புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
2 Posts - 3%
jairam
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
2 Posts - 3%
சிவா
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
1 Post - 1%
Manimegala
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
13 Posts - 4%
prajai
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
9 Posts - 3%
jairam
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_m10வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல்


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 12:28 pm

வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல்

வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் ABDUL_KALAM_8_22542eவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் A%20P%20J%20Abdul-Kalam

வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் A%20P%20J%20Abdul%20Kalam

ஓவ்வொருவரது வீட்டிலும், ஓர் நூல் நிலையம் அவசியம் இருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், அறிவியல் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அறிவுறுத்தினார்.

மேலும், மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கும் புத்தகங்களை வெளியிட வேண்டும் என படைப்பாளிகளுக்கு அவர் வலியுறுத்தினார்.

சென்னை புத்தகக் காட்சியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர் மேலும் கூறியது:

தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக 35வது சென்னை புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த 4ஆம் நாள் விழாவில் இங்கு கூடியிருக்கும் அனைவரையும் பார்க்கிறேன். பெரியோர்கள், தமிழ் ஆர்வலர்கள், நூலாசிரியர்கள், ஊடக செய்தியாளர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரையும் பார்க்கிறேன். உங்கள் எல்லோருக்கும் ஓர் வேண்டுகோள்.

என்னுடன் சேர்ந்து ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்வீர்களா. எல்லோரும் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் பார்ப்போம்.

1. என்னுடைய வீட்டில் பூஜை அறை அல்லது பிராத்தனை இடத்திற்கு அருகில், 20 நல்ல புத்தகங்களுடன் ஓரு சிறு வீட்டு நூலகத்தை ஆரம்பிப்பேன். செய்வீர்களா 2. என்னுடைய வளர்ந்த மகன் மற்றும் மகள் 20 புத்தக நூலகத்தை, 200 புத்தக நூலகமாக மாற்ற எடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பேன். செய்வீர்களா

3. என்னுடைய வளர்ந்த பேரன் மற்றும் பேத்திகள் 200 புத்தக நூலகத்தை, 2000 புத்தக நூலகமாக மாற்ற எங்கள் குடும்பம் உறுதுணையாக இருக்கும். செய்வீர்களா 4. தினமும் ஓரு மணி நேரம் நானும் மற்றும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், எங்கள் வீட்டு நூலகத்தை பயன்படுத்தி படிக்கும் பழக்கத்தை இன்று முதல் தொடர்ந்து செயல் படுத்துவோம். செய்வீர்களா

5. எங்கள் வீட்டு நூலகம் தான் எங்கள் வீட்டு பரம்பரைச் சொத்து, எங்கள் வீட்டு அறிவுக்களஞ்சியம். 6. இந்த முயற்சிதான் தமிழகத்தில் ஏற்பட போகும் அறிவுப்புரட்சிக்கு அடிப்படை ஆதாரம் ஆகும். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நல்ல புத்தகங்கள்,அறிவுட்டு்ம் புத்தகங்கள், இளையசமுதாயத்தின் மனத்தை நல்ல வகையில் வழி நடத்த உதவும் புத்தகங்கள் ஓவ்வொரு ஆண்டும் பல மடங்காக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.

இந்த 35வது சென்னை புத்தக திருவிழாவை பற்றி நினைக்கும் போது, எனக்கு என்னுடைய 10வது வயதில் இராமேஸ்வரம் நாட்கள் நினைவுக்கு வருகிறது. அப்போது எனது அண்ணன் முஸ்தபா கமாலின் நண்பர், MGR ரத்தினம், தனது வீட்டில் நல்ல நூலகத்தை அமைத்திருந்தார்.

அப்பொழுது அடிக்கடி அவரது வீட்டிற்கு எனது அண்ணன் அழைத்துச்செல்வார், அப்பொழுது அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள், நான் அங்குள்ள நூலகத்தில் இருந்து புத்தகங்களை படிப்பேன். அப்பொழுது சுத்தானந்த பாராதியார் எழுதிய புத்தகங்களை விரும்பி படிப்பேன். எனது அண்ணன் முஸ்தபா கமாலும், திரு MGR ரத்தினமும் அந்த கால கம்யூனிஸ்டுகள், அவர்கள் அடிக்கடி கம்யூனிசம் பற்றி விவாதித்துக்கொண்டு இருப்பார்கள், அவர்களிடம் கம்யூனிசத்தைப் பற்றி கேட்டேன்.

அவர்கள் உடனே எனக்கு காரல் மாக்ஸ் எழுதிய கேப்பிடல் என்ற புத்தகத்தின் 10 தமிழ் தொகுப்பில் இருந்து 2 புத்தகங்களை படிக்க சொன்னார்கள், அதைப்படித்ததும் அது பற்றி என்னிடம் விளக்கமாக விரிவாக எடுத்து சொன்னார்கள்.

அப்பொழுது அந்த புத்தகத்தை விரும்பி படித்தேன். அப்போது தான் கம்யூனிசத்தை பற்றி தெரிந்து கொண்டேன். அது முதல் தான் பாட புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. எனவே புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதுக்கு காரணம் எனது அண்ணனும் அவரது நண்பரும்தான், ஏப்படி அவர்கள் என்வாழ்க்கையில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை இப்பொழுதும் நினைத்துப்பார்க்கிறேன்.

நண்பர்களே, உங்களை எல்லாம் பார்க்கும் போது, எனக்கு திருவள்ளுவர் சொன்ன திருக்குறள் நினைவுக்கு வருகிறது.

'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு'

திருவள்ளுவர் சொல்கிறார்... மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணற்று நீர் மீண்டும், மீண்டும் அதன் அளவுக்கு ஏற்பச் சுரக்கும். அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற கல்வியின் அளவுக்கும், கற்ற நூலின் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும்.

அப்படிப்பட்ட கற்பக விருட்சகமாக, அள்ள அள்ள குறையாத, வற்றாத வளமாக மக்களுக்கு என்றும் இருப்பது புத்தகங்கள் தான். எனவே மக்களின் வளமான வாழ்க்கைக்கு, என்றும் உறுதுணையாக இருப்பதுமட்டுமல்ல, ஒரு அமைதியான, பொறுமையான, அறிவார்ந்த மற்றும் வளமான சமுதாயம் உருவாக அடிப்படைக்காரணமாக இருப்பது புத்தகங்கள் தான். எனவே உங்களிடம் "கற்பனைத்திறத்தை வளர்க்கும் புத்தகங்கள்" என்ற தலைப்பில் உரையாட இருக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 12 மில்லியன் (1.2 கோடி) இளைஞர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். இந்த பூமிக்கு கிழே, பூமியின் மேலே, வானத்திலே இருக்ககூடிய எவ்வித வளத்தைக்காட்டிலும், சக்தியைக்காட்டிலும், இளைஞர்களின் எழுச்சி உண்டாக்கப்பட்ட மனம் மிகவும் சக்திவாய்ந்தது ஆகும்.

எனவே, இளைஞர்களின் சக்தி, அவர்களது ஆர்வம், அனுபவம் கொண்ட தலைவர்களுக்கு நம்பிக்கையுடன் ஒரு தொலைநோக்கு திட்டத்தை தீட்டி, அந்த இளைஞர்களை கொண்டு செயல் படுத்த வாய்ப்பைக் கொடுக்கும். அது நமது வருங்கால சந்ததிகளுக்கு, தலைமுறை, தலைமுறையாக, வம்சாவம்சமாக பெருமைப்பட வைக்கும் பரம்பரை சொத்தாக உருவாகும் என்பது நிச்சயம்.

உலகத்திலே மிகப்பெரிய சாதனையாளர்களை, பெரிய மனிதர்களைப் பற்றி படித்து வளர்ந்த குழந்தைகளின் கற்கும் திறனை பற்றி அறிந்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், வியப்பாகவும், மற்றும் அகத்தூண்டுதலாகவும் இருந்தது. அப்படிப்பட்ட புத்தகங்களை படித்து அகத்தூண்டுதல் பெற்ற குழந்தைகள் கேட்கும் கேள்விகள் எண்ணங்களை எழுச்சியூட்டுவதாக இருக்கும். அதுமட்டுமல்ல அந்த குழந்தைகளின் கேள்விகள், கற்பனைத்திறத்துடன் இருக்கும், அதற்கு பதில் சொல்வது மிகவும் முக்கியம். இளைஞர்களின் உற்ற நண்பன் அருமையான புத்தகங்கள்தான். எனவே,

* நகரங்களில் கிடைக்கும் நூல் நிலைய வசதி அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க வேண்டும். அனைத்து வகையான மற்றும் பழமையான புத்தகங்களை கணிணியாக்கம் செய்து கிராமத்துக்கும் இணையதளத்தின் மூலம் கிடைக்கும் வகையில் செய்யவேண்டும்.

* இளைஞர்கள் கற்பனைத்திறனுடன் கூடிய தனித்தன்மை பெற்றவர்கள். எனவே இளைஞர்களின் கற்பனைத்திறனையும், அறிவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கும் வகையிலான தரமான புத்தகங்கள் அதிகம் வரவேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்கள் மூலம் முறை சார்ந்த மற்றும் முறைசார கல்வி முறையிலும் பயிற்றுவிக்கபட வேண்டும்.

* இளைஞர்கள் தங்களது சுற்றுப்புறத்திலிருந்தும், தங்கள் குடும்பத்தார்களிடம் இருந்தும், அவர்கள் தினமும் பழகி வளர்ந்து வாழும் பக்கத்து ஊர்களில் இருந்தும் பலவற்றை கற்றுக்கொள்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை பார்த்தால், அவர்களுக்கும் தினமும் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். அப்படி படித்த புத்தகங்களைப்பற்றி பெற்றோர்கள் குழந்தைகளிடம் விவாதிக்கும் பொழுது, அவர்களுக்கு புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வம் உருவாகும்.

* தனித்திறமைகளை வளர்க்கும் சூழலில், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் சூழலில், விளையாட்டை போற்றி வளர்க்கும் சூழலில், சுற்று சூழல் மற்றும் சமூக பொறுப்புணர்வு கொண்ட சூழலில், குடும்பத்தை பேணும் சூழலில், மனவளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி அடையும் சூழலில் இளைஞர்கள் வளர்க்கப்பட வேண்டும், உருவாக்கப்படவேண்டும்.

* இளைஞர்களிடம் கேள்வி கேட்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். அவர்களது மனம் திறக்கப்படும்படியாகவும், அவர்களது சிந்தனையை தட்டி வளர்க்கும் விதத்திலும், கேள்விகளுக்கு பொறுமையுடனும், அறிவுத்திறனுடனும் பதில் அளிக்கப்பட வேண்டும். மனம் திறந்தால் மட்டும் போதாது, அவர்களது குணம் வளர்ச்சி அடையவேண்டும். அதாவது மனமாற்றம் அல்ல இங்கு முக்கியம், குணம் மாறவேண்டும். அப்போது தான் அறிவார்ந்த மேன்மையான நிலைக்கு இளைஞர்களை இட்டுச் செல்ல இயலும்.

இவை அனைத்தும் நடைபெற வேண்டும் என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும், நல்ல அருமையான புத்தகங்கள் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட திறன் கொண்ட புத்தகங்களை பதிப்பாளர்கள் ஊக்குவிக்க வேண்டும், உருவாக்க துணை நிற்க வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்களை தினமும் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே நண்பர்களே, நான் சொல்வதை திருப்பி சொல்வீர்களா.

"அருமையான புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும்
கற்பனைத்திறன் படைப்பாற்றலை உருவாக்கும்
படைப்பாற்றல் சிந்திக்கும் திறனை வளர்க்கும்
சிந்தனை திறன் அறிவை வளர்க்கும்
அறிவு உன்னை மகானாக்கும்."

எனவே புத்தகங்களை படைக்கும் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் இப்படிப்பட்ட திறன்களை இளைஞர்கள் மத்தியில் வளர்க்கும் விதமாக தங்களது படைப்புகளை கற்பனைத்திறத்தோடு, காட்சி அமைப்புகளோடு படைக்க வேண்டும். ஒவ்வொரு நூலகங்களும், இப்படி பட்ட திறத்தோடு படைக்கப்படும் நூல்களை அதிகமாக வாங்க வேண்டும்.

அதாவது காஷ்மீரில் இருக்கும் இளைஞர்கள் கன்னியாகுமரியைப் பற்றி படிக்கவும், இராமேஸ்வரத்தின் இளைஞர்கள், ஜார்கென்டைப்பற்றி படித்து அறிந்து கொள்ள நல்ல புத்தகங்கள் உறுதுணையாக இருக்கும். அதாவது பல்வேறு நாடுகளைச்சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக கூடும் போது அவர்கள் ஒவ்வொரும் அடுத்தவர்களது நாடு, கலாச்சாரம், வரலாறு, பற்றி அறிந்து கொள்ளவும் அது மிகவும் உதவுகிறது என்பதை நான் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒட்டு மொத்தமாக சந்தித்து பல தடவை உரையாடும் போது உணர்ந்தேன். அப்படிப்பட்ட சூழ் நிலையில் இளஞர்களுக்கான உலகளாவிய கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நல்ல புத்தகங்களோடு தொடர்பு வைத்திருப்பதும், அதை வாங்கி படிப்பதும் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு செயலாகும். புத்தகம் நமக்கு நீடித்த ஒரு நிலையான, தொடர்ந்த நண்பனாகும். சில நேரங்களில் அப்படிப்பட்ட புத்தகங்கள் நமக்கு முன்பே பிறந்ததாகும், நமது வாழ்க்கைப்பயணத்தில் அது நம்முடன் கூடவே வரும், அது மட்டுமல்ல தலைமுறை தலைமுறையாக அது நம் அடுத்த தலைமுறையோடும் தொடர்ந்து வரும். எனது இளமைக்காலத்தில் சென்னை மூர் மார்க்கெட்டில் நான் ஒரு புத்தகம் வாங்கினேன். அதன் பெயர் "Light from many lamps", அதை "Watson Lillian Eichler" என்பவர் எழுதியிருந்தார்.

அதாவது கடந்த 50 ஆண்டுகளாக அது எனக்கு உற்ற தோழனாக இருந்து வருகிறது. அந்த புத்தகத்தை திரும்ப திரும்ப படித்ததினால் அதை பல தடவைகள் பைண்ட் பண்ண வேண்டியதாகிவிட்டது. எப்பொழுதெல்லாம் கஷ்டமான, துன்பமான சூழ்நிலை நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த புத்தகம் அரும்பெரும் மனிதர்களின் எண்ணங்களை கொண்டு கண்ணீரை அது துடைக்கிறது. எப்பொழுதெல்லாம் அளவில்லா மகிழ்ச்சி நம்மை ஆட்கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் அது மனதை ஒரு நிலைப்படுத்தி, சமன்படுத்தி எண்ணத்தை வரைமுறைப்படுத்துகிறது.

இன்னுமொரு முக்கியமான புத்தகம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், எப்பொழுதும் அது தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது என்றால் அது 2200 வருடங்களுக்கு முன்பு திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்தான். குறிப்பாக குறுகத்தரித்த அந்த குறள் எனக்கு ஒரு அகத்தூண்டுதலாக அமைந்தது. கல்வியின் பால் ஈர்ப்பை ஏற்படுத்திய எனது அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த ஒரு குறளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது அறிவை பெற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதைப்பற்றிய ஒரு குறளாக அது அமைந்தது. அதாவது

அறிவு அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உளழிக்கல் ஆகா அரண்.

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும் என்பதாகும். அறிவும், அறிவைப்பெறுவதும் மனித குலத்தின் ஒரு அரும்பெரும் சொத்தாகும்.

புத்தகம் நமது பழைய காலத்தை நினைத்துப்பார்த்து, நிகழ்காலத்தின் அனுபவம் கொண்டு, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது. நாம் வரலாற்றையும், பூகோளத்தையும், கலாச்சாரத்தையும், கலையையும், அறிவியலையும், தொழில் நுட்பத்தையும், நல்ல புத்தகங்களின் மூலம் படித்து, கற்று தேர்ந்தால் தான், நாம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாறமுடியும்.

எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தொலைக்காட்சிகள் நேரத்தை எடுத்துக்கொண்டாலும், மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், எழுத்து, படிப்பு அதிகமாக இருந்தாலும், நாம் தினமும் ஒரு அரை மணிநேரமாவது ஒதுக்கி படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
புத்தகமும் சிறு வயதில் அரும்பெரும் எண்ணங்களும்

பிறரைக் குறித்து மட்டுமே ஆராய்பவர் சாதாரண மனிதர். கல்வி கற்றிருந்தாலும் தன்னையும் நன்கு அறிபவரே கல்விமான்... ஒவ்வொருவரும் கல்விமானாக முயல வேண்டும். கல்வியின் நோக்கம் மதிப்பெண்களையும், வேலை வாய்ப்பையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் உண்மையான நோக்கம். உளப்பூர்வ விவேகத்தினூடே ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களது வாழ்க்கையின் இரண்டாவது அதிசயம் என்று எதைச் சொல்கிறார் என்று தெரியுமா உங்களுக்கு. அதாவது, அவரது தனது 9வது வயதில் Magnetism பற்றி அவர் கற்றுக்கொண்டது தான் அவரது வாழ்வின் முதல் அதிசயம். ஐன்ஸ்டீனின் அப்பா அவருக்கு ஒரு காம்பஸ்ஸை தரும் வரை நகரும் ஒரு பொருளை நகர்த்துவது வேறு ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி என்று தான் நினைத்திருந்தாராம். தனது 12 வது வயதில் அவரது ஆசிரியர் ஒரு புத்தகம் கொடுத்தார்.

அந்த புத்தகம் தான் Max Talmud எழுதிய Euclidean Plain Geometry என்ற புத்தகமாகும். அந்த புத்தகத்தை அவர் "Holy Geometry Book" என்று சொல்லுவார். அந்த புத்தகத்தை படித்தது தான் ஐன்ஸ்டீனின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டாவது அதிசயம் என்று கூறுகிறார். உண்மையான அர்த்தத்தை நோக்கி, அதனுடன் ஐன்ஸ்டீன் கலந்து விட்டார். மிகப்பெரிய ஆய்வுக்கூடமோ, உபகரணங்களோ இல்லாத சூழ்நிலையிலும், அவர் தனது உள் மனதின் எண்ணத்தின் சக்தியை கொண்டே, உலகலாவிய உண்மையை கண்டுணர்ந்தார்.

கணித்ததின் கடினமான விடை தெரியாத புதிர்கள் தான் ஐன்ஸ்டீனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்தது. அத்தனை சாதனைகளையும் அவர் சாதிப்பதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது புத்தகங்கள் தான். எனவே நண்பர்களே, புதுமை என்பது உலகின் இயல்பில் பயணிப்பவர்களால் உருப்பெறுவதில்லை. உலகின் சராசரி போக்கிலிருந்து முரண்பட்டு தனித்து சிந்திப்பவர்களே புதுமையைப் புஷ்பிக்கிறார்கள்.

ஸ்ரீநிவாச இராமானுஜம் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கணித மேதை, அவருக்கு இயற்கையாகவே கணித்தில் திறமை வாய்க்கப்பெற்றிருந்தார். அவரது 13வது வயதில் அவர் S.L. Loney எழுதிய Advanced Trigonometry என்ற புத்தகத்தை முழுவதும் படித்து முடித்து, தானே தியரங்களும், அல்காரிதங்களும் படைத்தார்.

பள்ளியில் யாருக்கும் இல்லாத வகையில் கணிதத்தில் தனித்துவம் பெற்று விளங்கினார். கணிதத்தை தவிர அனைத்து பாடங்களிலும் அவர் தோல்வியடைந்தார். அதாவது நண்பர்களே, நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்க்கக் கற்றுக் கொள்வதுதான் உங்களை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும். சற்றும் எதிர்பார்த்திராத விஷயங்கள் எதிர்படுவதே எதார்த்தம்.

வெற்றி என்பது இறுதிப்புள்ளி..
தோல்விகள் என்பவை இடைப்புள்ளிகள்..
இடைப்புள்ளிகளின் துணையின்றி
இறுதிப்புள்ளியை அடைதல் சாத்தியமில்ல..

வெற்றியைக் கொண்டாட மறந்தாலும், தோல்விகளைக் கொண்டாட கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், தோல்விகள்தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. நம் பயணத்தை முழுப் பெறச்செய்பவை. எனவே நண்பர்களே, திருவள்ளுவர் சொன்னார்..

இடும்பைக்கு இடும்பை படுப்பர், இடும்பைக்கு
இடும்பை படா தவர்.

எனவே தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, வெற்றி பெற்றதினால் தான், அப்படிப்பட்ட ஒரு தனித்திறமை அவருக்கு கணிதத்தில் கிட்டியது. அந்த திறமை அவருக்கு புத்தகம் படித்ததினால் மெருகேற்றப்பட்டு பட்டை தீட்டிய வைரமாக விளங்கியது. இன்றைக்கும் அவரது எண் கணிதம், அறிவியலை, தொழில் நுட்பத்தை செம்மைப்படுத்திக்கொண்டு இருக்கிறது.

எனவே பெற்றோர்களும், ஆசிரியர்களும், இந்த சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால், உங்கள் குழந்தைகள் ஒவ்வொரு நல்ல செயல்களையோ, சாதனைகளையோ செய்தார்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் பரிசளிப்பது புத்தகமாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.

நான்கு திசைகளின் குறிப்பிட்ட புள்ளிகளுக்குள் அடைந்து போனவையல்ல உங்களின் எல்லைகள்... எவ்வளவு தொலைவும் உங்களால் பயணிக்க இயலும். இது சத்தியம்... எவ்வளவு தொலைவும் உங்களால் பயணிக்க இயலும். அந்த நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.
முடிவுரை

வாழ்வில் நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ, அப்படி உங்களை அமைத்துக் கொள்ள, அதற்கான வாய்ப்புகளை புத்தகம் படிப்பதன் மூலம் உருவாக்க வேண்டும். உங்களுக்கான வாய்ப்புகள் தானாக உருப்பெறாது.. நீங்கள்தான் உருவாக்க வேண்டும். எதுவாயினும் மனம் ஒன்றிச் செயல்படுங்கள். எழுதுவதோ, படிப்பதோ, தேநீர் அருந்துவதோ, பயணிப்பதோ - எதுவாயினும், மனம் ஒன்றிச்செயல்படுங்கள். மனம் ஒன்றிச் செய்கின்ற செயலின் பலன் எதிர்மறையாய் இராது. உற்சாகம் தானாக ஊற்றெடுக்காது. ஒரு புத்தகத்திலிருந்தோ, ஒரு கவிதையின் வார்த்தைகளில் இருந்தோ, ஒரு தோற்றத்திலிருந்தோ அது உங்களுக்குள் உவப்புடன் மலரும். எனவே நூல்கள் வாசிப்பதையும், இயற்கையை நேசிப்பதையும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

எனவே நண்பர்களை, இந்த 35வது சென்னை புத்தகத் திருவிழா, உங்களுக்கு இந்த சிறப்புகள் அனைத்தையும் வழங்கும் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த புத்தகத் திருவிழாவிலே பங்கேற்கும் அனைவருக்கும், பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் எனது செய்தி என்னவென்றால் -

நீங்கள் ஓவ்வொருவரும் தினமும் ஓரு மணி நேரம் நல்ல புத்தகங்கள் படிக்க ஓதுக்குவீர்களானால் சில வருடங்களுக்குள் நீங்கள் ஓர் அறிவுக்களஞ்சியமாவீர்கள். புத்தகம் என்றென்றும் உங்களுக்கு ஓர் உற்ற நண்பனாக திகழும்.

உங்கள் ஓவ்வொருவரது வீட்டிலும், ஓர் நூல் நிலையம் அவசியம் இருக்க வேண்டும். செய்வீர்களா. இந்த ஓர் சிரிய முயற்சி நாட்டில் ஓர் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முதற்படியாகும்.

அந்த முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க வேண்டியது இங்கு கூடியிருக்கும் ஆன்றோர்கள், சான்றோர்கள், பொதுமக்களாகிய உங்களின் முதற்பணியாக இருக்க வேண்டும்.

இந்த 35வது சென்னை புத்தகத் திருவிழா வெற்றியடைய வாழ்த்துகிறேன். உங்களுக்கு என் வாழ்த்துகள்," என்றார் அப்துல் கலாம்.

nanri - Vikatan.com

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 09, 2012 3:47 pm

நல்ல தகவல் பகிர்தமைக்கு நன்றி.

நூல் படிப்பது என்றும் நன்று,
அதை எடுத்துச் சொல்வது மிகவும் நன்று.



சதாசிவம்
வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 09, 2012 3:59 pm

///"அருமையான புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும்
கற்பனைத்திறன் படைப்பாற்றலை உருவாக்கும்
படைப்பாற்றல் சிந்திக்கும் திறனை வளர்க்கும்
சிந்தனை திறன் அறிவை வளர்க்கும்
அறிவு உன்னை மகானாக்கும்."///


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 09, 2012 4:28 pm

இவரு சொல்லி இருக்கறது எல்லாம் சரிதான். ஆனா இன்னிக்கு பள்ளிக்கூடத்துல படிக்க வேண்டிய புத்தகங்களை வைக்கவே வீட்டுல
இடம் இல்லை. இதுல எங்க இருந்து நூலகம் வைக்கிறது.
முடிஞ்ச அளவு புத்தங்களை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம்




வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Uவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Dவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Aவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Yவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Aவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Sவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Uவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Dவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Hவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 09, 2012 6:32 pm

வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் 224747944 வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் 677196 வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் 154550



வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் 154550வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் 154550வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் 154550வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் 154550வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jan 09, 2012 6:36 pm

"மனம் இருந்தால் ...மார்க்கம் உண்டு "..நூலகம் வைக்க !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 09, 2012 6:40 pm

உதயசுதா wrote:இவரு சொல்லி இருக்கறது எல்லாம் சரிதான். ஆனா இன்னிக்கு பள்ளிக்கூடத்துல படிக்க வேண்டிய புத்தகங்களை வைக்கவே வீட்டுல
இடம் இல்லை. இதுல எங்க இருந்து நூலகம் வைக்கிறது.
முடிஞ்ச அளவு புத்தங்களை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம்

அக்கா, திரு அப்துல் கலாம் அவர்கள், நம் நாட்டின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவர்.

நீங்கள் கூறி இருப்பது, இவரின் மதிப்பிற்கு உகந்ததா என்று நீங்களே கூறுங்கள். நான் கூறியதில் தவறு இருப்பின் மன்னியுங்கள் அக்கா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 09, 2012 6:46 pm

பிஜிராமன் wrote:
உதயசுதா wrote:இவரு சொல்லி இருக்கறது எல்லாம் சரிதான். ஆனா இன்னிக்கு பள்ளிக்கூடத்துல படிக்க வேண்டிய புத்தகங்களை வைக்கவே வீட்டுல
இடம் இல்லை. இதுல எங்க இருந்து நூலகம் வைக்கிறது.
முடிஞ்ச அளவு புத்தங்களை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம்

அக்கா, திரு அப்துல் கலாம் அவர்கள், நம் நாட்டின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவர்.

நீங்கள் கூறி இருப்பது, இவரின் மதிப்பிற்கு உகந்ததா என்று நீங்களே கூறுங்கள்.

அவரோட மதிப்பு குறையும் அளவுக்கு நான் ஒன்றும் சொல்லவில்லையே ராமன். இன்னிக்கு இருக்கற வீட்டு சூழ்நிலை அப்படி என்று தான் சொல்ல வந்தேன். இன்னிக்கு பள்ளிக்கூடத்தில படிக்கிற பிள்ளைக கொண்டு போற புத்தங்களை வைக்கவே இடம் இல்லை என்றுதானே சொல்லி இருக்கேன்.

எனக்கும் திரு.அப்துல் கலாம் பிடித்தமானவர்தான்.



வீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Uவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Dவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Aவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Yவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Aவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Sவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Uவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Dவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் Hவீட்டுக்கு ஒரு நூல் நிலையம்: கலாம் அறிவுறுத்தல் A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 09, 2012 6:53 pm

அவரோட மதிப்பு குறையும் அளவுக்கு நான் ஒன்றும் சொல்லவில்லையே ராமன். இன்னிக்கு இருக்கற வீட்டு சூழ்நிலை அப்படி என்று தான் சொல்ல வந்தேன். இன்னிக்கு பள்ளிக்கூடத்தில படிக்கிற பிள்ளைக கொண்டு போற புத்தங்களை வைக்கவே இடம் இல்லை என்றுதானே சொல்லி இருக்கேன்.

எனக்கும் திரு.அப்துல் கலாம் பிடித்தமானவர்தான்.


அப்படி என்றால் சரி அக்கா.......

பாலா சார் சொன்னது போல மனம் இருந்தால் நிச்சயம் அமைக்கலாம்.....அனைவராலும் இயலா விட்டாலும், அமைக்க முடியும் என்பவர்கள் அமைத்தால் நல்லது.

நன்றிகள் அக்கா புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 09, 2012 7:09 pm

அருமையான பதிவிற்கு நன்றிகள் பிரசன்னா........ மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக