ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஈராக் எண்ணெய் ஆலை கிளர்ச்சிப் படை வசமானது எப்படி?

View previous topic View next topic Go down

ஈராக் எண்ணெய் ஆலை கிளர்ச்சிப் படை வசமானது எப்படி?

Post by சிவா on Tue Jun 24, 2014 6:40 pm


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வடக்கு பிராந்தியத்தின் சலாவுதீன் நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முழுமையாக கிளிர்ச்சியாளர்கள் கட்டுக்குள் வந்தது.

ஈராக்கில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.(லெவண்ட்) படைகள், பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குள் 10 நாட்களுக்கு முன்னர் நுழைந்தது.

முதலில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் சிறைபிடித்த கிளிர்ச்சியாளர்கள் பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது முழுமையாக அந்நிலையத்தை கைப்பற்றியுள்ளது.

இடையில், ஈராக் ராணுவ தாக்குதல் காரணமாக சிறு பின்னடைவு ஏற்பட்ட போதும் அதை சமாளித்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் கிளிர்ச்சியாளர்கள்.

இந்நிலையில், "பாய்ஜி சுத்திகரிப்பு நிலையத்தை முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது, அது உள்ளூர் பழங்குடியின தலைவர்கள் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்படும்" என கிளிர்ச்சிப் படைகள் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தான் ஈராக்கின் பெரும்பான்மை பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கிளிர்ச்சியாளர்கள் பிடியில் பாய்ஜி நிலயம் வந்துள்ளதை அடுத்து நாட்டின் மற்ற பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கைப்பற்றுவது கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு வகையில் கட்டாயமாக இருந்தது. அப்போதுதான், மோசுல் நகரில் முகாமிட்டிருக்கும் தங்கள் படைகளுக்கு தேவையான எரிசக்தியை வழங்க முடியும் என்ற நிலை இருந்தது. அதனாலேயே, கிளர்ச்சியாளர்கள் பாய்ஜி-யை முதலில் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என பிபிசி செய்தியாளர் ஜிம் முயிர் தெரிவித்துள்ளார்.

ஈராக்கின் 2-வது பெரிய நகரான மோசுல் நகர், பாக்தாத்தின் மேற்கு மறும் வடக்கு பகுதிகள், சிரியா, ஜோர்டான் நாடுகளுக்குச் செல்லும் எல்லைப் பகுதிகள் என முக்கிய இடங்கள் அனைத்தும் கிளிர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கிறது. தற்போது ஹதிதா அணையை நோக்கி முன்னேறி வருகின்றன.

மிகப்பெரிய அணையான ஹதிதாவுக்கு சேதம் விளைவிக்கப்படும் பட்சத்தில் பெரும் வெள்ளச்சேதம் ஏற்படும். இந்நிலையில், 'நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம்' என சூளரைத்துள்ளார் ஐ.எஸ்.ஐ.எஸ். செய்தித்தொடர்பாளர்.

ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ். படைகள் கை ஓங்கி வரும், அடுத்த சில நாட்களில் நிலைமை மிகவும் மோசமடைய வாய்ப்பிருப்பதால், ஈராக்குக்கான உதவி மேலும் அதிகரிக்கப்படும் என பாக்தாத் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

ஈராக் பிரதமர் நூரி மாலிகி மற்றும் அந்நாட்டின் ஷியா, சன்னி பிரிவினரின் முக்கிய தலைவர்களுடனும் கெர்ரி ஆலோசனை மேற்கொண்ட அவர் குர்திஷ் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னணியில், இரான், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசை ஈராக்கில் அமைக்க முயற்சி நடந்துவருவதாக தெரிகிறது.

ஷியா பிரிவைச் சேர்ந்த மலிக்கி, அதிகாரத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதும், சன்னி, குர்தீஷ் இனத்தவருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாததுமே கிளிர்ச்சிக்கு காரணம்.

இந்நிலையில், ஜூலை 1-ல் ஈராக் நாடாளுமன்றம் கூடும்போது, பிரதமர் மலிக்கிக்குப் பதிலாக புதிய பிரதமர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக் - சிரியா எல்லையை ஒட்டியுள்ள அன்பர் மாகாணம் கிளிர்ச்சியாளர்கள் பிடியில் உள்ளது. ஜோர்டானுடன் இணைக்கும் டிரேபில் கிராஸிங்கும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. இதனால், ஜோர்டான் எல்லையில் அந்நாட்டு ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளது.

2011-ல் ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகளை திரும்பப்பெற்ற போதும் தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஈராக் ராணுவத்திற்கு ஆலோசனை வழங்கு 300 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது.

ஈராக் பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர், ஈராக் நிலவரம் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, சர்வதேச அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் என ஜான் கெர்ரி கூறியிருந்தார்.

ஆனால், ஈராக் விவகாரத்தில் அமெரிக்க தலையீட்டை தேவையற்றதாகவே பார்க்கிறது இரான். அந்நாட்டுத் தலைவர் அயதுல்லா கோமெனி, "அமெரிக்கா தனது தலையீட்டின் மூலம் ஈராக்கை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தனக்கு சாதகமான ஆட்சியாளர்களை அமரவைத்து மறைமுக ஆட்சி செலுத்த முற்படுகிறது" என குற்றம் சாட்டியுள்ளார்.

தி இந்து
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum