புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_m10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10 
49 Posts - 52%
heezulia
அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_m10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_m10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_m10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_m10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10 
91 Posts - 56%
heezulia
அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_m10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_m10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_m10அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு


   
   
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 13, 2013 4:03 pm

2012ல் உலக அழிவும் மாயா இன மக்களும்,இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகிறன?

என்ற கட்டுரைகளை எழுதிய திரு.ராஜ்சிவா அவர்கள் உயிர்மை இதழில் துவங்கியிருக்கும் புதிய தொடர்...

"அன்று வந்ததும் அதே நிலா"

இக்கட்டுரையை பற்றி ராஜ்சிவா அவர்கள் முகநூலில் குறிப்பிட்டவை...

உலகில், இதுவரை நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களுக்கு சொல்லப்பட்ட காரணங்கள் நம்ப முடியாததாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தக் காரணங்களை மறுத்து, 'இப்படியும் இருக்கலாம்' என்னும் வேறு முக்கிய காரணங்களை முன்வைத்து, நடைபெற்ற சம்பவத்தை விளக்கும் கோட்பாடுகளை, 'கான்ஸ்பிரஸி தியரி' (Conspiracy Theory) எனப்படும்.

இந்த வகையில் இன்றுவரை மிக முக்கியமான கான்ஸ்பிரஸித் தியரியாக சொல்லப்படுவதுதான் சந்திரனில் மனிதன் காலடி எடுத்து வைக்கவில்லை என்னும் கோட்பாடு. அதையும் மேலதிகமாக சந்திரனைப் பற்றிய தகவல்களைக் கொண்டு, நாம் எழுதும் புதிய தொடர்தான், 'அன்று வந்ததும் அதே நிலா'


இக்கட்டுரையை ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த திரியை தொடங்குகிறேன் தொடர் பதிவாக...

நன்றி:உயிர்மை.காம் மற்றும் ராஜ்சிவா



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 13, 2013 4:08 pm

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo%201

"மனிதன் எடுத்து வைத்த சிறிய காலடி, மனித இனத்தின் ஒரு பெரிய பாய்ச்சல்" (That's one small step for man, one giant leap for mankind). உலகைம் முழுவதையும் 1969 களில் மிகவும் பிரபலமாகவும், பரவசமாகவும் பேசவைத்த வசனம் இது. 1969ம் ஆண்டு யூலை மாதம் 20ம் திகதி சந்திரனில் காலடியெடுத்து வைத்த முதல் மனிதனான 'நீல் ஆம்ஸ்ட்ரோங்க்' தனது காலடியைச் சந்திரனின் மேற்பரப்பில் வைத்த போது சொன்ன வசனம்தான் இது. சந்திரனில் மனிதன் காலடி எடுத்து வைத்த அந்த நிகழ்வு மிகச் சாதாரணமானதல்ல. நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 2013ம் ஆண்டைப் பொறுத்தவரை அது வெகுசுலபமாகத் தோன்றலாம். ஆனால், நாற்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர் நிலவுப் பயணம் என்பது சாத்தியமானதொன்றல்ல. தற்போதய கணணி வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சிகளை வைத்துக் கொண்டு, அந்தக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை மிகவும் சாதாரணமானது என்று நினைத்து, நாம் ஒதுக்கி விடமுடியாது.

நீல் ஆம்ஸ்ட்ரோங்க் (Neil Amstrong), எட்வின் அல்ட்ரின் (Edwin Aldrin), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) ஆகிய மூன்று விண்வெளி விற்பன்னர்களையும், சந்திரனை நோக்கி அமெரிக்கா அனுப்பி வைத்தது. 'நாஸா' மூலமாக 'அப்போலோ 11' (Apollo 11) என்று பெயரிடப்பட்ட, 'சாட்டர்ன் V' (Saturn V) ரக ராக்கெட்டில் யூலை மாதம் 16ம் திகதி மூவரும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். மூன்று நாட்களின் பின்னர், 19ம் திகதி சந்திரனை அடைந்த இவர்கள், சந்திரனைச் சுற்றி வலம் வந்து அதை அவதானித்தார்கள். மறுநாள் 20 திகதி சந்திரனில் காலடியெடுத்து வைத்த்தார்கள். முதலில் ஆம்ஸ்ட்ரோங்கும், அதற்குப் பின்னர் அல்ட்ரினும் சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதர்களானார்கள்.

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo%202

"அட! இதெல்லாம் ரொம்பப் பழைய கதையாச்சே! சின்னப் பிள்ளையைக் கூப்பிட்டுக் கேட்டாலும் சொல்லுமே! செவ்வாய்க் கிரகத்துக்கே 'க்யூரியாசிட்டி' விண்கலத்தை அனுப்பி, அது இறங்கியுமாச்சு. இப்போ சந்திரனில் ஆம்ஸ்ட்ரோங்க் காலடி வைத்த கதை எதற்கு?" என்று நீங்கள் இப்போது யோசிக்கலாம். ஆனால், எப்போது, 'மனிதன் சந்திரனில் காலடியெடுத்து வைத்தான்' என்று சொல்லப்பட்டதோ, அப்போதிருந்தே, "சந்திரனில் மனிதன் காலடியெடுத்து வைக்கவில்லை. எல்லாமே நாஸா மூலமாக அமெரிக்கா போட்ட நாடகம்" என்ற குரல்களும் எழும்ப ஆரம்பித்துவிட்டன. "இதுவும் எங்களுக்குத் தெரிந்த கதைதானே! சந்திரனில் அப்போலோ 11 இறங்கவில்லை என்று யாரோ சொன்னார்கள் என்று நாங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் அதெல்லாம் சும்மா! அப்போலோ 11 இல் மனிதன் இறங்கவில்லை என்று சொன்னால், அப்போலோ 15, 16, 17 என்று மனிதன் சந்திரனுக்குச் சென்று, அங்கு வாகனத்தையே ஒட்டிச் சாதனை செய்தானே! " என்று மீண்டும் நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், 'அப்போலோ மிசன் என்பதே ஒரு நாடகம். எப்போதும் மனிதன் சந்திரனுக்குச் செல்லவில்லை. அப்போலோ 11 மட்டுமில்லை அப்போலோ 15, 16, 17 களில் கூட மனிதன் சந்திரனைச் சென்று அடையவில்லை. பூமியில் சந்திரனைப் போன்று ஒரு இடத்தை உருவாக்கி, அதில் படம் பிடித்த காட்சிகள்தான் அவை' என்று பலவிதமான ஆதாரங்களை முன்வைத்து மறுக்கிறார்கள் பலர். இதுவரை உலகில் இருந்து வரும் கான்ஸ்பிரஸித் தியரிகளில் (Conspiracy Theory) மிகவும் வலுவான கான்ஸ்பிரஸித் தியரியாக இருப்பது 'சந்திரனில் மனிதன் காலடியெடுத்து வைக்கவில்லை' என்று சொல்லப்படும் தியரிதான்.

சந்திரனுக்கு மனிதன் செல்லவில்லையென்பதை சும்மா பொழுது போக்காகச் யாரும் சொல்லிவிடவில்லை. அதைச் சொல்பவர்களும் திடமான பல காரணங்களை முன்வைத்துத்தான் மறுக்கிறார்கள். அந்தக் காரணங்கள் அறிவியல் ரிதியாக நம்மைத் திகைக்க வைப்பது என்னவோ உண்மைதான். இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் நாஸாவையும் அசைத்து வைத்திருக்கிறது என்பதும் என்னவோ உண்மைதான். அவர்கள் கேள்விகளுக்கு நாஸாவும் தன் சார்பில் பதில்களைச் சொல்லியிருந்தாலும், ' எது உண்மை?' என்பதில் குழப்பம் இன்னும் மிச்சமாகத்தான் இருக்கிறது. இன்று வரை உலகில் எங்காவது ஒரு தொலைக்காட்சியில் இது பற்றி விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo%203

சந்திரனில் மனிதன் காலடி வைத்தானா? இல்லையா? என்பது மட்டுமல்ல, எல்லை மீறி எவன், எங்கு காலடி வைத்தாலும் கவலைப்படாமல், அது பற்றி அறியாமல் இருக்க நாம் பழகிவிட்டோம் என்பதுதான் உண்மை. அதனால், நாம் இதையாவது விளக்கமாக, விரிவாக ஒரு அறிவியல் பார்வையுடன் இரண்டு பக்க நியாயங்களுடன் பார்க்கலாம். அத்துடன் சந்திரன் பற்றிய அனைத்து தகவல்களையும் பார்க்கலாம். நாம் பிறந்தது முதல் நம்முடன் இணைந்து வரும் ஒன்றாகச் சந்திரன் இருப்பதால், அதன் முக்கியம் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை. ஆனால் இந்தச் சந்திரன் இல்லையென்றால் பூமியும் இல்லை, நாமும் இல்லை என்பதுதான் உண்மை. சந்திரன் இல்லாமல் போக வேண்டியதில்லை. அது இருக்குமிடத்தில் இருந்து சிறிது தூரம் பூமியை நோக்கியோ அல்லது பூமியை விலகியோ நகர்ந்தாலே போதும், பூமியில் உயிரினங்கள் வாழ்வது கேள்விக் குறியாகிவிடும். அவ்வளவு இன்றியமையாதது சந்திரன். நம் வாழ்வுடன் தன்னை மிகமுக்கியமாக இணைத்து வைதிருப்பது அது.

சந்திரன் அப்படி எந்த அளவுக்குத்தான் நமக்கு முக்கியமானது? என்பதை ஒரு தொடர் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதே, இந்தத் தொடரின் நோக்கம். இந்தத் தொடர் சந்திரனைப் பற்றிய தகவல்களை மட்டும் கொண்டிருக்காது. சந்திரனின் மிஸ்டரிகளையும், நீங்கள் அறிந்திருக்காத ஆச்சரிங்களையும் கொண்டிருக்கும். எனவே சந்திரனை நோக்கிய நம் பயணமும் நிச்சயம் சுவாரஷ்யமாகவே இருக்கும். என்ன நாம் பயணத்தை ஆரம்பிக்கலாமா........?

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo%204

அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்ப எடுத்த முடிவு, திட்டமிட்ட ஒரு செயலல்ல. அது ஒரு நிர்ப்பந்தம். அன்று ஜனாதிபதியாக இருந்த ஜான் எஃப் கென்னடி (John F.Kennedy) அவர்கள் அமெரிக்க மானம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக எடுத்த ஒரு முடிவுதான் அது. சந்திரனுக்கு மனிதனை அனுப்பியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அவருக்குக் கொடுக்கக் காரணமாக இருந்தது 'குளிர் யுத்தம்' (Cold War) என்றழைக்கப்பட்ட மறைமுகப் போர்தான். அந்த யுத்தம் ஏற்படுத்திய நிர்ப்பந்தமே மனிதனைச் சந்திரனை நோக்கி அனுப்பி வைத்தது.

"கோல்ட் வாருக்கும் சந்திரனுக்கும் என்னய்யா சம்மந்தம்?" என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன். அந்தச் சம்மந்தம் என்னவென்பதை அடுத்த வாரம் இதே தொடரில் சொல்கிறேன்.........!
நன்றி:உயிர்மை.காம் மற்றும் ராஜ்சிவா



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 09, 2013 5:52 pm

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo1

1969ம் ஆண்டு யூலை மாதம் 20ம் தேதி, நீல் ஆம்ஸ்ட்ராங் உலகின் முதல் மனிதனாக, நிலவில் தன் காலடியை எடுத்து வைத்தார். மனிதகுல வரலாற்றில் ஆழமாக எழுதப்பட்ட இந்த நிகழ்வு நடைபெற்று நாற்பத்தி நான்கு வருடங்களின் பின்னரும், அது சந்தேகமான ஒன்றாகவே பலரால் பார்க்கப்படுகிறது. சந்தேகத்துக்கான காரணங்களாகப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மனிதனைச் சந்திரனுக்கு அனுப்புவதில் அமெரிக்கா காட்டிய அவசரமும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. 'மனிதனைச் சந்திரனுக்கு அனுப்புவதுக்கு அமெரிக்கா ஏன் அவசரப்பட வேண்டும்?' என்ற கேள்விக்கு பதிலாகச் சுட்டிக்காட்டப்படும் காரணம்தான் 'பனிப்போர்' (Cold War) ஆகும்.

1939 ஆண்டிலிருந்து 1945ம் ஆண்டு வரை உலகமே இரண்டாகப் பிரிந்து ஒரு யுத்தத்தை நடத்தி முடித்தது. அந்த யுத்தம் 'இரண்டாம் உலகப் போர்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு பக்கங்களிலும் எழுபது கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பில் இராணுவம், பொதுமக்கள் அனைவரும் அடக்கம். ஜேர்மனி, இத்தாலி, யப்பான், ஹங்கேரி, ருமேனியா உட்படப் பல நாடுகள் ஓரணியிலும், அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா உட்பட ஏனைய நாடுகள் ஓரணியிலுமாக இரண்டாகப் பிரிந்து இந்த இரண்டாம் உலகப் போரை நடத்தின. அந்தக் காலகட்டங்களில் ஜேர்மனியும், யப்பானும், இத்தாலியும் மிகவும் வலிமையுள்ள நாடுகளாக இருந்தது இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாகும். இந்த இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அணி வெற்றி பெற்றது. வெற்றியையும், வெற்றி பெற்ற நாடுகளையும் இந்த நாடுகள் தமக்குள்ளே பங்கும் போட்டுக் கொண்டன. இந்தப் போரில் ஒரே அணியில் இருந்து போரிட்ட அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் போருக்குப் பின்னர் ஏற்பட்ட முறுகல் நிலையே 'பனிப்போர்' என்று பின்னர் அழைக்கப்பட்டது.

முதலாளித்துவம்,  கம்யூனிசம் என்ற இரண்டு வெவ்வேறு தத்துவங்களின் அடிப்படையில் அமெரிக்காவும், ரஷ்யாவும் தம்மைக் கட்டமைத்துக் கொண்டதால் ஏற்பட்ட முரண்பாடுகளில் ஆரம்பித்த முறுகல் நிலை, படிப்படியாக வளர்ந்து, நிஜமான ஒரு யுத்த்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த இரு நாடுகளையும் தயார்படுத்தியது. இந்தப் பகை வளர்ந்து, இந்த உலகில் பெரியவன் நீயா? நானா? என்னும் போட்டியாக உருக் கொண்டது. ஒருபுறம் கம்யூனிசக் கொள்கைகளை முன்னிறுத்தி தனக்கு ஆதரவாகப் பல நாடுகளை ரஷ்யா ஒன்று சேர்க்க, மறுபுறம் முதலாளித்துவத்தை முன்னிறுத்தி அமெரிக்கா தனக்கான ஆதரவு நாடுகளை ஒன்று சேர்க்கத் தொடங்கியது. மீண்டும் உலக நாடுகள் அனைத்தும் இரண்டாகப் பிரிந்து ஒன்றுடன் ஒன்று முறைத்துக் கொண்டிருக்கும் நிலைக்குத் தள்ளப்ப்பட்டன. எப்போதும் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் ஏதோ ஒரு சாட்டை முன்வைத்து, ஒரு யுத்தம் ஆரம்பிக்கப்படலாம் என்ற ஒரு பனிப்போர்த் தன்மை இருந்து கொண்டே இருந்தது. கியூபா, ஹங்கேரி, வியட்னாம் போன்ற நாடுகளில் நடைபெற்ற சிறிய யுத்தங்கள் மூலம் இந்தப் பனிப்போர், பெரும்போராக மாறக் கூடிய சந்தர்ப்பங்களும் தோன்றின. ஆனாலும், அவை புத்திசாலித்தனமாக இரண்டு பக்கத்தாலும் அடக்கப்பட்டது.

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo2

நிலத்தில், நீரில், ஆகாயத்தில் என்று தங்கள் யுத்த தளபாடங்களைப் பெருக்கி, 'நான் பெரியவன்.. நீ பெரியவன்..' என அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றுக்கொன்று போட்டியாக மார்தட்டிக் கொண்டிருந்த போது, ரஷ்யா ஒரு புதுவிதமான யுக்தியைக் கையாண்டு, பனிப்போரின் வடிவத்தை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு சென்றது. ஆகாய வெளியில் விமானத்தின் அளவில் நின்று கொண்ட ரஷ்யா திடீரென, 1957ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதி 'ஸ்புட்னிக் 1' (Sputnik 1) என்ற செயற்கைக் கோளை (Satellite) விண்வெளிக்கு அனுப்பி, பூமியின் மேல்பரப்பில் வலம்வர வைத்தது. மனித வரலாற்றிலேயே விண்வெளிக்கு மனிதனால் அனுப்பப்பட்ட முதல் செயற்கைக் கோள் என்ற பெயரை 'ஸ்புட்னிக் 1' எடுத்துக் கொண்டது. இதன் மூலம் விண்வெளியில் தான் ஒரு காலடித் தடத்தை எடுத்து வைத்துவிட்டதாக மறைமுகமாகச் சொல்லி மார்தட்டிக் கொண்டது ரஷ்யா. ரஷ்யாவை வியப்புடன் உலகம் பார்க்க வைத்த நிகழ்வாகவும் அந்த நிகழ்வு அமைந்தது. அதனால் அமெரிக்கா பெருத்த அவமானத்தை அடைந்ததாக எண்ணிக் கொண்டது. இப்போது பனிப்போரின் சக்தியில் ரஷ்யாவே முன்னிலையில் இருப்பது போல ஒரு தோற்றமும் உருவாகியது.

ரஷ்யாவின் அதிரடி இத்துடன் நின்றுவிடவில்லை. 'ஸ்புட்னிக் 1' ஐ அனுப்பிய அடுத்த ஒரு மாதத்தில் அதாவது 1957ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி, 'ஸ்புட்னிக் 2' என்ற பெயரில் அடுத்த செயற்கைக் கோளையும் விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. இந்தத் தடவை ரஷ்யா செயற்கைக் கோளை வெறுமையாக அனுப்பி வைக்கவில்லை. அதனுள் 'லைக்கா' (Laika) என்னும் பெண் நாய் ஒன்றையும் வைத்து அனுப்பியது. இதன் மூலம் விண்வெளிக்கு பிரயாணம் செய்த முதல் உயிரினம் என்ற பெயரை லைக்கா தட்டிச் சென்றது. விண்வெளிக்குச் சென்ற லைக்கா, வெப்பக் கதிர்களின் தாக்கத்தால் சில மணி நேரமே உயிருடன் இருந்தாலும், உலக வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டது. லைக்காவைப் பெருமைப்படுத்தவென ரஷ்ய அரசு தபால் தலையொன்றையும் லைக்காவின் படத்துடன் வெளியிட்டது. லைக்காவை அனுப்பியது, அமெரிக்காவின் தலையில் இறங்கிய இரண்டாவது இடியாகும். அமெரிக்கா மிகவும் கூசிப்போனது. சொல்லப் போனால், விண்வெளிக்கு செயற்கைக் கோள் ஒன்றை அனுப்புவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்ததே அமெரிக்காதான். ஆனால் ரஷ்யா மிகவும் ரகசியமாக தன் திட்டத்தை நிறைவேற்றிவிட்டது.
 

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo3

இதன் பின்னர் 1958ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி அமெரிக்கா 'எக்ஸ்ப்ளோரர் 1' (Explorer 1) என்ற செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பி வைத்தது. இந்தச் செயற்கைக் கோள்தான் எங்கள் பூமி, மின்காந்த ரேடியோ அலைகளை, ஒரு பட்டி போல தன்னைச் சுற்றிலும் வைத்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தது (The Magnetic radiation belts around the Earth). 'எக்ஸ்ப்ளோரர் 1' ஐ விண்வெளிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்ததன் மூலம், தானும் ரஷ்யாவுக்கு சமமானவன் என்று காட்டிக் கொண்டது. அதன் பின்னர் விண்வெளியில் இந்த இரண்டு நாடுகளும் தங்களில் யார் உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்ளும் போட்டியை ஆரம்பித்து வைத்தனர். இதை 'விண்வெளி ஓட்டம்' (Space Race) என்றும் அழைத்தனர். இந்த ஓட்டப் பந்தயத்தின் போதுதான் ரஷ்யா யாருமே நம்பமுடியாத ஒரு காரியத்தை செய்து முடித்தது. அமெரிக்கா என்ன செய்வதென்றே தெரியாமல் கைகளைப் பிசைந்தபடி நின்ற சம்பவமாக அது அமைந்தது. மனித வரலாற்றின் மிகப்பெரிய மைல்கல்லாக அந்தச் சம்பவம் வரலாற்றில் பதியப்பட்டது.

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo4

வான் பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், 1961ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி  'வாஸ்டொக் 1' (Vostok 1) என்ற விண்கலம், ரஷ்யாவினால் விண்வெளிக்குச் செலுத்தப்பட்டது. அந்த விண்கலத்தில், விண்வெளிக்குப் பயணம் செய்யும் முதல் மனிதன் என்னும் பெருமையைப் பெறப்போகும் 'யூரி ககாரின்' (Yuri Gagarin) என்னும் வரலாற்று மாமனிதர் அமர்ந்திருந்தார். யூரி ககாரினைச் சுமந்தபடி, 'வாஸ்டொக் 1' விண்கலம் விண்வெளிக்குச் சென்று, பூமியை ஒரு சுற்றுச் சுற்றி வந்தது. ஒரு மணித்தியாலமும் 48 நிமிடங்களும் பூமியைச் சுற்றியபடி, விண்வெளியில் செலவிட்ட யூரி ககாரின், மீண்டும் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தார். ரஷ்யாவுக்கும் தனக்கும் இதன் மூலம் பெருமை சேர்த்த யூரி ககாரினை உலகமே வியந்து பாராட்டியது. ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கை, அமெரிக்காவுக்கு ஒரு மாபெரும் சவாலாக இருந்தது. ரஷ்யா சாதித்ததை விட மேலதிகமாக உலகம் வியக்கும் படியான ஒரு காரியத்தை விண்வெளியில் செய்தால் மட்டுமே பனிப்போரில் ரஷ்யாவை வென்றதாகும் என்ற நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது. இதற்கு மேலே செய்யக் கூடியதாக இருந்தது ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்று, தினம் தினம் நம் கண்முன்னே காட்சி தந்து கொண்டு 'வா..! வா...!' என்று மனிதனை அழைத்துக் கொண்டிருந்தது. அதுதான் நாம் இனி வியப்புடனான பல தகவல்களை பெற்றுக் கொள்ளப் போகும் நிலா. அந்த நிலா மட்டுமே அமெரிக்காவின் மரியாதையைக் காப்பாற்றும் தேவதையாக மேலே அமைதியாகக் காய்ந்து கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த 'கென்னடி' அவர்கள், 'அமெரிக்கா நிலாவுக்கு மனிதனை அனுப்பப் போகிறது' என்ற செய்தியை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக 1969ம் ஆண்டு மூவரை ஏற்றியபடி 'அப்போலோ 11' என்னும் விண்கலம் நிலாவை நோக்கிச் சென்றது. முதல் மனிதனாக 'நீல் ஆம்ஸ்ட்ரோங்' தன் காலடியையும் நிலாவில் பதித்தார். ரஷ்யாவிடம் இழந்த மரியாதையை பலமடங்காக அமெரிக்கா இந்த நிகழ்வின் மூலம் திருப்பிப் பெற்றும் கொண்டது. ஆனால், 'நிலாவில் மனிதன் காலடி வைக்கவே இல்லை. ஹாலிவூட்டில் படம் எடுப்பது போல, அமெரிக்கா ஒரு படத்தை எடுத்து நிலாவுக்குச் சென்றதாக சும்மா ஜல்லியடிக்கிறது. யாரும் இதை நம்ப வேண்டாம். இதை நாங்கள் சும்மா சொல்லவில்லை. பல ஆதாரங்களுடன்தான் சொல்கிறோம்"  என்ற எதிர்ப்புக் குரல் பலமாக எழுந்தது. எதிர்ப்புக் குரல் அமெரிக்காவின் எதிரியான ரஷ்யாவிடமிருந்து வரவில்லை. அது அமெரிக்காவிலிருந்தே வந்தது. எந்த 'நாஸா' (NASA) மூலமாக அப்போலோ ராக்கெட்டை சந்திரனுக்கு அமெரிக்கா அனுப்பியதோ, அந்த நாஸாவில் மிகப்பெரிய பதவியில் கடமையாற்றிய ஒருவரின் குரல்தான், இந்த எதிர்ப்ப்புக் குரள்களில் மிக முக்கியமானதாகவும் இருந்தது. 'அப்போலோ 11' இன் பயணம் பொய்யென்பதற்காக அவர்கள் வைத்த ஆதாரங்கள் அனைத்துமே திடுக்கிடும் வகையைச் சேர்ந்ததாகவும் இருந்தது. "இவர்கள் சொல்வது உண்மையாக இருக்குமோ?" என்று பலரும் சந்தேகிக்கும் வகையிலேயே அந்த ஆதரங்களும் இருந்தன.

அந்த அளவுக்கு நம்பிக்கையான அவர்கள் கொடுத்த ஆதாரங்கள் என்ன? அவை ஏன் நம்பக் கூடியதாக இருந்தன? இந்தக் கேள்விகளின் பதில்களுடன் அடுத்த வாரத்தில்..........!
நன்றி-ராஜ்சிவா மற்றும் உயிரோசைநன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 09, 2013 6:10 pm

தொடரும் அரியர் மாதிரி தானே இந்த தொடரும் ரமேஷ்? புன்னகை

தொடருங்கள்.




ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 09, 2013 6:17 pm

யினியவன் wrote:தொடரும் அரியர் மாதிரி தானே இந்த தொடரும் ரமேஷ்? புன்னகை

தொடருங்கள்.
மகிழ்ச்சி நன்றி அண்ணா...நன்றி 
முடிவுகளை காணும் வரை இரண்டுமே தொடர்ந்து தொடரும் அண்ணா...புன்னகை 



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 09, 2013 7:04 pm

சூப்பருங்க ராஜ்சிவா அவர்களின் மற்றுமொரு சுவராசியமான தொடரா ?! ......
ராஜ்சிவா அவர்களுக்கும் பகிர்ந்த ரமேஷ்க்கும் நன்றி ....
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 10, 2013 9:38 am

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo%201

'சந்திரனில் காலடி எடுத்து வைக்கவில்லை!' என்று அமெரிக்காவை அவமானப்படும்படி சொன்னவர்கள் ஒன்றும் அமெரிக்காவின் எதிரிகள் இல்லை. அமெரிக்காவின் குடிமக்களிடமிருந்தே அந்த எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. இவர்களில் முன்னணியில் இருந்தவர் 'பில் கேசிங்' (Bill Kaysing) என்பவர். இவர் ஒரு சாதாரணமான அமெரிக்கப் பிரஜை அல்ல. விண்கலங்கள் அமைப்பதில் வல்லுணர் இவர். 'Technical Publications Rockedyne' என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர். சந்திரனுக்கு அப்போலோவில் மனிதன் சென்றதாகச் சொன்னதை வன்மையாக மறுத்தார் பில் கேசிங். 1969 முதல் 1972 வரை இருந்த விஞ்ஞானத் தொழில்நுட்ப அறிவின்படி, சந்திரனுக்கு மனிதன் செல்ல 0.0004% சாத்தியம்தான் இருந்தது என்று சிரிக்கிறார் இவர். இவர் மட்டுமல்ல, பலரும், பல ஆதாரங்களுடன் கேலியாகச் சிரித்து மறுக்கிறார்கள். இப்படி மறுப்பவர்களைச் 'சூழ்ச்சிக் கோட்பாட்டாளர்கள்'  என்று சிலர் விமர்சித்தாலும், சூழ்ச்சிக் கோட்டின் அடிப்படையில் அவர்கள் சொல்வதை நாம் அப்படியே உதாசீனப்படுத்தி உதறியெறிந்துவிட முடியாது.

'சூழ்ச்சிக் கோட்பாடு' (Conspiracy Theory) என்று ஒரு கோட்பாடு உண்டு. 'உலகெங்கிலும் ஆளுமை உடையவர்களாலும், ஆளும் வர்க்கத்தினராலும், அதிகார மையங்களாலும் நடத்தப்படும் ஒவ்வொரு மர்மமான நிகழ்வுகளுக்கும், எப்போதும் அவர்கள் சார்பாக நம்பமுடியாத ஒரு காரணம் சொல்லப்பட்டிருக்கும். அதையே உண்மையென்று மக்கள் நம்பவைக்கப்பட்டுமிருப்பர். ஆனால், சில சமயங்களில் உண்மையாகவும், பல சமயங்களில் கேள்விக்குரியவைகளாகவுமே அந்தக் காரணங்கள் இருக்கும். இந்த மர்ம நிகழ்வுகளை படிப்படியாக ஆராய்ந்து, அவை வேறு விதமாக நடந்திருக்கலாம் எனப்பலகோணங்களில் ஆய்வு செய்து, அந்த நிகழ்வுகளில் இருக்கும் உண்மையையும், அதை நடத்தியவர்களின் சதிச் செயல்களையும் பகிரங்கமாக உலகிற்குக் கொண்டுவருவதுதான் சூழ்ச்சிக் கோட்பாட்டாளர்களின் நோக்கம். நடைபெற்ற நிகழ்வுக்கெனச் சொல்லப்பட்ட காரணத்தையும், சூழ்ச்சிக் கோட்பாட்டின் மூலம் சொல்லப்பட்ட காரணத்தையும் எடுத்துக் கொள்ளும் போது, உண்மை என்பது அவை இரண்டுக்கும் இடையில் நின்றே ஊசலாடும். சூழ்ச்சிக் கோட்பாடாளர்களால் சொல்லப்படுபவற்றையும் கூட, நாம் அப்படியே உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. எடுக்கவும் கூடாது.
அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo%202
எது எப்படி இருப்பினும், இறுதியாக நாம் எடுக்கும் முடிவுகள் நம் கையிலேதான் இருக்கும். 'கோட்பாடுகள்' எப்போதும் முழுமையான உண்மைகள் என்று சொல்லிவிட முடியாது. உண்மையை ஒட்டி அவை இருந்தாலும், அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாதவை. கோட்பாடு' (Theory) என்பது, 'உண்மையாக இருக்கும் என்று நாம் நம்புவதை, அதற்கான தர்க்க ரீதியிலான ஆதாரங்களுடன் முன்வைப்பது' ஆகும். அதுவே பின்னர் 'உண்மை' அல்லது 'உண்மையல்ல' என்ற ஒற்றை முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். சூழ்ச்சிக் கோட்பாட்டையும் இதனுள்ளேதான் அடக்குகின்றனர். இதனாலேயே சிலர், "அட! இது வெறும் கான்ஸ்பிரஸித் தியரிதானே!" என்று அலட்சியமாக சொல்லிவிடுவதும் உண்டு. ஆனால், நடந்த சம்பவங்களின் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு, சூழ்ச்சிக் கோட்பாட்டாளர்கள் தங்கள் உயிர்களையே பணயம் வைத்து உழைப்பார்கள். எப்போதும் கான்ஸ்பிரஸித் தியரிகள் ஆதிக்க வர்க்கத்துக்கு எதிரானதாகவே இருப்பதால், அவற்றை ஆராய்வது அதிக ஆபத்து நிறைந்தவையாக இருக்கும். கான்ஸ்பிரஸித் தியரிகளைப் பொய்யாக்க தங்கள் பணத்தையும், அதிகாரத்தையும் ஆதிக்கவர்க்கம் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தும். இந்த வகையில், உலகிலேயே இதுவரை சொல்லப்பட்ட அனைத்துச் சூழ்ச்சிக் கோட்பாடுகளிலும், முதன்மை வகிக்கும் சூழ்ச்சிக் கோட்பாடாகவும், வலிமையான கோட்பாடாகவும் இருப்பது, 'சந்திரனில் மனிதன் காலடியெடுத்து வைக்கவே இல்லை' என்று சொல்லப்படும் சூழ்ச்சிக் கோட்பாடுதான். கடந்த நாற்பத்தி நான்கு வருடங்களாக "சந்திரனுக்கு மனிதன் சென்றது உண்மைதானா?" என்ற கேள்வியைக் கேட்க வைத்துக் கொண்டே இருக்கும் முதன்மைக் கோட்பாடு இது. இன்றுவரை உலகில் எங்காவது ஒரு மூலையில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் இது பற்றி விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மிகச் சமீபகாலமாக இந்தக் கோட்பாடு பற்றி வலிமையான எதிர்ப்புக் குரல்கள் மீண்டும் எழ ஆரம்பித்திருக்கிறது. அன்று பில் கேஸிங் எதிர்ப்பதற்குச் சொன்ன காரணங்களுடன், இன்றுள்ள அறிவியல் காரணங்களும் ஒன்று சேர்வதால், சந்திரனுக்கு மனிதன் நிஜமாகவே செல்லவில்லை என்ற முடிவுக்கே இப்போது பலர் வருகின்றார்கள். 'நாமும் அந்த முடிவுக்குத்தான் வரவேண்டுமா?' என்பதை, இந்தத் தொடரின் மூலம் மெல்ல மெல்லப் பார்க்கலாம்.

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo%203

இந்தத் தொடரைப் படிக்கும் உங்களுக்கு சில வார்த்தைகளை நான் முன்கூட்டியே சொல்ல வேண்டும். இங்கு நான் சொல்லப் போகும் எதுவும் என் கருத்தோ, என் முடிவோ கிடையாது. ஏற்கனவே பலரால் சந்தேகமாகப் பேசப்படுபவைதான் இவை. உலகெங்குமுள்ள ஊடகங்களின் மூலமாகச் சேகரித்தவை இவை. தொடரின் இறுதியில் இவற்றை நான் எங்கெங்கிருந்து பெற்றேன் என்னும் தகவல்களைத் தருவேன். இதை நான் ஏன் இங்கு சொல்கிறேனென்றால், இவை அனைத்தும் நாஸாவுக்கு எதிரான தகவல்களைக் கொண்டவை. அவற்றின் உண்மைத் தண்மைக்கு நான் பொறுப்பேற்க முடியாது. "இவையெல்லாம், இப்படி இப்படி இருக்கின்றன. இவற்றை நீங்களும் அறிந்து கொள்ளலாமே!" என்ற அபிப்பிராயத்தினால் மட்டுமே, இவற்றைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதிலிருந்து எது உண்மை, எது பொய் என்று முடிவுக்கு வரவேண்டியது நீங்கள்தான். நான் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அது என்ன என்பதை வெளிப்படையாக என்னால் சொல்லிவிட முடியாது. வாசித்தபின் முடிவு உங்கள் கையில். எனது இந்த முன் ஜாக்கிரதைக்கு காரணம் என்ன என்பதை நீங்கள் அடுத்த பத்தியை வாசிக்கும் போதே அறிந்து கொள்வீர்கள்.

'அப்போலோ 11' சந்திரனில் இறங்கியதற்கு அப்புறம்தான், 'அப்போலோ' என்ற ஒன்று இருக்கின்றது என்பதை நம்மில் பலர் அறிந்து கொண்டார்கள். 'அப்போலோ 11' இல் அல்ல, 'அப்போலோ 1' இலிருந்தே நீங்கள் வாசிக்கும் இந்தத் தொடர் ஆரம்பமாகிறது. ரஷ்யாவினால் யூரி ககாரின் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பின்னர், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் ஆக்ரோசம் அதிகப்படியானது. இதனால், 1967ம் ஆண்டு 'அப்போலோ 1' (Appolo 1) விண்கலம் மனிதர்களை ஏற்றிக் கொண்டு சந்திரனை அடைவதற்கான திட்டங்களுடன் தயாரானது. 21ம் தேதி பிப்ரவரி மாதம் 1967ம் ஆண்டு சந்திரனில் இறங்குவதற்கான ஆயத்தங்களுடன் 'அப்போலோ 1' அமெரிக்க அரசினால் தயார்படுத்ததப்பட்டது. வேர்ஜில் கிரிசம் (Virgil Grissom), 'எட்வார்ட் வைட்' (Edward White), 'ரோஜர் ஷாஃபீ' (Roger Chaffee) ஆகிய மூவரும் அந்த விண்கலத்தின் மூலம் சந்திரனை அடையும் முதல் மனிதர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இந்தத் திட்டம் மட்டும் சரிவர நடைபெற்றிருக்குமானால், நீல் ஆம்ஸ்ட்ரோங்கிற்குப் பதிலாக சந்திரனில் கால்வைத்த முதல் மனிதனாக, வேர்ஜில் கிரிசமே இருந்திருப்பார். அதற்குரிய அனைத்து மரியாதையும் அவருக்கே கிடைத்திருக்கும். ஆனால் நடந்ததோ வேறு. யாரும் எதிர்பார்க்காதது. "சந்திரனில் மனிதன் இறங்கவில்லை. அது அமெரிக்காவினதும், நாஸாவினதும் திட்டமிட்ட சதி" என்று 'அப்போலோ 11' பற்றி இப்போது சொல்கின்றனர். ஆனால் இந்தச் சதி 'அப்போலோ 1' இலேயே ஆரம்பமாகியது என்பதுதான் உண்மை. அந்த உண்மை பலர் அறியாதது. நம்பவே முடியாதது. பல குடும்பங்களின் கண்ணீர்க் கதை அது.

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo%204

21ம் தேதி பிப்ரவரி 1967 இல், சந்திரனுக்குச் சென்று, சந்திரத்தரையில் இறங்கும் முதல் மனிதனாக வேர்ஜில் கிரிசமும், அவருடன் கூட எட்வார்ட் வைட்டும், ரோஜர் ஷாஃபீயும் தயார்படுத்தப்பட்டார்கள். அதற்கான அனைத்துப் பயிற்சிகளையும் அவர்கள் மிகத்தீவிரமாகப் பெற்றுக் கொண்டார்கள். சொல்லப் போனால் அமெரிக்காவின் ஹீரோவாகவே கிரிசம் பார்க்கப்படத் தொடங்கினார். இந்த நேரத்தில் ஆச்சரியமான ஒரு செயலை நாஸா செய்தது. இவர்கள் மூவருக்கும் பயிற்சி கொடுத்த அதே வேளையில், 'ஜேம்ஸ் மாக்டிவிட்' (James McDivitt), 'டேவிட் ஸ்காட்' (David Scott), 'ரஸ்ஸல் ஸ்வைக்கார்ட்' (Russell Schweickart) என்னும் வேறு மூவரையும், இவர்களுக்குப் பதிலான மூவராக நாஸா தயார்படுத்தியது. "அட! இது சகஜம்தானே! அவர்களுக்கு கடைசி நிமிடங்களில், ராக்கெட்டில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக இவர்கள் மூவரையும் அனுப்பி வைக்கலாம். அதற்காக இவர்களைத் தயார்படுத்தி வைப்பது நல்லதுதானே! சாதாரண கிரிக்கெட் விளையாட்டுக்கே எக்ஸ்ட்ரா விளையாட்டு வீரர்களை வைத்திருக்கிறோம். இவ்வளவு பெரிய திட்டத்துக்கு வைத்திருப்பதில் என்ன தவறு? இதில் ஆச்சரியப்பட என்ன இருகிறது?" என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இத்துடன் நாஸா நிறுத்திவிடவில்லை. மேலும் மூன்று பேரையும் ஆயத்தப்படுத்தியது. 'வால்டர் ஷிர்ரா' (Walter Schirra), 'டான் ஐஸலே' (Don Eisele, 'வால்டர் கனிங்ஹாம்' (Walter Gunningham) ஆகிய மூவரும் கூடவே ஆயத்தப்படுத்தப்பட்டனர். முதல் மூன்று பேரையும் First backup crew என்றும், அடுத்த முன்று பேரையும் Second backup crew என்றும் அழைத்தனர். மொத்தம் ஒன்பது பேர். ஆரம்பத்தில் இந்த ஏற்பாடுகள் எந்தச் சந்தேகங்களையும் ஏற்படுத்தவில்லை. அடுத்து நடந்த பயங்கரத்தைக் கண்டபின்னர்தான் இந்த பயண ஏற்பாட்டின் ஆயத்தங்களில் சந்தேகங்கள் ஏற்பட ஆரம்பித்தது.

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo%205

'அப்போலோ 1' இல் பறந்து சந்திரனில் காலடியெடுத்து வைக்கப்போகும் முதல் மனிதனாக தெரிவுசெய்யப்பட்ட வேர்ஜில் கிரிசம், ஆரம்பத்தில் மிக உற்சாகமாக தனது பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். ஆனால் படிப்படியாக, நாட்கள் செல்லச் செல்ல அவரது பேச்சுகளில் பயணம் தொடர்பான எதிர்மறைக் கருத்துகள் வெளியாகத் தொடங்கின. இதை அவர் தனது குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் மட்டுமே பகிர்ந்து கொண்டார். 'இப்படி ஒரு பயணமே நடைபெறப் போவதில்லை' என்ற விதத்தில் அவரது பேச்சுகள் இருக்கலாயின. இறுதி நேரங்களில் அவர் மிகவும் பயந்த நிலையில் காணப்பட்டார். வெளியே மகிழ்வானவராகக் காட்டிக் கொண்டாலும், உள்ளே ஏதோ ஒன்று நடைபெறப்போகிறது என்று அவர் மனம் சொல்லியது போல நடந்துகொண்டார். அதன் உச்சக்கட்டமாக, "நான் கொல்லப்படப் போகிறேன்" என்றும் அவர் சொல்ல ஆரம்பித்தார். அவரின் பேச்சில் மரண பயம் அப்படியே இருந்ததை நண்பர்களும், குடும்பத்தினரும் கண்டுகொண்டனர். ஆரம்பத்தில் நண்பர்களும், உறவினர்களும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் பயணம் சம்மந்தமான ஏதோ ஒரு உண்மை அவருக்குத் தெரிந்திருக்கிறது என்று புரிந்து கொண்டார்கள். நாஸாவின் சில நடவடிக்கைகளுக்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லை போலவும் இருந்தது. இவரின் இந்த வகையான மாறுபட்ட எதிர்ப்புகள், ஆட்சி மையங்களுக்கு தலையிடியாக இருந்திருக்கலாம். அதனால் தான் கொல்லப்படப் போவதாக அவர் நண்பர்களுக்குச் சொல்லியிருக்கலாம். திடீரென, 'சந்திரனுக்குச் செல்லும் பயணத்தின் முன்னோட்டமான ஒரு பயிற்சி நடவடிக்கையை எடுக்கப் போவதாக' நாஸா அறிவித்தது. 1967ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அந்த முன்னோட்டப் பரீட்சையை செய்வதாகவும் தீர்மானித்தது. அதாவது சந்திரனுக்குச் செல்வதாகத் திட்டமிட்ட தினத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர். பூமியில் இருந்தபடியே அப்போலோ விண்கலத்தின் முன் பகுதியான கூம்பு போன்ற பகுதியில் அந்தச் சோதனை நடத்தப்பட்டது. கிரிசம் உட்பட, மூவரும் அந்த வின்கலக் கூம்பினுள் நுழைந்தனர். கலம் மூடப்பட்டது. உள்ளிருப்பவர்களுக்கும், வெளியே இருப்பவர்களுக்குமிடையில், 'கலத்தை எப்படி இயக்குவது என்ற முன்னோட்ட நிகழ்வுகள்' ரேடியோத் தொடர்பு மூலமாக நடந்தது. அந்தக் கணத்தில்தான் அந்தப் பயங்கரம் நடைபெற்றது.  

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo%206

ரேடியோ அலைவரிசை மூலமாக தடையின்றிப் பேசிக் கொண்டிருந்த மூவரின் தொடர்புகளும் திடீரெனத் தடைப்பட்டது. உள்ளிருப்பவர்களுக்கும் வெளியே இருப்பவர்களுக்குமான தொடர்பு அடியோடு இல்லாமல் போனது. அதற்குச் சிறிது நேரத்தில் அந்த விண்கலம் உள்ளே திடீரெனத் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அவர்களால் வெளியே வரமுடியாதபடி விண்கலத்தின் கதவுகள் அடைத்துக் கொண்டது. எப்படி முயற்சி செய்தும் அந்தத் தீயை யாராலும் தடுக்க முடியவில்லை. விண்கலத்தில் அமர்ந்திருந்த யாருமே அந்த விபத்தில் தப்பவில்லை. கிரிசம், வைட், ஷாஃபீ மூவரும் பயங்கரமான அந்தத் தீயில் கருகிச் செத்துப் போனார்கள். தான் கொல்லப்படப் போவதாக கிரிசம் முன்னரே சொன்னது உண்மையாகிப் போனது. நடந்த உண்மைகள் எதுவும் தெரியாத உலகம், அதை ஒரு ராக்கெட் விபத்தாக மட்டும் எடுத்துக் கொண்டு அமைதியானது. அமைதியாக இருக்க முடியாமல் தவித்தவர்கள் விண்வெளி வீரர்களின் குடும்பத்தினர்கள்தான். கிரிசமின் குடும்பத்தினர் தவிர்ந்த, மற்ற இருவரினதும் குடும்பங்களும் பயத்தினால் வாயே திறக்க மறுத்தது. ஆனாலும் ஏதோ உண்மை அவர்களுக்குத் தெரிந்திருந்தது போலவே இருந்தது. ஆனால் கிரிசத்தின் மனைவி 'பெட்டி கிரிசம்' (Betty Grissom) மட்டும் சும்மா இருக்கவில்லை, "அது ஒரு விபத்து அல்ல, கொலை" என்று தெளிவாகப் பேட்டி கொடுத்தார். அப்போது சின்னஞ்சிறுவனாக இருந்த கிரிசமின் மகனான 'ஸ்காட் கிரிசம்' (Scott Grissom), "தனது தந்தை நன்கு திட்டமிடப்பட்ட சதியினால், செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவிபத்தினால்தான் இறந்தார். நாஸாவுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும்" என்று பெரியவனானதும் வெளிப்படையாகப் பேட்டி கொடுத்தார்.

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Photo%207

"இது அநியாயம். இப்படிப்பட்ட பயணங்களில் தீவிபத்துகள் நடைபெறுவது சகஜம். இப்படி ஒன்று நடந்துவிட்டதால், எழுந்தமானத்துக்கு நாஸாவில் குற்றம் சொல்வதே இவர்களின் வேலையாகிவிட்டது" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக அதிர்ச்சிகள் காத்திருந்தது. அடுத்ததாக மேலுமொரு கொலைச் சம்பவமும் நடந்தேறியது. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புள்ள, மிகவும் முக்கியமான ஒரு நபர் ஒருவர், அவரது மனைவி, மகளுடன் அடுத்த சில தினங்களிலேயே விபத்தொன்றின் மூலம் கொல்லப்பட்டார். 'காகம் உட்காரப் பனம்பழம் விழுவது' நடைபெறும் செயல்தான் என்றாலும். இரண்டு காகங்கள் உட்கார, 'இரண்டு பனம்பழங்கள் விழுந்ததை' யாராலும் நம்பமுடியவில்லை. அதுவும் சில தினங்கள் இடைவெளிகளிலேயே!. இரண்டு சம்பவங்களும் எப்படித் தற்செயலாக அமைய முடியும்? அதுமட்டுமல்லாமல், அதன் பின்னர் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடந்தவை எல்லாமே மர்மங்களாக இருந்தன. இவையெல்லாம் நாஸாவிலும், அமெரிக்காவின் மேலும் இருந்த நம்பிக்கையைக் குலைக்கும் செயலாக இருந்தன. இப்போது அனைத்தும் சேர்ந்து மொத்தமாக அசைக்க முடியாத ஆப்பாக நாஸாவுக்கு எதிராக இறங்கவும் ஆரம்பித்திருக்கிறது.

வேர்ஜில் கிரிசமும் அவரது உடன் பயணிகளும் கொல்லப்பட்ட பின்னர், விபத்தில் இறந்த அந்த நபர் யார்? அதன் பிறகு நடைபெற்ற மர்மங்கள்தான் எவை? அவற்றை அடுத்த வாரத்தில் பார்க்கலாம்......!

நன்றி -ராஜ்சிவா



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக