புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
30 Posts - 71%
heezulia
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
72 Posts - 66%
heezulia
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Jan 28, 2013 1:31 pm

பிரான்ஸ் அரசாங்கத்தின் உயர் கௌரவமான [Chevalier] செவாலியர் விருதை, இலங்கைத் தமிழரான திருமதி ஷெரின் சேவியர் அவர்கள் பெற்றிருக்கின்றார். இதன் மூலம், இவ் உயர் கௌரவத்தை பெறும் முதல் இலங்கைத் தமிழர் என்னும் பெருமை ஷெரின் சேவியரை சார்கிறது.


யாழ்ப்பாணத்தின் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகக் கொண்டவரான ஷெரின் சேவியருக்கான மேற்படி விருது, இலங்கைக்கான பிரெஞ் தூதுவர் கிறிஸ்டைன் ரொபிசோன் அவர்களால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.


உலகின் பல பாகங்களிலும் இயங்கிவரும் முன்னனி மனிதர்களை கௌரவிக்கும் வகையில், பிரெஞ் அரசாங்கம் 1957ம் ஆண்டிலிருந்து இவ்விருதை வழங்கிவருகின்றது. தற்போது அவ்வாறான முன்னணி மனிதர்களில் ஷெரீன் சேவியரும் ஒருவராகியிருக்கின்றார். தமிழர் என்னும் இனத்துவ அடையாளத்தின் ஊடாக நோக்குவதாயின், செவாலியர் கௌரவத்தை பெறும் இரண்டாவது தமிழரென்னும் பெருமை ஷெரினைச் சார்கிறது.


இவ்வுயர் விருது, 1995ம் ஆண்டு தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டிருந்தது. சிவாஜியின் கலைத்துறை பங்களிப்பிற்காகவே, அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருந்தது.


ஆனால் ஷெரீன் சேவியர், தனது மனித உரிமைசார் பணிகளுக்காக இவ்வுயர் விருதை பெற்றிருக்கின்றார்.


ஷெரீன் சேவியர் – கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும், மனித உரிமைசார் கொள்கைகள் தொடர்பான சமூக அபிவிருத்தி விவகாரங்கள், பெறுபேற்று அடிப்படையிலான முகாமைத்துவம், சமூக ஆய்வுகள் மற்றும் உயிர்வாழ் உதவிகள் போன்ற பல்துறைசார் பணிகளுக்கான அனைத்துலக அங்கீகாரமாகவே, இவ்வுயர் விருதை பெற்றிருக்கின்றார்.


தற்போது, இலங்கையின் முன்னணி மற்றும் நீண்ட வரலாற்றைக் கொண்டதுமான [HHR] மனித உரிமைகள் இல்லத்தின் நிறைவேற்று பணிப்பாளராக செயற்பட்டுவரும் திருமதி ஷெரின் சேவியர், யாழ்ப்பாணத்தின் பிரபல சட்டத்தரணியான இன்னாசிமுத்து பிரான்சிஸ் சேவியரின் புதல்வியாவார்.


சிறு வயதிலிருந்தே மனித உரிமைசார் பணிகளில் ஈடுபட்டுவரும், ஷெரீன் உலகின் பல நாடுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருப்பவர். அமெரிக்கா, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் ஷெரீன், மேலும் ஆபிரிக்காவின் சியரோ லியோன், மற்றும் எல் ஷல்வடோர் போன்ற லத்தீனமெரிக்க நாடுகளிலும் பணியாற்றியிருக்கின்றார்.


அடிப்படையில் ஷெரீன் சேவியர் ஒரு [Chemistry] இரசாயனவியல் பட்டதாரி ஆவார். தமிழ்நாட்டின் திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் பட்டம்பெற்ற இவர், பின்னர் கனடிய பல்கலைக்கழமான [Concordia University] கொன்கொரிடா பல்கலைக்கழகத்தில் தனது [M.Sc] முதுமானி கல்வியை பூர்த்தி செய்திருக்கின்றார். அத்துடன் மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் தொடர்பில் பிறிதொரு [LLM] முதுமானிப்பட்டத்தை [Columbia University, New York] கொலம்பிய பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்திருக்கின்றார்.


ஷெரீன் சேவியர் தனது, கடந்த 25 ஆண்டுகால மனிதநேய பயணத்தின் போது பல்வேறு பதவி நிலைகளை வகித்திருக்கின்றார். குறிப்பாக, [[Head of Delegation - Canadian Red Cross Society - CRCS - New Delhi, India]] கனடிய செஞ்சிலுவை சங்கத்தின் இந்தியாவிற்கான பிரதான இயக்குனர், [CRCS Humanitarian Values Program – Canada] கனடிய மனிதநேய விழுமியங்களுக்கான திட்டத்தின் தேசிய இணைப்பாளர், அமெரிக்காவின் கலிபோர்ணியாவை தளமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட [Fourth World Vision - FWV, California] நான்காவது உலக தரிசனம் திட்டத்தின் பணிப்பாளர் – என பல்வேறு பதவிகளை ஷெரின் வகித்திருக்கின்றார்.


மேலும், ஆசிய பெண்கள் வலையமைப்பின் ஆலோசகராகவும் செயற்பட்டிருக்கும் ஷெரீன், பால்நிலை சமத்துவம், மனித உரிமை மற்றும் சமூகவியல் போன்ற துறைகள் தொடர்பில், சுயாதீன ஆய்வாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.


இவ்வாறான பன்முக ஆளுமையைக் கொண்டவரான ஷெரீன், 2007ம் ஆண்டிலிருந்து, அவரது தகப்பனாரால் உருவாக்கப்பட்ட நிறுவனமான, ‘மனித உரிமைகள் இல்ல’த்தின் செயற்பாடுகளை பொறுப்பேற்றுக் கொண்டார். தனது அனுபவம், ஆற்றல் மற்றும் அவரது உலகளாவிய தொடர்புகள் அனைத்தும், இலங்கையின் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டுமெனும் ஒரே நோக்குடன் செயலாற்றி வருகின்றார்.


குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அவர் எடுத்துக்கொண்ட ஒரு முயற்சி இங்கு விதந்துரைக்கத்தக்கதாகும். தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்னும் நோக்கில், அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தார். இது அவர் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலில் எத்தகைய ஈடுபாட்டைக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்த வகையில் தமிழ் மக்களின் நலன் மற்றும் உரிமைசார்ந்து செயற்பட்டுவரும், திருமதி ஷெரின் சேவியருக்கு இவ்வுயர் கௌரவம் கிடைத்திருப்பதானது, ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குமான பெருமையாகும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 28, 2013 1:34 pm

வாழ்த்துக்கள் திருமதி ஷெரின் சேவியர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Mon Jan 28, 2013 4:05 pm

ஈழ தமிழர்களை பெருமிதம் செய்துள்ளார் ஷெரீன் சேவியர். வாழ்த்துகள்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jan 28, 2013 4:36 pm

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 28, 2013 5:25 pm

வாழ்த்துக்கள்.....தமிழர்கள் எங்கிருந்தாலும் சாதிப்பார்கள்..... சூப்பருங்க



பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக