புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
17 Posts - 4%
prajai
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
8 Posts - 2%
Jenila
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_m10ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 1:20 pm

ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  CNI281206

மும்பையில் தொடங்கிய 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் அன்னா ஹசாரே பேசுகையில், ஊழலை ஒழிக்க இறுதி கட்ட போருக்கு தயாராகுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அன்னா ஹசாரே பேச்சு

அரசியலிலும், அதிகாரிகள் மட்டத்திலும் ஊழலை ஒழிக்க வலிமையான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற கோரி, பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே திட்டமிட்டபடி மும்பை பாந்திரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் தன்னுடைய 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார்.

அப்போது மைதானத்தில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் அன்னா ஹசாரே பேசியதாவது:-

சாவதற்கு அஞ்சவில்லை

நாட்டை காப்பாற்றுவதற்காக ஏதாவது தியாகத்தை செய்யத்தான் வேண்டியுள்ளது. நான் என்னுடைய 26-வது வயதில் பொதுச் சேவையை பணியை தொடங்கினேன். திருமணம் செய்து கொண்டால் வீட்டிற்குள்ளேயே முடங்கி, நாட்டு சேவைகள் செய்ய முடியாது என்பதால் நான் இதுவரை திருமணம் செய்யவில்லை.

நான் எதுவரை வாழ்கின்றேனோ, அதுவரையிலும் நாட்டிற்காக சேவை செய்து வாழ வேண்டும். நான் சாவதற்கு ஒருபோதும் பயப்பட்டதில்லை. காலை 9 மணி முதல் 12 மணி வரை காரில் நின்று கொண்டே வந்தேன். முதலில் உடல்நிலை சரியாக இருக்கின்றது என்று சொன்ன டாக்டர்கள் பின்னர் சரியில்லை என்கின்றனர். 25 வருடம் நாட்டிற்காக உழைத்த என்னிடம் போர்வை மற்றும் தட்டு இது இரண்டையும் தவிர வேறு எதுவும் இல்லை.

இறுதிக்கட்ட போருக்கு...

ஊருக்கு சென்று 35 வருடம் ஆகின்றது. ஊரிலும் குடும்பம் உள்ளது. ஆனால் அதனை விடவும் மேன்மையான குடும்பம் நாடு முழுவதும் எனக்கு உள்ளது. சகோதரர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சகோதரி கிரண் பெடி ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சொன்னார்கள். டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் என்னுடன் அமர்ந்திருந்த மக்களை பார்த்ததும் எனக்குள் சக்தி கூடிக்கொண்டே சென்றது. 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தும் எதுவும் ஆகாத எனக்கு இந்த 3 நாட்கள் உண்ணாவிரதம் ஒன்றும் செய்யாது.

இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு யோகா குரு பாபா ராம்தேவிடம் பேசினேன். அவர் நாளை அல்லது நாளை மறுநாள் வருவார்.

அரசு லோக்பால் விவகாரத்தில் அன்னா மற்றும் அன்னா ஹசாரே குழுவினை ஏமாற்றவில்லை, மக்களை ஏமாற்றுகின்றது. லோக்பால் பிரச்சினையில் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. இதற்காக மக்கள் ஒருநாள் பாடம் கற்பிப்பார்கள். ஊழலை அடியோடு ஒழிக்கவும், பாராளுமன்றத்துக்குள் குண்டர்கள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்யவும் நாம் இறுதி கட்ட போருக்கு தயாராக வேண்டும்.

வெள்ளையர்களுக்கு எதிராக முதலாவது சுதந்திர போராட்டம் நடைபெற்றது. இப்போது நாம் நடத்துவது இரண்டாவது சுதந்திர போராட்டம். நாம் ஜெயிலுக்கு போக வேண்டியிருந்தால் கூட கவலைப்படக்கூடாது.

அரசிற்கு எதிராக பிரச்சாரம்

டெல்லியில் உள்ள பாராளுமன்றம் மக்கள் பாராளுமன்றத்தை விடவும் சிறியது. பாராளுமன்றத்தில் உள்ள 150 எம்.பி.க்கள் கிரிமினல்கள். எம்.பி.க்களை திரும்ப பெறும் உரிமை மட்டும் இருந்தால், இவர்கள் புனிதமான ஜனநாயக கோவிலுக்குள் (பாராளுமன்றம்) நுழைய முடியாது. தற்போது குண்டர்களும், கிரிமினல்களும் அரசியலில் நுழைகிறார்கள். சட்டங்களை இயற்றும் நம்முடைய பாராளுமன்றமும், சட்டமன்றங்களும் புனிதமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சமயத்தில் நீங்களும், நானும் இத்தகைய துரோகம் தொடர வேண்டுமா? என்று முடிவு செய்ய வேண்டும். வலுவான லோக்பால் மசோதாவினை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். 21/2 வருடங்கள் கழித்து பொதுத்தேர்தல் வரும். அப்போதும் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன்.

ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  CNI281207

நாட்டின் கருவூலத்துக்கு திருடர்களால் ஆபத்து இல்லை, கருவூலத்தை பாதுகாப்பவர்களால்தான் ஆபத்து என்று எடுத்துச் சொல்வேன். வெளியில் உள்ள எதிரிகளை விட உள்நாட்டில் உள்ள துரோகிகளால்தான் நாட்டுக்கு ஆபத்து உள்ளது.

நீண்ட கால போராட்டம்

தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு செல்லக்கூடாது என்று சிலர் மிரட்டுகின்றனர். (யாருடைய பெயர் விவரங்களையும் தெரிவிக்கவில்லை). இருந்தாலும் நாங்கள் அந்த மாநிலங்களுக்கு செல்வோம். அவர்கள் என்ன செய்து விடுவார்கள் பார்ப்போம்? உங்களுக்கு வலிமையான லோக்பால் சட்டம் கிடைக்காது. எனவே நீங்கள் நீண்ட கால போராட்டத்துக்கு தயாராக வேண்டும்.

திரும்பப் பெறும் உரிமை

வலிமையான லோக்பால் சட்டத்தை உறுதி செய்த பிறகு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை திரும்பப் பெறும் உரிமை கோரி அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும்.

இந்த சட்டத்தின்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் அதுபற்றி மக்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற பட்டனில் பதிவு செய்து தெரிவிக்க வேண்டும். வேட்பாளர்களாக நிற்கும் யாருக்கும் மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை யென்றால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். தேர்தலில் தோல்வியடைபவர்கள் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. இதற்கான சட்டத்தை நாம் தயாரித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம். நிராகரிக்கும் உரிமை சட்டம் வந்தால் கோவில் போன்று மதிக்கத்தக்க பாராளுமன்றம் மற்றும் சட்டசபையின் உள்ளே ரவுடிகளும், குற்றவாளிகளும் செல்ல மாட்டார்கள். லோக்பால் மசோதா குறித்து மக்கள் அபார விழிப்புணர்வு பெறுவதற்கு மீடியாக்களின் பங்கும் மகத்தானது.

நிலத்தை அபகரிக்க கூடாது

நானும், அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பெடி போன்றோரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காக போராடினோம். இச்சட்டத்தினால்தான் சுரேஷ் கல்மாடி, ஆ.ராசா போன்றோர் சிறையில் உள்ளனர். விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரிப்பதற்கு அரசிற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. கிராம சபைகளின் அனுமதி இல்லாமல் நிலத்தை கையகப்படுத்த கூடாது.

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றம் செய்யும் வரையில் என்னுடைய போராட்டம் தொடரும். ஆயிரக்கணக்கானோர் வலுவான லோக்பால் மசோதாவிற்கு உயிரை விடுவதற்கு துணிந்திருப்பதாக கடிதம் மூலமாக தெரிவித்து வருகின்றனர். நானும் என்னுடைய உயிரை நாட்டிற்காக விடுவதற்காக தயாராக இருக்கின்றேன்.

இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார்.

கறுப்புக் கொடி

முன்னதாக, பாந்திராவில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து காலை 10 மணி அளவில் உண்ணாவிரத பந்தலுக்கு அன்னா ஹசாரே புறப்பட்டார். அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில் தேசிய கொடியை பிடித்தபடி அவர் சென்றார். ஜ×கு கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த சென்றபோது, சுமார் 20 பேர் கறுப்புக் கொடிகளுடன் நின்றிருந்தனர். அவர்கள் அன்னா ஹசாரேவுக்கு எதிராக கோஷமிட்டபடி, அவரது வாகன அணிவகுப்பை தடுத்து நிறுத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

வழியில், ஜுகு கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கல சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அன்னா ஹசாரே, அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார். சத்ரபதி சிவாஜி சிலைக்கும் மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னா ஹசாரேயின் வாகன அணிவகுப்பு உண்ணாவிரத பந்தல் நோக்கி சென்றது.

சாந்தாகுருஸ், துலிப் ஸ்டார் ஓட்டல், மித்திபாய் கல்லூரி, எஸ்.வி.ரோடு, வில்லே பார்லே, கார், பாந்திரா நெடுஞ்சாலை வழியாக சென்ற ஊர்வலம், 21/2 மணி நேர பயணத்துக்குப் பிறகு எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தை அடைந்தது.

கிரண் பெடி

அங்கு மதியம் 12.30 மணி அளவில் அன்னா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

74 வயதாகும் ஹசாரேயுடன், அவருடைய குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பெடி ஆகியோரும் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டம் நடைபெற்ற மைதானத்தில் ஆரம்பத்தில் குறைவானவர்களே இருந்தனர். பின்னர் நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

தினதந்தி



ஊழலை ஒழிக்க, இறுதி போர் : அன்னா ஹசாரே  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக