புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
31 Posts - 36%
prajai
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Jenila
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%
jairam
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
7 Posts - 5%
prajai
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
6 Posts - 4%
Jenila
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Rutu
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
manikavi
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவர்? - ஸ்டாலின் !


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:17 pm

First topic message reminder :

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 F4ZWrFDyTYO0zRpOvjco+E_1382591501

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.

அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.

சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.

இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.

அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.

nandri - siruvarmalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 8:23 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 FSPXI5W2TLKhdwu4tbY6+E_1391071135

அந்த வழியாகச் சில சிறுவர்கள் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஓடும்போது தரையைப் பார்த்துக் கொண்டு ஓடவில்லை. மேலே நிமிர்ந்து பார்த்தபடியே ஓடிக் கொண்டிருந்தனர்.அப்படி மேலே என்னதான் இருந்தது? ஒருவேளை அது புறாவாக இருக்குமா? அதைத் துரத்திக் கொண்டுதான் அவர்கள் செல்லுகிறார்களோ?

அதுதான் இல்லை. அது ஒரு காற்றாடி! அறுந்து போய் காற்றிலே பறந்து செல்லும் அந்தக் காற்றாடியைத் துரத்திக் கொண்டுதான் அவர்கள் சென்றனர்.அந்தக் காற்றாடி, "வாருங்கள், வாருங்கள்' என்று ஆடிக்கொண்டே அவர்களைச் சிறிது தூரம் அழைத்துச் சென்றது. பிறகு ஒருவர் வீட்டுத் தோட்டத்திற்குள்ளே புகுந்தது. அங்கிருந்த ஒரு கொன்றை மரக்கிளையில் போய் உட்கார்ந்து கொண்டது.

இதைக் கண்ட சிறுவர்கள் உடனே அந்தத் தோட்டத்திற்குள் புகுந்தனர். சிலர் கொன்றை மரத்தில் ஏறிக் காற்றாடியை எடுக்க முயன்றனர். ஆனால், அவர்களைத் தாங்கும் சக்தி அந்த மரக் கிளைகளுக்கு இல்லை. அதனால், அவை முறிய ஆரம்பித்தன. சிறிது நேரம் முயன்று பார்த்துவிட்டுத் தோல்வியுடன் அவர்கள் திரும்பிவிட்டனர்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தான் அந்த வீட்டுக்காரச் சிறுவன். அவனுக்கு அந்தக் காற்றாடியை எப்படியாவது எடுத்து விட வேண்டுமென்று ஆசை. கூட்டத்தினர் திரும்பிச் சென்றதும் அவன் மெதுவாக மரத்தை நெருங்கினான். தனியாக இருந்த ஒரு கிளையைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினான். அவன் மிகவும் சிறுவனாக இருந்ததால் கிளை முறியவில்லை. அவன் மெல்ல மெல்ல ஒவ்வொரு கிளையாகப் பற்றி மேலே சென்றான்.

காற்றாடியின் அருகே சென்று விட்டான். இதோ இன்னும் ஒரு விநாடியில், காற்றாடி அவன் கைக்கு வந்துவிடும். ஆனால், எதிர்பாராத விதமாக அப்போது ஒரு குரல் வந்து காரியத்தைக் கெடுத்துவிட்டது. "டேய், டேய், என்ற அந்தக் குரலைக் கேட்டதும், ""ஐயோ, அம்மா பார்த்து விட்டாளே,'' என்று அவன் நினைத்தான். உடனே, அவன் உடல் நடு நடுங்கியது.

கையிலே பிடித்திருந்த மரக்கிளையை விட்டு விட்டான். மறு விநாடி அவன் கீழே விழுந்தான். விழும்போது முறிந்திருந்த கிளைகளில் ஒன்று அவனுடைய இடது விலாப் பக்கத்தில் பாய்ந்துவிட்டது.உடனே அங்கிருந்து ரத்தம் குபுகுபு என்று வெளியே பீறிட்டு கொண்டு வந்தது. ஆனால், நல்ல காலம் அவன் உயிருக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லை. நாட்டு வைத்தியர் ஒருவர் பச்சிலைச் சாற்றால், அந்தக் காயத்தைப் பத்தே நாட்களில் குணப்படுத்தி விட்டார்.

காயம் குணமானாலும் அந்த வடுமட்டும் போகவில்லை. அப்போது ஏற்பட்ட வடு அவன் உடலை விட்டு மறையவே இல்லை. 1953ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அன்றுதான் அதுவும் அந்த உடலுடன் எரிந்து மறைந்து போனது. அப்படியானால் அந்த உடல் யாருடையது?சின்ன க்ளூ. "தமிழ்த் தென்றல்', "தொழிலாளரின் தூய தலைவர்' எல்லாருக்கும் நல்லவர் என்றெல்லாம் போற்றப்படுபவர்.

விடை: திரு. வி. கல்யாணசுந்தர முதலியார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2014 12:11 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 103459460 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 2:06 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 1571444738 அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 2:07 pm

ayyasamy ram wrote:யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 103459460 


நன்றி ராம் அண்ணா புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Wed Feb 05, 2014 8:51 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 3838410834 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 103459460 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 13, 2014 8:48 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 83ZlIMNLQYmOwWj6Jjdw+E_1391584674

கிறிஸ்துமஸ் தினம் 1642ம் ஆண்டு, அந்த தினத்தில் இங்கிலாந்திலுள்ள ஒரு கிராமத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது."கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்தக் குழந்தை பிறந்திருக்கிறது. அதனால், மிகுந்த கீர்த்தியுடன் விளங்கப் போகிறது!' என்று சிலர் பேசிக் கொண்டனர். அதனைக் கேட்டுப் பிள்ளையின் அம்மா பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

வயது வந்ததும், அந்தப் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவன் பள்ளிக்கு சரியாகப் போக மாட்டான்; பாடத்தை ஒழுங்காகப் படிக்க மாட்டான். இதனால், "வகுப்பிலே கடைசி' என்று அவனுக்கு மற்ற மாணவர்கள் பட்ட பெயர் சூட்டி விட்டனர். படிப்புத்தான் இல்லை. பலமாவது இருக்கக் கூடாதா? அதுவும் இல்லை. துரும்புபோல் இருந்தது அவனது உடம்பு.

ஒருநாள், அந்தச் சிறுவனை அவனது வகுப்பிலே படித்த ஒரு முரட்டுப் பையன் வம்புக்கு இழுத்தான். சிறுவன் முதலில் பேசாமல் தான் இருந்தான். ஆனால், அந்த முரடன் சும்மா இருக்கவில்லை.

கை நீட்ட ஆரம்பித்து விட்டான். உடனே, ""டேய், பேசாமல் போகிறாயா அல்லது திருப்பித் தரட்டுமா?'' என்று சிறுவன் கோபமாகக் கேட்டான்.""அடேயப்பா! ஆளைப் பார்த்தாலே தெரிகிறதே! நான் ஒரு தட்டு தட்டினால், நீ ஒன்பது குட்டிக் கரணம் போடுவாய், ஜாக்கிரதை!'' என்றான் முரடன்.""எங்கே, தட்டு பார்க்கலாம்,'' என்றான் சிறுவன்.

உடனே முரடன் கையால் தட்டவில்லை; காலால் அந்தச் சிறுவனின் வயிற்றிலே உதைத்துவிட்டான். வயிற்றில் உதை விழுந்ததும், சிறுவனுடைய கோபம் அதிகமாகி விட்டது. ஒரே பாய்ச்சலாக அந்த முரடன் மேல் பாய்ந்தான். அவனைப் பிடித்து "மடேர்' என்று எதிரிலிருந்த சுவரில் தள்ளினான். அவனுடைய மூக்கைச் சுவருடன் வைத்து, "தேய் தே'யென்று தேய்த்தான். பாவம், அந்த முரடன் பயந்து ஓடிவிட்டான்.

முரடனைக் கைச்சண்டையில் தோற்கடித்ததோடு அந்தச் சிறுவன் நிற்கவில்லை. படிப்பிலும் தோற்கடிக்க வேண்டுமென நினைத்தான். முயற்சியுடன் படித்தான். வகுப்பிலே முதல் மாணவாக மறுபரீட்சையிலேயே தேறிவிட்டான். அப்புறம், "வகுப்பிலே கடைசி' என்று யாராவது அவனைக் கூப்பிடுவார்களா? இல்லை, அப்படிக் கூப்பிடத் தைரியம்தான் வருமா?

இப்படி தைரியசாலியான அந்த பையன் யார் என்று தானே கேட்கிறீர்கள்? ஒரு சின்ன க்ளூ. இவர்தான் புவிஈர்ப்புச் சக்தியை கண்டுபிடித்தார். இப்போது தெரிந்திருக்குமே இவர் யார் என்று?

விடை: ஐசக் நியூட்டன் தான் அந்த தைரியமான பையன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2014 11:32 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 103459460 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:09 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 JOuxw3qCQzzYqmszY2ow+E_1392885898

திட்டுக்காரரும், அவருடைய நண்பரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
""உங்களுடைய பையனைக் காணோமே எங்கே போய் இருக்கிறான்?'' என்று கேட்டார் நண்பர்.
""எங்கே போயிருப்பான் ஏதேனும் ஒரு மூலையிலே முட்டைமேல் உட்கார்ந்து கொண்டிருப்பான்!''
""என்ன! முட்டை மேல் உட்கார்ந்து கொண்டிருப்பானா! ஏன், உட்கார வேறு இடம் கிடையாதா?''
""அவன் செய்வது எல்லாமே வேடிக்கை யாகத்தான் இருக்கும். நேற்று நடந்ததைக் கேளுங்கள். அவனை வீட்டில் வெகு நேரமாய்க் காணோம்.

""எங்கே போய் இருப்பான் என்று தேடிப் பார்த்தேன். கடைசியில், அவன் வீட்டில் பின்புறத்திலே ஒரு மூலையில், சில முட்டைகளைக் கீழே வைத்து, அவற்றின் மேலே உட்கார்ந்து இருக்கக் கண்டேன்.
"என்னடா இது, முட்டைமேல் உட்கார்ந்திருக்கிறாய்!' என்று கேட்டேன். அதற்கு அவன் என்ன தெரியுமா பதில் சொன்னான்?"நம் வீட்டுக் கோழி செய்கிறதே, அதே போல் நானும் முட்டையிலிருந்து குஞ்சை வெளியில் கொண்டு வரப் போகிறேன்' என்றான்.

""அடேயப்பா இந்த வயதிலேயே அவன் ஆராய்ச்சியில் இறங்கி விட்டான் போலிருக்கிறது!''
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளியில் சென்றிருந்த அந்தப் பையனும் அங்கு வந்து சேர்ந்தான். அவன் தலைமுடி கலைந்திருந்தது. உடை முழுவதும் புழுதி படிந்திருந்தது. அவனைக் கண்டதும், "என்னடா இது அலங்கோலம்?' என்று கேட்டார் அவன் அப்பா.

""நான் வரும் வழியிலே ஒரு குதிர் இருந்தது. அதன் மேல் பகுதியில் வட்டமான மூடி இருந்தது. அந்த மூடியைத் திறந்து கொண்டு அதன் வழியாகக் கோதுமையை உள்ளே கொட்டிக் கொண்டிருந்தனர் சில வேலையாட்கள். அவர்கள் கொட்டும் கோதுமை உள்ளே போய் எப்படி விழுகிறது என்று பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. உடனே, குதிரின் மேல் "விறு விறு' என்று ஏறினேன். உச்சியிலிருந்து ஓட்டை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தேன். அப்போது... கால் இடறி, தொப்பென்று உள்ளே விழுந்து விட்டேன்...''
""ஐயோ, அப்புறம்...?'' என்று பதற்றத்துடன் கேட்டார் அப்பா.

""நல்ல காலம், உடனே வேலையாட்கள் என்னைக் காப்பாற்றி விட்டனர். இல்லாது போனால் உள்ளேயே அமுங்கிச் செத்துப் போயிருப்பேன்!'' என்றான் அந்த சிறுவன்.அவனுக்கு மட்டுமல்ல; நம் எல்லாருக்கும் அது நல்ல காலம்தான்.

"ஏன்?' என்று கேட்கிறீர்களா? அவன் அன்று இறந்து போயிருந்தால், இன்று நாம் கிராம போனில் பாட்டுக் கேட்க முடியாது; சினிமா கொட்டகையில் படம் பார்க்க முடியாது; வீட்டில் "சுவிட்'சைப் போட்டு விளக்கை எரிய வைக்க முடியாது. இந்த அற்புதங்களுக்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தவனே அந்தச் சிறுவன்தான்.

விடை: இவர்தான் அந்த சிறுவன் ஆராய்ச்சியாளர் தாமஸ் ஆல்வா எடிசன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:11 pm

ayyasamy ram wrote:யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 103459460 

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 8:09 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 5 E_1394700916

நான்காம் வகுப்பிலே கணக்குப் பாடம் நடந்து கொண்டிருந்தது. அச்சமயம், அந்த ஊரில் நடித்துக் கொண்டிருந்த நாடகக் குழுவின் தலைவர் அங்கு வந்துச் சேர்ந்தார்.

அவரைக் கண்டதும், ""பையன்களா, நானும் இவரும், ஓர் அவசர வேலையாக வெளியே செல்கிறோம். சிறிது நேரத்தில் திரும்பி விடுவோம். அதற்குள் இதைப் போட்டு வையுங்கள்,'' என்று கூறி ஒரு கணக்கைக் கொடுத்து விட்டு, நாடகத் தலைவருடன் கிளம்பி விட்டார் ஆசிரியர்.

எல்லா மாணவர்களும் கணக்கைப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், ஒரே ஒரு மாணவனுக்கு மட்டும் கணக்கிலே கவனம் செல்லவில்லை. பாதிக் கணக்குடன் நிறுத்திவிட்டு, சட்டைப் பைக்குள் வைத்திருந்த ஒரு தாளை வெளியில் எடுத்தான். அது ஒரு நாடக விளம்பரத்தாள். அதில் அச்சிடப்பட்டிருந்த படத்தைப் பார்த்தான்.

அந்தப் படத்தில் ஒரு தாமரை இருந்தது. தாமரையின் நடுவிலே ஒரு யானை இருந்தது. யானையின் மேலே இந்திரன் இருந்தான். அந்தப் படத்தைப் பார்த்ததும், அதைப் போல் தன்னுடைய சிலேட்டில் வரைய வேண்டுமென்ற ஆசை அவனுக்குத் தோன்றியது. உடனே வரைய ஆரம்பித்தான். வரைந்து முடித்ததும் பார்த்தான். அது அவ்வளவு நன்றாக இல்லை. இன்னும் நன்றாக வரைய வேண்டும் என்று எண்ணினான். உடனே சிலேட்டின் மறுபக்கத்தில் அதே படத்தை வரைந்தான். படம் போடும் ஆர்வத்தில் அந்தப் பக்கத்திலிருந்த அறைகுறைக் கணக்கையும் அவன் அழித்து விட்டான்.சிறிது நேரம் சென்றது. ஆசிரியரும், நாடகத் தலைவரும் திரும்பி வந்தனர்.

கணக்கைச் சரியாக போட்டிருக்கிறார்களா என்று ஒவ்வொரு மாணவனாகப் பார்த்துக் கொண்டே வந்தார் ஆசிரியர். படம் வரைந்து வைத்திருந்த அந்த மாணவருடைய பலகையைக் கண்டதும், ஆசிரியருக்கு அளவு கடந்த கோபம் வந்து விட்டது. உடனே பிரம்பை எடுத்தார்.""டேய், உன்னை நான் கணக்குப் போடச் சொன்னேனா, படம் போடச் சொன்னேனா?'' என்று கேட்டுக் கொண்டே நன்றாக அடித்து விட்டார்.

அப்போது அருகிலே இருந்த நாடகத் தலைவர் அவன் வரைந்திருந்த படத்தைப் பார்த்தார்.பார்த்ததும், ""ஆஹா, எவ்வளவு அழகாக வரைந்திருக்கிறான்! இவனைப் பாராட்டாமல் அடித்து விட்டீர்களே!'' என்றார்.உடனே ஆசிரியரும் அந்தப் படத்தைக் கூர்ந்து பார்த்தார். பார்த்ததும், அவருடைய கோபம் பறந்துவிட்டது! உடனே, அந்த மாணவனை அன்பாக அணைத்துக் கொண்டு, ""மிகவும் அழகாக வரைந்திருக்கிறாய். ஆனாலும், கணக்குப் போட வேண்டிய நேரத்தில் படம் போடலாமா?'' என்றார்.

சிறுவயதிலே சித்திரம் வரைவதில் தேர்ச்சி பெற்று இருந்த அந்த மாணவன், பெரியவனானதும் ஒரு நல்ல ஓவியனாக விளங்கினான். ஓவியனாக மட்டும் விளங்கவில்லை, சிறந்த கவிஞனாகவும் விளங்கினான்.

விடை: நீங்கள் யார் என்று தேடியது இவரைதான். "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்ற பாட்டைப்பாடி, விடுதலைப் போருக்கு வேகம் கொடுத்த கவிஞர் நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக