புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு...! - 5 ஆண்டுகள்.. 60 ரூபாய் சம்பளம்... 66 கோடி சொத்து! Poll_c10ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு...! - 5 ஆண்டுகள்.. 60 ரூபாய் சம்பளம்... 66 கோடி சொத்து! Poll_m10ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு...! - 5 ஆண்டுகள்.. 60 ரூபாய் சம்பளம்... 66 கோடி சொத்து! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram

26 Posts - 39%
prajai

3 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Jenila

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%
Rutu

3 Posts - 2%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
Baarushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு...! - 5 ஆண்டுகள்.. 60 ரூபாய் சம்பளம்... 66 கோடி சொத்து!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 25, 2014 12:14 am

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், 17-வது நாளான கடந்த 19-ம் தேதி ஒருவழியாக அரசு தரப்பு இறுதி வாதத்தை நிறைவுசெய்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் மூன்றாம் தரப்பு வாதிகளான தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பினர் தங்களது இறுதி வாதத்தை எழுத்துபூர்வமாக நீதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டனர்.

இனி, வழக்கில் அடுத்த கட்டமாக, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நான்கு பேருடைய இறுதி வாதம் நிறைவடைந்ததும் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை எழுதுவார் என தமிழகமே எதிர்நோக்கி கவனித்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 19-ம் தேதி காலை 10.30 மணிக்கு மெடோ அக்ரோ ஃபார்ம் இயக்குநர் குமாரிடம் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி குறுக்கு விசாரணை நடத்தி முடித்துவிட்டு, சரியாக 11.30 மணிக்கு ஜெ. சொத்துக் குவிப்பின் இறுதி வாதத்தை எடுத்துவைக்கத் தொடங்கினார்.

அதில் ஏ1, ஏ2, ஏ3, ஏ4 - நான்கு பேர் மற்றும் அவர்கள் நேர்முக, மறைமுக பங்குதாரர்களாக இருந்த கம்பெனிகளுக்குமான வருமான பட்டியலை வாசித்த முடித்து, க்ளைமாக்ஸாக மராடி, ''இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், நலிந்த கம்பெனிகளை வாங்கி, முறைகேடாகப் பணம் செலுத்தி சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல் நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்துக்கு வந்த 20 கோடியும், சூப்பர் டூப்பர் டிவி நிறுவனத்துக்கு வந்த ஆறு கோடியும் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது. இது இரண்டுமே மிக முக்கியமான ஆதாரங்கள். ஆணித்தரமாக நிரூபிக்​கப்பட்ட ஆதாரங்கள். எனவே, இந்தச் செயலில் ஈடுபட்​டவர்களை ஊழல் தடுப்புப் பிரிவு சட்டங்களில் தண்டிக்க வேண்டும்'' என்றதும் கோர்ட்டே அமைதியானது.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதி குன்ஹா, ''இதில் ஏ1-க்கு என்ன தொடர்பு இருக்கிறது?'' என்றதும் எழுந்த பவானி சிங், ''ஏ2, ஏ3, ஏ4 ஆகியோர் அனைவரும் ஏ1 வீட்டில்தான் இருக்கின்றனர். அதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஏ1 வீட்டின் முகவரிகளில்தான் வங்கிக் கணக்குகள் தொடங்கப்​பட்டிருக்கின்றன. ஏ2, ஏ3, ஏ4 மூவருக்கும் குறைந்த வருமானம்தான் இருந்துள்ளது. ஏ1 வங்கி இருப்பின் மூலம்தான் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதனால் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் இதில் சம்பந்தப்பட்டவர்களே'' என்று தன்னுடைய இறுதி வாதத்தை நிறைவுசெய்தார்.

இந்த வழக்கில் தி.மு.க பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பு மூன்றாம் தரப்பு வாதி என்பதால், இறுதி வாதத்தை நேரடியாக வாதிட முடியாது. அதனால், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் குமரேசன், சரவணன், நடேசன் ஆகியோர் நீதிபதி முன்பு 428 பக்க எழுத்துபூர்வமான ஆவணத்தைச் சமர்ப்பித்தனர்.

அன்பழகன் தரப்பு சமர்ப்பித்த ஆவணத்தின் சாராம்சம்...

''இந்த வழக்கின் ஏ1 ஆக இருக்கும் ஜெயலலிதா 1984-89 வரை எம்.பி-யாகவும் 1989-91 வரை எம்.எல்.ஏ-வாகவும் 1991-96 வரை தமிழக முதல்​வராகவும் இருந்துள்ளார்.

இந்த வழக்கின் ஏ2 ஆக இருக்கும் சசிகலா கேசட் கடை நடத்தி வந்தார். அவரது கணவர் நடராஜன் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் அதிகாரியாக இருந்து 1991-ல் அந்தப் பணியை ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கின் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்​பட்டுள்ள சுதாதரன், சசிகலாவின் சகோதரி மகன். இவரை ஜெயலலிதா தன் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்.

இந்த வழக்கின் 4-வது குற்றவாளியாகச் சேர்க்கப்​பட்டுள்ள இளவரசி 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி. 1996-ல் ஜெயராமன், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, ஆந்திராவில் உள்ள திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார். கணவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் சொந்த வீடான போயஸ் கார்டனுக்கு இளவரசி வந்துவிட்டார்.

ஜெயலலிதா 1964-72 வரை திரைத் துறையில் நடிகையாக இருந்தார். அவரது அம்மா சந்தியா 1971-ல் காலமானார். அப்போது அவருக்கு நாட்டிய கலாநிகேதன் என்ற இசைப் பள்ளியும் போயஸ் கார்டனில் வீடும் ஆந்திரா மாநிலத்தில் ஸ்ரீநகரில் ஒரு வீடும் ரங்காரெட்டி தாலுக்காவில் 10.20 ஏக்கரில் திராட்சைத் தோட்ட பண்ணை வீடும், பஷீராபாத்தில் 3.25 ஏக்கர் நிலமும் மட்டுமே இருந்தது. அவை ஜெயலலிதாவின் பெயருக்கு மாற்றப்பட்டது.

1987-ல் ஜெயலலிதாவின் மொத்த அசையா சொத்துகள் 7.5 லட்சமும் வங்கி இருப்பு ஒரு லட்சமும் மட்டுமே இருந்தது. 1989-ல் எம்.பி-யாக இருந்தபோது நான்கு கார்கள் (மதிப்பு ரூ9,12,129) ஒரு ஜீப் (மதிப்பு ரூ.1,04,000) வாங்கி இருக்கிறார். இதுவே வருமானத்துக்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. 1988 முதல் 1990 வரை ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர் என்ற கம்பெனிகளைத் தொடங்கி நடத்திவந்தாலும்... வரவு, செலவுகள் செய்யாமல் வருமானம் இல்லாமல் இருந்தது. 1991 வரை ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2,01,83,957 ஆக இருந்தது.

1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நலிந்த நிறுவனங்களான மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன், நமச்சிவாயா கன்ஸ்ட்ரக்ஷன், சக்தி கன்ஸ்ட்ரக்ஷன், மார்பிள் அண்ட் மார்பிள்ஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகளை வாங்கி, அதில் நேரடி மற்றும் மறைமுக பங்குதாரர்களாக நுழைந்து, புதியதாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, 1991-96 வரை ஐந்து வருடங்கள் இந்த 32 நிறுவனங்களில் 898 முறை பணம் டெபாசிட் மட்டுமே செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கு இன்கம் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ் எதுவும் கிடையாது. இந்த நிறுவனங்களின் பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலம், கட்டடம், விளைநிலங்களை வாங்கி வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள்.

1991-ல் ரூ.2,01,83,957-ஆக இருந்த ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, 1996-ல் 66,44,73,573 ஆக உயர்ந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு எந்த வருமானமும் இல்லை. முதல்வராக இருந்ததற்குக்கூட சம்பளம் வாங்காமல் மாதம் ஒரு ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு 60 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியிருக்கிறார். பொதுச் சேவையில் இருந்துகொண்டு வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வாங்கியுள்ளனர். இவை அரசு துறை சாட்சியங்கள், ஆவணங்கள், நேரடியாக கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து நிரூபிக்கப்பட்டதால் இவர்களுக்கு ஊழல் தடுப்பு சட்டம் 2(D) பிரிவில் இந்தியத் தண்டனை சட்டம் 109- குற்றவாளிக்கு உடந்தையாக செயல்படுதல் மற்றும் 120B- கூட்டு சதி ஆகிய பிரிவுகளில் தண்டனை வழங்க வேண்டும்'' - இவ்வாறு தி.மு.க தனது இறுதி வாதத்தை சமர்ப்பித்துள்ளது.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், ''ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் தாயார் இறந்துவிட்டதால், எங்களுடைய இறுதி வாதத்துக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்'' என்று கேட்டிருந்தனர்.

அதையடுத்து நீதிபதி, ''ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் இறுதி வாதத்தை 2.6.2014 தொடங்கலாம் என்றும், மற்ற ஏ2 - சசிகலா, ஏ3 - சுதாகரன், ஏ4 - இளவரசி மூவரும் நாளையில் இருந்து தங்களது இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டும்'' என்றார்.

அதையடுத்து ஏ2, ஏ3, ஏ4 மூவரும் 21-ம் தேதி மீண்டும் நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். அதில் ''ஏ1 பொதுத் துறையில் இருப்பதால் அவருடைய இறுதி வாதம் நிறைவடைந்த பிறகுதான் நாங்கள் இறுதி வாதத்தைத் தொடங்க முடியும். அன்பழகன் தரப்பு சமர்ப்பித்த ஸ்டேட்மென்ட்டைப் படித்துப் பார்க்க வேண்டும். அதற்காக எங்களுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருக்கிறது.

நீதிபதி அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, 'நாளை முதல் இறுதி வாதத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார். இனி ஜெட் வேகம்தான்.

- வீ.கே.ரமேஷ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 25, 2014 12:42 am

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு...! - 5 ஆண்டுகள்.. 60 ரூபாய் சம்பளம்... 66 கோடி சொத்து! 10346649_676806889059078_5881829865136465682_n

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு...! - 5 ஆண்டுகள்.. 60 ரூபாய் சம்பளம்... 66 கோடி சொத்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun May 25, 2014 7:07 am

காமராஜர் ஒன்பது ஆண்டுகள் முதல்வராகப் பணிபுரிந்தார். அவருடைய அமைச்சரவையில் கக்கன் இருந்தார். காமராஜர் இறக்கும் போது ரூ.750/- கையிருப்பு, மூன்று வேட்டி சட்டை. கக்கன் பதவியில் இல்லதபோது அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். உடல் நலம் குன்றி அரசு மருத்துவமனையில்தான் மருத்துவம் பார்த்துக் கொண்டார். ஆனால் அவர்கள் தமிழக மக்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
என்ன இது சம்பந்தமில்லாமல் எதையோ பதிவிடுகிறேன். அக்னி நடசத்திர வெய்யிலால் மூளை மழுங்கிவிட்டது. ம்ம்ம்.....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக