புதிய பதிவுகள்
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
50 Posts - 43%
T.N.Balasubramanian
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
3 Posts - 3%
சண்முகம்.ப
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
1 Post - 1%
prajai
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
192 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
9 Posts - 2%
jairam
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila

Baarushree
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_m10கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu 26 Jan 2012 - 12:19

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.

நன்றி : தினமலர்

சதாசிவம்
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 26 Jan 2012 - 12:55

சதாசிவம் wrote:குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிராமணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.
இதையெல்லாம் இவனுகளுக்கு தானமா கொடுத்தால் , நாம நல்லபடியா போய் சேருவோம் என்பது நம்பும்படியா இல்லை ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 26 Jan 2012 - 13:09

இதெல்லாம் மக்கள் பாவ செயல்களை பார்த்து பயந்த காலத்தில்
அவர்களுக்கு கெட்டவை அறிந்து நல் வழியில் பயணிக்க சொல்லப் பட்டவை.

இன்னிக்கு மனிதன் எதற்கும் துணிந்து விட்டபடியால் கருட புராண பருப்பெல்லாம் வேகாது.

இது என் கருத்து மட்டுமே - யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu 26 Jan 2012 - 17:13

ராஜா wrote:
சதாசிவம் wrote:குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிராமணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.
இதையெல்லாம் இவனுகளுக்கு தானமா கொடுத்தால் , நாம நல்லபடியா போய் சேருவோம் என்பது நம்பும்படியா இல்லை ??

பின்னூட்டத்திற்கு நன்றி

சத் என்றால் சுத்தமான, தூய்மையான, தன்னலம் கருதாத என்ற பொருள் உண்டு. இப்படி இருப்பவர்கள் அன்றும், இன்றும் இல்லை. அதனால் நாம் இவற்றை பற்றி கவலைப்பட வேண்டாம்.

சதாசிவம்
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu 26 Jan 2012 - 17:16

கொலவெறி wrote:இதெல்லாம் மக்கள் பாவ செயல்களை பார்த்து பயந்த காலத்தில்
அவர்களுக்கு கெட்டவை அறிந்து நல் வழியில் பயணிக்க சொல்லப் பட்டவை.

இன்னிக்கு மனிதன் எதற்கும் துணிந்து விட்டபடியால் கருட புராண பருப்பெல்லாம் வேகாது.

இது என் கருத்து மட்டுமே - யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

உண்மை நண்பரே, இன்று உள்ள மனிதன் அதிகம் பாவம் செய்யத் துணிந்து விட்டான், சக மனிதர்களையும் நம்பாமல் மறைந்து /மறைத்து வாழ வேண்டிய சூழலுக்கு துணிந்து விட்டான்.

சதாசிவம்
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 26 Jan 2012 - 17:16

சதாசிவம் wrote:[பின்னூட்டத்திற்கு நன்றி
சத் என்றால் சுத்தமான, தூய்மையான, தன்னலம் கருதாத என்ற பொருள் உண்டு. இப்படி இருப்பவர்கள் அன்றும், இன்றும் இல்லை. அதனால் நாம் இவற்றை பற்றி கவலைப்பட வேண்டாம்.
விளக்கத்திற்கு நன்றி , சுத்தமான , தூய்மையான, தன்னலம் கருதாததவர்களும் இருந்தாலுமே அவர்களுக்கு ஏன் கொடுக்கவேண்டும் அவர்களுக்கு கொடுப்பதற்கு பதில் வேறு யாராவது ஏழை மக்களுக்கு கொடுக்கலாமே

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu 26 Jan 2012 - 17:41

ராஜா wrote:
சதாசிவம் wrote:[பின்னூட்டத்திற்கு நன்றி
சத் என்றால் சுத்தமான, தூய்மையான, தன்னலம் கருதாத என்ற பொருள் உண்டு. இப்படி இருப்பவர்கள் அன்றும், இன்றும் இல்லை. அதனால் நாம் இவற்றை பற்றி கவலைப்பட வேண்டாம்.
விளக்கத்திற்கு நன்றி , சுத்தமான , தூய்மையான, தன்னலம் கருதாததவர்களும் இருந்தாலுமே அவர்களுக்கு ஏன் கொடுக்கவேண்டும் அவர்களுக்கு கொடுப்பதற்கு பதில் வேறு யாராவது ஏழை மக்களுக்கு கொடுக்கலாமே

இந்து மத தர்மத்தில் நான்கு வகையான வாழ்க்கை முறை கூறப்படுகிறது. ஒன்று பிரமச்சரியம், வானப்பிரஸ்தம், சந்நியாசம், இல்லறம். இதில் இல்லறத்தில் ஈடுபடுபவன் மற்ற மூவரையும் காக்க வேண்டும் என்று அறம் கூறுகிறது.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கு
நல்லாற்றின் நல்ல துணை - குறள் 41

இதில் மூவர் என்று குறிப்பிடப்படுவது, இல்வாழ்க்கையில் இல்லாத மற்ற மூவரையும் தான். ஆனால் இன்று இந்த குறளுக்கு பெற்றவர், குழந்தை, மனைவியை காக்க வேண்டும் என்று பொருள் விளக்கம் கொடுக்கின்றனர்.

மேலும் உபநிசதங்களில் பிராமனன் என்ற வார்த்தை உண்மை பேசுபவன், பிறர் வாழ இறைவனை வேண்டுபவன் , எல்லா உயிர்களுக்கும் தன்மை செய்பவன் என்று பொருள் கொடுக்கப்படுகிறது. இது பிறப்பால் வருவதல்ல, ஒருவரின் குணத்தால் வருவது.

அந்தணன் என்போர் அறவோன் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.-குறள் 30

இப்படி இருக்கும் ஒருவரின் தேவைகளை கவனிக்கும் போது அவர் துன்பம் இல்லாமல் மேலும் பல நல்ல காரியங்கள் செய்து உலகுக்கு நன்மை செய்வார் என்ற காரணதுக்காக இப்படி சொல்லப்படுகிறது. இன்று கருணை இல்லம் நடத்தும் ஒருவருக்கு நாம் நிதி வழங்குவதில்லையா, அது போல் தான் இதுவும். நல்லவர் ஒருவருக்கு செய்யும் செயல் மற்ற அனைவருக்கும் போயி சேரும். இது பிறப்பால் வந்த வழியல்ல, ஆனால் இதை தவறாகப் பயன்படுத்தி பிறப்பை மட்டும் பயன்படுத்தி ஒருவன் ஆதாயம் தேடக்கூடாது. அப்படி இருப்பவரை ஒருநாளும் நாம் ஆதரிக்கக்கூடாது.

தவறாக மந்திரம் உடயோகிப்பவரும், பொருளாதாரத் தேவைக்கு தவறாக மந்திரம் உபயோகிப்பவரும், அடுத்தவர் அழிய மந்திரம்
உபயோகிப்பவர்களுக்கும் பாவம் வந்து சேரும் என்று புராணம் கூறுகிறது.

சதாசிவம்
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 26 Jan 2012 - 21:13

சதாசிவம் wrote:

இந்து மத தர்மத்தில் நான்கு வகையான வாழ்க்கை முறை கூறப்படுகிறது. ஒன்று பிரமச்சரியம், வானப்பிரஸ்தம், சந்நியாசம், இல்லறம். இதில் இல்லறத்தில் ஈடுபடுபவன் மற்ற மூவரையும் காக்க வேண்டும் என்று அறம் கூறுகிறது.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கு
நல்லாற்றின் நல்ல துணை - குறள் 41

இதில் மூவர் என்று குறிப்பிடப்படுவது, இல்வாழ்க்கையில் இல்லாத மற்ற மூவரையும் தான். ஆனால் இன்று இந்த குறளுக்கு பெற்றவர், குழந்தை, மனைவியை காக்க வேண்டும் என்று பொருள் விளக்கம் கொடுக்கின்றனர்.

மேலும் உபநிசதங்களில் பிராமனன் என்ற வார்த்தை உண்மை பேசுபவன், பிறர் வாழ இறைவனை வேண்டுபவன் , எல்லா உயிர்களுக்கும் தன்மை செய்பவன் என்று பொருள் கொடுக்கப்படுகிறது. இது பிறப்பால் வருவதல்ல, ஒருவரின் குணத்தால் வருவது.

அந்தணன் என்போர் அறவோன் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.-குறள் 30

இப்படி இருக்கும் ஒருவரின் தேவைகளை கவனிக்கும் போது அவர் துன்பம் இல்லாமல் மேலும் பல நல்ல காரியங்கள் செய்து உலகுக்கு நன்மை செய்வார் என்ற காரணதுக்காக இப்படி சொல்லப்படுகிறது. இன்று கருணை இல்லம் நடத்தும் ஒருவருக்கு நாம் நிதி வழங்குவதில்லையா, அது போல் தான் இதுவும். நல்லவர் ஒருவருக்கு செய்யும் செயல் மற்ற அனைவருக்கும் போயி சேரும். இது பிறப்பால் வந்த வழியல்ல, ஆனால் இதை தவறாகப் பயன்படுத்தி பிறப்பை மட்டும் பயன்படுத்தி ஒருவன் ஆதாயம் தேடக்கூடாது. அப்படி இருப்பவரை ஒருநாளும் நாம் ஆதரிக்கக்கூடாது.

தவறாக மந்திரம் உடயோகிப்பவரும், பொருளாதாரத் தேவைக்கு தவறாக மந்திரம் உபயோகிப்பவரும், அடுத்தவர் அழிய மந்திரம்
உபயோகிப்பவர்களுக்கும் பாவம் வந்து சேரும் என்று புராணம் கூறுகிறது.

ரொம்ப சரியான விளக்கம் ஐயா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக