புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_m10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10 
21 Posts - 68%
heezulia
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_m10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10 
9 Posts - 29%
Geethmuru
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_m10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_m10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10 
148 Posts - 56%
heezulia
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_m10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10 
92 Posts - 35%
T.N.Balasubramanian
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_m10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_m10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10 
9 Posts - 3%
prajai
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_m10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_m10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_m10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_m10தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை


   
   
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Mar 22, 2013 8:16 am

தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Poster



கடுமையான வறட்சி, பயிர்ச் சாகுபடி பொய்த்த நிலைமை, பொதுவான பொருளாதார மந்த நிலை, கடுமையான மின்சார வெட்டு ஆகிய சூழலிலும் புதிய வரிகள் ஏதும் விதிக்காமல் தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப் பேரவையில் 2013-14-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்தார். புதிய வரிகள் ஏதும் இல்லை, அதே சமயம் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் அறிவித்தார். தமிழ்நாட்டின் தொழில் துறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடியும், அரசு அமல்படுத்திவரும் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.43,449 கோடியும் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

2013-14-ஆம் நிதியாண்டில் வருவாய் கணக்கில் மட்டும் ரூ.664.06 கோடி உபரியாக இருக்கும். அரசின் வரவுக்கும், செலவுக்கும் இடையிலான மொத்தப் பற்றாக்குறை ரூ.22,938.57 கோடியாக இருக்கும். இந்தப் பற்றாக்குறையானது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி.) 2.84 சதவீதமாக இருக்கும்; இந்த அளவு 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும் என்ற வரம்புக்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

10 அம்ச அணுகுமுறை: வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம், மின் உற்பத்தி-சாலை இணைப்பு உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த அதிக முதலீடு, தென் மாவட்டங்களில் சமச்சீரான தொழில் வளர்ச்சி, சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகை தொகுப்பு, தரம் மிக்க நகர்ப்புற கட்டமைப்புகளை ஏற்படுத்திட அதிக நிதி ஒதுக்கீடு, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளோருக்கு நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம், நலத் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயற்சிகளை வழங்குதல், வறியோர்-ஆதரவற்றோரை பாதுகாக்கும் வகையில் சமூக பாதுகாப்புத் திட்டத்தை வலுப்படுத்துதல், கல்வி-சுகாதாரம்-ஊட்டச்சத்து போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு ஆகிய 10 அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விரைவில் அறிவிப்பார்: காவிரி டெல்டா அல்லாத பிற மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி, சிறு-குறு-நடுத்தரத் தொழில் துறையின் சிறப்பு சலுகைத் தொகுப்பு, பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளை வலுப்படுத்தி பிரபலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார்.

விலையில்லா மடிக்கணினி, மாடு, ஆடு: அரசின் சமூக நலத் திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில் (2013-14) மொத்தம் ரூ.43,449 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி விநியோகத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் (2013-14) 5.6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள விலையில்லா மடிக்கணினி திட்டத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மாடு, ஆடு, கோழி திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடி: பொருளாதாரத்தில் உயர் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக வரும் நிதியாண்டு (2013-14) வரவு-செலவுத் திட்டத்தில் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.2,000 கோடியும், திட்ட வடிவமைப்பு நிதிக்காக ரூ.200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் பொதுத்துறை-தனியார் துறை பங்கேற்பு மூலம் தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.

சிறந்த கல்விச்சூழலுக்கு: கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.1,300 கோடியில் 10 அம்ச சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மொத்தம் 97.70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி, 14 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.324 கோடி உள்பட மொத்தம் ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியர்களுக்கு: ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்களின் மருத்துவச் செலவினை ஈடு செய்ய தனி காப்பீட்டுத் திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.

புற்றுநோய் மையங்கள்: தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.30 கோடியில் மேலும் இரண்டு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு...: மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடர வரும் நிதியாண்டில் (2013-14) ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பது குறித்த ஆய்வுப் பணியையும் அரசு மேற்கொள்ள உள்ளது.

மாமல்லபுரத்தில்...: சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக சென்னை அருகே மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் ரூ.250 கோடியில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம் ("ஓஷியேனரியம்') அமைக்கப்படும். அரியலூரில் ரூ.2 கோடியில் அரிய தொல்படிவப் பொருள் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும்.

தமிழ் வளர்ச்சிக்கு சிறப்பு மானியம்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இப்போதுள்ள கட்டமைப்பை மேம்படுத்த சிறப்பு மானியமாக ரூ.2 கோடி வழங்கப்படும்' என்றார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

ரூ.20-க்கு அரிசி
இந்த நிதிநிலை அறிக்கையில் உணவு மானியத்துக்கு ரூ.4,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் அமுதம் அங்காடிகள், கூட்டுறவு அங்காடிகள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்க அரசு ஆவன செய்யும்.

துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையிலும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.25 என்ற விலையிலும் ரேஷன் கடைகளில் இப்போது விநியோகிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டரை மணி நேரம் வாசித்த நிதியமைச்சர்
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை காலை 10.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு நிறைவு செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இரண்டரை மணி நேரம் விடாமல் நிதிநிலை அறிக்கையை அவர் வாசித்தார். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனது முதல் நிதிநிலை அறிக்கையை 2011 ஜூன் மாதம் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன்பின் கடந்த நிதியாண்டிலும், இப்போதும் தொடர்ச்சியாக மூன்று நிதிநிலை அறிக்கைகளை அவர் தாக்கல் செய்துள்ளார்.

முக்கிய அம்சங்கள்

* தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம்

* கூட்டுறவு மூலம் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்பனை

* மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.750 கோடி

* கூட்டுறவுக் கடன் இலக்கு ரூ. 4,500 கோடி

* வேளாண்மைத் துறைக்கு ரூ.5,189 கோடி

* உணவு மானியத்துக்கு ரூ.4,900 கோடி

* 2 லட்சம் பேருக்கு வீட்டு மனைப் பட்டா.

* சென்னை, மதுரையில் புதிய மேம்பாலங்கள்.

* மாமல்லபுரத்தில் ரூ.250 கோடியில் உயிரின காட்சியகம்.

* வரும் நிதி ஆண்டில் 60 ஆயிரம் பசுமை வீடுகள்

* 100 நாள் வேலைத் திட்ட ஊதியம் ரூ.148

* குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1,190 கோடி.

* நலிந்த பிரிவினருக்கு 50 ஆயிரம் வீடுகள்

* ஓய்வூதியதாரர்களுக்கு தனி மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

* 1.5 லட்சம் ஏழைப் பெண்களுக்கு 6 லட்சம் ஆடுகள்

குறிப்பு: நடப்பு நிதியாண்டு (2012-13) வரி வருவாய் ரூ.73,560 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டுடன் (2012-13) ஒப்பிடுகையில், வரும் நிதியாண்டில் (2013-14) தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 17 சதவீதம், அதாவது ரூ.86,065 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று வரும் நிதியாண்டில் அனைத்து வரி இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.




தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Knight
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 22, 2013 8:52 am

அனைத்தும் தேர்தலின் முன்னோட்டம் ராஜ்




தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Mதமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Uதமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Tதமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Hதமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Uதமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Mதமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Oதமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Hதமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Aதமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Mதமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Eதமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 22, 2013 10:41 am

பாராளுமன்ற தேர்தல் நேரமிது அதான் சியர்ஸ்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Mar 22, 2013 12:39 pm

மாநிலத்தில் சரியாக ஆட்சி செய்தால் தானே மத்தியில் சரியாக ஆட்சி நடத்த முடியும்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை Knight
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக