புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
56 Posts - 43%
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
3 Posts - 2%
jairam
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Poomagi
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
1 Post - 1%
சிவா
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
1 Post - 1%
Manimegala
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
16 Posts - 4%
prajai
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
7 Posts - 2%
Jenila
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை


   
   

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 11, 2014 10:19 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 23


“அர்த்த நாரீன்னா தெரியுமோ”

”ஓ.. தி.ஜானகிராமன் கதைல வரும்னு நினைக்கிறேன்.. அத்துன்னு ஆர்ம்பிச்சு நிறையகதை எழுதியிருப்பார்..
“உன்னைப் போய்க் கேட்டேனே..சக்தி பாதி சிவன் பாதி..அதைத் தான் அர்த்த நாரீசுவரர்னு சொல்வா

“சரீ..அதுக்கென்ன..

“சக்தியோ அதிகாலைக் கதிரைப் போல சிவந்த நிறமுடையவள்..சிவனோ வெண்மை நிறம்..ஆக பாதியாக ஆகும் போது அம்பாளோட சிவந்த நிறம் முழுக்க சிவனுக்கு வந்துடுதாம்..அப்புறம்..அம்பாள்முக்கண்ளுடன் வளைந்த மேனியுடனும் அழகிய ஸ்தனங்களுடன் மகுடத்தில் இருக்காளாம்..ஆக சிவனே அம்பாளாகவும் உலகமே அவளாகவும் காட்சி தருகிறாளாம்..”

“ம்ம் அதைத் தான் இன்றைய ஸ்லோகம் சொல்கிறதா..

:ஆமாம்…இதை பயபக்தியாய் ப்பாராயணம் செய்தால் சகல சம்பத்தும், குடும்ப அமைதியும் நிலவுமாம்..

***

Tvaya hrithva vamam vapur aparitripthena manasa
Sarir'ardham sambhor aparam api sankhe hritham abhut;
Yad ethat tvadrupam sakalam arunabham trinayanam
Kuchabhyam anamram kutila-sadi-chuudala-makutam.

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா
சரீரார்த்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல-அருணபம் த்ரிநயனம்
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம்

அம்பிகையே..காலைச் சூரியனைப் போல சிவந்த ஒளி கொண்டவள் நீ.. வெண்மை நிறமான சிவனின் பாதியில் கலந்து பின் அவரது மகுடத்தில் வளைந்த மேனியாய் அழகிய நகில்களுடன் முக்கண்ணும் சேர்ந்து காட்சியளிப்பது அவரே நீயாகவும் நீயே அவராகவும், இந்த உலக்மே நீயாகவும் காட்சி கொடுக்கிறது…



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 11, 2014 10:22 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 24


“மூன்று தெய்வங்கள் பத்தி சொல்லு மனசாட்சி”

“ம்ம். ஆரம்பத்துலேயே சந்திரகலா நல்லா ஹம்பண்ணிக்கிட்டே நீராடுவாங்க. நல்லபாட்டு நினைவுக்கு வரமாட்டேங்குது’
“அடிப்பேன். என்ன ஆச்சு உனக்கு’

“உன் கூட சேர்ந்து நானும்கெட்டுப் போயிட்டேன்..!! சரி.. பிரம்மா விஷ்ணு சிவன்.. படைத்தல் காத்தல் அழித்தல் அதானே..ஆனா அதான் கிடையாது..”

“என்ன குழப்பற”

“இன்றைய் ஸ்லோகத்தில வருது பிரம்மா படைத்தல் விஷ்ணு காத்தல்..ஆனா சிவனுக்குமட்டும்மூன்று தொழில்களாம் ப்ளஸ் மூணு பேராம்..

ருத்ர்ன் – அழித்தல், ஈசானன் – மறைத்தல், சதாசிவன்.- அனுக்ரஹம் செய்தல்.

அதாவது பிரம்மா விஷ்ணு சிவ்ன் மூவரும் தத்தம் தொழில்களைச் செய்ய அவற்றை ஈசானன் தனக்குள் மறைத்துக் கொண்டு தானும் மறைந்து போகிறான்.

இதுல பார்த்தேன்னா சதாசிவங்கற் பரப்ப்ரும்மம் அம்பாளோட கொடி போன்ற புருவம் மூலமாக இந்த நால்வரது செயல்களையும் செயல்படுத்துகிறான்..

ஏன் புருவம் நெறிக்கிறே.. புரியலையா என்ன..?"

”கொஞ்சம் ஓரளவு புரியுது..ஆனா கொடி போல நெளியும் புருவம்..இதுவரைக்கும் வில்லுன்னுதான் கேள்விப் பட்டிருக்கேன்..வாலி வானில்விழும் வில் போல் புருவம் கொண்டாள்னு வானவில் பத்திச் சொல்லியிருப்பார்..

ஆலங்குடி சோமு பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறைன்னு பாடுவோர் பாடினால் பாட்டுலசொல்வார்..நர ஸ்த்ரீகளைப் பத்தி”

“சரி..வழக்கம் போல பாட்டச் சொல்லிட்டயா..ஸ்லோகத்துக்குப் போவோமா..

**


Jagat suthe dhata harir avati rudrah kshapayate
Tiraskurvan etat svam api vapurisastirayati;
Sada-purvah sarvam tad idamanugrhnati cha Shiva-
Stavajnam aalambya kshana-chalitayor bhru-latikayo

ஜகத்ஸுதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி வபுரீசத்-திரயதி
ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-மநுக்ருஹ்ணாதி ச சிவஸ்
தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-லதிகயோ


அம்பிகையே.பஞ்ச பிரம்மங்களான ப்ரம்மா விஷ்ணு சிவன் ஈசானன் சதாசிவன் இவர்களில் பிரம்மா விஷ்ணு சிவன் மூவரையும் ஈசானன் தன்னுள் மறைத்து தானும் மறைய பரப்ப்ரம்மமான சதாசிவனோ கொடிபோன்ற உன் புருவங்களின் அசைவினை ஆதாரமாகக் கொண்டு அவர்களைச் செயல்பட வைக்கிறான்.,

இந்த ஐந்து பெயர்களும் பஞ்ச க்ருத்ய பராயண என்னும் நாமத்தில் அடங்கும்..
இந்த் ஸ்லோக பாராயணம் பயத்தினைப் போக்கிடும்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 11, 2014 10:25 am


நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 25


“டெலிபதின்னா என்னன்னு தெரியுமா மனசாட்சி”

“நான் கண்ணை மூடறேன்.. நீயும் கண்ணை மூடற.. அப்ப என்னாகும்”
“எல்லாருக்கும் சொல்லி அனுப்ப வேண்டியது தான்..!”

“தப்பா யோசிக்காதே..வாயைக் கழுவு… சரி..உனக்குப் புரியறமாதிரி சொல்றேன்.. நீ கண்ணை மூடற.. எதிர் வீட்டுப் பெண்ணும் கண் மூடுது நீ மனசுக்குள்ள பேசறது அவளுக்குக் கேட்குது.. அவ மனசுக்குள்ள பேசறது உனக்குக் கேக்குது..அப்ப…”

“அவ அப்பா என்னை வந்து அடிப்பார்..! சரி.சரி.. எனக்குப் புரியுது.. அதாவது நாம் பேச நினைக்கறது மத்தவங்களுக்கு கேக்கும்..அதானே..

“எக்ஸாக்ட்லி”

“ஸீ.. இந்த ஸ்லோகத்தில அந்த மாதிரி தான்.. அம்பாளை அவளோட பாத கமலங்களை தியானிச்சாலே போதும் விஷ்ணு, சிவன் , ப்ரம்மா எல்லாருக்கும் அந்த மெஸேஜ் போய்ச் சேர்ந்துடும்.. அதாவதுஅவாளை தனித் தனியா துதிக்க வேண்டியதில்லை

“ஓ அப்படியா”

“ஆமாம்.. இந்த சுலோகத்தைப் பாராயணம் செய்தால் அதிகாரம் மிக்க உயர்ந்த பதவிகள் தேடி வருமாம்..யாரங்கே……”

***


Trayanam devanam thri-guna-janitanam tava Sive
Bhavet puja puja tava charanayor ya virachita;
Tatha hi tvat-pado'dvahana-mani-pithasya nikate
Sthita hy'ete sasvan mukulita-karottamsa-makuta

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-க்ரோத்தம்ஸ மகுடா

திரிபுர சுந்தரீ, தேவி, மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு ருத்ரன் உனது பாத கமலங்கள் தாங்கும் ரத்தினப் பலகையில் சிரஸை வைத்து உன்னை வணங்குகிறார்கள்..

எனில் உன் பாதங்களை வணங்கினாலே போதும்..அவர்களையும் வணங்கிய மாதிரி ஆகும்…


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 10:06 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 26

“மக்கள் என்ன பேசிக்கறாங்க மனசாட்சி..”

“நீ இருக்கற ஊர்ல தானே.. பைப் ஒடஞ்சதனால தண்ணீர் பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க அதையே ஜெனரலாக் கேட்டேன்னா சீக்கிரம் உலகம் அழிஞ்சுடும்னு பேசிக்கறாங்க..

“உனக்கு எப்படி இருக்கு”

“கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு..இருந்திருந்து ஏதோ நல்லதா எழுத நீ முயற்சி பண்ண இப்பத் தான் ஆரம்பிச்சுருக்க..அதுக்குள்ள இப்படி ஆய்டுத்துன்னா…

”’கவலைப் படாதே.. அடுத்த ஜென்மம் எடுத்து மறுபடி வ்ந்து ஸாரிங்க நடுல்ல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் நு சொல்லி அம்பாளைப் பத்தி எழுத ஆரம்பிக்கலாம்..”

சரீ…உலகம் அழியறதப் பத்தித் தமிழ்ல என்ன சொல்லுவாங்க தெரியுமா பிரளயம்..எங்கே திருப்பிச் சொல்லு

“ப்ரிலைன்ஸ்”

“அது ஐஸ்க்ரீமோட பேர்.. இந்த மஹாபிரளயம் ஊழிக் காலத்தில தான் பிரம்மா விஷ்ணு சிவன் யமன் குபேரன் முதலான தேவர்கள் எல்லாம் அழிந்து போகிறார்களம்..சதாசிவம் ஊழித் தாண்டவம் ஆடுவதை அம்பிகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாளாம்.. இதைத் தான் சொல்கிறது இன்றைய ஸ்லோகம்

“அப்புறம்..”

“அப்புறம் என்ன.. இப்போ சதாசிவன் ஷக்தி மட்டும் தான் இருப்பார்கள்.. மறுபடி உலகைப் படைப்பார்கள்…இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணினால் பகைமை என்பது அடியுடன் அழிந்து போகும்

***

Virincih panchatvam vrajati harir apnoti virathim
Vinasam kinaso bhajati dhanado yati nighanam;
Vitandri mahendri vithathir api sammeelita-drsa
Maha-samhare smin viharati sati tvat-patirasau.

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருசா
மஹா ஸம்ஸாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸெள


தாயே.. மஹாபிரளய காலத்தில் விஷ்ணு ருத்ரன், ப்ர்ம்மா, யமன் குபேரன் போன்ற தேவர்களும் மற்றும் எல்லா தேவர்களும் அழிந்து போய்விட, நீ மட்டும் அழியாமல் உன் பதியான சதாசிவனின் ஊழித் தாண்டவத்தைப்பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாய்…மறுபடியும் புதிய உலகினைப் படைக்கவும் செய்வாய்..




சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 10:09 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 27

நாவடக்கம் கொள்ளாமல் இருந்தேனே நேற்று
….. நானடக்கம் கொளவேணும் உன்னுளே இன்று
பாவடிக்கும் பாத்தியதை சற்றேனும் இன்றி
…..பாவையரின் பின்னாலே திரிந்ததுவும் போக
போவதற்கு இருக்கின்ற சிறிதான போதில்
….பேசுகிறேன் உன்னிடமே பலவிதமாய்த் தானே
பாவனைகள் கொண்டென்னை அருள்நோக்கு அம்மா
பாட்டினிலே பொருள்சொல்ல முயற்சிப்பேன் நானே

”என்னடா.. வந்தே..பாட்டுப் பாடறே..என்னாச்சு..ஆமா யாரந்தப் பாவையர்..தமன்னாவா அனுஷ்காவா..

“மனசாட்சி இதானே வேணாங்கறது..உனக்கு என்னைப் பத்தித் தெரியாதா என்ன..நேத்திக்கு என்ன படம் பார்த்தேன் தெய்வப் பிறவி..எம்.என்.ராஜம் என் தாத்தாவோட க.க.. அழகாத்தான் இருக்காங்க..”

“கஷ்டம்டா..ஒங்க தாத்தாக்கும் ஒன்ன மாத்ரியே டேஸ்ட்..ஆனா பாரு ஒனக்கு வேணும்னா வயசாகலாம்..எனக்கெல்லாம் வயசாகாதுப்பா.. ஆமா இன்றைய ஸ்லோகத்துப் பொருளை பாட்டுல சொல்லப் போறியா.

.
ஆமாம் மனசாட்சி..ஒரு சின்ன பார்ட் மட்டும் தான் எழுத முடிஞ்சது..அது…….

நானாய்ப் பேசும் பேச்செல்லாம்
… நங்கை உந்தன் ஜபமாகும்..
தானே கரங்கள் செய்கின்ற
…செயல்கள் உந்தன் பூஜைகளாம்
மானாய்க் கால்கள் நடப்பதுவும்
…மங்கை உன்னைச் சுற்றுவதாம்
ஊனாய் இருக்கும் உடலுக்கு
…உண்பது உனக்கே அர்ப்பணமாம்

நாம் செய்கின்ற செயல்கள் எல்லாமே அம்பிகைக்காக செய்யறதுங்கறது இன்றைய ஸ்லோகம்..இது ஞானியர்கள் வணங்குகிற முறைன்னு சொல்லலாம்..

“அதாவது…

“முற்றும் துறந்த முனிவர்கள் எல்லாம் தங்களது செயல்கள் எல்லாவ்ற்றையும் அம்பாளுக்கே அர்ப்பணிப்பார்களாம்..ஆமா ஏன் சிரிக்கிற..

“இந்தக் கால முனிவர்க்ளை நினச்சேன்….இந்த ஸ்லோகத்தோடபலன்…என்ன?

இந்த ஸ்லோக பாராயணம் ஆத்மாவைச் சுத்தம் செய்யுமாம்.. இதோ ஸ்லோகமும் பொருளும்....

***

Japo jalpah shilpam sakalam api mudra-virachana
Gatih pradaksinya-kramanam asanady'ahuti-vidhih;
Pranamah samvesah sukham akilam atmarpana-drsa
Saparya-paryayas tava bhavatu yan me vilasitam.

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்

அம்பிகையே… நான் பேசும் வார்த்தைகள் எல்லாம் உனக்கான மந்திர ஜபமாகவும் என் அங்க அசைவுக்ள் உன்னுடைய முத்திரைகளாகவும் நான் நடக்கும் நடை உன்னைப் பிரதட்சினம் சுற்றுவதைப் போலவும்,நான் உண்ணுவ்தெல்லாம் உனக்கு ஹோமப் பொருள்ளாகவும் நான் படுப்பது உன்னை வணங்குவதாகவும் ஆகட்டும்.. ஆக நான் எனது சுகத்திற்காக செய்கின்ற செயல்கள் எல்லாம் உனக்கு பூஜைகளாக ஆகட்டும்..




சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 13, 2014 10:19 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 28


“பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையிலாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே..”
“என்ன ஆச்சுடா..”
“ஒண்ணுமிலல கான்ஷியஸ்.. கொஞ்சம் வாழ்க்கையோட அநித்யத்தை நினைச்சுக்கிட்டிருந்தேன்..”
“படவா..அம்பாளைப் பத்தி நினைக்கற சமயத்தில இதென்ன..வேற பேசு”
“காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி”
“நான் ஒங்கிட்ட் சொல்லியே இருக்கக்கூடாது..”
“இல்ல மன்ச்சு…லோலாக்குன்னா என்ன தோடு தான்.. ஜிமிக்கிங்கறது குண்டலம்னும் சொல்லுவாங்க.. இதெல்லாம் இப்போ த்னித் தனியா போடறாங்கதானே….அப்போ தோடு குண்டலம் ரெண்டையும் சேர்த்துப்போட்டுக்குவாங்க.. அந்த நகைக்குப் பெயர் தாடங்கம்..அம்பிகை அணியறதும் அது தான்..”

“..”
“பெண்க்ள் காதுல தோடு கழுத்துல தாலி இரண்டுமே மாங்கல்ய்ச் சின்னங்களாகும்..தாலி பாக்யம்னு சொல்ற மாதிரி தாடங்க பாக்யம்னும் சொல்லலாமாம்… நான் சொல்லலை காஞ்சி முனிவர் சொல்லியிருக்கார்..

“…”

“ஏன் பேச மாட்டேங்கற.. தாலி, தாடங்கம் எல்லாம் மணமான பெண்கள் பனையோலையில தான் செஞ்சு போட்டுக்குவாங்களாம்..”

“சரி..இப்ப என்னசொல்ல வர்றே

“அமுதைப் பொழியும் நிலவே…

“ஏண்டா படுத்தறே..

“அமுதை நிலவு பொழியுதுங்கறது கொஞ்சம் அதீத உவமை தான்..சாதாரணமான நமக்கு எப்படி அமுதத்தைப் பத்தித் தெரியும்.?

.பெண்டாட்டி செய்ற சக்கரைப் பொங்கலை ..அப்படியே அமிர்தமா இருக்குடின்னு சொல்லிச் சாப்பிடறோம்..முன்னப் பின்ன சாப்பிட்டிருக்கோமா..இல்லை..சக்கரைப்பொங்கலால ஆயுள் விருத்தியாகப் போறதோ கிடையாது..ஷூகர் வேணும்னா கூடும்.
.
என்ன பண்ணின விஷயம் நல்லா இருக்குன்னு சொல்றதுல நமக்கு ஒரு திருப்தி..அவாளுக்கும் ஒரு திருப்தி..இல்லியோ”

“நல்லா இல்லைன்னு சொல்லிடுவயா நீ”

“இப்ப ஏன் என்னை மிரட்டறே.. என்ன சொல்ல வந்தேன்..அமிர்தம்..அமிர்தம் சாப்பிட்டு ஆயுளை எல்லாம் நீட்டிச்சு நெடு நாள் வாழற தேவர்கள், பிரம்மா,இந்திரன் எல்லாரும் பிரளய காலாக்னில அழிஞ்சு போய்டறச்சே.. சிவன் மட்டும் ஏன் இருக்கார்னா அதுக்கு அம்பாளோட காதுல உள்ள தாடங்க்ம் என்ற காதணியின் ஜ்வலிப்பு, அதிலிருந்து வருகின்ற ஒளி தான் காரணம்னு இன்றைய ஸ்லோகம் சொல்லுது. இதைப் பாராயண்ம் பண்ணினா ஆயுள் விருத்தியடையுமாம்..இப்ப நான் ஸ்லோகத்துக்குப் போறேன்..”

***


Sudham apy asvadya pratibhaya-jaraa-mrtyu-harinim
Vipadyante visve Vidhi-Satamakhadya divishadah;
Karalam yat ksvelam kabalitavatah kaala-kalana
Na Sambhos tan-mulam tava janani tadanka-mahima.

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனாநா
ந-ஸம்போஸ் தன் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா


ஜனனீ, மரணமோ கிழத்தன்மையோ அணுகாதிருக்க பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் அமிர்தத்தை அருந்தியிருந்தும் கூட அவர்களால் பிரளய காலத்தில் இருக்க முடிவதில்லை..அழிந்து விடுகிறார்கள்.

.இருந்தும் உன்னுடைய பதி பரமசிவனோ விஷம் குடித்தாலும், பிரளயம் வந்தாலும் அழியாமல் இருக்கிறாரென்றால் அது உன்னுடைய செவிகளில் பூட்டியிருக்கும் தாடங்கம் என்னும் கர்ணாபரணத்தின் மகிமை தானாகும்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 13, 2014 10:22 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 29

Kiritam vairincham parihara purah kaitabha bhidah
Katore kotire skalasi jahi jambhari-makutam;
Pranamreshwateshu prasabha mupayatasya bhavanam
Bhavasy'abhyutthane tava parijanoktir vijayate.

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம் ரேஷ்வேதேக்ஷுப்ரஸப முபயாதஸ்ய பவநம்
பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே

தேவர்களுக்கெல்லாம் தலைவியான பராசக்தியிடம் அவரது சேடிப் பெண்கள் சொல்வது போல அமைந்த ஸ்லோகம் இது..

“தேவி, பதிவிரதையாகிய தாங்கள் பரமசிவன் உங்கள் அவைக்கு வரும்போது அவரை வரவேற்க அரியாசனத்திலிருந்து இறங்கி நடக்கிறீர்கள்..உங்களை ஏற்கெனவே நமஸ்கரித்துக் கொண்டிருக்கும் பிரம்மனுடைய வைரிஞ்சம் என்னும் கிரீடத்திலும், மகாவிஷ்ணுவின் கோடீரம் எனப் படும் கீரீடத்திலும் இந்திரனின் மகுடத்திலும் தங்கள் பாதங்கள் படாமல் கவனித்துச் செல்லுங்கள்”.

இந்த சுலோக பாராயணம் மூர்க்க குணத்தை அடியோடு போக்கி விடும்..



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 13, 2014 10:23 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 30

Sva-deh'odbhutabhir ghrnibhir animadyabhir abhito
Nishevye nitye tvamahamiti sada bhavayati yah;
Kim-ascharyam tasya tri-nayana-samrddhim trinayato
Maha-samvartagnir virchayati nirajana-vidhim.

ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணீபி-ரணிமாத்யாபி ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸ்ம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸ்ம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்.


ஆதி அந்தம் இல்லாத அம்பிகையே. உன் பாதத்தில் இருந்து தோன்றும் கிரணங்கள் அஷ்ட சித்திகள் என அழைக்கப்படும் எட்டு சித்திகள் –அணிமா, மகிமா, கரிமா, வஹிமா,ப்ராப்தி, ப்ராகம்யம் , ஈசத்வம், வசித்வம் என்பதாம்.. அப்படி சித்திகளால் சூழப்பட்ட அம்பாளாகிய உன்னை உண்மையாக உருகி வேண்டும் பக்தனுக்கு பரமசிவனின் சகல அருளும் கிட்டும்…அவன் முன் ஜென்மத்தில் செய்த தீவினைகள் கூட அவனுக்கு நல்வினையாகி ஆரத்தி காட்டுமளவுக்கு உன் அருட் கருணை மாற்றி விடும்..

இச் சுலோக பாராயணம் சகல காரியத்திலும் வெற்றிகள் கிடைக்கச் செய்யும்..



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 16, 2014 10:19 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 31

Cautuh-shashtya tantraih sakalam atisamdhaya bhuvanam
Sthitas tat-tat-siddhi-prasava-para-tantraih pasupatih;
Punas tvan-nirbandhad akhila-purusarth'aika ghatana-
Svatantram te tantram khsiti-talam avatitaradidam.

சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸ்ந்தர்ய புவனம்
ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸ்வ-பரதந்த்ரை: பசுபதி:
புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில புருஷார்த்தைக கடனா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவதீதர-திதம்



அம்பிகையே… அஷ்ட மகா சித்திகளை அறுபத்து நான்கு தந்திரமாக மாற்றிச் உலகத்திற்குத் தந்தவர் ஈசன்.. அவரே உன்னுடைய நிர்ப்பந்தத்தால் அந்த தந்திர்ங்களால் அடையக்கூடிய பிறவிப் பயன்களை ஒருங்கே தரவல்ல பஞ்சதசீ என்றும் ஸ்ரீ வித்யை என்றும் அழைக்கப் படும் உன்னுடைய மந்த்ர சாஸ்திரத்தையும் உபாசனா முறையையும் உலகிற்கு அளித்தார்..

இந்த ஸ்லோக பாராயணம் உலகை வசீகரிக்க வைக்கும் ஜாஜ்வல்யத்தைத் தரும்..




சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 16, 2014 10:21 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 32

பீஜம் என்பது என்ன.. ஓரெழுத்தை – அதுவும் மந்திரத்தின் ஓரெழுத்தை- அட்சரத்தை பீஜம் என்பர்..

சக்தி உபாசனைக்கான ஸ்ரீ பஞ்ச தசாஷரி மந்திரம் இந்த சுலோகத்தில் மறைமுகமாகக் கூறப் படுகிறது..


Sivah saktih kamah kshitir atha ravih sithakiranah
Smaro hamsah sakrastadanu cha para-mara-harayah;
Amee hrllekhabhis tisrbhir avasanesu ghatitha
Bhajante varnaste tava janani nam'avayavatham.

சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார ஹரய:
அமீ ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவாஸானேக்ஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்

அம்பிகையே, மூன்று பகுதிகளாக அக்னி மண்டலம், சோம மண்டலம் என கீழிருந்து மேலாகக் கொண்டது உடல்…. அவற்றைப் போலவே ஸ்ரீ பஞ்ச தசாஷரி மந்திரமும் மூன்று பகுதிகளாக – முதல் பகுதி வாக்பவம் – க ஏ ஈ ல ஹ்ரீம்; இரண்டாம் பகுதி ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் இச்சா சக்தியாகவும் மூன்றாம் பகுதி ஸ க ல ஹ்ரீம் க்ரியா சக்தியாகவும் மொத்தம்பதினைந்து அட்சரங்களைக் கொண்டிருக்கிறது..

சிவ, சக்தி, காம பூமி என்ற பீஜாஷரங்கள் ஒரு பகுதியாகவும், சூரியன் சந்திரன் ஸ்மர ஹம்ஸ என்ற பீஜாஷரங்கள் ஒரு பகுதியாகவும் பரா மார ஹரி பீஜங்கள் ஒரு பகுதியாகவும் இருக்கின்றன

இப்படி எண்ணிப் பார்த்தால் பன்னிரண்டு அஷரங்கள் வரக்கூடிய மந்திரமானது உனது புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம் என்பதுடன் தான் முழுமை பெறுகிறது..

***

ஹ்ரீம் என்பது ஒரே அட்சரமாகக் கருத வேண்டும்.

இந்த ஸ்லோக பாராயணம் தொட்டதை எல்லாம் துலங்க வைத்திடுமாம்..


Sponsored content

PostSponsored content



Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக