ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 T.N.Balasubramanian

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 T.N.Balasubramanian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

“ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆரே எதிரிதான்!” ப.சிதம்பரம் பன்ச்

View previous topic View next topic Go down

“ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆரே எதிரிதான்!” ப.சிதம்பரம் பன்ச்

Post by தமிழ்நேசன்1981 on Fri Apr 04, 2014 1:06 pm


கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த ப.சிதம்பரம், சமீபமாக மிக முதிர்ந்த அரசியல் தியாகி போல பேசுகிறார்.

இந்தியா முழுக்க அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் மீது விமர்சனக் கணைகளைப் பாய்ச்சிக்கொண்டிருக்க, சிவகங்கைத் தொகுதியில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்காக கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பதில் பரபரப்பாக இருக்கிறார் ப.சி. டெல்லிக்குக் கிளம்பிச் செல்வதற்கு முன் ஒரு ஞாயிறு பகலில் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் இருந்து...

''கடந்த 10 ஆண்டு காலத்தில் மத்திய உள்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் செயல்பட்டுள்ளீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் சாதனை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?''

''ஏழு ஆண்டுகள் நிதி அமைச் சராக இருந்து ஆறு நிதிநிலை அறிக்கைகளைத் தந்திருக்கிறேன். அதில் முதல் ஐந்தாண்டுகளில் 8.5 சதவிகித வளர்ச்சியடைந்தது நாடு. காங்கிரஸ் கட்சியின் பரம விரோதிகள்கூட இந்த வளர்ச்சியை மறுக்க முடியாது. நான் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சமயம் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவின் வளர்ச்சியைப் பாதித்தது. அந்தச் சமயம் வளரும் நாடுகளின் பொருளாதார பலத்தை அளவிடும் அமைப்புகள் இந்தியாவின் தரப்புள்ளியைக் குறைக்க இருப் பதாக அறிவித்தன. அதுமட்டும் நடந்திருந்தால், இந்தியா மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும். ஆனால், அதிலிருந்து மீண்டு ரூபாயின் மதிப்பை உயர்த்தி இருக்கிறோம். எங்கள் ஆட்சியின் பின்பகுதி ஐந்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டால்கூட ஏழு சதவிகித வளர்ச்சியை எட்டியிருப்பதும் நிச்சயம் சாதனைதான். அதற்காக இரவு-பகல் பாராமல், உணவு, உறக்கம் பாராமல் நாங்கள் எடுத்த நடவடிக்கைகள்தான் அந்த இக்கட்டான காலத்தைக் கடக்க உதவியது!''

''அந்தச் சாதனைகளின் பெருமிதத்தை தேர்தலில் அறுவடை செய்யாமல், உங்கள் மகனை ஏன் களம் இறக்குகிறீர்கள்? 'தோல்வி பயத்தில் அஞ்சுகிறார் சிதம்பரம்’ என்ற எதிர்க் கட்சிகளின் பிரசாரம் உண்மையா?''

''இது கலியுகம். இந்த யுகத்தில் இப்படியான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஒரே தொகுதியில் எட்டுத் தேர்தல்களில் போட்டியிட்டு ஏழு முறை வென்றவன் நான். இதுவரை தேர்தல்களில் போட்டியிடாதவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. ஒருவேளை தோல்வி பயத்தால் நான் தேர்தல் களத்தில் இருந்து விலகுகிறேன் என்றால், என் மகனை ஏன் நான் களமிறக்க வேண்டும்?

கடந்த 10 ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு 17 முதல் 18 மணி நேரம் வரை செலவழித்து இந்த நாட்டின் மிகப் பெரிய இரண்டு பொறுப்புகளில் பணி புரிந்திருக்கிறேன். ஆகவே, எஞ்சிய என் வாழ்நாட்களை நான் விரும்பும் வகையில் செலவிடப்போகிறேன். வாழ்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட் போல இரண்டு இன்னிங்ஸ் கிடையாது. ஒரே இன்னிங்ஸ்தான். அந்த ஒரு இன்னிங்ஸின் கடைசி 10 ஓவர்களை எப்படி விளையாட வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட்டால், 'பதவி ஆசை’ என்கிறார்கள். தேர்தல் அரசியலில் இருந்து விலகினால், 'பயந்து பின்வாங்குகிறார்’ என்கிறார்கள். இதைத்தான் கலியுகம் என்கிறேன்!''

''சிவகங்கைத் தொகுதியில் உங்கள் மகன் கார்த்திக் சிதம்பரம் வெற்றி பெறுவாரா?''

''ஐந்து முனைப் போட்டி நடைபெறும் நிலையில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்பதுதான் நிலை. நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது!''

''தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ள இருக்கிறது?''

''தமிழகத்தின் பல கிராமங்களில் 'மோடி’ என்ற பெயரையே மக்கள் இன்னும் கேள்விப்படவே இல்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு, தமிழகத்தில் வேரும் கிடையாது; கிளையும் கிடையாது. தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற குறுகிய எல்லைக்குள், குறுகிய கொள்கைகளைக்கொண்ட கட்சிகளின் தோள்களில் ஏறி அவர்கள் வலம் வருகிறார்கள். அவர்களிடம் இருக்கும் ஒரே பலம்... பண பலம். 40 ஆண்டுகளாக தமிழகம் போற்றி வளர்த்த முற்போக்கு, மதச்சார்பின்மை, இடதுசாரி எண்ணம் கொண்ட கட்சிகள் வெல்லப் போகிறார்களா அல்லது மதவாதிகள் வெல்லப் போகிறார்களா என்பதற்கான விடைதான் இந்தத் தேர்தல்!''

'' 'நன்றி உணர்வு இல்லாமல், கடந்த காலத்தில் நம்மைக் கைதூக்கிவிட்டவர்கள் யார் என்று பாராமல் தி.மு.க. தோழர்கள் மீது காங்கிரஸார் நடவடிக்கை எடுத்ததால் இப்போது அனுபவிக்கிறார்கள். அதற்காக அவர்கள் மனம் வருந்தினால் மறுபடியும் போனால்போகிறது என்று காங்கிரஸ் கட்சியை ஆதரிப்போம்’ என்கிறாரே கருணாநிதி!?''

''இதில் மனம் வருந்த என்ன இருக்கிறது? ஸ்டாலின் அவர்கள் இல்லத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ஒரு வாகனத்தைத் தேடி சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைக்குச் சென்றார்கள். தகவல் கிடைத்த உடனேயே நான் அதைப் பகிரங்கமாகக் கண்டித்தேன். பின்னர் தி.மு.க-வுடனான கூட்டணி முறிந்து, அவர்கள் விலகிய பிறகு வந்த மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க-வும் தி.மு.க-வும் மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவு கேட்டு எங்களை அணுகினார்கள்.

எங்களின் ஐந்து எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க-வை ஆதரித்து கனிமொழியை மாநிலங்களவை எம்.பி. ஆக்கினோம். இத்தனைக்கும் மத்திய அரசை தி.மு.க. விமர்சிக்கத் தொடங்கிய பிறகும் அதைச் செய்தோம். ஆகவே, 'நன்றி மறந்த செயல்’ என்று எதையும் சொல்ல முடியாது. அவர் சில வழக்குகளை மனதில் வைத்துச் சொல்கிறார். அந்த வழக்குகளை காங்கிரஸ் கட்சி போடவில்லை. வழக்குத் தொடுப்பது அரசியல் கட்சியின் வேலை அல்ல. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வது காவல் துறை. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் வேலை. குற்றம் நிரூபிக்கப்படுவதும், நிரூபணம் ஆகாமல் போவதும் வழக்கறிஞரின் வாதத் திறமை. இறுதித் தீர்ப்பு எழுதவேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.''

''மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மாநில அரசுகளைத்தானே பாதிக்கின்றன?''

''இது ஓர் அரசியல் தந்திரம். 'எல்லா பிரச்னைகளுக்கும் மத்திய அரசு மீது பழி போடு’ என்று மாநில அரசுகள் கற்றுக்கொடுத்த தந்திரம். பதுக்கல்காரர்கள், கறுப்புப் பணக்காரர்கள் மீது மாநில அரசுகள் சரிவர நடவடிக்கை எடுத்தாலே விலைவாசி பெருமளவில் கட்டுப்படுத்தப்படுமே! அதில் மாநில அரசின் உரிமைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்களா? விஜயகாந்த்கூட, 'பா.ஜ.க. ஆட்சியில் 40 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை இப்போது 80 ரூபாய் ஆகிவிட்டது’ என்று அறியாமையில் பேசுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு, 32 டாலர் மட்டுமே இருந்தது. அது கடந்த ஐந்து ஆண்டுகளில் 105 டாலராக உயர்ந்து நிற்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் விலை உயராதா? இதுகூடத் தெரியாமல் அறியாமையில் பேசுபவர்களை என்ன செய்ய முடியும்? மன்னித்துவிட வேண்டியதுதான்!''

''அனைத்து கூட்டங்களிலும் உங்கள் மீது விமர்சனக் கணைகளை அடுக்குகிறாரே ஜெயலலிதா. அவருக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?''

''செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு எல்லோருமே எதிரிகள்தான். எம்.ஜி.ஆர். தொடங்கி கலைஞர், வைகோ, விஜயகாந்த், சோனியா காந்தி... என எல்லோரும் அவருக்குப் பகைவர்கள்தான். அண்மையில் அவருக்குப் பகைவரானவர் தா.பாண்டியன். எம்.ஜி.ஆர். தொடங்கி தா.பாண்டியன் வரை அனைவரையுமே பகைவராகக் கருதும் ஜெயலலிதா, என்னை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வார்? எனக்கு அவருடன் நேரடிப் பழக்கமும் கிடையாது; பகையும் கிடையாது!''

''2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் சமயம், விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததா?''

''விடுதலைப் புலிகள் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், புலிகளோடு தொடர்புடைய ஒரு சிலர் மூலமாக சில செய்திகளைப் பரிமாறிக்கொண்டார்கள். 'இலங்கை அரசுடனான இறுதிப் போரின் முடிவு, புலிகளுக்குச் சாதகமாக அமையாது. பலரும் உயிரிழப்பார்கள். ஆகவே, இலங்கை அரசும் புலிகளும் ஒரே நேரத்தில் போர்நிறுத்தம் அறிவிக்க வேண்டும். அதற்கு புலிகள் தயாராக இருந்தால் நாங்கள் இலங்கை அரசை வற்புறுத்துகிறோம்’ என்று தகவல் சொன்னோம். 'குறிப்பிட்ட ஒரு தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் போர்நிறுத்தம் அறிவிப்பீர்களா?’ என்று புலிகள் தரப்பில் கேட்டோம். அதற்கு அவர்களிடம் இருந்தோ, அவர்கள் ஆதரவாளர்களிடம் இருந்தோ எந்தப் பதிலும் வரவில்லை!''

''இப்போதும்கூட ஈழத் தமிழர் விவாகரத்தில் எழும் சர்வதேச அழுத்தங்களை மட்டுப்படுத்தி இலங்கையை இந்திய அரசுதான் பாதுகாக்கிறது என்கிறார்களே! அதற்கு ஏற்றாற்போல் இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லையே?''

''2012-13 ஆண்டு தீர்மானங்களை ஆதரித்தோம். இப்போது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் சில வாசகங்களை மாற்றி திருத்தங்கள் செய்த காரணத்தால் ஆதரிக்கவில்லை என வெளியுறவுத் துறை கூறுகிறது. ஆனால், ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என்ற முடிவு, மத்திய அமைச்சரவையின் முடிவு அல்ல; அது வெளியுறவுத் துறையின் முடிவு!''

''வறுமையை வரையறுக்கும் திட்டக் கமிஷனின் அளவீட்டில் நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் 33 ரூபாயும், கிராமப்புறத்தில் உள்ளவர்கள் 27 ரூபாயும் செலவு செய்யும் திராணி இருந்தால், அவர்கள் ஏழைகள் அல்லர் என்று வரையறுக்கப்பட்டது. அது, நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும் உத்திதானே?''

''திட்டக் கமிஷன், செயல்படுத்தும் திட்டங்களுக்குப் பல அளவுகோல்கள் வைத்துள்ளது. அப்படியான ஒரு மெட்ரிக் அளவுகோல் அது. பொருளாதார மேதையான டெண்டுல்கர் திட்டக் கமிஷனுக்கான சில பொருளாதார அளவுகோல்களை உருவாக்க, தனி நபரின் வருவாயை அளவிட்டார். அதன்படி 33 ரூபாய் செலவு என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அது எல்லாவற்றுக் குமான அளவுகோல் அல்ல. சமையல் எரிவாயு மானியங்களுக்கோ, முதியோர் பென்ஷன், கர்ப்பிணி பெண்களுக்கான நிதி உதவித் திட்டம் போன்றவற்றுக்கு அது பொருந்தாது. ஆக, தவறான அளவுகோல்கள் மூலம் ஏழைகளைக் குறைத்துக்காட்டுகிறோம் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு!''

''ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மூவரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறதே?''

''அந்தத் தீர்ப்பை எதிர்த்தோ, மறுத்தோ அரசு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இப்போது நடக்கும் விவாதம் வேறு. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறையா அல்லது ஆயுள் தண்ட னையின் காலத்தைக் குறைப்பதா? ஆயுள் கைதிகளை விடுவிக்கலாம் என்றால், அது மத்திய அரசின் அதிகார வரம்பில் உள்ளதா... மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ளதா..? இப்படியான விவாதங்கள், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும்போது நான் இதில் என்ன சொல்ல முடியும்?''

''தனிப்பட்ட முறையில் தூக்குத் தண்டனை பற்றி உங்கள் கருத்து என்ன?''

''கேப்பிட்டல் பனிஷ்மென்ட் என்று சொல்லக்கூடிய மரண தண்டனைக்கு நான் எதிரானவன். ஆனால், உள்துறை அமைச்சராக நான் இருந்தபோது, நாட்டில் அமலில் இருக்கும் சட்டம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்யவேண்டிய கடமை எனக்கு உள்ளது!''

நன்றி-ஆனந்தவிகடன்-09 Apr, 2014நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum