புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_m10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10 
62 Posts - 57%
heezulia
கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_m10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_m10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_m10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_m10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10 
104 Posts - 59%
heezulia
கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_m10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_m10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_m10கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? " Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu May 17, 2012 6:46 pm

கடல்

கடலலை

வெளியில் கடலை


கடலலைக்கு இல்லை வேலி

கடலை போடாட்டி உன் வாழ்க்கை (கா)போலி......

- நான் எழுதினதுதான்.



நேற்று முப்பாத்தம்மன் கோவிலில் அம்மன் தரிசனம் செய்து , தியானத்தில் ஞானத்தின் பாதையில் பிரபஞ்சத்தின் எல்லைக்கே என் மனம் சென்று கொண்டிருந்த போது , திடீரென எனக்கு மிக அருகில் ஒரு ஒலி

''ரெண்டுலதான் ஒன்னத் தொட வரீயா ..........தெனம் ரெண்டுலதான் ஒன்னத்தொட வரிய்யா '' என்று ஒரு கிரகச்சாரமான பாடல் ஒலித்தது , திரும்பி பார்த்தால் ரம்யமான அழகுடன் , சிக் கென இறுக்கமாக நச் என்று கின் எனும் உடலுடன் என் தவம் கலைத்த மேனகை . அவளது மொபைலில்தான் அந்த அழைப்பிசை .

அப்படியெல்லாம் இல்ல ஒரு அபச்சாரமான யுவதி , அவள் மேல் கடும் கோபம் வந்தது , நான் முனிவர் அல்ல , இருந்திருந்தால் அவளை சிம் கார்டாக சாபமிட்டிருப்பேன் . மொபைலை எடுத்து பேச ஆரம்பித்து விட்டாள் . நான் மீண்டும் அம்மன் தரிசனத்தை தொடர்ந்தேன் . அரை மணிநேரமாய் கோவிலை ஒரு 200 முறை சுற்றி சுற்றி பேசிக்கொண்டே இருந்தாள் , எனக்கு ஒட்டுக்கேட்கும் பழக்கம் சிறுவயது முதலே அதிகம் ( அரசாங்கமே ஒட்டுக் கேட்கிறது நான் கேட்டால் தவறா ? ) .

அவளது பாய்பிரெண்ட் போல அந்தப்பக்கம் , மகாமொக்கையாக(என் பதிவுகளை விட ) எங்க வீட்டில் தக்காளி குழம்பு , அம்மா வாங்கி வந்த உருளையில் புழு , பாத்ரூம் போகும் போது தண்ணீர் வரவில்லை என மிக சுவாரஸ்யமாய்(?) பேசிக்கொண்டிருந்தாள் . வெறுப்பாக இருந்தது . பின்தான் புரிந்தது அவள் கடலைகன்னி என்று . காசு கொடுத்தாலும் கடவுளை சுற்றாத இக்கன்னிகள் , இன்று கடலையால் கோவிலையே இருநூறு முறை சுற்றுகிறார்கள் என்றால் அதன் வலிமையை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் .


கடலை வறுத்தல் அல்லது கடலை போடுதல் என்
னும் சொலவடை கடந்த பத்தாண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் ஒரு வாக்கியம் . இதைக்குறித்து நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு . இக்கடலை எல்லார்க்கும் மிகப்பிடித்தமானதும் சுவையானதுமானது. இது இளைஞர் ,மத்ய வயதினர் , வயதானவர் , பேச்சிலர் , திருமணமானவர் என்று பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான கடவுளைப் போன்றது .

இது குறித்த அறிந்திடாத மற்றும் நம் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட கடலை போட இயலாத இளைஞர்களுக்கும் அதன் பொருள் விளக்கம் தரும் முயற்சியே இப்பதிவு .
கடலை என்பது எந்த வித கருத்தோ அல்லது பொருளோ காரியமோ இன்றி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பேச்சை அடைக்காமல் நமது மனதுக்கு தோன்றியதை இஷ்டம் போல் அள்ளி விடுவதே கடலை ஆகும் .



இக்கடலையாகப்பட்டது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து செய்வது .இதை ஒரு ஆணும் ஆணுமோ பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்து கட்டாயம் செய்ய இயலாது . அதற்கு இச்சமூகம் வெட்டி அரட்டை என்று பெயர்வைத்திருக்கிறது .

கடலைகளில் பல வகைகள் உண்டு. உதாரணமாக நிலக்கடலை,பொட்டுக்கடலை ,காரக்கடலை, etc etc... இப்படி பல பெயர்கள் இருந்தாலும் இக்கடலைகள் வேலை வெட்டி இல்லாமல் அம்மாஞ்சி போல வீட்டிலோ பார்க்கிலோ அல்லது பஸ் ஸ்டான்டிலோ அமர்ந்து கொண்டு முற்றத்தையும் வானத்தையும் பார்க்கும் பலருக்கு ஒரு சும்மா டைம் பாஸ் மச்சியாக இருக்கிறது .

அது போலவே கடலைவருப்பதிலும் பல வகைகள் உண்டு

1.எஸ்எம்எஸ் கடலை


2.மின்னஞ்சல் கடலை


3.சாட்டிங் கடலை


4.தொலைப்பேசிக்கடலை


5.மொபைல்க் கடலை


6.நேரில் கடலை


இப்படி கடலைகள் பல வகைகள் இருந்தாலும் ,அவற்றின் கொள்கை ஒன்றுதான் ,அது எல்லையில்லா இன்பம் .

கடலைப்போடுவது கூட முன் சொன்ன நிலக்கடலை வகையறாக்களை போல வேலை வெட்டியின்றி வீட்டிலும் அலுவலகத்திலும் பார்க்கிலும் பீச்சிலும் என எங்கும் வெட்டித்தனமாக இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் . ஆனால் இது சாதாரண வேர்க்கடலை போல சும்மா டைம் பாஸ் மச்சி என்று மட்டும் நினைத்து விட இயலாது .

கடலை போடுதல் சமயங்களில் காதலையும் , கல்யாணத்தையும் , பல கள்ளக்காதல்களையும் தீர்மானிக்கின்றன . கடலைபோட்டே காரியம் சாதிக்கும் இளைஞர்கூட்டமல்லாவா நம்முடையது . இங்கே யாம் காரியம் என்று எதை குறிப்பிடுகிறோம் என்பது காரியம் சாதித்த இளசுகளுக்கும் பெருசுகளுக்கும் புரிந்திருக்கும் .

கடலை போடுதல் கான்பிடன்டை அதிகரிக்கும் என்று சித்தர் பாடல்கள் எதுவும் கிடையாது.

ஆனால் அதுதான் உண்மை . நாம் எத்தனை அதிகமாக நமக்கினியவர்களிடம் கடலை போடுகிறோமோ அத்தனை வேகமாக நமது நம்பிக்கை வளரும் .

கடலை போடுவதில் பல முறைகள் உண்டு . அதற்கு முன் நீங்கள் திருமணமானவரா அல்லது ஆகாதவரா என்பது மிக முக்கியம் . பொதுவாகவே திருமணமாகாத கன்னிபையன்கள் வயது வித்யாசமின்றி அனைவரிடமும் கடலை போட்டு மகிழ்வர் . ஆனால் திருமணமானவர்களோ வயது வித்யாசமின்றி கடலை போட்டாலும் சில வரைமுறைகளோடு அதை செய்வர் . அது என்ன வரைமுறைகளென்றால் நாம் பேசும் பெண்மணி நல்ல நாட்டுக்கட்டையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவதும் அப்பெண்ணின் வாழ்க்கைமுறை பிற்காலத்தில் அப்பெண்ணுடனான தொடர்பால் நமது இல்லற வாழ்வில் துன்பம் நேருமா என்பதை பற்றியெல்லாம் சிந்தித்து பின்னாலே கடலை போடுவதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் .
திருமணமானவர்கள் மிக ஜாக்கிரதையாக கடலை போடுவது நலம் .

எனக்குத்தெரிந்து ஒரு குடும்பஸ்தர் கிராமத்தில் அந்த ஊர் பால்காரம்மாவிடம் பால் வாங்கப் போய் தினமும் கடலை போட்டு போட்டு அது முற்றி வளர்ந்து விருட்சமாகி இப்போதெல்லாம் அவரே அந்த அம்மையாரின் வீட்டில் பால் கறக்க துவங்கி விட்டார் . அவர்கள் வீட்டில் மொத்தமாய் 10 பசு மாடுகள் . அதனால் திருமணமானவர்கள் ஜாக்கிரதை .

இன்னொரு நண்பர் ஒருவர் மாதத்திற்கு 10000 ரூபாய் வரை தனது மொபைலுக்கு பணம் கட்டுகிறார். எல்லாம் கடலை செயல் .

இவ்விடயத்தில் பெண்கள் மிக கெட்டிக்காரத்தனமாய் மாதந்தோறும் 20000 எஸ்எம்எஸ்கள் இலவசமாகத்தரும் மொபைல் சேவைகளை பயன்படுத்துகின்றனர் . அது தவிர மினிமம் பேலண்ஸ் மெயின்டயின் செய்து மிஸ்டுகால் மங்கைகளாகவும் திகழ்கிறார்கள் . இதனால் அவர்களுக்கு பொருளிழப்பு அதிகமில்லை . இதனால் இவர்களது கடலை குறைந்த செலவில் முடிந்து விடுகிறது .

நேரில் கடலை போட அசாத்திய திறமை வேண்டும் . போனிலோ அல்லது மெசேஜ் அல்லது சாட்டிங் என்றால் பிரச்சனை இல்லை , நாம் எதிராளியிடம் பேசுகையில் அடுத்து என்ன பேசலாம் என்று சிந்திக்க சில விநாடிகள் அவகாசம் இருக்கும். ஆனால் நேரிலோ அது கிடையாது , அதற்காக நீங்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டும் . அவை கடலை போட போடத் தானாகவே கைகூடும் . இல்லையென்றால் விடுங்கள் வேறு யாரும் சிக்காமலா போய்விடுவார்கள் .

இருந்தாலும் நமது சீரிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்து கொண்ட சில குறிப்புகள் மட்டும் உங்களுக்காக .

சிறப்பாக கடலை போட சில வழிகள் :

1.நேரில் பேசும் போது கண்ணைப்பார்த்து பேசவும் . அதிகம் வழியாதீர்கள் . அல்லது கையில் கைக்குட்டை வைத்துக்கொள்ளவும் .

2.பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குக்களுக்கு பி.எஸ்.வீரப்பா போல சிரிக்கவும் . சாகும்வரை சிரிக்க முயலுங்கள் அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்கே சொல்ல மாட்டார்.

3.அடிக்கடி ஆக்சுவலி என்னும் வார்த்தையை சேர்க்கவும் (ஹீரோயிசத்திற்கு உதவும் ) . ஆக்சுவலி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்தபடித்த கணவான் என்று எண்ணக்கூடும் .

4.வாய் கூசாமல் கேட்பவரை குறித்து புகழ்ந்து பொய் பேசவும் . ஓவர் புகழ்ச்சி உடம்புக்கு ஆகாது . அளந்து புகழுங்கள் . அழகாய் புகழுங்கள் .( உதவிக்கு நிறைய காதல் புத்தகங்கள் படித்து அறிவை வளர்க்கலாம் , ஆங்கிலபுத்தகஙள் என்றால் சிறப்பு )

5.பேசும் போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும் (காது குடைவது , மூக்கு நோண்டுவது போன்றவை )

6.அடிக்கடி உங்களை பற்றி பீத்திக்கொள்ளாதீர்கள் , அதை பூடகமாக செய்யவும் (அதாவது சுற்றி வளைத்து )

7.நீங்கள் இதற்கு முன் செய்த லூசுத்தனமான சேட்டைகள் குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது . ( உ.தா - லைசன்ஸ் இன்றி போலீசிடம் மாட்டிக்கொண்டு 13 ரூபாய் கொடுத்து தப்பித்த வீரசாகசங்களை பேசவே கூடாது )

8.எந்த ஒரு கட்டத்திலும் ' அப்புறம் ' என்று கேட்டு விடாதீர்கள் , அது கடலையை உடனே நிறுத்திவிடும் .

இது அத்தனையும் பின்பற்றினால் நீங்களும் ஒரு தலைசிறந்த கடலைமன்னனாக புகழ்பெறலாம். பிறகு உங்களுக்கு அந்த நாள் மட்டுமல்ல வருடத்தின் எந்தநாளும் நேரம் காலம் இல்லாமல் கடலைபோட ஒருவர் உங்களுடனே கட்டாயம் இருப்பார் .

கடலை போட மிக முக்கியமானது , எதிர்பாலினத்தேர்வு (அதாவது நல்ல டுபுரி ) . அது அனைவருக்கும் வாய்க்காது . அதற்கு கடினமான உழைப்பும் நேர்மையும் வாய்மையும் நேரம் தவறாமையும் கொஞ்சூண்டு பர்சனாலிட்டியும் வேண்டும் . இவையெல்லாம் இருந்தும் உங்களுக்கு நல்ல ஃபிகர் அமையவில்லையென்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு நல்ல கோவிலில் வாரமிருமுறை என 108 வாரம் முருகப்பெருமானுக்கு நெய்விளக்கு போட்டு பூஜை செய்யவும் நல்ல பலன் கிட்டும் . (நான் கோவிலுக்கு போனதன் காரணம் இப்போது புரிந்திருக்கும் .) . நெய்விளக்கு கிடைக்கவில்லையென்றால் எழுமிச்சைவிளக்கு உசிதம் .
----
அதிஷா ஆன் லைன்


avatar
Guest
Guest

PostGuest Thu May 17, 2012 6:52 pm

கடலை போடுவது ஆபத்தா?

கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையிலை கடலை விற்பனை செய்யப்படுகிறதோ இல்லையோ இந்தப் போனில் போடுகிற கடலை மட்டும் அளவு கணக்கில் இல்லை.

ஏன் கடலை போடுகின்றார்கள்?
எதற்காக போடுகின்றார்கள்?
யார் போடுகின்றார்கள்?
என்று பார்தால் அது ஒரு 100 க்கு 75 வீதமானவர்
கள் இளைஞர்கள் தான் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
(ஏதோ இவர் மட்டும் உத்தமர் நாங்கள் எல்லாம் கடலை போடுகின்றதை எழுத வந்துட்டார் என்று நீங்கள் மனசுக்குள் திட்டுவது தெரிகின்றது என்ன செய்ய.......)

ஆண் பெண் உறவில்தான் கூடுதலான நேரத்தை போனில் (கடலைபோடுவதை) கதைக்கின்றார்கள். இப்படிக் கதைப்பதால் நன்னையா தீமையா என்ற வினாவுக்கு நான் வரவில்லை. இன்றைய கலாசார மாற்றம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் தவழ்கின்றது

....சி....சி.. சிணுங்குகின்றது இந்த செல்போன்கள்.கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும் இருபாலாரும் தமக்குச் சுதந்திரம் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஒரு செல்போன் கிடைத்தால் போதும் அவர்களின் உணர்வுகளின் பகிர்வை மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்.

அன்றாடம் நடக்கும் விடயங்கள் சம்பவங்கள் பற்றி தமது நண்பர்களோடு கதைப்பார்கள். ஓ.கே. கதைப்பது சரிதான் ஆனால் சில விடயங்கள்..... என்ன இழுக்கின்றனா... ஏதாவது ஆபாசமாக எழுதப்போறானோ என்று நினைக்க வேண்டாம்....

ஒவ்வொரு நாளும் செல்போனில் திரும்ப திரும்ப ஒரு விடயம் பற்றிக் கதைப்பது அவர்களுக்கு ஒருவித சலிப்பையே ஏற்படுத்திவிடுகின்றது.

அதனால் அவர்களது அடுத்து என்ன கதைக்கலாம் ... என்ன உலக விடயங்களைப் பற்றி ஆராயவா போகின்றார்கள். அப்படி ஆராயப்போனால் சில நிமிடங்களிலேயே அவர்களது உரையாடல் முடிந்துவிடும்.

என்னடா மணிக்கணக்காக.... கதைக்கின்றார்கள்... என்னத்தைத்தான் அப்படிக் கதைக்கின்றார்கள் என்ற வினா பலரிடம் உள்ளது.சிலர் பாட்டுப் படிப்பார்கள்சிலர் கதை சொல்வார்கள்சிலர் கவிதை வாசிப்பார்கள் என்ன சின்ன சஞ்சிகையையே போனில் சொல்லிவிடுவார்கள்.

அப்படியொரு கதை.
இன்னும் சிலரோ ஒரு படிமேல்போய்.... இரட்டை அர்த்த வசனங்கள் கதைக்கின்றார்கள்.... அவர்கள் முதலில் இரட்டை அர்த்த வசனங்களை கதைக்கும்போது அதை அந்த ஆணோ அல்லது பெண்ணோ ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வெளிப்படையாகவே அதாவது செக்ஸைப் பற்றி கதைக்கின்றார்கள்.

இதனால் தான் ஆபத்து ஆரம்பிக்கின்றது என்று சொல்லலாம். செக்ஸ் கதைகள், செக்ஸ் எஸ்.எம்.எஸ்.க்கள் பரிமாற்றம், இந்தப் பரிமாற்றம் அவர்களது நடத்தையிலும் மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. நேரில் கதைக்க முடியாத தங்களது ஆதங்கங்களை தொலைபேசியூடாக தீர்ப்பதனால் இவர்களது காமப்பசி அடங்கிவிடும்போல..

சிலர் வாழ்க்கையில் தவறிப்போவதற்கும் இதுவும் ஒரு காரணம்.தனிமையில் இருப்பவர்கள் கூடுதலாக இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.இளைஞர்களின் திருவிளையாடல்என்ன சிவாஜி, திருவிளையாடல் என்று நினைக்க வேண்டாம்.

கொமினிக்கேஷனில் ரிலோட் போடும் பெண்களின் தொலை பேசி இலக்கங்களை எடுத்து எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொள்ளுதல். தவறுதலாக டயல் செய்துவிட்டேன் என்று கதைப்பது என்று தமது திருவிளையாடல்களை அரங்கேற்றுகின்றனர்.

அதுமட்டுமா சிலர் கணவன் வெளிநாட்டில் இருக்கின்ற மனைவிமாரை தங்களது வலையில் வீழ்த்துவதற்காக செல்போன்களை பாவித்து அவர்களுடன் இரவில் உரையாடுதல், அதுவும் இரவு 11 மணிக்கு ஆரம்பித்தார்கள் என்றால் அதிகலை 2, 3 மணி வரையும் தொடர்வது, அதில் இளைஞர்களைச் சொல்லிக் குற்றமில்லை ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும்.

அவ்வாறு ஏன் பெண்கள் நடந்துகொள்கின்றார்கள். அதற்காக ஆண்கள் மட்டும் நல்லவர்கள் இல்லை. அவர்கள் ஏன் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்களோ தெரியவில்லை.கடலைபோடுவதும் ஒரு மனநோய் என்று சொல்லலாம்.

ஒரு இரவு செல்போன் கதைக்காமல் விட்டாலே சிலர் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிடுகின்றனர். இதற்கு அவர்களுக்கு செல்போன் சிணுக்கலில் கிடைக்கும் அன்பு என்றுதான் சொல்லவேண்டும்.அன்புக்கு அடிபணியுங்கள் சரி.

ஆனால் அந்த அன்பு ஆபத்தில் முடியாதவரை உங்களது செல்போன் சிணுங்கல்களை குறையுங்கள்.... அதனால் உங்களுக்கு வரும் ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.கடலைபோடுங்கள் ஆனால் அளவோடு போடுங்கள்.

---
விதியின் சதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 17, 2012 7:07 pm

புரட்சி எங்க போயிட்டீங்க இவ்ளோ நாளா?

நீங்களும் எங்கையாவது கடலை சாகுபடியில் பிசியா இருந்தீங்களோ?

கடலையைப் பற்றி கடலினும் பெரிதான ஆராய்ச்சிப் பதிவா இருக்கே?

பகிர்வுக்கு நன்றி புரட்சி.




avatar
Guest
Guest

PostGuest Fri May 18, 2012 7:35 pm

யினியவன் wrote:புரட்சி எங்க போயிட்டீங்க இவ்ளோ நாளா?

நீங்களும் எங்கையாவது கடலை சாகுபடியில் பிசியா இருந்தீங்களோ?

கடலையைப் பற்றி கடலினும் பெரிதான ஆராய்ச்சிப் பதிவா இருக்கே?

பகிர்வுக்கு நன்றி புரட்சி.

ஆமாம் இனியவன் (கொலைவெறி ) அண்ணே ... கடலை ஆரம்பித்து எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது என்ன நடக்குமோ ...

சிவா அண்ணன் கனவில் வந்து அறிவுரை சொல்கிறார் என்றல் எப்படி என் நிலை என்று பார்த்து கொள்ளுங்கள்.. ஈகரை தொடர்ந்து வந்தால் தெளிந்து விடுவேன் எண்டு நினைக்கிறன் அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக