புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
78 Posts - 49%
heezulia
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
6 Posts - 4%
prajai
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
120 Posts - 53%
heezulia
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
8 Posts - 4%
prajai
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_m10அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா நூலகம் - தினமணியின் பார்வை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 2:23 am

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததுமே, கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் கைகழுவப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அதனால் புதியதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகம், சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையாக மாற்றப்படும் என்கிற அதிமுக அரசின் முடிவு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியதே தவிர, அதிர்ச்சியை அளிக்கவில்லை.

ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்கிற அரசின் முடிவு, நிஜமாகவே தூக்கிவாரிப் போடுகிறது.

கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக? நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், "ரொம்ப ஓவர்!'

தலைமைச் செயலகக் கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்வரின் அறிவிப்பு வந்தபோது நாம் முன்வைத்த அதே கருத்தைத்தான் இப்போதும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். அலுவலக வளாகத்துக்காக, நூலகத்துக்காக, மருத்துவமனைக்காக வெவ்வேறு விதமான பயன்பாடுகளைக் கருதி அதற்கேற்றாற்போன்ற கட்டட அமைப்புகளை நமது கட்டடக் கலை வல்லுநர்கள் உருவாக்குகிறார்கள்.

அதற்கு என்று வெவ்வேறு கட்டடக் கலை நிபுணர்கள் (ஆர்க்கிடெக்ட்ஸ்) இருக்கிறார்கள். திரையரங்குகளைக் கூடத் திருமண மண்டபங்களாக அப்படியே மாற்ற முடியாத நிலையில் அலுவலக வளாகத்தையும், நூலகத்தையும் மருத்துவமனைகளாக மாற்றி அமைக்கப் போகிறோம் என்பது விபரீத யோசனை மட்டுமல்ல, வெட்டி வேலையும்கூட.

எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், இப்போது பராமரிப்புகூடச் சரியாக இல்லாமல், குழந்தைகளை நாய் கவ்விச் சென்ற சம்பவங்கள் வெளியில் வராமல் அடக்கி வாசிக்கப்படும் அவலத்தில் இருக்கிறது. அந்த மருத்துவமனையை சர்வதேசத் தரத்துக்குத் தரம் உயர்த்தி ஏழைகளுக்கும் சிறப்பான சேவையை அளிக்க முன்வருவதை விட்டுவிட்டு, சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும், செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை இடமாற்றம் செய்கிறேன், அறிவுசார் பூங்கா அமைக்கிறேன் என்றெல்லாம் அரசு கூறுவது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன?

சதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும்? இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்?

சுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும்? எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி?

உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்?

நூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்!



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Ila
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 05, 2011 11:54 am

சிந்திக்க வேண்டிய பதிவு ... இருக்கிற மருத்துவமனை களை தரம் உயர்தாமல் ... நூலகத்தை அப்புறபடுதுவது .. பழி வாங்கும் செயலே ...

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Sat Nov 05, 2011 1:11 pm

பயனுள்ள சிந்தனை தூண்டும் பதிவு பாராட்டுகள் !



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Nov 05, 2011 1:27 pm

அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  2825183110 அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  2825183110 அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  677196 அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  677196நல்ல பதிவு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 05, 2011 1:29 pm

//எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை ஆசியாவிலேயே சிறந்த
மருத்துவமனையாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், இப்போது பராமரிப்புகூடச்
சரியாக இல்லாமல், குழந்தைகளை நாய் கவ்விச் சென்ற சம்பவங்கள் வெளியில்
வராமல் அடக்கி வாசிக்கப்படும் அவலத்தில் இருக்கிறது//

நூற்றுக்கு நூறு உண்மை. சிந்திக்க வேண்டாமா அம்மா.

உறுப்படியான சிந்தனையைக் கொடுத்துள்ளது தினத்தந்தி. கேட்டால் அம்மா அறிவாளி
ஆகலாம். இல்லாவிட்டால் யானை தன் தலையில் தானே மண்ணை வாறிக் கொண்டிக்கொண்ட
கதைதான்.



அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Aஅண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Aஅண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Tஅண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Hஅண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Iஅண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Rஅண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Aஅண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Empty
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Nov 05, 2011 2:29 pm

ஆம் இது பழிவாங்கும் செயல் தான்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  1357389அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  59010615அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Images3ijfஅண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Images4px
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Nov 05, 2011 2:46 pm

இது மாதிரி செய்து மக்கள் மனதில் வெறுப்பை தான் சம்பாத்திது கொண்டிருக்கிறார்..! ஒன்னும் புரியல

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Nov 05, 2011 2:47 pm

மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின்
முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான்
ராஜதந்திரமான முடிவாக இருக்கும்!

இந்த முதலமைச்சருக்கு அப்ப அப்ப கொஞ்சம் மூளை வேலை செய்யாது போல . அவங்கள பழி வாங்குறதுக்கு 1000 வழி இருக்கு அப்பறம் இப்படி எதுக்கு தேவை இல்லாம ?

சமச்சீர் கல்வியில் சறுக்கியும் கூட மற்ற விஷயங்களில் அந்த அனுபவத்தை யோசிக்க மறுக்கிறாரே ?



அண்ணா  நூலகம் - தினமணியின் பார்வை  Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக