புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 18:53

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 17:36

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழிலக்கியத் தேனீ  Poll_c10தமிழிலக்கியத் தேனீ  Poll_m10தமிழிலக்கியத் தேனீ  Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
தமிழிலக்கியத் தேனீ  Poll_c10தமிழிலக்கியத் தேனீ  Poll_m10தமிழிலக்கியத் தேனீ  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழிலக்கியத் தேனீ  Poll_c10தமிழிலக்கியத் தேனீ  Poll_m10தமிழிலக்கியத் தேனீ  Poll_c10 
146 Posts - 57%
heezulia
தமிழிலக்கியத் தேனீ  Poll_c10தமிழிலக்கியத் தேனீ  Poll_m10தமிழிலக்கியத் தேனீ  Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
தமிழிலக்கியத் தேனீ  Poll_c10தமிழிலக்கியத் தேனீ  Poll_m10தமிழிலக்கியத் தேனீ  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தமிழிலக்கியத் தேனீ  Poll_c10தமிழிலக்கியத் தேனீ  Poll_m10தமிழிலக்கியத் தேனீ  Poll_c10 
9 Posts - 4%
prajai
தமிழிலக்கியத் தேனீ  Poll_c10தமிழிலக்கியத் தேனீ  Poll_m10தமிழிலக்கியத் தேனீ  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தமிழிலக்கியத் தேனீ  Poll_c10தமிழிலக்கியத் தேனீ  Poll_m10தமிழிலக்கியத் தேனீ  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தமிழிலக்கியத் தேனீ  Poll_c10தமிழிலக்கியத் தேனீ  Poll_m10தமிழிலக்கியத் தேனீ  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தமிழிலக்கியத் தேனீ  Poll_c10தமிழிலக்கியத் தேனீ  Poll_m10தமிழிலக்கியத் தேனீ  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழிலக்கியத் தேனீ


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon 17 Jun 2013 - 17:54

தமிழிலக்கியத் தேனீ ' வி.கனகசபைப் பிள்ளை

சங்க காலத்திலிருந்தே இலங்கையில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இலங்கையிலிருந்து, வின்சுலோ, பெர்சிவல் ஆகிய இருவரும் தாம் செய்த தமிழ் ஆங்கில அகராதி, கிறிஸ்துவமறை மொழிபெயர்ப்பு ஆகியவற்றைப் பதிப்பிக்க ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், விசுவநாதன் ஆகியோரைச் சென்னைக்கு அழைத்து வந்தனர். வின்சுலோ செய்த "தமிழ்-ஆங்கில அகராதி' அச்சிடும் பணியில் உதவிவந்த விசுவநாதன் மகன்தான் கனகசபை. இவர் 25.5.1855-இல் பிறந்தவர்.

கனகசபை, சென்னை அரசினர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றபின், அஞ்சல் துறையில் அலுவலக ஊழியராகப் பணியில் சேர்ந்தார். விடுப்பில் சென்று ஓராண்டில் சட்டவியலில் இளநிலைப் பட்டம் (பி.எல்.) பெற்றார். பின்னர் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் பொன்னையாப் பிள்ளையின் மகள் செல்லம்மாளை மணந்தார். அதனால், மதுரையில் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். முதல் வழக்கிலேயே வெற்றி பெற்றார். ஆனால், இவர் வெளியில் செல்லும்போது வழக்கில் தோற்றவர் இவரைப் பற்றி அவதூறாகப் பேசியதால், மனம் நொந்த கனகசபை வழக்குரைஞர் தொழிலைக் கைவிட்டு, சென்னையில் அஞ்சல்துறை மேற்பார்வையாளர் பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை மாநில அஞ்சலகங்களில் உயர்நிலைக் கண்காணிப்பாளரானார்.

கனகசபையின் தந்தையும் தாயும் அடுத்தடுத்த ஆண்டில் (1884, 1885) இறந்தனர். தந்தையையும் தாயையும் இழந்த துன்பம் போதாதென்று கனகசபையின் குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். வாழ்வில் ஏற்பட்ட துன்பம் கண்டு துவண்டுபோன தம் உள்ளத்தைத் தமிழ்ப் பற்றால் தேற்றி, அலுவலகப் பணிபோக மீதி நேரமெல்லாம் தமிழ் இலக்கியங்களில் மூழ்கினார்.

அக்காலச் சென்னை மாநிலத்தின் அனைத்து ஊர்களுக்கும் அஞ்சலகங்களை மேற்பார்வையிடும் பொருட்டுச் சென்றுவந்தார். அவ்வாறு செல்லும் ஊர்களில் கிடைக்கும் ஏட்டுச்சுவடிகளையும் கல்வெட்டுகளையும் படியெடுத்தார்.

தமிழ் இலக்கண-இலக்கிய ஓலைச்சுவடிகளைத் தொகுக்கவும், படியெடுக்கவும், குறிப்புகள் எழுதவும் அப்பாவுப்பிள்ளை என்பவர் 20 ஆண்டுகள் கனகசபையின் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். 20 ஆண்டு கடும் உழைப்பில் தொகுக்கப்பெற்ற அவ்வளவு ஏடுகளையும் உ.வே.சாமிநாதையருக்கு அவ்வப்போது வழங்கினார் கனகசபை.

பனை ஓலைச் சுவடிகளையும் கல்வெட்டுகளையும் தொகுத்த கனகசபை, இலக்கியங்களை வரலாற்றுச் செய்திகளைத் தரும் ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்யத் தொடங்கினார். கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டி, சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியல் சிறப்பை "மெட்ராஸ் ரெவியூ' இதழில் ஆங்கிலத்தில் எழுதிவந்தார். இக்கட்டுரைகளை "ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள்' (Tamils Eighteen Hundred Years ago) என்ற ஆங்கில நூலாக வெளியிட்டு, அந்நூலை சுப்பிரமணிய ஐயருக்குக் காணிக்கை ஆக்கினார்.
சீன நாட்டினருக்கும் தமிழ் நாட்டினருக்கும் இருக்கக்கூடிய பண்பாட்டு, நாகரிக இன ஒற்றுமைகளைத் தம் நூலில் கனகசபை நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத்திலும் அதற்கு முந்தைய சங்க இலக்கியங்களிலும் காணப்படும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு தமிழக நிலப்பிரிவு நில அமைப்பு, அயல் நாட்டு நிலப்பிரிவு நில அமைப்பு, அயல்நாட்டு உள்நாட்டு வணிகம், பழங்குடியினர் வாழ்வு, மூவேந்தர் ஆட்சி, இலக்கியம், சமயம் ஆகியன பற்றி எழுதியுள்ளார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரிகளின் செம்மாந்த வாழ்வியலை கனசபையின் இந்நூல் வரலாற்று அடிப்படையில் ஆங்கிலத்தில் உலகுக்கு உணர்த்தியது.

வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் தோன்றிய களவழி நாற்பது, கலிங்கத்துப்பரணி, விக்கிரமசோழன் உலா ஆகிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவை, தமிழரின் தொன்மை பற்றிய ஆங்கில இதழில் (The Tamilian Antiquary) தமிழ் வரலாற்று இலக்கியங்கள் (Tamil Historical Texts) என்ற தலைப்பில் வெளிவந்தன. சீன நாட்டுத் தொடர்பை நிறுவிய கனகசபை, தமிழர்கள் வங்காளம், பர்மா முதலிய நாடுகளை வென்ற வரலாற்றுப் பெருமையையும் (The conquest of Bengal and Burma by the Tamils: Rajaraja chola) ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக இளங்கலை முதுகலைப் பட்டங்களுக்கான தேர்வுக் குழுக்களில் கனகசபை தேர்வாளராக இருந்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் 1905-இல் தலைமை தாங்கித் தமிழரின் வரலாற்றுப் பெருமை பற்றிச் சொற்பொழிவாற்றினார். எட்வர்ட் இளவரசர் சென்னை வந்தபோது ஆங்கிலத்தில் வரவேற்புரை நல்கினார்.

வலங்கைமான் கணியர் (ஜோதிடர்) இருவரின் வழி காட்டுதலில் "ஓகம்' (யோகப் பயிற்சி) கற்றிருந்த கனகசபை, உடற்பயிற்சியும் செய்து நல்ல உடற்கட்டுடன் வாழ்ந்தவர். அஞ்சலக மேற்பார்வைப் பணி தொடர்பாகக் காஞ்சிபுரம் சென்றிருந்தபோது உடல் நலங்குன்றி 21.2.1906-இல் காலமானார்.
எங்கெல்லாம் ஓலைச் சுவடிகள் உள்ளதோ அங்கெல்லாம் சென்று தேனீபோல் உழைத்து, இலக்கண-இலக்கியம் என்னும் தேனை சேகரித்துத் தந்த கனகசபைக்கு தமிழ்கூறுநல்லுலகம் மிகுந்த கடமைபட்டுள்ளது.

(Nandri-dinamani)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக