புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
prajai
40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Rutu
40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c10 
10 Posts - 83%
Rutu
40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 தொகுதிகளின் நிலவரம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:53 pm

First topic message reminder :

40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 P19
தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!

 இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும் களமிறங்கியிருக்கிறார்கள்.
வேட்புமனு இறுதி செய்யும் சமயத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு சின்னம் கிடைத்தது. அதுவரை வேட்பாளர் பெயரை மட்டுமே சொல்லி வாக்குகளைக் கேட்டது, ரவிக்குமாருக்கு மைனஸ். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காதது இன்னொரு மைனஸ். திருவள்ளூர் தொகுதி தி.மு.க-வுக்குக் கிடைக்காத அதிருப்தியில், இன்னும் சில நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரசாரத்துக்கு ஸ்டாலின் வந்து சென்ற பின்னரே ஒத்துழைப்பு கிடைத்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அடுத்த மைனஸ், புரட்சி பாரதம் கட்சியினர். திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றிபெறக் கூடாது என்ற முனைப்புடன் அவர்கள்  அ.தி.மு.க-வுக்காக சுறுசுறுப்புடன் வேலைபார்த்து வருகிறார்கள். தொகுதியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. கூட்டணி, அது நிச்சயம் பலன் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.

சிட்டிங் எம்.பி-யான வேணுகோபால்தான் அ.தி.மு.க. வேட்பாளர். இந்தத் தொகுதியில் செய்த பணிகளை ஒவ்வொரு பிரசாரத்திலும் பட்டியலிடுகிறார். சிரித்த முகத்துடன் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து செல்வது வேணுகோபாலுக்கு ப்ளஸ்.

தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜ் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பதால், தே.மு.தி.க-வினர் முழுவீச்சில் இவருடைய வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். அதோடு கூட்டணிக் கட்சியினரும், மோடி அலையும் தங்களுக்கு ப்ளஸ் என்கிறார்கள். புதிய வாக்காளர்களும் இளைஞர்களும் நிச்சயம் முரசைக் கொட்டுவார்கள் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக யுவராஜுக்கு உள்ளது.

உள்ளூர் மைந்தன் என்ற முகவரியுடன் களமிறங்கிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார். ஆவடியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட இவர், தொகுதி மக்கள் மத்தியில் ஓரளவுக்குப் பிரபலமானவர். கணிசமான வாக்குகளை வாங்குவார். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், மோதிரம் டாலடிப்பதைவிட இரட்டை இலையே துளிர்க்கும் நிலை இந்தத் தொகுதியில் தெரிகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:05 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Dindugal
அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, முதன்முதலில் களம் இறங்கிய தொகுதி திண்டுக்கல். இங்கு தே.மு.தி.க. சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி-யான சித்தன், சி.பி.எம். சார்பில் மாவட்டச் செயலாளர் பாண்டி, ஆம் ஆத்மி சார்பில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளஞ்செழியன் ஆகியோர் களத்தில் இருந்தாலும், போட்டி என்னவோ தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையில்தான்! 

 எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் இரட்டை இலைக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், நிலக்கோட்டை நகரச் செயலாளர் உதயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட... அ.தி.மு.க-வினர் சோர்ந்து போனார்கள். இவர் தொகுதி முழுவதும் அறிமுகம் இல்லாதவர் என்பதோடு, உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலராக நின்று தோல்வியைத் தழுவியவர் என்பதும் தொண்டர்களின் சோர்வுக்கு முக்கியக் காரணம்.

அதே நேரம் அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த முன்னாள் துணை சபாநாயகரான காந்திராஜனை வேட்பாளராகக் களமிறக்கியது தி.மு.க. தங்கள் வேட்பாளர் தொகுதி முழுக்க நன்கு அறிமுகமானவர் என்பதால், தி.மு.க-வினர் உற்சாகத்தோடு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். குடிநீர் வடிகால் வாரியத் தலைவராக இருந்தபோது திட்ட வரைவு தயார் செய்து திண்டுக்கல் நகருக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் அரசு மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனைக்கூடம் உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுத்தது, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்ய முயன்றபோது அதைப் போராடித் தடுத்தது... என தனது முந்தைய கால சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டு வருகிறார் காந்திராஜன்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லி வாக்கு கேட்டு வருகிறார்கள். கொடைக்கானல் மலையில் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் அ.தி.மு.க. வேட்பாளரை ஊருக்குள் விடவே இல்லை. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நேரடியாக அந்தக் கிராமங்களுக்குப் போய் பேச்சுவார்த்தை நடத்தியும், இன்னமும் மக்கள் சமாதானம் ஆனதாகத் தெரியவில்லை. திண்டுக்கல், பழநி பகுதிகளில் கணிசமான வாக்குகளை கம்யூனிஸ்ட் பிரிப்பதும் அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக இருக்கிறது. தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் பெயரளவுக்குதான் பிரசாரம் நடக்கிறது. காங்கிரஸ் களத்தில் இருந்தாலும், காட்சியில் இல்லை.

காந்திராஜன் பக்கமே காற்றடிப்பதால், வெற்றிக் கனியைப் பறிக்கும் வாய்ப்பு தி.மு.க-வுக்கே அதிகம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:05 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Karur 
டெக்ஸ்டைல் நகரமான கரூர் தொகுதி... திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் வரை விரிந்துள்ளது. அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி. தம்பிதுரையும், தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமியும், தே.மு.தி.க. சார்பில் என்.எஸ்.கிருஷ்ணனும், காங்கிரஸில் ஜோதிமணியும் களமிறங்கியுள்ளனர். ஆனாலும் போட்டி என்னவோ அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான்!

தம்பிதுரையை எப்படியாவது கரை சேர்த்துவிட வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இங்கே வேட்பாளரது ஒரே பலம் இரட்டை இலை மட்டும்தான். ஓட்டு கேட்டுச் செல்லும் பல ஊர்களில் தம்பிதுரைக்கு எதிர்ப்பு பலமாகவே இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் தொகுதிப் பக்கமே எட்டிப் பார்க்காததும், தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யாததுமே அதற்குக் காரணம். குடிநீர் பிரச்னை, பவர் கட் என அத்தனையும் ஒன்று சேர்ந்திருப்பது ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பைக் கூட்டியிருக்கிறது.

தி.மு.க. வேட்பாளர் சின்னச்சாமி மூத்த அரசியல்வாதி. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்தவர். இவருக்கு அ.தி.மு.க-விலும் நண்பர்கள் அதிகம். பதவியில் இல்லாத சமயத்திலும், தொகுதிக்குள் நடக்கும் எல்லா நல்லது கெட்டது​களுக்கும் தவறாமல் தலைகாட்டி வந்திருக்கிறார். கட்சியைத் தாண்டி நிறையவே நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். மாவட்டப் பொறுப்பாளரான நன்னியூர் ராஜேந்திரனும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வான கே.சி.பழனிசாமியும் வரிந்துகட்டிக்கொண்டு சின்னச்சாமிக்காக வேலை செய்கிறார்கள். அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலரே, 'சின்னச்சாமிக்காக ஓட்டுப் போடுவோம்’ என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள். மணப்பாறை, விராலிமலை சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் அ.தி.மு.க-வுக்கான செல்வாக்கு கூடுதலாக இருக்கிறது.

தே.மு.தி.க. வேட்பாளரான என்.எஸ்.கிருஷ்ணன் முன்பு அ.தி.மு.க-வில் இருந்தவர். இங்கே கூட்டணி கட்சிகளின் பலமும் இல்லாததால் கிருஷ்ணனின் பயணம் ஸ்லோவாகத்தான் இருக்கிறது. மோடி அலையை மட்டுமே கிருஷ்ணன் நம்பியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தொகுதி முழுக்க நன்கு அறிமுகமானவர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். 'என்னிடம் தேர்தல் செலவுக்குப் பணம் இல்லை. நீங்க கொடுத்தால் வாங்கிக்குவேன்...’ என்று கேட்டபடியே வாக்கு சேகரிக்கிறார் ஜோதிமணி. கதர் சட்டை அணிந்த பழுத்த காங்கிரஸ் பெரியவர்கள் நான்கு பேர் புடைசூழ பிரசாரத்துக்கு வருகிறார் ஜோதிமணி. டெபாசிட் வாங்கினால் போதும் என்பதே ஜோதிமணியின் எதிர்பார்ப்பு.

எப்படிப் பார்த்தாலும் சிக்குபுக்கு ரயில் ஏறி டெல்லிக்குக் கிளம்பத் தயா​ராகி​விட்டார் சின்னச்சாமி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:06 pm

 40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Tiruchy
ஆறு முனை போட்டியில் விழிபிதுங்கி நிற்கிறது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி.

அ.தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.பி-யான குமார், தி.மு.க. சார்பில் முன்னாள் திருச்சி துணை மேயர் அன்பழகன், காங்கிரஸ் சார்பாக முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், தே.மு.தி.க. சார்பில் மாநில மாணவர் அணி செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார், சி.பி.எம். சார்பில் ஸ்ரீதர் ஆகியோர் களம் காண்கிறார்கள்.

பரவலாக வாக்குகளைக்கொண்ட கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளன அரசியல் கட்சிகள்.

சிட்டிங் எம்.பி-யான குமார், கடந்த மூன்று வருட அ.தி.மு.க. ஆட்சியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்குத் திட்டங்கள் கொண்டுவரவில்லை என்பது மைனஸ். ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் இந்தத் தொகுதிக்குள் வருகிறது என்பது கூடுதல் பலம். அதனால், அமைச்சர்களின் ஒத்துழைப்பும் பலமாக இவருக்கு இருக்கிறது.

தி.மு.க. வேட்பாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர விசுவாசி. நேருவுக்கு எதிரணியாகச் செயல்படும் திருச்சி சிவா, செல்வேந்திரன் உள்ளிட்டவர்களை அன்பழகன் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை எனும் பேச்சு இருக்கிறது. தொகுதியில் உள்ள முத்தரையர் வாக்குகளைப் பெற நேரு முயற்சி எடுத்தார். இந்த நிலையில் முத்தரையர் சங்கத் தலைவர் ஆர்.விஸ்வநாதன் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது இவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மாநாடு நடத்தி சூட்டைக் கிளப்பிய நகரம் என்பதால், அதனைக் கைப்பற்றத் துடிக்கிறார் நேரு.

தே.மு.தி.க. வேட்பாளர் விஜயகுமாருக்கும் திருச்சி மாநகரச் செயலாளர் விஜயராஜனுக்கும் ஏழாம் பொருத்தம். பி.ஜே.பி. ஆதரவு, மோடி வந்து பேசியது ஆகியவற்றை அதிகமாக நம்பி நிற்கிறார் விஜயகுமார்.

காங்கிரஸ் நிர்வாகிகள் தனித்தனி அணியாக நீடிப்பது சாருபாலாவுக்கு சறுக்கல். திருச்சி மேயராக இருந்தவர். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். தனக்கு வெற்றிவாய்ப்பு குறைவுதான் எனத் தெரிந்துகொண்ட சாருபாலா, செயல்பாடுகளில் சுணக்கம் காட்டிவருகிறாராம்.

சி.பி.எம். வேட்பாளர் ஸ்ரீதரும் ஆம் ஆத்மி வேட்பாளர் ரவியும் ஓரளவுக்கு வாக்குகளைப் பிரிப்பார்கள்.

கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சி வந்த ஜெயலலிதா, 'திருச்சி நாடாளுமன்றத் தொகுதியும் எனது தொகுதிதான்’ என்று பேசிவிட்டுப் போனார். அதனால் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆக, கடைசி கட்டத்தில் சிட்டிங் எம்.பி-யான குமார் எல்லோரையும் ஓவர்டேக் செய்வார் என்பது தெரிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:06 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Perambulur
அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்த பெரம்பலூர் தொகுதியை கடந்த மூன்று முறையாக வசப்படுத்தி வைத்திருக்கிறது தி.மு.க.
 
இந்த முறை இங்கு உதயசூரியன் சார்பில் சீமானூர் பிரபுவும் இரட்டை இலை சார்பில் மருதராஜாவும் தாமரை வேட்பாளராக இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்துவும் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ-வான ராஜசேகரனும் நிற்கின்றனர்.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தொகுதியில் பரவலாக உள்ள முத்தரையர் வாக்குகளைக் குறிவைக்கின்றன. ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர், உடையார் சமூக வாக்குகளைக் குறிவைத்துள்ளார். 

அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜா இருப்பில் இருந்தது எல்லாம் காலியாகி, பூர்வீக சொத்தையும் விற்று தேர்தல் செலவு பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பெரம்பலூரைத் தாண்டி இவர் பிரபலம் இல்லை என்றாலும் அவர் கணிசமான முத்தரையர் வாக்குகளைப் பெறுவார். பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் சிவபதி, திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான ரத்தினவேல் ஆகியோர் திடீர் திடீரென காணாமல் போய்விடுவதால் திணறுகிறார்  மருதராஜா.

தி.மு.க. சார்பில் சீமானூர் பிரபு போட்டியிடுகிறார். இவரை ஜெயிக்க வைக்க கே.என்.நேரு துடியாய் துடிக்கிறார். சிட்டிங் எம்.பி-யான நடிகர் நெப்போலியன் தொகுதிப் பக்கமே வராததால் அந்தக் கோபம் தி.மு.க. மீது இருக்கிறது. முத்தரையர் சமூக வாக்குகள் மூன்று வேட்பாளர்களுக்கும் பிரிந்தாலும் மற்ற சமுதாய ஓட்டுகள் கணிசமாகத் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் என கணக்கு போடுகிறார்கள். குரும்ப கவுண்டர்கள் சங்க ஆதரவு தி.மு.க-வுக்குக் கிடைத்துள்ளதால் கூடுதல் தெம்புடன் உள்ளது சூரியன் தரப்பு.

தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தாராளம் காட்டுகிறார் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர். தனது கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என பெரும்படை பெரம்பலூரில் முகாமிட்டு தேர்தல் வேலைகளைக் கவனித்து வருகிறது. தே.மு.தி.க. தவிர ம.தி.மு.க., பி.ஜே.பி., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி இல்லை. இது பாரிவேந்தருக்கு மைனஸ்.

காங்கிரஸ் சார்பில் நிற்கும் ராஜசேகர், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை வெளுத்து வாங்கினார். நாளடைவில் அவரது பிரசார வேகம் குறைந்துவிட்டது.

தி.மு.க-வுக்கும் ஐ.ஜே.கே., அ.தி.மு.க-வுக்​கும்​தான் கடுமையான போட்டி. அதில் வேந்தரை முந்துகிறார் பிரபு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:07 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Kadalur
 
ஜெயலலிதா முதன்முதலில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஊர் கடலூர். இந்தத் தொகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் அருண்மொழிதேவன் அ.தி.மு.க. வேட்பாளர். இவரோடு மல்லுக்கட்ட தி.மு.க-வில் நந்தகோபால கிருஷ்ணன், தே.மு.தி.க-வில் ஜெயசங்கர், காங்கிரஸ் சிட்டிங் எம்.பி. கே.எஸ்.அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சி பாலசுப்ரமணியன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன், கடலூர் அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளர் என்பதால் கட்சி வட்டாரத்தில் அறிமுகமானவர். இவருக்கு பக்கபலமாக அமைச்சர் எம்.சி.சம்பத்தும் களமிறங்கிச் சுழன்று வருகிறார். கட்சியைத் தாண்டி மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பது அருண்மொழிதேவனுக்குப் ப்ளஸ்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் பலத்தை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார் தி.மு.க. வேட்பாளர் நந்தகோபாலகிருஷ்ணன். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களையே தங்களது பிரசாரத்தில் பிரதானமாக வைக்கிறது தி.மு.க. மின்தடையும், குடிநீர் பிரச்னையும் தொகுதி முழுக்க விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அது தி.மு.க-வுக்கு சாதகமாக இருக்கும். தொகுதியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சி வேட்பாளர்களுமே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

பி.ஜே.பி. ஆதரவுடன் தே.மு.தி.க. வேட்பாளர் ஜெயசங்கர் தன்னுடைய கட்சி பலத்தையும், பண பலத்தையும் மட்டுமே நம்பி சுழல்கிறார். கூட்டணி கட்சியினருடன் அரவணைப்பு குறைவாக இருக்கிறது. வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர் இங்கே தங்கள் கூட்டணியில் போட்டியிடுவதால் பா.ம.க-வும் சுணக்கம் காட்டி வருகிறது. வன்னியர் அல்லாதவர்களின் ஓட்டுக்களும் தனக்குக் கிடைக்கும் என்பது ஜெயசங்கரின் நம்பிக்கை.

கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலசுப்ரமணியனும் தங்கள் பலத்தைத் தெரிந்துகொள்ள தோழர்களுடன் கிராமம் கிராமாகச் சுற்றுகிறார். கௌரவமான வாக்குகளை வாங்கியே தீர வேண்டும் என்பதே இவரது வேட்கையாக இருக்கிறது.

சிட்டிங் எம்.பி-யான காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.அழகிரி தொகுதிக்காகப் பெரிய அளவி​லான திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை என்ற கோபம் மக்களிடம் நிறையவே இருக்கிறது. அதனால் தொகுதிக்குள் அவர் சென்றாலும் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை.

களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள் ஐந்து பேராக இருந்தாலும் போட்டி என்னவோ தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும்தான். ஓட்டு வித்தியாசம் குறைவாக இருந்தாலும் கடலூர் அருண்மொழிதேவனுக்கு அடடே சொல்ல வைக்கும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:07 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Chidambaram
 
சிதம்பரம் ரகசியம் என்பார்கள்... சிதம்பரம் தொகுதியில் தேர்தலை மையப்படுத்தி அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்களும் ரகசியங்களாகவே உள்ளன.

காங்கிரஸில் இருந்த மணிரத்தினம், பா.ம.க-வில் இணைந்ததுமே வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, வேட்புமனு தாக்கலில் அவரது மனு தள்ளுபடியாகி அவரது மனைவி சுதா வேட்பாளரானது... இரண்டுக்கும் பின்னணியில் உள்ள விவகாரங்கள் சிதம்பர ரகசியம்தான்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தொல்.திருமாவளவனும், அ.தி.மு.க-வில் சந்திரகாசியும், காங்கிரஸில் வள்ளல்பெருமானும் களமிறங்கியுள்ளனர். சிதம்பரம் சுமார் 13 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி.

அ.தி.மு.க. வேட்பாளரான சந்திரகாசி, அதிர்ந்துகூட பேசாதவர். அவருக்காக அதிரடியாக அனல் கிளப்பி வருகிறார் தொகுதி பொறுப்பாளரான செங்கோட்டையன். இண்டு இடுக்கு எல்லாம் புகுந்து புறப்பட்டு, ''எங்கள் ஆட்சியில் கொப்பரைக் கிராமத்தில் பெரிய அளவு நீர்த்தேக்கத் திட்டம், டெக்ஸ்டைல் பார்க் திட்டம் கொண்டுவந்தது நாங்கள்தான்'' என்று சந்திரகாசிக்கு பலம் சேர்த்து வருகிறார் செங்கோட்டையன். அதே சமயத்தில் பல ஊர்களில் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

காங்கிரஸில் செல்வாக்காக இருந்து பா.ம.க-வுக்கு மாறிய மணிரத்தினத்தின் மனைவி சுதா மணிரத்தினம்தான் இங்கே பா.ம.க. வேட்பாளர். திடீரென முகாம் மாறியதால் தலித் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார் மணிரத்தினம். அது சுதாவுக்கான எதிர்ப்பாக மாறியிருக்கிறது. வன்னியர் சமுதாயமும் கூட்டணிக் கட்சிகளும் தனக்குக் கைகொடுக்கும் என்பது சுதாவின் நம்பிக்கை.
தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான திருமாவளவன், தொகுதிக்கு பெரிய அளவு திட்டங்கள் ஏதும் நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி தொகுதி முழுக்கவே இருக்கிறது. இருந்தாலும், தொகுதியில் வசிக்கும் பெரும்பான்மையான தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் ஆதரவும், கூட்டணி கட்சியான தி.மு.க. இந்தத் தொகுதியில் செல்வாக்கோடு இருப்பதும் திருமாவளவனுக்குப் பலம் சேர்க்கிறது. திருமாவை எப்படியாவது கரைசேர்த்துவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரனும் போராடி வருகிறார்கள்.

இறுதி கட்ட நிலவரப்படி பா.ம.க. வேட்பாளர் சுதா சற்று பின்தங்கி நிற்க... திருமா மீண்டும் சிதம்பரத்தை தன் கோட்டையாக மாற்றுவார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:07 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Mayiladurai
சிவன் மயிலுருவம் கொண்டு பார்வதியுடன் நடனமாடியதால் மயிலாடுதுறை என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள். அந்த மயிலாடிய துறையில் அ.தி.மு.க. சார்பில் பாரதிமோகன், தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியும் களமிறங்கியுள்ளனர். பா.ம.க. வேட்பாளராக அகோரமும், காங்கிரஸ் சார்பில் மணிசங்கர் அய்யரும் மோதுகின்றனர்.
 
கடந்த முறை வெற்றிபெற்ற அ.தி.மு.க-வின் ஓ.எஸ்.மணியன் தொகுதி மக்களிடம் அதிகம் தலைகாட்டாமல் இருந்தது, அந்தக் கட்சியின் வேட்பாளரான பாரதிமோகனுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மணியனை பிரசாரத்துக்கு அழைக்காமல், மாநில அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லி வாக்கு சேகரிக்கிறார் பாரதிமோகன். கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல் இவருக்குப் பலவீனம்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரான ஹைதர் அலி வெளியூர்க்காரர் என்பதால், தி.மு.க. நிர்வாகிகளை அரவணைத்தே பிரசாரம் செய்கிறார். தொகுதியில் இருக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இவருக்குக் கிடைக்கும். மின்வெட்டு இருட்டைக் கிழிக்கும் மெழுகுவத்தி எனச் சொல்லி, தன் சின்னத்தைப் பிரபலப்படுத்துகிறார் ஹைதர் அலி.

பி.ஜே.பி. கூட்டணி பலத்துடன் களம் காணும் பா.ம.க-வின் அகோரம், தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் வாக்கு வங்கியை குறிவைக்கிறார். பாரதிமோகன் வன்னியர் என்பதால், வாக்குகள் பிரியலாம். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வில் பெரும்பான்மையாக இருக்கும் தலித் மக்களின் வாக்குகள் இவருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே! 

காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வியடைந்த மணிசங்கர் அய்யருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே.வாசன் இங்கு போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், மணிசங்கர் அய்யர் விரும்புகிறார் என்றதும் விட்டுக்கொடுத்தார் வாசன். பல மாதங்களாக இந்தத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருந்தார் இவர். அதற்காக தொகுதிக்குள் தங்கி மக்களையும் அடிக்கடி சந்தித்து வந்தார். அந்த அறிமுகமும் மக்கள் நெருக்கமும் அவருக்கு கௌரவமான வாக்குகளை வாங்கித் தரும்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் மனிதநேய மக்கள் கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அ.தி.மு.க-வின் பாரதிமோகன் பலே மோகனாகிவிடுவார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:08 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Nagapattanam
 
விவசாயிகளும் மீனவர்களும் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதி நாகப்பட்டினம்.

தொடர்ந்து மூன்று முறை வென்று ஹாட்ரிக் அடித்த தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ்.விஜயன், நான்காவது முறையாகக் களத்தில் இருக்கிறார். தான் பொறுப்பில் இருந்த காலங்களில் கொண்டுவந்த திட்டங்களையும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த திட்டங்கள் பற்றியும் கடிதமாகத் தொகுதி முழுவதும் அனுப்பியிருக்கிறார். அதில் மத்தியப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி, இரண்டு கல்லூரிகள், கிழக்குக் கடற்கரை சாலைகளும் அடக்கம். இருந்தாலும், நாகை துறைமுகத்தை மேம்படுத்தவில்லை என்ற குறை தொகுதி மக்களுக்கு இருக்கிறது.

அ.தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் கோபால், நன்னிலம் தொகுதி எக்ஸ் எம்.எல்.ஏ. ஆனாலும், தேர்தல் நேர அரசியல்வாதியாக இருப்பதால், நாளைய பிரசாரம் எங்கு எனக் கேட்டால்கூட தொகுதிப் பொறுப்பாளரான அமைச்சர் காமராஜின் செல் நம்பரைக் கொடுத்துவிடுகிறார். அ.தி.மு.க. அரசு கொடுத்த இலவசங்களைச் சொல்லி ஓட்டு வேட்டையாடுகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருத்துறைப்பூண்டி எக்ஸ். எம்.எல்.ஏ. பழனிச்சாமி போட்டியிடுகிறார். இவர்களது பிரசாரமே வித்தியாசப்படுகிறது. யாரையும் குறைகூறாமல், கடந்த காலங்களில் இந்தத் தொகுதிக்காகப் போராட்டம் நடத்திய தழும்புகளை மக்களிடத்தில் எடுத்துரைக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தும் வாக்குகளாக மாறுவது சந்தேகமே.

பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் தேனி மாவட்டத்துக்காரர். 'மக்கள்கிட்ட இருக்கிற எழுச்சியைப் பார்த்தா நான் ஜெயிச்சுருவேன் போலருக்கு’ என வெள்ளந்தியாக பேசுகிறார். பா.ம.க. கேட்காமல் தரப்பட்ட தொகுதி என்பதால் கட்சிக்காரர்கள் உற்சாகமும் கூட்டணி பலமும் குறைவாக இருக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளரான செந்தில் பாண்டியனுக்கு, தேர்தல் புதிது. சொந்தக் கட்சியினரே இவருக்கு அனுசரணையாக இல்லை. ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த இவருக்குப் பிரசாரம் செய்ய வந்த தங்கபாலுவை தடுத்து நிறுத்தும் அளவுக்குப் கோஷ்டிப்பூசல் இங்கு தலைவிரித்து ஆடுகிறது.

எப்போதுமே நாகை தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பது வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிதான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கொடுக்காத காரணத்தால், தனித்து போட்டியிட்டு கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வான வேதரத்தினம், இப்போது மீண்டும் கட்சியில் இணைந்து வேலை செய்வதும், அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடுவதும், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், ம.ம.க. கூட்டணியும்... மீண்டும் விஜயனை வில்லேந்த வைக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:08 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Sivagangai
 
தமிழகமே திரும்பிப் பார்க்கும் தொகுதிகளில் சிவகங்கையும் ஒன்று. காங்கிரஸிடம் இருந்து தொகுதி கைமாறப் போவது உறுதியாகிவிட்டது.

ஏழு முறை வெற்றிபெற்ற ப.சிதம்பரம், இந்த முறை தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை களம் இறக்கி இருக்கிறார். தி.மு.க. சார்பாக சுப.துரைராஜும் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதனும் பி.ஜே.பி. வேட்பாளராக ஹெச்.ராஜாவும் கோதாவில் இறங்கியிருக்கிறார்கள்.

கடந்த முறை தி.மு.க. ஆதரவுடன் நின்ற ப.சிதம்பரம் சில ஆயிரங்கள் வித்தியாசத்தில்தான் வென்றார். ப.சிதம்பரத்துக்கு எதிராகத் தொகுதியில் அதிருப்தி இருந்தாலும் ஆறு மாதங்களுக்கு முன்பே கார்த்தி பிரசாரத்தைத் தொடங்கிவிட்டதால், களத்தில் அவர் முந்தி நிற்கிறார். இதுவரை கூட்டணிக் கட்சிகளின் பக்கபலத்தில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், இந்த முறை தனித்து விடப்பட்டதால், சில இடங்களில் பூத் கமிட்டி நியமிக்கவே ஆள் இல்லாத நிலைமையும் உள்ளது. சிறுபான்மை வாக்குகளும் தலித் மக்களின் அமோக ஆதரவும் காங்கிரஸ் முகாமை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தி.மு.க-வின் சுப.துரைராஜ் செலவு செய்வதில் கறார் காட்டுவது அந்தக் கட்சிக்கு பலவீனம். அவரது நடவடிக்கை பிடிக்காமல் கட்சியினர் பலரும் ஒதுங்கிவிட்டனர். முக்குலத்தோர் அல்லாத வாக்குகளை ஒருங்கிணைக்கும் இவரது முயற்சிக்கு முழுமையாகப் பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே.

பி.ஜே.பி. வேட்பாளரான ஹெச்.ராஜா இந்த முறை கூட்டணி பலத்துடன் கடும் சவாலாக இருப்பார் என்பது பொய்த்துவிட்டது. பி.ஜே.பி. தலைவரான ராஜ்நாத் சிங் வருகைக்குப் பின்னர், கட்சித் தொண்டர்களிடம் உற்சாகம் கிளம்பியிருந்தாலும் ரொம்ப லேட்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கிருஷ்ணனும் ஆம் ஆத்மியின் தமிழ் அரிமாவும் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள்.

அ.தி.மு.க சார்பில் களம் இறங்கும் செந்தில்நாதன், இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கப் போராடுகிறார். பிரசார சமயத்தில் இவர் மீது எழுந்த நில மோசடி புகார் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் உதயகுமார் கட்சியினரை ஒன்று சேர்க்க முயற்சி மேற்கொண்டபோதிலும் உள்குத்து வேலையில் சிலர் இறங்கி இருப்பதால், சுலபமாக கிடைக்க வேண்டிய வெற்றிக்குக் கடுமையாகப் பாடுபட வேண்டிய கட்டாயம்.

அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் மூன்​றுக்கும் போட்டி. சில ஆயிரம் வாக்கு வித்தி​யாசத்தில் அ.தி.மு.க. வெல்லும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:09 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 3 Madurai
தமிழக அரசியலின் மையமே மதுரை என்று சொல்லலாம். அனைத்துவிதமான அரசியல் அதிர்வுகளும் இங்கிருந்துதான் கிளம்பும். இந்த முறை பெரிய புள்ளிகள் களத்தில் இல்லாததால் சற்றே சுறுசுறுப்புக் குறைவுதான்.
 
அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், மதுரையில் அறிமுகம் ஆனவர்.  துணை மேயராக இருந்து அமைச்சர் செல்லூர் ராஜுவின் அபிமானத்தைப் பெற்று, சீட் வாங்கியவர். அ.தி.மு.க-வில் யாதவ சமுதாயம் சார்பாகப் போட்டியிடும் ஒரே வேட்பாளர் என்பதால், அந்த சமூகத்தின் வாக்குகள் மொத்தமாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொகுதிக்குள் நிலவும் குடிநீர் பிரச்னையும் மின்வெட்டும் இவருக்கு வில்லனாக நிற்கிறது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாங்கி வைத்திருக்கும் கெட்ட பெயர், அவரை நிம்மதி இல்லாமல் செய்யலாம்.

தி.மு.க. வேட்பாளர் வக்கீல் வேலுசாமி, கட்சியில் மிச்சமிருக்கும் சீனியர்களில் ஒருவர். எம்.எல்.ஏ-வாக இருந்தவர். ''பலமுனை போட்டி நடப்பதால், தி.மு.க-வுக்கு என்று  உள்ள ஓட்டுகள் மொத்தமாகக் கிடைக்கும். ஈசியா ஜெயிச்சிடலாம்'' என்று கட்சியினரிடம் உற்சாகமாகச் சொல்லி வருகிறார். தி.மு.க-வினரும் ரொம்ப உற்சாகமாக வேலைசெய்து வருகிறார்கள். 'அழகிரியும் அவர் ஆட்களும் ஓரங்கட்டப்பட்டது தி.மு.க-வுக்கு இருந்த அடாவடி இமேஜைப் போக்கியிருக்கிறது. அவரால் எந்தப் பாதிப்பும் இல்லை’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.

தங்கள் கட்சிக்கு மதுரையை ஒதுக்க வேண்டாம் என்று தலைவர்களுக்கு பெட்டிஷன் போடும் அளவுக்கு பி.ஜே.பி-க்குள் கோஷ்டிப்பூசல். அதனாலேயே தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. சிவமுத்துக்குமார் போட்டியிடுகிறார். வேட்பாளர் மாற்றப்படலாம் என்ற புரளி இருந்ததால், பெரிதாக வேலை நடக்கவில்லை. சௌராஷ்டிரா, பிரமலைக் கள்ளர் வாக்குகளை மலையாக நம்புகின்றனர். சௌராஷ்டிரா மக்களில் பெரும்பாலானவர்கள் பி.ஜே.பி-யை ஆதரிப்பார்கள். அவர்களது வாக்குகள் முழுமையாக தனக்கு விழும் என்று இவர் நம்புகிறார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பரத் நாச்சியப்பனுக்கு, சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராம்பாபு கடுமையாக வேலை செய்கிறார். நாச்சியப்பன் கள்ளர் சமுதாயத்தவர் என்பதால், அந்த மக்களின் வாக்குகளையும் பெரிதாக நம்புகிறார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு என்று வாக்கு வங்கி உள்ளது. தொழிலாளர்கள் மட்டுமல்ல, வர்த்தகர்கள் வட்டாரத்திலும் தோழர் விக்கிரமனைத் தெரியாதவர்கள் யாருமில்லை. கணிசமாக இவர் வாக்குகளைப் பிரிப்பார். யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பதே கணிக்க முடியாததாக உள்ளது.

இங்கு கோபாலகிருஷ்ணனுக்கும் வேலுச்சாமிக்கும்தான் போட்டி. இலை பலத்தை நம்பி கோபாலகிருஷ்ணனே முன்னேறுவார்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக