புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10 
30 Posts - 50%
heezulia
திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10 
72 Posts - 57%
heezulia
திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீறு இட்டு யார் கெட்டார்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 16, 2014 3:08 pm

First topic message reminder :

திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 PdBhMknZRzKYuwwZlpvE+hindu_child

திருநீறு என்பதை திரு+நீறு என்று பிரிக்கலாம். திரு என்பது 'தெய்வத்தன்மை வாய்ந்தது' என்று பொருள். "பாவங்களை நீற்றுவதால்" நீறு என்று பெயர்.  ஆக திருநீறு என்பது 'பாவங்களை நீக்கும் தெய்வத்தன்மையுடைய பொருள்' என்று அறியலாம். இந்த திரியில் திருநீற்றின் பெருமைகளைப் பற்றிச் சிறிது சிந்திக்கலாம். முதலில் ஒரு வரலாறைப் பார்ப்போம்.

எயினனூர் என்பது சோழவள நாட்டிலுள்ள பல்வளம் நிறைந்த சிற்றூர். இத்தலத்தில் ஈழவர்குலச் சான்றோர் மரபில் தோன்றிய உத்தமரே ஏனாதிநாதர் என்பவர். இவர் மிகுந்த சான்றாண்மை உள்ளவர். திருவெண்ணீற்றுப் பக்தியில் சற்றும் குறையாதவர். மெய்ப்பொருள் நாயனாரைப் போலவே, திருநீறு அணிந்தவர் யாவரேயாயினும், அவர்களைச் சிவமாகப் பார்த்து வணங்கி வழிபடுவார். பகைவர் மேனியில் திருவெண்ணீற்றின் ஒளியைக் கண்டுவிட்டால் போதும், உடனே பகைமையை மறந்து அவரை வணங்கி வழிபடுவார். இதனால் இவர் பகைவரும் போற்றும்படியான நல்லொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார்.

இப்பெரியார் சோழ மன்னர் படையில் ஒரு காலத்தில் சேனாதிபதியாக இருந்தவர்களின் சந்ததியில் தோன்றியவர். இப்பெரியார் வாட் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவரிடம் நல்ல வீரமும், வாட் பயிற்சி அளிக்கும் முறையும் இருந்ததால் இவரிடம், வாட் பயிற்சி பெற மாணவர்கள் நிறைய வந்து சேர்ந்த வண்ணமாகவே இருந்தனர். வாட் பயிற்சி மூலம் கிடைத்த வருவாயை யெல்லாம் சிவனடியார்களுக்கே செலவு செய்தார்.

இறைவன் படைப்பில், கருணை உள்ளம் கொண்ட வெள்ளை மனம் படைத்தவர்களுக்கும் பகைவர்கள் இருக்கத்தானே செய்கின்றனர். பாரெல்லாம் பால் பொழியும் தண் நிலவையும் கிரகணம் வந்து விழுங்குவதுபோல், ஏனாதிநாதரையும், பகைவன் ஒருவன் சூழ்ச்சியால் வெல்லத்தான் கருதினான். அவ்வூரில் அதிசூரன் என்று ஒருவன் இருந்தான். இவனும் வாட் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தான்.
(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 23, 2014 7:45 am

திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 ZRtpy5NYSI0aJJQcxd4s+thiruneeru

> பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு,
இராவணன் பூசிப் பயன் பெற்றது.
> நல்லவர்களால் எண்ணத்தக்கது.
> பராசக்தி வடிவமானது.
> பாவம் போக்குவது.
> தத்துவங்களாக (மெய்ப்பொருள்) இருப்பது.
> மெய்ப்பொருளை உணர்த்துவது.

> நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு,
திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது.
> வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது.
> பிறவியாகிய இடரைத் தவிர்த்து
> நிலையான இன்பம் அளிப்பது.

> மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு,
குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது.
> தியானிக்க இனியது.
> எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.

(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 23, 2014 10:51 pm

திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 Qt31A32vQs248ATSQ39k+thiruneeru

8) ஞானசம்பந்தர் திருவாக்கால் திருநீற்றின் பெருமையை அறிந்து கொண்டோம். திருநீற்றின் மகிமையால் ‘கூன் பாண்டியன்’, ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆன வரலாறு தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்!

பல்வளமுடைய பாண்டி நாட்டை அரசாட்சி செய்த பாண்டியர்களுள் கூன் பாண்டியன் என்பவனும் ஒருவனாவான். இவனது இயற்பெயர் நெடுஞ்செழியன் . அவனுடைய முதுகு கூன் விழுந்திருந்ததால் கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். கூன் பாண்டியன் அறிவு மிக்கவன். தன்னுயிர் போலவே எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துபவன். நீதியும் நேர்மையும் அவனிடத்தில் இயற்கையாகவே அமைந்திருந்தன. இங்கனம் நல்ல குணங்கள் பலவும் அமையப் பெற்ற கூன் பாண்டியன் மதுரை மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, பாண்டி நாட்டை செங்கோல் முறை தவறாமல் அரசாண்டு வந்தான். கூன் பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி என்பவள், பெண்டிர்க்குரிய நற்குணங்கள் பலவும் கொண்டிருந்தாள். தனது பெயருக் கேற்பவே மங்கையருக்கெல்லாம் அரசியாகவே விளங்கினாள். கணவன் கருத்துணர்ந்து நடப்பதில் வல்லவனாகத் திகழ்ந்தாள்.

இல்லற வாழ்க்கையும் நற்குண மனைவியும் பெற்ற கூன் பாண்டியன், அரசியல் வாழ்க்கையிலும் நெறி தவறா அமைச்சன் ஒருவனையும் பெற்றிருந்தான். குலச்சிறை என்னும் பெயருடைய அவன், கூன் பாண்டியனுக்குத் தலைமை அமைச்சனாக இருந்து ஆட்சியைத் திறமையாக நடத்தி வந்தான். மங்கையர்க்கரசியாரை மனைவியாகவும், குலச்சிறையை அமைச்சனாகவும் பெற்ற கூன் பாண்டியன், யாதொரு குறையுமின்றி வாழ்ந்து வந்தான். அவன், சொக்கநாதக் கடவுளிடம் அளவில்லா அன்பு கொண்டிருந்தான். அவனைப் போலவே, அவன் மனைவியும் அமைச்சனும் சிவ பக்தியிற் சிறந்து விளங்கினர். மன்னன் கோயில்களில் பூசைகள் குறைவில்லாமல் நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்தான். சிவனடியார்களைக் கடவுள் போல போற்றி வழிபட்டான்.

இல்லற வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், பக்தி வாழ்க்கையிலும் மேம்பட்டு விளங்கிய கூன் பாண்டியனது ஆட்சியில் குடிமக்கள் அமைதியுடன் வாழ்ந்தனர். வறுமை என்பதே பாண்டிய நாட்டில் தலைகாட்டவில்லை; வளம் கொழிந்தது. தேனைச் சுற்றி எறும்புகள் மொய்ப்பதைப் போல, வளமுள்ள பாண்டி நாட்டை நோக்கி, நாலா திசையிலும் மக்கள் வந்து குடியேறினர்; பல சமயத்தைச் சார்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசுபவர்களும் மதுரை நகரில் நிரம்பினர். அவர்களுள், அருகனைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமண சமயத்தினர் மிகுதியாக மதுரையில் குடியேறினர்.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 25, 2014 6:45 am

திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 H91WfI1XS5anEVWp25Ic+tiruneeru

சிறிது சிறிதாகச் சமணர்கள் அரசனிடம் செல்வாக்குத் தேடிக் கொண்டனர். கூன் பாண்டியன் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவன். அதனால், சமணர்களையும் பிற சமயத்தவர்களையும் ஆதரித்தான். ஆனால், அவ்வாறு ஆதரித்தது அவனுக்கே தீங்காக முடிந்தது. சமண சமயத்தைப் பற்றிய செய்திகளைச் சமண முனிவர்கள் வாயிலாகக் கேட்டுணர்ந்தான். சமணர்களும் அதுதான் சமயமென்று, சைவ சமயத்தைவிடச் சமண சமயம் மேலானது என்று அரசன் நம்புமாறு செய்தனர். உண்மை யுணராத அரசன், மனம் மாறத் தொடங்கினான்.

வாழையடி வாழையாகச் சைவ சமயத்திலே வளர்ந்து வந்த பாண்டியர் குலத்திலே பிறந்த கூன் பாண்டியன், சமணரது வலையில் வீழ்ந்து விட்டான்; சைவ சமயத்தை விட்டு சமணனாக மாறினான். அரசன் சமண சமயத்திற்கு மாறியதை அறிந்ததும் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் புழுப்போல் துடித்தனர். சைவ சமயம் மங்கிவிடுமே என்று அஞ்சினர். கூன் பாண்டியனைத் திருத்த முடியுமா? அவன் அரசனாயிற்றே? என்ன செய்வானோ? என்று எண்ணியவராய், மனதிற்குள்ளேயே பொருமினர். இருந்தாலும் அரசனுக்குத் தெரியாமல், சைவ சமய வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தினர். 'அரசன் எவ்வழி, குடிமக்கள் அவ்வழி' என்பார்கள். அரசன் சமண சமயத்தைத் தழுவியதை அறிந்த குடிமக்களில் பலரும் சமண சமயத்தை மேற்கொள்ளத் தொடங்கினர்; அரசன் மேல் உள்ள அச்சத்தால் சிலர் சமணராயினர்; சமணருடைய கொடுமை தாங்காமல் சமணரானோர் பலர்.

சைவத்தில் சிறந்து விளங்கிய மதுரை மாநகரம் சமண சமயத்திற்கு அடிமைப்பட்டது. கொஞ்ச நஞ்சமிருக்கும் சைவ சமயமும் எங்கே அழிந்து விடுமோ என்று மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அஞ்சினர். சமண சமய வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தியிருந்த கூன் பாண்டியன், போரில் ஈடுபடும்படியான நிலை ஏற்பட்டது. வட நாட்டரசன் ஒருவன், பெரும்படையுடன் கூன் பாண்டியனைத் தாக்குவதற்காகப் புறப்பட்டு வந்தான். அவன் படையெடுத்து வருவதை ஒற்றர்களால் அறிந்த கூன் பாண்டியன் தானும் போருக்குத் தயாரானான். பாண்டியப் படை அணி வகுத்து நின்றது. கூன் பாண்டியன் வேப்பமாலை சூடித் தேரேறிப் புறப்பட்டான்.

தேர்மீது மீன்கொடி பட்டொளி வீசிப் பறந்தது; முரசு முழங்கப் பாண்டியப் படை அரசனைப் பின் தொடர்ந்தது. வடநாட்டுப் படையும் பாண்டியப் படையும் திருநெல்வேலியிலே சந்தித்தன; இரு பெரும் படைகளும் மோதிக் கொண்டன; பாண்டியனிடத்திலே யானைப் படை மிகுதியாக இருந்தன. சில நாட்கள் வரையில் முழு மூச்சோடு போரிட்டுக் கொண்டிருந்த வடநாட்டுப் படை, பாண்டியனது யானைப் படை முன் நிற்கமாட்டாமல் புறங்காட்டி யோடின.

வடநாட்டுப் படையின் தோல்வியைக் கண்டு பாண்டிய வீரர்கள் தோள்தட்டி ஆரவாரித்தனர். பாண்டியன், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக வேப்ப மாலையோடு வாகை மாலையும் சூடிக் கொண்டு மதுரையை அடைந்தான். வெற்றி வீரனாக வரும் தங்கள் அரசனை மக்கள் மகிழ்ச்சியுடன் சென்று வரவேற்றனர். மங்கையர்க்கரசியாரும் தன் கணவனின் வெற்றியை அறிந்து மகிழ்ச்சிக் கடலில் திளைத்தாள். போர் முடியுற்றதால் நாட்டில் அமைதி நிலவியது. பாண்டியன் தனது கருத்தை மேலும் சமண சமய வளர்ச்சியில் செலுத்தத் தொடங்கினான்.

ஆங்காங்கே சமணக் கோயில்களும், சமணப் பள்ளிகளும் கட்டப்பட்டன. அரசன் சமண சமய வளர்ச்சியில் மிகுதியான கருத்தைச் செலுத்தியதால், சைவ சமயம் மேலும் தாழ் நிலையடையத் தொடங்கியது. மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சைவ சமயம் தாழ்ந்து வருவதைக் கண்டு மிகக் கவலை கொண்டார்கள்; சைவ சமய வளர்ச்சிக்கு யாது செய்வதென்று இருவரும் ஆராய்ந்தனர்.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 26, 2014 7:04 am

திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 JXfLUrc4Semkvq7QwHDi+tiruneeru

அப்போது சீர்காழிப் பகுதியிலே தோன்றிய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் சைவத் தொண்டு செய்து வருவதைக் கேள்வியுற்றனர். சம்பந்தரால் சைவம் தழைக்கும் என்று நம்பினர். எனவே, அவரை மதுரைக்கு அழைப்பது என்று முடிவு செய்தனர். தங்கள் நம்பிக்கைக்குரிய ஏவலாளரில் சிலரை, அரசனுக்குத் தெரியாமல் சம்பந்தரிடம் அனுப்பினர்; பாண்டி நாட்டின் சமய நிலையைப் பற்றிய உண்மையை அவருக்குச் சொல்லுமாறு ஏவலாளரிடம் கூறியிருந்தனர். திருஞானசம்பந்தர் ஒவ்வோர் ஊராகச் சென்று, சிவபெருமானை வழிபட்டு வந்தார்.

அம்முறையில் திருமறைக்காட்டிற்குச் சென்று, வேதவனப் பெருமாளை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது, மங்கையர்க்கரசியாராலும் குலச்சிறையாராலும் அனுப்பப்பட்ட ஏவலாளர்கள், திருஞானசம்பந்தரைக் கண்டு வணங்கினர். அவர்கள் வாயிலாக பாண்டி நாட்டில் சமண சமயம் வளர்ச்சி பெற்று வருவதையும், சைவ சமயம் தாழ்ந்து வருவதையும், அறிந்தார். பாண்டியன் சமண சமயத்தையும், மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சைவ சமயத்தையும் ஆதரித்து வருவதும் அவருக்குத் தெரியும்; வந்த ஏவலாளர்கள் அவரைப் பாண்டி நாட்டிற்கு வந்து, சமணர்களை வாதத்தில் வென்று, சைவ சமயத்தை ஈடேற்றுமாறு வேண்டிக் கொண்டனர்.

திருஞானசம்பந்தரும் அதற்கு உடனபட்டார். தம்முடன் இருந்த அடியாராகிய திருநாவுக்கரசரிடம் சொல்லிவிட்டுப் பாண்டி நாட்டிற்குப் பயணமானார். அவரைப் பின்தொடர்ந்து சைவ அடியார் கூட்டம் சென்றது. திருஞானசம்பந்தர் அடியார்கள் கூட்டத்துடன் மதுரைக்கு அருகில் வந்து கொண்டிருந்தார். அவரது வருகையைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்தரை வரவேற்றுக் கோயிலுக்கு அழைத்து வருமாறு குலச்சிறையாரை அனுப்பிவிட்டுத் தாம் நேராகக் கோயிலுக்குச் சென்றார்.

குலச்சிறையார், மதுரைக்குப் புறத்தே தங்கியிருந்த திருஞானசம்பந்தரைச் சென்று கண்டு வணங்கி வரவேற்று அளவளாவினார். குலச்சிறையார், திருஞானசம்பந்தரை மீனாட்சியம்மையைத் தரிசிப்பதற்காகக் கோயிலுக்கு எழுந்தருளுமாறு வேண்டிக் கொண்டார். அவரும் அவரது வேண்டுகோளுக்கிணங்கித் தம்முடைய திருக்கூட்டத்துடன் கோயிலுக்குச் சென்றார்.

முன்னமே கோயிலுக்குச் சென்று காத்திருந்த மங்கையர்க்கரசியார், சம்பந்தரைக் கண்டதும் கீழே விழுந்து பணிந்தார். சம்பந்தர் சொக்கநாதக் கடவுளையும் அங்கயற்கண்ணியையும் வழிபட்டுத் தேவாரத் திருப்பதிகங்கள் பாடினார். பின்னர் எல்லோரும் ஒன்றுகூடி அளவளாவினார்கள். சமணர்கள் செய்யும் கொடுமைகளையெல்லாம் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மற்றைய அடியார்களும் சம்பந்தருக்குத் தெரிவித்தனர். சமணர்களை வாதத்தில் வென்று சைவ சமயத்தை நிலை நிறுத்துமாறும், அரசனையும் சைவனாக்கித் திருநீறணியச் செய்யுமாறும் வேண்டிக் கொண்டனர். சம்பந்தரும் சமணரை வாதத்தில் வெல்வதாக வாக்களித்தார்.

சம்பந்தர் தங்கியிருப்பதற்காக மடம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சம்பந்தர் இறைவனைத் தொழுத பின் தம்முடைய திருக்கூட்டத்தோடு மடத்திற்குச் சென்று தங்கினார். சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியதை அறிந்த சமணர்கள் கடுங்கோபங் கொண்டனர். அவருக்கு எந்த வகையிலாவது தீங்கு செய்து, மதுரையை விட்டு ஓடிப் போகுமாறு செய்ய வேண்டுமென்று திட்டமிட்டனர்.

சமணர்கள் எல்லோரும் ஒரே கூட்டமாகப் பாண்டியனைக் காணச் சென்றனர். சம்பந்தரது வருகையால் சமண சமயம் அழிந்து விடும் என்று முறையிட்டனர். கூன் பாண்டியன் அதற்கு யாது செய்வது என்று அவர்களையே வினவினான்.சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால் மடத்திற்கு நெருப்பிட்டு, சம்பந்தரை மதுரையை விட்டு ஓடச் செய்வதாகக் கூறினர். சமண சமய வெறியினால், அரசனும் அதற்கு உடன்பட்டான்.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 26, 2014 10:57 pm

திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 YaTUEMo3SCCHqlVwR4Mt+thiruneeru

11) ஞானசம்பந்தரும் அடியார்களும் தங்கியிருந்த மடத்தை நோக்கி நள்ளிரவில் சமணர்கள் சென்றனர். அப்பொழுது எல்லோரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால், மடத்தில் தீப் பற்றுமாறு செய்ய முயன்றனர். ஆனால், அவர்கள் மந்திர வித்தை சம்பந்தரையோ, அவர் தங்கியிருந்த மடத்தையோ ஒன்றும் செய்யவில்லை. சமணர்களுக்கு அச்சம் வந்து விட்டது. அரசன் அறிந்தால் தங்களைத் தண்டிப்பதோடு, சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறிவிடுவான் என்பதை உணர்ந்தனர்.

அதனால், தீப் பந்தங்களைக் கொண்டு திருமடத்திற்குத் தீயிட்டனர்; மடத்தை நெருப்பு எரிக்கத் தொடங்கியது. நெருப்புப் பரவத் தொடங்கியதும் அடியார்கள் கூச்சலிட்டனர். விழித்தெழுந்த சம்பந்தர் திருமடம் தீப்பற்றி எரிவதைக் கண்டார். சமணர்களாலேயே அச் செயல் நிகழ்ந்தது என்பதை அடியார்கள் சொல்ல அறிந்து கொண்டார். உடனே, சிவபெருமான் மீது தேவாரம் பாட, நெருப்பு இருந்த இடம் தெரியாமல் அணைந்தது. அரசனும் நெருப்புப் பரவுவதற்குக் காரணமாக இருந்தவனாதலால், அந்நெருப்பே, சுரநோயாக அவனைச் சென்றடைந்தது. அரசன் புழுவாய் துடித்தான்; அரசாங்க மருத்துவர்களும் சமண மந்திரவாதிகளும் விரைந்தனர்.

சமணர்களின் மருந்தாலும் மந்திரத்தாலும் பாண்டியனது சுரநோய் மேலும் வளர்ந்ததேயொழியச் சிறிதும் குறைந்தபாடில்லை. நோயினால் துடித்த பாண்டியன், தன்னுடைய நோயைத் தீர்க்க முடியாத அவர்களையெல்லாம் அப்பால் போகுமாறு வெறுப்புடன் கூறினான். மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சம்பந்தருக்குச் செய்த தீங்கினால்தான் அந்த நோய் வந்ததென்றும், சம்பந்தர் வந்தால்தான் அந்த நோய் நீங்குமென்றும் சொல்லினர். நோயைப் பொறுக்க முடியாத பாண்டியன், எப்படியாவது தனது நோய் நீங்கினால் போதுமென்று எண்ணினான்; அதனால், உடனே சம்பந்தரை அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

சம்பந்தர் அரண்மனைக்கு எழுந்தருளினார்; சமணர்கள் அவரது வருகையை விரும்பவில்லை. அதனால், அரசனிடம் சென்று சம்பந்தர் வந்தால் சமண சமயம் அழிந்துவிடுமென்றும், அவரை வராமல் தடுக்குமாறும் வேண்டிக் கொண்டனர். ஆனால், அரசன் அவர்கள் சொல்லுக்கு உடன்படவில்லை.

சம்பந்தரையும் சமணர்களையும் தன்னெதிரில் ஒன்று கூடுமாறு சொல்லினன். இருவரில் எவர் தங்கள் தெய்வத் தன்மையால் தன்னுடைய நோயைத் தீர்த்தாலும், அவர்கள் சொல்வது போல் கேட்பதாகப் பாண்டியன் கூறினான். ஞானசம்பந்தரும் சமணர்களும் அதற்கு உடன்பட்டனர். சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்பதென்றும், சம்பந்தர் தமது வன்மையால் வலப் பாகத்து நோயைத் தீர்ப்பதென்றும், முடிவாயிற்று.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Mar 04, 2014 9:59 am

திருநீறு இட்டு யார் கெட்டார்? - Page 2 0VybXSkFTsqgzb4bR9nm+5Amman

12) முதலில், சமணர்கள் தங்கள் மந்திரத்தை ஓதி, மயில் தோகையால் அரசனது இடப் பக்கத்தைத் தடவினர். தடவியவுடன், நோய் குறைவதற்கு மாறாகப் பன்மடங்கு பெருகியது. ஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்னும் தேவாரம்பாடி, அரசனது வலப்பாகத்தில் திருநீற்றினைத் தடவினார். தடவியவுடனேயே வலப்பக்க நோய் இருந்த விடம் தெரியவில்லை. அரசன் சம்பந்தரது பெருமையை உணர்ந்தான்; சமணர்களையெல்லாம் அவ்விடத்தைவிட்டு உடனே அகன்று விடுமாறு கட்டளையிட்டான்.

அவர்கள் அரசனது கட்டளைக்கு அஞ்சி உடனே சென்றுவிட்டனர். அரசன் சம்பந்தரை வணங்கித் தன்னுடைய இடப்பாகத்து நோயையும் தீர்க்குமாறு வேண்டிக் கொண்டான். சம்பந்தரும் இடப் பக்கத்தில் திருநீறு தடவ , அந்நோய் மறைந்தது; நோயோடு அவனது கூனும் மறைந்தது. நெடுநாளாக இருந்த கூனும் சுரநோயும் நீங்கப் பெற்ற பாண்டியன், சைவ சமயத்தின் பெருமைகளை உணர்ந்தான்.

அன்று முதல் அவனுக்கு 'நின்ற சீர் நெடுமாறன்' என்ற பெயர் ஏற்பட்டது. சைவசமய வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தத் தொடங்கினான்; சிவன் கோயில்களுக் கெல்லாம் பூசைகள் நடப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்தான். சிவனடியார்களை அன்போடு உபசரித்து வந்தான்; நீண்ட நாள் சிவத்தொண்டு செய்தபின் இறைவனது திருவடி நிழலை அடைந்தான்.
(தொடரும்)

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக