புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
32 Posts - 56%
heezulia
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
17 Posts - 3%
prajai
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
9 Posts - 1%
Jenila
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
4 Posts - 1%
jairam
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_m10மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jun 13, 2013 12:56 pm

மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  834afc38-5a92-41fc-8081-9b1ca04e5167_S_secvpf

மணமகன் கறுப்பாக இருந்ததால் திருமணத் துக்கு எதிர்ப்பு தெரி வித்து மணக்கோலத்தில் இருந்த மணமகளை பெற்றோர் வேனில் கடத்தி சென்றனர். புதுப்பெண்ணை போலீசார் மீட்டனர். கோவையில் நடந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஒரே கல்லூரியில் படித்தனர்

சென்னை கீழ் கட்டளை அம்மாள் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சதீஷ் குமார் (வயது24). இவர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (ஐ.டி) படித்து வந்தார். இதேபோல் உடுமலையை சேர்ந்த இந்துமதி (24) என்பவரும் அதே கல்லூரியில் படித்து வந்தார். இருவரும் ஒரே வகுப்பில் படித்து வந்ததால் அவர்கள் இடையே காதல் மலர்ந்தது. இந்த நிலையில் படித்து முடித்தவுடன் சதீஷ் குமாருக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

சென்னையில் வேலை

இந்துமதி அதே கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தார். இருந்தாலும் இருவரும் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர். இந்த நிலையில் இந்துமதி எம்.எஸ்.சி படித்து முடித்தார். அவருக்கும் சென்னையில் வேலை கிடைத்தது. இதனால் இருவரும் மீண்டும் நேரில் சந்தித்து நெஞ்சங்களை பரிமாறினர். இருந்தாலும் திருமணம் செய்யாமல் எத்தனை நாள் தான் இப்படி காலத்தை கழிப்பது? என்று நினைத்து, சென்னையில் தங்களின் நண்பர்கள் புடை சூழ பதிவுத்திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

மருதமலை கோவிலில் திருமணம்

இதற்கிடையில் இந்துமதி வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கியது. ஆனால் வந்த வரனை எல்லாமல் தனக்கு பிடிக்கவில்லை என்று இந்துமதி தட்டிக்கழித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்துமதியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்களால் முடியவில்லை.

இதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் இந்துமதி காதலித்த சதீஷ்குமாரையே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் பேசி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். கோவை மருதமலை முருகன் கோவிலில் வைத்து தாலிகட்ட முடிவு செய்யப்பட்டது.

மாப்பிள்ளையை பிடிக்கவில்லை

திட்டமிட்டபடி நேற்று காலை 6.30 மணிக்கு கோவை மருதமலை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. எனவே காலையிலேயே மணக்கோலத்தில் சதீஷ்குமாரை கோவிலுக்கு அழைத்து வந்தனர். இந்துமதியும் வேனில் மணக்கோலத்தில் உறவினர்கள் புடை சூழ மருதமலை வந்து சேர்ந்தார். ஆனால் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளையை பிடிக்க வில்லை. இவரா எனது மகளுக்கு மாப்பிள்ளை? இவ்வளவு கருப்பாக இருக்கிறாரே என்று முகம் சுளித்தனர்.

போலீசார் மடக்கினர்

இதைத் தொடர்ந்து அவர்கள் தாங்கள் வந்த வேனிலேயே இந்துமதியை வலுக்கட்டாயமாக இழுத்து போட்டுக் கொண்டு கிளம்பி விட்டனர். இதைபார்த்து அதிர்ந்து போன மாப்பிள்ளை வீட்டார், சுதாரித்துக்கொண்டு இருசக்கரவாகனத்தில் விரட்டி சென்றதோடு, போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உஷார் அடைந்த போலீசார் அந்த வேனை விரட்டி சென்று கோவை ராமநாதபுரம் பகுதியில் மடக்கி பிடித்து வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் இருவீட்டாரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சதீஸ்குமார், இந்துமதி திருமணத்தை ஒத்துக்கொள்ள முடியாது. அவர்களை பிரித்து விடுங்கள் என்று இந்துமதியின் பெற்றோர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார் இருவரும் சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து உள்ளனர். எனவே அவர்களை பிரிக்க முடியாது. சேர்த்து வைப்பதை தவிர வேறு வழி இல்லை என்றனர். மேலும் காதல் தம்பதிக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க மாட்டோம் என்று மணமகளின் பெற்றோரிடம் போலீசார் எழுதி வாங்கினார்கள். பின்னர் இந்துமதி விருப்பத்தின்படி மணமகனுடன் அனுப்பி வைத்தனர். தனது காதல் கணவரோடு சேர்ந்த மகிழ்ச்சியில் இந்துமதி ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

நிறம் தான் கறுப்பு...

இது குறித்து மணமகள் கூறுகையில், சதீஷ்குமார் கறுப்பாக இருந்தாலும், அவர் தான் எனது கணவர். அவர் நிறம் தான் கறுப்பே தவிர, அவரது உள்ளம் மென்மையானது. அவர் சிறந்த குணநலன் மிக்க வர். அவரை கணவராக அடைவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார். இந்த சம்பவம் மருதமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

-- தினத்தந்தி

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jun 13, 2013 12:58 pm

மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு  E01025f8-7034-4c7d-9e64-13c1f7ead31a_S_secvpf

சென்னை கீழ் கட்டளை அம்பாள் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 24). இவர் கோவையில் அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்து வந்தார். இதே கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த இந்துமதி (24)யும் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் டெக்னாலஜி படிப்பில் சேர்ந்தார்.

ஒரே வகுப்பில் படித்த சதீஷ்குமார் - இந்துமதி இடையே காதல் மலர்ந்தது. கல்லூரி படிப்புடன் காதல் படிப்பையும் சேர்த்தே படித்து வந்தனர். "நீயின்றி நானில்லை" எனும் அளவுக்கு இருவரும் நெருங்கி பழகினர்.

இந்த நிலையில் கல்லூரி படிப்பு முடிந்தது. படிப்பு முடிந்த கையோடு சதீஷ்குமாருக்கு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இந்துமதி அதே கல்லூரியில் எம்.எஸ்.சி. மேல் படிப்பை தொடர்ந்தார். செல்போனில் பேசியே சதீஷ்குமாரும் இந்துமதியும் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். 5 ஆண்டாக காதலில் எந்த தொய்வும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்த நிலையில் இந்துமதிக்கும் எம்.எஸ்.சி. படிப்பு முடிந்தது. அவரது அதிர்ஷ்டம் காதலன் வேலை பார்க்கும் சென்னையிலேயே அவருக்கும் வேலை கிடைத்தது. அங்குள்ள ஒரு விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். எத்தனை நாளைக்குத் தான் இப்படியே பேசிக் கொண்டிருப்பது. இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சென்னையில் நண்பர்கள் முன்பு பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் "அலை பாயுதே" சினிமா பாணியில் இருவரும் வாழ்ந்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்து மனம் விட்டு பேசிக்கொள்வார்கள்.

இந்த நிலையில் இந்துமதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கியது. அவரது பெற்றோர் முழு வீச்சில் களம் இறங்கினர். வந்த வரனையெல்லாம் தனக்கு பிடிக்கவில்லை என இந்துமதி தட்டிக்கழித்து வந்தார். ஏன் இப்படி செய்கிறாள் என்று யோசித்த போது தான் இந்துமதியின் காதல் விவகாரம் அவர்களுக்கு தெரிய வந்தது.

மகள் காதலிக்கும் வாலிபரையே அவளுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து பேசினர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். மகளுக்கு மாப்பிள்ளை பிடித்திருந்ததால் பெண் வீட்டார் மாப்பிள்ளையை நேரில் பார்க்கவில்லை. இரு வீட்டாரும் ஒருமனதாக இன்று (12-ந் தேதி) மருதமலையில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார்.

அதன்படி மணமகன் அவரது பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் நேற்று இரவே கோவை வந்து சேர்ந்தனர். இன்று காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் மருதமலை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. எனவே காலையிலேயே மணக் கோலத்தில் சதீஷ்குமாரை கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

இந்துமதியும் மணக்கோலத்தில் உறவினர்கள் புடை சூழ மருதமலை வந்து சேர்ந்தார். மணப்பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் மணக்கோலத்தில் நின்ற சதீஷ்குமாரை பார்த்தனர். "இவரா மாப்பிள்ளை" இவ்வளவு கறுப்பாக இருக்கிறாரே? என முகம் சுளித்தனர். இந்துமதி உனக்கு இந்த மாப்பிள்ளையுடன் திருமணம் இல்லை என்று கூறினர். அவர் என்ன சொல்கிறார் என்பதைக்கூட கவனிக்கவில்லை. தாங்கள் வந்த வேனிலேயே மணமகளை குண்டு கட்டாக தூக்கிப்போட்டுக் கொண்டு கிளம்பினர்.

அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். மறுநிமிடமே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் பறந்தது. போலீசார் உஷாரானார்கள். இந்த நிலையில் மணமகளின் வேன் கோவை ராமநாதபுரம் சாலையில் வந்தது. போலீசார் அந்த வேனை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதற்குள் மாப்பிள்ளை வீட்டாரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

போலீசார் இரு குடும்பத்தினரிடமும் சமரசம் பேசிப் பார்த்தனர் எடுபடவில்லை. எனவே சம்பவம் நடந்த இடமான வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கு மணமக்களை அனுப்பி வைத்தனர். அங்கு பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மணக் கோலத்தில் மணமகள் கடத்தப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் இந்துமதியின் பெற்றோரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி தனியே அழைத்து விசாரித்தார்.

அப்போது அவர்கள் "எங்கள் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதனால் தான் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்கிறோம். எங்கள் மகளுக்கு இந்த மாப்பிள்ளை எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை. தயவு செய்து எங்கள் மகளை எங்களுடன் அனுப்பி வையுங்கள், என்றனர்.

அதன் பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி போலீஸ் நிலையத்தில் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்த இந்துமதியை தனியே அழைத்து விசாரித்தார். அப்போது இந்துமதி "சதீஷ்குமார் கறுப்பாக இருந்தாலும் அவர் தான் கணவர். அவர் நிறம் தான் கறுப்பே தவிர அவரது உள்ளம் வெண்மையானது. அவர் சிறந்த குணநலன் மிக்கவர். அவரை கணவராக அடைய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவருடன் என்னை சேர்த்து வையுங்கள்" என்றார்.

இருதரப்பிலும் பேச்சுவார்த்தை முடிந்ததும் இந்துமதியின் பெற்றோரை சப்-இன்ஸ்பெக்டர் அழைத்தார். 'உங்கள் மகள் உங்களுடன் வர விரும்பவில்லை. இந்துமதியும், சதீஷ்குமாரும் மேஜர். அதோடு அவர்கள் பதிவு திருமணமும் செய்துள்ளனர். எனவே இந்துமதி விருப்பப்படி அவர் சதீஷ்குமாருடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டோம் என்று எழுதிக்கொடுத்து விட்டு கிளம்பலாம்' என்றார்.

அதன்படி இந்துமதியின் பெற்றோர் எழுதிக்கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். பின்னர் இந்துமதியும், சதீஷ்குமாரும் ஆனந்தமாக இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க கிளம்பினார்கள்

-- மாலைமலர்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 2:42 pm

காதலுக்கு கண் இல்லை புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 13, 2013 4:31 pm

இதுதான் காதல் சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக