புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கண்டேயரின் ஆயுள்


   
   

Page 1 of 2 1, 2  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 11:49 am

ஒரு முறை மார்கண்டேய மகரிஷி அடர்ந்த காடு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே தேவரிஷி நாரதர் வந்துகொண்டிருந்தார். மார்கண்டேயர் நாரதரை வணங்கி அவர் நலம் விசாரித்தார். நாரதரும் மார்கண்டேயரை வணங்க, இருவரும் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். திரிலோக சஞ்சாரியான நாரதர் அப்போது திருக்கைலாயம் சென்று கொண்டிருந்தார். அதை அறிந்த மார்கண்டேயர் மகிழ்ந்து, ’சுவாமி, அம்மை அப்பருக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவியுங்கள். அடியேன் பூமியில் பிறப்பெடுத்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. அடியேனுடைய ஆயுள் எப்போது முடிவுறும் என்பது தெரியவில்லை. தாங்கள் அம்மை அப்பரைப் பார்க்கும்போது அடியேன் இந்தப் பூமியில் இன்னும் எவ்வளவு காலம் தங்கியிருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு வருகிறீர்களா?’ என்று கேட்டார். நாரதரும், ’தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சிவபெருமானிடம் தங்கள் ஆயுளைப் பற்றி கேட்டு வருகிறேன், ’ என்று சொல்லி தன் கயிலை யாத்திரையைத் தொடர்ந்தார்.


மார்கண்டேயர் முக்காலமும் உணர்ந்த பெரிய மகரிஷி. அவர் நினைத்தால் ஒரு நொடியில் தன்னுடைய ஆயுள் ரகசியத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் பணிவின் காரணமாக நாரதர் மூலமாக இறைவனிடமிருந்தே தன்னுடைய ஆயுளைப் பற்றி அறிய விரும்பினார். நாரதர் கொண்டு வரும் செய்தியை எதிர்பார்த்து ஒரு ஆலமர நிழலில் தங்கி இருந்தார் மார்கண்டேயர். நேரம் கடந்து கொண்டிருந்தது. பகல் பொழுது முடிந்து மாலை நேரமும் வந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இருள் சூழ்ந்து விடும். மார்கண்டேயர் கால நேரம் தவறாது சந்தியா வந்தனப் பூஜைகளை ஆற்றி வருபவர். மாலைநேர சந்தியா வந்தன வழிபாட்டை ஒரு குறிப்பிட்ட நதி அருகே ஆற்றி வருவது வழக்கம்.

இப்போது நாரதரை எதிர்பார்த்து காத்திருந்ததால் அவர் வேறெங்கும் செல்ல முடியாத சூழ்நிலை. சந்தியா வந்தான நேரமோ கடந்து கொண்டிருந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் அவர் என்ன செய்வது என்று யோசித்தார். அருகில் ஒரு புலையன் குட்டை இருந்தது. அதாவது தோல் பதனிடுபவன் ஆடு, மாடு என்று விலங்குகளின் தோலை உரித்து அவற்றைப் பதப்படுத்துவதற்காக ஒரு சிறு குட்டையில் ஊற வைத்திருப்பான். அந்தக் குட்டைதான் அங்கிருந்தது. துõரத்திலிருந்து பார்த்தாலே வயிற்றைக் குமட்டும் துர்நாற்றத்துடன் இருந்தது. மார்கண்டேயர் ஒரு சிறிதும் யோசிக்ககிவில்லை. நேரே சென்று அந்தக் குட்டையில் இறங்கி மூன்று தடவை முழுகி எழுந்தார். அர்க்ய வழிபாடுகளை முடித்துக் கொண்டு, கரைக்கு வந்தார். அந்தக் குட்டை கரையிலேயே அமர்ந்து தன்னுடைய மாலை சந்தியா வந்தன வழிபாட்டையும் முறைப்படி நிறைவேற்றினார்.

மார்கண்டேயர் ஒரு நாற்றமடிக்கும் குட்டையில் மூழ்கும் நேரத்தில் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் மார்கண்டேயரின் அர்க்ய வழிபாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படா வண்ணம் ஒரு மரத்தின் அருகில் மார்கண்டேயர் பார்வையில் படாத நிலையில் நின்று கொண்டு அவர் இயற்றும் சந்தியா வந்தன பூஜைகளைக் கவனித்து வந்தார். எல்லா வழிபாடுகளையும் மார்கண்டேயர் நிறைவேற்றிய பின் அவர் எதிரே வந்து தன்னுடைய வணக்கத்தை நாரதர் தெரிவித்துக் கொண்டார். திருக்கைலாயத்தில் அதிகார நந்தி தரிசனம், பார்வதி பரமேஸ்வரரிடம் நடந்த தெய்வீக உரையாடல்கள் போன்ற தெய்வீக விஷயங்களை எல்லாம் மார்கண்டேயரிடம் தெரிவித்தார்.

பின் மார்கண்டேயரின் ஆயுள் அவர் நிறைவேற்றும் சந்தியா வந்தன பூஜைகளைப் பொறுத்து அமையும் என்றும் அவர் எவ்வளவு நாள் சந்தியா வந்தன பூஜைகளை நிறைவேற்றுகிறாரோ அவ்வளவு அவர் இந்தப் பூமியில் நிலைத்திருப்பார் என்றும் எம்பெருமான் உரைத்ததை மார்கண்டேயரிடம் தெரிவித்தார். நாரதர் தொடர்ந்து, ‘மகரிஷியே, தாங்கள் இடம், பொருள், தோஷம் எதுவும் பார்க்காமல் சந்தியா வந்தனத்தை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையில் விடாப் பிடியாக இலயித்து இருக்கிறீர்கள். ஒரு புலையன் குட்டை என்று கூடப் பொருட்படுத்தாது அதில் மூழ்கி நீங்கள் சந்தியா வழிபாட்டை நிறைவேற்றுவது அடியேனை மெய் சிலிர்க்க வைக்கிறது. கைலாய நாதன் ஆசிர்வதித்தது போல தாங்கள் என்றும் சிரஞ்சீவியாக வாழ அடியேனும் எம்பெருமானைப் பிரார்த்திக் கொள்கிறேன்’, என்று பணிவுடன் கூறினார்.

யுகங்கள் எவ்வளவு கடந்தாலும் மார்கண்டேய மகரிஷி தன்னுடைய சந்தியா வந்தன வழிபாட்டை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டுதானே இருப்பார், அப்படியானால் அவர் ஆயுள் முடியாமல் என்றும் சிரஞ்சீவியாக பூமியில் வாழ்வார் என்பதுதானே இறைவனினின் விதியாக அமைகிறது. இங்கே இறைவனின் விதி வென்றதா, மார்கண்டேய மகரிஷியின் மதி வென்றதா

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 08, 2011 5:37 pm

இறைவனின் விதி வென்றதா, மார்கண்டேய மகரிஷியின் மதி வென்றதா

அவரின் மன உறுதியான கொள்கைபிடிப்புதான் வென்றது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 மார்கண்டேயரின் ஆயுள் 1357389 மார்கண்டேயரின் ஆயுள் 59010615 மார்கண்டேயரின் ஆயுள் Images3ijf மார்கண்டேயரின் ஆயுள் Images4px
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 08, 2011 5:59 pm

KESAVAN wrote:
இறைவனின் விதி வென்றதா, மார்கண்டேய மகரிஷியின் மதி வென்றதா

அவரின் மன உறுதியான கொள்கைபிடிப்புதான் வென்றது

மிக்க நன்றிகள் கேசவன் ஸார் நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 6:07 pm

KESAVAN wrote:
இறைவனின் விதி வென்றதா, மார்கண்டேய மகரிஷியின் மதி வென்றதா

அவரின் மன உறுதியான கொள்கைபிடிப்புதான் வென்றது

உண்மை தான் .. நன்றி ஆத்மா மகிழ்ச்சி மகிழ்ச்சி




 மார்கண்டேயரின் ஆயுள் Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 08, 2011 6:08 pm

aathma wrote:
KESAVAN wrote:
இறைவனின் விதி வென்றதா, மார்கண்டேய மகரிஷியின் மதி வென்றதா

அவரின் மன உறுதியான கொள்கைபிடிப்புதான் வென்றது

மிக்க நன்றிகள் கேசவன் ஸார் நன்றி
இது போன்ற கதைகளை பகிர்ந்து கொண்டதற்கு நான் தான் நன்றிசொல்லவேண்டும் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 மார்கண்டேயரின் ஆயுள் 1357389 மார்கண்டேயரின் ஆயுள் 59010615 மார்கண்டேயரின் ஆயுள் Images3ijf மார்கண்டேயரின் ஆயுள் Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 6:12 pm

நன்றி ஆத்மா , இப்போது தான் இந்த கதையை கேள்விபடுகிறேன்  மார்கண்டேயரின் ஆயுள் 678642

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 08, 2011 6:13 pm

பிளேடு பக்கிரி wrote:
KESAVAN wrote:
இறைவனின் விதி வென்றதா, மார்கண்டேய மகரிஷியின் மதி வென்றதா

அவரின் மன உறுதியான கொள்கைபிடிப்புதான் வென்றது

உண்மை தான் .. நன்றி ஆத்மா மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் லட்சுமணன் அண்ணா நன்றி

( அண்ணா , தங்கள் பெயர் லட்சுமணன் தானே , புன்னகை
இல்லை நான் ஏதும் தவறாக பெயரை எழுதி விட்டேனா ? சோகம் )

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 08, 2011 6:14 pm

ராஜா wrote:நன்றி ஆத்மா , இப்போது தான் இந்த கதையை கேள்விபடுகிறேன்  மார்கண்டேயரின் ஆயுள் 678642

மிக்க நன்றிகள் ராஜா அண்ணா நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 6:15 pm

aathma wrote:( அண்ணா , தங்கள் பெயர் லட்சுமணன் தானே , புன்னகை இல்லை நான் ஏதும் தவறாக பெயரை எழுதி விட்டேனா ?  மார்கண்டேயரின் ஆயுள் 440806 )
பிளேடு பக்கிரி என்பது அவனோட அவதார பெயர் , லட்சுமணன் என்பது புனைபெயர்  மார்கண்டேயரின் ஆயுள் 705463  மார்கண்டேயரின் ஆயுள் 705463

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 08, 2011 6:17 pm

ராஜா wrote:
aathma wrote:( அண்ணா , தங்கள் பெயர் லட்சுமணன் தானே , புன்னகை இல்லை நான் ஏதும் தவறாக பெயரை எழுதி விட்டேனா ?  மார்கண்டேயரின் ஆயுள் 440806 )
பிளேடு பக்கிரி என்பது அவனோட அவதார பெயர் , லட்சுமணன் என்பது புனைபெயர்  மார்கண்டேயரின் ஆயுள் 705463  மார்கண்டேயரின் ஆயுள் 705463

அச்சச்சோ ! இப்படி சொன்னா அவர் கோபிச்சுக்க போறார் , ராஜா அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக