புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_m10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10 
21 Posts - 66%
heezulia
தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_m10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_m10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10 
63 Posts - 64%
heezulia
தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_m10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_m10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_m10தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி...


   
   
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Jul 30, 2012 7:35 pm

தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

கோபம், டென்ஷன், ஏமாற்றம் போன்ற உளவியல் காணரங்களாலும், அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற உடலியல் காரணங்களாலும் தலைவலி உருவாகும்.

இந்த தலைவலிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவ முறையை மேற்கொள்வார்கள். சிலர் வீட்டு வைத்தியமுறையில் சிகிச்சை செய்து கொள்வார்கள். சிலர் வலி நிவாரண தைலங்கள், அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். சிலர் சூடாக காஃபி, டீ அருந்துவார்கள். இதன் மூலம் நிரந்தரத் தீர்வு என்றுமே கிடைக்காது. தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும்.

இந்த தலைவலி பலவிதங்களில் வேதனைப் படுத்தும்.

· தலை முழுவதும் வலி தோன்றுதல்.

· நெற்றியின் இரு பக்கங்களிலும் வலி தோன்றுதல்.

· நெற்றியின் ஒரு பக்கத்தில் வலி.

· உச்சந்தலையில் வலி.

· தலையின் பின்பக்கத்தில் வலி.

· கழுத்து பிடறிப் பகுதியில் வலி என பலவகையுண்டு.

இவற்றில் மைக்ரைன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுவோர் அதிகம்.

ஒற்றைத் தலைவலி உருவாக காரணங்கள்

·இது அவ்வப்போது தோன்றக்கூடியது. கண்களின் மேல்புறம், தலையின் பின்புறம், தலையின் ஒரு பக்கம் என வலி தோன்றும்.

· பொதுவாக கோபம், மன இறுக்கம், மன உளைச்சல், சுற்றுச் சூழலின் அழுத்தம், பரபரப்பு, படபடப்பு, தோல்வி, இயலாமை, அவமானம் போன்ற மனம் சம்பந்தப்பட்ட காரணங்களாலேயே ஒற்றைத் தலைவலி உண்டாகிறது.

· மது, புகைப்பழக்கம், மசாலாப் பொருட்கள், ஊறுகாய், மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் ஒற்றைத் தலைவலி வருகிறது.

· நரம்புகள் பாதிக்கப்படும்போதும், குடலில் புண் ஏற்படும்போதும் ஒற்றைத் தலைவலி உருவாகும்.

· ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகரித்து அவை மேல் நோக்கி நீராகக் கோர்த்து தலைவலியை உண்டாக்குகின்றன.

· ஒற்றைத் தலைவலி பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் தாக்குகின்றது. மாத விலக்குக் காலங்களிலும், பிரசவமான பெண்களுக்கும் இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம் ஹார்மோன்களில ஏற்படும் மாற்றமேயாகும்.

· குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், கருப்பை அகற்றப்பட்ட பெண்கள், கருத்தடை சாதனங்கள் உபயோகிக்கும் பெண்கள் இந்த ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிப்படைகின்றனர்.

முன் அறிகுறிகளோடு வரும் தலைவலி

ஆங்கிலத்தில இதற்கு கிளாசிக்கல் மைக்ரைன் என்று பெயர். இந்த தலைவலி தாக்கும் முன் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, மனச் சோர்வு இதில் ஏதாவது ஒன்று வந்தால் கூட தலைவலி ஆரம்பித்துவிடும். மேலும் சிலருக்கு பார்வை மங்கல், கண்முன் மின்மினி பூச்சிகள் பறப்பது போலவும், கருப்புப் புள்ளிகள் சுழல்வதுபோலவும் தோன்றும். பின் தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.

நிரந்தர வலி

இந்த வகையான தலைவலி இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு (20 முதல் 45 வயதிற்குள்) ஏற்படக்கூடியதாகும். இந்த தலைவலி வந்தவுடன், தலை வலிக்கும் பக்கத்தில் கண்கள் சிவக்கும். மூக்கிலிருந்து நீர் ஒழுகும். அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இந்த வலி தினமும் ஓரிருமுறை தாக்கும். எந்த வகையான உள் மருந்து, வெளிமருந்து பயன்படுத்தினாலும் தலைவலி குணமாகாது. தானாக உண்டாகும், பிறகு தானாக குணமாகும். இந்த தலைவலியால் அவதிப்படுபவர்கள் முதலில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

ஒற்றைத் தலைவலியை நோய் வருவதற்கான அழைப்பு மணி என்றே சித்தர்கள் கூறகின்றனர்.

ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க

ஒற்றைத் தலைவலி தோன்ற முதற்காரணம் மன பாதிப்புகளே.

கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமருவான் என்பது பழமொழி.

எனவே டென்ஷன், கோபம், மன உளைச்சல், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை இரு வேளையும் ஏதாவது ஒரு நேரத்தில் யோகா, தியானம் செய்வது நல்லது.

இளம் சூடான நீரை அருந்த வேண்டும். வலி நிவாரணிகளை அதிகம் உபயோகிக்கக் கூடாது. அது பல பின்விளைவுகளை உண்டாக்கும்.

அதுபோல் வெளிப்பூச்சு மருந்துகள் சில சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கிவிடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகக்கூடிய மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதிக சப்தம் காதுகளைப் பாதிக்கும். காதுகள் பாதிகப்பட்டால் தலைவலி உண்டாகும். எனவே அதிக சப்தமுள்ள இடங்களில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.

உடல் தன்மைக்கேற்ப உணவு முறையை மாற்றி அமைத்துக்கொண்டால் தலைவலியி லிருந்து தப்பலாம்.
Photo: தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி.. தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. கோபம், டென்ஷன், ஏமாற்றம் போன்ற உளவியல் காணரங்களாலும், அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற உடலியல் காரணங்களாலும் தலைவலி உருவாகும். இந்த தலைவலிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவ முறையை மேற்கொள்வார்கள். சிலர் வீட்டு வைத்தியமுறையில் சிகிச்சை செய்து கொள்வார்கள். சிலர் வலி நிவாரண தைலங்கள், அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். சிலர் சூடாக காஃபி, டீ அருந்துவார்கள். இதன் மூலம் நிரந்தரத் தீர்வு என்றுமே கிடைக்காது. தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். இந்த தலைவலி பலவிதங்களில் வேதனைப் படுத்தும். · தலை முழுவதும் வலி தோன்றுதல். · நெற்றியின் இரு பக்கங்களிலும் வலி தோன்றுதல். · நெற்றியின் ஒரு பக்கத்தில் வலி. · உச்சந்தலையில் வலி. · தலையின் பின்பக்கத்தில் வலி. · கழுத்து பிடறிப் பகுதியில் வலி என பலவகையுண்டு. இவற்றில் மைக்ரைன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுவோர் அதிகம். ஒற்றைத் தலைவலி உருவாக காரணங்கள் ·இது அவ்வப்போது தோன்றக்கூடியது. கண்களின் மேல்புறம், தலையின் பின்புறம், தலையின் ஒரு பக்கம் என வலி தோன்றும். · பொதுவாக கோபம், மன இறுக்கம், மன உளைச்சல், சுற்றுச் சூழலின் அழுத்தம், பரபரப்பு, படபடப்பு, தோல்வி, இயலாமை, அவமானம் போன்ற மனம் சம்பந்தப்பட்ட காரணங்களாலேயே ஒற்றைத் தலைவலி உண்டாகிறது. · மது, புகைப்பழக்கம், மசாலாப் பொருட்கள், ஊறுகாய், மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் ஒற்றைத் தலைவலி வருகிறது. · நரம்புகள் பாதிக்கப்படும்போதும், குடலில் புண் ஏற்படும்போதும் ஒற்றைத் தலைவலி உருவாகும். · ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகரித்து அவை மேல் நோக்கி நீராகக் கோர்த்து தலைவலியை உண்டாக்குகின்றன. · ஒற்றைத் தலைவலி பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் தாக்குகின்றது. மாத விலக்குக் காலங்களிலும், பிரசவமான பெண்களுக்கும் இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம் ஹார்மோன்களில ஏற்படும் மாற்றமேயாகும். · குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், கருப்பை அகற்றப்பட்ட பெண்கள், கருத்தடை சாதனங்கள் உபயோகிக்கும் பெண்கள் இந்த ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிப்படைகின்றனர். முன் அறிகுறிகளோடு வரும் தலைவலி ஆங்கிலத்தில இதற்கு கிளாசிக்கல் மைக்ரைன் என்று பெயர். இந்த தலைவலி தாக்கும் முன் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, மனச் சோர்வு இதில் ஏதாவது ஒன்று வந்தால் கூட தலைவலி ஆரம்பித்துவிடும். மேலும் சிலருக்கு பார்வை மங்கல், கண்முன் மின்மினி பூச்சிகள் பறப்பது போலவும், கருப்புப் புள்ளிகள் சுழல்வதுபோலவும் தோன்றும். பின் தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். நிரந்தர வலி இந்த வகையான தலைவலி இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு (20 முதல் 45 வயதிற்குள்) ஏற்படக்கூடியதாகும். இந்த தலைவலி வந்தவுடன், தலை வலிக்கும் பக்கத்தில் கண்கள் சிவக்கும். மூக்கிலிருந்து நீர் ஒழுகும். அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இந்த வலி தினமும் ஓரிருமுறை தாக்கும். எந்த வகையான உள் மருந்து, வெளிமருந்து பயன்படுத்தினாலும் தலைவலி குணமாகாது. தானாக உண்டாகும், பிறகு தானாக குணமாகும். இந்த தலைவலியால் அவதிப்படுபவர்கள் முதலில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. ஒற்றைத் தலைவலியை நோய் வருவதற்கான அழைப்பு மணி என்றே சித்தர்கள் கூறகின்றனர். ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க ஒற்றைத் தலைவலி தோன்ற முதற்காரணம் மன பாதிப்புகளே. கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமருவான் என்பது பழமொழி. எனவே டென்ஷன், கோபம், மன உளைச்சல், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளையும் ஏதாவது ஒரு நேரத்தில் யோகா, தியானம் செய்வது நல்லது. இளம் சூடான நீரை அருந்த வேண்டும். வலி நிவாரணிகளை அதிகம் உபயோகிக்கக் கூடாது. அது பல பின்விளைவுகளை உண்டாக்கும். அதுபோல் வெளிப்பூச்சு மருந்துகள் சில சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கிவிடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது. குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகக்கூடிய மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக சப்தம் காதுகளைப் பாதிக்கும். காதுகள் பாதிகப்பட்டால் தலைவலி உண்டாகும். எனவே அதிக சப்தமுள்ள இடங்களில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் தன்மைக்கேற்ப உணவு முறையை மாற்றி அமைத்துக்கொண்டால் தலைவலியி லிருந்து தப்பலாம்.



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 30, 2012 8:46 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சசி அருமையிருக்கு
நம்ம சார்லஸ்க்கு ஏதாவது ஒரு விசயத்த நான் புரிய வைக்கறதுகுள்ள எனக்கு எல்லா பக்கமும் தலைவலி வந்துடும் சிரி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 8:48 pm

முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சசி அருமையிருக்கு
நம்ம சார்லஸ்க்கு ஏதாவது ஒரு விசயத்த நான் புரிய வைக்கறதுகுள்ள எனக்கு எல்லா பக்கமும் தலைவலி வந்துடும் சிரி

ரொம்ப ஓவரா புகழாதீங்க முரளி...

எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு... சிரி



தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... 154550தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... 154550தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... 154550தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... 154550தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Jul 30, 2012 8:53 pm

முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சசி அருமையிருக்கு
நம்ம சார்லஸ்க்கு ஏதாவது ஒரு விசயத்த நான் புரிய வைக்கறதுகுள்ள எனக்கு எல்லா பக்கமும் தலைவலி வந்துடும் சிரி


அண்ணா அப்படி என்றால் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் சரி தானே!!! புன்னகை



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Jul 30, 2012 8:56 pm

சார்லஸ் mc wrote:
முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சசி அருமையிருக்கு
நம்ம சார்லஸ்க்கு ஏதாவது ஒரு விசயத்த நான் புரிய வைக்கறதுகுள்ள எனக்கு எல்லா பக்கமும் தலைவலி வந்துடும் சிரி

ரொம்ப ஓவரா புகழாதீங்க முரளி...

எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு... சிரி

என்ன அண்ணா எல்லா பக்கமும் உங்க பேரு தான் நீங்க VIP ஆகிடிங்க சந்தோஷமா



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 30, 2012 8:56 pm

இல்லை சசி, நீங்க சொன்னது ஒற்றை தலைவலி
நான் சொன்னது ஒட்டுமொத்த தலைவலி ஒன்னும் புரியல

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Jul 30, 2012 8:58 pm

முரளிராஜா wrote:இல்லை சசி, நீங்க சொன்னது ஒற்றை தலைவலி
நான் சொன்னது ஒட்டுமொத்த தலைவலி ஒன்னும் புரியல


என்ன செய்ய போறீங்க அண்ணா நான் ஏதும் உதவ வேண்டுமா சொல்லுங்கள் கதிருக்கிறேன் உங்கள் கட்டளைக்கு



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக