புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
68 Posts - 45%
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
5 Posts - 3%
prajai
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
4 Posts - 3%
Jenila
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
1 Post - 1%
M. Priya
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
1 Post - 1%
kargan86
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
9 Posts - 4%
prajai
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
6 Posts - 3%
Jenila
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!


   
   

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 9:45 pm

First topic message reminder :




பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 01, 2023 12:32 am


பிரதமர்: வணக்கம் விஜயசாந்தி, எப்படி இருக்கீங்க?

விஜயசாந்தி: சார், நான் நல்லா இருக்கேன்.

பிரதமர்: சரி உங்க வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?

விஜயசாந்தி: சார், இன்னும் 30 பெண்களோட இணைஞ்சு பணியாற்றிக்கிட்டு இருக்கேன்.

பிரதமர்: இத்தனை குறுகிய காலத்தில நீங்க 30 நபர்கள் கொண்ட குழுவா ஆயிட்டீங்களா?

விஜயசாந்தி: ஆமாம் சார், இந்த வருஷம் கூட, என் பகுதியில இருக்கற பெண்களோட 100ங்கற எண்ணிக்கையை எட்ட இருக்கேன்.

பிரதமர்: அப்ப 100 பெண்கள்ங்கறது உங்க இலக்கு!

விஜயசாந்தி: ஆமாம்! 100 பெண்கள்.

பிரதமர்: சரி, இப்ப மக்கள் இந்த தாமரைத்தண்டு நார் பத்தி பரிச்சயமாயிட்டாங்களா?

விஜயசாந்தி: ஆமாம் சார், இந்தியா முழுக்க ஒலிபரப்பாகுற மன் கீ பாத் நிகழ்ச்சியிலிருந்து எல்லாருக்கும் இது தெரிஞ்சு போச்சு.

பிரதமர்: அப்ப இது ரொம்ப பிரபலமாயிருச்சு!

விஜயசாந்தி: ஆமாம் சார், பிரதமரோட மன் கீ பாத் நிகழ்ச்சிக்குப் பிறகு எல்லாருக்கும் தாமரை நார் பத்தித் தெரிய வந்திருச்சு.

பிரதமர்: அப்ப உங்களுக்கு சந்தையும் அதிகமாயிருக்கா?

விஜயசாந்தி: ஆமாம், அமெரிக்காவிலிருந்து கேட்டிருக்காங்க, அவங்களுக்கு மொத்தமா வாங்கணுமாம், பெரிய அளவுல கேட்கறாங்க, அதனால இந்த வருஷத்திலேர்ந்து நான் அமெரிக்காவுக்கும் அனுப்பறதா இருக்கேன்.

பிரதமர்: அப்ப நீங்க இப்ப ஒரு ஏற்றுமதியாளராயிட்டீங்களா?

விஜயசாந்தி: ஆமாம் சார், இந்த ஆண்டு தொடங்கி, நான் நம்ம நாட்டுல தயாரிக்கப்பட்ட பொருளான தாமரை நாரை ஏற்றுமதி செய்ய இருக்கேன்.

பிரதமர்: உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்னு நான் சொன்னா, நீங்க உள்ளூர் பொருட்கள அயல்நாடுகளுக்குன்னு கொண்டு போயிட்டீங்க, இல்லையா!

விஜயசாந்தி: ஆமாம் சார், என் பொருட்கள் உலகெங்கும் கொண்டு சேர்க்கப்படணும்னு நான் விரும்பறேன் சார்.

பிரதமர்: உங்களுக்கு வாழ்த்துக்கள், அமோகமா செய்யுங்க.

விஜயசாந்தி: ரொம்ப நன்றி சார்.

பிரதமர்: நன்றி நன்றி விஜயசாந்தி.

விஜயசாந்தி: நன்றி சார்.

மனதின் குரலின் மேலும் ஒரு சிறப்பம்சம் உண்டு. மனதின் குரல் வாயிலாக எத்தனையோ மக்கள் இயக்கங்கள் பிறப்பெடுத்திருக்கின்றன, வேகம் அடைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நமது விளையாட்டு பொம்மைகள், இவற்றை மீண்டும் நிறுவும் பேரியக்கம் மனதின் குரலிலிருந்து தான் தொடங்கப்பட்டது. இந்திய ரக நாய்கள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் தொடக்கமும் கூட மனதின் குரலிலிருந்து தான் தொடங்கப்பட்டது. நாம் மேலும் ஒரு இயக்கத்தைத் தொடங்கினோம், நாம் சின்னச்சின்ன ஏழை விற்பனையாளர்களிடம் பேரம் பேச வேண்டாமே, சண்டை போட வேண்டாமே என்ற உணர்வைப் பெருக்கினோம். ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணம் என்ற இயக்கம் தொடங்கப்பட்ட போது, அப்போதும் மனதின் குரல், நாட்டுமக்களை இந்த உறுதிப்பாட்டோடு இணைக்கும் சிறப்பான பங்களிப்பை ஆற்றியது. இப்படி ஒவ்வொரு எடுத்துக்காட்டும், சமூகத்தில் மாற்றத்திற்கான காரணிகளாக மாறின. சமூகத்திற்குக் கருத்தூக்கமளிக்கும் சவாலை, பிரதீப் சாங்க்வானும் மேற்கொண்டிருக்கிறார். மனதின் குரலில் நாம் பிரதீப் சாங்க்வானின் ஹீலிங் ஹிமாலயாஸ் இயக்கம் பற்றி விவாதித்தோம். அவர் தொலைபேசி இணைப்பில் இப்போது நம்மோடு தொடர்பில் இருக்கிறார்.

பிரதமர்: பிரதீப், வணக்கம்!

பிரதீப்: சார், ஜெய் ஹிந்த்.

மோதி: ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் சகோதரா!! எப்படி இருக்கீங்க?

பிரதீப்: ரொம்ப நல்லா இருக்கேன் சார். உங்க குரலை கேட்கறது ரொம்ப நல்லா இருக்கு.

பிரதமர்: நீங்க இமயத்துக்கே சிகிச்சை அளிச்சுக்கிட்டு இருக்கீங்க.

பிரதீப்: ஆமாம் சார்.

மோதி: இயக்கமும் நடத்தியிருக்கீங்க. இப்பவெல்லாம் உங்க இயக்கம் எப்படி போயிட்டு இருக்கு?

பிரதீப்: சார், ரொம்ப நல்லாவே போயிட்டு இருக்கு. 2020ஆம் ஆண்டு தொடங்கி, எத்தனை வேலைகளை ஐந்தாண்டுகள்ல நாங்க செஞ்சிட்டு வந்தோமோ, அதெல்லாம் ஒரே வருஷத்தில நடந்து போகுது.

மோதி: பலே பலே!

பிரதீப்: ஆமாங்க, கண்டிப்பா. தொடக்கத்தில கொஞ்சம் படபடப்பாத் தான் இருந்திச்சு, பயமும் இருந்திச்சு, வாழ்க்கை முழுக்க இதைச் செய்ய முடியுமான்னு கூட தோணிச்சு; ஆனா கொஞ்சம் ஆதரவு கிடைச்சுது, உண்மையைச் சொல்லணும்னா, 2020 வரை நாங்க ரொம்ப போராடிக்கிட்டு இருந்தோம். ரொம்ப குறைவான மக்களே இதோட இணைஞ்சாங்க, ஆதரிக்க அதிகம் பேர் இல்லை. எங்களோட இயக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கலை. ஆனா 2020க்கும் பிறகு, மனதின் குரல்ல நீங்க குறிப்பிட்ட பிறகு, பெரிய அளவுல மாற்றம் ஏற்படத் தொடங்கிச்சு. என்னென்னா, முதல்ல எல்லாம், ஒரு 6-7 சுத்தப்படுத்தும் செயல்பாடுகளையோ, இல்லை ஒரு 10 முறை வரை சுத்தப்படுத்தும் செயல்பாடுகளையோ செய்ய முடிஞ்சுது. இன்னைய தேதியில, தினசரி 5 டன்கள் குப்பைக்கூளங்களை எங்களால திரட்ட முடியுது, அதுவும் பல்வேறு இடங்கள்லேர்ந்து.

மோதி: பரவாயில்லையே!

பிரதீப்: மனதின் குரல்ல நீங்க குறிப்பிட்ட பிறகு, நீங்க நம்பினா நம்புங்க, நான் கிட்டத்தட்ட கையறு நிலையில தள்ளப்பட்டிருந்த கட்டத்தில, ஒரு மாற்றம் ஏற்பட்டுச்சு பாருங்க! என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுச்சு, பெரிய வேகத்தில வேலை நடக்கத் தொடங்கிச்சு, நினைச்சுப் பார்க்காத விஷயங்கள்லாம் நடக்க ஆரம்பிச்சுது. உங்களுக்கு நான் ரொம்ப ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். எங்களை மாதிரியான ஆளுங்களை எல்லாம் நீங்க எப்படி கண்டுபிடிக்கறீங்கன்னே தெரியலை. நாங்க இத்தனை தொலைவான இடத்தில, இமய பகுதியில இருந்து பணி புரியறோம். இந்த உயரத்தில வேலை செஞ்சுட்டு இருக்கோம். இந்த இடத்தில எங்களை நீங்க தேடிக் கண்டுபிடிச்சிருக்கீங்களே! என்னன்னு சொல்ல! எங்களோட பணியை உலகத்தோட கண்களுக்கு முன்னால கொண்டு போய் நிறுத்தியிருக்கீங்களே! எனக்கு இது ரொம்பவே உணர்ச்சிகரமான தருணம், இது அப்பவும் சரி, இன்னைக்கும் சரி. அதாவது நம்ம நாட்டோட பிரதம சேவகரோட என்னால உரையாட முடியுதுங்கற விஷயம். இதை விட பேறு அளிக்கக்கூடிய விஷயம் எனக்கு வேறு ஒண்ணுமே கிடையாது.

மோதி: பிரதீப், நீங்க தான் மெய்யான உணர்வோட இமயமலைச் சிகரங்கள்ல சாதனை செய்திட்டு இருக்கீங்க. உங்க பேரைச் சொன்னவுடனேயே, எப்படி நீங்க மலைகள்ல தூய்மை இயக்கத்தில ஈடுபட்டு வர்றீங்க அப்படீங்கற காட்சி மக்களோட மனங்கள்ல விரியுங்கறதுல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

பிரதீப்: சரி சார்.

மோதி: மேலும் நீங்க சொன்ன மாதிரி, இப்ப மிகப்பெரிய குழு உருவாகிட்டு வருது, நீங்களும் இத்தனை பெரிய அளவுல தினசரி பணியில ஈடுபட்டு வர்றீங்க.

பிரதீப்: ஆமாம் சார்.

பிரதமர்: உங்களோட இந்த முயற்சிகள் காரணமா, இது பத்தின விவாதம் காரணமா, இப்ப எல்லாம் மலையேறும் நிறைய நபர்கள் தூய்மை தொடர்பான படங்களை தரவேற்றம் செய்யத் தொடங்கியிருக்காங்க அப்படீன்னு நான் முழுமையா நம்பறேன்.

பிரதீப்: ஆமாம் சார், ரொம்பவே.

மோதி: நல்ல விஷயம் என்னென்னா, உங்களை மாதிரி நண்பர்களோட முயற்சிகள் காரணமா, waste is also wealth, குப்பையும் கூட கோமேதகம் தான் என்பது மக்களோட மனங்கள்ல இப்ப நிலை பெற்றுக்கிட்டு வருது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட இப்ப நடைபெற்றுக்கிட்டு இருக்கு, நமக்கெல்லாம் பெருமிதமா விளங்கக்கூடிய இமயத்தைப் பாதுகாப்பது, பராமரிப்பது ஆகியவற்றில இப்ப சாமான்ய மனிதர்களும் இணையறாங்க. பிரதீப், எனக்கு ரொம்ப இதமா இருந்திச்சு. பலப்பல நன்றிகள் சகோதரா!

பிரதீப்: தேங்க்யூ சார், ரொம்ப ரொம்ப நன்றி, ஜெய் ஹிந்த்!

இன்று தேசத்தில் சுற்றுலா மிகவும் விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. நமது இயற்கை ஆதாரங்களாகட்டும், நதிகள், மலைகள், குளங்கள் அல்லது நமது புனிதத் தலங்களாகட்டும், இவற்றைத் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது. இவை சுற்றுலாத் தொழிலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். சுற்றுலாவில் தூய்மையோடு கூடவே நாம் Incredible India இயக்கம் பற்றியும் பல வேளைகளில் விவாதித்திருக்கிறோம். இந்த இயக்கத்தின் வாயிலாக மக்களுக்கு முதன் முறையாக, அவர்களுக்கு அருகிலேயே இருந்த பல இடங்களைப் பற்றிய தகவல் தெரிய வந்தது. நாம் அயல்நாடுகளுக்குச் சுற்றுலா மேற்கொள்வதற்கு முன்பாக, முதலில் நமது தேசத்தில் குறைந்த பட்சம் 15 சுற்றுலா இடங்களுக்குக் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டும், மேலும் இந்த இடங்களுமே கூட நீங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறீர்களோ, அங்கிருப்பவையாக இவை இருக்கக்கூடாது, உங்கள் மாநிலத்தை விட்டு வெளியே வேறு ஒரு மாநிலத்தில் இவை அமைந்திருக்க வேண்டும். இதைப் போலவே, தூய்மையான சியாச்சின், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி, மின் கழிவுப் பொருட்கள் போன்ற தீவிரமான விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து கலந்து வந்திருக்கிறோம். இன்று உலகனைத்துமே சுற்றுச்சூழலின் எந்த விஷயம் குறித்து இத்தனை பிரச்சினையில் சிக்கி இருக்கிறதோ, இதற்கான தீர்வு எனும் போது, மனதின் குரலின் இந்த முன்னெடுப்பு மிகவும் முதன்மையானது.

மனதின் குரல் தொடர்பாக இந்த முறை மேலும் சிறப்புச் செய்தி யுனெஸ்கோவின் தலைமை இயக்குநரான ஔத்ரே ஆஸூலேவிடம் இருந்து வந்திருக்கிறது. 100 பகுதிகளின் இந்த அருமையான பயணத்திற்கான நல்வாழ்த்துக்களை அளித்திருப்பதோடு, சில வினாக்களையும் இவர் எழுப்பி இருக்கிறார். முதலில் யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநரின் மனதின் குரலைச் செவி மடுப்போம், வாருங்கள்!!

யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர்: பிரியமான பிரதமருக்கு வணக்கம், யுனெஸ்கோ அமைப்பின் சார்பாக மனதின் குரல் வானொலி ஒலிபரப்பின் 100ஆவது பகுதியில் பங்கெடுக்கும் இந்த வாய்ப்பிற்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். யுனெஸ்கோவுக்கும் இந்தியாவுக்கும் ஒரு நீண்ட பொதுவான சரித்திரம் உண்டு. நமது கட்டளைகளுக்கு உட்பட்ட அனைத்துத் துறைகளிலும் பலமான கூட்டுக்கள் நமக்கிடையே உண்டு. அது கல்வியாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரம் ஆகட்டும், தகவல் துறையாகட்டும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து இன்று நான் பேச விழைகிறேன்.

2030ஆம் ஆண்டிற்குள்ளாக அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்படுவதை உறுதி செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு தனது உறுப்பு நாடுகளுடன் யுனெஸ்கோ அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு என்ற வகையில், எப்படி இந்த இலக்கை எட்டுவது என்பது குறித்து இந்தியாவின் வழி என்ன என்பதை விளக்க முடியுமா. இந்த ஆண்டு இந்தியா ஜி-20 மாநாட்டிற்குத் தலையேற்கும் வேளையில் கலாச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையிலும் யுனெஸ்கோ அமைப்பு செயலாற்றி வருகிறது. இந்த நிகழ்விற்காக உலகத் தலைவர்கள் தில்லிக்கு வருகிறார்கள். சர்வதேச செயல்திட்டத்தின் முதன்மை இடத்தில் கலாச்சாரத்தையும், கல்வியையும் பொருத்த இந்தியா எப்படி விழைகிறது? இந்த நல்வாய்ப்பிற்கு நான் மீண்டுமொருமுறை நன்றி தெரிவிக்கிறேன், உங்கள் வாயிலாக இந்திய மக்களுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். உங்களுக்குப் பலப்பல நன்றிகள்.

பிரதமர்: நன்றி, மாண்புமிகு தலைமை இயக்குநர். மனதின் குரலின் 100ஆவது பகுதியில் உங்களோடு உரையாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கல்வி-கலாச்சாரம் தொடர்பான முக்கியமான விஷயங்களை நீங்கள் எழுப்பியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர், கல்வி மற்றும் கலாச்சாரப் பராமரிப்பு தொடர்பான இந்தியாவின் முன்னெடுப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள விழைந்திருக்கிறார். இந்த இரண்டு விஷயங்களுமே மனதின் குரலில் விருப்பமான விஷயங்களாக இருந்து வந்திருக்கின்றன.

விஷயம் கல்வி பற்றியதாகட்டும், கலாச்சாரம் பற்றியதாகட்டும், இவற்றின் பாதுகாப்பும், பராமரிப்பும் எனும் போது, இந்தியாவில் ஒரு பண்டைய பாரம்பரியம் உண்டு. இந்த நோக்கில், இன்று தேசத்தின் பணி புரியப்பட்டு வருகிறது என்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. தேசிய கல்வித் திட்டமாகட்டும், மாநில மொழிகளில் கல்வி என்ற தேர்வாகட்டும், கல்வியில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாகட்டும், இப்படி அநேக முயல்வுகளை உங்களால் காண முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்னால், குஜராத்தில், சிறப்பான கல்வியளிக்கப்படவும், கல்வி இடைநிற்றல் விகிதங்களைக் குறைக்கவும், குணோத்ஸவ் ஔர் ஷாலா பிரவேஷோத்ஸவ் போன்ற திட்டங்கள் மக்கள் பங்களிப்பின் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக விளங்கின. தன்னலமற்ற வகையிலே கல்விப்பணியில் ஈடுபட்ட பலரின் முயற்சிகளை நாம் மனதின் குரலில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறோம். உங்களுக்கு நினைவிருக்கலாம், ஒரு முறை நாம் ஒடிஷாவில் வண்டியில் தேநீர் விற்பனை செய்யும், காலஞ்சென்ற டி. பிரகாஷ் ராவ் பற்றியும் விவாதித்திருக்கிறோம். இவர் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதைத் தனது இலக்காகக் கொண்டிருந்தார். ஜார்க்கண்டின் கிராமங்களில் டிஜிட்டல் நூலகத்தைச் செயல்படுத்தும் சஞ்ஜய் கஷ்யப், கோவிட் பெருந்தொற்றின் போது, மின்வழி கற்றல் மூலமாக பல குழந்தைகளுக்கு உதவி புரிந்த ஹேமலதா என்.கே ஆகட்டும், இப்படி அநேக ஆசிரியர்களின் எடுத்துக்காட்டுகளை நாம் மனதின் குரலில் கையாண்டிருக்கிறோம். கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முயற்சிகளுக்கும் கூட மனதின் குரலில் நாம் தொடர்ந்து இடமளித்து வந்திருக்கிறோம்.

இலட்சத்தீவுகளின் கும்மெல் பிரதர்ஸ் சேலஞ்சர்ஸ் கிளப் ஆகட்டும், கர்நாடகத்தின் க்வேமஸ்ரீ ஜி கலா சேதனா போன்ற மேடைகளாகட்டும், தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள், கடிதங்கள் வாயிலாக பல எடுத்துக்காட்டுக்களை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். நாம் அந்த மூன்று போட்டிகள் பற்றியும் கூட பேசியிருந்தோமே… தேசபக்திப் பாடல்கள், லோரி அதாவது தாலாட்டு மற்றும் ரங்கோலி ஆகியவற்றோடு இணைந்தவை. உங்களுக்கு நினைவிருக்கலாம், தேசமெங்கும் கதை சொல்லிகளின் வாயிலாக கதை சொல்லுதல் மூலம், கல்வியில் இந்திய நாட்டு வழிமுறைகள் குறித்தும் ஒரு முறை நாம் பேசியிருந்தோம். சமூக முயற்சிகள் வாயிலாக பெரிய மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆண்டு நாம் சுதந்திரத்தின் அமுதக்காலத்தில் நடை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஜி20 மாநாட்டிற்குத் தலைமையேற்றுக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவும் கூட கல்வியோடு சேர்ந்து பலவகைப்பட்ட உலகக் கலாச்சாரங்களைச் செறிவானவையாக்க, நமது உறுதிப்பாடு மேலும் பலப்பட்டு இருக்கிறது.

நமது உபநிடதங்களின் ஒரு மந்திரம், பல நூற்றாண்டுகளாகவே நமது ஆவியில் கலந்து நமக்கு உத்வேகம் அளித்து வந்திருக்கிறது.

சரைவேதி சரைவேதி சரைவேதி

பயணித்துக் கொண்டே இரு, பயணித்துக் கொண்டே இரு,

பயணித்துக் கொண்டே இரு.

இன்று நாம் இதே சரைவேதி சரைவேதி-பயணித்துக் கொண்டே இரு என்ற உணர்வோடு மனதின் குரலின் 100ஆவது பகுதியை நிறைவு செய்கிறோம். இந்திய சமூகத்தின் ஊடும் பாவும் பலப்படுத்தப்படுவதில், மனதின் குரலானது ஒரு மாலையின் இழை போல செயல்படுகிறது, இது அனைத்து மனங்களையும் இணைத்து வைக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் நாட்டுமக்களின் சேவை மற்றும் திறமைகள், மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் நாட்டுமக்கள் ஒவ்வொருவரும், மற்றவர்களுக்குக் கருத்தூக்கம் அளித்திருக்கின்றனர். ஒரு வகையில், மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியும், அடுத்த பகுதிக்கான களத்தைத் தயார் செய்தளிக்கிறது.

மனதின் குரலில் எப்போதும் நல்லிணக்கம், சேவை உணர்வு, கடமை உணர்ச்சி ஆகியவையே முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. சுதந்திரத்தின் அமுதக்காலத்தில், இந்த நேர்மறை எண்ணமே தேசத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடியது, புதிய உயர்வுகளுக்குக் கொண்டு செல்லக்கூடியது, மனதின் குரலால் ஏற்பட்ட தொடக்கம், அது இன்று புதிய பாரம்பரியமாகவும் ஆகியிருக்கிறது என்பது எனக்கு மிகப்பெரிய நிறைவை அளிக்கிறது. இது எப்படிப்பட்ட பாரம்பரியம் என்றால் இதிலே நம்மனைவரின் முயற்சிகளின் உணர்வு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

நான் இன்று ஆகாசவாணியின் நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்; இவர்கள் மிகுந்த பொறுமையோடு, இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் பதிவு செய்கிறார்கள். மிகவும் குறைவான காலத்திற்குள்ளாக, மிகவும் விரைவாக மனதின் குரலை பல்வேறு மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தூர்தர்ஷன் மற்றும் மைகவ் இன் நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். விளம்பர இடைவேளை இல்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பும், நாடெங்கிலும் இருக்கும் டிவி சேனல்கள், மின்னணு ஊடகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். நிறைவாக, மனதின் குரலை வழிநடத்தும், இந்திய நாட்டு மக்கள், இந்தியா மீது நம்பிக்கை வைத்திருப்போர் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இவை அனைத்தையும், நீங்கள் அளிக்கும் உத்வேகம், நீங்கள் தரும் பலத்தால் மட்டுமே சாதிக்க முடிந்திருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 01, 2023 12:49 am

இதுவரை 99 ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது என்ன?.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Tamil_News_large_330828520230430105214

புதுடில்லி: ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை ரேடியோ மூலம் மக்களிடம் பல்வேறு விஷயங்களை பிரதமர் மோடி பேசுவது வழக்கம். இதுவரை பிரதமர் மோடி 99 ரேடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி உள்ளார்.

இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பிரதமர் மோடி உரையை கேட்க வேண்டும் என பலர் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இதுவரை 99 ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய விபரம் பின்வருமாறு:


* விளையாட்டுத்துறை குறித்து 23 முறை.

* பெண்களுக்கு கொடுக்க வேண்டிய அதிகாரம் மற்றும் மரியாதை குறித்து 307 முறை.

* யோகா செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை குறித்து 30 முறை.

* தூய்மை இந்தியா திட்டம் குறித்து 52 முறை.

* நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் குறித்து, 730 முறை

* பிறர் செயல்பாடு தன்னை ஈர்த்தது குறித்து 24 முறை.

* சுகாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து 23 முறை.

இதுமட்டுமின்றி, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் மீடியா, ஆன்லைன் பரிவர்த்தனை, இலவச காஸ், ஆதார், பான் கார்டு, கோவிட் தொற்று பரவல், தமிழக கலாசாரம், தொன்மை, காசி தமிழ் சங்கமம்,சவுராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழக கோயில்கள், பாரம்பரியம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 01, 2023 1:02 am

"கோடிக்கணக்கானவர்களை தொடர்பு கொள்ள உதவிய மன்கிபாத்"- பிரதமர் மோடி


மன்கிபாத் ரேடியோ நிகழ்ச்சி மூலம் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்தது. என்றும் , மக்களுடன் பேசுவது தமக்கு பெரும் மகிழ்வை ஏற்படுத்தியது என்றும் இன்றைய 100 வது நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் மோடி பேசியதாவது: மன்கிபாத் நாம் என்ற உணர்வை ஏற்படுத்தியது. மக்கள் இது கொண்டாடக்கூடிய இடமாக திகழ்கிறது. இந்த நிகழ்ச்சி குறித்து பல கடிதங்கள் வந்துள்ளன. இதன்மூலம் பல்வேறு உணர்வுகளை புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு சாதனையாளர்களை தொடர்பு கொண்டு பேசுவதுடன், அவர்களை பாராட்டும் வாய்ப்பும் கிடைத்தது.

மக்களுடனான தொடர்புக்கு ஒரு முக்கிய கருவியாக இருந்தது. கோடிக்ககணக்கான இந்தியர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருந்தது. மூலை முடுக்கில் உள்ளவர்களிடமும் தொடர்பை ஏற்படுத்தியது. மன்கிபாத் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கியது. பலரது பாராட்டையும் பெற்றது.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்தது. மக்களின் செயல்பாடுகள் பல பாரட்டும் விதமாக இருந்தது. கண்மாய் தூர்வாரல், நீர் சேமிப்பு என பலரும் நல்ல விஷயங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த மன்கிபாத்தில் பங்கேற்றவர்கள், மற்றும் இந்நிகழ்ச்சிக்கு பின்னால் இருந்து இயக்குபவர்கள் அனைவரும் ஹீரோக்களே என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 01, 2023 1:03 am

4 லட்சம் இடங்களில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி 100வது முறையாக பிரதமர் மோடி உரை: உலகம் முழுவதும் 63 மொழிகளில் ஒளிபரப்பு



அகில இந்திய வானொலியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் 100வது முறையாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் நேற்று உரையாடினார். இந்த 100வது நிகழ்ச்சி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் நேரலையில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியின் 100வது பகுதி நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் பிரமாண்ட திரை மற்றும் வானொலி மூலமாக பிரதமரின் பேச்சை பொதுமக்கள் கேட்க பாஜ கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜ ஆளும் மாநில முதல்வர்கள், பாஜ மூத்த தலைவர்கள் பலர் மக்களோடு மக்களாக அமர்ந்து பிரதமரின் பேச்சை கேட்டனர். மேலும், இந்தியில் உரையாற்றும் பிரதமர் மோடியின் பேச்சு, அரசியலமைப்பு அட்டவணையில் உள்ள 23 மொழிகள், 29 வட்டார மொழிகள் மற்றும் சீன மொழி, பிரெஞ்ச், அரபி உள்ளிட்ட 11 அந்நிய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் உட்பட 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

‘மனதின் குரல்’ கோடிக்கணக்கான மக்களுடைய மனங்களின் குரல், அவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு. 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, விஜயதசமி அன்று இந்த யாத்திரையை நாம் தொடக்கினோம். விஜயதசமி, தீமைகளுக்கு எதிரான நல்லவைகளின் வெற்றி திருநாள். அதே போல, மனதின் குரலும் நாட்டுமக்களின் நல்லவைகளை, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை கொண்டாடும் அற்புதமான திருநாள். இந்த நிகழ்ச்சியில், நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள மக்கள் இணைந்தார்கள். இதனால், இந்த நிகழ்ச்சியுடன் இணைக்கப்பட்ட, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம், தூய்மை பாரதம், கதராடை, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா போன்ற அனைத்து திட்டங்களும், மக்கள் இயக்கமாக மாறியது.

என்னுடைய வழிகாட்டி லட்சுமண்ராவ் எப்போதும் ஒரு விஷயத்தைக் கூறுவார். ‘எதிரில் இருப்பவர் உங்களுடைய நண்பராக இருந்தாலும் சரி, உங்களுடைய எதிரியாக இருந்தாலும் சரி, நாம் அவரவருடைய நல்ல இயல்புகளை அறிந்து கொண்டு, அவர்களிடமிருந்து கற்க முயல வேண்டும்’, என்பார். அதுபோல, மனதின் குரல், மற்றவர்களின் குணங்களிடமிருந்து நிறைய பாடங்களை கற்க ஒரு மிகப் பெரிய சாதனமாகி விட்டது. நான் குஜராத்தின் முதல்வராக இருந்த சமயத்தில், சாமானிய மக்களைச் சந்திப்பது, கலந்து பழகுவது வெகு இயல்பான விஷயமாக இருந்தது. ஆனால் 2014ம் ஆண்டு, டெல்லிக்கு வந்த பிறகு, இங்கு வாழ்க்கை மிக வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன்.

பணி வித்தியாசமானது, பொறுப்பு வித்தியாசமானது, பாதுகாப்பு கெடுபிடி இருந்தது. இதனால் ஆரம்ப நாட்களில், வெறுமையாக உணர்ந்தேன். சுமார் 50 ஆண்டுக்கு முன்பாக நான் வீட்டை துறந்து வந்தது, என்னுடைய தேசத்து மக்களுடன் தொடர்பு கொள்வதை கடினமாக்கும் நிலைக்காக அல்ல. என் நாட்டு மக்களே எனக்கு அனைத்தும் ஆவார்கள். அவர்களிடமிருந்து விலகி என்னால் எப்படி இருக்க முடியும்? இந்தச் சவாலுக்கான தீர்வினை அளித்து, கோடிக்கணக்கான சாமானிய மக்களோடு என்னை இணைக்கும் பாதையை காட்டியது தான் மனதின் குரல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியால், நான் உங்களை விட்டு விலகி இருக்கிறேன் என்ற உணர்வே என்னிடம் இல்லை.

என்னைப் பொறுத்த வரை மனதின் குரல், ஒரு நிகழ்ச்சி அல்ல, இது என்னுடைய நம்பிக்கை, வழிபாடு, விரதம். மக்கள் இறைவனை வேண்டி செல்லும் போது, பிரசாதத்துடன் திரும்பி வருகிறார்கள். அதுபோல இறைவனின் வடிவமான மக்களின் பாதங்களில் கிடைத்த பிரசாதம் போன்றது மனதின் குரல். இது, என்னுடைய மனதின் ஆன்மீக பயணமாகி விட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மேலும் பல்வேறு சாதனைகள் புரிந்து சாமானிய மக்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

* யுனெஸ்கோ தலைவர் பங்கேற்பு


மனதின் குரல் 100வது நிகழ்ச்சியில், ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரே அசோலே பங்கேற்று பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார். அப்போது நிகழ்ச்சியில் பேச வாய்ப்பளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்ட அசாலே, இந்திய மக்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், கல்வி மற்றும் கலாச்சார பாதுகாப்பில் இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் குறித்து அவர் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழியில் கல்வி பயில்வதற்கான விருப்பம், கல்வியில் தொழில்நுட்பத்தை புகுத்துதல் மூலம் கல்வித்துறையை வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வருகிறது. மனதின் குரல் நிகழ்ச்சியிலும், கல்விக்கான தன்னலமற்ற சேவை புரிந்த பலரின் முயற்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

* 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து நாகநதியை மீட்டெடுத்தது பெருமை பிரதமர் மோடி பேச்சு


பிரதமர் நரேந்திர மோடி தனது 100வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலையில் உருவாகும் நாகநதி வாழப்பந்தல் என்னும் இடத்தில் கலக்கிறது. இந்த நாகநதி வேலூர் மாவட்ட மக்களின் குடிநீராகவும் பயன்படுகிறது. கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நாகநதி ஓடையில் உருவாகும் தண்ணீர் ஆவியாகி செல்வதை தடுக்கும் வகையில் 354 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. கோடையிலும் நெல், வாழை போன்று தண்ணீர் அதிகம் உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் 20 ஆயிரம் பேரும், வாழும் கலை அமைப்பை சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து தூர்வாரி சீரமைத்து மீட்டெடுத்துள்ளது பெருமைக்குரியது. நாகநதி வற்றாத ஜீவநதியாக உள்ளது’ என குறிப்பிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 10, 2023 6:39 pm

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Modi


எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை பார்க்க முடியாது: பிரதமர் மோடி

அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் பார்க்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் நத்வாராவில் நடந்த விழாவில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார். இதற்காக நடந்த விழாவில் பிதமர் பேசியாதாவது: "நான் இன்று ரூ.5,500 கோடிக்கும் அதிகமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்த வளர்ச்சித் திட்டங்களைப் பெற்றுள்ள ராஜஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அரசானது ராஜஸ்தான் மக்களுக்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

ஆனால் அடிப்படை வசதிகளுடன் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும் போதுதான் வேகமான வளர்ச்சி சாத்தியமாகும் என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது. போதுமான மருத்துவக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருந்தால், நாம் மருத்துவர்கள் பற்றாக்குறையை சந்திக்க வேண்டியது இருந்திருக்காது. எல்லா வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டிருந்தால் ரூ.3.5 லட்சம் கோடி செலவில் ஜல்ஜீவன் அமைச்சகம் ஏற்படுத்தும் தேவை இருந்திருக்காது. எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களால் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்க முடியாது. அவர்களுக்கு அரசியல் நலனே முக்கியம். அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கலகத்தை மட்டுமே உருவாக்குவார்கள்." இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "நமது அரசின் நல்லாட்சியால் நாட்டின் பொருளாதார வளச்சியடைந்த மாநிலங்களில் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நமது மாநிலத்தில் நிறைவேற்றப்படாமல் மீதமிருக்க கூடிய திட்டங்கள் குறித்து நான் உங்களுக்கு (பிரதமர் மோடி) கடிதம் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன். ஜனநாயகத்தில் பகையாளிகள் என்று யாரும் இல்லை. இது கருத்தியலுக்கான யுத்தம். நாட்டு மக்களிடம் எப்போதும் அமைதியும் ஒற்றுமயைும் நிலவ வேண்டும். வன்முறை வளர்ச்சியை பாதிக்கிறது. எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஒரு அரசு சிறப்பாக செயல்பட முடியாது. எதிர்க்கட்சிகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

ராஜ்சமந்த் மற்றும் உதய்பூர் இடையே இருவழி சாலை அமைப்பதற்கும், உதய்பூர் ரயில் நிலையத்தினை புனரமைப்பு செய்வதற்குமான திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், நத்வாராவிலிருந்து நத்வாரா நகரம் வரை புதியபாதை அமைக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அதேபோல், தேசிய நெடுஞ்சாலை 48-ன் உதய்பூர் - ஷாம்லாஜி வரையிலான 114 கி.மீ. தொலைவிலான ஆறு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 25-ல் பார் பிலாரா - ஜோத்பூர் இடையில் 110 கி.மீ தொலைவுக்கு உள்ள நான்கு வழிச்சாலையில் விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 12, 2023 9:22 pm

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Modi

"21-ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப தேசிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது" - பிரதமர் மோடி



``என் வாழ்நாளில் நான் ஒருபோதும் ஆசிரியராக இருந்ததில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் மாணவனாக இருந்து சமூகத்தின் நுணுக்கங்களைப் படித்திருக்கிறேன்." - பிரதமர் மோடி

``21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப நாடு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அந்தத் தேவைகளை மனதில்கொண்டே புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது" என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான மாநாடு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அந்த வகையில், 29-ம் மாநாடு குஜராத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார். அப்போது பேசிய அவர், ``நமது கல்விமுறை மாற்றமடைந்துகொண்டிருக்கிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

மாறிவரும் இந்தக் காலகட்டத்தில் நாம் எவ்வாறு முன்னோக்கிச் செல்லப்போகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. ஆசிரியர்களுடன் நான் நடத்திய பல உரையாடல்கள் தேசிய அளவிலான கொள்கைகளை வகுக்க மிகவும் உதவியிருக்கின்றன. புதிய தேசிய கல்விக்கொள்கையை உருவாக்குவதில், லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தங்களின் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். இன்று இந்தியாவில் 21-ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அந்தத் தேவைகளை மனதில் கொண்டுதான் தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் நாம் மாணவர்களை புத்தக அறிவுள்ளவர்களாக உருவாக்கினோம். ஆனால், புதிய தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்த நிலை மாறிவிடும். என் வாழ்நாளில் நான் ஒருபோதும் ஆசிரியராக இருந்ததில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் மாணவனாக இருந்து சமூகத்தின் நுணுக்கங்களைப் படித்திருக்கிறேன்.

என்னுடைய வெளிநாட்டுப் பயணங்களில் நான் சந்தித்துப் பேசும் தலைவர்களில் பலர், அவர்களின் ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவித்திருக்கின்றனர். ஆசிரியரால் மட்டுமே மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். அதனால்தான் `மாற்றமடையும் கல்வி' என்பது, இந்த மாநாட்டின் கருப்பொருளாக இருக்கிறது" என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 2:31 pm

எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு பிரதமர் எச்சரிக்கை!:இறையாண்மையை பாதுகாப்போம் என உறுதி



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 Tamil_News_large_3325564

'நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதிலும், உறுதி செய்வதிலும் இந்தியா முழுமையாக தயார் நிலையில் உள்ளது,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக் எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவும் நிலையில், சீனாவை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக பிரதமர் மோடி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில், 2020ல் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. இதை நம் வீரர்கள் முறியடித்தனர்.

இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், நம் வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில், 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

தொடர் அத்துமீறல்


இதையடுத்து, இந்த பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் நிலவியது. இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், துாதரக அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டது.

இதன் காரணமாக பாங்காங் ஏரி, கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்து இரு நாட்டு வீரர்களும் வாபஸ் பெறப்பட்டனர்.

ஆனாலும், ஹாட்ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வீரர்கள் வாபஸ் பெறப்படவில்லை.

எல்லையில் அமைதி நிலவுவதாகவும், இரு தரப்பு பேச்சு நடத்தலாம் என்றும் சீன அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், பதற்றம் நிலவுவதாக நம் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச நாடுகளுக்கு தவறான தகவல் கொடுப்பதற்காக, எல்லையில் அமைதி நிலவுவதாக சீனா கூறினாலும், மற்றொரு பக்கம் சீன வீரர்கள் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதை நம் தரப்பு அம்பலப்படுத்தியது.

இந்நிலையில், 'நிக்கி ஆசியா' என்ற ஜப்பான் பத்திரிகைக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருக்கவே இந்தியா விரும்புகிறது. அதற்காக, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்கப்படாது.

நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதிலும், உறுதி செய்வதிலும் இந்தியா முழுமையாக தயார் நிலையில் உள்ளது. அண்டை நாடுகளுடன் நட்புறவு நீடிக்க வேண்டுமானால், எல்லை பகுதியில் பதற்றம் குறைந்து, இயல்பான நிலை நிலவ வேண்டும்.

இரு தரப்பும் பரஸ்பரம் மரியாதையுடன் நடந்து கொள்வதன் வாயிலாக மட்டுமே, இந்தியா - சீனா இடையோன நட்புறவு மேம்படும். இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு, சர்வதேச அளவில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

பலமான அடித்தளம்


எந்த ஒரு பிரச்னைக்கும் பேச்சு வாயிலாக அமைதியான வழியில் தீர்வு காண்பதையே நாங்கள் விரும்புகிறோம். பயங்கரவாதத்துக்கு உதவுவது, பயங்கரவாதத்தை துாண்டுவது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.

பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்கினால் மட்டுமே, அந்த நாட்டுடன் நட்புறவை தொடர முடியும். உலகில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

கடந்த 2014ல் உலகின் செல்வாக்கான பொருளாதார நாடுகளின் பட்டியலில் 10வது இடத்தில் நாங்கள் இருந்தோம். இப்போது ஐந்தாவது நாடாக மாறியுள்ளோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பலமான அடித்தளம் அமைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 22, 2023 8:31 am

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 11 QAOwKLH

மோடி நேற்று பப்புவா நியூகினியா நாட்டுக்கு சென்றதும் அந்நாட்டின் அதிபர் மோடியின் காலை தொட்டு ஆசிபெற்றதும் உலக செய்தியாகிவிட்டது

ஜி7 மாநாட்டுக்காக ஜப்பான் சென்ற மோடி திரும்பும் வழியில் பப்புவா நியூ கினியாவுக்கு சென்றார்,இந்த தீவு நாடு பிலிப்பைன்ஸுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது, சீனாவினை சமாளிக்க அருமையான கேந்திரமாக அமைந்த நாடு

அந்நாடும் சீனாவின் அத்துமீறல்களால் அதிருப்தி அடைந்த நாடு, இந்தியாமேல் நம்பிக்கையும் நட்பும் கொண்ட நாடு

அங்கே இந்தோ பசிபிக் ஒத்துழைப்பு மாநாடு நடக்க இருக்கின்றது, மோடி அதனில் கலந்து கொள்ளும்படியாக அத்தேசம் சென்றார்

அப்படி மோடி அந்நாட்டின் தலைநகர் மோர்செபியில் இறங்கும் போது அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கபட்டது, நியுகினியாவின் அதிபர் ஜேம்ஸ் மராபி பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கினார்

இது உலக அரங்கில் அரிதான விஷயம், பெரிய மதகுருக்கள் சென்றால் மட்டும்தான் இம்மாதிரி மரியாதையினை செய்வார்கள்

பொதுவாக கிறிஸ்தவ நாடுகளுக்க்கு போப் சென்றால் அவர் கையினை முத்தி செய்து காலை தொட்டு வணங்குவார்கள், இன்னும் சில மதகுருமார்களுக்கு அதுவும் ஒரு சர்ச்சையிலும் சிக்காத பழுத்த பழமான பெரிய மகான்களுக்கு மட்டுமே உலக அரங்கில் இந்த மரியாதை கிடைக்கும்

அப்படி ஒரு மரியாதை மோடிக்கு கிடைத்திருப்பது உலகம் அவரை மாபெரும் மகானாக, அரசியல் சன்னியாசியாக, உலக குருவாக பார்க்கின்றது என்பதை சொல்கின்றது

அந்த ஜேம்ஸ் மராபி ஒரு கிறிஸ்தவ பாஸ்டர், "செவன் டே அட்வென்டிஸ்" எனும் பிரதான சபையின் பாஸ்டர் அதிபரானாலும் அவர் அச்சபையில் இன்றும் பாஸ்டர்

அப்படிபட்ட கிறிஸ்தவர் மோடியின் அருமை அறிந்து இந்துக்கள் சம்பிரதாயபடி மோடியிடம் ஆசிவாங்கினார்

அந்நேரம் மோடி செய்த காரியம்தான் இப்போது பெரும் கவனம்பெறுகின்றது

பொதுவாக யோகிகள் சன்னியாசிகள் தங்களிடம் ஆசிபெறுவோரை தோளை தொட்டு தூக்காமல் முதுகில் தட்டி ஆசீர்வதிப்பார்கள் இது மரபு

யோகிராம் சுரத்குமார் இதனை சரியாக செய்வார், இது யோக மரபின் ஆசீர்வாதம், முதுகு தண்டில் ஒருவித அதிர்வை கொடுத்து ஆசீர்வதிக்கும் சம்பிரதாயம்

அதை மோடி மிக இயல்பாக செய்தபோது மாபெரும் குருவாக உயர்ந்து நின்றார்

மோடி "லோக குரு" எனும் ஸ்தானத்தை அடைந்துவிட்டார், அவரின் பேச்சும் செயலும் இந்தியா தாண்டி உலக மாந்தரெல்லாம் ஒரே சூரியன் கீழ் ஓரே இனமாக ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற நோக்கில் இருப்பதால் உலகம் அந்த மாமனிதனை கொண்டாடுகின்றது

உலகிற்கே நல்வழி காட்டுபவர் என அவரை ஏற்றுகொள்கின்றது

அப்படித்தான் பப்புவா நியுகினியாவின் அதிபரும் அந்த "லோக குருவினை" தன் குருவாக ஏற்று நேற்று அவர் பாதம் பணிந்தார்,மோடியும் குருவின் ஸ்தானத்தில் அவருக்கு ஆசிவழங்கினார்

பாரதம் உலக தலமையகமாக மாறிகொண்டிருக்கும் காட்சி இது


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 23, 2023 10:41 pm



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 23, 2023 10:42 pm



Sponsored content

PostSponsored content



Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக