புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.

Page 2 of 2 Previous  1, 2

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Nov 28, 2013 10:48 am

First topic message reminder :

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Sivaji-Ganesan

நடிகர் திலகத்தின் சிலையை அகற்றுவது என்பது ஒரு கண்ணியமற்ற செயல். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்ற காரணம் உண்மையாக இருக்குமானால் தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான சிலைகள் அதுவும் சாலைகளின் நடுவே ஆக்கிரமித்திருக்கும் அனைத்து சிலைகளும் அதே போல அகற்றப்படவேண்டும். ஆனால் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது என்பது ஏதோ காழ்ப்புணர்ச்சியிலும், தனி மனித விரோத போக்கு என்ற ரீதியின்படியும் இருப்பது போல் உள்ளது. தவிர நாம் வணங்கும் தெய்வங்கள், வரலாற்று நாயகர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்று அனைவரையும் நம் கண் முன் அச்சு அசலாக நிறுத்திக் காட்டி பெரியவர் முதல் சிறியோர் வரை இப்படித்தான் கட்டபொம்மன் இருந்திருப்பார், இப்படித்தான் கப்போலோட்டிய தமிழன் இருந்திருப்பார் இப்படித்தான் சிவபெருமான் இருப்பார், இப்படித்தான் வீர சிவாஜி இருந்திருக்கக் கூடும்  என்று அனைவரது மனக்கண்களிலும் அவர்களை நிறுத்திய அந்த மகாநடிகனும் கூட அவருக்கு சிலை நிறுவுமளவிற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தவரே. கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் அந்த கண்ணியமான நடிகரின் சிலை அந்த பகுதிக்கே ஒரு அழகையும், கம்பீரத்தையும், பெருமையையும் தருகிறது என்பது மறுக்க இயலாத ஒன்று. தவிர நமது தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளச் சின்னமாகவும் அது விளங்குகின்றது. தவிரவும் உலக நடிகர்களை மிஞ்சும் வண்ணம் நடித்துக் காட்டி அனைவரது அன்பிற்கும் தான் ஏற்ற பாத்திரங்களால் பாத்திரமாகி பாரதத்திற்கே பெருமைத் தேடித் தந்த அந்த மாபெரும் நடிகரின் சிலை அங்கிருக்க மிகவும் தகுதியானது. இதில் மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் உள்ளது என்ற விகண்டாவிவாதம் ஏற்புடையது அல்ல. சிவாஜி மகாத்மாவுக்கு நிகரானவரா என்ற அர்த்தமற்ற கேள்விகளை சிலர் எழுப்புகிறார்கள். மகாத்மாவுக்கு சமமாக இருப்பவர்களுக்குத்தான் கடற்கரையில் சிலைக்கு இடம் என்றால் அங்கு எம்ஜியார் அவர்களுக்கோ, அறிஞர் அண்ணா அவர்களுக்கோ மற்றும் பிறருக்கு சிலைகளுக்கோ, நினைவுச் சின்னங்களோ, சமாதியோ அமைத்திருக்க முடியாது. எல்லோரும் மகாத்மாக்கள் ஆகி விட முடியாது. அவரவர்களும் ஒவ்வொரு விதத்தில் போற்றத்தக்கவர்கள். மக்களுக்காக வாழ்ந்தவர்கள். போராடியவர்கள். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அவர்களும் மதிக்கப்பட்டு அவர்களுக்கு சிலைகள், நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டிருப்பதும் வெகு நியாயமே!

நடிகர் திலகத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த ஜனத்திரளைப் பார்த்து தமிழ்நாடே ஸ்தம்பித்தது. அரசியலில் தோல்வி அடைந்தாலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன் அசத்தலான நடிப்பின் மூலம் நம் தமிழக நெஞ்சங்களில் கொலு வீற்றிருக்கும் அந்த மாபெரும் கலைஞனின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த கூட்டம் ஒன்றே தமிழகம் அவர் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு  சான்று.

அப்பேற்பட்ட கலைஞனின் சிலையில் கைவைக்க தமிழக அரசு துணிந்திருப்பது துரதிருஷ்ட வசமானது. நடிகர் திலகத்தின் அந்த அழகிய சிலையைக் காண அவரது ஆத்மார்த்தமான பக்தர்கள் பலர் பேருந்துகளில் இதற்காகவே ஏறி சிலையை வணங்கிச் செல்வதும் உண்டு. சிவாஜி ரசிகர்களுக்கென்று அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் தலைவனைப் பற்றி பேசி மகிழ அவர்கள் உரிமையுடன் தேர்ந்தெடுத்திருப்பது மூன்று இடங்கள். ஒன்று சிவாஜி அவர்களின் சொந்தத் திரையரங்கான சாந்தி திரை அரங்கம். கிட்டத் தட்ட அவர்களுக்கு அது ஒரு புண்ணியஸ்தலம். சிவாஜி ரசிகர்களின் அடுத்த கோவில் சிவாஜி அவர்களின் வீடான 'அன்னை இல்லம்'. இதையும் அவரது ரசிகர்கள் கோவிலாக வழிபட்டு வருகிறார்கள். அடுத்து கடற்கரையில் நிற்கும் சிவாஜி சிலை. இங்கே குழுமிக் கூடி அவர்கள் சிவாஜி அவரகளைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது உண்டு யாருக்கும் இடைஞ்சல் தராமல்.

நாட்டில் எவ்வளவோ வேலைகள் பாக்கி இருக்க சிவாஜி சிலையை அகற்ற மட்டும் இந்த அரசு இவ்வளவு தீவிரம் காட்டுவதேன் என்ற கேள்வி எல்லோரது நெஞ்சிலும் எழுந்துள்ளது. சிவாஜி அப்படி என்ன தவறு செய்தார்? அவரது சிலை என்ன பாவம் செய்தது? அவரது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரே நினைவுச் சின்னமாக விளங்கும் அந்த சிலையையும் நொண்டிச் சாக்குகள் சொல்லி எடுப்பதால் இந்த அரசுக்குக் கிடைக்கக் கூடிய லாபதான் என்ன? நடிகர்களின் பிதாமகரின் சிலை பற்றி வாய் திறக்காமல் வாய் மூடி மௌனியாக நடிகர் சங்கம் இருப்பதின் பின்னணி என்ன? சரத்குமார், சிவாஜியின் மேல் உயிரையே வைத்திருக்கும் ராதாரவி போன்றோர்கள் அரசியல் பிழைப்புக்காக வாய் திறவாமல் இருக்கிறார்களா? அல்லது பயத்தின் காரணமாகவா?  நான் சிவாஜி தோளில் வளர்ந்தேன்... நான்தான் சிவாஜியின் முதல் பிள்ளை ராம்குமார், பிரபு எல்லாம் எனக்குப் பிறகுதான் என்று பேட்டிகளில் முழங்கும் சீனியர் நடிகர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எல்லாம் பேச்சளவிலும், ஏட்டளவிலும் தானா என்ற கேள்வியும் எழுகிறது.  

நிஜமாகவே போக்குவரத்திற்கு இடைஞ்சல் என்றால் சிலை எடுப்பதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபணையும் இல்லை. போக்குவரத்து இடைஞ்சல்களை மீறி அந்த சிலை இருக்க வேண்டும் என்று வாதிடுவது  நியாமும் ஆகாது. இறந்து போனவர்களின் சிலைகளை விட வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனித உயிரும் முக்கியமானது. விலை மதிப்பற்றது. விபத்து என்பது பல வழிகளில் நடை பெறுகிறது. குடிபோதை, கவனமின்மை, போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமை, சரியான ஓட்டும் பயிற்சி இல்லாமை என்று. அத்தகைய காரணங்களால் நடைபெறும் விபத்துகளுக்கு சிலைகள் எப்படி பொறுப்பாக முடியும்? அதுவும் சிவாஜி சிலையால் மட்டுமே சிட்டியில் விபத்து ஏற்படுகிறது என்று சொல்வது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இல்லை?! ஆனால் இதைப் போல பல சிலைகள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் தருகின்றனவே! அவைகளை மட்டும் விட்டு வைக்கப் படுவது எந்த வகையில் நியாயம்?

சிவாஜி ரசிகர்கள் பொதுவாகவே வம்புதும்புவிற்குப் போகாதவர்கள். அவர்களுக்கு கல்லெறியத் தெரியாது, கறுப்புக் கொடி பிடிக்கத் தெரியாது. போராட்டங்கள் நடத்தத் தெரியாது. வாகனங்களைக் கொளுத்தத் தெரியாது. அப்படி அவர்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை பயந்து போய் சிலைப் பற்றி எதுவும் செய்யாமல் 'கம்'மென்று விட்டிருப்பார்களோ என்னமோ? அவர்களுக்கு எந்த பக்க பலமாக எந்தப் பின்னணியும் கிடையாது. பெரும்பாலும் அவர்கள் அமைதியானாவர்கள்தான். இப்போதும் அவர்கள் கண்ணியம் காக்கிறார்கள். முறையாக சிவாஜி சமூக நலப் பேரவை என்ற அமைப்பு சட்ட ரீதியாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறது. சிவாஜி அபிமானிகள் தங்கள் மதிப்பிக்குரியவரின் சிலை என்ன கதிக்கு ஆளாகுமோ என்று கலங்கி நிற்கிறார்கள். அவர்களின் உணர்வுகள் கண்டிப்பாக மதிக்கப் பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அது மட்டுமல்ல. சிவாஜி ரசிகர்களின் வேதனைக் குரலை ஒரு புறம் புறந்தள்ளி விட்டாலும் சிவாஜியின் புதல்வர்கள் ராம்குமார், பிரபு இவர்களின் மன நிலைமை எவ்வாறு இருக்கும் என்று சற்று யூகியுங்கள். தங்கள் தந்தையின் சிலைக்கு நேரும் அவமானங்களை அவர்கள் அமைதியாக கண்ணீருடன் பார்ப்பதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழி தோன்ற வாய்ப்பில்லை. அப்படி வன்முறையைத் தூண்டும் பிள்ளைகளும் இல்லை அவர்கள்.

கடந்த ஆட்சியாளர்களால் வைக்கப் பட்ட சிலை... அது எடுக்கப் பட்டே தீர வேண்டும் என்ற பழி சொல்லுக்கு இந்த அரசு ஆளாகி விடக் கூடாது என்பதே நமது விருப்பம். அது முறையான செயலும் அல்ல. இப்போது இன்னொரு கேள்வி மனதில் எழாமல் இல்லை. சிவாஜி சிலை தற்சமயம் இருக்கும் இடத்தில் வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஜாதிய பின்னணித் தலைவர்கள் சிலைகள் இருக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்போது இந்த அரசு அப்படிப்பட்ட தலைவர்களின் சிலையைத் தூக்குமா? அப்படி தூக்கினால் சம்பந்தப்பட்ட அரசியல்கட்சிகள் சும்மா இருக்குமா? போராட்டம் வெடிக்காதோ? ஓட்டுக்களை முன்னிட்டாவது அந்த சிலைகளின் மேல் கை வைக்க மாட்டார்கள். ஆனால் சிவாஜி?.... இளிச்சவாயர் ஆயிற்றே! கேக்க யாருமே இல்லையே! அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் இல்லையே! கேவலம் ஒரு சாதாரண நடிகர் தானே! அவர் சார்பாக என்ன பெரிய ஓட்டு வங்கி இருக்கிறது? அவரால் யாருக்கும் ஒரு ஆதாயமும் இல்லையே? அதனால் சிலையை எடுத்தால் போயிற்று. யார் இருக்கிறார்கள் கேட்க? உண்மையான சிவாஜி விசுவாசிகளைத் தவிர.

மொத்தத்தில் நியாயமான காரணமாக இருப்பின் அந்த சிலை அகற்றப்படலாம். வீம்புக்கு என்றால்?....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 01, 2013 2:54 pm

சிலையை அகற்ற அரசு தரப்பில் கூறும் காரணம் " அந்த இடத்தில் 10 விபத்துக்கள் நடந்துள்ளன என்று. கிட்டத்தட்ட சுமார் 45,000 மேல் ஒரு நாளில் வாகனங்கள் அந்த சாலையில் பயணிக்கின்றன.
அப்படி உண்மையிலயே சிலை ஒரு தடை என்றால் ஒரு வருடத்தில் சுமார் குறைந்தது 250 முதல் 500 விபத்துக்கள் அல்லவா நடந்திருக்கவேண்டும்? அரசு தரப்பில் கூறும் இந்த காரணத்தை மேலும் ஆராய்ந்தால் இரவு 11 மணிக்கு மேல் விபத்து நடைபெறுவதை கூறுகிறார்.
சிலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் TASMAC இருக்கும் வரைக்கும் இரவு 11 மணிக்கு மேல் விபத்து நடந்துகிட்டு தான் இருக்கும்

Barrister Rajinikanth
Barrister Rajinikanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013

PostBarrister Rajinikanth Sun Dec 01, 2013 4:38 pm

சிலையை அகற்ற நினைப்பதும் முயற்சிப்பதும்  சிவனை அகற்ற நினைப்பதும் முயற்சிப்பதும் ஒன்று !
அது சிலையிருக்கும் இடம் அல்ல ! சிவனிருக்கும் இடம் ! அகற்ற நினைப்பது சிவனை  ! சிவன் சொத்தே  குல நாசம் என்றால் ...

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Y39xvVFJRlO0tk5ywQiN+Capture

Barrister Rajinikanth
Barrister Rajinikanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013

PostBarrister Rajinikanth Sun Dec 01, 2013 8:15 pm

ஞாயமான காரணம் ?
எது ?
ஒரு நாளில் கிட்டத்தட்ட 45,000 வண்டிகள் மேலும் கீழும் சென்று வந்துகொண்டுள்ளது. அதாவது 365 நாளில் கிட்டத்தட்ட 16425000 வந்து போகின்றன. ஒரு ஆண்டில் இங்கே 10 விபத்துக்கள் நடந்துள்ளதாக அதாவது சென்ற வருடம் மொத்தம் 12 விபத்துக்கள். இந்த வருடம் இதுவரை 10 விபத்துக்கள் நடந்துள்ளதாக போக்குவரத்து துறை கூறியுள்ளது.

ஒரு நாளைக்கு இவ்வளவு வண்டி வந்துபோகும்போது ஒரு வருடத்தில் குறைந்தது 250 - 350 விபத்துக்கள் சிறியதும் பெரியதுமாக நடந்திருந்தால், அதுவும் சிலைக்கு அருகே நடந்திருந்தால் சிலையை குறை சொல்லலாம். ஆனால் அப்படி எதுவுமே நடக்காதபோது, மனுதாரர் நந்தனம் தேவர் சிலையை குறிப்பிடவில்லை, மவுண்ட் ரோடு அண்ணா சிலையை குறிப்பிடவில்லை, எழும்பூர் அழகு முதுகொனே சிலையை குறிப்பிடவில்லை(மேற்கூறிய சிலையருகில் மிக அதிக விபத்துக்கள் நடைபெற்றிருகின்றன) இவை எல்லாம் விட்டுவிட்டு சிவாஜி சிலையை காரணம் காட்டியிருப்பது, மிகவும் சந்தேகத்திற்கு இடமளிப்பது மட்டுமல்லாமல், காழ்புனர்சியல் செய்துள்ள செயல் என்பதை தான் காட்டுகிறது !

போக்குவரத்து துறை வர வர வசூல் ராஜாக்கலாகதான் இருக்கிறார்களே தவிர எங்குமே அவர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் அதிகாரிகளாக செயல் படுவதே இல்லை.

தமிழனை மதிக்காத தமிழகம் இந்த திராவிட கட்சிகளின் கைகளில் சிக்கி இன்னும் கேவலமாக சிதைந்துபோகதான் போகிறது !

திரு வாசு அவர்களின் ஆதாரங்களிலிருந்து திரு.சிவாஜி அவர்களின் SOCIETY CONSCIOUNESS அவர் காலத்தில் இருந்த மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் தவிர மற்ற எந்த நடிகரை காட்டிலும் அதிகம் என்பது இப்போதாவது புரிந்திருக்கும் என்று நினைகிறேன்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 01, 2013 8:38 pm

வருக பாரிஸ்டர் அவர்களே! வருக! முதலில் ஈகரையில் இணைந்ததற்கு எனது முதற்கண் மனமார்ந்த வாழ்த்துக்கள். கௌரவம் 'பாரிஸ்டர்' ரஜினிகாந்த் போலவே ஆவேசத்துடன் வாதாடுகிறீர்கள். தங்கள் மன வலி புரிகிறது. ஈகரையில் உள்ள அன்பு உள்ளங்கள் அனைத்தும் மிகவும் மென்மையானவை. மிருதுவானவை. நாம் சொல்லும் விஷயங்களை அழகாக உள்வாங்கி உறுப்பினர்கள் புரிந்து கொள்கிறார்கள். தங்களுக்கு எது தேவையோ அதை அழகாகக் கேட்டும் தெரிந்தும், புரிந்தும் கொள்கிறார்கள். நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் சம்பந்தமாக அவர்களும் நிஜமாகே கவலை கொள்கிறார்கள். உலக அளவில் நம் தமிழ் நாட்டின் பெருமையை உயர்த்திய அந்த மகா நடிகரின் சிலைக்கு எந்த குந்தகமும் வந்து விடக் கூடாது என்று இறைவனை மனதாரப் பிரார்த்திப்போம்.

தங்களின் நியாயமான கோபம் புரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

மறுபடியும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 01, 2013 8:41 pm

ராஜா wrote:
சிலையை அகற்ற அரசு தரப்பில் கூறும் காரணம் " அந்த இடத்தில் 10 விபத்துக்கள் நடந்துள்ளன என்று. கிட்டத்தட்ட சுமார் 45,000 மேல் ஒரு நாளில் வாகனங்கள் அந்த சாலையில் பயணிக்கின்றன.
அப்படி உண்மையிலயே சிலை ஒரு தடை என்றால் ஒரு வருடத்தில் சுமார் குறைந்தது 250 முதல் 500 விபத்துக்கள் அல்லவா நடந்திருக்கவேண்டும்? அரசு தரப்பில் கூறும் இந்த காரணத்தை மேலும் ஆராய்ந்தால் இரவு 11 மணிக்கு மேல் விபத்து நடைபெறுவதை கூறுகிறார்.
சிலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் TASMAC இருக்கும் வரைக்கும் இரவு 11 மணிக்கு மேல் விபத்து நடந்துகிட்டு தான் இருக்கும்
உண்மை! முற்றிலும் உண்மை. ராஜா சார், தங்கள் பதிவைக் கண்டதும் 'கிளுக்' கென்று சிரித்து விட்டேன், ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்றும் சிந்தித்துப் பார்த்து உணர்ந்தேன்.

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Dec 02, 2013 1:49 pm

vasudevan31355 wrote:
ராஜா wrote:
சிலையை அகற்ற அரசு தரப்பில் கூறும் காரணம் " அந்த இடத்தில் 10 விபத்துக்கள் நடந்துள்ளன என்று. கிட்டத்தட்ட சுமார் 45,000 மேல் ஒரு நாளில் வாகனங்கள் அந்த சாலையில் பயணிக்கின்றன.
அப்படி உண்மையிலயே சிலை ஒரு தடை என்றால் ஒரு வருடத்தில் சுமார் குறைந்தது 250 முதல் 500 விபத்துக்கள் அல்லவா நடந்திருக்கவேண்டும்? அரசு தரப்பில் கூறும் இந்த காரணத்தை மேலும் ஆராய்ந்தால் இரவு 11 மணிக்கு மேல் விபத்து நடைபெறுவதை கூறுகிறார்.
சிலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் TASMAC இருக்கும் வரைக்கும் இரவு 11 மணிக்கு மேல் விபத்து நடந்துகிட்டு தான் இருக்கும்
உண்மை! முற்றிலும் உண்மை. ராஜா சார், தங்கள் பதிவைக் கண்டதும் 'கிளுக்' கென்று சிரித்து விட்டேன், ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்றும் சிந்தித்துப் பார்த்து உணர்ந்தேன்.
உண்மை வார்த்தைகள்..
டாஸ்மாக்கை அகற்றிவிட்டு கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் தெரியும் எதனால், எப்படி, ஏன் விபத்து உண்டாகிறது என்று..

எதற்கு எடுத்தாலும் போராடும், தமிழ் திரை உலகம், இதற்க்கு சும்மா இருக்கிறது, அம்மா என்றதும் பயம் வந்துவிட்டது... விஜய் படம் மாதிரி, நம்ம படமும் ரிலிஸ் ஆகாம போய்டா என செய்வதுன்னு எல்லாரும் யார பத்தியோ பேசுறாங்கன்னு இருக்காங்க... தங்கள் துறையை சேர்ந்த மாபெரும் மனிதர், அவர் நடிப்பை பார்த்து இன்று பலர் நடிப்பை பயில்கின்றனர்.என்பதை தமிழ் திரை உலகினர் மறந்து விட்டனர்...

அன்புடன் அமிர்தா

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Aநடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Mநடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Iநடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Rநடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Tநடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 Hநடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 A
veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Dec 06, 2013 9:26 am

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். - Page 2 E_1380273801

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலை பற்றி திரு ஒய்.ஜி. மகேந்திரா அவர்களின் கருத்து. ஆங்கிலத்தில்

These are thoughts from a die hard fan of Nadigar Thilagam Sivaji Ganesan. We are fortunate enough to be born in the era of Sivaji Ganesan. an actor's actor who led his life as a law abiding citizen in Tamilnadu.--perhaps the only actor who LIVES in the hearts of millions of Tamilians all over the world transcending barriers of politics, caste, creed and religion.
If his statue in the beach is really a hindrance I am sure by now his athma would have gotten into the statue and walked away to a safer place--that was his commitment to rules and discipline,

The reasons put forth for removal seem very flimsy .Here are my personal observations-- turning right from Radhakrishnan Salai to Santhome does not involve this statue at all. So also traffic from Santhome going straight on Rajaji Salai or turning left on Radhakrishnan Salai... Traffic from Rajaji Salai turns right on Radhakrishnan Salai only around the traffic island which is beyond the Statue position. And believe me we have traffic lights on all sides. The only way there can be accidents is when motorists flout traffic signals or are drunk. How is the Sivaji statue responsible for this ??
What hurts most is that the discussion about removing this statue resembles something like removing an illegal tea shop on the road. Is that all the respect we give to this legend who has delighted millions of Tamilians not to speak of the fact that he did a documentary for the POLICE DEPT called Ungal Nanban produced by the then I.G. Sri Paramaguru. And of course have we forgotten THANGA PADHAKKAM a film that raised the image of the Police to Himalayan Heights.

Well in spite of everything if a situation arises that the statue has to be removed and relocated--here is my very humble suggestion. Shift it to the place where now MA PO SI statue stands and shift MA PO SI statue to the beachfront... This will not be a futile exercise. Think of it-What better place for Sivaji to stand than in the road named after him SO GRACIOUSLY BY OUR CHIEF MINISTER DR J. JAYALALITHA.
AND WHAT BETTER PLACE FOR SILAMBU SELVAN MA PO SI THAN ALONGSIDE THE SAVANTS OF TAMIL LITERATURE LIKE AVVAIYAR, BHARATHI, KAMBAN AND THE LIKE ON THE MARINA BEACHFRONT..

OR BETTER STILL-LET THINGS BE AS THEY ARE.......

06.12.2013 தேதியிட்ட தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள, திரு ஒய்.ஜீ.மகேந்திராவின் கடிதம்

சிவாஜி சிலை ஒரு யோசனை!

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், சென்னையிலிருந்து, எழுதுகிறார்

சென்னையில் வாழும், ஒரு சிவாஜி பித்தனின் பணிவான மடல். நடிகர் திலகம் சிவாஜி சிலையை, இடமாற்றம் செய்ய சொல்லும் காரணங்கள், ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து, வலப்புறம், கடற்கரை சாலையில் திரும்புவோருக்கு, சிலை ஒரு தடங்கல் இல்லை. கடற்கரை சாலையிலிருந்து, ராதாகிருஷ்ணன் சாலையில், வலப்புறம் திரும்புவோருக்கும், சிலை ஒரு தடங்கல் இல்லை. சிலையை தாண்டி தான், 'டிராபிக் ஐலேண்ட்' உள்ளது. சாந்தோம் சாலையில் இருந்து, இடப்புறம், ராதாகிருஷ்ணன் சாலையில் திரும்புவோருக்கும், சிலை ஒரு தடங்கல் இல்லை. அங்கு, எல்லா திசைகளுக்கும், சிக்னல் உள்ளது. சிக்னலை மீறுவோருக்கும், குடித்து விட்டு ஓட்டுபவர்க்கும் (இவர்கள் சட்டத்தை மதியாதவர்கள்) இடையூறாக இருக்கலாம். சட்டத்தை மதிக்காதவர்களுக்காக, சிலையை இடமாற்றம் செய்ய கூறுவது, விரும்பத்தக்க நிகழ்வு அல்ல. மேலும், சிவாஜி சிலையின் இடமாற்ற செய்திகள், ஏதோ, சட்டத்திற்கு புறம்பான கட்டடத்தை அகற்றுவது போல் வெளிவருவது, மனதை உறுத்துகிறது. சிவாஜி வாழ்ந்த சமயம், முன்னாள் ஐ.ஜி., பரமகுருவின் தயாரிப்பில், போலீசின் பெருமைகளை எடுத்துக் காட்டும் வண்ணம், 'உங்கள் நண்பன்' என்ற ஒரு குறும்படத்தில், நடித்துக் கொடுத்தார். 'போலீஸ் என்பவர், சட்டத்திற்கு புறம்பாக நடக்கும், தன் சொந்த மகனையே தண்டிக்கும் நேர்மை உடையவர்கள்' என்று, போலீசாரின் மதிப்பை, இமயத்துக்கு உயர்த்தும் வண்ணம், தங்கப்பதக்கம் படத்தில் சித்தரித்துக் காட்டியவர். எல்லாவற்றையும் மீறி, சிலையை அகற்றி தான் தீர வேண்டும் என்ற நிலை ஏற்படின், இதோ என் பணிவான வேண்டுகோள்... சிவாஜியின் பெயர், எக்காலத்திற்கும் நிலைக்கும் வண்ணம், அவர் வீடு உள்ள வீதிக்கு, அவர் பெயரை சூட்டினார், முதல்வர் ஜெ., அங்கே இருக்கும் ம.பொ.சி., திருவுருவச் சிலையை, அவர் வாழ்த்திய தமிழறிஞர்களின் சிலைகள் அமைந்த, மெரீனா கடற்கரையில் நிறுவி, அந்த இடத்தில், சிவாஜியின் சிலையை நிறுவலாமே. கம்பனும், பாரதியும், வீரமாமுனிவரும் கம்பீரமாக நிற்கும், அந்த கடற்கரை ஓரம் நிற்பது தான், சிலம்புச் செல்வர் மா.பொசி.,க்கு பெருமை. தன் வாழ்நாளை கம்பீரமாக கழித்த, அந்த சிவாஜி, சாலையின் நுழைவில் நிற்பது தான், நடிகர் திலகத்திற்கு பெருமை. இந்த சிவாஜி பித்தனின் எண்ண ஓட்டங்கள், போக்குவரத்துத் துறை ஆணையரின் ஒப்புதலைப் பெறும் என்று நம்புகிறேன்.

நன்றி தினமலர் மற்றும் திரு ஒய்.ஜி.மகேந்திரா - http://www.dinamalar.com/splpart_detail.asp?id=67

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக