புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_m10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 
69 Posts - 52%
heezulia
 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_m10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_m10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_m10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_m10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_m10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_m10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_m10 தமிழை வாசிக்க வைப்போம்... Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை வாசிக்க வைப்போம்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jul 12, 2013 3:21 pm

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பது தேசியக் கவியின் ஆசை. ஆனால், தமிழகத்தில் பார்க்கும் இடமெல்லாம் தமிழாக இருக்கிறதா என்பதே ஆய்வுக்குரியது.

இந்தியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அலுவல் மொழியாகவும் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் பேசும் மொழியாகவும் இருக்கிறது தமிழ்.

2,500 ஆண்டு பழமை வாய்ந்த "செம்மொழியாக' தமிழ் இருக்கிறது என்பது தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை தரக்கூடியதாக இருந்தபோதும், உணர்வுப்பூர்வமாக தமிழ் நம்மோடு இருக்கிறதா?

மொழி தெரியாத ஏதோ ஒரு இடத்தில் நாம் தனித்து விடப்படும்போது, உதவிசெய்ய வருபவர் தமிழில் பேசினால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்? நாம் பாதுகாக்கப்பட்டு விடுவோம் என்ற உணர்வே அது. அதாவது தமிழ் மொழி நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பிறக்கிறது அல்லவா? அது மொழியின்மீது நமக்கு உள்ள ஆழ்ந்த உறவைக் காட்டுகிறது. அது நமது முதல் உறவு, நமது அடையாளம்; பிறகுதான் தாய், தந்தை எல்லாம்.

தமிழ் மொழியிலிருந்து தனிமைப்படும்போது பெறுகின்ற அந்த உணர்வை, நாம் தமிழோடு இருக்கும்போது மறந்து விடுகிறோம். நமது அடையாளத்தையே நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். முதலில் நாம் பார்க்கும் இடமெல்லாம் தமிழ் இருக்கிறதா என்று ஒருமுறை சுற்று முற்றும் பார்த்தாலே போதும். வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளின் பெயர்ப் பலகைகள் நம் கண்ணெதிரே தெரிகின்றவை. அவற்றில் நூற்றுக்கு 75 சதவீதம் தமிழ் பிரதானமாக இல்லை.

தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் வலம் வந்தால் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழை விட ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. கொட்டை எழுத்துகளில் ஆங்கிலத்தைப் பிரதானமாக எழுதி வைத்திருக்கின்றனர், அல்லது ஆங்கில மொழியை அப்படியே தமிழ் வார்த்தையாக எழுதிவிடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டதால் ஏற்பட்ட பாதிப்பா, அல்லது ஆங்கிலமே உலக அளவிலான தொடர்பு மொழி என்ற மாயையால் இதைக் கையாள்கின்றனரா என்று தெரியவில்லை. இந்த நிலை நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்றவற்றில் இல்லை.

கேரளத்தில் வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் பெரும்பாலும் மலையாளமே பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது. ஆங்கிலம் இரண்டாவதாக சிறிய அளவில் இருக்கிறது. அண்மையில் திருவனந்தபுரம் சென்றபோது, அவ்வப்போது இது எந்த ஊர் என, தமிழ் மட்டுமே தெரிந்த எங்களுடைய கார் டிரைவர் கேட்டுக்கொண்டே வந்தார். அத்தனை பெயர்ப் பலகைகளிலும் மலையாள மொழியே பெரிதாகக் காணப்பட்டது. ஆங்கிலம் சிறிய எழுத்தில் இருந்ததால் அடையாளம்காண முடியவில்லை.

ஆங்கிலத்தில் பேசுவதையே இன்றைக்கும் தமிழர்கள் நாகரிகமாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும், அழைப்பிதழை ஆங்கிலத்தில் அச்சிடுகின்றனர்.

பள்ளி, கல்லூரி அழைப்பிதழ்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் அச்சிடப்படுகின்றன.

தமிழக அரசு அலுவலகங்களில் இன்னமும் ஆங்கிலம் கோலோச்சுகிறது. நீதிமன்றங்களிலும் ஆங்கிலத்தில்தான் வாதங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழுணர்வு மங்கிப்போகாமல் இருக்க வேண்டுமென்றால் பார்க்கும் இடங்களிலெல்லாம் தமிழை வாசிக்க வைப்பதுதான் நமது மொழியின் வெற்றிக்கு முதல்படியாக இருக்கும்.
-
நன்றி-தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 12, 2013 4:38 pm

பகிர்வுக்கு நன்றி பவுன்ராஜ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 9:22 am

//தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் வலம் வந்தால் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழை விட ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. கொட்டை எழுத்துகளில் ஆங்கிலத்தைப் பிரதானமாக எழுதி வைத்திருக்கின்றனர், அல்லது ஆங்கில மொழியை அப்படியே தமிழ் வார்த்தையாக எழுதிவிடுகின்றனர்.//

வணிக நிறுவனங்கள் மட்டும் அல்ல நண்பரே! கேவலம் தமிழ் சினிமாவில் கூட முதலில் ஆங்கிலத்தில் தான் பேர் வருகிறது சோகம்பிறகு தான் தமிழ் .ஆனால் மற்ற மொழி படங்களை பாருங்கள் அதில் பெரும்பாலும்  அவர்கள் மொழி இல் மட்டுமே பெயர்கள் வருகின்றன ....... இந்த அவலத்தை எங்க போயி சொல்ல? தமிழ் படம் பார்ப்பது பெரும்பாலும் தமிழன் தானே? எதுக்கு ஆங்கிலத்தில் பேர்... அட போடட்டும்பா... முதலில் தமிழில் போட்டுவிட்டு பிறகாவது ஆங்கிலத்தில் போடலாமே? கவனிப்பங்களா?

//கேரளத்தில் வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் பெரும்பாலும் மலையாளமே பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது. ஆங்கிலம் இரண்டாவதாக சிறிய அளவில் இருக்கிறது. அண்மையில் திருவனந்தபுரம் சென்றபோது, அவ்வப்போது இது எந்த ஊர் என, தமிழ் மட்டுமே தெரிந்த எங்களுடைய கார் டிரைவர் கேட்டுக்கொண்டே வந்தார். அத்தனை பெயர்ப் பலகைகளிலும் மலையாள மொழியே பெரிதாகக் காணப்பட்டது. ஆங்கிலம் சிறிய எழுத்தில் இருந்ததால் அடையாளம்காண முடியவில்லை.//

இதுவும் ரொம்ப சரி, நாங்க இப்போ உடுப்பி டூர் போனமே..... பஸ் களில் கூட ஆங்கிலம் இல்லை ஊத்திக்கிச்சு வர வர இவா எல்லோரும் எண்களை கூட கன்னடத்தில் எழுத்தாரா கார் , பைக்கில் சோகம்
.
.
நல்ல விழிப்புணர்வு பதிவு, ஒரு 4 பேராவது திருந்தினால் மகிழ்ச்சி புன்னகைசூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக