புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
3 Posts - 4%
prajai
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Jenila
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
86 Posts - 63%
ayyasamy ram
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
7 Posts - 5%
prajai
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Jenila
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Rutu
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
viyasan
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_m10நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue Feb 11, 2014 5:17 pm

First topic message reminder :

நடிகர் திலகம் மனோகரனாக (சிவாஜி என்ற மாநடிகர்)

தொடர் 10

பாகம் 3

மதிவதன மனோகரனாக நடிகர் திலகம்.

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Large_974e1db9c8_manohara

மனோகரன் என்ற மகோன்னதமான பாத்திரத்திற்கு தன் மிரள வைக்கும் நடிப்பால் புத்துயிர் ஊட்டி அப்பாத்திரத்தை தமிழக மக்களின் நெஞ்சில் ஆழப்புதைத்த நடிகர் திலகத்தின் திறமையை எப்படி எழுத!? எப்படி மெச்ச!? எப்படிப் புகழ!?

அழகு என்றால் அப்படி ஒரு அழகு! இளமை என்றால் அப்படி ஒரு இளமை! 1952-இல் 'பராசக்தி'யில் அறிமுகமாகி தனது பத்தாவது படமான 'மனோகரா'வில் (1954) உடலும், முகமும் வனப்பேறி மன்மதனிடம் சவால் விடும் அழகைப் பெற்றிருந்தார் இந்த அற்புத மனிதர். கூடவே திரையலகில் மிகுந்த அனுபவத்தையும் கண்டிருந்தார் இந்த அதிசய மனிதர்.

"வஞ்சகம் வாழ்ந்தது கிடையாது....கொடுமை நிலைத்ததில்லை... இதோ பார்... உன் பொருட்டு விழா நடைபெறுகிறது விழாவிற்கு நீ வந்துதான் தீர வேண்டும்"

என்று மந்திரி சத்யசீலர் மனோகரனிடம் கூறும் காட்சியில் நடிகர் திலகம் அறிமுகம். வீரமாக நடந்து வரும் கால்கள் மட்டுமே காண்பிக்கப்படும். அரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் அத்துணை பேரின் கைதட்டல் ஓசை நடிகர் திலகத்தை மனோகரனாய்ப் பார்க்கையில் விண்ணைப் பிளந்து முறிக்கும். கூனனும் நிமிர்ந்து உட்கார்ந்து மனோகரனைப் பார்த்து வியந்து உறைந்து போவான். அப்படி ஒரு கம்பீரம். மனோகரன் என்ற வார்ப்படத்தில் இருந்து வார்த்து எடுக்கப்பட்டது போல அப்படி ஒரு வேடப் பொருத்தம்.

நாடகத்திற்கு மந்திரி அழைக்கும் போது அவரிடம் அங்கே வசந்தசேனை வருவாள் என்ற கோபத்தைக் காட்டி சீறுவாரே ஒரு சீறு. எதிர்பாராமல் தாய் பத்மாவதி அங்கே வந்து 'மனோகரன் கட்டாயம் நாடகத்திற்கு வருவான்' என்று திட்டவட்டமாகக் சொல்ல, செய்வதறியாது ஒருகணம் திகைத்து நின்று தாய் சென்றவுடன் மந்திரி சத்யசீலரை முறைப்பாரே ஒருமுறை! எந்த கல்லூரியில் இப்படியான நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

நாடகத்தை மகாராணி பத்மாவதியார் பார்த்து அது தன் கதையைப் பிரதிபலிப்பதாக உணர்ந்து கண் கலங்கி, தன்னையறியாமல் தன் தனயன் தோள்களில் கைவைக்க, தாயின் கை ஸ்பரிசம் பட்டவுடன் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் தாய் கலங்குவதை திடீரெனக் கவனித்து தாய் பக்கம் திரும்பி "என்னம்மா?" என்று விவரம் புரியாதவராய் கள்ளம் கபடமில்லாமல் வாஞ்சையுடன் கேட்பாரே! எந்தப் பள்ளிக் கூடத்தில் இப்படிப்பட்ட வியத்தகு நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

வசந்தசேனையின் அக்கிரமங்களைப் பொறுக்க மாட்டாமல் தாயிடம் கோபமாக "உத்தரவு கொடுங்கள்! உருத்தெரியாமல் ஆக்குகிறேன் அந்த ஊர் கெடுப்பவளை" என்று கர்ஜிப்பாரே! எந்த சிங்கத்திடம் இப்படிப்பட்ட உறுமலை உறுமக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?

"பாண்டியன் முத்துவிசயன் மீது போர் தொடுத்து வா" என்று அன்னை ஆணை பிறப்பித்தவுடன், "விடை கொடுங்கள்! வெற்றி மழை பொழிய வைக்கிறேன். வீணன் முத்துவிசயனின்  விலா எலும்பை நொறுக்குகிறேன்" என்று முழங்குவாரே! எந்த இடியிடம் இப்படி முழக்கமிடக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?

போரில் பாண்டியனை வென்று கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் பாண்டியன் பெற்ற பைங்கிளி விஜயாள் பழிதீர்க்க போர்வீரன் போல ஆண்வேடம் தரித்து மனோகரனைக் கொல்ல வந்து கையும் களவுமாகப் பிடிபட்டு மாட்டிக் கொள்ள, விஜாயாளிடம் "பாதி ராத்திரியிலே பதுங்கிப் பாயும் பட்டாளப் பயிற்சிக்கு முத்துவிசயன் ஆட்சியிலே முதலிடம் போலும். ஓடிப்போ! உயிரைக் காப்பாற்றிக் கொள்" என்று நடிகர் திலகம் நையாண்டி செய்வாரே! எந்த பல்கலைக் கழகத்தில் இந்த நையாண்டி நடிப்பை படித்து முடித்தார் நடிகர் திலகம்?

கொல்ல வந்தது மங்கை என்று அறிந்ததும் அவள் அழகில் மெய்மறந்து "வளையல் ஏந்தும் கைகளிலே வாள்" என்று ஆச்சர்யம் கலந்த புன்னகை பூத்தபடி நடிக வேந்தன் கூற "நீர் வீரரானால் என்னை ஜெயித்தபிறகு பேசும்" என்று விஜயாள் வீரத்துடன் பேச, நடிகர் திலகம் கண்களில் காதல் கொப்பளிக்க கொஞ்சு மொழியாளிடம்,"வேல்விழி மாதரிடம் வீரர்கள் ஜெயித்தார்கள் என்பதற்கு சரித்திரமே கிடையாது இளவரசி" என்று போதையுடன் கூறுவாரே! எந்த இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று  நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

பௌத்யாயணன் கையும் களவுமாக பிடிபட்டு மனோகரனைக் கொல்ல தன்னை அனுப்பியது வசந்தசேனைதான் என்று ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்து விட, கோபக்கனல் தலைக்கேற, நடிக மன்னவன் வாளை எடுத்துக் கொண்டு சேனாவைக் கொல்ல புறப்பட, தாய் சாந்தப்படுத்தி 'வாளை உறையில் போடு' என்று அன்புக் கட்டளையிட, விழிகள் வெளியே பிதுங்க கோப இமயத்தைத் தொட்டு விட்டு பின் வாளை உறையில் போடும் வேகம். எந்த புயலிடம் இப்படிப்பட்ட வேகத்தைக் கற்றுக் கொண்டார் இந்த நடிப்புப் புயல்

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 2009030650321601

பாண்டியனைக் கொன்று இரத்தின சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்தும் தாய் அமர வேண்டிய அதே இரத்தின சிம்மாசனத்தில், அதுவும் கொலு மண்டபத்தில் அனைவர் முன்னிலையிலும் சேனா என்ற பேய் அமர்ந்து, அதுவும் தனக்கு வெற்றிமாலை சூட்ட வரும் போது அவமானத்தால் கொந்தளித்து, வாளை உருவி, அவளைக் கொல்லப்  போக, சத்யசீலர் தாயின் கட்டளையை மனோகரனிடம் ஞாபகப்படுத்த, ஒரு வினாடியில் மந்திரி சத்யசீலர் பக்கம் திரும்பி புயல் போல் சீறி, மறு பக்கம் தடுக்கும் நண்பன் ராஜப்பிரியன் பக்கம் திரும்பி கோபம் கண்ணை மறைக்க அவனை வேகமாய் ஒரு அறை அறைந்து, அடுத்த கணம் தானே உயிர் நண்பனை அறைந்து விட்டோமே திகைத்து நின்று, ஒரு வருத்த தொனியை முகத்தில் ஒரு நொடியில் பாதி நேரத்தில் பிரதிபலித்துவிட்டு, பின் மீண்டும் கோபத்துடன் புலிப்பாய்ச்சலில் புவி அதிர நடப்பாரே! எந்த குரு இப்படியெல்லாம் நடிக்க வேண்டும், நடக்க வேண்டும் என்று நடிகர் திலகத்திற்கு சொல்லிக் கொடுத்தது?

பின் ஆத்திரத்துடன் தாயாரிடம் சென்று 'வஞ்சகி சேனா அமர்வதற்கா பல உயிர்களை பலி கொடுத்து இரத்தின சிம்மாசனத்தை மீட்டு வந்தேன்'? என்று நெஞ்சு குமுறப் பொங்குவதும் நடிகர் திலகம் யாரிடம் கற்ற பாடம்?

காதலர்கள் கூடிக் கொஞ்சும் வசந்த விழாவில் கூட அரண்மனையில் நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் பொருமுவதும், அங்கே மன்னனுடன் வரும் வசந்தசேனா வேசி மகன் என்று தன்னை இழித்துரைத்ததும் புயல் வேகம் கொண்ட புலியாக சீறி கட்டாரியை எடுக்க, தந்தையான மன்னன் தடுக்க, "நீர் உன் மனைவியின் மானத்தை காப்பாற்றா விட்டாலும், நான் என் தாயாரின் மானத்தை காப்பாற்றியே தீருவேன்" என்று தன்மானச் சிங்கமாய் சிலிர்ப்பதும் இந்த நடிப்பின் பல்கலைக் கழகத்திற்கு அல்வா சாப்பிடுவது போல் அல்லவா?

மறுபடியும் தாயிடம் ஓடோடி வந்து தாயின் கட்டளையை மாற்றும்படி கெஞ்சுவதும், "வீரன் கோழையாவதா.... துடிக்கும் தோள்கள் துவண்டு போவதா?" என்று தாயின் கட்டளையை நினைத்து நினைத்து பொங்குவது எந்தப் பாடத் திட்டத்தில் நடிகர் திலகம் படித்தது?

தமிழ்த் திரையுலகம், தென்னிந்தியத் திரைப்பட உலகம், இந்தியத் திரைப்பட உலகம், ஏன் உலகத் திரைப்பட உலகமே உலகுள்ளவரை மறக்க முடியாத அளவிற்கு நம் மனோகரன் நடிகர் திலகம் நடிப்பில் சாதனை படைத்த இரு காட்சிகள்.

முதலாவது.

அரசவை தர்பாரில் கொலு மண்டபத்தில் நீதி விசாரணையின் போது.

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 12098193

மகாராணி பத்மாவதி சிறை செல்ல வேண்டும். மனோகரன் வசந்த சேனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது மதி கெட்ட மன்னன் கட்டளை.

மாதா அமைதியுடன் 'காரணம் கேட்டு வா' என்று மைந்தனைப் பணிக்கிறாள். இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நான்கு வீரர்கள் நான்கு புறமும் சங்கிலிகளைப் பிடித்திருக்க மனோகரனான நடிகர் திலகம் அடலேறு போல கொலு மண்டபத்தில் நுழைகிறார். கொஞ்சம் இந்தக் காட்சியை நினைத்துப் பாருங்கள். பார்த்தவர்கள் ஒருமுறை திரும்ப நினைவு படுத்திக் கொள்ளுங்கள். பார்க்காத இளம் தலைமுறையினர் இந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். தமிழ்த்திருநாடு பெற்ற தவப்பயனின் காரணமாக நமக்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம் நடிகர் திலகம் பிணைக்கப்பட்ட சங்கிலிகளுடன் அரசவையில் கொலு மண்டபத்தில் ஆண் சிங்கமாய் வீர நடை போட்டு வருவதை உலகம் மறக்க இயலுமா? அந்த இடத்தில் வேறு ஒருவரை கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா? ஆஹா! என்ன ஒரு வீரம்! என்ன ஒரு கம்பீரம்!

மன்னன்: உன்னை ஏன் அழைத்திருக்கிறேன் தெரியுமா?

நடிகர் திலகம்: திருத்திக் கொள்ளுங்கள். அழைத்து வரச் சொல்லவில்லை. இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்

இப்படி நடிகர் திலகம் முழங்கும் போது திரை அரங்குகளின் கூரைகள் ஏன் பிய்த்துக் கொண்டு போகாது? ஏன் நம் சப்த நாடியும் ஒடுங்காது? ஏன் உலகம் வியந்து போற்றாது இந்த யுகக் கலைஞனை?

'நீ நீதியின் முன் நிற்கும் குற்றவாளி' என்று மன்னன் பழி சுமத்தியவுடன்,

"அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல! பிரஜைகளில் ஒருவனாகவே கேட்கிறேன். கொலை செய்தேனா?... கொள்ளை அடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலைதான் செய்தேனா? குற்றமென்ன செய்தேன் கொற்றவனே! குற்றம் என்ன செய்தேன்?" என்று சண்டமாருதமாய் சபையோர்களின் பக்கம் திரும்பி நான்கு புறமும் முழங்குவாரே எம் நடிப்பின் மன்னவர்!

'குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்' என்று சபையோர் சப்தமிட்டவுடன் 'இது உங்களுக்கு சம்பந்தமில்லாதது' என்று கொற்றவன் அல்ல அல்ல கொடுங்கோலன் கூறியவுடன் "சம்பந்தமில்லாதது சபைக்கு வருவானேன்?" என்று நெஞ்சு நிமிர்த்தி இந்த கட்டிளங்காளை கணேசன் கர்ஜித்ததில் வீர உணர்வு பெறாதவரும் உண்டோ!

"கோமளவல்லி..கோமேதகச் சிலை... கூவும் குயில்... குதிக்கும் மான் என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை, கொடிய நாக்கை என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு அதை எதிர்த்தால் உம்மையும், உமக்குப் பக்க துணையாக வந்தால் அந்த பட்டாளத்தையும் பிணமாக்கி விட்டு, சூனியக்காரிக்கு ஆலவட்டம் சுற்றியவர்களை சுடுகாட்டிற்கு அனுப்பிவிட்டேன் என்று சுழலும் வாளுடன், சூழும் புகழுடன் என் அன்னையிடம் ஓடி மன்னிப்பு கேட்க வேண்டும்... நிறைவேற்றட்டுமா அந்த உத்தரவை? தயார்தானா? தயார்தானா?"

என்று நடிகர் திலகம் 'இடி'யென முழங்கும் போது நம் நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேறி, ரத்த நாளங்கள் சூடேறி, நாமும் மனோகரனுடன் சேர்ந்து வசந்தசேனாவை வஞ்சம் தீர்க்க முடியாதா என்று நினைக்காமல் இருக்க முடியுமா?  கோழை கூட வீரனாகி கொடுமையை எதிர்க்கச் செய்யும் வீர நடிப்பை வாரி வழங்கிய இந்த நடிப்பு வள்ளலை என்ன சொல்லித்தான் புகழ்வது?

பின் அன்னை பத்மாவதி கொலுமண்டபத்துக்கு வந்து 'மன்னனின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' என்று மனோகரனிடம் நெஞ்சை இரும்பாக்கிக் கூற, நடிகர் திலகம் பெரும் அதிர்ச்சியுற்று "நானா சாக வேண்டும்" என்று விம்ம ஆரம்பிப்பாரே! அது மட்டுமல்லாமல் தாயின் கட்டளைப்படி வாளை கீழே போட்டு விட்டு "மன்னிப்பும் கேட்கட்டுமா" என்று சிறு குழந்தை போல முகவாட்டம் காட்டி அழுவாரே! இந்த நடிக மேதையை எப்படிப் பாராட்டி மகிழ்வது?

பின் அட்சயனாக மாறி அமைதியான நடிப்பைக் காண்பிக்கும் மாற்றம். தன் கண்ணெதிரிலேயே தன்னை அழிக்க வசந்தசேனை திட்டம் தீட்டும்போது எதுவுமே தெரியாதது போல நிற்கும் பாந்தம், தன்னைக் கொண்டே மன்னனை அந்த சதிகாரி கைது செய்ய வைக்க இருதயம் பிளக்கும் சோகத்தை வெளிக்காட்டாமல் வெளிக்காட்டும் அற்புத முகபாவங்கள் என்று அசத்தும் இந்த நடிப்பின் அட்சயபாத்திரத்தை எப்படி வர்ணிப்பது?

இரண்டாவது

இறுதியான இறுதிக் கட்ட காட்சி.

அரண்மனையில், ஆலமரம் போன்ற தூணில் சங்கிலிகளால் நடிகர் திலகம் கட்டப்பட்டிருப்பார். வசந்தசேனையும், உக்கிரசேனனும் சாட்டையால் அடித்து துன்புறுத்துவார்கள். உக்கிரசேனன் கடைசியாக உன் குழந்தையை முத்தமிட்டுக் கொள்' என்று குழந்தையை மனோகரனான நடிகர் திலகத்திடம் நீட்டுவான். நடிகர் திலகம் குழந்தையை முத்தமிடுவதற்கு முன்னாலேயே குழந்தையை 'வெடு'க்கென்று இழுத்துக் கொள்வான். இப்படியே மனோகரனை குழந்தையை முத்தமிட விட முடியாமல் சித்ரவதை செய்வான் உக்கிரசேனன். அப்போது குழந்தையை இறுதியாக ஒருதடவையாவது முத்தமிட்டுவிட வேண்டும் என்ற ஆசை, துடிப்பு, ஆர்வம் அதே சமயம் இயலாமை, கட்டி வைக்கப்பட்டிருக்கிறோமே என்ற அவமானக் குறுகல் என்று அத்தனை உணர்ச்சிகளும் நடிகர் திலகத்திடம் நர்த்தனம் புரியும்.

இறுதியில் துரோகிகளின் கொட்டம் தாங்க மாட்டாமல் கண்ணாம்பா மகன் மனோகரனுக்கு இட்ட கட்டளையை நீக்கி 'பொறுத்தது போது பொங்கி எழு' என்று ஆணை பிறப்பித்தவுடன் காட்டாற்று வெள்ளமென நடிகர் திலகம் தூணில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலிகளை அறுக்கக் காட்டும் வீரம், வேகம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. தாய் அங்கு மைந்தனுக்கு தன் வீர முழக்கங்கள் மூலம் எழுச்சியையும், வீரத்தையும் அதிகப்படுத்திக் கொண்டிருக்க, தாயின் ஒவ்வொரு வசனத்திற்கும் கைகளையும், கால்களையும் உதறி உதைத்து கட்டவிழ்க்கப் போராடும் போராட்டம், ஒவ்வொரு முறையும் தன் முழு உடல் பலத்தையும் காட்டி சங்கிலிகளை அறுக்க முயல்வது (இதில் மறக்காமல் ஒன்று செய்வார். ஒவ்வொரு முறையும் சங்கிலிகளை அறுக்க மிகுந்த பிரயாசைப்பட்டு துடிதுடித்து சிறிது நேரம் நின்று உடல் அசதியைக் காண்பிப்பார். மிகச் சிறிய வினாடி ஓய்வு இடைவெளி விட்டு மீண்டும் சங்கிலிகளை அறுக்க போராடுவார். அச்சு அசல் அப்படியே போராட்டத்தையும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகளையும் கூட அற்புதமாகக் காட்டுவார். அந்த இடைவெளி ஓய்வும் அருமையாக இருக்கும்) பின் தூண்களைத் தூள் தூளாக்கி உடைத்து சிங்கமென எதிரிகளை துவம்சம் செய்வது இன்னும் அற்புதம்.  

இப்படியாக நடிகர் திலகத்தின் மனோகரன் சாம்ராஜ்யம் படம் நெடுக பரவிக் கிடக்கிறது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவனும் மனோகரனாய்த்தான் அரங்கை விட்டு வெளியே வருவான். மனோகரன் பேசிய வசனங்கள் அனைத்தையும் ஒவ்வொருவனும் மனனம் செய்து பேசியபடியே வருவான். அந்த அளவிற்கு நடிகர் திலகம் மனோகரனாய் தன் அசகாயசூர, தீர,வீர நடிப்பால், தன்னுடைய தெளிவான வீர உச்சரிப்பு வசனங்களால் பார்ப்பவர் அனைவர் நெஞ்சிலும் நங்கூரம் போட்டு பதிந்திருப்பார்.

எப்படி வீரபாண்டியக் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்றவுடன் நடிகர் திலகம் நம் கண் முன்னும், நெஞ்சிலும்,நினைவிலும் நம்மைக் கேட்காமலேயே வந்து நிற்கிறாரோ அதே போல மனோகரா என்றாலும் நம் மனக் கண்ணில் சட்டென்று தெரிபவர் அதே நடிகர் திலகம் தானே!

இது யாருக்குக் கிடைத்த வெற்றி? நடிப்புக்குக் கிடைத்த வெற்றி, நடிகனுக்குக் கிடைத்த வெற்றி, கலைக்குக் கிடைத்த வெற்றி, கலைமகளுக்குக் கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி, உலகிற்கே கிடைத்த வெற்றி!

எனவே இந்த வெற்றித் திருமகன் மனோகரனுக்கு இல்லை.... இல்லை... நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். அவர் பிறந்த காலத்தில் நாமும் பிறந்திருக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்று கர்வம் கொள்ளுங்கள்.  

வாழ்க எங்கள் மனோகரனின் புகழ்!

கண்ணாம்பா

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Maxresdefault

நடிகர் திலகத்திற்குப் பின் இப்படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். ராணி பத்மாவதி பாத்திரத்துக்கு அவ்வளவு பொருத்தம். பொறுமையின் வடிவமான சாந்த ஸ்வரூபம். தனக்கு நேர்ந்த அவலங்களையும் அவமானங்களையும், துயரங்களையும் மென்று விழுங்கும் அற்புதமான நடிப்பு. மகாராஜாவான தன் கணவன் ஆயிரம் தவறு செய்தாலும் அவன் மேல் கொண்ட மாறாத பதிபக்தி, மகன் வசந்தசேனாவின் செய்கைகளைக் கண்டு குமுறும்போதெல்லாம் அவனை சாந்தப்படுத்தும் பக்குவம், தன்னுடைய கதை நாடகமாக நடத்தப் படும்போது சற்றே அதிர்ந்து பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து முகத்தில் பிரதிபலித்துக் காட்டும் மெல்லிய சோகம், மகனின் கோபத்தைத் தணித்து அதற்கு ஈடாக பாண்டிய நாட்டு மன்னன் முத்துவிசயனின் மீது போர் தொடுக்க அனுப்பி வைக்கும் பொறுமை கலந்த புத்திசாலித்தனம், வசந்த விழாவில் சேனா தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதைக் கேள்விப்பட்டு துடிதுடித்து 'மன்னர் கூடவா சேனா தன்னை வேசி என்று கூறியதை கேட்டுக் கொண்டு இருந்தார்?' என்று மனம் புண்பட்டு புழுங்கும் பண்பட்ட நடிப்பு,

கொலு மண்டபத்தில் மன்னர் முன்னம் மனோகரன் கைதியாய் விசாரிக்கப்படப் போகிறான் என்பது தெரிந்து மிக்க பொறுமையோடு அதைப் பொறுத்துக் கொண்டு மகனை அனுப்பி வைக்கும் பாங்கு, மகன் சிங்கமென சீறி சேனாவைக் கொல்ல முயலும் போது எதிர்பாராவிதமாக தான் கொண்ட சத்தியத்தைக் கைவிட்டு அங்கு வந்து அவனை சாந்தப்படுத்தும் உயர்நெறி, 'என் வயிற்றின் மீது வாளைப் பாய்ச்சி விட்டு பின் மன்னனிடம் போ' என்று குறுக்கே மறிக்கும் பதிபக்தி, மன்னன் தன மகனுக்கு மரண தண்டனை கொடுத்தபோது அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று மனதை இரும்பாக்கி புத்திர பாசத்தை நெஞ்சுக் குழிக்குள் புதைத்து, அதிர்ச்சியில் அருமை மைந்தன் மயக்கமானவுடன் அதையும் தன் பர்த்தாவுக்காகப் பொறுத்துக் கொண்டு கண்கள் கலங்க அவனை நோக்கும் பரிதாபம், மகனின் இறுதி அடக்கம் வெளியே நடக்கட்டும் என்று வெறுத்துப் போய் கூறும் விரக்தி, சிறையில் தன் கண்மணி மனோகரன் பெற்ற குழந்தையிடமும், மருமகள் விஜயாளிடமும் காட்டும் பரிவு, கனிவு.

இறுதியில் தன் கணவனையே சேனா சிறைக்குள் பூட்டிவிட்டாள் என்று கொதிப்படைந்து சிறையிலிருந்து புயலாகப் புறப்பட்டு வரும் வேகம், அப்போதும் பொறுமையுடன் சேனாவிடம் அவளால் தான் அடைந்த துன்பங்ளையெல்லாம் சொல்லி அழும் துன்ப அழுகை, சேனாவின் அக்கிரமங்கள் எல்லை மீறியவுடன் காட்டாற்று வெள்ளம் போல பொங்கி மனோகரன் பக்கம் திரும்பி சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் மனோகரனைப் பார்த்துப் பொங்கி 'பொறுத்தது போதும்.... மகனே பொங்கி எழு' என்று வீறு கொண்டு வசன மழை பொழியும் வீராவேசம், மகன் சங்கிலிகளை அறுக்கப் போராடும் போது மகனின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்று பேசும் அருமை வசனங்கள், மகனைப் பார்த்து எள்ளிநகையாடும் எததர்களைப் பார்த்து 'செவ்வாழைத் தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளே' என்று எக்காளமிடும் அற்புதம், கண்மணி மனோகரன் அடலேறு போல் சங்கிலிகளை அறுத்து எதிரிகளை துவம்சம் செய்தவுடன் அந்த முகத்தில் தெரியும் பூரிப்பு, பெருமை என்று அச்சு அசலாக மனோகரனின் தாயாக மகாராணி பத்மாவதியாக நம் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறார் கண்ணாம்பா.

தாய் என்றால் கண்ணாம்பா போல இருக்க வேண்டும் மகன் என்றால் நடிகர் திலகம் போல இருக்க வேண்டும் என்று அனைவரும் புகழும் வண்ணம் தாய் மகன் நடிப்பிற்கு புது இலக்கணம் வகுத்தார்கள் நடிகர் திலகமும், கண்ணாம்பாவும்.


வசந்தசேனை என்ற வஞ்சகியாக டி.ஆர்.ராஜகுமாரி வாழ்ந்து காட்டியிருந்தார். அந்த மயக்கும் விழிகளும், காந்தப் பேச்சும், உதட்டில் சிரிப்பையும், உள்ளத்தில் விஷத்தையும் வைத்து ஆளை மயக்கும் உடல்வாகுமாக அவர் வில்லி வேடத்தில் வெளுத்து வாங்குகிறார்.

தெலுங்கு நடிகர் சதாசிவராவ் புருஷோத்தம மன்னராக நம் பாவங்களைக் கொட்டிக் கொள்கிறார். நல்ல ஆஜானுபாகுவான தோற்றம். எஸ்.ஏ நடராஜன் உக்கிரசேனனாக உக்கிரம் காட்டுகிறார். சேனாவின் கிறுக்குப் பிள்ளையாக 'காக்கா' ராதாகிருஷ்ணன் கலக்கி விடுகிறார். மந்திரி சத்யசீலராக ஜாவர் சீதாராமனின் பண்பட்ட நடிப்பைப் பார்க்க முடிகிறது.

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Hqdefault

நாயகி கிரிஜா. தெலுங்கு நடிகை. அழகுப் பதுமை. இளமை தாண்டவமாடுகிறது. மனோகரனுக்கேற்ற மனோகரி. சுந்தரி.

படத்தின் முக்கியமான இன்னொரு தூண் கலைஞர் மு,கருணாநிதி. பொறி பறக்கும் வசனங்கள். அனலையும், தீயையும் ஒரு சேரக் கக்கும் அடைமழை கூர் வசனங்கள். நறுக்குத் தெரித்தாற் போன்று. தீந்தமிழில். பைந்தமிழில். கலைஞர் பேனாவால் வசனம் எழுதவில்லை. கூர் வேல் கொண்டு எழுதியிருப்பார் போலும். நடிகர் திலகத்தின் திறமைகளை மனதில் வைத்தே பல வசனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

இயக்கம் எல்.வி.பிரசாத் என்ற மாமேதை. தெளிந்த நீரோட்டம் போன்ற இயக்கம். இந்த ஒரு படம் போதும் இவர் பெயரை உலகம் உள்ள மட்டும் பறை சாற்ற.

இசை எஸ்.வி.வெங்கடாமன். அற்புதம். 'சிங்காரப் பைங்கிளியே பேசு' தேனின் சுவை.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் திலகம் தன்னுடைய வசனங்களை மிக அருமையாகப் பேசி ஒரே டேக்கில் ஒகே செய்துவிடுவாராம். கண்ணாம்பா நடிகர் திலகம் நடிக்கும் காட்சிகளில் கண்ணாம்பா வீரமாக வசனம் பேசிக் கொண்டு வரும்போது நடுவில் 'டக்'கென்று வாய் குழறி வசனம் மறந்து விடுமாம். அதனால் மீண்டு ரீ.டேக் எடுப்பார்களாம். சில சமயங்களில் நடிகர் திலகம் கண்ணாம்பாவிடம் இதுபற்றி செல்லமாகக் கடிந்து கொள்வது கூட உண்டாம்.


நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 0

பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் புகழ் பெற்ற நாடகம் 'மனோகரா'. பல இடங்களில் 'மனோகரா நாடகம்' நடத்தப்பட்டு அப்போது (ரங்கூனில் கூட நடத்தப் பட்டதாம்) புகழ்க் கொடி நாட்டியது. 1936-இல் 'மனோகரா' படமாக எடுக்கப்பட்டபோது அதில் புருஷோத்தம மன்னனாக பம்மல் சம்பந்த முதலியார் நடித்தார்.

பின்னாட்களில் 'நடிப்பிசைப் புலவர்' கே.ஆர்.ராமசாமி 'மனோகரா' நாடகத்தை தன் சொந்த நாடகக் கம்பெனியில் நடத்தி வந்தார். ஜூபிடர் பிலிம்ஸ் இந்நாடகத்தை ராமசாமி அவர்களை மனோகராவாக நடிக்க வைத்து படமாக்க ஏற்பாடு ஆனது. இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி என்றும், வசனங்களை 'கண்ணகி' புகழ் இளங்கோவன் எழுதுவது என்றும் முடிவானது. ஆனால் என்ன காரணத்தாலோ இத்திட்டம் கைவிடப்பட்டது. படத்திற்கு நாயகர் சிவாஜி என்றும் வசனங்களை கருணாநிதி எழுதுவார் என்றும் முடிவானது. ஜூபிடர் பிக்சர்ஸ் சோமசுந்தரம் மனோகர் பிக்சர்ஸ் என்ற புது பேனரில் 'மனோகரா' படத்தைத் தயாரித்தார். இயக்குனர் எல்.வி.பிரசாத்.

இப்படத்தில் இறுதிக் காட்சியில் தூண்களில் கட்டப்பட்டிருக்கும் நடிகர் திலகம் கண்ணாம்பாவின் 'பொறுத்தது போதும்.... மனோகரா! பொங்கி எழு' வசனங்களின் போது சங்கிலிகளை அறுத்து தூண்களை உடைத்து அதகளம் செய்வார். இக்காட்சி புகழ் பெற்ற ஆங்கிலப் படமான 'சாம்சன் அண்ட் டிலைலா' படத்தில் கண் பார்வையற்ற சாம்சன் தூண்களை உடைத்து வரும் காட்சியைப் பின்பற்றி எடுக்கப்பட்டதாகும்.

'மனோகரா' மாபெரும் வெற்றி அடைந்ததும் ஒரு முறை நடிகர் திலகம் இப்படத்தைப் பற்றி பேசும் போது 'படம் நெடுகிலும் நான் கஷ்டப்பட்டு நடித்திருந்த போதிலும் 'பொறுத்தது போதும்... பொங்கியெழு' என்ற ஒரே ஒரு வசனத்தின் மூலம் கண்ணாம்பா ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை திருடிக் கொண்டார்' என்றார்.  இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் 'மனோகரா' படமாவதற்கு முன் நாடகமாக நடிக்கப்பட்டபோது அதில் மகாராணி பத்மாவதி வேடத்தில் நடித்தது சாட்சாத் நடிகர் திலகம்தான். (எதைத்தான் விட்டு வைத்தார் நடிகர் திலகம்?) அதில் கண்ணாம்பா பேசிய 'பொறுத்தது போதும்... பொங்கியெழு' வசனம் கிடையாதாம்.

நடிகர் திலகத்தின் முதல் படமான 'பராசக்தி' வெள்ளிவிழாக் கொண்டாடியது. அதற்குப் பின் வந்த நடிகர் திலகத்தின் படங்கள் சில நல்ல வெற்றியைப் பெற்றன. சில சுமாரான வெற்றியைப் பெற்றன.

ஆனால் 'மனோகரா' பராசக்திக்குப் பின் மிகப் பிரம்மாண்ட வெற்றியைப் படைத்தது. நடிகர் திலகம் கருணாநிதி கூட்டணி சரித்திர சாதனை புரிந்தது. நடிகர் திலகத்தின் திரையலக வாழ்க்கையில் மறக்க முடியாத மகோன்னத சரித்திரம் படைத்தது 'மனோகரா'. இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகின் உயர்நிலை நடிகர் அந்தஸ்தை நிரந்தரமாகப் பெற்றார் நடிகர் திலகம்.

அதுமட்டுமல்ல... 'மனோகரா' வெளியாகி  பல ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழ்த்திரையுலகில் புதுமுக நடிகர்கள் நுழைய வேண்டுமானால் 'மனோகரா' படத்தில் நடிகர் திலகம் பேசிய வசனங்களை பேசிக் காட்டிவிட்டுத்தான் உள்ளே நுழைய முடியும். அப்படி 'மனோகரா' வசனங்களை பேசிக்காட்டி திரையலகில் நுழைந்தவர்கள்தான் நடிகர்கள் சிவக்குமாரும், கமலும், ரஜனியும்.

மனோகரா, பராசக்தி போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அப்போது நடிகராக முடியும்.


மனோகரா படத்தின் மூன்று பாகங்களும் இத்துடன் இனிதே நிறைவு பெற்றது. ஆதரவு தந்த அன்புள்ளங்களுக்கு நன்றி!

தங்கள் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


இக்கட்டுரை முழுதும் என் சொந்தப் படைப்பே

நன்றி!


வாசுதேவன்.


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Feb 23, 2014 10:00 am

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 <a href=நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 VTS_01_2VOB_001198399

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Feb 23, 2014 10:10 am

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 <a href=நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 G1

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Feb 23, 2014 10:16 am

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 G2

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Feb 23, 2014 10:17 am

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 Girija

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Feb 28, 2014 6:47 am

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 I33162_vlcsnap-2012-10-19-08h17m58s72

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 I33166_vlcsnap-2012-10-19-08h18m26s89

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 I33165_vlcsnap-2012-10-19-08h18m51s88

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Feb 28, 2014 6:48 am

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 I33164_vlcsnap-2012-10-19-08h20m00s4

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 I33163_vlcsnap-2012-10-19-08h20m18s188

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Feb 28, 2014 6:51 am

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 I72280_mano8

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 I72279_mano9

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Feb 28, 2014 6:52 am

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 I72281_mano7

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 I72285_mano3

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Feb 28, 2014 6:54 am

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 I72283_mano5

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)  - Page 3 I72282_mano6

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Apr 05, 2014 10:15 am

மனோகரனுக்கு ஆதரவு தந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக