புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:33 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:09 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:01 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:15 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 am

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Today at 12:14 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:10 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Yesterday at 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Yesterday at 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:12 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 5:42 am

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 5:40 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:38 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:37 am

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:54 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:51 am

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:50 am

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:49 am

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:46 am

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:43 am

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:41 am

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 5:35 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 2:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sat Apr 27, 2024 11:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Apr 27, 2024 8:52 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:51 pm

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:01 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:17 am

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:40 am

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Fri Apr 26, 2024 11:11 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Fri Apr 26, 2024 6:48 pm

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Fri Apr 26, 2024 6:43 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 6:34 am

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:09 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 10:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Thu Apr 25, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10 
2 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10 
2 Posts - 4%
சிவா
உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10 
1 Post - 2%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10 
1 Post - 2%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 51 Poll_c10 
10 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 51 of 81 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 66 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 1:35 am

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 51 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 01, 2015 3:18 am

அடுத்த 72 மணி நேரத்தில் பிலிப்பைன்சை தாக்கவிருக்கும் அதிவேகப் புயல்!

மணிலா, ஏப்ரல் 1 – வட பசிபிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த அதிவேக புயல் ஒன்று அடுத்த 72 மணி நேரத்தில் பிலிப்பைன்ஸ் தீவுகளை தாக்கவுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், பிலிப்பைன்ஸ் அரசு, மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை தயார்படுத்தி வருகின்றது.

‘சூப்பர் தைப்பான் மேசக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்புயல் கடந்த மார்ச் 27-ம் தேதி, வெப்பமண்டல அழுத்தம் காரணமாக உருவானது என்றும், அடுத்த சில நாட்களில் 5 வது பிரிவில் வகைப்படுத்தும் அளவில் அப்புயல் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தை அடைந்து வலுப்பெற்றுள்ளது என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

வரும் சனிக்கிழமை, அப்புயல் பிலிப்பைன்ஸ் தீவுகளில் கரையைக் கடக்கும் போது அதன் பலம் சற்று குறையலாம் என்றும், எனினும் இந்த தாக்குதலில் சில சேதாரங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வரும் ஞாயிறுக்கிழமை பிலிப்பைன்ஸ் மக்கள் ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருவதால், அவர்களை எச்சரித்து தயார்படுத்துவதில் அந்நாட்டு அரசு சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றது.



உலகச் செய்திகள்!  - Page 51 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 01, 2015 3:38 am


நைஜீரியாவின் புதிய அதிபராக முகம்மது புகாரி தேர்வு!

நைஜீரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முகம்மது புகாரி முதன் முறையாக அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது தோல்வியை ஒப்புக்கொண்ட தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாதன், தன்னை வீழ்த்திய எதிர்க்கட்சி வேட்பாளரான முகம்மது புகாரிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குட்லக் ஜோனாதனை விட முகம்மது புகாரி 27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. அங்குள்ள பல மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்ட போதிலும், தேர்தல் பார்வையாளர்கள், நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றதாக கூறியுள்ளனர். தேர்தல் அமைதியாகவும், நியாயமான வகையிலும், சுதந்திரமான முறையிலும் நடைபெறும் என வாக்குறுதி அளித்தேன்.

அந்த வாக்குறுதிகள் உண்மை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன என குட்லக் ஜோனாதன் அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளார். புகாரிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் ஜோனாதன் குறிப்பிட்டுள்ளார்.

புகாரியின் அனைத்து முற்போக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவரும் ஜோனாதனை பாராட்டியுள்ளார். தனது செயல்பாடுகளின் மூலம் நாயகனாக என்றும் மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பார் ஜோனாதன். இனி பதட்டம் தானாக முடிவுக்கு வந்துவிடும் என்றும் அந்த செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.

போகோஹாரம் தீவிரவாதிகளின் தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்ட போர்னோ மாகாணத்தில் மட்டும் புகாரிக்கு 94 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 51 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 8:33 am

கிறிஸ்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து உள்ளது அல் ஷபாப்; தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு

கென்யாவில் பல்கலைக்கழக கல்லூரிக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து உள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில், சோமாலியா எல்லையில் காரிசா பல்கலைக்கழக கல்லூரி உள்ளது. அந்த கல்லூரிக்குள் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் காலையில் நுழைந்து குண்டுகளை வெடித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினருடன் அவர்கள் துப்பாக்கி சண்டையும் போட்டனர். இந்த மோதலில் 2 பாதுகாவலர்கள் பலியாகினர். தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையிட்டு கொண்டே கல்லூரிக்குள் சென்றுள்ளனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். கென்ய ராணுவ வீரர்களும் அங்கு விரைந்தனர். கல்லூரியை ராணுவம் சுற்றி வளைத்தது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே தீவிரவாதிகள் கல்லூரியில் உள்ள விடுதிக்கு சென்றனர். சிலரை முகமூடி அணிந்து இருந்த தீவிரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்தனர் என்று முதலில் தகவல் வெளியாகியது. இந்த தாக்குதலுக்கு கென்யாவில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வரும் அல் ஷபாப் தீவிரவாதிகளே (அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உடைய தீவிரவாத இயக்கம்) இந்த தாக்குதலையும் நடத்தியுள்ளது தெளிவாகி உள்ளது. காரிசா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அல் கொய்தாவுடன் தொடர்பு உடைய அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர், ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், எங்களுடைய வீரர்கள் அங்கு சென்றார்களோ அப்போது இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டனர். நாங்கள் மற்றவர்களை பணயக்கைதியாக பிடித்து வைத்து உள்ளோம். எங்களுடைய வீரர்கள் அங்கேயே உள்ளனர். தொடர்ந்து அங்கு சண்டை நடைபெற்று வருகிறது. ஷபாப்பிற்கு எதிரானவர்களை கொலை செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம் என்று தெரிவித்து உள்ளான். தீவிரவாதிகள் கல்லூரியில் உள்ள விடுதியிலே உள்ளனர் என்று கென்யா தரப்பு தகவல் வெளியாகி உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 51 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 8:34 am

உலகின் 8-வது மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான், முதல் 2 இடங்களை ஈராக், சிரியா பிடித்தது

இன்டெல்சென்டர் நிறுவனம் வெளியிட்டு உள்ள உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 8-வது இடத்தை பிடித்து உள்ளது.

தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் உலகின் பல நாடுகளிலும் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்டு உள்ள இந்த நாடுகளில் அப்பாவி மக்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. அந்தவகையில் தீவிரவாதம் மற்றும் கிளர்ச்சியாளர் தாக்குதல் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக அளவில் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியலை ஆய்வு நிறுவனம் ஒன்று கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் நாடு 8-வது இடத்தை பிடித்து உள்ளது.

பாகிஸ்தானில் ஜனநாயக அரசை வீழ்த்தி விட்டு கடுமையான இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தும் நோக்கில், தெக்ரிக்–இ–தலீபான் (பாகிஸ்தான் தலீபான்) அமைப்பு போராடி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலீபான் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதியான வஜிரிஸ்தான் உள்ளிட்ட மண்டலங்களில் தளங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் கைபர் மண்டலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

மார்ச்-2015 இந்த பட்டியலில் மத்திய கிழக்கு நாடுகளே முதலிடம் பிடித்து உள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் ஈராக் மற்றும் சிரியா நாடுகள் முறையே முதல் மற்றும் 2-ம் இடங்களை பிடித்து உள்ளன. நைஜீரியா (3-வது), சோமாலியா (4-வது) ஆப்கானிஸ்தான் (5-வது) போன்ற நாடுகளுடன் லிபியா (6), ஏமன் (7), உக்ரைன் (9), எகிப்து (10) போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பிடித்து அதிர்ச்சி அளிக்கின்றன.



உலகச் செய்திகள்!  - Page 51 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:19 am

ஆப்கானிஸ்தானில் ஊழலுக்கு எதிரான போராட்டக் களத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 17 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஊழலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டக் களத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ராணுவத்திற்கு ஆதரவாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான வெளிநாட்டு படையினர் கடந்த ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டபிறகு அங்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய கோஸ்ட் மாகாணத்தில் இன்று ஊழலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது, கூட்டத்திற்குள் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

இந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் ஹூமாயூனும் பலத்த காயமடைந்ததாக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. தலிபான் தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



உலகச் செய்திகள்!  - Page 51 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 11:19 am

கென்ய பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 70 மாணவர்கள் பலி

கென்யாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் மாணவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 70 மாணவர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

சோமாலியாவின் எல்லையருகே கென்யாவின் வடகிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கரிஸா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு கல்லூரிக்குள் இன்று காலை முகமூடி அணிந்த மர்ம மனிதர்கள் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். இதையறிந்த பாதுகாப்பு படையினர் பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி வளைத்தனர்.

உடனே அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்த மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டு போலீசாரை மிரட்டினர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்நது. ஒரு கட்டத்தில் மர்ம மனிதர்கள் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 70 மாணவர்கள் பலியானதாகவும், 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் உள்துறை மந்திரி தெரிவித்தார். சுமார் 80 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு அல் கொய்தாவுடன் தொடர்புடைய அல் ஷாபாப் என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

அந்நியர்கள் சிலர் கரிஸா நகரில் புகுந்ததையடுத்து அந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி மூடப்பட்டு மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், தாக்குதல் நடந்த கல்லூரியில் தொடர்ந்து வகுப்புகள் நடந்து வந்ததால் ஏராளமான மாணவர்கள் பலியாகி உள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 51 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 11:56 am

மகாதிர்: அல்டான்துன்யாவைக் கொலை செய்யச் சொன்னது யார்?

அல்டான்துன்யாவைக் கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்பது மக்களுக்கு விளங்காத மர்மமாக உள்ளது என்கிறார் முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட்.

போலீஸ் அதிரடிப் படையின் முன்னாள் வீரரான சிருல் அஸ்ஹாரின் கூற்றை விசாரிக்க வேண்டும். அப்போதுதான் கோரமான அக்கொலைக்குப் பின்னணியில் இருந்தது யார் என்பது தெரியவரும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

“அக்கூற்றை (பிரதமர்) நஜிப்(அப்துல் ரசாக்) ‘அபத்தம்’ என்று கூறி நிராகரித்ததைத் தவிர அதன்மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

“இது மனித உயிர் சம்பந்தப்பட்டது. உத்தரவைப் பின்பற்றியதற்காக சிருல் சாவது கொடூரமாகும்”, என்று மகாதிர் அவரது வலைப்பதிவில் கூறினார்.

சிருல் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலை வைத்துத்தான் மகாதிர் இவ்வாறு கூறினார்.

சிருல், அவருக்கு இடப்பட்ட உத்தரவுப்படி நடந்து கொண்டதாகவும் மங்கோலிய பெண்ணான அல்டான்துன்யாவைக் கொலை செய்யும் நோக்கம் கொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்றும் அந்நேர்காணலில் கூறியிருந்தார்.



உலகச் செய்திகள்!  - Page 51 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 11:57 am

மகாதிர்: யாரும் நஜிப்பை நம்பவில்லை; பிஎன் தோல்வி உறுதி

பிரதமர் நஜிப் பதவி இறங்கினாலொழிய அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவும் பிஎன்னும் தோல்வியுறும் என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட்.

பிரதமர் பதவியேற்று ஆறு ஆண்டுகள் ஆகும் வேளையில் இதுவரை இல்லாத அளவுக்கு நஜிப்மீது மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார் முன்னாள் பிரதமர்.

நஜிப் இதுவரை அவர்மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கவே இல்லை. அதன் அடிப்படையிலேயே இந்த முன்கணிப்பைச் செய்வதாக மகாதிர் அவரது வலைப்பதிவில் கூறினார்.

“மக்கள்- மலாய்க்காரர்களோ, சீனர்களோ, இந்தியர்களோ, சாபா, சரவாக்கைச் சேர்ந்தவர்களோ- நஜிப்பை நம்பவில்லை.

“14வது பொதுத் தேர்தல்வரை நஜிப் அம்னோவுக்குத் தலைவராக இருந்தால் அம்னோவும் பிஎன்னும் தோல்வியுறும் என்பதை அம்னோ உறுப்பினர்களும் தலைவர்களும் உணர வேண்டும்.

“அம்னோ ஒருமுறை தோற்றால், அது மீண்டும் எழ முடியாது”, என்று மகாதிர் எச்சரித்தார்.




உலகச் செய்திகள்!  - Page 51 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 02, 2015 2:49 pm

பயனுள்ள தகவல் பகிர்வு
-

பிலிப்பைன்ஸை தாக்க இருந்த புயல் வலுவிழந்தது...
-
உலகச் செய்திகள்!  - Page 51 NCOYTi5vTaiFEJbotuoJ+650x366_04012145_hd24

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 10:42 am

மலேசியாவில் கேலிச்சித்திரக் கலைஞர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு

உலகச் செய்திகள்!  - Page 51 Cartoonini-Guard-1-April-2015
ஜுனார் வரைந்த கேலிச்சித்திரங்களில் ஒன்று

மலேசியாவில் எதிர்கட்சித் தலைவருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட முன்னணி அரசியல் கேலிச்சித்திரக் கலைஞர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு

மலேசியாவின் முன்னணி அரசியல் கேலிச்சித்திரக் கலைஞர் ஒருவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் குதவழி உறவு கொண்டார் எனும் குற்றச்சாட்டில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஜுனார் என்று அறியப்படும் ஜுல்ஃபிக்கி அன்வர் ஹக் கடந்த பிப்ரவரி மாதம் அன்வர் அவர்களின் வழக்கில், அரசு தலையிட்டது என்று தனது டிவிட்டரில் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இப்போது அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில், தேசத்துரோகச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது இவரது கைது மூலம் மேலும் தெளிவாகிறது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஜுனார் மீது தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் ஒன்பது பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, மலேசியாவில் ஒருவர் மீது இப்படி குற்றம் சுமத்தப்படுவது இதுவரை நடைபெற்றது இல்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 51 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 51 of 81 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 66 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக