புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_m10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_m10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_m10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10 
3 Posts - 6%
Baarushree
இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_m10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10 
2 Posts - 4%
prajai
இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_m10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10 
2 Posts - 4%
சிவா
இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_m10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10 
1 Post - 2%
viyasan
இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_m10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10 
1 Post - 2%
Rutu
இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_m10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_m10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_m10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10 
2 Posts - 15%
Rutu
இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_m10இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Sep 25, 2012 12:53 pm

இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!


முதல் முதலில் சாதனைகள் என்றுமே மகத்தானவை, நினைவை விட்டு அகலாதவை. முதல் முதலில் நிலவில் கால் பதித்த "நீல் ஆம்ஸ்ட்ராங்கை" யாராவது மறக்க முடியுமா ? முதல் முதலில் Mt.எவரெஸ்டில் கொடி நட்டிய டென்சிங் நோர்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரியை அவ்வளவு சீக்கிரம் மறக்க தான் முடியுமா ? அதே போல் நமக்கு தெரியாத பல முதல் சாதனைகள் இந்திய சினிமாவில் நிகழ்த்த பட்டு உள்ளன.

இந்திய சினிமாவில் சில முதல் முதலில் சாதனைகளை பார்போம்........


இந்தியாவின் முதல்இயக்குநர்கள்:
ஹீராலால் சென் மற்றும் ஹரிச்சந்திர சக்ராம் படவேத்கர் (சாவே தாதா என்று அறியப்பட்டவர்). இருவரும் புகைப்படக் கலைஞர்கள்.

H.S அவர்களின் முதல் செய்தி படம்
சென், மேடை நாடங்களை 1898 இலிருந்து படமாக்கத் தொடங்கினார். அவர் ராயல் பயாஸ்கோப் கம்பெனி என்ற பெயரில் இந்தியாவின் முதல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்தான் இந்தியாவின், பார்க்கப் போனால் உலகின் முதல் முழுநீளப் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற படத்தை 1904 இல் உருவாக்கியவர் என்று நம்பப்படுகிறது. என்றாலும் அந்தப் படத்தின் பிரதி கிடைக்கவில்லை. அவரது படைப்புகள் அனைத்தும் தீவிபத்தால் முற்றிலும் அழிந்துபோயின. நவம்பர் 1899 இல் படவேத்கர் பாம்பே தொங்கும் தோட்டத்தில் குத்துச்சண்டை ஒன்றைப் படமாக்கினார். வாட்சன் ஹாஸ்டலில் இந்தியாவின் முதல் திரையிடல் 1896 ஜூலை 7 இல் நடந்தபோது அவர் அங்கு இருந்தார். இந்தியாவின் முதல் செய்திப்படம் என்று கருதப்படும் இங்கிலாந்தி லிருந்து டிசம்பர் 1901 இல் இந்தியா திரும்பும் பாம்பே மாகாண கல்வித்துறை அமைச்சர் ஆர்.பி.பரஞ்சிப்பியின் வருகையையும் 1903 வருடம் கல்கத்தா நகரத்தில் நடைபெற்ற கிங் எட்வர்ட் VII அவர்களின் முடிசூட்டு விழாவில் கர்சன் பிரபு என்கிற பிரிட்டிஷ் வைஸ்ராயயை படம் பிடித்தார்.


முதல் திரைப்படத் தயாரிப்பாளர்:
ஜாம்ஷெட்ஜி ப்ராம்ஜி மதன் என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தியேட்டர் கலைஞர் தனது எல்பின்ஸ்டன் பயாஸ்கோப் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் வரிசையாக நிறைய குறும்படங்களைத் தயாரித்தார். அதுதான் பின்னாளில் மதன் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய தோற்றமாக 1918 இல் பரிணமித்தது. கல்கத்தாவில் ஒரு டெண்ட் கொட்டகையில் தனது படங்களை 1902 முதல் மதன் திரையிடத் தொடங்கினார். புதிதாகத் தோன்றி பெரிய அளவில் வளர்ந்து வந்த திரைப்படத் தொழிலின் வளர்ச்சியை உணர்ந்துகொண்ட அவர், தனது கம்பெனியை பரவலாக கொண்டு சென்றார். அது மௌனப் பட சகாப்தத்தில் ஒரு முதன்மையான சக்தியாக இருந்தது. இவர்தான் முதன் முதலில் திரைப்படத் தயாரிப்பு என்பதையும் தாண்டி, விநியோகம் மற்றும் கண்காட்சிக்கு வைத்தல் என்று விரிவுபடுத்தியவர்.
இந்தியாவின் முதல் திரைப்பட நிறுவனத்தை அவர் கல்கத்தாவில் நிறுவினார். வங்காளத்தின் முதல் வணிகரீதியான முழுநீள மௌனப்படமான பில்வமங்கள் என்ற படத்தை மதன் தியேட்டர்ஸ் தயாரித்தது. அப்படம் 1919 நவம்பர் 11 இல் கார்ன்வாலிஸ் தியேட்டர் என்ற திரையரங்கில் ஓடத் தொடங்கியது.அந்தப் படம் 10 ரீல்களைக் கொண்டது.


முதல் திரையரங்கம்:
இந்தியாவின் முதல் திரையரங்கம் 1907 இல்ஜே.எஃப். மதனால் கல்கத்தாவில் எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.


இந்தியாவின் முதல் கதைப் படம் :
இந்தியாவின் முதல் கதைப் படமான புந்தலிக்,மே 19, 1912 இல் வெளியிடப் பட்டது. அதன் நீளம் 12 நிமிடங்கள்தான். இப்படம் மகாராஷ்டிராவின் துறவி ஒருவரைப் பற்றியது.


இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் :

ராஜா ஹரிச்சந்திரா படத்தில் ஒரு காட்சி
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்க படும் "தாதாசாகே பால்கே" அவர்களின் "ராஜா ஹரிச்சந்திரா" (1913 மே 3 ஆம் தேதி) தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம். இந்த படம் பம்பாய் கோரனேஷன் சினிமாட்டோகிராஃப் என்ற அரங்கில் வெளியானது. இப்படத்தில் நடித்த அனைவருமே ஆண்கள், அந்த காலத்தில் சினிமாவில் நடிப்பதருக்கு பெண்கள் முன்வர வில்லை. அதனால பால்கே அவர்கள் ஆண் நடிகர்களை பெண் வேடம் இட்டு, படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களையும் படம் ஆக்கினர். படம் மக்களுக்கு காட்ட படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பாக (21 ஏப்ரல்) பம்பாயின் மிக முக்கிய பிரபலங்கள் மற்றும் பல செய்தித்தாள்கள் ஆசிரியர்களுக்கு, பாம்பே ஒலிம்பியா சினிமாவில், இப்படத்தின் 3,700 அடி நீள முன்னோட்டக் காட்சிக்கு தாதா சாஹேப் பால்கே ஏற்பாடு செய்திருந்தார்.


இந்தியத் திரையில் முதல் பெண்கள்:
துர்காபாயும் அவரது மகள் கமலாபாய் கோகலேயும் தாதா சாஹேப் பால்கேயின் இரண்டாவது படமான மோகினி பஸ்மசூர்(1914) என்ற படத்தில் நடித்தனர்.


முதல் வெற்றித் திரைப்படம் :
பால்கே இயக்கிய லங்கா தகன் (1921) முதன்முதலில் வசூலில் வெற்றி கண்ட படம். அது பாம்பே கிர்காம் என்ற இடத்திலுள்ள வெஸ்ட் எண்டு சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. 23 வாரங்கள் ஓடியது.


தடை செய்யப்பட முதல்இந்தியப் படம்:
பாம்பே கோஹினூர் ஸ்டூடியோஸ் தயாரித்த பகத் விதூர் (1921). ஸ்டுடியோவின் உரிமையாளர் துவாரகா தாஸ் நரந்தாஸ் சம்பத்தே அப்படத்தின் பிரதான வேடத்தில் நடித்தார். அதில் அவர் மகாத்மா காந்தி போன்ற தோற்றத்தில் நடித்தார். அரசியல் காரணங்களுக்காக அப்படத்தை சென்சார் தடை செய்தது. இருப்பினும் வேறு சில மாநிலங்களில் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது.


முதல் திரைப்படத் தணிக்கைக் குழு :
1920 இல் பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் ரங்கூனில் தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பிறகு லாகூரில் 1927 இல் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது.


இந்தியாவின் முதல் திரை நட்சத்திரம் :
பேஷன்ஸ் கூப்பர். அவர் மதன்ஸ் ஆஃப் கல்கத்தா தயாரித்து, ஜ்யோதிஷ் பந்தோபாத்யாய் இயக்கிய நளதமயந்தி (1920) என்ற படத்திலும் ஏராளமான பிற படங்களிலும் நடித்தார்.
முதல் சமூக நையாண்டிப் படம்:

தீரேன் கங்கூலி
பிலேத் பேராட் (இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர், 1921, வங்க மொழிப்படம்). தயாரித்து நடித்தவர் தீரேன் கங்கூலி. இந்தப் படம் காதல் மற்றும் கிழக்கத்திய -மேற்கத்திய முரண்பாடு ஆகியவற்றைக் கையாண்ட சமூகத் திரைப்படங்களுக்கு முன்னோடி. தீரேன் கங்கூலி அவர்கள் பிற்காலத்தில் இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்க படும் மிக உயரிய விருதான "தாதாசாகே பால்கே" விருது மற்றும் "பத்ம பூஷன்" விருது பெற்றார்.
முதல் சரித்திரப் படம்:
சிங்காகாத் 1923, பாபுராவ் பெயிண்டர் இயக்கியது. இதுதான் இந்தியாவின் முதல் முழு நீள வரலாற்றுத் திரைப்படம். இப்படம் சக்கரவர்த்தி சிவாஜியின் போர்ப்படையைப் பற்றிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.


ஒரு பெண் தயாரித்த முதல் இந்தியப் படம்:
புல்புல்- எ- பரிஸ்தான்(1926). இயக்குநர்: ஃபாத்மா பேகம்.


நில உரிமை பற்றிய முதல் படம்:
நீரா (1926). இந்தப் படம் ஆர்.எஸ்.சவுத்திரியால் இயக்கப்பட்டது. மெஹபூப் கான் இப்படத்தில் அவரது உதவியாளராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் நிலவுரிமைப் பிரச்சனைப் பற்றிய விரிவானப் பார்வையுடன் ரொட்டி (1942) என்ற படத்தை இயக்கினார்.


முதல் தேவதாஸ் படம் :
நரேஷ் மித்ரா இயக்கி, பானி பர்மா நடித்த தேவதாஸ் (1928). ஒளிப்பதிவு: நிதின் போஸ். அனுராக் காஷ்யப்பின் தேவ் டி உட்பட, இந்தக் கதை மொத்தம் 12 முறை வங்காளம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டிருக்கிறது.


முதல் ரவீந்திரநாத் தாகூர் திரைத் தழுவல்:
நாவல் காந்தி இயக்கிய பலிதான் (1927). இப்படம் தாகூர் 1887 இல் எழுதிய நாடகமான பிசர்ஜனை அடிப்படையாகக் கொண்டது. தாகூரே இதை படமாக்க விரும்பி குழந்தை என்ற பெயரில் திரைக்கான எழுத்து வடிவமாக உருவாக்கியிருந்தார். என்றாலும் அது படமாகத் தயாரிக்கப்படவே இல்லை.


முதல் மொகலாய வரலாற்றுப் படம்:
நூர்ஜகான் (1923). இது மதன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் பேஷன்ஸ் கூப்பர் நடித்தது. அனார்கலி என்ற உருது நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இம்தியாஸ் அலி தாஜ் இயக்கிய த லவ்ஸ் ஆஃப் அ மொகல் பிரின்ஸ் (1928) என்ற படம் மற்றொரு மொகலாயர் காலத்து வரலாற்றுப் படமாகும்.


சிவாஜி பற்றிய முதல் முக்கியப் படம்:
உதய் கல்(1930). மராத்திய வரலாற்றில் சிவாஜியை முக்கியமான ஒருவராகக் காட்டுவதற்கு இப்படம் பெருமளவு தாக்கம் தந்தது என்று சாந்தாராமே சொல்கிறார். மற்றொரு மராத்திய சினிமா முன்னோடியான பால்ஜி பெந்தர்கர், சிவாஜி பற்றிய பல படங்களை, சத்திரபதி சிவாஜி (1952) மற்றும் பவன் கிந்த்(1956) போன்ற படங்களைத் தந்தார்.



முதல் முத்த காட்சி
முதல் திரை முத்தம்:
எ த்ரோ ஆப் டைஸ் என்ற படத்தில் நடித்த சாரு ராயும் சீதா தேவியும் முதன்முதலாக திரையில் முத்தமிட்டுக் கொண்டனர். பிரிட்டிஷ் இந்தியாவில் திரைப்படத்தில் முத்தத்துக்குத் தடை இல்லை. 1933 இல் வெளியான கர்மா என்ற படத்தில் நிஜ வாழ்வில் தம்பதியரான ஹிமான்ஷு ராயும் தேவிகா ராணியும் தொடர்ந்து நான்கு நிமிடங்களுக்கு முத்தமிட்டுக் கொண்டனர்.


இந்தியத் திரையின் முதல் கவர்ச்சி நடிகை:
பதிபக்தி (1922) என்ற படத்தில் நடித்த இத்தாலிய நடிகை சினோரின்னா மனெல்லி. தயாரிப்பு மதன் தியேட்டர்ஸ். சினோரின்னா உடல்பாகங்கள் வெளியில் தெரியும் வண்ணம் மெல்லிய ஆடை அணிந்து ஆடிய நடனக் காட்சியை மறுதணிக்கை செய்ய வேண்டி வந்தது. கதாநாயகி பேஷன்ஸ் கூப்பர்.




இந்தியாவின் முதல் பேசும்படம்:

ஆலம் ஆரா
இந்தியாவின் முதல் பேசும்படம்: மார்ச்14, 1931 இல் வெளியான, இம்பீரியல் மூவிடோன்சின் ஆலம் ஆரா (ஓடும் நேரம் : 124 நிமிடங்கள்). இப்படம் மதன் தியேட்டர்சின் ஷிரின் ஃபர்ஹாத் என்ற படத்தை திரையில் தோல்வியுறச் செய்தது. ஆலம் ஆராவில் பாடல், நடனம் இசை ஆகியவை இடம்பெற்று இந்தியாவின் முதல் வணிகரீதியான படமாக நிலைத்து விட்டது. ஆலம் ஆரா ஒரு வெற்றி பெற்ற பார்சி நாடகமாகும். அர்தேஷிர் இரானி இதை தழுவி இந்தியாவின் முதல் பேசும் படமாக்கினார். படத்தின் பாடல்களுக்கான ட்யூன்களையும் பாடகர்களையும் அவரே தேர்வு செய்தார். பாடல்களுக்கு தபலா, ஹார்மோனியம் மற்றும் வயலின் ஆகிய மூன்றே மூன்று இசைக் கருவிகளே உபயோகப்படுத்தப்பட்டன. ஆலம் ஆரா இந்தியாவின் முதல் திரையசைப் பாடல்களை அளித்தது என்றாலும் படத்தின் டைட்டில் கார்டில் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.தேதே குதா கே நாம் பர் பியாரே, தாக்கத் ஹை கர் தேனே கி என்ற பாடலின் மூலம் இந்திய சினிமாவின் முதல் பாடகரானார் டபிள்யூ.எம்.கான். படத்தின் முதல் இசைத்தட்டு 1934 இல் தான் வெளிவந்தது.



இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில பேசும் படம்: கர்மா(1933). இயக்கம்: ஹிமான்ஷு ராய். லண்டனில் உள்ள மார்பிள் ஆர்ச் பெவிலியனில் திரையிடப்பட்ட இப்படம் ஆங்கில பத்திரிகைகளால் வெகுவாகப் புகழப்பட்டது. ஒரு நாளிதழ் எழுதியது: "தேவிகா ராணி பேசும் ஆங்கிலத்தைக் கேளுங்கள், இத்தனை அழகான உச்சரிப்பை நீங்கள் கேட்டிருக்கமுடியாது.’’


இந்தியத் திரையில் முதல் ஆங்கிலப் பாடல்:
"Now the Moon Her light Has Shed" என்று தேவிகா ராணி கர்மா (1933) படத்துக்காகப் பாடிய பாடல். இசை அமைத்தவர் எர்னெஸ்ட் ப்ராதர்ஸ்ட்.


முதல் தமிழ் பேசும்படம்:


ஹெச்.எம்.ரெட்டி இயக்கிய காளிதாஸ். 1931 அக்டோபர் 31 ஆம் நாள் வெளியிடப்பட்டது. வசனம் தமிழிலும் பாடல்கள் தெலுங்கிலும் அமைந்தன.வணிக ரீதியாக இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது.Rs.8000 பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படம், Rs.75000 மேல் வசூலில் தாண்டியது. பட சுருள் சென்னை கொண்டுவரப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று மலர்கள் தூவி, தேங்காய் உடைத்து, நறுமணப்பத்தி ஏற்றி பட சுருளை வழிபட்டனர். இப்படத்தில் தான் "சினிமா ராணி" என்று அழைக்கப்படும் T. P. ராஜலக்ஷ்மி அறிமுகம் ஆனார், இவர் தான் பிற்காலத்தில் முதல் தமிழ் பெண் இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆனார்.
முதல் மலையாள பேசும்படம்: எஸ்.நோதானி இயக்கிய பாலன்(1938).
முதல் கன்னட பேசும்படம்: பக்த துருவா (1934), எனினும் சதி சுலோச்சனாதான் முதலில் வெளியானது.


முதல் தெலுங்கு பேசும்படம்: ஹெச்.எம்.ரெட்டி இயக்கிய, பக்த பிரகலாத்(1931).




முதல் மலையாள முழுநீளத் திரைப்படம்:
ஜே .சி.டேனியல் இயக்கிய, விகதகுமாரன்(1928).


முதல் மராத்தி மொழி பேசும்படம்: அயோதியாச்சே ராஜா (1932), வி.சாந்தாராம் இயக்கியது.


முதல் வங்காள மொழி பேசும் படம்:
அமர் சவுத்ரி இயக்கிய, ஜமாய் சாஷ்தி(1931). இப்படம் ஆலம் ஆரா வெளியாகி ஒரு மாதத்துக்குப் பின் ஏப்ரல் 11, 1931 இல் வெளியானது.


முதல் அஸ்ஸாமியத் திரைப்படம்:
ஜாய்மதி (1935), ஜோதிப்ரசாத் அகர்வாலா இயக்கியது.


ஹாலிவுட் தாக்கத்தில் உருவான முதல் இந்தியப் படம்:
இந்திராமா (1934). கிளாரன்ஸ் பிரவுன்'ஸ் ஃப்ரீ சோல் (1931) என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல். அந்த காலத்திலே தழுவல்களை ஆரம்பித்து விட்டார்கள்.


முதல் வண்ணப்படம்:

கிசான் கன்யா
கிசான் கன்யா(1936), ஆதர்ஷ் இரானியின் இம்ப்பீரியல் மூவிடோன் தயாரிப்பில், மோடி கிட்வானி இயக்கியது. சாடட் ஹசன மண்டோ அவர்களின் நாவலை தழுவி எடுக்க பட்ட படம் தான் கிசான் கன். . வி சாந்தாராம் அவர்களின் சைரந்த்ரி (1933) என்கிற மராத்தி மொழி திரைபடத்தில் சில வண்ண காட்சிகள் இடம் பெற்றன, ஆனால் சைரந்த்ரி படதில் இடம் பெற்ற வண்ண காட்சிகளை ஜெர்மனியில் உருவாகினார்கள். ஆனால் கிசான் கன் திரைபடத்தில் இடம் பெற்ற வண்ண காட்சிகள் இந்தியாவிலே தயார் செய்யப்பட்டன. அதனால தான் முதல் இந்திய வண்ண படம் என்ற பெருமையை கிசான் கன் பெற்றது.
முதல் பின்னணிப் பாடல்: மேஸ்ட்ரோ ராய் சந்த் போரல், தூப் சாவோன் (1935) என்ற படத்தில் முதன்முதலாக பின்னணிப் பாடும் முறையை அறிமுகப் படுத்தினார். " மே குஷ் ஹோனா சாஹூ" என்ற அந்தப் பாடலை பாருல் கோஷ் மற்றும் சர்கார் ஹரிமதியுடன் பெண்கள் குழுவினர் பாடியிருந்தனர்.
இந்திய அளவில் வெற்றிபெற்ற முதல் மெட்ராஸ் தயாரிப்பு :
எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா (1948).


கேன்ஸ் விருதை வென்ற முதல் இந்தியப் படம்:
நீச்சா நகர் (1946). இயக்கம்: சேத்தன் ஆனந்த். இப்படம் சமூக உண்மை நிலையினை மிக அழகாக படம் பிடித்து காட்டியது. சமூகத்தில் ஏழை மற்றும் பணக்காரர் இடையே இருக்கும் இடைவெளியை பற்றி பேசும் படம் இது. இப்படம் 1946 ஆண்டு நடைபெற்ற முதல் சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்படத்திருக்கான" விருதை தட்டி சென்றது.
1954 இல் பிமல் ராயின் "தோ பீகா ஜமீனுக்கு" கேன்சின் சிறப்புப் பரிசு கிட்டியது.


ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப் படம்:
மெஹபூப் கான் இயக்கிய, மதர் இந்தியா (1957).




ரித்விக் கட்டக்கின் அறிமுகம்:
நாகரிக்(1952). தனிச்சிறப்பு கொண்ட திரைக் கலைஞ ரான ரித்விக் கட்டக், ரசிகர் கள் மற்றும் தயாரிப்பாளர் களால் தன் வாழ்நாள் முழுதும் அவதிக் குள்ளானவர். இதனால் அவரது படைப்புகள் பல முழுமை பெறாமலேயே போயின. என்றாலும் தனது 20 வருட திரைப்பயணத்தில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்ததோடு திரையுலகை ஆட்சி செய்த வணிகப்படங்களுக்கு ஒரு சரியான மாற்றாகவும் விளங்கினார் அவர். இந்திய சினிமா பிதாமகர்களின் வரிசையில் அவருக்கென்று தனித்த , நிலையான இடம் உண்டு.
சிவாஜி கணேசனின் அறிமுகம்:
பராசக்தி (1952),இதன் கதையை மு.கருணாநிதி எழுதினார்.இதில் சிவாஜி பேசிய வசனங்கள் மிகவும் பிரசித்தி பெற்றன.


சத்யஜித் ரே அறிமுகம்:
பதேர் பாஞ்சாலி (1955),உலக சினிமா வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்தது இப்படம். எந்த முறையில் பட்டியலிட்டாலும் உலகின் சிறந்த திரைக்கலைஞர்களில் ஒருவராக தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வருபவர் ரே. சினிமா ஊடகத்தின் உண்மையான ஆசானான சத்யஜித் ரே, பலகலைகளில் தேர்ந்த படைப்பாளியாவார். அவர் இந்திய சினிமாவுக்கு உலக அளவில் உரிய அங்கீகாரம் தேடித் தந்தார்.


வணிக ஹிந்தி சினிமாவை மாற்றியமைத்த மூவர் குழுவின் எழுச்சி:
ராஜ்கபூர், திலீப்குமார் மற்றும் தேவ் ஆனந்த். இன்குலாபில் (1935) அறிமுகமானபோது ராஜ்கபூருக்கு வயது 11. நீல்கமலில் (1947) மது பாலாவுக்கு ஜோடியாக கதாநாயகன் வேடத்தில் அவர் நடித்தார். 1948 இல் ஆர்.கே. பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதே ஆண்டில் ஆக் என்ற படத்தை இயக்க வும் செய்தார். திலீப்குமார், ஜ்வர் பாதா(1944) என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தேவதாஸ்(1955) மற்றும் மொகலே ஆசாம் (1960) உள்ளிட்ட முத்திரை பதித்த படங்களில் நடித்தார். பிரபாத் தயாரித்த ஹம் ஏக் ஹைன் (1946) என்ற படத்தின் மூலம் தேவ் ஆனந்த் அறிமுகமானார்.


ரஜினிகாந்த் முதல் படம்: கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் (1975) என்ற படத்தில் அறிமுகமானார். கமல்ஹாசன் கதாநாயக னாக நடித்த அப்படத்தில் ஒரு சிறிய வேடம். கமல் நடித்த மற்றொரு படமான மூன்று முடிச்சில் (1976) முக்கிய வேடத்தில் ரஜினி நடித்தார்.

ராஜேஷ் கன்னா யுகம்:
அவரது முதல் படம் சேத்தன் ஆனந்த் இயக்கிய ஆக்ரி காத்(1966). முக்கிய வேடத்தில் அவர் நடித்த ராஸ் அவரது முதல் வெற்றிப் படம். ஆராதனா (1969) இந்த மெகா ஸ்டாரை உருவாக்கிய படம்.


அமிதாப் எழுச்சி:
கனத்த குரல் கொண்ட அமிதாபுக்கு மிருணாள் சென்னின் புவன் ஷோம் (1969) என்ற படத்தில் வர்ணனையாளராக முதல் வாய்ப்புக் கிடைத்தது. அவரது திரையில் தோன்றி நடித்த முதல் படம் கே.ஏ.அப்பாசின் சாத் ஹிந்துஸ்தானி. கோபக்கார இளைஞன் என்ற தோற்றம் ஜஞ்சீர் (1973) மூலமே அவருக்குக் கிடைத்தது.


கமல்ஹாசனின் என்ற அற்புதம் :


ஏ.பீம்சிங் இயக்கிய களத்தூர் கண்ணம்மாவில் (1959) ஒரு குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்ற கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானார். கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்களில் (1975) தன்னை விட மூத்த வயது பெண்ணை காதலிக்கும் இளைஞனாக நடித்ததன் மூலம் ஒரு உச்ச நட்சத்திரமாக உயர்ந்த கமல்ஹாசன், சமீபத்தில் வெளிவந்த மன்மதன் அம்பு (2010) வரை தனது திரைப்பயணம் முழுதும் பரிசோதனைகள் செய்துவருகிறார். தனது உள்ளார்ந்த நடிப்புத் திறன் மூலம், பிம்ப முத்திரைகளுக்குள் விழுந்து விடும் மற்ற நட்சத்திரங்களைப் போலல்லாமல் எந்த பிம்பத்துக்கும் சிக்காமல் அவர் தனித்து விளங்குகிறார். பலதுறை வித்தகரான கமல் தான் இயக்கம் நான்காவது படமான விஸ்வரூபத்தை முடித்து விட்டார்.



இன்னும் சில தகவல்கள்


மெர்ச்சன்ட்- ஐவரி படங்களின் தொடக்கம்:
1961. இந்தியாவில் பிறந்த இஸ்மாயில் மெர்ச்சன்ட் சிறந்த தயாரிப்பாளருக்கான ஆஸ்கார் விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப் பட்டவர்(எ ரூம் வித் எ வியூ, 1986; ஹோவர்ட்ஸ் எண்ட், 1992; ரிமைன்ஸ் ஆஃப் த டே,1993).



ஹிந்தியில் டப் செய்யப்பட்ட முதல் ஹாலிவுட் படம்:
ஜுராசிக் பார்க், 1993.


இந்தியாவின் முதல் மல்டிப்ளெக்ஸ்:
பி.வி.ஆர் அனுபம்(1997).


சலீம் -ஜாவேத்தின் முதல் திரைக்கதை:
சீதா அவுர் கீதா (1972).


காப்பீடு செய்யப்பட முதல் படம்:
சுபாஷ் கையின் தால்(1999)


முதல் திகில் படம்:
ராம்சே சகோதரர்களின் தோ கஸ் ஜமீன் கே நீச்சே (1972).


நவீன சினிமா தொடக்கம்:
மிருணாள் சென்னின் புவன் ஷோம் மற்றும் மணி கவுலின் உஸ்கி ரொட்டி (1969) ஆகிய படங்கள் வருகை


தேசிய விருதுகள் உருவாக்கப்பட்ட ஆண்டு:
1954.

தகவல்கள் உதவி: சண்டே இந்தியன், விக்கிபீடியா.

நன்றி : http://hollywoodraj.blogspot.in/2012/09/blog-post_24.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 1:32 pm

இந்த பகிர்விற்கு எனது முதல் பின்னூட்டம் நன்றி சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள் !!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 25, 2012 2:33 pm

விரிவான செய்திக்கு நன்றி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 25, 2012 2:39 pm

இந்திய சினிமாவின் முழு நீள செய்திக்கு நன்றி அண்ணா.!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக