ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

தமிழ்த்துறை வாழ்த்து
 VEERAKUMARMALAR

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!

View previous topic View next topic Go down

அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!

Post by சிவா on Thu May 15, 2014 4:17 amஎதிர்பார்த்தபடியே பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கிவிட்டது அதிமுக. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மத்தியில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கின்ற நிலையில், ஜெயலலிதாவின் சிறந்த நண்பர் மோடி என்றும், அவர் பிரதமரானால் நெருக்கமான உறவு மலர வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அந்தர்பல்டி அரசியல் ஆட்டத்தை தொடங்கி வைத்துவிட்டது அதிமுக.

வாக்குப்பதிவு பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகள், மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் ஆருடம் கூறுகின்றன. மற்றொருபுறம் எந்த ஒரு கட்சியிடம் இருந்தும், அது ஒரே ஒரு எம்.பி.யாக இருந்தாலும் கூட அவர்களின் ஆதரவை பெற தங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று பா.ஜனதா நேற்று அறிவித்தது.

இவ்வாறு பா.ஜனதா விடுத்த அழைப்பும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் மாநில கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியை நோக்கி நெருக்கி தள்ள தொடங்கி உள்ளன. அவ்வாறு நெருங்கி வரும் கட்சிகளில் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம், அதிமுக மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் இப்போதே மோடி அரசில் இடம்பிடிக்க துண்டு போட தொடங்கிவிட்டன.

பிகு பண்ணாத பிஜூ ஜனதா தளம்

பிஜு ஜனதா தளத்தை பொறுத்தவரை அக்கட்சி ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்ற கட்சிதான். இந்நிலையில் தற்போது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தால் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளிக்க தயார் என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரவாத் திரிபாதி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

" ஒட்டுமொத்த தேசத்தின் வெளிப்பாட்டையும், ஒடிசா மாநிலத்தின் நலனையும் கருத்தில்கொள்ளும்போது தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதில் பிரச்னை ஏதும் இல்லை" என்றும் அதில் கூறினார். தங்களது ஆதரவுக்கு பிரதிஉபகாரமாக ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரப்பட வேண்டும் என்றும், இது தங்களது நீண்ட நாள் கோரிக்கை என்றும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மூன்றாது அணி அமைக்கும் முயற்சி வெற்றிபெறாமல் போனாலும், அதில் முனைப்பு காட்டியவர்களில் முக்கியமானவர் ஒடிசா முதல்வர் பிஜூ பட்நாயக். இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியான பின்னர், பா.ஜனதா ஆட்சியமைக்க ஆதரவளிக்க தயார் என்று அவரது கட்சித் தலைவர்களில் ஒருவரான திரிபாதி கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலைப்பை ஏற்படுத்த, இடதுசாரி கட்சிகளோ திகைப்பில் ஆழ்ந்தன.

இதனைத் தொடர்ந்து இடதுசாரி தலைவர்கள் பிஜூ பட்நாயக்கை தொடர்புகொண்டு பேசியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்தே பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு ஏதும் எடுக்கவில்லை என பிஜூ பட்நாயக் இன்று செய்தியாளர்களிடம் மறுத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தங்கள் கட்சி பேச்சுவார்த்தை எதிலும் ஈடுபடவில்லை என்றும், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் பதிலளித்தார்.

அவர் இவ்வாறு கூறியபோதிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா தலைவர்களோ, பிஜு ஜனதா தளத்திடம் இருந்து எங்களுக்கு 'ஆதரவு சிக்னல்' வந்துவிட்டது என்று கூறி நமுட்டு சிரிப்பு சிரிக்கின்றனர்.

அந்தர் பல்டி அதிமுக

பிஜூ ஜனதா தளத்தின் நிலை இதுவென்றால், அதிமுக பகிரங்கமாகவே பா.ஜனதாவுக்கு நேசக்கரம் நீட்ட தொடங்கிவிட்டது. அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான மலைச்சாமி, இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், "ஜெயலலிதாவின் சிறந்த நண்பர்களில் ஒருவர் மோடி. அரசியல் ரீதியாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மோடி பிரதமரானால் அவருடன் நெருக்கமான உறவை ஜெயலலிதா பேணுவார்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவும், மூன்றாவது அணிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய நவீன் பட்நாயக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை மூடுமந்திரமாகவே வைத்திருந்தனர். அத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஜெயலலிதா மற்றும் நவீன் பட்நாயக் ஆகிய இருவருமே தவிர்த்தனர். அதற்கு அர்த்தம், தாங்கள் நினைத்தது நடக்காவிட்டால், அது காங்கிரஸோ அல்லது பா.ஜனதாவோ தேர்தலுக்கு பின்னர் ஆதரவளித்து மத்திய அரசில் இடம்பெற்றுவிட வேண்டியதுதான் என்பதுதான் என சொல்லத்தேவையில்லை.

தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி மற்றும் பா.ஜனதாவை ஜெயலலிதா கடைசி நேரத்தில் விமர்சித்தது கூட, நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஜெயலலிதா மோடியை ஆதரிப்பார் என்று திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் பிரசாரம் செய்ததால்தான் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை எண்ணி மோடியையும், பா.ஜனதாவையும் வேறு வழியில்லாமல் விமர்சித்து பேசியிருந்தார் ஜெயலலிதா. எனவேதான் " அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...!" என்ற ரீதியில் பா.ஜனதா மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே பரஸ்பரம் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

மேலும் ஜெயலலிதா தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது சொத்துக் குவிப்பு வழக்கு. அந்த வழக்கின் தீர்ப்பு வேறு எந்த நேரமும் வந்துவிடலாம் என்ற ரீதியில் அவரை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே எத்தகைய முடிவை எடுக்க வேண்டும் என்பதை யாரும் ஜெயலலிதாவுக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை.

இதனிடையே கொடநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய ஜெயலலிதாவிடம், மோடி ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டபோது, "தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சொல்கிறேன்" என்றுதான் பதிலளித்தாரே தவிர, ஆதரவளிக்க மாட்டோம் என்று கூறவில்லை.

சரத் பவார் ஆதரவும் சாத்தியம்

அதேப்போன்று சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பா.ஜனதா ஆட்சியமைத்தால் அதற்கு ஆதரவளிக்க தயங்காது என்று அக்கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவர்களது பேச்சுகள் உணர்த்துகின்றன.

அதற்கு உதாரணமாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான பிரஃபுல்படேலிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, " அரசியலில் எந்த சாத்தியத்தையும் நிராகரித்துவிட முடியாது. வலுவான, நிலையான அரசு மத்தியில் அமைய வேண்டும். இதன் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் செயல்படும்" என்று கூறியுள்ளதை பார்த்தால், காற்று எந்த பக்கம் வீசுகிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இதுதவிர தற்போது மகாராஷ்ட்ராவில் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் கட்சியுடன் பா.ஜனதா தலைவர்கள் நெருக்கம் காட்டுவதை கசப்புடன் பார்க்கும் சிவசேனாவுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே நிலவும் முட்டல் மோதல்கள், தேசியவாத காங்கிரஸ் உடன் பா.ஜனதா நெருங்க வைக்கும் என்றும் அம்மாநில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இப்படி தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அந்தர் பல்டிகள் அரங்கேற தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுக பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து மோடி அரசில் இடம்பெறும் பட்சத்தில், தமிழக பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, மதிமுக மற்றும் பாமக போன்ற கட்சிகளின் தலைவர்கள், "அன்பு சகோதரி...!" என்று கூறி எத்தகைய அந்தர் பல்டிகளை அடிக்க நேரிடுமோ...? மே 16 ல் தெரியும் விடை!


விகடன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!

Post by ராஜா on Thu May 15, 2014 12:22 pm

அரசியல் சாக்கடைகள் இது போல பல்டி அடிப்பது சகஜம் தானே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!

Post by M.M.SENTHIL on Thu May 15, 2014 1:12 pm

அம்மாவுக்கு தெரியாதா சார் எப்ப, எப்படி பேசி காயை நகர்த்தணும் என்பது.

இதே பா.ஜ. கூட்டணியில் அம்மா சேர்ந்து விட்டால், 

இந்த கூட்டணி மட்டும்தான் இனி அரசியலில் இருக்கும், அதற்கு தமிழ்நாட்டு மக்கள் அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக-வையும், பா.ஜ.வையும் வெற்றி பெற செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? என்று ஆரம்பித்து விடுவார்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!

Post by அருண் on Thu May 15, 2014 2:51 pm

பதவிக்காக என்ன வேணுன்னாலும் செய்யலாம் என்பது அரசியல்வாதிகளின் கோட்பாடு..!ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!

Post by rksivam on Thu May 15, 2014 7:26 pm

திரு சிவா,

உங்களின் மதிப்பீடு மிகவும் உண்மை. BJP 250 இடங்களை பெற்று அ தி மு க வின் ஆதரவை பெற்றால் ஜெயலலிதா அவர்களுக்கும் ஓரளவு தமிழகதிர்க்கும் நல்லது. நமக்கு என்ன என்றால் ரயில்வே மற்றும் சட்ட அமைச்சகத்தை ஜெயலலிதா கேட்ப்பார் என்கிற வதந்தி. முதலாவதற்கு மைத்ரேயனும் இரண்டாவதற்கு தம்பிதுரையையும் சிபாரிசு செய்யலாம். அதுவே நாளை வரை பொறுத்திருங்கள் என்று கூறுவதன் காரணம் என நினைக்கிறேன். ஒரு வேளை 280 இடங்களுக்கு மேல் BJP பெற்றுவிட்டால் கொஞ்சம் திண்டாட்டம் தான். இன்னும் 15 மணி நேரம் காத்திருப்போம்.

சரத் பவர் இப்போதைக்கு காங்கிரச்சை விட்டு வரமாட்டார். வரவேண்டியது நிறைய இருக்கிறது

அன்புடன் நண்பன்

சிவம்
avatar
rksivam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!

Post by ரா.ரா3275 on Thu May 15, 2014 10:29 pm

கண்டிப்பாக அ.தி.மு.க. /தி.மு.க இரண்டும் தேசிய அரசியலில் தத்தளிக்கப் போவது உறுதி.
இவங்க முட்டுக் குடுக்கும் அவசியம் மோடிக்கு ஏற்படாது.ஏற்படவே கூடாது என்பது விருப்பம்.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum