ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 krishnanramadurai

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு

View previous topic View next topic Go down

இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு

Post by சிவா on Tue Apr 08, 2014 6:05 pmவிழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளகச்சேரி என்ற கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மதுமிதா என்ற 3 வயதுச் சிறுமி, 18 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தின் இறுதியில் மீட்கப்பட்டும்கூட, கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்திருக்கிறாள்.

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறப்பதும், அதைத் தொடர்ந்து சில நாட்கள் மக்கள் மிகுந்த கோபத்துடன் அதைப் பற்றிப் பேசுவதுமாக இருப்பது ஒரு தொடர் நிகழ்வாகவே ஆகிவிட்டது. இந்த விபத்துகளைத் தடுப்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயம்போல் ஆகிவிட்டது. மேலோட்டமாகப் பார்த்தால்கூட, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மிக எளிதானது என்ற விஷயம் நமக்கு விளங்கிவிடும். ஆனாலும் என்ன பயன்?

ஆழ்துளைக் கிணற்றின் உரிமையாளருடைய தவறுக்கு அவருடையே மகளே பலியாகியிருக்கிறார் என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தன்னுடைய விவசாய நிலத்துக்காக 500 அடி ஆழத்தில் இந்த ஆழ்துளைக் குழாய்க் கிணற்றை அமைத்தவர், தண்ணீர் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கிணற்றை வெறுமனே பாலிதீன் சாக்குப் பையைப் போட்டு மூடி வைத்திருக்கிறார்.

தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா அந்த சாக்குப்பை மீது தவறுதலாக நடந்தபோதுதான் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள்.

இது போன்ற விபத்துகளைக் குறித்துக் கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிகளை உத்தரவாகவே பிறப்பித்திருக்கிறது: “ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன், அது தோண்டப்படும் இடம், கிணற்றின் ஆழம், தோண்டுபவர் பெயர், முகவரி ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்துக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் கிடைக்காவிட்டால் அதைத் திறந்துபோடாமல் உரிய மூடியைக் கொண்டு மூட வேண்டும், யாரும் அதை நெருங்க முடியாதபடிக்குத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும், பயன்படுத்தாத அல்லது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மண்ணைக் கொண்டு மூடிவிட வேண்டும்.”

எல்லா ஊர்களிலும் பயன்படுத்தப்படாத, பயன்படுத்த முடியாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது கட்டாயம் என்பதை மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பாக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனத்தார் வேலையைத் தொடங்கும்போதே வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தந்து குழாய் பதித்தாலும்கூட அந்த இடத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு.

இதில் கடமை தவறும் கிணற்று உரிமையாளர், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் ஒப்பந்ததாரர், வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு அவரவர் பொறுப்பு, தன்மைக்கேற்ப கடுமையான தண்டனைகளை வழங்குமாறு சட்டம் இயற்றப்படுவது அவசியம்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ஏதோ பாடம் கற்றதைப் போலவும், இனியாவது எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் மனச்சாந்தி அடைகிறோம். ஆனால், விபத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன. நமது அக்கறை யின்மையும் அலட்சியமும் ஆழ்துளைக் கிணறுகளைவிட மிக ஆபத்தானவை என்பதுதான் இந்த விபத்துகள் நமக்குச் சொல்லும் செய்தி.

தி இந்து
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு

Post by சதாசிவம் on Wed Apr 09, 2014 10:48 am

மிகவும் வருத்தமான செய்தி. தொலைக்காட்சியில் இது போன்ற செய்திகளைப் பார்க்கும் பொழுது வருத்தமும் கோவமும் மட்டுமே மிஞ்சுகிறது...

அடிப்படை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் இங்கு வெகு வெகு குறைவு. மனித உயிர்களின் மதிப்பு இங்கு பெரிதாக கருத்தப்படுவதில்லை. இன்றைக்கும் பல பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் வெளிநாடுகளை போல் மேம்படவில்லை. பள்ளி ஆசிரியர்கள் முதலுதவி தெரிந்தவர் இருக்கிறாரா என்று கேட்டால் ஒரு பதிலும் வருவதில்லை. பிசா, பர்கரை, KFC யை ஆதரிக்கும் நாம் வெளிநாடுகளின் உள்ள நல்ல வழக்கங்களையும் கடைபிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்துக்கும் சட்டம் இருந்தால் தான் சரிப்படும் என்று சொல்வது சரியாகாது. இருக்கும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே போதும். செய்யும் வேலையை முழுவதும் உணர்ந்து, சமூகப் பொறுப்புடன் செய்தாலே பாதி தவறுகள் குறைந்து விடும்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு

Post by ஹர்ஷித் on Wed Apr 09, 2014 11:45 am

தண்ணீர் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கிணற்றை வெறுமனே பாலிதீன் சாக்குப் பையைப் போட்டு மூடி வைத்திருக்கிறார். தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா அந்த சாக்குப்பை மீது தவறுதலாக நடந்தபோதுதான் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள். wrote:

இவர் செய்த பாவம் குழந்தைக்கு மரணத்தை தந்துள்ளது....எவ்வளவு சொன்னாலும் நான் செய்வதைத்தான் செய்வேன் எனும் காமன் மேன் அடுத்தவன் பற்றி கவலைப்படாத காமன் மேன்.
நான் மட்டும் நல்ல இருக்கணும் என்று யோசிக்கும் காமன் மேன்.
ஒவ்வொருவரும் சமுதாயப்போக்கோடு வாழ்ந்தால் தான் இந்நிலை மாறும்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ஏதோ பாடம் கற்றதைப் போலவும், இனியாவது எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் மனச்சாந்தி அடைகிறோம். ஆனால், விபத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன. நமது அக்கறை யின்மையும் அலட்சியமும் ஆழ்துளைக் கிணறுகளைவிட மிக ஆபத்தானவை என்பதுதான் இந்த விபத்துகள் நமக்குச் சொல்லும் செய்தி. wrote:
மறுபடியும் இது செய்தி ஆகாமலிருக்க வேண்டும்

avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு

Post by ஜாஹீதாபானு on Wed Apr 09, 2014 4:41 pm

ஜனங்க இன்னும் திருந்தலயேசோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30083
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum