புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிடத்தில் தமிழகம்... Poll_c10முதலிடத்தில் தமிழகம்... Poll_m10முதலிடத்தில் தமிழகம்... Poll_c10 
95 Posts - 52%
heezulia
முதலிடத்தில் தமிழகம்... Poll_c10முதலிடத்தில் தமிழகம்... Poll_m10முதலிடத்தில் தமிழகம்... Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
முதலிடத்தில் தமிழகம்... Poll_c10முதலிடத்தில் தமிழகம்... Poll_m10முதலிடத்தில் தமிழகம்... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
முதலிடத்தில் தமிழகம்... Poll_c10முதலிடத்தில் தமிழகம்... Poll_m10முதலிடத்தில் தமிழகம்... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
முதலிடத்தில் தமிழகம்... Poll_c10முதலிடத்தில் தமிழகம்... Poll_m10முதலிடத்தில் தமிழகம்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
முதலிடத்தில் தமிழகம்... Poll_c10முதலிடத்தில் தமிழகம்... Poll_m10முதலிடத்தில் தமிழகம்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முதலிடத்தில் தமிழகம்... Poll_c10முதலிடத்தில் தமிழகம்... Poll_m10முதலிடத்தில் தமிழகம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிடத்தில் தமிழகம்... Poll_c10முதலிடத்தில் தமிழகம்... Poll_m10முதலிடத்தில் தமிழகம்... Poll_c10 
35 Posts - 58%
heezulia
முதலிடத்தில் தமிழகம்... Poll_c10முதலிடத்தில் தமிழகம்... Poll_m10முதலிடத்தில் தமிழகம்... Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
முதலிடத்தில் தமிழகம்... Poll_c10முதலிடத்தில் தமிழகம்... Poll_m10முதலிடத்தில் தமிழகம்... Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
முதலிடத்தில் தமிழகம்... Poll_c10முதலிடத்தில் தமிழகம்... Poll_m10முதலிடத்தில் தமிழகம்... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிடத்தில் தமிழகம்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 30, 2013 9:07 am

பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள நகரங்களில் "மகளிர் மட்டும்' பேருந்துகளை இயக்குவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியுமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அமைச்சகம் அமல்படுத்தும், ஜவாஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டம் (ஜே.என்.என்.யு.ஆர்.எம்.) வகைப்படுத்தும் பல்வேறு அம்சங்களில், புதிய பேருந்துகளை அறிமுகம் செய்வதும் ஒன்று. இத்திட்டத்தின்கீழ் பேருந்துகளை வாங்கினால், அதற்கு நகரத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப, 50% முதல் 80% வரை மானியம் கிடைக்கிறது.
இதுவரை, நகர் மேம்பாட்டுக்காக பேருந்துகள் என்பதாக மட்டுமே இருந்த நிலைமை மாறி, புதுதில்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்குப் பிறகு,"மகளிர் மட்டும்' பேருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
கடந்த ஐந்தாண்டு திட்டக் காலத்தில், அதிக அளவு பேருந்துகளை வாங்கிய பெருமை மகாராஷ்டிரத்துக்கும், தமிழகத்துக்கும் உண்டு. அண்மையில் மாநிலங்களவையில்தாக்கல் செய்யப்பட்ட, பிப்ரவரி 2013 வரையிலான புள்ளிவிவரத்தின்படி, மகாராஷ்டிர மாநிலத்தை (2,580 பேருந்துகள்) அடுத்துதமிழ்நாடுதான் 1,600 பேருந்துகள் வாங்கியுள்ளது.இந்தப் பேருந்துகளின் மதிப்பு சுமார் ரூ.400 கோடி.இதில் மத்திய அரசு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்கும் உதவித்தொகை ரூ.192.35 கோடி. இதில் 130 கோடியை இதுவரை வழங்கியுள்ளனர்.
2013-14 மத்திய நிதிநிலை அறிக்கையில், ஜே.என்.என்.யு.ஆர்.எம். திட்டத்திற்காக ரூ.14,873 கோடி ஒதுக்கி, இதில் 10,000 பேருந்துகள் வாங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக குறிப்பிடும்போது, மலைப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தபோதிலும், தற்போது மகளிர் மட்டும் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியத்தை மத்திய அரசு உணர்ந்து, முன்னுரிமை அளித்துள்ளது.
தமிழக அரசின் 2013-14 நிதிநிலை அறிக்கையில், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,026 கோடி செலவில் 6,000 புதிய பேருந்துகள் வாங்கத் திட்டமிட்டு, 2,855 பேருந்துகள் பயன்பாட்டில் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இவை பழையதாகிப்போன வாகனங்களுக்கு மாற்றாகவே முடிந்திருக்கக்கூடும். குறிப்பாக, இதில் மகளிருக்கான பேருந்துகள் எத்தனை அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படவில்லை.
சென்னையில் மட்டுமே, அதுவும்கூட மிக அரிதாக கண்ணில்படுவதாக "மகளிர் மட்டும்' பேருந்து சேவை நடைமுறையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 10 லட்சம் மக்கள்தொகை உள்ள திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் மகளிர் மட்டும் பேருந்துகளே இல்லை. இருப்பதாகக் கூறினாலும் அவை இல்லை என்று சொல்லிவிடும் அளவுக்கு மிகச் சிலவாகவே இருக்கின்றன.
தமிழ்நாட்டில் மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நகரங்கள் அனைத்திலுமே மகளிர் மட்டும் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவது அவசியம்.
அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்களை மட்டுமே கருத்தில்கொண்டு காலை மாலை இருவேளைகளிலும் - அலுவலகம் 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும் என்ற எண்ணத்தில் - அதற்கேற்ப மகளிர் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுவதுதான் வழக்கத்தில் இருந்து வருகிறது.
ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழல் அதையெல்லாம் கடந்து நெடுந்தொலைவு வந்துவிட்டது.இப்போது சாதாரண கடைகளில்கூட இரண்டு ஷிப்ட்-களாக மாற்றப்பட்டு, பெண்கள் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆகவே, அரசு ஊழியர்கள், தனியார் பெருநிறுவன ஊழியர்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் தனியார் வணிகநிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் இரவு 8.30 மணிக்கு மேல் பணி முடித்து, வீடு திரும்பும் நிலையில் இருக்கிறார்கள்.
அரசு மற்றும் அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள் சொந்த வாகனத்தில் செல்லவும், அல்லது தங்களுக்கென குழுவாக தனிவாகனங்களை அமர்த்திக்கொள்ளும் வசதியும் படைத்தவர்களாக இருக்கிறார்கள். மாதம் சில ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் இந்தத் தனியார் வணிகநிறுவனங்கள், கடைகளின் பெண்ஊழியர்கள் அரசுப் பேருந்துகளைத்தான் நம்பியுள்ளனர். இவர்களும் உழைக்கும் மகளிர்தான். இவர்களுக்குத்தான் மற்றவர்களைக்காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் மகளிர் மட்டும் பேருந்துகள் தேவை.
பொதுவாக, போக்குவரத்துக் கழகங்களின் புலம்பல்,"மகளிர் மட்டும்' பேருந்துகளை அதிகமான வழித்தடங்களில் இயக்க போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை என்பதும், சில வழித்தடங்களில் வசூல் இல்லை என்பதும்தான்.
இதற்கான தீர்வு- டபுள் டெக்கர் பேருந்துகளை அதிகரித்து, மேல்அடுக்கு முழுவதும் பெண்களுக்கு என்று ஒதுக்கலாம். அல்லது தொடர் பேருந்துகளை அதிகரித்து பின்இணைப்பு பகுதி முழுவதும் பெண்களுக்காக ஒதுக்கி, இரு பகுதிகளுக்கும் நடுவே தடுப்பு ஏற்படுத்தலாம். இதனால் ஒரே நேரத்தில் பெண்கள், ஆண்கள், ஒரே குடும்பத்தின் தம்பதிகள், குழந்தைகள் பயணம் செய்ய ஏதுவாகும்.
தற்போது மகளிர் மட்டும் பேருந்துகள் குறித்து மத்திய நகர் மேம்பாட்டு அமைச்சகம் தானே முன்வந்து ஆய்வறிக்கை கோருவதால், இந்தவாய்ப்பை முழுமையாகவும், இந்தியாவிலேயே முதலிடம் பெறும் வகையிலும் தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜே.என்.என்.யு.ஆர்.எம். திட்டத்தில் இந்த முறை இந்தியாவிலேயே அதிக பேருந்துகளை வாங்கிய மாநிலமாகத் தமிழகம் திகழ வேண்டும்.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக