ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ayyasamy ram on Sun Oct 20, 2013 11:06 pm

First topic message reminder :

பெங்களூரு:

செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.

இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35028
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down


Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by சிவா on Mon Nov 11, 2013 3:57 pm

எரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது

பெர்லின்: எரிபொருள் தீர்ந்து போனதால், ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் செயற்கைக் கோள்களில் ஒன்று இன்று பூமியில் மோதவுள்ளது. பூமியில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் இது வந்து விழும் என்று ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அனேகமாக இது கடல் அல்லது துருவப் பிரதேசத்தில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயற்கைக் கோளின் பெயர் ஜோஸ்.

இது கீழே வரும்போது முற்றிலும் உருக்குலைந்த நிலையில்தான் வருமாம். கீழே வந்து விழும்போது அதன் துண்டுகள்தான் நமக்குக் கிடைக்கும். அதுவும் 90 கிலோ அளவுக்குத்தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by SajeevJino on Mon Nov 11, 2013 7:33 pm

நாளை மீண்டும் slingshot  செய்யப்போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது ..இது சாதாரணமாக நிகழும் ஒரு தகவு தான் ..பிரச்னை எதுவும் இல்லை
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by SajeevJino on Mon Nov 11, 2013 7:37 pm

@சிவா wrote:எரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது
 
ஒவ்வொரு ஆண்டும் இதுபோல நிறைய செயற்கை கோள்கள் பூமியில் வந்து விழுகின்றன ..

மனிதன் 1970 முதலே செயற்கை கோளை வானில் பறக்க விடுகிறான் ..கண்டிப்பாக அது ஒரு நாள் கீழே விழும் அல்லது சூரியனில் மோதி வெடித்து விடும் ..எப்போது அது காலாவதியாகிறதோ அப்போது இவை நடக்கும்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by T.N.Balasubramanian on Mon Nov 11, 2013 9:19 pm

@SajeevJino wrote:நாளை மீண்டும் slingshot  செய்யப்போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது ..இது சாதாரணமாக நிகழும் ஒரு தகவு தான் ..பிரச்னை எதுவும் இல்லை
 
இஸ்ரோ  முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21487
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ayyasamy ram on Mon Nov 11, 2013 9:47 pm


இஸ்ரோ முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35028
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by Muthumohamed on Mon Nov 11, 2013 10:59 pm

@SajeevJino wrote:நாளை மீண்டும் slingshot  செய்யப்போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது ..இது சாதாரணமாக நிகழும் ஒரு தகவு தான் ..பிரச்னை எதுவும் இல்லை
 
இஸ்ரோவின் முயற்சி வெற்றி அடைய வாழ்துக்கள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by SajeevJino on Tue Nov 12, 2013 8:11 am

நாம் வெற்றி பெற்று விட்டோம் .. 10000 km உயரத்தை அதிகரிக்க நினைத்தோம் ஆனால் நேற்று அது 78000 km தான் சென்றது ..இன்று காலையில் மீண்டும் முயற்சி செய்தோம் இப்போது 11800 km உயரத்திற்கு அனுப்பிவிட்டோம்

இறைவனுக்கு தான் முதல் வந்தனங்கள் ..இஸ்ரோ விஞ்ஜானிகளுக்கும் வாழ்த்துக்கள்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by T.N.Balasubramanian on Tue Nov 12, 2013 9:27 am

@SajeevJino wrote:நாம் வெற்றி பெற்று விட்டோம் .. 10000 km உயரத்தை அதிகரிக்க நினைத்தோம் ஆனால் நேற்று  அது 78000 km தான் சென்றது ..இன்று காலையில் மீண்டும் முயற்சி செய்தோம் இப்போது 11800 km உயரத்திற்கு அனுப்பிவிட்டோம்

இறைவனுக்கு தான் முதல் வந்தனங்கள் ..இஸ்ரோ விஞ்ஜானிகளுக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்த்துக்கள், Sajeev Jino ,அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
10000km உயரம் என்பது 100000km என்றும் 
11800km உயரம் சென்று விட்டது என்பதுதான்118000km என்றும் இருக்கவேண்டுமோ? அப்போதுதான் 78000km சென்றுவிட்டது என்ற statement க்கு சரியாக வரும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21487
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by T.N.Balasubramanian on Tue Nov 12, 2013 9:36 am

இந்த பிரயாணத்திற்கு தேவையான எரிபொருள் என்ன? 
ஆரம்பத்தில் எவ்வளவு நிரப்பவேண்டும்?
போகும் வழியில் self generation ஆ?(சுய உற்பத்தியா?)
அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்க இயலுமா?
இவ்வளவு உயரம் /தூரம் போனாலும் ,ground control ஆல் இயக்கி செயல்படுத்த முடியுமா?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21487
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by பாலாஜி on Tue Nov 12, 2013 10:51 am

இஸ்ரோ விஞ்ஜானிகளுக்கு வாழ்த்துக்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

'மங்கள்யான்' கோளாறை சீரமைத்தது இஸ்ரோ

Post by சிவா on Tue Nov 12, 2013 11:59 am

'மங்கள்யான்' விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு இன்று அதிகாலை சரி செய்யப்பட்டு விட்டதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, செவ்வாய்கிரகத் திட்டம் பற்றிய ஃபேஸ்புக் பக்கத்திலும் காலை 5.10 மணியளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும், பூமியில் இருந்து, 100,000 கி.மீ தூரத்திற்கு மங்கள்யான் முன்னேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தில் நேற்று (திங்கள்கிழமை) சிறு கோளாறு ஏற்பட்டது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், கடந்த 7 ஆம் தேதி முதல் படிப்படியாக புவி வட்டப்பாதையின் ஒவ்வொரு சுற்றாக முன்னேற்றப்பட்டு அதன் வெளியேறு வேகம் அதிகரிக்கப்படுகிறது.

நேற்று (திங்கள்கிழமை)அதிகாலை 2.06 மணிக்கு 3ஆவது சுற்றுப்பாதையில் இருந்து 4 ஆவது சுற்றுப்பாதைக்கு மங்கள்யான் முன்னேற்றப்படுவதாக இருந்தது. இதன் மூலம் பூமியில் இருந்து, 100,000 கி.மீ தூரத்திற்கு மங்கள்யான் முன்னேற்றப்பட இருந்தது.

அந்த வேளையில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து, இஸ்ரோ தனது செவ்வாய்கிரகத் திட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் அப்டேட் செய்தது. மங்கள்யான் விண்கலத்தின் உந்துகைச் செயல்பாட்டில் (புரொபல்சன்) ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக, புவி வட்டப்பாதையின் 4 ஆவது சுற்றுக்கு விண்கலத்தை முன்னேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அக்கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று காலையில் கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ் 

இந்தியாவின் செவ்வாய்கிரகத் திட்டத்தை தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் மக்களுக்கு இடைவிடாமல் அப்டேட்ஸை வழங்கி வருகிறது இஸ்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்பில் இருக்க க்ளிக்குக - ISRO's Mars Orbiter Mission
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ayyasamy ram on Tue Nov 12, 2013 12:40 pm

முக நூலில் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ள வசதி....
-
பாராட்டுகள்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35028
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by Muthumohamed on Tue Nov 12, 2013 12:42 pm

கோளாரை சீரமைத்த அனைத்து விஞ்சானிகளுக்கும் பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by பாலாஜி on Tue Nov 12, 2013 1:44 pm

மிக்க மகிழ்ச்சி ..... அனைவருக்கும் பாராட்டுகள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ஹர்ஷித் on Tue Nov 12, 2013 2:20 pm

இஸ்ரோ விஞ்ஜானிகளுக்கு வாழ்த்துக்கள்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by சிவா on Sat Nov 16, 2013 12:40 pm

மங்கள்யான்' சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி நிறைவு

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி முற்றிலும் நிறைவடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலையில் 1.27 மணிக்கு சுற்றுவட்டப் பாதை 5-வது மற்றும் கடைசி முறையாக அதிகரிக்கப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின் சுற்று வட்டப் பாதை 1 லட்சத்து 92 கிலோமீட்டராக அதிகரிப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 7- ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை முதல் முறையாக அதிகரிக்கப்பட்டது. 8-ஆம் தேதி 2வது முறையாகவும், 8-ஆம் தேதி 3வது முறையாகவும் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

விண்கலத்தின் பாதையை 4-வது முறையாக அதிகரிக்கும் முயற்சியின்போது சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பிறகு, அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதால் விண்கலம் திட்டமிட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

நவம்பர் 16-ஆம் தேதியுடன் இந்தப் பணி முற்றிலுமாக நிறைவு பெறும் என தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலையில் மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது.

இதனையடுத்து ‘மங்கள்யான்’ விண்கலம் படிப்படியாக அதன் தூரத்தை அதிகப்படுத்தி செவ்வாயை நோக்கி பயணமாகும்.

‘மங்கள்யான்’ விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் நவம்பர்- 5 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by சிவா on Sun Nov 17, 2013 8:20 am


2 லட்சம் கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் மங்கள்யான் விண்கலம்


மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக 1.92 லட்சம் கிலோமீட்டராக சனிக்கிழமை (நவ.16) அதிகாலை அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து, மங்கள்யானின் பாதை அதிகரிப்புத் திட்டங்கள் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்போது பூமியிலிருந்து 1 லட்சத்து 92 ஆயிரத்து 874 கிலோமீட்டர் தொலைவில் 217 கிலோமீட்டர் கொண்ட நீள்வட்டப் பாதையில் பூமியை விண்கலம் சுற்றிவருகிறது. விநாடிக்கு 101 மீட்டர் வேகத்தில் விண்கலம் சுற்றி வருவதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

விண்கலத்தின் பாதையை அதிகரிக்கும் முயற்சி சனிக்கிழமை அதிகாலை 1.27 மணிக்கு தொடங்கியது. 4 நிமிஷங்களில் விண்கலத்தின் பாதை திட்டமிட்டவாறு அதிகரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மொத்தம் 34 கிலோ எரிபொருள் இந்த முயற்சியில் எரிக்கப்பட்டது. இந்த முயற்சியில் விண்கலத்தின் பாதை 74 ஆயிரம் கிலோமீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கடுத்ததாக, மங்கள்யான் விண்கலம் செவ்வாயை நோக்கிய பாதையில் டிசம்பர் 1-ஆம் தேதி செலுத்தப்பட உள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

அப்போது பூமியிலிருந்து அருகில் 256 கிலோமீட்டரும், தொலைவில் 23,566 கிலோமீட்டரும் கொண்ட நீள்வட்டப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.

ஆனால், செவ்வாயை நோக்கிய பாதையில் விண்கலத்தைச் செலுத்த அதன் சுற்றுப்பாதை 2 லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு அதிகரிக்கப்பட வேண்டியிருந்தது.

பெங்களூரில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து 5 முயற்சிகளில் விண்கலத்தின் பாதை வெற்றிகரமாக சுமார் 2 லட்சம் கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, செவ்வாயை நோக்கிய மிகவும் கடினமான 300 நாள்கள் பயணத்துக்கு விண்கலத்தை தயார் செய்யும் பணிகள் தொடங்கவுள்ளன. இடைப்பட்ட நாள்களில் விண்கலத்தில் சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நான்காவது பாதை அதிகரிப்பு முயற்சியில் விண்கலத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறு உடனடியாக சரிசெய்யப்பட்டது.

மொத்தம் 1,350 கிலோ எடைகொண்ட மங்கள்யான் விண்கலம் ரூ.450 கோடி செலவில் அனுப்பப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by SajeevJino on Sun Nov 17, 2013 8:43 am

@T.N.Balasubramanian wrote:இந்த பிரயாணத்திற்கு தேவையான எரிபொருள் என்ன? 
ஆரம்பத்தில் எவ்வளவு நிரப்பவேண்டும்?
போகும் வழியில் self generation ஆ?(சுய உற்பத்தியா?)
அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்க இயலுமா?
இவ்வளவு உயரம் /தூரம் போனாலும் ,ground control ஆல் இயக்கி செயல்படுத்த முடியுமா?
ரமணியன்

ராக்கெட்டுகளில் தான் எரிபொருள் சேகரித்து வைக்கப்பட்டு புவி வட்ட பாதை வரை செயல் படும் ..அதன் பிறகு எல்லாமே விண்வெளி ஈர்ப்பு விசை தான் ..மெதுவாக ஒரு பக்கத்தை பார்த்து தட்டி விட்டாலே போதும் அது மிக வேகமாக சென்று விடும் ..

இப்போது செயற்கைகோளில் உள்ள சூரிய மின் தகடுகள் தான் அதற்கு தேவையான சக்தியை அளிக்கின்றன..

நம்மால் அதன் மொத்த செயல்பாட்டையும் பூமியில் இருந்தே கட்டுப்படுத்த இயலும் ..ஒரு பிரத்தேகமான band மற்றும் frequency மூலம் இதை செய்கிறோம் ..இதை பற்றி மேலும் தகவல்களை என்னால் கூற இயலாது மன்னிக்கவும்..!!

அமெரிக்கர்கள் பூமியிலிருந்தே செவ்வாயில் உள்ள ஒரு ரோபோவை கட்டுப்படுத்தியது நினைவிருக்கலாம் ..இப்போது கூட அது செயல்பாட்டில் உள்ளது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by சிவா on Sun Nov 17, 2013 8:54 am

@SajeevJino wrote:
@T.N.Balasubramanian wrote:இந்த பிரயாணத்திற்கு தேவையான எரிபொருள் என்ன? 
ஆரம்பத்தில் எவ்வளவு நிரப்பவேண்டும்?
போகும் வழியில் self generation ஆ?(சுய உற்பத்தியா?)
அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்க இயலுமா?
இவ்வளவு உயரம் /தூரம் போனாலும் ,ground control ஆல் இயக்கி செயல்படுத்த முடியுமா?
ரமணியன்

ராக்கெட்டுகளில் தான் எரிபொருள் சேகரித்து வைக்கப்பட்டு புவி வட்ட பாதை வரை செயல் படும் ..அதன் பிறகு எல்லாமே விண்வெளி ஈர்ப்பு விசை தான் ..மெதுவாக ஒரு பக்கத்தை பார்த்து தட்டி விட்டாலே போதும் அது மிக வேகமாக சென்று விடும் ..

இப்போது செயற்கைகோளில் உள்ள சூரிய மின் தகடுகள் தான் அதற்கு தேவையான சக்தியை அளிக்கின்றன..

நம்மால் அதன் மொத்த செயல்பாட்டையும் பூமியில் இருந்தே கட்டுப்படுத்த இயலும் ..ஒரு பிரத்தேகமான band மற்றும் frequency மூலம் இதை செய்கிறோம் ..இதை பற்றி மேலும் தகவல்களை என்னால் கூற இயலாது மன்னிக்கவும்..!!

அமெரிக்கர்கள் பூமியிலிருந்தே செவ்வாயில் உள்ள ஒரு ரோபோவை கட்டுப்படுத்தியது நினைவிருக்கலாம் ..இப்போது கூட அது செயல்பாட்டில் உள்ளது

தங்களின் விளக்கங்கள் என்றும் சிறப்பானவைகள்!

தகவலுக்கு நன்றி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by சிவா on Tue Nov 19, 2013 1:33 pm

மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை நோக்கி டிசம்பர் 1–ந்தேதி புறப்படும்: இஸ்ரோ தலைவர் பேட்டி

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா சமீபத்தில் மங்கள்யான் செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.

இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் செயல்பாட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மங்கள்யான் விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புவி வட்டப்பாதையில் 1.93 லட்சம் கிலோ மீட்டர் தூரம் சென்றடைந்து விட்டது. அடுத்த கட்டமாக டிசம்பர் 1–ந்தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி புறப்பட்டு செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழுதடைந்த பி.எஸ்.எல்.வி. டி–5 ராக்கெட் முதல் நிலை முறையாக உள்ளது. டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும். அதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

வேதியியல் துறை விஞ்ஞானியான சி.என்.ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்க விருப்பமில்லை என்று தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by பாலாஜி on Tue Nov 19, 2013 5:31 pm

சிறப்பான தொடர் பதிவு ... பகிர்வுக்கு நன்றி தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Thu Nov 21, 2013 2:23 pm

பூமியின் சுற்றுவட்ட பகுதியில் இருந்து விடுபட்டு மங்கள்யான், செவ்வாய் கிரகத்தை நோக்கி டிசம்பர் 1–ந் தேதி பயணம் மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டிசம்பர் 1–ந் தேதி செல்லும்

செவ்வாய் கிரகத்திற்கு கடந்த 5–ந் தேதி அனுப்பப்பட்ட மங்கள்யான் ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பறந்து கொண்டு இருக்கிறது. அது பூமியில் இருந்து 1.95 லட்சம் கி.மீ. தூரத்தில் தற்போது சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.

வரும் டிசம்பர் 1–ந் தேதி பூமியின் சுற்றுவட்ட பகுதியில் இருந்து விடுபட்டு செவ்வாய் கிரகத்திற்கு தனது பயணத்தை தொடங்கும். மங்கள்யான் ராக்கெட் பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக செயல்படுகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட்

ஜி.எஸ்.எல்.வி– டி5 ராக்கெட் கடந்த ஆகஸ்டு மாதம் 19–ந் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த ராக்கெட் உள்நாட்டு எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.

தற்போது ஜி.எஸ்.எல்.வி–டி5 முழுமையாக தயார்படுத்தப்பட்டு உள்ளது. டிசம்பர் மாத மத்தியில் விண்ணில் செலுத்த தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

-- dinaththanthi
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi on Thu Nov 21, 2013 2:29 pm

First Picture from Mangalyaan . Taken yesterday from an altitude of 70,000 km while checking Mars Color Camera.


avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by சிவா on Sun Dec 01, 2013 10:24 am

விண்வெளியில் சாதித்தது இந்தியா: செவ்வாய் நோக்கி புறப்பட்டது "மங்கள்யான்'

சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட்ட, "மங்கள்யான்' செயற்கைக்கோள், இன்று , புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது.

செவ்வாய் கிரகத்தை ஆராய, "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' திட்டத்தின் கீழ், 450 கோடி ரூபாய் மதிப்பில், "மங்கள்யான்' செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. "இஸ்ரோ' சார்பில், "மங்கள்யான்' செயற்கைக்கோள், நவம்பர், 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி., சி - 25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, "மங்கள்யான்' செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதையை, பல கட்டங்களாக அதிகரிக்கும் பணி, பெங்களூருவில் உள்ள, "பீன்யா' கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது. கடைசியாக, நவ., 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ., உயரத்தில், 'மங்கள்யான்' செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து, "மங்கள்யான்' செயற்கைக்கோளை விடுவிக்க, அதன் வேகத்தை அதிகரிக்கும் பணியில், "இஸ்ரோ' விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இன்று அதிகாலை, 12:30 மணிக்கு, "மங்கள்யான்' செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கள்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக, பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகம் நோக்கி தன், 68 கோடி கி.மீ., பயணத்தை துவக்கியது. "மங்கள்யான்' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள, சிறிய வகை ராக்கெட்கள் இயக்கப்பட்டு, நொடிக்கு 647.96 மைல் வேகத்தில், செவ்வாய் கிரகத்தை நோக்கி, "மங்கள்யான்' பயணிக்கும். இந்த வேகத்தில் சென்றால் தான், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து, விடுபட முடியும். இதே வேகத்தில், விண்வெளியில் பயணித்து, 2014, செப்., 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை, "மங்கள்யான்' செயற்கைக்கோள் அடையும்.

சாதனை:

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட செவ்வாய் கிரக சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது. முன்னதாக, சீனா செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பிய விண்கலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேற முடியாமல் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் செவ்வாய் ஆராய்ச்சியை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்தன. இந்நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி, விண்வெளி துறையின் இந்தியாவின் முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Dec 01, 2013 1:42 pm

மாங்கள்யான் எப்போ திரும்பி வரும், வரும் போது ரெண்டு கிலோ கத்திரிக்காய் வாங்கிட்டு வரச்சொல்லி இருக்கேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum