ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதுவும் சேவை தானுங்க!
 ayyasamy ram

கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

உடலை வருத்த தயாராகும் சுனைனா!
 ayyasamy ram

அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
 ayyasamy ram

அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

'வீரம்மாதேவி' வரலாற்றுப் படத்திற்காக தமிழைக் கற்று வருகிறேன்: சன்னி லியோன்
 ayyasamy ram

முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனி இல்லை: இந்திய அணி அறிவிப்பு: 3 தமிழக வீரர்களுக்கு இடம்
 ayyasamy ram

18 புராணங்கள்
 abdul shameer

பழச்சாறு பானங்கள் தயாரிப்பில் இறங்குகிறது கோகோ கோலா
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஜாக்டோ -ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
 ayyasamy ram

மழை நீரை சேமிக்க 500 இடங்களில் குட்டை
 ayyasamy ram

சென்னை சேலம் இடையே பசுமை வழித்தடம்: நிதின் கட்காரி
 ayyasamy ram

'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு
 ayyasamy ram

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தனிமரம் தோப்பாகும்

View previous topic View next topic Go down

best தனிமரம் தோப்பாகும்

Post by manikandan.dp on Wed Jul 17, 2013 1:20 pm

பதினான்கு மாஸ்டர் டிகிரி... நான்கு நிறுவனங்களுக்கு மேனேஜிங் டைரக்டர்... நானூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு... ஆயிரக்கணக்கான என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழிகாட்டி எனப் பன்முகம் காட்டி சுழன்று கொண்டிருப்பவர் விஜயலட்சுமி. மதுரையைச் சேர்ந்த இந்த பிஸினஸ் பெண்மணியின் வெற்றிக்குப் பின்னால் நின்றுகொண்டிருப்பது வலி நிறைந்த சோகங்கள். ‘இனி வாழ்க்கையில ஒண்ணுமே இல்ல... இனிமே அவ்ளோதான்’ என்று சோர்ந்து போகிற பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் உத்வேகத்தைக் கொடுக்கிறது இவரது வெற்றிக் கதை.


எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூரு. நானும் என் கணவர் ஸ்டீபன் ராஜும் ஒரே கல்லூரியில் என்ஜினீயரிங் படிக்கும்போது காதல் திருமணம் செய்து கொண்டோம். வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் என் பெற்றோர் ஆதரிக்காமல் என்னுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டனர். அதே சமயம் கணவர் வீட்டிலோ, எங்க இருவரையும் மனப்பூர்வமாக ஆசீர்வதித்து பச்சைக்கொடி காட்டினார்கள். கணவர் ஸ்டீபன் பொறியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். எங்க அன்பின் வெளிப்பாடா அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைங்க பிறந்தாங்க. பெரிய பையனுக்கு 4 வயசும், சின்னவனுக்கு 2 வயசும் இருக்கும்போது என் அன்புக் கணவர் ஸ்டீபன் ஒரு விபத்துல இறந்துட்டாரு. அப்போ எனக்கு 25 வயசு. என்னால அவர் இறப்பை தாங்கிக்கவே முடியல. 3 மாசம் கோமா ஸ்டேஜ்ல மருத்துவமனையிலேயே கிடந்தேன்.


சிகிச்சைக்குப் பிறகு உடல் ரீதியா சரியானாலும் மன ரீதியா கணவர் இல்லாத வெறுமையை நினைச்சு தினம் தினம் அழ ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல தற்கொலை பண்ணிக்கொள்ளக்கூட முயற்சித்தேன். அந்த நேரத்துல என்னோட குழந்தைகளோட முகம் ஞாபகம் வந்து, தற்கொலை முடிவை கைவிட்டுட்டேன். அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளா வளர்ந்து அவர்களோட எதிர்காலம் சிதைஞ்சி போக நான் விரும்பல. பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து காட்டணும்னு முடிவு பண்ணேன். நான் படிச்ச என்ஜினீயரிங் படிப்பை வச்சி ஏதாவது பிசினஸ் துவக்கி சொந்தமா சம்பாதிச்சு எம்புள்ளைகளை காப்பாத்தலாம்ன்னு நினைச்சேன். தீவிர யோசனைக்குப் பிறகு கணவர் வீட்டுலயும், கூடப் படிச்ச ஃப்ரண்ட்ஸ் கிட்டயும் ஆலோசனை கேட்டு பேங்க்ல 5 லட்சம் ரூபாய் லோன் வாங்கி என் பேரிலேயே ‘விஜயலட்சுமி கம்ப்யூட்டர்ஸ்’ என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை 12 பணியாளர்களோட வீட்டு மாடியிலேயே துவக்கினேன். 1990 - 2000 காலகட்டத்தில் சாஃப்ட்வேர் ஃபீல்டுக்கு நல்ல கிரேஸ் இருந்ததால தொடர்ச்சியான க்ளையண்ட்ஸ் கிடைச்சாங்க. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி விஜயலட்சுமி கம்ப்யூட்டர்ஸ், இப்போ ஹைடெக் சொல்யூஷனா உருமாறி சாஃப்ட்வேர் எக்ஸ்போர்ட், அவுட் சோர்சிங்ன்னு எல்லாத் துறையிலும் தொழில் ரீதியாவும், பொருளாதார ரீதியாவும் வளர்ந்திருக்கிறது" என்கிற விஜயலட்சுமியின் முகத்தில் பெருமை நிரம்பி வழிகிறது. 12-இல் ஆரம்பித்த பணியாளர்களின் எண்ணிக்கை இப்போது 400-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே தன்னுடைய பிள்ளைகள் நிகில், அஷ்வின் இருவரையும் படிக்க வைத்துக்கொண்டே பணியிலும் கவனம் செலுத்தி வெற்றியும் பெற்றுள்ளார் விஜயலட்சுமி.


கணவர் இல்லாததாலும் பெண்ணாக இருப்பதாலும் வேலை சார்ந்து வெளியூர்களுக்குப் போகும்போது வழக்கமாக பெண்கள் சந்திக்கும் பல பிரச்சினைககளையும், நக்கலானப் பேச்சுகளையும் எதிர்கொண்டாலும் மனம் சோர்ந்து போகாம முழு கவனத்தையும் பிள்ளைங்க நலனிலும், நிறுவனத்தின் வளர்ச்சியிலுமே செலுத்தினேன். என்னதான் கம்பெனியை பார்த்துக்கிட்டாலும் கணவர் இல்லாத வெறுமை அடிக்கடி மனசை கஷ்டப்படுத்தும்.


இந்நிலையில்தான் எங்க குடும்ப டாக்டர் ரஜினி பிரேமலதா, ‘புத்தகங்கள் படிச்சா மன அழுத்தம் குறைஞ்சு போகும். ஏதாவது கோர்ஸ் எடுத்துப்படி’ன்னு ஒரு தோழியா அறிவுறுத்தினாங்க. தொடர்ந்து படிச்சா மட்டுமே திறமைகளை வளர்த்துக்க முடியும்னு உறுதியா நம்பி அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம்ன்னு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சிறந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து பகுதி நேரமா நேரடியா போய்ப் படித்தும், தொலைநிலைக் கல்வி மூலமாகவும் படிக்கத் துவங்கினேன். இப்படி ஆரம்பிச்ச என்னோட படிப்பு ஆர்வம் எம்.இ. சிஸ்டம்ஸ் என்ஜினீயரிங், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு, எம்.ஹெச்.ஆர்.எம்., எம்.ஏ., பப்ளிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ் என்று பல மாஸ்டர் டிகிரிகளை தமிழக பல்கலைக்கழகங்களில் முடித்ததோடு இங்கிலாந்திலுள்ள காடிஃப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. கம்ப்யூட்டர்ஸ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் படிப்பையும், சிகாகோ யுனிவர்சிட்டியில் எம்.எஸ். சிஸ்டம்ஸ் சொல்யூஷன் படிப்பையும் நேரடியாகவே சென்று தங்கிப் படித்து, அங்கிருந்தபடியே நிறுவனத்தையும் கவனித்துக்கொண்டேன்.


பிறகு மூன்று எம்.பில்., இரண்டு பிஎச்.டி. முடிச்சேன். படிப்பார்வம் இன்னும் தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. இப்பக்கூட, மூணாவது பிஎச்.டி.யை பப்ளிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ்ல துறையில பண்ணிட்டிருக்கேன். மேலும் இவ்வளவு படித்ததால் மட்டுமே பல தனியார் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளுக்கும், நிறுவனங்களுக்கும், ரிசர்ச் கமிட்டிகளுக்கும் கன்சல்டன்ட்டாகவும் மோட்டிவேட் அதிகாரியாகவும் சென்று என்னால் ஆலோசனை வழங்க முடிகிறது. வாழ்க்கையில நேரமும், காலமும் ரொம்ப முக்கியம். நேரத்தை சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தினாலே ஒவ்வொரு மனிதரும் வெற்றி பெறலாம்" என்று கூறும் விஜயலட்சுமி, தன்னுடைய வீட்டிலேயே ஆரம்பித்த விஜயலட்சுமி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை தற்போது பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி என 4 யூனிட்களாக விரிவடைய வைத்துள்ளார்.


டெலி கம்யூனிகேஷன் சாஃப்ட்வேர் வெப் டெக்னாலஜி, எண்டர்பிரைசஸ் ரிசர்ச் புரோகிராமிங், ஆபீஸ் ஆட்டோமேஷன், என்ஜினீயரிங் காலேஜ் ஆட்டோமேஷன் என்று பல்வேறு சாஃப்ட்வேர்களை தனது நிறுவனம் மூலம் உருவாக்கி இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். இதுவரை 64 சாஃப்ட்வேர்களை சொந்தமாக டிசைன் செய்துள்ள விஜயலட்சுமி, மதுரை மாவட்டத்தின் முதல் பெண் கம்ப்யூட்டர் மென்பொருள் ஏற்றுமதியாளர் என்பதோடு, மதுரையில் எஸ்.எஸ்.ஐ. (SMALL SCALE INDUSTRIES ) தரச் சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனம் இவருடையது என்ற பெருமையும் பெற்றுள்ளார்.


தனது உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் உயர்ந்த விஜயலட்சுமிக்கு இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இன்னும் தனது கணவர் வாழ்ந்த வீட்டின் சிறிய அறையையே தன் அலுவலக அறையாகப் பயன்படுத்தி, மகன்களுடன் கணவரின் நினைவுகளை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தாய், தந்தையைப் போலவே விஜயலட்சுமியின் இரு மகன்களும் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்துப் படித்து வருகின்றனர்.


கிராமப்புறங்களில் அமைந்துள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வெப் டெவலப்பிங் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, எங்கள் நிறுவனத்தின் ரிசர்ச் குழுவினருடன் இணைந்து சிலபஸ்களை நாங்களே வடிவமைத்து முழுக்க முழுக்க இலவசமாக 12 நாட்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளிலேயே தங்கி, 120 மணி நேரம் வெப் டெவலப்பிங் பயிற்சியை கொடுக்கிறோம். 4 வருடம் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு டெக்னாலஜி துறையில் ப்ராக்டிகல் அனுபவம் இருப்பதில்லை. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். இலவச வெப் டெவலப்பிங் பயிற்சியை எங்கள் குழு 10 நாட்கள் அளித்தபிறகு 11-ஆவது நாள் மாணவர்கள் கற்றுள்ள திறனை அறிய, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் துணையுடன் ஆன்லைன் மெயின் எக்ஸாம் வைத்து, தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழும் தருகிறோம். இதில் சிறப்பு என்னவென்றால் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள் மைக்ரோசாஃப்ட் வெப்சைட்களிலேயே அதிகாரப்பூர்வமாக வெளிவந்துவிடும். இந்தப் பட்டியலைப் பார்த்து பல எம்.என்.சி. நிறுவனங்கள் தங்கள் கம்பெனிகளுக்கு பொறியாளர்களை தேர்வு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் பயிற்சி கொடுத்து இதுவரை மைக்ரோசாஃப்ட் ஆன்லைன் தேர்வுகளில் ஒரு மாணவர் கூட தோல்வியடைய வில்லை என்பது எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி" என்கிறார் விஜயலட்சுமி.


மேலும் தன்னைப் போலவே பெண்கள் சுயமாக முன்னேறிக் காட்ட வேண்டும் என்பதற்காக 1998-ஆம் ஆண்டு ஓர் அமைப்பை ஏற்படுத்தி கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு டெக்னிக்கல் ட்ரெய்னிங், கவுன்சலிங், கம்ப்யூட்டர் பயிற்சிகள், மருத்துவ உதவிகள் போன்றவற்றை இலவசமாக அளித்து வருகிறார்.


2003-ஆம் ஆண்டு மத்திய அரசின் சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதை டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கையால் பெற்றுள்ளார் என்பதோடு, இங்கிலாந்திலுள்ள இன்டர்நேஷனல் சாஃப்ட்வேர் கன்சல்டண்ட் அசோசியேஷனின் ‘விமன் ஆஃப் தி இயர்’ விருதையும் வென்றுள்ளார்.


விஜயலட்சுமியின் அலைபேசி எண்: 98421 74800

பூ. சர்பனா
புதியதலைமுறை
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

best Re: தனிமரம் தோப்பாகும்

Post by ஜாஹீதாபானு on Wed Jul 17, 2013 4:48 pm

விஜயலட்சுமி உங்களின் சாதனை மலைக்க வைக்கிறது சூப்பருங்க சூப்பருங்க avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

best Re: தனிமரம் தோப்பாகும்

Post by மதுமிதா on Wed Jul 17, 2013 4:55 pm

சாதனை பெண் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: தனிமரம் தோப்பாகும்

Post by anbalagan on Wed Jul 17, 2013 6:17 pm

அருமை திருமதி விஜயலக்ஷ்மியின் உழைப்பு எனக்கு பாடமாக உள்ளது நன்றி nanri
avatar
anbalagan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

best Re: தனிமரம் தோப்பாகும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum