புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
31 Posts - 55%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
17 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
4 Posts - 1%
jairam
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 35 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 35 of 81 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 58 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 35 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:01 pm

தெற்குசூடானில் ஐ.நா. ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது

தெற்குசூடானில் கடந்த 8 மாதங்களாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். அங்கு ஐ.நா. அமைதிப்படையினர் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்தநிலையில் எண்ணெய் வளமிக்க இந்த நாட்டின் வடபகுதியில் உள்ள வாவ் நகரில் இருந்து பெண்டியு நோக்கி நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஐ.நா. அமைதிப்படையினர் ஒரு ஹெலிகாப்டரில் சென்றனர். இந்த ஹெலிகாப்டரில் விமான ஓட்டி உள்பட 4 பேர் பயணம் செய்தனர்.

பெண்டியு நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் ஹெலிகாப்டர் சென்றபோது, போராளிக்குழுவினர் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர். இதில் ஹெலிகாப்டர் கீழே நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் அனைவரும் ரஷியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஹெலிகாப்டர் மீது போராளிக்குழுக்கள் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ஐ.நா. இந்த தகவலை உறுதிபடுத்தவில்லை. ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:03 pm

9 வயது சிறுமிக்கு இயந்திர துப்பாக்கி பயிற்சி; குண்டு பாய்ந்து உயிர் இழந்த பயிற்சியாளர்

அமெரிக்காவை சேர்ந்தவர் சார்லஸ் வாகா (வயது 39) லேக்கவுசு நகரை சேந்ர்தவர். இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் அரிசோனாவில் உள்ள ஒயிட் கில்ஸ் பகுதியில் உள்ள திறந்த வெளி துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் யிற்சியாளராக உள்ளார். அங்கு நியூ ஜெர்சியை சேர்ந்த தம்பதிகளின் 9 வயது மாணவி ஒருவர் துப்பாக்கி பயிற்சிக்கு வந்து இருந்தார். சார்லஸ் வாக அவருக்கு இயந்திர துப்பாக்கியை வைத்து பயிற்சி அளிக்த்தார். அப்போது தவறுதலாக துப்பாக்கி குண்டு பயிற்சியாளர் மீது பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக வாகாவை லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த வீடியோ ஒன்றை போலீசார் தற்போது வெளீயிட்டு உள்ளனர்.




உலகச் செய்திகள்!  - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:04 pm

நீண்ட கால போர் நிறுத்ததிற்கு இஸ்ரேல்-பாலஸ்தீனம் சம்மதம் மக்கள் கொண்டாட்டம்

காஸா முனையை ஆளுகிற ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஜூலை மாதம் 8-ந் தேதி சண்டை மூண்டது. இந்த சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அந்த சண்டை நிறுத்தத்தை மீறி இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் அவர்கள் இடையே நிரந்தர சண்டை நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான மறைமுக சமரச பேச்சை எகிப்து முன்னின்று நடத்தியது. ஆனால் இந்தப் பேச்சு வார்த்தை கடந்த 19-ந் தேதி தோல்வி அடைந்தது. இதை இதை தொடர்ந்து இருதரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டனர்

காஸா முனை பகுதியில் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 2200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர், 11 ஆயிரம் பேர் காயம் அடைந்து உள்ளனர். இஸ்ரேல் பக்கம் 64 ராணுவ வீரர்கள் உள்பட 68 பேர் பலியாகி உள்ளனர்.

அமரிகாவின் முழு ஆதரவுடன் எகிப்து தலையீட்டின் பேரில் தற்போது நீண்ட கால போர் நிறுத்த்திற்கு இரு தரப்பினரும் சம்மதித்து உள்ளனர்.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் பிக்சாகி கூறும் போது போர் நிறுத்தம் அறிவிக்க நாங்கள் மிகவும் உறுதுணையுடன் இருந்தோம்.என்று கூறினார்.

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் டிவியில் தோன்றி சமாதானத்தை ஏற்று அறிவித்தார்.

இஸ்ரேல் அரசாங்க செய்தி தொடர்பாளர் மார்க் ரெஜிவ் கூறும் போது இந்த போர் நிறுத்தம் நீடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதை தொடர்ந்து காஸா முனையில் மக்கள் வீதிகளில் இறங்கி இதை கொண்டாடி வருகின்றனர். நேற்று அங்கு வெற்றி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த சமாதானத்தை ஐநா பொது செயலாளர் பான் கீ மூன் வரவேற்று உள்ளார்.

இதுகுறித்து பான் ந்கீ மூனின் செய்தி தொடரபாளர் கூறும் போது:-

இந்த சமாதான் முயற்சியால் நெருக்கடியின் வேர்க்காரணங்களை சமாளிக்க முடியாது. ஆனால் அடுத்த கட்ட வன்முறை நிகழவிடாமல் இது தடுக்கும் என கூறினார்.




உலகச் செய்திகள்!  - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 28, 2014 4:12 am

ஸ்பெயின் நகரை சிவக்க வைத்த தக்காளித் திருவிழா

ஸ்பெயின் நாட்டின் பியுனோல் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவின் தக்காளி சண்டை நிகழ்ச்சிகள் இன்று கோலாகலமாக நடைபெற்றன. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 22,000 பேர் பங்கு கொண்டனர். இவர்களில் பலர் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தனர். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசி எறிவதற்காக 125 டன் பழுத்த தக்காளிகள் இன்று அங்கு வரவழைக்கப்பட்டிருந்தன.

சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த ஆதரவைப் பெற்ற இந்த நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றபோது ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்ட தக்காளிகளால் தெரு முழுவதும் தக்காளிக் கூழினால் சிவந்து காணப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற வெளிநாட்டுப் பயணிகளிடம் இரண்டாவது ஆண்டாக தலைக்கு பத்து யூரோக்கள் வசூலிக்கப்பட்டது. பல வாரங்களுக்கு முன்பாகவே இந்த முன்பதிவு நிறைவு பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நகரத்தைச் சேர்ந்த 20,000 மக்கள் தங்களின் நகர நிர்வாகத்துக்கு இருந்த 5.5 மில்லியன் யுரோ கடனை அடைப்பதற்காக சென்ற ஆண்டு இத்தகைய ஏற்பாட்டைத் தொடங்கினர். கடந்த 1945ஆம் ஆண்டில் தக்காளி விளைந்திருந்த பகுதிகளில் வாழ்ந்துவந்த உள்ளூர்க் குழந்தைகள் உணவுக்காக தக்காளியை வீசியெறிந்து சண்டையிட்டுக் கொண்டதைக் கண்டே இத்தகையதொரு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.



உலகச் செய்திகள்!  - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 28, 2014 4:49 am

வடகொரிய எல்லையில் தீவிரவாதிகள் தோண்டிய சுரங்கங்கள்

பீஜிங், ஆக 28 - சீனாவில் வடகொரிய எல்லைக்கு அருகே பதட்டமான பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஏராளமான சுரங்க பாதைகளை அமைத்துள்ளது சீன செயற்கை கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவு பெற்ற கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தினர் சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பிராந்தியத்தில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் சமீப காலமாக அப்பிராந்தியங்களில் பல்வேறு வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜின்ஜியாங் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் ஏராளமான மக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களின் நடமாட்டம் மற்றும் தாக்குதலை சீன ராணுவம் முறியடித்து வருகிறது.

இந்நிலையில் வடகொரிய எல்லைக்கு அருகே சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் துர்கிஸ்தான் தீவிரவாதிகள் ஏராளமான சுரங்க பாதைகளை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த சுரங்கங்களை சீனாவின் கவோ பென் - 1 என்ற செயற்கை கோள் விண்ணில் இருந்து துல்லியமாக படம் எடுத்து அனுப்பி உள்ளது. வடகொரிய எல்லைக்கு அருகே சீனாவின் ஹிலோங்ஜியாங், ஹிபே, ஜிலின் பிராந்தியங்களிலும் சுயாட்சி பிராந்தியமான மங்கோலியாவிலும் முறைகேடாக ஏராளமான கஞ்சா தோட்டங்கள் உள்ளன. அத்தோட்டங்களுக்கு இடையே துர்கிஸ்தான் தீவிரவாதிகள் பல்வேறு சுரங்கங்களை தோண்டி வைத்துள்ளனர். அவர்கள் தப்பிப்பதற்காக தோண்டிய சுரங்கங்கள் அனைத்தும் தற்போது சீன செயற்கை கோளின் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அப்பிராந்தியங்களில் நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அந்த படங்கள் உதவியுள்ளன என்று சீன ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.





உலகச் செய்திகள்!  - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 1:11 am

கடும் நெருக்கடியில் நவாஷ் ஷெரீப்: பிரதமர் இல்லத்தை நெருங்கினர் போராட்டக்காரர்கள்

பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை நெருங்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறி வரும் இம்ரான் கான், பாகிஸ்தா பிரதமர் நவாஷ் ஷெரீப் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 நாட்களாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவரது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மத குரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹ்ரிக் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போரட்டாக்காரர்கள், பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் தலைமைச்செயலக பகுதியைத் தாண்டி பிரதமர் இல்லத்தை நெருங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனமான, பி டிவி நிறுவனத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த வீடியோ அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அரசு கட்டடங்களை சேதப்படுத்தக் கூடாது என்று இம்ரான் கான், போரட்டக்காரர்களுக்கு உத்தரவிட்டதால் அவரகள் கட்டிடத்தை சேதப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

தஹ்ரீக்-எ இன்சாப் கட்சியின் தலைவர் இமரான் கான் போராட்டக்காரர்களிடே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் பொறுப்பில் இருந்து அவராகவே விலகுகிறாரா அல்லது வலுக்கட்டாயமாக விலக வேண்டுமா என்பதை நவாஷ் ஷெரீப் முடிவு செய்ய வேண்டும்“ என்று தெரிவித்தார்.

அமைதியைக் கடைபிடிக்குமாறு தனது ஆதரவாளர்களை இமரான் கான் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தானில் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், அங்குள்ள பள்ளிகன் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் தலைநகர் இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் பதவியை இழக்கமாட்டேன் என்று நவாஷ் ஷெரீப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 11:14 pm

எகிப்தின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல்: 11 பேர் பலி

கடந்த ஆண்டு ஜூலை மாதம் எகிப்தின் அதிபராக இருந்த முகமது மோர்சியை அந்நாட்டு ராணுவத்தலைவர் அப்டெல் பட்டா அல் சிசி பதவியிறக்கி சிறைப்பிடித்தார். இவருக்குத் துணையாக நின்ற இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கமும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளானது. இவர்களுடன் இஸ்ரேல், காசா பகுதி, சூயஸ் கால்வாய்க்கு நடுவில் அமைந்துள்ள எகிப்தின் சினாய் தீபகற்பப் பகுதியில் வாழ்ந்துவரும் போராளிகளும் தாக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இவர்களும் சினாய் பகுதியில் பணியாற்றிவந்த பாதுகாப்புப் படையினரை மட்டுமே தாக்கி வந்தனர். ஆனால் தற்போது இவர்களின் தாக்குதல் நிலப்பகுதியிலும் வெடிகுண்டுத் தாக்குதல்களாகத் தொடர்கின்றது.

இத்தகைய தாக்குதல்களின் ஒரு தொடர்ச்சியாக சினாய் பகுதியில் சென்றுகொண்டிருந்த எகிப்து அரசு பாதுகாப்பு படையினரின் வாகனங்களின் மீது இன்று காலை நடைபெற்ற தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள பாதுகாப்பு மற்றும் மருத்துவத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் இரண்டு பேர் பலியானதாகவும், இதனைத் தொடர்ந்து மற்றவர்கள் தப்பிக்க முயற்சித்தபோது போராளிகளின் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

எகிப்தில் நடைபெற்றுவரும் இந்த வன்முறைகள் அந்நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் தூணாக விளங்கிவந்த சுற்றுலாத்துறையை மிகவும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 11:14 pm

சோமாலியாவில் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தின் பேரழிவில் சிக்கி இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

அதன்பின்னர் 2012-ம் ஆண்டில் சர்வதேச ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது போரினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டை சீரமைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. ஆனால் இஸ்லாமிய ஷெபாப் போராளிகளின் தொடர் தாக்குதல்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் தலைநகரின் உள்ளேயே நிலவும் பட்டினி நெருக்கடிகளும் அரசின் சாதனைக்கான தடையாகவே அறியப்படுகின்றது.

இன்று வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கை ஒன்றில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சோமாலியா மக்கள் பஞ்சத்திற்கு ஒருபடி குறைவான நெருக்கடி அல்லது அவசரமான சூழ்நிலைகளில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடானது ஜனவரியில் எடுக்கப்பட்டதைவிட ஐந்தாவது உயர்வீட்டினைக் குறிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு பிரிவு, அமெரிக்க நிதி பஞ்ச முன் எச்சரிக்கை அமைப்புகளின் கூட்டு முயற்சியாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு பஞ்சத்திற்குப் பின் சோமாலியாவில் மெதுவாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் மறுபடியும் அங்கு குறைந்த மழை அளவு, மோதல், வர்த்தகத் தடைகள் மற்றும் குறைக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளால் மோசமான உணவு பாதுகாப்பு நிலைமைக்கு வழி வகுத்துள்ளது. குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகின்றது.

43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பசியால் இறக்கும் ஆபத்தை எதிர்கொண்டிருக்க, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏழில் ஒன்று என்ற கணக்கில் சுமார் 2,18,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுகின்றனர் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 11:14 pm

இறக்குமதி வரியின்றி பொருட்களை விற்கும் உலகின் மிகப்பெரிய வணிக வளாகம் சீனாவில் திறப்பு

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி வரி விதிக்காமல் விற்பனை செய்யும் உலகின் மிகப்பெரிய வணிக வளாகம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.

தெற்கு சீனாவின் தீவுப் பிரதேசமான ஹைனான் மாகாணத்தின் சன்யா நகரில் சுமார் 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று மாடியில் அமைந்துள்ள இந்த ’ஹைட்டாங் பே இண்டர்நேஷனல் ஷாப்பிங் காம்ப்ளெஸ்’-சில் 300 சர்வதேச வணிக அடையாளங்களுடன் கூடிய தங்க நகைகள், கைக்கடிகாரங்கள், வாசனை திரவியங்கள், அழகிய வேலைப்பாடு மிக்க தோல் பொருட்கள் உள்ளிட்டவை இறக்குமதி வரியின்றி தயாரிப்பு விலைக்கே விற்பனையாகின்றன.



உலகச் செய்திகள்!  - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 11:16 pm

ஒரே மாதத்தில் 220000 இந்தியர்களுக்கு விசா வழங்கிய சவுதி அரசு

இந்திய வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கும், சவுதி முதலாளிகளுக்கும் இடையே தொடர வேண்டிய ஒப்பந்த உறவுகளை சீரமைக்கும் விதமாக ஒரு உடன்பாடு இரு நாடுகளாலும் கடந்த ஜனவரி மாதம் கையெழுத்திடப்பட்டது. இதில் டிரைவர்கள், கிளீனர்கள், காவலர்கள், பணியாளர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் தனியாரிடத்தில் பணிபுரியும் வீட்டுவேலை நிர்வாகிகள் போன்ற 12 பிரிவுகளுக்கான விதிமுறைகளை இந்த உடன்பாடு மேற்கொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ரமலான் புனித நோன்பு முடிந்து இந்தியத் தொழிலாளர்களைத் திரும்ப அழைத்துள்ளதாகவும், இதற்காக ஒரு மாதத்தில் அளிக்கப்பட்டுள்ள விசா அனுமதி 2,20,000 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளதாகவும் சவுதியின் சர்வதேச விவகாரங்களுக்கான தொழிலாளர் அமைச்சகத்தின் உள்துறை செயலாளர் அகமது அல் புகைட் தெரிவித்தார். இவற்றுள் 44,000 விசாக்கள் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கானது என்றும் மீதி பொது மற்றும் தனியார் பிரிவுகளுக்கானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு, மருத்துவ பரிசோதனை, முறையான தகுதி, பயிற்சி போன்ற தேவைகளால் இவர்கள் சவுதிக்கு வருவதற்கு கால தாமதம் ஏற்படக்கூடும் என்றும் இவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே சவுதியில் உள்ள ஒன்பது மில்லியன் புலம் பெயர்ந்த மக்கள் அந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை பூர்த்தி செய்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பெரும்பான்மையாக கட்டுமானத்துறை, சேவைத்துறை, வீட்டு வேலை போன்ற பிரிவுகளில் முறையான பயிற்சி பெறாத தொழிலாளர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 35 of 81 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 58 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக