புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Shivanya
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
12 Posts - 2%
prajai
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Jenila
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_m10தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து)


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 09, 2014 3:23 pm

First topic message reminder :

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.
""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.


அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''.

மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார்.

உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
அதை விட்டுவிடுங்கள்'' என்றான்.


உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு'' என்றார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 2:05 pm

நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து ! 
------------------------------------------------------------
ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான்.
ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான்.  ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு!
அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம் " இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்.
இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டான் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது.

புலி போனதுக்கபரம் கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து கிட்ட வந்தது ... மிச்சம் இருந்ததை சாப்பிட்டது .. திருப்பதியா போய்ட்டது! இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்.
இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்.  " ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ .. தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெயில் லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...? இப்படி யோசிச்சான்.
அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .
கோடலியை தூக்கி எறிஞ்சான். பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான். அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான். " கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படினு நம்பினான், கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டான்.  ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே! இவன் பசியால வாடி போனான். உடம்பு இளைச்சு போச்சு. எலும்பும் தோலுமா ஆயிட்டான்.
ஒரு நாள் ராத்திரி நேரம். கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் " ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னான்

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து ! அப்படின்னாராம்.
- தென்கச்சி .கோ. சுவாமிநாதன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 16, 2014 11:49 am

ஆருடம்
======
கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.

கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 16, 2014 11:53 am

விதியை மாற்றி அமை!!!
------------------------------------
ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார். அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார். நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 16, 2014 12:06 pm

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!
===============================


ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

'' அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

'' பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்;அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்;காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள்,தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை,அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி,குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 16, 2014 12:10 pm

நிகழ்காலம்
=========
அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது.
மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான்.
தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்... குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.
பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான். பிரமித்துவிட்டான். காரணம் - அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல்.
யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.
ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 16, 2014 12:21 pm

நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும்
========================================

ஒரு ஊரில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் ஒருநாள் வெளியூருக்குச் சென்றார்கள். போகும் வழியில் இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டது. இருந்தாலும் இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள். நேரம் நகர்ந்துகொண்டே போனதில், இரவும் வளர்ந்து கும்மிருட்டு ஆனது. சரி. ஏதாவது ஒரு மரத்தில் ஏறி இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தபோதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. எதன்மீதோ தடுக்கி எப்படியோ உருண்டு அழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள் அவர்கள். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் நீரில் மூழ்கவில்லை என்றாலும் மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும், இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே துணையாக இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள். விடிந்தது. வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது. காரணம், கிணறு அவர்கள் நினைத்ததைவிட மிக மிக ஆழமாக இருந்தது. அதைவிட மோசமாக, அதில் இருந்து ஏறி வர எந்தப்பிடிப்போ படிகளோ எதுவுமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், எப்போதோ இயற்கைச் சீற்றத்தின்போது ஏற்பட்ட வெகு ஆழமான பள்ளம்போல் இருந்தது அது. சேறும் சகதியும் நிறைந்திருந்த அதில் இருந்து வெளியேறுவது எதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான் முடியும்.

நிலவரம் என்ன என்பது தெரிந்ததுமே இளைஞர்களில் ஒருவன் கலவரம் அடைந்து சேர்ந்து போனான் மற்றவனோ சற்று நேரம் அமைதியாக தியானத்தில் அமர்ந்தான். பிறகு யோசிக்க ஆரம்பித்தான். அப்போது, கிணற்றின் ஒரு மூலையில் காட்டு மரம் ஒன்றின் கனமான வேர் பரவி இருப்பது அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று கிணற்றுக்குள் மூழ்கியவன் அதன் அடியில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்தான். அந்தக் கல்லால் வேரைத் தட்டித்தட்டி சிறு கழி போல் இரு துண்டுகளை வெட்டி எடுத்தான். இந்த வேர்க்குச்சிகளை பிடிமானமாகப் பயன்படுத்தி மேலே ஏறுவோம்... வா.. ! என்று மற்றவனை அழைத்தான். ஆனால் அவன் பயந்து நடுங்கி வர மறுத்தான். அவனைச் சுமந்து கொண்டு வெளியேறுவது முடியாத விஷயம்.

அதே சமயம் நண்பனை கிணற்றுக்குள்ளேயே விட்டுவிட்டுப் போகவும் முடியாது. என்ன செய்து ? மறுபடியும் யோசித்தான் இளைஞன். ஒரு சில நிமிடங்களுக்குப் பின் தன் நண்பனிடம் நண்பா எனக்கு ஒரு மந்திர வார்த்தை தெரியும். அதைச் சொன்னால் எந்தவித பயமும் நமக்கு வராது. அதைத்தான் நான் இவ்வளவு நேரம் சொல்லி தியானம் செய்தேன். நீயும் சொல். உனக்கும் அச்சம் இருக்காது. சுலபமாக நாம் வெளியேறிவிடலாம் என்றான். அதைக் கேட்டதுமே இரண்டாவது இளைஞன் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது. அவசர அவசரமாக கேட்டான், என்ன மந்திரம் அது, சொல்...! இளைஞன் சொன்னான் நமஇவெயா

நமசிவாய தெரியும்.. இது என்ன நமஇவெயா... ? உனக்கு கிணற்றை விட்டு வெளியேற ஆசை இருக்கிறதா இல்லையா ? இருக்கிறது.. ! அப்படியானால் கேள்வி எதுவும் கேட்காமல் மந்திரத்தைச் சொல் ...! இரண்டாவது இளைஞன் மந்திரத்தைச் சொன்னான். அவன் மனதிலும் நம்பிக்கை எட்டிப் பார்த்தது. அப்புறும் என்ன, இருவரும் சிரமப்பட்டு வெளியில் வந்தார்கள். கொஞ்சநேர ஓய்வுக்குப் பின் அவர்கள் பயணம் தொடர்ந்தது. வழியில் இரண்டாவது இளைஞன். நண்பனிடம் கேட்டான். எனக்குத் தெரியாமல் நீ எப்போது மந்திர தந்திரங்களைக் கற்றாய் ? நீ சொன்ன மந்திர வார்த்தையைச் சொன்னபோது எனக்குள் ஒருவித ஆற்றல் பொங்கி எழுந்தது. அபூர்வமான இந்த மந்திரத்தைப்போல் இன்னும் ஏதாவது தெரியுமா உனக்கு ? அவற்றையும் சொல்லித்தருகிறாயா? முதல் இளைஞன் சிரித்தான்.. நண்பா என்னை மன்னித்துவிடு. எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது. நான் உனக்கு செல்லித் தந்தது. மந்திர வார்த்தையும் அல்ல.. ! அப்படியானால் என்னை ஏன் ஏமாற்றினாய் ? நான் ஏமாற்றவில்லை. உன் மனதில் இருந்த எதிர்மறை எண்ணத்தை வெளியே தள்ளி, நீ நம்பிக்கையுடன் செயல்பட உதவினேன். அவ்வளவுதான். நீ சொன்ன மந்திர வார்த்தை..! ? அது, நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும் என்ற வார்த்தையின் முதல் எழுத்துக்கள்தான். புரிந்ததா?




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat May 17, 2014 1:35 pm

குறையை நிறையாக்க...
------------------------------------------------------------------------------
ஒரு கிறித்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு மதகுரு பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்தார் தேவாலயத்தில் பணிபரியும் எல்லோருக்கும் எழுதப்படிக்க தெரிய வேண்டும் என்று எதிர் பார்த்தார். கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர்களை வேளையைவிட்டு நீக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். கொஞ்ச அவகாசமும் கொடுத்தார்.

அங்கு கூட்டிப் பெருக்கும் ஏழைத் தொழிலாளிக்கோ என்ன முயன்றும் எழுதப்படிக்க வரவில்லை. கையெழுத்து கூட போட் முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் மதகுரு மசியவில்லை. வேலையை விட்டு நீக்கிவிட்டார். மிகுந்த வருத்ததுடன் சோர்வாகத் தேவாலயத்தைவிட்டு வெளிய வந்த ஏழைக்கு வேதனை. சொல்லமுடியாத வேதனை. பலவருட பந்தம் பறிபோய்விட்டது. அழுதபடி திரும்பி திரும்பி தேவாலையத்தை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார். மனவேதனை மறைய ஒரு சிகரேட் பிடிக்கலாம் என்று நினைத்தால் பாக்கெட்டில் ஒரு சிகரெட் இல்லை. பக்கத்தில் பார்த்தால் சிகரெட் கடைகூட ஓன்றும் இல்லை. நெடுந்தூரம் நடந்துவிட்டார் ம்ஹ�ம்... சிகெரட் கடையே இல்லை.

பட்டென்று அவருக்கு பொறித் தட்டியது. " நாம் ஏன் இங்கு சிறிய பெட்டிக் கடை வைக்கக் கூடாது... இங்கே வருகிற பலபேருக்கு பயன்படுமே" என்று முடிவு செய்தார். வெளியே அனுப்பும் போது மதகுரு கொடுத்த சிறிய தொகையை முதலாக்கி சிகரெட்டுடன் மற்றும் பல பொருட்களுடன் கடை ஆரம்பித்தார். வியாபாரம் அமோகமாக நடந்தது... சிறிது காலத்தில் கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தை பெரியதாக்கினார். சில மாதங்களில் பெரிய பணக்கரார் ஆகிவிட்டார்.

இவரிடம் பணம் இருப்பது தெரிந்து ஒரு வங்கியின் மேலாளர் தங்கள் வங்கியில் சேமிக்கும்படியும் வட்டி கிடைக்கும் என்றும் சொல்லி சம்மதிக்க வைத்தார். முடிவில் சேமிக்க விண்ணப்பபடிவங்கள் நிறைவு செய்துவிட்டு பணக்காரரிடம், " கையொப்பம் போடுங்கள் " என்றார். பணக்காரருக்கு வந்ததே கோபம்... நிறைய சத்தம் போட்டுவிட்டு முடிவில், தனக்கு கையெழுத்து போடத் தெரியாது என்று முடித்தார்.

வங்கி மேலாளர் " அட... கையெழுத்து கூட போடத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய வியாபாரியாகி விட்டீர்கள்... உங்களுக்கு அதுவும் தெரிந்திருந்தால் அடடா நீங்கள் எங்கேயோ இருந்திருப்பீர்கள்? " என்று புகழ்ந்ததும் " வாயை மூடுங்கள்.. எனக்கு மட்டும் கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் கூட்டி பெருக்கும் தொழிலாளியாகத்தான் இன்னும் இருந்திருப்பேன் " என்று கர்ஜித்தார்.

இது வெறும் கதையல்ல. குறைகூட ஒருநாளில் நிறைவாகலாம். நம்மில் பலருக்கு பல குறைகள் இருக்கும் அதை நினைத்து வருத்தபடுவது உண்டு. வருத்தபடுவதால் எந்த மாற்றமும் நிகழப்போதில்லை. அந்த குறையை நமது பலமாக மாற்ற என்ன செய்யலாம் என்று எண்ணி அதை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்...




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat May 17, 2014 1:39 pm

வெற்றி நிச்சயம்

தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) - Page 4 AtYlyjTRIODKutNE0mvf+1150426_559838420743192_1584458792_n

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்...
செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.
இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.
""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.
நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.
அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.
கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.
நள்ளிரவு ஷூட்டிங்.
ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.
ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.
""இந்தக் கார்களை கவனித்தீர்களா..?
இவை எல்லாமே நம்முடைய கார்கள்.
வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.
இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.
நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!
எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.
அவமானம் ஒரு மூலதனம்...
இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!
("வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் "அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்..)




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon May 26, 2014 1:49 pm

ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான். மிகச் சிறிய பையன். விளையாடத் துணை இல்லாமல் ஏங்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு அழகிய கானகம். அங்கே ஒரு கனி தரும் மரம் இருந்தது. அவன் அங்கே சென்றான். மரத்தில் ஏறி விளையாடினான். பழங்களைப் பறித்து உண்டான். மரத்தின் கீழே இளைப்பாறினான். மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த அவனைப் பார்த்து அந்த மரமும் மனம் மகிழ்ந்தது. அவன் அடிக்கடி வருவதும் விளையாடுவதும் இருவருக்கும் உவகை தரும் ஒரு நிகழ்வாக இருந்தது. மரம் அவன் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்திருக்கும். தன் கனிகளை அவன் உண்பது அதற்கு சொல்லொணா மகிழ்வு தந்தது. அவன் மரத்தின் மேல் ஏறி விளையாடும் போது மரமும் வாகாக தன் கிளைகளைத் தாழ்த்திக் கொடுக்கும். இருவரும் நண்பர்கள் ஆனார்கள். ஒருநாள் பார்க்க வராவிட்டாலும் இருவருக்கும் ஒரு ஏக்கம் பிறக்க ஆரம்பித்து விட்டது. நாளடைவில் மரமும் அந்த சிறுவனும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதற்குப் பின்னர் சில மாதங்களாக அவன் வராதது கண்டு மரம் வருத்தமுற்றது. தன் கிளைகளை சுழற்றி சுழற்றி அவன் வருகையை எதிர் பார்த்து நின்றது. அதற்கு வருத்தமாகவும் இருந்தது. சில நாட்கள் கழித்து அந்த சிறுவன் வந்தான். முன்பை விட வளர்ந்திருந்தான். ''வா... வா. வா. உனக்காக எத்தனை நாட்கள் காத்திருந்தேன் தெரியுமா. வா. வந்து என் மேல் ஏறி விளையாடு.கனிகளை உண்டு மகிழு!'' என்றது மரம் ஆவலுடன்.

பையன் சொன்னான், '' எனக்கு அதில் விருப்பம் இல்லை மரமே. நான் பெரியவனா வளர்ந்துட்டேன். ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சுட்டேன். எனக்கு விளையாட பொம்மைகள் தான் வேண்டும். ஆனால் அவற்றை வாங்க என்னிடம் பணம் இல்லையே.' என்றான் வருத்தத்துடன்.

மரம் அவனது வருத்தத்தை கண்டு தானும் வருந்தியது. மரம் அவனிடம் சொன்னது: ''அதனால் என்ன, சிறுவனே, என் கனிகளை கொண்டு போய் சந்தையில் விற்று விடு. கிடைக்கும் பணத்தில் உனக்கு தேவையான பொம்மைகளை வாங்கி விளையாடு'', என்றது. பையனும் மரம் சொல்லியபடியே செய்தான். கிடைத்த பணத்தில் பொம்மைகள் வாங்கி விளையாடினான். மறுபடியும் நீண்ட நாட்களாக பையன் வராததைக் கண்ட மரம் சோகமாய் காத்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவன் வரும் வழி நோக்கிக் காத்திருந்தது.

மிக நீண்ட நாட்கள் கழித்து அவன் வந்தான். மரத்துக்கு ஏக குஷி. வா.. வா. என்ன ஆயிற்று? ஏன் முன்னைப் போல நீ வருவதில்லை. என்னுடன் விளையாடுவதில்லை? என்று ஆர்வத்துடன் கேட்டது மரம். பையன் சொன்னான்: ''மரமே நீ கொஞ்சம் கூட மாறவே இல்லையா? நான் இப்போ படிப்பு முடிச்சு பட்டதாரி ஆயிட்டேன். மரத்தில் ஏறி விளையாட நான் என்ன பச்சைக் குழந்தையா? எனக்கு என் குடும்பத்தை காப்பாத்த வேண்டிய பொறுப்பு இருக்கு. வீடு கட்ட கொஞ்சம் மரம் தேவை. என்ன செய்வது என்று புரியவில்லை'' என்றான் வருத்தத்துடன். அவனது வருத்தத்தைக் கண்ட மரம், ''நீ ஏன் வருத்தப் படுகிறாய்? என் கிளைகளில் கொஞ்சம் வெட்டிக்கோ. அவ்வளவுதானே? இதுக்கு போய் ஏன் இந்த வருத்தம்?'' என்று கேட்டது தன் கிளைகளை அசைத்தபடி. அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தின் எல்லாக் கிளைகளையும் வெட்டிக் கொண்டு சென்றான்.

வழக்கப்படி அவன் வராமல் போகவும், மரம் மிகவும் சோகமாக அவன் வரவை எதிர் நோக்கி காத்திருந்தது. பல வருடங்கள் உருண்டோடின. அவன் வந்தான். அவனைப் பார்த்த மரம், மகிழ்ச்சி அடைந்தது. '' வா. வா. இப்பத்தான் வழி தெரிந்ததா? எப்படி இருக்கே? ஏன் வருத்தமா இருக்கே? சொல்லு என்ன வேணும் உனக்கு? கேளு, என்னால முடிஞ்சதை செய்றேன். நீ வருந்துவதை பாக்க எனக்கு சகிக்கலை'' என்றது.

அதைக் கேட்ட அவனும், ''மரமே, எனக்கு படகு ஒண்ணு செஞ்சு ஓட்டணும் போல ஆசையா இருக்கு. அதுக்கு மரம் வேணுமே! நான் எங்கே போவேன் அவ்வளவு பணத்துக்கு!.'' என்றான் வருத்தத்துடன். மரம் உடனே, அவ்வளோ தானே. என்னை வெட்டிக்கோ, என்னை படகா செஞ்சிக்கோ. சந்தோஷமா இரு. உன் மகிழ்ச்சிதான். என் மகிழ்ச்சி'' என்றது.

அவன் மரத்தை அடியோடு வெட்டிக் கொண்டு மகிழ்ச்சியோடு சென்றான். தன் நண்பனுக்கு இந்த அளவிலாவது உதவ முடிந்ததே என்று மரத்துக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. மரத்தின் அடிக்கட்டை மட்டும் வேர்களுடன் மிச்சம் இருந்தது. பல மாதங்கள் கழித்து மீண்டும் அவன் வந்தான். மிகவும் சோர்வாக இருந்தான். தளர்ந்து போய் இருந்தான் அவன். மரம் அவனைப் பார்த்து கேட்டது, ''ஏன் என்ன இவ்வளவு சோர்வா இருக்கே? உனக்கு வேண்டிய அளவுக்கு பழம் தர கூட இயலாத நிலையில் நான் இருக்கிறேனே'' என்றது வருத்தத்துடன். அவன் சொன்னான்: ''ஏ மரமே. கவலைப் படாதே. பழம் தின்னும் நிலையில் நான் இல்லை. என் எல்லாப் பற்களும் விழுந்து விட்டன'' என்றான். ''நீ ஏறி விளையாட எனக்கு கிளைகளும் , மரமும் இல்லையே, நான் உனக்கு எப்படி உதவுவேன்?'', என்று வருந்தியது மரம். அவனோ, ''எனக்கு அதற்கெல்லாம் தெம்பு இல்லை மரமே. எனக்கு ஓய்வு தான் தேவை'' என்றான்.

மரம் சொன்னது: ஆஹா, அவ்வளவு தானே, வா என் கட்டை மேல் அமர்ந்து கொள், கொஞ்சம் வேர்கள் உள்ளன அல்லவா அவற்றை கூட நீ கால் வைக்க பயன் படுத்திக் கொள்ளலாம். ஏதோ இந்த மட்டிலாவது என்னால் உனக்கு உதவ முடிந்ததே'' என்று, மகிழ்வுடன் கூறியது அந்த மரத்தின் அடிப்பகுதி. அவன் அதன் மேல் அமர்ந்து கொண்டான். ஓய்வெடுத்தான். மரத்துக்கு ஏகப் பட்ட மகிழ்ச்சி. இந்த அளவிற்காவது அவனுக்கு உதவ முடிந்ததே என்று.

நான் கற்ற பாடம்: நம் ஒவ்வொருவருக்கும் பிரதி பலனை எதிர் பாராமல் தன்னையே வருத்திக் கொண்டு உதவும் மரங்கள் இருக்கின்றன. அம்மா, அப்பா, நண்பர்கள், ஆசிரியர்கள் என்று. நாம் அவர்களிடம் இருந்து எவ்வளவோ பெற்றுக் கொண்டிருக்கிறோம். பெற்றுக் கொண்டே இருக்கிறோம். திரும்ப எதை தந்திருக்கிறோம்? அவர்கள் வயதான காலத்தில் அவர்களுக்குக் குறைந்த பட்சம் நம் அன்பையாவது தந்திருக்கிறோமா? சமூகத்திற்கு நாம் நிறைய கடன்பட்டிருக்கிறோம். பெற்றதில் மகிழ்கின்ற நாம் தந்தவரை நன்றி பாராட்டுகிறோமா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலோரது பதிலாய் இருக்கும்.

''மரந்தான்.. மரந்தான்...
ஏனோ அதனை மனிதன்
மறந்தான்.. மறந்தான்.''




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 26, 2014 8:36 pm

மிக அருமை படித்த அனைத்து கதைகளும் நெகிழ்வான கதை! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக