ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

'அரசு சாராயம் விற்பது கேவலமான செயல்': அன்புமணி ராமதாஸ்

View previous topic View next topic Go down

'அரசு சாராயம் விற்பது கேவலமான செயல்': அன்புமணி ராமதாஸ்

Post by சிவா on Mon Mar 24, 2014 3:50 am


'திராவிட கட்சிகளுடனோ, தேசிய கட்சிகளுடனோ இனிமேல் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்' என, சில மாதங்களுக்கு முன், அறிவித்து, தனித்தே பத்து தொகுதிகளில் களம் காண தயாரானது, பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால், தற்போது, தேசிய கட்சியான பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., இணைந்திருக்கிறது. இதற்கு முழு முதல் காரணமாக இருந்து செயல்பட்டவர், கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். இது குறித்தும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும், 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

நீங்கள், வன்னியர் சமூகத்தை மையமாக வைத்து அரசியல் செய்கிறீர்கள். ஆனால், அந்த சமூகத்தின் ஓட்டுக்களை கவரும் நோக்கில், அ.தி.மு.க., சார்பில், எட்டு வன்னியர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனரே...
வன்னிய இனத்தை சேர்ந்தவர்கள், அப்படி ஒன்றும் ஏமாளிகள் அல்ல. இந்த முறை தேர்தலில் வன்னிய இனத்தை சேர்ந்தவர்களின் ஓட்டுக்கள் சுத்தமாக ஜெயலலிதாவுக்கு கிடைக்காது. அதற்கு பின்னணியில் நிறைய காரணங்கள் இருந்தாலும், காயங்கள் தான் முக்கியமான காரணம். கடந்த மூன்று ஆண்டுகளில், வன்னியர்கள் மீது, மிகப் பெரிய அளவில், அரசு, தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. 134 வன்னியர்கள் மீது குண்டர் பாதுகாப்பு சட்டத்தை ஏவி, அவர்களை தொடர்ச்சியாக சிறையில் அடைத்து, சித்ரவதை செய்திருக்கிறார் ஜெயலலிதா. வன்னிய இனத்தின் தலைவராக அறியப்பட்டு இருக்கும் ராமதாசை கைது செய்து, சிறையில் அடைத்து இருக்கிறார். அவர் மீது, தொடர்ச்சியாக ஐந்து வழக்குகள் போடப்பட்டன. 12 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் வயதானவர். அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை உள்ளன. அதையெல்லாம் துளியும் பொருட்படுத்தாமல், அவரை கொடுமைப்படுத்தி சிறையில் அடைக்கும் அளவுக்கு அவர் செய்த பாவம் என்ன?எங்கள் கட்சியை சேர்ந்த வன்னியர்கள் மட்டுமல்ல, தி.மு.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளில் இருக்கும் வன்னிய நிர்வாகிகள் பலரும் கூட கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். எனக்கு தெரிந்தவரையில், அவர், பா.ம.க.,வை பழிவாங்க வேண்டும் என்று துடித்ததை விட, வன்னியர்களை கொடுமைப்படுத்தி ஒடுக்க வேண்டும் என்பதில் தான், முழு அக்கறையோடு இருந்து செயல்பட்டு இருக்கிறார். இதனால் தான் சொல்கிறேன், உணர்வுள்ள ஒரு வன்னியன் கூட அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டான்.

வன்னியர்களை ஏன் ஜெயலலிதா, சிறையில் அடைக்க வேண்டும்?
வன்னியர்கள் அரசியல் ரீதியில் மேலான நிலைக்கு வந்துவிடக் கூடாது என்ற, கெட்ட எண்ணம்தான். அப்படியெல்லாம் அவர் நினைத்து செயல்படவே தான், வன்னியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பா.ம.க., மீது, அவர் வன்மத்தோடு செயல்பட்டது போல ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது. ஜெயலலிதாவின் இந்த கொடூரங்களை வன்னிய இன மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். அதனால், அவர்கள் கட்டாயம் தங்களுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள் என்பதை, புரிந்து கொண்டு தான், வன்னியர்களுக்கு திடீரென முக்கியத்துவம் கொடுப்பது போல, வேட்பாளர்களில் எட்டு பேரை வன்னியர்களாக அறிவித்திருக்கிறார்.

மகாபலிபுரம் சித்ரா பவுர்ணமிக்காக நீங்கள் நடத்திய விழாவின் போது, ஏன் இத்தனை பெரிய பிரச்னை?
இதுவும் அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட பிரச்னைகள் தான். பா.ம.க.,வை அ.தி.மு.க., கூட்டணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று, அவர்கள் விரும்பினர். அதற்காக உளவுத்துறை போலீசார் மூலம் சில ஏற்பாடுகளையும் செய்தனர்.ஆனால், எங்களுக்கோ கட்சியினருக்கோ, அதில் துளியும் விருப்பமில்லை. இதை நாங்கள் பலமுறை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டோம். இதற்கிடையில் முழு நிலவு சித்திரை இளைஞர் பெருவிழாவில், எங்கள் இளைஞர்கள் சிலர் நாடகம் நடத்தினர். அதில், எல்லா இயக்கங்களையும் நாட்டு நடப்புகளையும் விமர்சித்தனர்.இது, ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட ரீதியில் காயத்தை ஏற்படுத்தி விட்டது. உடனே பா.ம.க., மீதும் வன்னியர்கள் மீதும் அடக்குமுறையை ஏவிவிட்டார். ராமதாசுக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.அந்த கூட்டத்தில் வன்னியர்களாக இருக்கும் பல கட்சியினரும் உணர்வோடு கலந்து கொண்டனர். வெறுப்பில் அடக்குமுறையோடு நடந்துகொள்ள முயற்சித்ததன் விளைவாக, கலவரம் வெடித்தது. எங்கள் தரப்பில் இரண்டு கட்சிக்காரர்கள் கொல்லப்பட்டனர்.இதை, அரசு தரப்பில், கொலை என்று ஏற்று கொள்ளக் கூட மனசு வரவில்லை. விபத்து என்று கூறி, நியாயத்தை குழி தோண்டி புதைக்க முயன்றதும், ராமதாஸ் நீதி விசாரணை தான் கோரினார்.உடனே சட்டசபையில், நடந்த உயிரிழப்பை விபத்து என்றே பதிவு செய்தனர். அதன்பிறகும், அமைதியாக இருக்க முடியாமல், ராமதாஸ் நீதி கேட்டு அறவழியில் தான் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டார். இதற்காக, முன் அனுமதி பெறப்பட்டது. ஆனால், கொடுத்த அனுமதியை, நள்ளிரவு 1:00 மணிக்கு, போலீசார் ரத்து செய்தனர். விழுப்புரம், ஆர்ப்பாட்டத்துக்கு கிளம்புவதற்கு முன்பாகவே அவரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு, அவரை ஒரு நாள் முழுக்க அலைக்கழித்து விட்டு, மறுநாள் காலை 4:30 மணிக்கு திருச்சி சிறையில் அடைத்தனர்.இது எந்த மாதிரியான அணுகுமுறை என்றே புரியவில்லை. இத்தனைக்கும் பிறகு, எங்களோடு கூட்டணி என்பது, நடக்குமா?

தி.மு.க., தரப்பில் கூட்டணிக்காக உங்களை யாரும் அணுகினரா?
அணுகினர். ஆனால், நாங்கள் அதற்கு இசையவில்லை. அவர்கள் தவிரவும் வேறு சில கட்சிகளும் எங்களை அணுகினர். ஏன், காங்கிரசில் இருந்தும் கூட எங்களை அணுகினர்.

பா.ஜ., கூட்டணியில் அவர்களாக உங்களை அணுகினார்களா? நீங்கள் அந்த கூட்டணியை நோக்கி சென்றீர்களா?
பா.ஜ., தரப்பில் எங்களை அணுகினர். அவர்கள், கூட்டணியில் நாங்கள் இணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கூறினர். அதற்கான காரணங்களையும் விளக்கினர். அதெல்லாம் ஏற்புடையதாக இருந்ததால், பா.ஜ., கூட்டணியில் இணைவது என, தீர்மானித்து, காரியமாற்றினோம். அதன்பின், இந்த கூட்டணி முழுமையடைவதற்கு, நாங்கள் தான் தீவிரமாக பணியாற்றினோம்.

சரி, பா.ஜ., கூட்டணி எந்த விதத்தில் சிறந்தது என்று சொல்கிறீர்கள்?
நாங்கள் பா.ஜ., கூட்டணியில் இணைந்ததற்கு, மூன்று பிரதான காரணங்கள் உண்டு. இந்தியாவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் வாழ முடியாத அளவுக்கு சிரமப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.ஊழல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் இளைஞர்களும் கூட, 'இந்தியாவில் ஆட்சி மாற்றம் வேண்டும்' என, விரும்புகின்றனர்.அதற்கு சரியான தலைமை நரேந்திர மோடி என்றும் நம்புகின்றனர். மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி ஏற்பட்டால், அது நீடித்த, நிலையான, நேர்மையான மக்களாட்சியாக இருக்க முடியும் என்று, நம்புகிறோம். அந்த வகையில்தான், பா.ஜ., கூட்டணியில் இணைவது என்று நாங்கள் தீர்மானித்தோம்.இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை ஆகியவற்றுக்கு நரேந்திர மோடி ஆட்சியின் மூலம் நிரந்தர தீர்வு ஏற்படும் என்று, நம்புகிறோம். குஜராத்தில் மோடி இலவசங்களை கொடுத்து, மதுவை கொடுத்து மக்களை சீரழிக்கவில்லை.இதெல்லாம், பா.ம.க., கொள்கைகளோடு ஒத்துப்போகும் விஷயங்கள். அது மட்டுமல்ல, தமிழகத்தை, 47 ஆண்டுகளாக தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்து, சீரழித்து விட்டன. அந்த நிலை மாற வேண்டும். அதற்கு சரியான மாற்று அமைத்தாக வேண்டும். அதற்காக அமைக்கப்பட்ட மாற்றுதான், பா.ஜ., கூட்டணி. 2011ல் ஜெயலலிதா வர வேண்டும் என்று விரும்பி, மக்கள் அவருக்கு ஓட்டளிக்கவில்லை.கருணாநிதி மீண்டும் வரக்கூடாது என்று முடிவெடுத்து, மாற்றாக நினைத்து ஜெயலலிதாவுக்கு ஓட்டளித்து விட்டனர். இனி அந்த தேவை இருக்காது. இருவரையும் வீழ்த்தும் வெறியில் இருக்கும் மக்கள், பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பர்.

வரும் 2016 சட்டசபை தேர்தலுக்கும் இந்த கூட்டணி தொடருமா?
இப்போதே அந்த கேள்வியை கேட்டால், இந்த சூழ்நிலையில் அதற்கு மிக சரியாக பதிலளிக்க முடியவில்லை. லோக்சபா தேர்தல் முடிந்த பின்னால், அடுத்தடுத்து கூட்டணி கட்சிகளிடம் பேசித் தான் முடிவெடுக்க முடியும். 2016ல் தமிழகத்திலும் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு கூட்டணி உருவாக்கப்படும். அந்த பணியை பா.ம.க., சிறப்பாக செய்து முடிக்கும்.

வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரமெல்லாம் செய்யச் சொல்லி, திடுமென புதிய கூட்டணி அமைத்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை நட்டாற்றில் விடுவது சரியா?
அதான் சொன்னேனே. தனியாக போட்டியிடுவது என்கிற சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவு அது. அதன்பின், கூட்டணி அமைத்துவிட்டோம். அதனால், எந்த பிரச்னையும் இல்லை.

உங்கள் அணிக்கு தலைமையேற்பது, யார்?
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, பா.ஜ.,தான் தலைமை.

உங்கள் கூட்டணி, தமிழக அரசியலில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்?
எங்கள் கூட்டணி, இன்றுள்ள நிலையில் 25 இடங்களில் வெற்றி பெறும். நாட்கள் நகர நகர, எங்கள் வலிமையான பிரசாரத்திற்கு பின், அது கூடுதலாகும்.தி.மு.க.,வை பொறுத்தவரையில் - ஸ்டாலின், அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரையில் - ஜெயலலிதா ஆகியோர் மட்டுமே, அவர்கள் அணிகளுக்கு ஒரே பிரசாரகராக இருப்பவர்கள். ஆனால், எங்கள் அணிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், ராமதாஸ், மோடி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் என, பல நட்சத்திர பேச்சாளர்கள் இருக்கின்றனர்.

பா.ஜ.,வுடன் பா.ம.க., கூட்டணி அமைத்ததில் உங்கள் தந்தை ராமதாசுக்கு விருப்பமில்லை என்கின்றனரே?
அப்படியெல்லாம் இல்லை. இது பரப்பப்படும் வதந்தி. அவருடைய அனுமதியில்லாமல், நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்.

இதுவரை அவரிடம் இருந்து பா.ஜ., கூட்டணி தொடர்பாக ஒரு அறிக்கை கூட வரவில்லையே?
பொறுத்திருங்கள்; விரைவில் வரும்.

பிரசாரத்தில் உங்கள் தந்தை, விஜயகாந்துடன் ஒரே மேடையில் ஏறுவாரா?
பிரசாரத் திட்டங்கள் எல்லாம் வகுக்கப்பட்ட பின்னால், கட்டாயம் அதெல்லாம் கூட நடக்கும்.

உங்கள் கூட்டணியை அமைய விடாமல் சிலர் முயற்சித்தார்களா?
ஆமாம். அ.தி.மு.க., தரப்பில் தான், இந்த கூட்டணி அமைந்து விடக்கூடாது என, பெரிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. குழப்பங்களையும் விளைவித்தனர். உளவுத்துறை மூலம் பல குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. இருந்தும், இந்த கூட்டணியை வெற்றிகரமாக அமைத்து விட்டோம்.

பா.ம.க.,வுக்கு ஜாதி அரசியலில் இருந்து வெளியே வர விருப்பம் இல்லையா?
இப்படித் தான், பா.ம.க., குறித்து ஒரு தவறான புரிதல் இருக்கிறது. நாகரிகம், பண்பாடு, மதம், இனம், மொழி, ஆன்மிகம் இப்படி மனித வாழ்க்கைக்கு தேவையான சமூகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும் ஏற்றுக் கொள்ளும்போது, மனித இனத்துக்குள் இருக்கும் ஜாதியை மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும்?சமூகத்தில் பின்தங்கியிருக்கும் ஜாதியினரை மேம்படுத்தும் பணியில் பா.ம.க., இருக்கிறது. அந்த வகையில் வன்னியர்களுடைய மேம்பாட்டுக்காக நாங்கள் பாடுபடுவது, மற்ற ஜாதியினருக்கு எதிரானது அல்ல. அவர்களுடைய வாழ்க்கை தரத்துக்கு நாங்கள் என்றும் குறுக்கீடு செய்ய மாட்டோம்.சமூகத்தில், எஸ்.சி.,- எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தால், மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதே போல், நாடக காதலை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.காதல் திருமணங்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. அதற்காகத் தான், பெண்ணுக்கான திருமண வயதை, 21 ஆக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 21 வயதுக்கு மேற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொள்ளட்டும்.அதைவிடுத்து, காதல் என்கிற பெயரில் பாலியல் துன்புறுத்தல்களும், பணம் கேட்டு மிரட்டும் போக்கும் கூடாது என்பது தான், எங்கள் நிலைப்பாடு. இதையெல்லாம் போக்க வேண்டி, நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். அதேபோல, நதிகளை இணைத்து தேசியமயமாக்க வேண்டும், இந்தியா முழுவதும் குஜராத்தை போல பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பதை எல்லாம், புதிய அரசிடம் வலியுறுத்துவோம்.

மூன்றாண்டு கால தமிழக அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் என்ன?
நாட்டை கெடுத்து, குட்டிச் சுவராக்கி விட்டனர். இருண்ட ஆட்சி இது. இருளிலேயே மக்களை வைத்திருக்கின்றனர். இருளுக்கு என்ன மதிப்பெண் வழங்க முடியும்?சட்டம் - ஒழுங்கு என்பதே தமிழகத்தில் இல்லை. அப்படி என்றால் என்ன என்று, கேட்ககூடிய நிலைதான் உள்ளது. இதுவரையில், 6,000 கொலைகள் நடந்திருக்கின்றன. 60 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இது தான், ஜெயலலிதாவின் கோஷமான, 'அமைதி, வளம், வளர்ச்சி'யா?
*இத்தனை ஆயிரம் வழக்குகள் போட்டு விட்டு அமைதி என்பது சரியா?
*இருக்கும் வளங்களையெல்லாம் சுரண்டி விட்ட பிறகு எங்கே இருக்கிறது வளம்?
*தண்ணீர் பிரச்னை, மின்சார பிரச்னை இருக்கிறது. 2011ல் இருந்து 4.2 சதவீதமாக தொழில் வளர்ச்சி சுருங்கி இருக்கிறது. 'மைனஸ்'சில் செல்கிறது வேளாண் வளர்ச்சி.இப்படி எல்லா துறைகளிலும் சரிவை சந்தித்திருக்கும் ஜெயலலிதா தான், இந்தியாவுக்கே பிரதமராக ஆசைப்படுகிறார். அவர் கனவு நிச்சயம் பலிக்காது. 'அம்மா' இட்லி, 'அம்மா' சட்னி என, தொடர்ந்து இலவசங்களை கொடுத்து, நாட்டு மக்களை சோம்பேறிகளாக்கிய சாதனை?யத் தான், இந்த அரசு செய்திருக்கிறது.இதில் இருந்து எல்லாம் மக்களை விடுபட வைக்கத் தான், எதிர் எதிர் நிலைகளில் இருந்த விஜயகாந்த் போன்றவர்களுடன் கூட, பா.ம.க., கை கோர்த்திருக்கிறது.

பூரண மதுவிலக்கு தமிழகத்தில் சாத்தியமா?
ஏன் சாத்தியப்படாது. கேட்டால், பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால், கள்ள சாராயம் பெருகிவிடும் என்று சொல்கின்றனர். அது தவறு. கள்ள சாராயத்தால் 50 பேர் இறப்பர். போகட்டுமே.'டாஸ்மாக்' மதுவால் 5 லட்சம் பேர் செத்துக் கொண்டு இருக்கின்றனர். இதனால், எத்தனை அப்பாவி குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன தெரியுமா? லாட்டரி சீட்டை ஒழித்தனர். அப்போது, யாரும் கேள்வி கேட்கவில்லை. வியாபாரம் நின்றது. லாட்டரி சீட்டு வாங்கியவர்கள் பழக்கத்தை மாற்றிக் கொண்டனர்.அதே போல, 'டாஸ்மாக்' கடைகளை மூடினால், குடிகாரர்கள் காலப் போக்கில் குடியை நிறுத்தி விடுவர்.

'டாஸ்மாக்' வருமானத்தில் தானே அரசு நடப்பதாக கூறுகின்றனரே?
அரசு சாராயம் விற்பது, கேவலமான செயல். அரசு, வருமானத்துக்காக மக்களை குடிக்க வலியுறுத்துமானால், அரசே கஞ்சா வியாபாரம் செய்யலாம். அதில் கூட வருமானம் கிடைக்குமே.கிரானைட், மணல் விற்பனை போன்ற வளங்கள் அனைத்தையும் முறைப்படுத்தினாலே, அரசுக்கு ஏகப்பட்ட வருமானம் கிடைக்கும். தரமான கல்வி, சுகாதாரம், வேளாண் வளர்ச்சிக்கு அரசு உத்தரவாதம் தர வேண்டும்.சி.பி.எஸ்.இ., போன்ற தரமான பாடத் திட்டத்துடன் சமச்சீர் கல்வியையும் மாற்றி அமைக்க வேண்டும். நுழைவுத் தேர்வு தேவையில்லை. நுழைவுத் தேர்வு இல்லாத காரணத்தால் தான் பல லட்சம் செலவழிக்க முடியாத கிராமப்புற மாணவர்களும் மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்கின்றனர்.

பா.ஜ., அணியில் இணையும் உங்கள் விருப்பத்தை கட்சியினர் முழுமையாக ஏற்கவில்லையாமே?
இது அ.தி.மு.க., அல்ல. ஜனநாயக ரீதியில் செயல்படும் கட்சி. இங்கே, எல்லா விஷயங்களுக்கும், துவக்கத்தில், 100 சதவீத ஆதரவு இருக்கும் என்று, எதிர்பார்க்க முடியாது. போகப் போக எல்லாமே சரியாகி விடும்.

மாற்று அணி என்று தமிழக பா.ஜ., அணியை குறிப்பிடுகிறீர்கள். அப்படியென்றால், டில்லியில் காங்கிரஸ் - பா.ஜ.,வுக்கு மாற்றாக உருவான, ஆம் ஆத்மி கட்சி போல என்று, எடுத்துக் கொள்ளலாமா?
ஆம் ஆத்மி கட்சியை, 'ஊடகங்களின் குழந்தை' என்று தான் சொல்வேன். அது ஒரு கட்சியே அல்ல. ஊடகங்கள் என்றைக்கு அந்த கட்சியை கைவிடுகின்றனரோ, அன்றைக்கே அந்த கட்சி இல்லாமல் போய்விடும். அது தமிழகத்தில் மட்டுமல்ல, எங்குமே பெரிதாக சோபிக்காது.

விஜயகாந்துடனான உங்கள் சந்திப்பு எப்படி இருந்தது?
சுமுகமாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது.புதுச்சேரியில் உங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கிறார். அதேபோல, பா.ஜ., கூட்டணியில் இருப்பதாகச் சொல்லப்படும்,

புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறதே?
இதில் நிஜமாக என்ன நடந்தது என்பதை சொல்லிவிடுகிறேன். எங்களுக்கு அங்கே நிறைய செல்வாக்கு உள்ளது. அதனால், முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்து பிரசாரமும் செய்து விட்டோம். அதன் பிறகு, பு.ம.கா., சார்பிலும் போட்டியிட விரும்புகிறார்கள் என்றதும், அக்கட்சியின் தலைவர் ரங்கசாமியை பலமுறை சந்தித்துப் பேசி, எங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கொடுங்கள் என, கேட்டுக் கொண்டேன். ஆனால், அதற்கு அவர் இசைவு தெரிவிக்கவில்லை. தன் கட்சி சார்பில் வேட்பாளரை அறிவித்தார். பா.ஜ., கூட்டணியில் இருப்பதாக சொல்கிறார். சென்னைக்கு பா.ஜ.,வின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் வந்த போது, அவரை வந்து சந்தித்து விட்டு போனார். ஆனால், தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் பங்கீடு செய்து அதை அறிவித்த பா.ஜ., தலைவர், புதுச்சேரி குறித்து அறிவிக்கவில்லை. எங்களைப் பொறுத்த வரையில் அங்கும் நாங்கள்தான் பா.ஜ., கூட்டணியில் இருக்கிறோம். அதனால், எங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்க மாட்டோம். தேவையானால், ரங்கசாமி தன் வேட்பாளரை வாபஸ் வாங்கிக் கொண்டு, எங்களை ஆதரிக்கலாம். அதுதான், அவருக்கும் நல்லது.

பயோடேட்டா

பெயர் :அன்புமணி ராமதாஸ்
வயது :45
படிப்பு :எம்.பி.பி.எஸ்.,
கட்சி :மாநில இளைஞரணி தலைவர்,பா.ம.க.,
சொந்த ஊர் : கீழ்சீவிரி,திண்டிவனம்

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'அரசு சாராயம் விற்பது கேவலமான செயல்': அன்புமணி ராமதாஸ்

Post by ayyasamy ram on Mon Mar 24, 2014 8:30 am

மத்திய அமைச்சராக இருந்தபோது
நல்ல நிர்வாகி என பெயரெடுத்தவர்
அன்புமணி ராமதாஸ்
-
தமிழகத்தை, 47 ஆண்டுகளாக தி.மு.க.,வும்
அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்து,
சீரழித்து விட்டன என்று கூறுபவர் அதற்கு
நாங்களும் துணை போனோம் என்று கூற
தவறி விட்டாரே..!!?
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: 'அரசு சாராயம் விற்பது கேவலமான செயல்': அன்புமணி ராமதாஸ்

Post by DERAR BABU on Mon Mar 24, 2014 10:33 pm

ரோட்டோரமாக இருந்த மரங்களையெல்லாம் வெட்டியது , அதை விட கேவலமான செயல் .
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: 'அரசு சாராயம் விற்பது கேவலமான செயல்': அன்புமணி ராமதாஸ்

Post by ராஜா on Tue Mar 25, 2014 12:12 pm

@DERAR BABU wrote:ரோட்டோரமாக இருந்த மரங்களையெல்லாம் வெட்டியது , அதை விட கேவலமான செயல் .
அப்படியா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30775
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'அரசு சாராயம் விற்பது கேவலமான செயல்': அன்புமணி ராமதாஸ்

Post by விஸ்வாஜீ on Tue Mar 25, 2014 12:16 pm

@ayyasamy ram wrote:மத்திய அமைச்சராக இருந்தபோது
நல்ல நிர்வாகி என பெயரெடுத்தவர்
அன்புமணி ராமதாஸ்
-
தமிழகத்தை, 47 ஆண்டுகளாக தி.மு.க.,வும்
அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்து,
சீரழித்து விட்டன என்று கூறுபவர் அதற்கு
நாங்களும் துணை போனோம் என்று கூற
தவறி விட்டாரே..!!?
-

உண்மை சரியான கேள்வி
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1338
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: 'அரசு சாராயம் விற்பது கேவலமான செயல்': அன்புமணி ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum