லை இது மீனுவுக்கு பெரிய பொக்கிஷமான கவிதை..இந்த கவிதைக்கு மீனு தகுதியே இல்லை..ஆனா ரொம்ப பெரிய சந்தோஷத்தை துள்ளலை தரும் சந்தோஷ கவிதை ..நன்றிகள் பல அக்கா ..
நீங்க என்னை சகோதரி மீனு என்று சொல்லும் போது நிறைய சந்தோஷத்தை தந்தாலும் ..உங்களிடம் மீனுவுக்கு வருத்தம் இருக்கு அக்கா..ஈகரை நண்பர்கள் எல்லோரும் உங்கள் கனிவான பேச்சை கேக்க மிகவும் ஆசை படுகிறோம்..நீங்க படித்தவங்க தமிழை உணவாகவே எடுப்பவங்க ..
உங்கள் கவிதையிலேயே..சொல்லி இருக்கீங்க...
ஒன்றரை அடியிலேயே உலகை அளந்தது உன்னத தமிழ் என்றும்,
தமிழால் முடியாதது எதுவுமே இல்லை என்றும்.. அப்போ நீங்க தமிழ் பிரியை அக்கா ..நந்திதா அக்கா நீங்க தமிழையே சுவாசிக்கும் அக்கா ..அந்த தமிழுக்கு உள்ள இனிமையை நாம் சில சமயம் மட்டும் உங்கள் பேச்சில் காண முடிவதில்லை ..இப்படி மீனு சொல்வதால் நீங்க மீனுவை கோபித்தாலும் எரித்தாலும் பரவாய் இல்லை அக்கா ..மீனுவை நீங்க சகோதரி என்று சொல்லும் போது மீனு அந்த உரிமையில் தான் கேக்கின்றேன் ..நான் மட்டும் இல்லை ஈகரை நண்பர்கள் எல்லோரிடமும் அன்பாய் கனிவாய் பேசுங்கள் அக்கா ..நமக்கு எல்லோருக்குமே உங்களை பிடிக்கும் என்பது பிடிப்பு செய்தி அக்கா..
அன்புடன் மீனு ..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 20, 2009 1:07 pm

அன்புச் சகோதரிக்கு
வணக்கம்.
கோபப் படுவது என் குணமல்ல. எனதருமைச் சகோதரியை எரிக்கவா எனக்கு இரு கண்கள்?
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 1:48 pm

அக்கா ..உங்களுக்கு கண்களை சிரிக்க கொடுத்து இருக்கார் கடவுள்.. ப்ளீஸ் அக்கா ..நம்ம கூட அன்பாய் இருங்கள்..உடனே அப்போ நான் கோபமா இருக்கேனா என்று கேட்டு மீனுவை கவலை படுத்தாதீங்க ..எங்களுக்கு உங்கள் அன்பு வேணும்..எங்களுக்கு நீங்க வேணும்..உங்களை நமக்கு ரொம்ப பிடிக்கும்..
உங்கள் ஆக்கங்களை நமக்கு தாருங்கள் அக்கா..
அன்புடன் மீனு



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 1:52 pm

மீனு வேண்டாம் விட்டிடு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக