புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
111 Posts - 60%
heezulia
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத மரத்தை வெட்டலாமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 10:38 am

First topic message reminder :



சிவகங்கை சமஸ்தானத்து ஆட்சிக்கு உட்பட்ட திருபுவனம் என்கிற ஊரில் நடந்த சம்பவம் இது.

மருது பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பெரிய மருது காளையார்கோவிலுக்குப் புதிதாக ஒரு தேர் நிர்மாணிக்கும் பணியில் தீவிரமாக இருந்தபோது, தேருக்குத் தேவையான சக்கர அச்சு மரம் பெரிதாக வேண்டியிருந்தது.

திருபுவனம் சிவாலயத்துக்கு முன்னால் இருந்த மருதமரம், உருவில் மிகப் பெரிதாக இருந்ததால், அரசர் அந்த மரத்தை வெட்டிக் கொண்டு வரச் சொல்லி சிலரை அனுப்பி வைத்தார்.

அவர்கள் மரத்தை வெட்ட முயன்ற போது, கோயில் குருக்கள் வந்து தடுத்தார். கோயிலுக்கு முன் காற்று வாங்க பக்தர்கள் அமரும் அந்த மரத்தடியைக் காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கியிருந்தது. அதனால்,"அரசர் மேல் ஆணை. இந்த மரத்தை வெட்டக் கூடாது'' என்று சொல்லிவிட்டார்.

வேலையாட்கள் அரசரிடம் சென்று "குருக்கள், "அரசர் மேல் ஆணை' என்று குறிப்பிட்டு மரத்தை வெட்டுவதைத் தடுத்துவிட்ட விவரத்தைச் சொன்னார்கள்.

அரசர் கோபமாகக் குதிரை மீதேறி, படையுடன் திருபுவனம் வந்தார். குருக்களை அழைத்து,"என் ஆணைக்கு மேல் ஆணையிட்டு தடுக்குமளவுக்கு உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது?'' என்று கோபமாகக் கேட்டார்.

குருக்கள் கடவுளை மனதில் நிறுத்தி, பவ்யமாக மன்னனிடம்,"அரசே, உங்கள் மீது உள்ள பற்றுதான். நீங்கள் வெட்டும்படி சொன்ன இந்த மரத்தின் பெயர் என்ன?'' என்று கேட்டார்.

"மருதமரம்'' என்று மன்னர் சொல்ல...

"உங்கள் பெயரைத் தாங்கி நிற்கும் இந்த மரத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும், இங்குள்ள மக்களுக்கும் உங்கள் நினைவுதான் வரும். இந்த மரம்தான் இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கோடை வெப்பத்திலிருந்து தங்களைப் போல பாதுகாக்கிறது. அதனால்தான் இந்த மரத்தை வெட்ட வேண்டாமென்று தடுத்தேன்'' என்று சொல்ல, அவர் சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்த மன்னர் வேலையாட்களிடம் வேறு மரத்தை வெட்டிக் கொள்ள ஆணையிட்டுவிட்டு குருக்களைப் பாராட்டி பொன்னும், பொருளும் பரிசளித்தாராம்.

("பெரிய மனிதர்கள் அரிய சாதனைகள்' நூலிலிருந்து)


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 12:47 pm

மருதமரம் எப்படி இருக்கும்?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:51 pm

ஜாஹீதாபானு wrote:மருதமரம் எப்படி இருக்கும்?
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Flowers_with_Sykes%27s_warbler_I_IMG_1880

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Fruit_I_IMG_9577

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 12:57 pm

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Eo5hAEvVQzum4arhcEtU+download

இப்படி இருக்கும் பானு புன்னகை ரொம்ப பிரும்மாண்டமான மரம் இது புன்னகை ரொம்ப உயரமாய் வளரும். இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 30, 2013 12:59 pm

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 C4Mmh7XvTiysF23J9H0A+maruthu2
ஜாஹீதாபானு wrote:மருதமரம் எப்படி இருக்கும்?
இப்படி இருக்கும்



நான் பார்த்த மரங்களெல்லாம் மிகப் பிரமாண்டமாக மிக உயரமாக இருக்கும் கூகிளாண்டவரிடம் வரம் தீர்ந்து விட்டதாகக் கூறி இதை மட்டும் காண்பித்தார்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 1:00 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:மருதமரம் எப்படி இருக்கும்?
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Flowers_with_Sykes%27s_warbler_I_IMG_1880

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Fruit_I_IMG_9577
இந்த மரத்தை நான் பார்த்ததில்ல... இந்த இலைபோல் உள்ள மரம் இங்கே இருக்கு. காய் காய்த்து பார்த்ததில்லை. அதான் சந்தேகமா இருக்கு.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 1:01 pm

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 UOD6R6GFROOg9nJ7i856+maruthu1

தமிழகத்தில் உள்ள எண்ணற்ற ஆலயங்கள் அக்காலத்தில் மரங்கள் செறிந்த இடங்களுக்கு நடுவிலேயே அமைந்திருந்தன. இவ்வாறு அமைந்த காடுகள் "ஆரண்யம்' என்ற பெயர் பெற்று, அந்தப் பெயரிலேயே அந்த ஊர் பெயரும் அமைந்தது. இவ்வாறு ஒரு பகுதியில் அதிக அளவில் காணப் பட்ட ஒரு மரம் அல்லது செடி அத்தலத்தின் தலவிருட்சமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டது. தர்ப்பைப்புல் முதல் அரசு, ஆல் போன்ற பெரிய மரங்கள் வரை தலவிருட்சமாகத் திகழ்கின்றன.

திருவாலங்காடு, திருவேற்காடு, திருச்சாய்க்காடு, எருக்கத்தம் புலியூர், திருக்கடம்பந்துறை போன்ற எண்ணற்ற தலங்கள் மரங்களின் பெயர்களைக் கொண்டவையே! நவகிரகத் தலங்களில் ஒன்றான- சனி பகவானுக்குரிய தலமான திருநள்ளாறில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயரே தர்ப்பாரண்யேசுவரர் என்பதுதான். ஒருகாலத்தில் இப்பகுதியே தர்ப்பைப் புல் காடாக விளங்கி யிருக்கும். இது போன்ற காடு களை கேரள மாநிலத்தவர் "காவுகள்' என்பர்.

இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம்,

ஆற்றின் இருகரைகளுக்கும் அழகு சேர்க்கும் அழகிய மரமாகும். இந்தியா முழுவதிலும் மற்றும் மியான்மர் (பர்மா), ஸ்ரீலங்காவிலும் இம்மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. "மருது' வழவழப்பான சாம்பல் நிறப் பட்டையுடன் திகழும். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொத்து கொத்தாக வெளிர் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்கும். மருத மரத்தில் கருமருது, கலிமருது, பூமருது ஆகிய வகைகள் உள்ளன. இந்த மரத்தின் விதை, பட்டை, பழம் என அனைத்துமே மருத்து வக் குணம் கொண்டவை. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இவற்றிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.

இந்த மகத்தான மருத மரம் "அர்கீனா' என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. இதன் தாவரப் பெயர் "டெர்மினேலியா' என்பது. மருதமரம் மூன்று பெரிய ஆலயங்களில் தலமரமாகத் திகழ்கிறது.

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 CmBEtjkaT1u21RRZhgZv+maruthu2
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள மிகப் பெரிய மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டது. இத்தலத்தில் அருள்பாலிக் கும் சிவபெருமானின் பெயரே "மல்லிகார்ஜுனர்' என்பது தான்! இதன் பழைய பெயர் "திருப்பருப்பதம்' என்னும் தமிழ்ப் பெயராகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற இத்திருத்தலம் மலையின்மீது அடர்ந்த காட்டின் நடுவே உள்ளது. ஒன்பது நந்திகளும் ஒன்பது ஆலயங்களும் கொண்ட பிரம்மாண்ட ஆலய வளாகத்திற்குள் ஸ்ரீபிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் எழுந்தருளியுள்ளார்.

இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற ஜோதிர்லிங்கத் தலங்கள் ஸ்ரீ சைலம், திருக்கேதாரம், ராமேஸ்வரம் ஆகியவை. வீரசைவர்களான லிங்காயதர் களின் அமைப்பான ஜங்கமத்தின் தலைமைப் பீடம் இதுதான். லிங்காயதப் பிரிவினர் இத்தலத்து இறைவனை "லிங்க சக்கரவர்த்தி' என்கின்றனர். மலைவாழ் மக்களான செஞ்சு இனத்தவரின் தெய்வமான மல்லிகார்ஜுனரை அவர்கள் "செஞ்சு மல்லையா' என்று அன்புடன் அழைக்கின்றனர்.

ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீசைலம் "தலைமருது' (முதல் மருது) தலமாகக் கருதப்படுகிறது. இதற்குத் தெற்கே தமிழகத்தில் இடைமருது, கடைமருது என்னும் தலங்கள் உள்ளன. கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள பிருகத் சுந்தரகுஜாம்பிகை சமேத மகா

லிங்கேஸ்வரர் எழுந்தருளியுள்ள திருவிடைமருதூர் "இடைமருது'த் தலமாகத் திகழ்கிறது.

ஒருகாலத்தில் மருத மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தபடியால் இறைவன் "மருதவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். ஐந்து ராஜகோபுரங்கள், ஐந்து பிராகாரங்கள் கொண்ட இந்தப் பெரிய ஆலயமே ஒரு கருவறையாகக் கருதப்பட்டு, சுற்றியுள்ள தலங்கள் பரிவார தேவதைத் தலங்களாகத் திகழ்கின்றன.

திருவலஞ்சுழியில் விநாயகர், சுவாமி மலையில் முருகன், தில்லையில் நடராசர், சூரியனார் கோவிலில் நவகிரகங்கள், ஆலங்குடியில் தட்சிணாமூர்த்தி, சீர்காழியில் பைரவர், திருவாவடுதுறையில் நந்திகேஸ்வரர், திருவாரூரில் சோமாஸ் கந்தர், திருவாய்ப்பாடியில் சண்டேசர் என அமைந்துள் ளன. திருவிடைமருதூரின் தலவிருட்சம் மருதமரம் ஆகும். இடைமருது தலமான இது "மத்யார்ச்சுனம்' எனப்படுகிறது.

திருவிடைமருதூருக்குத் தெற்கே நெல்லை மாவட்டத் தில் கடைமருதுத் தலமான திருப்புடை மருதூர் உள்ளது. தாமிரபரணி நதிக் கரையில் உள்ள இந்த அழகிய பெரிய ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் பெயர் நாறும்பூநாதர். இறைவி கோமதி அம்மை. இறைவியின் திருவுருவச் சிலை யின் அடி முதல் முடி வரை ருத்ராட்சங் களால் மூடப்பட்டுள்ளன.

மருத மரங்கள் நான்கு புறங்களிலும் புடைசூழ இறைவன் எழுந்தருளியிருப்ப தால் இது திருப்புடைமருதூர் ஆனது. விருத்திராசுரனைக் கொன்ற இந்திரன், அந்தப் பழி நீங்குவதற்கு குரு பகவானின் அறிவுரைப்படி மருதமரமாக நின்று தவம் செய்து பூஜித்த தலம் இது. இந்திரனைத் தேடி வந்த இந்திராணிக்கும் இறைவன் மருதமரப் பொந்தில் காட்சியளித்தாராம். பிரம்மாவின் புத்திரரான மனுவினால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த அழகிய ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரபலமானது.

தாமிரபரணி நதிக்கரையில் மருத மரத்தையும் கல்லில் வடிக்கப்பட்ட இந்திரனின் உருவத்தையும் காணலாம். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து 25 கி.மீ. தூரத்திலும் முக்கூடலிலிருந்து ஐந்து கி.மீ. தூரத்திலும் உள்ள திருத்தலம் திருப்புடைமருதூர்.

மருத்துவக் குணங்கள் நிறைந்த- மக்களின் ஆற்றங்கரை நாகரீகத்தோடு ஒன்றிவிட்ட ஒரு அழகிய மரம் மருது ஆகும். இது மூன்று முக்கிய திருத்தலங் களில் தல மரமாகத் திகழ்ந்து ஒரு புனித மரமாகவும் போற்றப்படுகிறது.

நன்றி : நக்கீரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 30, 2013 1:01 pm

அம்மா
என்ன ஒற்றுமை படமும் பதிவும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி ! ! !



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 1:02 pm

krishnaamma wrote: மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Eo5hAEvVQzum4arhcEtU+download

இப்படி  இருக்கும்  பானு  புன்னகை ரொம்ப பிரும்மாண்டமான மரம் இது புன்னகைரொம்ப உயரமாய் வளரும். இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம் புன்னகை
இங்கே சென்னையில் இருக்காது இல்லையா? நன்றிமா.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 1:06 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அம்மா
என்ன ஒற்றுமை படமும் பதிவும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி ! ! !


ஆமாம் பாண்டியன் புன்னகை இப்போ தான் பார்த்தேன்புன்னகை same to same சியர்ஸ்  ( சிவாவை இதுக்கு வேற படம் போட சொல்லணும் புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 1:07 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote: மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Eo5hAEvVQzum4arhcEtU+download

இப்படி  இருக்கும்  பானு  புன்னகை ரொம்ப பிரும்மாண்டமான மரம் இது புன்னகைரொம்ப உயரமாய் வளரும். இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம் புன்னகை
இங்கே சென்னையில் இருக்காது இல்லையா? நன்றிமா.
மெட்ராஸ் இல்......ஏதாவது பழைய கோவில்களில் இருக்கலாம் பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக