புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
74 Posts - 44%
heezulia
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kargan86
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
10 Posts - 5%
prajai
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
Jenila
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Aug 30, 2013 4:59 pm

First topic message reminder :

‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..!

‘‘சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகள், பொது இடங்களில் 20 லட்சம் பனை மர கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது‘‘ என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
மேலும்‘‘ சென்னையில் இந்தாண்டுக்குள் 5.5 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வையை 11 சதவீதம் என இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது‘‘ என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது தொடர்பான சிறப்புத் தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

சிறப்புத் தீர்மான விவரம்: தமிழக முதல்வரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினமாக கொண்டாட ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் பிறந்தநாளின் போது மரம், செடி நடும் பணிகள் தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வுகளின்படி, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 318 கி.மீ. நீர்வழித்தடங்களின் இருகரைகளின் 639 கி.மீ. நீளத்துக்கும், குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் கரைகளிலும் 6.5 லட்சம் பனை மரங்களை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்கள் தவிர பொதுமக்கள் வீடுகளிலும் பனை மரங்கள் வளர்க்கும் வகையில் 20 லட்சம் பனை கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6.5 லட்சம் பனை மரக் கன்றுகள் நடப்படும். இந்தப் பணியை தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ளும்.

மேலும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் சிவப்பு சந்தனமரம் எனப்படும் செம்மரக் கன்றுகள் வழங்கப்படும். இதுபோன்று 6.5 லட்சம் மரக் கன்றுகள் வழங்கப்படும் வீடற்றவர்கள் பொது இடங்கள், சாலைகளில் மரக்கன்று நட்டு பராமரித்து, மரத்தின் பயனை பராமரித்தவரே பெறும் வகையில் விதிகள் வகுக்கப்படும். செம்மரக் கன்றுகள் வேண்டுவோர் மாநகராட்சியைத் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல, சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒரு பப்பாளிக் கன்று வீதம் 6.5 லட்சம் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் 6.5 லட்சம் நொச்சி செடிகள் இந்தாண்டுக்குள் நடப்படும். அடுத்தாண்டு கூடுதலாக 6.6 லட்சம் நொச்சி செடிகள் நடப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சென்னையின் பசுமைப் போர்வை 25 சதவீதத்துக்கு மேல் என்ற இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள பணியாளர்கள், அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : பசுமை விகடன்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 31, 2013 11:41 am

SajeevJino wrote:ஆனால் பனை மரக் கன்றை நட்டு விட்டு ஆடோ மாடோ சாப்பிடாமல் பார்த்தால் போதும் ..தண்ணீர் தேவை இல்லை
அதனால் தான் இந்த திட்டத்தை சந்தேகத்தோடு பார்க்கிறேன் சஜீவ்... எனக்கு தாவரங்களை பற்றி அதிகம் தெரியாது.

ஓரளவிற்கு எனக்கு தெரிந்த வரை.... பாலைவனங்கள் / வறட்சி பிரதேசங்களில் வளரும் தாவர இனங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தில் இருந்தே தங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளும் திறன் வாய்ந்தவை என கேள்விபட்டுள்ளேன்.

அந்த முறையில் 20 லட்சம் பனைமரங்களும் காற்றில் உள்ள ஈரப்பதததை உறிந்தும் , மற்றும் சென்னையில் ஓடும் ஆயிரக்கணக்கான வாகனங்களின் கரியமில வாயுவும் சேர்ந்தால் அதனால் என்ன பலன் சென்னைக்கு கிடைக்கும் என நினைக்கும்போது தான் சற்று கவலை அளிக்கிறது.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Aug 31, 2013 12:39 pm

பனை வளர்ப்பு என்பது ஒரு அருமையான திட்டம். ஏனென்றால்,

பனையை வெட்டினால்.. நதிகள் வறண்டு போகும்…!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்…

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை… நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவேண்டும்.


நன்றி: studied.wordpress.com/

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Aug 31, 2013 12:48 pm

பனை மரங்களோ அல்லது வேறு மரங்களோ நடுவதோடு அரசாங்கத்தின் கடமை முடிந்துவிடுவதில்லை. அது முழுதாக வளரும் வரையில் அதனை பராமரிப்பதே மிக முக்கியமானது. ஒவ்வொரு தலைவர்களும் தங்களின் பிறந்தநாள் போன்ற வைபவங்களுக்கு மரக் கன்றுகளை நட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக இது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த எல்லா மரக்கன்றுகளும் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதுதான் கேள்வி.

அப்படிப் பராமரித்திருந்தால், இந்நேரம் நல்லதொரு முன்னேற்றத்தை நாம் கண்கூடாகக் கண்டிருக்க முடியும். இவ்வாறு நடப்பட்ட மரக்கன்றுகளில் பாதிக்குப் பாதி கவனிப்பின்றி அழிந்துவிடுகிறது என்பதே கசப்பான உண்மை. இதற்காக அமைக்கப்படும் வாரியங்கள் தங்கள் பணிகளை ஒழுங்காகச் செய்தாலே பசுமை நம்மை பாசத்தோடு அணைத்துக்கொளும்.

shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Sat Aug 31, 2013 1:08 pm

பனை மரத்தின் விபரம்: நட்டாயிரம் வருடம், பட்டாயிரம் வருடம் என்று தமிழர் வாழ்வோடு ஒன்றி, ஒரு வாழிவாதாரப் பங்கு கொண்ட மரமாகத் திகழும் பனை ஒரு வரண் நில வளரியாகும். நன்றாக வளர்ந்த பனைமரம் 10-30 மிட்டர் உயரம் வரை இருக்கும். இது வேர் (root), அடிமரம் (trunk), ஓலைகளைக் கொண்ட முடி (crown) என மூன்று பகுதிகளைக் கொண்டது. வேர்ப் பகுதி நார் வகையானது, நிலத்தில் படர்ந்து வளரும், ஆணிவேர் இல்லை. அடிமரம் நீண்ட, கறுப்பு நிறமுடையது, உருண்டையானது. இதன் பருமன் மேல்நோக்கி குறைந்து கொண்டு போகும்.

முடிக்கு கிட்டவர இதன் பருமன் சீரானதாக இருக்கும். அடிமரத்தில், விழுந்த ஓலை மட்டைகளின் அடையாளங்கள் (scars)  கிடையான கோடுகளாக காணப்படும். பனைகள் கிளைகள் அற்றவை. ஆனாலும் கிளைகள் உள்ள மரங்களும் அரிதாக உண்டு. பனைமரத்தின் வட்டு என அழைக்கப்படும் முடிப்பகுதியின், நுனியில் 10-30 வரை விசிறி போன்ற ஓலைகளைக் கொண்டிருக்கும். ஓலைகளின் எண்ணிக்கை, மரத்தின் வளர்ச்சியையும், செழிப்பையும் பொறுத்தது. முடியின் மையப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு, விரியாத குருத்தோலைகள் இருக்கும். இவை மென்மஞ்சள் அல்லது பழுப்பு நிறமானவை.  நன்றாக விரிந்த ஓலைகள் தடிப்பானவை, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இவற்றின் இலைப்பரப்பு நீளப்பாட்டில் ஈக்குகளுடன் ஒட்டியபடி இருக்கும். ஓலைகள் மரத்துடன் பனம் மட்டை எனப்படும் தண்டுப்பகுதியுடன் ஒட்டிக்கொணடிருக்கும். பன மட்டைகள் நீண்டு, வளைந்தவை, மெல்லிய மஞ்சள் நிறமானவை. மேல்பக்கத்தில் குழியாகவும், கீழ்பக்கத்தில் குவிவாகவும் இருக்கும். கரைகள் வாள் போன்ற கறுப்பு நிறமுடைய கருக்குகளைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக பனம்மட்டையை கருக்கு மட்டை என்றும் கூறுவர். பனம் மட்டைகள் மரத்தின் வட்டுடன் ஒட்டியபடி இருக்கும். இப்படி ஒட்டும் பகுதிகள் Y உருவ அமைப்புடையவை. கங்கு மட்டையென அழைக்கப்படும் இவை பன்னாடை என்று அழைக்கப்படும் மெல்லிய வலை போன்ற அமைப்புக்களால் மரத்துடன் சேரக்கப்பட்டிருக்கும்.
பனைமரம் இருபூந்துணர்த் தாவரமாகும். அதாவது ஆண்மரமும், பெண்மரமும் வேறானவை. இரு மரங்களும் பூக்கும்போது பூம்பாளைகள் எனப்படும் பூந்துணர்களை உருவாக்குகின்றன. பூந்துணர்கள் தோன்றும் வரை இவற்றை ஆண், பெண் மரங்கள் என இனம் காண்பது கடினம். பனை மரத்தில் இரண்டு முக்கிய வகை மரங்கள் உள்ளன. ஒன்று கரிய நிறமுடைய பழங்களைத் தருவன, மற்றையது செம்மண்ணிற நிறத்தையுடைய பழங்களைக் கொண்டன.

மேலொட்டிகள்: பனைமரம் இதர மரங்களுக்கும் ஆதாரங்களாக உள்ளன. பனங்கத்தாளை எனப்படும் ஒரு வகை ஓர்க்கிட் பனை மரங்களில் மேலொட்டியாக வாழ்வதை நாம் பார்க்கக் கூடியதாகவுள்ளது. ஆலமரங்கள் அநேக சந்தர்ப்பங்களில் தமது வாழ்க்கையை பனை மரத்தில் மேலொட்டியாக ஆரம்பிக்கின்றன. பின் இவை வளரத் தொடங்க, கீழ் நோக்கி பனை மரத்தைச் சுற்றி வளர்ந்து, காலப்போக்கில் பனைமரத்தின் அடியை முற்றிலும் மூடும். இந்நிலையில் பாரப்பவர்களுக்கு பனை மரம் ஆலமரத்தின் நடுவிலிருந்து முளைத்ததாகத் தோன்றும்.

பனம் மரத்தின் ஆரம்ப வாழ்க்கை பனங்கொட்டை எனப் பொதுவாக அழைக்கப்படும் பனம் விதையிலிருந்து தொடங்கும். விதைகள் பனம்பழங்களில் தோன்றுபவை. மரத்திலிருந்து கனிந்த பனம்பழங்கள் நிலத்தில் விழுந்தபின் இவ்விதைகள் தானாகவே முளைக்கத்தொடங்கும். விதைகள் முளைத்து பனங்கிழங்கைத் தோற்றுவித்து அதன் உணவுச்சக்தியைப் பாவித்து வளரத்தொடங்கும். வளரும்போது உண்டாகும் முதல் இலை விரியாதது. இந்நிலையில் இதனை பீலி என்று அழைப்பர்.

வடலி: பனை மிகவும் மெதுவாக வளரும் ஒரு மரம். குறைந்த வயதுடைய சிறிய பனைமரத்தை வடலி என்று அழைப்பார்கள்.. வடலியில் ஓலைகளும் அவற்றின் மட்டைகளும் மரத்தில் ஒட்டியபடி இருப்பதை எப்போதும் காணலாம். வடலி வளர்ந்து முற்றாக பயன் தர 15-20 வருடம் வரை செல்லும்.

பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் பிரயோசனத்திற்குரியது. உணவு, மரத்தேவை, பானம், விறகு, விளையாட்டுப்பொருட்கள் உட்பட பிரயோசனங்களை பட்டியல் போடலாம். இதன் காரணமாக பனை ஒரு கற்பகதரு அல்லது கற்பகவிருட்சம் என அழைக்கப்படுகிறது. பனைமரத்தின் உபயோகங்களை நுனியிலிருந்து அடிமரம் வரை பார்ப்போம்.

1. குருத்து
பனைமரத்தை, அதனது மரத்தேவைக்காக அல்லது நிலங்கள் தேவைப்படும் போது வெட்டி வீழ்த்துவார்கள். சிலசமயம் பலத்த காற்றோடு கூடிய மழைக் காலங்களில் அல்லது சூறாவளிகளின் போது பன மரங்கள் பாறி விழுவதுண்டு. அப்படியான சமயங்களில் மரத்தின் முடிப்பகுதியைப் பிளந்து அதன் நடுவில் இருக்கும் இளம் குருத்துப் பகுதியை வெளி மட்டைகளிலிருந்து பிரித்து எடுப்பார்கள். இந்த இளம் குருத்து விருத்தியடையாத குருத்தோலைகளையும் மட்டைகளையும் கொண்டிருக்கும். இது வெள்ளை நிறமுடையதும் மென்மையானதாகவும், இனிமையாகவும் இருக்கும். பலர் இதனை விரும்பிச் சாப்பிடுவர்.

2. குருத்தோலை
பனைமரத்தின் முடியின் நடுவிலுள்ள இளம், விரியாத நிலையில் உள்ள ஓலை குருத்தோலை எனப்படும். இது மெல்லிய மஞ்சள் நிறமுடையது. இதனை வெட்டி வெய்யிலில் காயவைத்து ஈக்கிலை நீக்கியபின் கடினமாக வரும் பகுதியை பல பாவனைகளுக்கு உபயோகிக்கலாம்.

2.1 ஏடு
காய வைத்து எடுக்கப்பட்ட குருத்தோலைகளை சிறு துண்டங்களாக வெட்டி ஏட்டுச்சுவடிகளாக முந்தைய காலங்களில பாவித்திருக்கிறார்கள். இவற்றில் பலருடைய ஜாதகக் குறிப்புகள், காண்டங்கள் என்பன எழுதப்பட்டுள்ளன. இன்றும் கூட சிறு பிள்ளைகளுக்கு அரிச்சுவடியை அறிமுகப் படுத்துவதற்கு ஏடு தொடக்கல் என்ற முறையை பின்பற்றுகிறார்கள். அப்போது கொத்து என அழைக்கப்படும் ஒரு மரப்பாத்திரத்தில் நெல்லை நிரப்பி ஒரு பனை ஓலைத்துண்டை கம்பியில் குத்தி வைப்பார்கள்.

2.2 கைப்பணிப்பொருட்கள்
காயவைக்கப்பட்ட குருத்து ஓலைகளை ஈக்கிலிருந்து பிரித்தெடுத்து மெல்லிய நார்களாக வெட்டிப் பின்னி பனம் ஓலைப் பெட்டிகள், பனங்கட்டிக் குட்டான்கள், நீற்றுப்பெட்டி, பாய்கள் போன்றவை செய்வதற்கு பாவிப்பர். கைப்பைகள், தொப்பிகள் போன்றவையும், காற்றாடி உட்பட பல வகையான விளையாட்டுப் பொருட்களும் தற்போது நவீன முறையில் செய்யப்படுகின்றன. சில சமயம் இவ்வோலைகளை பச்சை, நீலம், சிவப்பு போன்ற நிறங்களால் சாயமூட்டுவார்கள். சாயமூட்டப்பட்ட ஓலைகள் சாயவோலை எனப்படும். இவையையும் பாவித்து அலங்காரமாக செய்யப்படும் பொருட்கள் அழகாகவிருக்கும். பனம்பெட்டிகள் அரிசி, பருப்பு போன்றவைகளை கொண்டு செல்வதற்கும், சேமிப்பதற்கும், பனங்கட்டிக்குட்டான்கள் வெவ்வேறு அளவுகளில் செய்யப்பட்டு பனங்கட்டிகளைப் போடுவதற்கும், நீற்றுப்பெட்டி பிட்டு, மா போன்றவற்றை அவிப்பதற்கும், பாய்கள் பந்திகளில் சாப்பிடுவதற்கு விரிப்பதற்கும், படுப்பதற்கும், புகையிலை, கருவாடு  போன்றவற்றை சுருட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் பாவிக்கப்படுகின்றன. முன்பு பனம் ஓலையினால் செய்யப்பட்ட குடை, உமல், பறி என்ற பைகளும், மடிப்பெட்டி என அழைக்கப்பட்ட purse ம் இப்போது பாவனையில் அதிகம் இல்லை.

பனம் ஓலைகளும், ஈக்கில்களும் கடற் தொழிலாளர்களால் இறால், மீன், கணவாய் போன்றவைகளை சேர்த்துப் பிடிக்க உதவுகின்றன.

3. பச்சை ஓலை
பனை மரத்தின் முடியிலுள்ள முக்கிய பகுதி பச்சை ஓலைகள். இவை பல பயன்களையுடையவை.

3.1 கொள்கலன்கள்
பச்சை ஓலைகளை பனம்மட்டையிலிருந்து வெட்டியெடுத்து, மடித்து கொள்கலங்களாகச் செய்து மீன், இறைச்சி போன்றவற்றை கொண்டு செல்வதற்கு பயன்படுத்துவர். மேலும் இவ்வோலைகள் பிளா, தட்டுவம் என அழைக்கப்படும் பாத்திரங்களை செய்வதற்கும் உதவும். இவை கள்ளு, கஞ்சி போன்றவை குடிப்பதற்கும் தண்ணீர் மெள்ளுவதற்கும் உபயோகமானவை.

3.2 கூரை, வேலி
பச்சைஓலைகளை பனம் மட்டையுடன் வெட்டி வெய்யிலில் வாடவிட்டு ஒன்றன்மேல் ஒன்றாக நீளவாட்டில் அடுக்கி தட்டையாக்குவர். இவ்வாறு தட்டையாக்கப்பட்ட ஓலைகளிலிருந்து பனம் மட்டைகள் வெட்டப்பட்டு வீட்டுக் கூரைகளுக்கும், பனமட்டையுடன் கூடிய ஓலைகள், வேலிகள் அடைப்பதற்கும் பாவிக்கப்படும். ஓலைகளை சிலசமயம் தட்டி எனப்படும் மறைப்புகளை செய்வதற்கும் பாவிப்பர்.

3.3 கால்நடையுணவு
பச்சை ஓலைகளிலிருந்து ஓலைப்பகுதியை ஈக்கிலிருந்து நீக்கி, மெல்லிய வார்களாக அரிந்து மாடுகளுக்கு உணவாக பயன் படுத்துவர். இவ்வாறு ஓலை கிழித்து எடுக்கப் பட்டபின் மட்டை உட்பட மிஞ்சிய ஈக்குடன் கூடிய பகுதி மூரிமட்டை என அழைக்கப்பட்டு வேலிகளுக்குப் பயன்படும். சில சமயம் ஈக்குகள் எதுவுமில்லாமல் பனம் மட்டைகள் மட்டும் வேலிகளுக்கு பாவிக்கப்படும்.

3.4 உரம்
பச்சை ஓலைகள் தோட்டங்களுக்கு உரமாகவும் உபயோகமுள்ளன. குறிப்பாக மண் பரப்பான நிலங்களுக்கு இவைகள் தாழ்க்கப்படும்போது இவை உரமாவது மட்டுமல்லாமல் நீரை தேக்கி, பயிர்களை வளர்ச்சியடையவும் வைக்கின்றன.

3.5 எரிபொருள்
வேலிகளுக்கும், கூரைகளுக்கும் பாவிக்கப்படும் ஓலைகள், மட்டைகள் என்பன சிறிது காலத்திற்கு பிறகு உக்கத் தொடங்கும். இதனால் இவற்றை புது ஓலைகளினால் மாற்றவேண்டும். இவ்வாறு மாற்றும் போது பழைய ஓலைகள் எரி பொருளாக உபயோகிக்கப்படுகின்றன.

4. பனம் ஈக்கு
பனை ஓலைப்பெட்டிகளின் விளிம்புகளை பலப்படுத்த ஈக்குகளைப் பாவிப்பர். பனம் ஈக்கிலிலிருந்து கூடைகள், தூரிகைகள் என்பன செய்யப்படுகின்றன. வெங்காயங்களை பழுதுபடாமல் தூர இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு பனம் ஈக்கினால் பின்னப்பட்ட காற்றோட்டமுடைய வெங்காய கூடைகள் இன்னும் பாவனையில் உள்ளன.

5. காவோலை
பனை ஓலைகள் முதிர்ச்சியடைய காய்ந்து, கபிலநிறமாக மாறி முடியிலிருந்து தொங்கி கொண்டிருக்கும். இவை காற்று வீசும்போது ஆடி மரத்தோடு உரசும் ஒலி கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும். காவோலை என அழைக்கப்படும் இவ்வோலைகள் நன்றாக காய்ந்தபின் மரத்திலிருந்து தானாக விழும். இவ்வோலைகளை எரிபோருளாகவும் பச்சை ஓலைகளைப் போலவே, மணல் தன்மை கூடிய தோட்ட மண்ணுக்கு இவைகளைத் தாழ்ப்பதன் மூலம் அவை உக்கி உரமாவதோடு நீரையும் தேக்கி வைக்கும்.

6. பனம் மட்டை
பனம்மட்டை வலிந்த நார்களைக் கொண்டது. கருக்கு நீக்கப்பட்டபின் நார்களைத் தனிப்படுத்தி வலிமையான பொருட்களான கடகம், பட்டை, சுளகு, போன்றவை செய்யப்படுகின்றன. இவ்வகை கொள்கலன்கள் மேலும் பலமாக இருப்பதற்காக அவற்றின் விளிம்புகள் தடித்த நார்களால் செய்யப்பட்டிருக்கும். கடகம் கல், மண் போன்ற பாரமான பொருட்ளை கொண்டு செல்வதற்கு உகந்தது. சுளகு அரிசி, நெல் போன்றவற்றை புடைப்பதற்கு பிரயோசனமானது. பட்டை அகலமானது, கீழ்ப்பகுதி எண்கோண வடிவுள்ள முனைகளைக் கொண்டது. கிணற்றிலிருந்து தண்ணீரை அள்ளி பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு பாவிக்கப்படும். தற்போது நீரிறைக்கும் இயந்திரங்கள் இருப்பதால் பட்டைகளின் பாவனை அற்றுப் போய்விட்டது எனச் சொல்லலாம்..
   
உறி, திருகணை, இடியப்பத்தட்டு, கயிறு போன்றவை செய்வதற்கும் பனம் மட்டையிலிருந்து பெறப்படும் நார்கள் பிரயோசனமானவை. வடலி போன்ற சிறிய பனைகளிலிருந்து மட்டையுடன் பெற்ற சிறிய, இளம் ஓலைகளப் பாவித்து பனை விசிறிகள் செய்யப்படுகின்றன.
 
பனை மரமேறிகள் பனம் நாரை கால் பாதங்களில் வட்டமாகக் கோர்த்து பனை மரமேறுவதற்கு உபயோகிப்பார்கள். விளக்கீடு சமயங்களில் பனம் நார் தடிகள் தீப்பந்தம் செய்வதற்கு உகந்தன.

7. கங்கு மட்டை
பனம்மட்டையின் மரத்தோடு சேர்ந்திருக்கும் கங்கு மட்டை எனப்படும் பகுதி மிகவும் வலிமையான சிராம்பு போன்ற நார்களைக் கொண்டது. இந்நார்கள் கடுமையான நிலங்களை துப்பரவாக்கக் கூடிய பனந்தும்புத்தடிகள், துடைப்பங்கள என்பனவற்றிற்கும், கயிறு என்பன செய்வதற்கும் உபயோகமானவை.

கங்கு மட்டை ஒரு நல்ல எரிபொருள்.  இவற்றை சேகரித்து வீட்டில் மழை படாத ஒரு பகுதியில் தூக்கி கட்டி விடுவார்கள். இவை மழைகாலங்களில் அடுப்பெரிப்பதற்து மிகவும் பிரயோசனமானவை.

8. பன்னாடை
கங்குமட்டையை பனைமரத்துடன் ஒட்டவைத்திருக்கும் வலை போன்ற பன்னாடை சிலசமயம் கள்ளு வடிப்பதற்கு வடியாக உபயோகிக்கப்படும். அத்துடன் பன்னாடை அடுப்பை மூட்டுவதற்கு சிறந்த எரிபொருள்.

9. பாளைகள்
ஆண், பெண் இரண்டு பனைகளிலும் பூக்கள் பாளைகளில் தோன்றுகின்றன. இவை இவற்றின் பயன்கள் முடிந்தபின் காய்ந்து மரத்திலிருந்து விழும். இவ்வாறு பெறப்படும் காய்ந்த பாளைகளும் எரிபொருளாக பயன்படுகின்றன.

10. பதநீர்
ஆண், பெண் இருவகையான மரங்களிலிருந்தும் அவற்றின் பூந்துணரான பூம்பாளைகளிலிருந்து பதநீர், கள்ளு போன்ற பானங்கள் பெறப்படுகின்றன. ஆண் பனையிலிருந்து அரிபனை, வள்ளுபனை முறைகளிலும், பெண்பனையிலிருந்து தட்டுபனை, காய்வெட்டி முறைகளிலும் பாளைகள் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டு மென்மையாக தட்டப்படும். இப்படித் தட்டும்போது அவற்றின் திசுக்கள் சிதைபடும். இதனால் அவற்றிலிருந்து சாறு வெளியேறும். வெட்டப்பட்ட பாளைகளின் நுனியில் பானை போன்ற முட்டிகளைக் கட்டிவிடுவார்கள். இவற்றில் வெளியேறும் திரவம் சேகரிக்கப்படும். இத்திரவம் மெல்லிய வெள்ளை நிறமுடையது, இனிமையானது. இதுவே பதநீர் அல்லது கருப்பணி என அழைக்கப்படும் திரவம். முட்டியின் உட்பகுதியில் சுண்ணாம்பை பூசி வைப்பார்கள். இது பதநீர் கள்ளாக நொதித்து மாறுவதை தடுக்கும். சுண்ணாம்பைத் தவிர Acronuchia pendunculata, Vateria capillata  என்ற மரங்களின் பட்டைகளும் நொதித்தலைத் தடுக்கும் ஆற்றலையுடையவை.

பதநீர் அதிக அளவில் சீனித்தன்மை கொண்டதினால் ஒரு சுவையான பானமாகவுள்ளது. கருப்பநீரில் 12-16% சீனித்தன்மை உள்ளதெனவும், அதில் சுக்கிரோசு வெல்லம் 11% எனவும் அதைத்தவிர குளுக்கோசு, பிரக்ரோசு, புரதம் என்பனவும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தவிர பதநீர் அதிகளவில் பொட்டாசியம், கல்சியம், போஸ்பரஸ், மக்நீசியம் போன்ற கனிப்பொருட்களையும் கொண்டுள்ளது. மேலும் பல முக்கியமான அமினோ அமிலங்களும், உயிர்ச்சத்துக்களான அஸ்கோபிக் அமிலம் (vitamin C) பன்ரோதீனிக் அமிலம் (vitamin B5), ரைபோபிளேவின் (vitamin B1) என்பனவும் இதில் உண்டு.

பதநீர் ஒரு குளிர்மையான பானம் என்றமைவதால் சிலசமயம் பொக்குளிப்பான், சின்னமுத்து போன்ற நோயை உடையவர்களுக்கு நோய்த்தன்மையை குறைப்பதற்கு கொடுக்கப் படுகின்றது. சருமவியாதிகளான தோல்நேய், அக்கி போன்றவற்றிற்கும் பதநீர் நல்லது. பதநீரில் குரோமியம் போன்ற கனிப்பொருள் இருப்பதால் நீரிழிவுள்ளவர்களின் இரத்த அளவை இது குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

11. சர்க்கரைப் பெருட்கள்
பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீரை காய்ச்சி அதனிலிருந்து நீரை அகற்றி பனஞ்சீனி, கல்லக்காரம், பனங்கட்டி, கருப்பட்டி போன்ற இனிப்புடைய பதார்த்தங்கள் பெறப்படுகின்றன. பனங்கட்டியில் 70% சுக்கிரோசு வெல்லம் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பனங்கட்டிகள் வேவ்வேறு அளவிலான பனங்கட்டி குட்டான்களில் அடைக்கப்படுகின்றன. கோவில் திருவிழாக் காலங்களில் கடலை, கச்சான் போன்றவற்றுடன் சிறிய பனங்கட்டிக் குட்டான்களும் விற்கப்படுவதுண்டு.

தற்போது பனந்தேன், பனம்பாணி என்பன பதநீரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பனை வெல்லம், சில்லுக்கருப்பட்டி, பனங்கற்கண்டு, chocolate, ginger toffee என்பனவும் உற்பத்தி செய்யப் படுகின்றன. பதநீரை அரிசி, பயறு என்பனவற்றுடன் சேர்த்துக் காய்ச்சி கருப்பணிக்கஞ்சி செய்வதும் உண்டு.

12. கள்ளு
முட்டியின் உட்பகுதியில் சுண்ணாம்பை பூசாமல் விட்டால் பதநீரை காற்றிலுள்ள மதுவங்கள் (yeasts) போன்ற நுண்ணங்கிகள் நொதித்து (fermentation) அதனை வெள்ளை நிறமுடைய பனங்கள் அல்லது கள்ளு என்னும் பதார்த்தமாக மாற்றும். கள்ளு 5-6 வீதம் மது (ethyl alcohol) வைக்கொண்டிருக்கும். இது பலரால் விரும்பிப் பருகப்படும் ஒரு பானம்.

பனங்கள்ளு வேறு பாவனைகளுக்கும் உபயோகமானது. அப்பம் போன்ற உணவுப்பண்டங்களை புளிக்க வெப்பதற்கு சிறிது கள்ளை சேர்ப்பார்கள். இதிலுள்ள மதுவங்களின் தொழிற்பாட்டால் நொதித்தலின் போது தோற்றுவிக்கப்படும் காபனீரொட்சைட் என்னும் வாயு அப்பத்தை பொங்க வைக்கும். உடம்பில் புண்களால் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் கள்ளு உதவுகின்றது. வறுத்த பிஸ்கோத்தை கள்ளில் ஊறவிட்டு புண்ணை மூடி கட்டினால் osmosis மூலம் வீக்கத்திலுள்ள நீர் வெளியேறி வீக்கம் குறையும். பனங்கள் நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்திலுள்ள வெல்லத்தின் அளவையும் கட்டுப்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

13. வினாகிரி
கள்ளை முற்றாக நொதிக்க வைத்தால் அது அமிலமாகி (acetic acid)  புளித்த கள்ளாக மாறும். இதிலிருந்து வினாகிரி தயாரிக்கலாம். வினாகிரி, இறைச்சி வகைகளை மென்மையாக்குவதற்கு பாவிக்கப்படும். கள்ளு முட்டிகளின் அடியில் இறந்த மதுவங்களும், மிச்சமுள்ள பொருட்களும் சேர்ந்து மண்டி எனப்படும் அடைசலைத் தோற்றுவிக்கும்.

14. பனஞ்சாராயம்
கள்ளை வடிகட்டி தூர்மையாக்கி பனஞ்சாராயம் பெறலாம். பனஞ் சாராயத்தின் மணத்திற்கு அது கொண்டுள்ள ethyl acetate எனப்படும் இரசாயனப் பதார்த்தம் காரணம். சிலர் கள்ளுடன் பல வகையான உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களைச் சேர்த்துக் காய்ச்சுவர். இது கசிப்பு எனப்படும். இது நல்ல பானமல்ல.

15. நுங்கு
பெண் பனையின் பாளையிலிருந்து உண்டாகும் இளம் பனங்காய்கள் கொத்தாக குலைகளில் தோன்றும். இவை சில குறித்த மாதங்களிலேயே தோன்றத் தொடங்கும். இக்காய்கள் பொதுவாக மூன்று கண்கள், என அழைக்கப்படும் குழிகளைக் கொண்டிருக்கும். சில இரண்டு கண்களையும் இன்னும் சில ஒரு கண்ணையும் உடையவை. இவற்றில் ஜெலி போன்ற திரவப்பதார்த்தம் உண்டு. இது நுங்கு அல்லது நொங்கு என்று அழைக்கப்படும். இது சுவைப்பதற்கு ருசியானது. காயை வெட்டி நுங்கை உறிஞ்சிக் குடிப்பார்கள். நுங்கின் மேல்பகுதியில் மூன்று, கோது போன்ற செவியமைப்பையுடைய அமைப்புக்கள் உண்டு. இவை பணிவில் அல்லது பணுவில் என அழைக்கப்படும். நுங்கை குடிப்பதற்கு சிலர் இதனைப் பாவிப்பர். பணிவிலைப் பாவித்து சிலர் கஞ்சி, கூழ் போன்றவற்றையும் குடிப்பது உண்டு.

நுங்கு 10-11% வெல்லத்தையும், 2% புரதத்தையும், கொண்டுள்ளது. காயை நுங்குக்காக வெட்டியபின் சிறிது நேரத்தில் வெட்டிய மேற்பரப்பு மண்ணிறமாக மாறும். இதற்கு காரணம் இதிலுள்ள polyphenols  என்னும் பதார்த்தங்கள் காற்றிலுள்ள ஒக்சிஜனினால் ஒக்சியேற்றப்பட்டு மண்ணிறமான quinone என்னும் பதார்த்தங்களை தோற்றுவிப்பதினால். நுங்கு சாப்பிட்டபின் மிகுதியாக இருக்கும் பகுதி கோம்பை என அழைக்கப்படும். இதனை சிறு துண்டுகளாக வெட்டி மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்.

காய் முதிர்ச்சி அடைய அடைய நுங்கு நீர்த்தன்மையை இழந்து கெட்டியானதாக மாறும். இந்நிலையில் காய்களை சீக்காய் என அழைப்பார்கள். சீக்காய் சாப்பிடக்கூடியது அல்ல என்றாலும் சிலர் இது முற்றாக வைரமாகுமுன் சீவிச் சாப்பிடுவதுமுண்டு. இவை விருத்தியடைந்து பனம்பழமாகவும் நுங்கு இருந்த பகுதி பனம் விதையாகவும் மாறும்.

15. பனம்பழம்
ஒவ்வொரு பனம்பழத்திலும் பொதுவாக பனம்விதைகள் மூன்று காணப்படும். சிலவேளை இரண்டு விதைகளுடனும் அல்லது ஒரு விதையுடனும் பனம் பழங்கள் காய்ப்பதுண்டு. சிலர் பனம்பழத்தைச் சூப்பி சாப்பிடுவதுண்டு. பனம் பழத்தை அடுப்பில் சுட்டுச் சாப்பிடுவதும் உண்டு. பனம்பழங்களை மாடுகளும் விரும்பிச் சூப்பிச் சாப்பிடும்.
 
பனம்பழத்தின் தோல் கருமை நிறமுடையதும் நார்த்தன்மை கொண்டதுமாகும். இதன் உள்ளே மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுடைய மிகவும் நார்த்தன்மை கொண்ட பழக்கூழ் உள்ளது. பனம்பழத்தின் இந்நிறங்களுக்கு carotene, lycopene எனப்படும் நிறப் பொருள்கள் காரணம். பனங்கூழைப் பிழிந்து பனங்களி எடுப்பார்கள். பனங்களி சத்துள்ளது. இதில் வெல்லம் 14-16%, புரதம் 4% மற்றும் கரட்டின், உயிர்ச்சத்து A,  C, E என்பவை உள்ளன. உயிர்ச்சத்து A கண்களுக்கு நல்லது. உயிர்ச்சத்து C ம், E ம் சிறந்த ஒக்சியேற்ற எதிரிகள் ; (antioxidants). எமது உடம்பில் அனுசேப தாக்கங்கள் காரணமாக பல free radicals  என்னும் பதார்த்தங்கள் தோன்றுகின்றன. இவை எமது உடம்பிலுள்ள கலங்களை அழிக்க வல்லன. ஒக்சியேற்ற எதிரிகள் இந்த free radicals இன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும். அத்துடன் இவை இரத்தத்திலுள்ள கொலஸ்ரரோலயும் குறைக்க வல்லன.

பனங்களி உவர்ப்பு கலந்த இனிமையைக் கொண்டது. இதன் உவர்ப்புத் தன்மைக்கு flabelliferins என்னும் இராசயானப் பதார்த்தங்கள் காரணமாகும். இவை நுண்ணுயிர் கொல்லித் தன்மை கொண்டவையென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

16. பனம்பழப் பொருட்கள்
பனங்களியிலிருந்து தயாரிக்கப்படும் பனங்காய்ப் பணியாரம் பலருக்கு விருப்பமான, சுவையான சிற்றுண்டி. பனம்பழத்திலிருந்து பனம்பாணி, பனம்ஜாம், palmyrah cordial, palmyrah crush போன்ற பொருட்களும் தற்போது தயாரிக்கப் படுகின்றன.

பனங்களியைப் பாயில் ஊற்றி, வெயிலில் காயவைத்து அதனிலிருந்து பனாட்டு என்னும் பதார்த்தத்தைப் பெறுவார்கள். சில சமயம் இதனைப் புகை போட்டு வைத்தால் நீண்டகாலம் வைத்து பாவித்து உண்ணலாம். பனாட்டை தேனில் தோய்த்து காயவைத்து பாணிப்பனாட்டு தயாரிக்கப் படுகின்றது. தற்போது palmyrah nectar எனப்படும் பனம்குளிர்பானம் பனங்களியிலிருந்து தயாரிக்கப் படுகின்றது. பனம் ஐஸ்கிறீம், பனம் biscuits, chocolates, fruit bars என்பனவும் தற்போது செய்யப்படுகின்றன.

பனம்பழத்தில் saponins என்னும் பொருட்கள் உள்ளன. இவை நுரைக்கும் சக்தியைக் கொண்டன. இதனால் பனங்களியைப் பாவித்து உடுப்புகள் தோய்த்ததும் உண்டு. பனங்களியின் இந்த குணாதிசயத்தைப் பாவித்து shampoo, சவர்க்காரம் போன்றவை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பனங் களியில் அதிகளவு pectin உள்ளது. இதனைப் பிரித்தெடுத்து ஐஸ்கிறீம், soup போன்ற உணவுப்பண்டங்களுக்கு ஒரு தடிப்பாக்கியாக (thickner) பாவிக்கலாம்.  

17. பனம் விதை
பனம் விதை ஓரளவிற்கு நீள் வட்டமானது, ஆனால் தட்டையானது. விதையின் மேற்பரப்பு முழுவதும் மென்மையான நார்களால் சூழப்பட்டிருக்கும். இந் நார்கள் மெத்தைகள், வாசல் பாய்கள் போன்றவை செய்வதற்கு உகந்தன. பனம் விதையை எரிபொருளாகவும் பாவிக்கலாம்.

18. பூரான்
சிலர், பனங்கொட்டைகளை அவை முளைக்குமுன் சேகரித்து அவற்றை இரண்டாகப் பிளப்பார்கள். இவற்றின் உள்ளே சாம்பல் நிறமுடைய பகுதியிருக்கும். இதன் நடுவில் வெள்ளை நிறமான, மென்மையான விதையின் முளையத்தைக் (embryo)  கொண்ட பகுதி  இருக்கும். இது பூரான் எனப்படும். இது மிகச் சுவையானது, பலரால் விரும்பி உண்ணப்படுவது. பூரான் முளைக்கும் பனை விதைக்கு உணவாகப் பயன்படுவது. பனம் விதைகள் முளைத்து பனங்கிழங்குகள் தோன்றியபின் இப்பூரானின் சத்துக் குறைந்து, சுருங்கி, நீர்த்தன்மையாக மாறும். இந்நிலையில் இதனை சீத்தல், சிதவல் அல்லது சீந்தல் என அழைப்பர்.  

19. பனங்கிழங்கு
பனம்மரத்திலிருந்து தானாக கனிந்து விழுந்த விதைகள் நாளடைவில் முளைத்து பனங்கிழங்குகளைத் தோற்றுவிக்கும். இதைத்தவிர, பனம் விதைகள் சேகரிக்கப்பட்டு நிலத்தில் படைபடையாக அடுக்கப்பட்டு மண்ணால் மூடப்படும். இது பனம்பாத்தி எனப்படும். மூன்று, நாலு மாதங்களில் விதைகள் முளைத்து அவற்றிலிருந்து பனங்கிழங்குகள் தோன்றும். பனங்கிழங்கு பனைமரத்தின் வேர்ப்பகுதியல்ல. இது உண்மையில், முளைத்த விதையிலிருந்து உண்டான முதல் இலையின் இலை மடலாகும். இது பருத்து அதிகளவில் மாச்சத்தைக் (starch) கொண்டிருக்கும். அத்துடன் அதிகளவில் நார்களைக் கொண்டவை. இவற்றின் தோல் கடற்பஞ்சு போல் மென்மையாக இருக்கும். இவற்றை தோலை நீக்கியபின், நீரில் அவித்து இரண்டாகப் பிளந்து, நார்களை நீக்கிச் சாப்பிடுவார்கள். சிலர் பனங்கிழங்கை உப்பு, வெங்காயம், மிளகு என்பனவற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவதுமுண்டு.  பனங்கிழங்கு அதிக நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால் உடம்பிற்குத் தேவையான நார்ச்சத்தைக் கொடுப்பதோடு ஒரு நல்ல மலம் இளக்கியாகவும். தொழில் படும். மேலும் வயிற்றுளைவு, நெஞ்சு நோய் போன்ற பல நோய்களுக்கு அருமருந்தாகவும் உள்ளது. பனங்கிழங்கைச் சாப்பிட்டு பலர் நீண்டகாலம் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.  

20. ஒடியல்
முதிர்ந்த பனங்கிழங்கின் தோலை நீக்கியபின் அவற்றைப் பிளந்து வெய்யிலில் காயவைப்பார்கள். இது காய்ந்து கடினமாக மாறும். இது ஒடியல் எனப்படும். ஒடியலை அரைத்து பெறப்படும் மா ஒடியல் மா எனப்படும்.  ஒடியல் மாவில் 82% காபோவைதரேற், 3% புரதம், அத்துடன் கல்சியம், பொற்றாசியம் என்பன இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஒடியல் மாவை சிலசமயம் முருங்கை இலையுடன் சேர்த்து ஒடியல்புட்டு செய்வார்கள்;. ஒடியல் மாவின் முக்கிய பாவனை ஒடியல் கூழ் தயாரிப்பு. ஒடியல் கூழ் செய்யமுன் ஒடியல் மாவை நீரில் கரைத்து பல முறை கழுவி, கழுவிய நீரை வெளியே ஊற்றுவார்கள். இது ஒடியலிலுள்ள கசப்பத் தன்மையைக் குறைக்கும். பல வகையான சைவ, மாமிச ஒடியல் கூழ்கள் தயாரிக்கப் படுகின்றன. ஒடியல் மாவை வேறு மா வகைகளுடன் சேர்த்து தோசை, இட்டலி, இடியப்பம், பாண் என்பனவும் செய்ய முயற்சிக்கப்படுகின்றது.

21. புளுக்கொடியல்
பனங்கிழங்கை அவித்து காய வைத்தபின் அது புளுக்கொடியல் எனப்படும். இது ஒடியலிலும் பார்க்க வைரமானது. இதனை நேரடியாகவே சாப்பிடலாம் அல்லது புளுக்கொடியல் மாவாக்கி சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம். புளுக்கொடியலை உரலில் இடித்து தேங்காய்ப்பூ, சர்க்கரையுடன் சேர்த்து பெறப்படும் துவையல் மிக ருசியானது. புளுக்கொடியலை தேங்காய் சொட்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு. சில சமயம் பனங்கிழங்கை சிறிய சில்லுகளாக வெட்டிக் காய வைத்து புளுக்கொடியல் சில்லுகள் செய்வர்.

22. ஊமல் கொட்டை
பனங்கிழங்கை நீக்கியபின் மிஞ்சி இருக்கும் பனம்விதை ஊமல் கொட்டை எனப்படும். இதனுடைய சுவர்கள் lignin என்னும் தடித்த, வைரமான பதார்த்தினாலானவை. இதனால் இது ஒரு சிறந்த எரிபொருளாகப் பாவிக்கப் படுகின்றது. ஊமல் கொட்டையிலிருந்து பனங்கரியும் (charcoal) தயாரிக்கலாம்.

23. அடிமரம்
பனைமரத்தின் அடிமரப்பகுதி மிகவும் வைரமானது. நீன்ட காலம் பாவிக்கக்கூடியது. இதில் உள்ள இரசாயனப் பொருட்கள் பங்கசுக்களால் தோற்றுவிக்கப்படும் உக்கலையும், பூச்சி அரித்தலையும் தடுக்கும் வல்லமை உள்ளன. இதன் காரணமாக, வைரமான மரம் பல வீட்டு, கட்டிட வேலைகளுக்கு பரவலாக பாவிக்கப்படுகின்றது. இதனுடைய வைரத்தின் தடிப்பு மேல்நோக்கி குறைந்து கொண்டு போகும். சிலர் வைரமுடைய அடிமரத்தை நீள்பாகமாக இரண்டு பகுதியாக பிளந்து உள்ளேயுள்ள மென்மையான பகுதியை நீக்குவர். இதன்பின் இரண்டு பகுதியையும் ஒன்றாக்கி கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க பாவிக்கப்படும் துலா செய்வதற்கு உபயோகிப்பார்கள். தற்போது துலாவின் பாவனை குறைந்து கொண்டு வருகின்றது.

வைரத்தின் தடிப்பு குறைந்த மரப்பகுதி அவற்றின் தடிப்பைப் பொறுத்து தீராந்தி, வளை, துலாவின் அச்சு, மாட்டு வண்டிலின் பார் சட்டம் போன்றவை செய்ய பாவிக்கப்படும். இன்னும் வைரம் குறைந்த மரம் சிலாகை செய்ய பாவிக்கப்படும். இவ்வாறான மரங்கள் மண், கல் வீட்டுக்கூரைகளில் அதிகளவில் பாவிக்கப்படுகின்றன. இவ்வாறாக பாவிக்கப்படும் மரங்கள் 100 வருடம் வரை இருக்கும் எனச் சொல்லப்படுகின்றது.

விழாக்காலங்களிலும், திருமணம் போன்ற வைபவங்களின் போதும் பந்தல்கள் போட பனம் வளைகளும், சிலாகைகளும் பெருமளவில் உதவுகின்றன.
 
வைர மரத்திலிருந்து ஏணி, விளையாட்டுப் பொருட்கள், மரச் செதுக்கல்கள், சிற்பங்கள், குவளைகள், உணவுத்தட்டுகள், பென்சில்கள், வளையல்கள் போன்ற பல விதமான பொருட்கள் தற்போது தயாரிக்கப்படுகின்றன.

24. சோத்தி
பனை மரத்தின் வைரமாகாத உட்பகுதி வெள்ளையாகவும் மென்மையாகவும் இருக்கும். இது சோத்தி எனப்படும். ஒரு காலத்தில் இப்பகுதியை மக்கள் உணவாக சாப்பிட்டதாகவும் கதைகள் உண்டு. சிலர் இவற்றை காயவைத்து எரிபொருளாக பாவிப்பர்.

பனமரத்தின் வைரம் குறைந்த மேல் மரப்பகுதி மரக்குற்றியாக வெட்டப்பட்டு தூண்களாகவும், பாலங்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதே வகையான குற்றிகளைப் பிளந்து சோத்தியை நீக்கி நீர்த் தொட்டி போல் செய்து, நீரை நிறைத்து மாடுகள் நீர் குடிப்பதற்கு உபயோகித்ததுண்டு. இவை பனம் கொட்டு எனப்படும். சிலர் இவ்வாறு சோத்தி நீக்கப்பட்ட நீள் மரத்துண்டுகளை பீலிகளாகப் பாவித்து நீர் பாய்ச்சுவதற்கும் உபயோகித்திருக்கின்றார்கள். பனைமரத்தின் வைரத்தை கட்டுமானப் பொருட்கள் செய்யும்போது அவற்றின் பட்டையை செதுக்கி நீக்குவார்கள். சிராய் என அழைக்கப்படும். இவை சிறந்த எரிபொருள். வெட்டிய பனைமரத்தின் அடிப்பகுதியை (stump)  சிலர் அதன் நடுவிலுள்ள மென்மையான பகுதியை நீக்கி குண்டாளம் போல் செய்வார்கள். பின் இதனுள் சுண்ணாம்புச் சிப்பிகளைப் போட்டு சுண்ணாம்புக் கொப்பரைகளாகப் பாவிப்பார்கள். சில சமயம் இந்த அடிப்பகுதி வெட்டிப் பிளக்கப்பட்டு எரிபொருளாகவும் பாவிக்கப்படும்.

25. பனம்வேர்
பனை மரத்தின் வேர் கருமையானது, பென்சில் அளவு தடிப்புடையது. வெட்டிய மரங்களிலிருந்து சிலர் இவற்றை எடுத்து எரிபொருளாகப் பாவிப்பர். பனம்வேரையும் மருந்து மூலிகையாகப் பயன்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு பனை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித குலத்திற்கு உணவாகவும், இன்னபிற தேவைகளுக்காகவும் பயன்படுகின்றது. தேவையற்றது என்றோ, வீணானது என்றோ வீசி எறிவதற்கு பனை மரத்தில் ஒன்றுமேயில்லை. பனை மரத்தைப் போல எல்லா விதத்திலும் பிரயோசனமான மரம் வேறெதுவுமில்லை. அது ஒரு கற்பகத்தரு.

பனை மரம் இவ்வளவு உபயோகங்களைக் கொண்டிருந்தாலும் இன்னும் இதன் பாவனைகள் முழுமையாக உபயோகிக்கப்படவில்லை என்றே சொல்லலாம். பனைமரத்தை பொருளாதார ரீதியில், வர்த்தகத்திற்குரிய முறையில் வளப்படுத்துவதற்கு என்ன காரணங்கள் தடையாக உள்ளன, என்ன முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என ஆராய வேண்டும்.

முதலாவதாக, பனை மரம் முற்றாக பயனைத்தர நீண்ட காலம் எடுக்கின்றது. தென்னை மரத்தைப் போல குறுகிய காலத்தில் பயனைத் தரக்கூடிய புதிய வகைகள் இன விருத்தி செய்யப்பட வேண்டும். இத்துடன் குள்ளமான பனை மரங்களை உருவாக்க முடியுமா என ஆராய வேண்டும்.

இரண்டாவதாக, தற்போது தென்னை, பேரீச்சை, எண்ணை மரம் போன்ற மரங்களை tissue culture என்னும் முறையில் உருவாக்க வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறையில் இம்மரங்களின் நுனிப்பகுதிகளிலிருந்து மிகச்சிறிய துண்டுகள் எடுக்கப்பட்டு செயற்கையாக ஆய்வு கூடங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு சிறிய துண்டிலிருந்து நூற்றுக்கணக்கான மரங்களை உருவ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 31, 2013 1:10 pm

பார்த்திபன் wrote:பனை வளர்ப்பு என்பது ஒரு அருமையான திட்டம். ஏனென்றால்,

பனையை வெட்டினால்.. நதிகள் வறண்டு போகும்…!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்…

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை… நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவேண்டும்.


நன்றி: studied.wordpress.com/
நன்றி  விளக்கத்திற்கு மிக்க நன்றி பார்த்திபன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 31, 2013 1:19 pm

shenbagakumar wrote:பனை மரத்தின் விபரம்: நட்டாயிரம் வருடம், பட்டாயிரம் வருடம் என்று தமிழர் வாழ்வோடு ஒன்றி, ஒரு வாழிவாதாரப் பங்கு கொண்ட மரமாகத் திகழும் பனை ஒரு வரண் நில வளரியாகும்.
விரிவான பகிர்வு செண்பக குமார் , இது நீங்கள் எழுதிய கட்டுரையா அல்லது வேறு தளங்களில் இருந்து பகிந்ததா ?! ‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 3838410834 

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Aug 31, 2013 7:03 pm

‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 2 Ano7


சுட்ட பனங்காயின்
சிவந்த நாரை
சூயிங்கமாய் தின்று மகிழ்ந்ததும்,
நொங்கு தின்ற
கூந்தை வைத்து
வண்டி செய்து விளையாடியதும்
ஞாபகத்தில்,
திளாப்பும் கையுமாய்
வாழ்ந்த
என் தாத்தாவையும்,
பதனீரும் விறகுமாய்
வாழ்ந்த
என் பாட்டியையும்,
இந்த
பனைமரம் தான் எனக்கு
நினைவூட்டிக் கொண்டிருக்கிறது,

முகநூல்,,,

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 31, 2013 7:36 pm

சென்னைக்கு பனைமரம் தேவையா ? அதுதான் கேள்வி.
வறட்சியை தாங்கி வளர்வதற்கு நிறைய தாவரங்கள் உள்ளன.

பனமரத்தை சென்னையில் வளர்த்து அதன் மூலம் மின்சாரம் கொண்டு செல்லவோ என்னவோ

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Sep 01, 2013 7:39 am

ராஜு சரவணன் wrote:சென்னைக்கு பனைமரம் தேவையா ? அதுதான் கேள்வி.
வறட்சியை தாங்கி வளர்வதற்கு நிறைய தாவரங்கள் உள்ளன.

பனமரத்தை சென்னையில் வளர்த்து அதன் மூலம் மின்சாரம் கொண்டு செல்லவோ என்னவோ
பனை மரத்தைப் போன்று வறட்சியை தாங்கி தண்ணீர் அதிகம் தேவைப்படாமல் பராமரிப்பும் அதிகம் தேவைப்படாத மரம் இன்னொன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை

நண்பரே பனை மரத்தின் அதீத குண நலன்களைப் பற்றி மூன்றோ நான்கோ கட்டுரைகள் ஏற்கனவே பின்னூட்டமாக இங்கே இடப்பட்டுள்ளது ..அதில் குறைகள் ஏதேனும் உண்டு என்று இதுவரை யாரும் கூறவும் இல்லை

இருப்பினும் உங்களுக்கு மட்டும் ஏன் பனை மரத்தின் மீது அவ்வளவு காண்டு ...!!



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 01, 2013 11:33 am

SajeevJino wrote:
ராஜு சரவணன் wrote:சென்னைக்கு பனைமரம் தேவையா ? அதுதான் கேள்வி.
வறட்சியை தாங்கி வளர்வதற்கு நிறைய தாவரங்கள் உள்ளன.

பனமரத்தை சென்னையில் வளர்த்து அதன் மூலம் மின்சாரம் கொண்டு செல்லவோ என்னவோ
பனை மரத்தைப் போன்று வறட்சியை தாங்கி தண்ணீர் அதிகம் தேவைப்படாமல் பராமரிப்பும் அதிகம் தேவைப்படாத மரம் இன்னொன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை

நண்பரே பனை மரத்தின் அதீத குண நலன்களைப் பற்றி மூன்றோ நான்கோ கட்டுரைகள் ஏற்கனவே பின்னூட்டமாக இங்கே இடப்பட்டுள்ளது ..அதில் குறைகள் ஏதேனும் உண்டு என்று இதுவரை யாரும் கூறவும் இல்லை

இருப்பினும் உங்களுக்கு மட்டும் ஏன் பனை மரத்தின் மீது அவ்வளவு காண்டு ...!!
மரம் நட்டாலே நாட்டுக்கு நல்லது தான் அதுக்காக எந்த இடத்திலும் எந்த வகையான மரங்களையும் நாடலாம் என்று நடுவது தவறு என்றுதான் கூறுகிறேன். தலைப்பை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் "பசுமை-சென்னை " பனைமரத்தில் அப்படி என்ன பசுமை பரப்பளவை அதிகரிக்க போகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்.

ஒரு பனைமரத்தின் பசுமை பரப்பளவு எவ்வளவு தெரியுமா ? 7மீட்டர் விட்டம் கொண்ட ஒரு மரத்தில் அதிகபட்சமாக 38sq.m பரப்பளவு தான் பசுமையாக இருக்கும்.

இதே வேம்பு ,மாஞ்சியம்,உசிலை,பூவரசு, கிளுவை, புங்கை, யுகலிப்டஸ் போன்ற மரங்களை நட்டால் ஒரு மரத்தின் பசுமை பரப்பளவு சுமார் 350sq.m.

இந்த மரங்களுக்கு ஆண்டு முழுதும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவைகளுக்கு வறட்சியை தாங்க கூடியவை.

இப்போது சொல்லுங்கள் நான் என்ன குறை கூறுகிறேன் என்று. இருவழி தார்சாலைகள் அமைத்த பிறகு சாலையின் மத்திய பகுதியில் சாலை நிழலுக்காக மரவகை செடிகளை வைக்க சொல்லி தான் அரசு டெண்டர் விடுகிறது, ஆனால் ஒப்பந்தக்காரர் (அரசியல்வாதி ) செய்வது என்ன ஒன்றுக்கும் உதவாத அரளி செடிகளை நட்டு கணக்கு காண்பிப்பர். அதுபோல் தான் இதுவும்.

நல்ல வேளை வரட்சியை தாங்க கூடியது என்று கள்ளி மரங்களையும் ,கத்தாளை செடிகளையும்,ஈச்சம் மரங்களையும் வைக்க திட்டம் போடாமல் விட்டதே. திட்டம் கொண்டுவத்தால் அதையும் யோசனை செய்யாமல் ஆகா ஓகோ என்று சொல்வர்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக