புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
3 Posts - 3%
prajai
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
2 Posts - 2%
manikavi
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
2 Posts - 2%
Barushree
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
1 Post - 1%
Pampu
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
216 Posts - 42%
heezulia
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
18 Posts - 3%
sugumaran
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
6 Posts - 1%
manikavi
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
4 Posts - 1%
prajai
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_m10ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 29, 2012 11:36 am

பிரதமருக்கு ராணுவ தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதம், கசிய விடப்பட்ட பிரச்சினையால், டெல்லி மேல்-சபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

மேல்-சபையில் புயல்

ராணுவத்தில் உள்ள பீரங்கிகளில் வெடிமருந்துகள் இல்லை என்பது போன்ற அதிமுக்கிய ராணுவ ரகசியங்களை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய ரகசிய கடிதம் அம்பலமாகிவிட்டது. இது டெல்லி மேல்-சபையில் நேற்று பெரும் புயலைக் கிளப்பியது.

டெல்லி மேல்-சபை நேற்று கூடியதும் பிரதமருக்கு ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பது என்ன, அந்த கடிதத்துக்கு அரசின் பதில் என்ன என்று பாரதீய ஜனதா தலைமையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

ஓரணியில் எதிர்க்கட்சிகள்

பாரதீய ஜனதா எம்.பி.க்கள் வெங்கையா நாயுடு, அலுவாலியா ஆகியோர் ராணுவ தளபதியின் கடிதத்தின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிந்துகொள்ள விரும்புவதாக கூறினர். ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் சிவானந்த் திவாரி பேசும்போது, "வி.கே.சிங் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். ஊடகங்களுடன் அவர் பேசி வருகிற போக்கு, அவரது ஒட்டுமொத்த ஒழுங்கின்மையை காட்டுகிறது. அவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்'' என வலியுறுத்தினார்.

சபையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியதால் உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு சபைத் தலைவர் ஹமீது அன்சாரி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. பாரதீய ஜனதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சிவசேனா, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர்.

ஒத்திவைப்பு

அப்போது ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, "பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தளபதி எழுதிய கடிதம் அதிமுக்கிய ரகசிய கடிதம். அந்த கடிதம் குறித்து நான் அறிவேன். அந்த கடிதம் வெளிவந்திருக்கக்கூடாது. இது குறித்து அரசு தகுந்த பதில் அளிக்கும்'' என்றார்.

ஆனால் ஏ.கே.அந்தோணியின் பதிலில் திருப்தி அடையாத பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள், இந்த பிரச்சினையில் அரசின் நடவடிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். சபையில் தொடர்ந்து அமளி நிலவியதின் காரணமாக, 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு

சபை மீண்டும் கூடியபோது, பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அதற்கு சபைத்தலைவர் ஹமீது அன்சாரி, "சபையில் ராணுவ மந்திரி உள்ளார். உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அவர் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். சபையில் கூறப்பட்ட கருத்துக்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என நம்புகிறேன்'' என்று கூறி சபையை அமைதிப்படுத்தி, கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால் அது பலன் தரவில்லை. இதையடுத்து சபையை அவர் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

அந்தோணி விளக்கம்

பின்னர் சபை கூடியபோது ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உறுப்பினர்களின் கருத்துக்களை நான் மிகுந்த கவனத்துடன் குறித்துக்கொண்டேன். பிரதமர், சக மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுப்போம்.

நாட்டின் ராணுவம், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் பிரதமர் தனது கவனத்தை கவரும் விதத்தில் மார்ச் 12-ந் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தளபதி கடிதம் எழுதி இருப்பது உண்மைதான். இந்த காரியங்கள் எல்லாம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கின்றன. இந்த பிரச்சினைகளின் (நாட்டின் பாதுகாப்பு) முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவற்றை வெளிப்படையாக விவாதிக்க இயலாது.

தாய் நாட்டை அரசு காக்கும்

நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்தையும் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது. உலகின் சிறந்த படைகளாக நமது பாதுகாப்பு படைகள் திகழ ஏற்ற வகையில் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அத்தனையையும் அரசு செய்யும். எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்த நாட்டுக்கு புகழ் சேர்க்கக்கூடியதாகும். நம்மிடையே எத்தனை கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், தேசத்தின் பாதுகாப்பு என்று வருகிறபோது நாம் எல்லாரும் ஒன்றுதான்.

கொள்முதல்களைப் பொறுத்தமட்டில் 3 ஆண்டுகளுக்கு முன் செய்து கொள்ளப்பட்ட முக்கிய உடன்படிக்கையின்படிதான் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.100 கோடி ஒப்பந்தம் என்றாலும் அதன்படிதான் மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஏதேனும் மீறல்கள் நடந்தால், கறுப்புப்புள்ளி பட்டியலில் சேர்ப்பது, ஒப்பந்தங்களை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேர்மை, வெளிப்படையான தன்மை ஆகியவற்றில் யாரும் சமரசம் செய்துகொள்ள அரசு இடம் அளிக்காது. நமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் காப்போம்.

இவ்வாறு ஏ.கே.அந்தோணி கூறினார்.

தினத்ந்தி

ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 1:48 pm

பீரங்கியில வெடி மருந்தும் இல்ல நம்ம ஆளுங்களுக்கு
ஊழல் பண்றதில அளவு முறையும் இல்ல - அது வெளில
வந்தா வெக்க மானம் சூடு சொரணையும் இல்ல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 1:51 pm

கேவலமாக இருக்கிறது , வேறென்ன சொல்ல

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 29, 2012 1:54 pm

பீரங்கியில வெடி மருந்தும் இல்லையா... அதிர்ச்சி எங்கே போகிறது இந்தியா..! என்ன கொடுமை சார் இது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 2:47 pm

மானங்கெட்ட அரசியல் தலைவர்கள் சோகம் சோகம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 29, 2012 3:35 pm

வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு திட்டம்?

தொடர்ந்து சர்ச்சை கிளப்பி வரும் ராணுவ தளபதி வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங்கின் பதவிக்காலம், ராணுவ தலைமையகத்தில் பதிவாகியுள்ள பிறந்த தேதி அடிப்படையில் வரும் மே 31 அன்று நிறைவுக்கு வருகிறது. தனது உண்மையான பிறந்த தேதி அடிப்படையில் அடுத்த ஆண்டு தான் ஓய்வு பெற வேண்டும் என மத்திய அரசிடம் வி.கே.சிங் கோரிக்கை வைத்தார். இதனை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வி.கே.சிங் வழக்கு தொடர்ந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

இதை தொடர்ந்து வரும் மே 31 அன்று வி.கே.சிங் ஓய்வு பெறுவது உறுதியானது. புதிய தளபதி பெயரையும் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசுக்கு எதிராக புதிய சர்ச்சையை வி.கே.சிங் கிளப்பினார். ராணுவத்துக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் வாகனங்களை வாங்க ஒப்புதல் அளித்தால் தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் பேரம் பேசியதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் தான் புகார் கூறியதாகவும் தகவல் வெளியிட்டு, மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார்.

இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வி.கே.சிங் கடந்த 12ம் தேதி எழுதிய ரகசிய கடிதம் வெளியாகி, இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ தளவாடங்களுக்கு வெடிமருந்துகள் இல்லை; விமானப்படை முற்றிலும் வலுவிழந்து உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன் குறைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. ரகசியமாக வைக்கப்பட வேண்டிய இந்தக் கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்னை நேற்று நாடாளுமன்றத்தில் பூதாகரமாக கிளம்பியது. வி.கே.சிங் கடிதம் வெளியானது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பா.ஜ. தலைவர்கள் கேள்வி எழுப்பினர். வி.கே.சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த திவாரி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். கடிதத்தை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ஏ.கே.அந்தோணி, ராணுவ பலம் தொடர்பாக பிரதமருக்கு ராணுவதளபதி எழுதிய கடிதம் வெளியாகி இருக்கக்கூடாது. இதில் அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்’’ என்றார். முன்னதாக இந்தப் பிரச்னை குறித்து பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், ராணுவத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர் ராணுவ தளபதி வி.கே.சிங். ராணுவத்தில் நடைபெற்ற ஆதர்ஷ் குடியிருப்பு, சுகுணா நில மோசடி உள்பட பல்வேறு ஊழல் புகார்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுத்தவர் வி.கே.சிங். எல்லைக் காவல் படையில் ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அம்பிகா பானர்ஜி கடந்த மே மாதம் வி.கே.சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தை உடனடியாக சிபிஐக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வி.கே.சிங் உத்தரவிட்டார். இப்படி பல்வேறு சூழ்நிலையில் நேர்மையாக செயல்பட்டுள்ள வி.கே.சிங்கை டிஸ்மிஸ் செய்தால் அது மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அவரை டிஸ்மிஸ் செய்வதற்கு பதிலாக கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடிதத்தை வெளியிட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

dinakaran.com

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக