ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 T.N.Balasubramanian

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஈழத்தின் அவலம் - ஆன்மிகப்பின்னணி !!

View previous topic View next topic Go down

ஈழத்தின் அவலம் - ஆன்மிகப்பின்னணி !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Nov 13, 2013 11:07 pmஈழம் தொடர்பாக எனக்கும் நோவுகள் உண்டு ! பல நாட்கள் பிரார்தித்திருக்கிறேன் பிரார்தித்தும் வருகிறேன்

ஆனாலும் இப்பிரச்சினையின் அடிப்படை ஒன்று உண்டு ! அது ஈழமே முதல் மனிதனின் பூமி ! எனவே ஒட்டுமொத்த மனித இனத்தின் பாவங்கள் அதனை பிடித்து வாட்டுகிறது

முதல் மனிதனான ஆதாம் தேவர்களை விட உயர்ந்தவனாக கடவுளால் தேவலோகத்தில் படைக்கப்பட்டு தேவர்கள் அனைவரும் அவருக்கு பணிவிடை செய்யும்படியாக கடவுளால் பணிக்கப்பட்டார் ! அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத தேவர்களில் சிலர் ஆதாமின் நிமித்தமாகவே கடவுளை எதிர்த்து அசுரர்களாக மாறினர் ! அந்த அசுரர்கள் சூழ்ச்சி செய்து ஆதாமை கடவுளுக்கு கீழ்படியாத செயலை செய்யவைத்தனர் அப்போது சாபத்திற்குள்ளாகி பூமியில் இலங்கையில் உள்ள ஸ்ரீபாதமலைக்கே முதலில் வந்து சேர்ந்தனர்

அங்கு ஆதாம் கடவுளை நோக்கி நீண்ட தவம் செய்து ஒப்புறவு ஆனார் ! கடவுளும் அவரை அங்கீகரித்து ஒட்டுமொத்த மனுக்குலத்திற்கு குருவாக - தட்சிணாமூர்த்தியாக இருந்து கடவுளை நோக்கி வழிநடத்தும் பொறுப்பை ஒப்புவித்தார் ! அவர் எப்போதும் கடவுளை தியானம் செய்கிறவராக இருந்து மனுக்குலம் செழிக்க வைத்தார் ! ஆதியிலேயே தேவர்கள் அவருக்கு பணிவிடை செய்ததால் அப்போதும் அவருக்கு தேவர்கள் பணிவிடை செய்தனர் ! இவரே இந்தியர்களால் அறியப்படும் சிவன் ! மனித வாழ்வுக்கு பின்பு தேவர்களை விட உயர்ந்த ருத்திரராக - அழித்தல் வேலையின் அதிதேவதையாக மரனமில்லா பெருவாழ்வு அருளப்பட்டு இறைபேரரசில் சேவை செய்து வருகிறார் அவரால் உபதேசிக்கப்பட்ட குருகீதை யில் தன்னை குருவாக - கடவுளை அடைய பாலமாகவே அவர் சித்தரித்துக்கொண்டார் ! அதுமட்டுமல்ல மனிதகுலம் நாட்பட நாட்பட வழிகெட்டு போகும்போதெல்லாம் அருப கடவுளின் உண்ணதமான ரூபமாகிய நாராயணன் பூமியில் அவதரித்து வந்து சற்குருவாக அசுர மாயைகளை அழித்து சீர்செய்வார் அவரே வேதங்களை உபதேசிப்பார் என்ற தீர்க்கதரிசணமும் குருகீதையில் அவரால் வெளிப்படுத்தப்பட்டது !

தேவன் என்ற நிலையிலிருந்து மனிதனாக மாறி வருகிற அவதாரம் என்பதால் அவர் பெயர் முருகன் என்றார் ! ஆனால் அவர் பூமியில் மனிதனாக சரீரத்தில் வருவதால் முதல் மனிதனான சிவனுக்கும் மகன்

கந்தர் அலங்காரம் --- 9 ---
தேனன்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலென்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன்று அசரீரி யன்று சரீரியன்றே -- முருகன் சரீரத்தில் வருகிறவர்

அப்படி பூமியில் வந்த முருகர்கள் அறுவர் மட்டுமே ! ராமர் , பரசுராமர் , வியாசர் , கிரிஸ்ணர் , பலராமர் , இயேசு அறுவரும் நாரயணமே ! அரூப கடவுளின் அசரீரியான நாராயணனின் சரீரங்கள் ! ஆறுமுகன் என்பது அதுவே !!


சரி ! யார் அந்த முருகன் என்று தெரியாமல் போனாலும் உருவகமான முருகனையே சற்குருவாக வைத்து கடவுளை வழிபடுவது வேதத்திற்கு ஏற்புடையது !

மாயோன் அவனே மனிதனாக மறுகி வருகிற சேயோன் - இந்த இருவரை மட்டுமே ஆதி தமிழ்சங்க காலத்தில் வழிபட்டனர் ! அந்த முதலாம் தமிழ் சங்கத்தில் சிவனும் ஒரு புலவர் என்பதை மறந்துவிடலாகாது !

சிவன் ருத்திரராக வானுலகத்திற்கு உயர்த்தப்பட்ட பின்பு மனிதர்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் பராம்பரிய பழக்கம் வந்து சிவனையே கடவுளாக வழிபடும் இணைவைப்பு வந்துவிட்டது !

ஆதியிலே சிவனை குருவாக வைத்து சிவனின் மூலமாக கடவுளை வழிபாடு செய்தனர் - அந்த மந்திரம் ` ஓம் நம சிவாய ` ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் சிவனின் மூலமாக ` அல்லது `சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் ` என்பது அந்த பீஜ மந்திரம்

அதில் ரெம்ப நைச்சியமாக சின்ன மாற்றம் உண்டானது -- ` ஓம் சிவாய நம ` ஓமை பொருள் இல்லாத ஒரு அடைமொழி போல பாவித்து ` சிவனை நமஸ்கரிக்கிறோம் ` என்பதாக மறுவியது

சிவன் ஓமின் பொருளை மறந்துவிட்டார் ! அதனால் முருகன் அவருக்கு அதன் பொருளை காதில் ஓதினார் ! அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - தகப்பன்சாமி !

இந்த பாராம்பரிய கதையில் இரண்டு விசயம் உள்ளது !

ஒன்று சிவன் முதலான மனித குலம் ஓம் - ஓரிறைவனையே துதிக்கிறோம் - என்ற பிரணவ மந்திரத்தை மறந்துவிட்டது அல்லது அதை ஒரு அலங்கார வார்த்தை போல அலட்சியப்படுத்திவிட்டது ! இரண்டு அதை நராயண அவதரங்களான சற்குருவை சார்ந்துகொண்டால் மட்டுமே உணர்த்தப்படுவோம் என்பது !

குலதெய்வ வழிபாடு என்பது மனிதர்கள் தங்களை தாங்களே பெருமைப்படுத்திக்கொள்வது ! மனிதர்களாக இருந்தவர்கள் மரித்த பிறகு எந்தப்பேரு பெற்றார்கள் அடுத்து எங்கு பிறந்தார்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியாமலேயே அவர்கள் கடவுளுக்கு இணையானவர்களாக மாறிவிட்டதாக புணைந்துகொள்ளுவது !

சிவனைப்போல ருத்திரராக வானுலகிற்கு உயர்த்தப்பட்டவர்கள் கூட சதா கடவுளை தியானிக்கிரவராக அவரால் ஒப்புவிக்கப்பட்ட பனியை மட்டும் செய்கிற ஒரு கருவியாக மட்டுமே - முழு சரணாகதி நிலை - அடைந்தவராக இருப்பார்களே தவிர அழைத்தாலும் ஒன்றும் செய்ய மாட்டார்கள் ! ஆனால் நமது கோரிக்கையை கடவுளிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள் ! வைஸ்ணவர்களில் சிறந்தவர் சிவன் என்றொரு வேதவாசகம் உண்டு

கடவுளின் இறைபேரரசில் ஒரு கருவியாக இருப்பார்களே ஒழிய சுய ராஜ்ஜியம் செய்யமாட்டார்கள் !

நாளை ஒரு நாள் நியாயத்தீர்ப்பு நாளன்று ` கடவுளை வழிபடாது உங்களை மட்டும் வழிபடும்படியாக ஒரு கூட்டத்தை பூமியில் உருவாக்கிக்கொண்டீர்களா ? ` என கேட்கப்பட்டால் இந்த பக்தர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மறுத்துவிடுவார்கள் ` என்ற எச்சரிக்கை குறிப்பு குரானில் உள்ளது !

திருக்குரான் : 5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “கடவுளையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று கடவுள் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று கூறுவார்.

திருக்குரான் : 16:86. இன்னும், இணை வைத்தவர்கள் தாங்கள் இணைவைத்தவர்களை (மறுமை நாளில்) பார்த்தார்களாயின் “எங்கள் இறைவனே! நாங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். உன்னையன்றி நாங்கள் இவர்களைத் தான் அழைத்துக் கொண்டிருந்தோம்” என்று அவர்கள் கூறுவார்கள்; அதற்கு (அந்தத் தெய்வங்கள், “நாங்கள் தெய்வங்களல்ல) நிச்சயமாக, நீங்கள் பொய்யர்களே” என்னும் சொல்லை அவர்கள் மீது வீசும்.

எப்படியானாலும் யாரானாலும் எந்தக்கோவிலுக்கும் சென்று அங்கிருக்கும் சக்தி அல்லது மூர்த்தம் மூலமாக கடவுளை வழிபடுவது அந்த சக்திக்கு அவமானமேயில்லை ! குரு என்பவர் கடவுளுக்கு இணையானவர் ; ஆகவே எந்த சக்தியையும் குரு என அழைப்பது அந்த சக்திக்கு அவமானமில்லை !

4:172. ஈஸாவும், (கடவுளுக்கு) நெருக்கமான தேவர்களும் கடவுளுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள்.

அவர் கடவுளா இல்லையா என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வதாலோ அல்லது தெரிந்து கொள்ளுவதாலோ ஒரு ஆன்மீக சாதனையாளனுக்கு - பக்தனுக்கு எந்தப்பலனும் விளையப்போவதில்லை !

ஆனால் அவரை குருவாக வைத்து ஏக இறைவனான கடவுளை வழிபடுவது எல்லா நன்மைகளையும் ஞானத்தையும் பெற்றுத்தரும் !

இந்து ஆகம வழிபாட்டு முறையில் கோவிலில் தீபம் காட்டப்பட்டு அந்த ஆரத்தி பகதர்களுக்கு கொண்டுவரப்படுகிறது ! அந்த ஆரத்தியே பக்தர்களால் தொட்டு வணங்கப்படுகிரது ! அந்த முறை ஆதியிலிருந்து சரியான முறையே ! நாம்தான் அதை பின்னாளில் தவறாக புரிந்துவைத்துக்கொண்டோம் !

கருவறையில் வெளிச்சம் இல்லாததால் முர்த்திக்கு தீபம் காட்டப்பட்டு மூர்த்தம் வழிபடப்படுவதாக அர்த்தப்படுத்திக்கொண்டோம் ! அது சரியல்ல -- மூர்த்தத்தின் மூலமாக தீபம் வழிபடப்படவேண்டும் !

அங்கு அர்ச்சகர் ஓம் என்று ஆரம்பிப்பார் ! ஓரிறைவனையே துதிக்கிறோம் என ஆரத்தி உச்சி நோக்கி உயர்த்தப்படும் ! அந்த ஆரத்தி அருட்பெரும்ஜோதியாகிய கடவுளுக்கு அடையாளம் ! சிலையின் மூலமாக - சிலையை குருவாக வைத்து ஆரத்தியின் மூலமாக அருட்பெரும்ஜோதியாகிய கடவுள் வழிபடப்படவேண்டும் !

இந்து கோவிலகளில் சிலைகளுக்கு மந்திர ஆவாகணம் செய்யப்பட்டும் ; பல பக்தர்களின் இடையறாத பிரார்த்தனையின் மூலமாகவும் ; வேத உச்சாடணங்களாலும் ஆகம நியமங்களலும் அருள்சக்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளது ! அதன் மூலமாக அங்கு வரும் பக்தர்களுக்கு ஆன்ம லயம் உண்டாகி அந்த சிலையின் மூலமாக கடவுளோடு ஒத்ததிர்வு கிடைக்கிறது !

அவ்வாறு ஜோதியை சிலையின் மூலமாக வழிபட்டு கொண்டுவரப்படும் ஆரத்தி தொட்டு வணங்கப்படுகிரது ! இங்கு வணங்கப்படுவது ஜோதி சொரூபமான ஏக இறைவனே !

ஓம் நமோ நாராயணாய !

ஓம் நமோ சிவாய !

இப்படியாக நாம் எந்தக்கோவிலுக்கு செல்கிறோமோ அந்த தேவர்களின் மூலமாக ஓரிறைவனை துதிப்பதே ஆதி இந்து தர்மம் - சனாதன நெறி ! தூய வைணவ நெறி !


ஆனால் காலப்போக்கில் சிறுசிறு நடைமுறை தவறுகள் நெறியை பிரளச்செய்கின்றன !

வெளிப்பட்டவைகள் மூலமாக கடவுளை வணங்குவதற்கு பதிலாக வெளிப்பட்டவைகளையே வழிபடுவதாக தடம் பிரள்வது சரியல்ல !படைத்தவரை விட்டுவிட்டு படைக்கப்பட்டவைகளை வழிபடுவது சரியல்ல ! ஆனால் படைக்கப்பட்ட எதன் மூலமாகவும் அதன் படைப்பாளரை வழிபடுவது நல்ல உபாயமே ! எனவே கடவுளாகிய ஒருவரையே அவர் மூலமாக கடவுளை வழிபடுகிறோம் என்று சொன்னால் அது அந்த நபருக்கு அவமானமுமில்லை ; எந்தத்தவறும் வராது !!

இந்த தவறில் மனிதன் தன்னைப்போன்ற மனிதனை மகிமைப்படுத்தி கடவுளை மட்டம் தட்டும் சுய பெருமையும் அடங்கியுள்ளது ! முழுசரணாகதி அடையாமல் கடவுளை நெருங்க முடியாது ! அந்தத்தவறு குலதெய்வ வழிபாட்டின் பின்னணி ! சிறு தெய்வ வழிபாடு கூடாது என்பதை வள்ளலாரும் கூட கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளார் !

யார் முலமாகவேனும் கடவுளை வழிபடுவது தூய வைணவம் - ஆதி இசுலாம் !
யாரையும் கடவுளாகவே வழிபடுவது சிறுதெய்வ வழிபாடு !


குலதெய்வ வழிபாட்டின் மூலமாக பல சித்துக்களை பெற்ற ராவணன் தன்னை ஈஸ்வரனாக அறிவித்துக்கொண்டார் ! அவரை அழித்து வைணவத்தை நிலைநாட்டவே ஸ்ரீராமர் அவதரித்தார் ! ராவணனின் பாவத்தால் மகளான சீதையின் மூலமாகவே அழிவு அவரை தேடி வந்தது ! அது உலகியல் வெளிப்பாடு ! ஆனால் ஆன்ம வெளிப்பாடு குலதெய்வ வழிபாட்டை அழித்து ஏக இறை வழிபாடான வைணவம் நிலை நாட்டப்பட்டது !

ராவணனின் தம்பியாகிய விபீஸ்ணன் ஆழ்வானாக பிரகடனப்படுத்தப்பட்டு இலங்கையில் வைணவத்தை வளர்க்க ``திருவரங்கபெருமாள்`` மூர்த்தமும் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டார் அந்தோ விதி அது நிறைவேறவில்லை !


மூர்த்தம் திருச்சியில் இறக்கப்பட்டு நிலைத்துவிட்டது ! இலங்கையிலும் வைணவம் வளரவேயில்லை ! விபீஸ்ணன் ஆழ்வான் பணி செய்யாமல் தோல்வியடைந்தார் ! அதனால் குலதெய்வ வழிபாடாகிய சைவம் மட்டுமே நிலைத்து ஈழத்தின் துன்பத்திற்கு காரனமாக இருக்கிறது ! எவ்வளவு பிரயத்தனங்கள் செய்தும் தியாகம் செய்தும் கொடுமைகளையே அனுபவித்தும் உலகம் அதை உணராமல் ஈழத்தமிழருக்கு ஆதரவு செய்வாரின்றியேதான் இருக்கிறது !

கடவுளின் கருணை அங்கு இன்னும் கிடைக்கவில்லை !

சைவத்தை வைனவமாக மாற்றும் ஒரு உபாயமே கெளமாரம் ! முருகனை சற்குருவாக வைத்து கடவுளை வழிபடுவது ! முருகன் சிவனின் மகன் ஆனதால் சைவர்கள் அவரின் மூலமாக வழிபடுவது ஏற்புக்குறியதாகிவிடுமல்லவா ?

கந்த சஸ்ட்டி காலங்களில் அந்த உபாயம் ஈழத்தின் சாபத்தை போக்கட்டும் என இறை நெறி உணர்ந்தோர் வேண்டிக்கொள்வோம் !ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ஈழத்தின் அவலம் - ஆன்மிகப்பின்னணி !!

Post by சிவா on Thu Nov 14, 2013 12:29 pm

குலதெய்வ வழிபாட்டின் மூலமாக பல சித்துக்களை பெற்ற ராவணன் தன்னை ஈஸ்வரனாக அறிவித்துக்கொண்டார்
ராவணன் சிறந்த சிவத் தொண்டர் தானே! ராவணின் குல தெய்வம் சிவனா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈழத்தின் அவலம் - ஆன்மிகப்பின்னணி !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Fri Nov 15, 2013 10:30 pm

ஆம் : சிவனை வழிபட்டு பல வரங்களை பெற்று தன்னை ஈஸ்வரனாக அறிவித்துக்கொண்டார்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ஈழத்தின் அவலம் - ஆன்மிகப்பின்னணி !!

Post by சிவா on Sat Nov 16, 2013 8:29 am

@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:ஆம் : சிவனை வழிபட்டு பல வரங்களை பெற்று தன்னை ஈஸ்வரனாக அறிவித்துக்கொண்டார்

நன்றி அண்ணா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈழத்தின் அவலம் - ஆன்மிகப்பின்னணி !!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum