ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

View previous topic View next topic Go down

ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by பிஜிராமன் on Sun Jun 29, 2014 8:29 pm

நம் வாழ்வில் அனைவரும் பல புத்தகங்களை படித்திருப்போம்.  ஒவ்வொரு புத்தகமும் நம் வாழ்விற்கு  ஒரு சிறு அன்பளிப்பையாவது  கொடுத்துச்  சென்றிருக்கும். சிலருக்கு சில புத்தகங்கள் தங்கள் வாழ்கையை புரட்டிப் போட்ட  நெம்புகோலாய், சிலருக்கு கடும் குளிரில் காத்த கம்பளியாய், அடை  மழையில் காத்த குடையாய், வழிகாட்டியாய், உலகை அணுகும் முறையை, பிறர் சொல்லின் நுண் பொருளை காணும் அறிவை, வாழ்வில் வர்ண ஜாலம் படைக்கும் வித்தையை கற்றுக் கொடுத்திருக்கும்.

இந்தத்  திரியின் நோக்கம், உறவுகள் தாங்கள் படித்த, தங்களை பாதித்த அல்லது தங்களுக்கு பிடித்த புத்தகத்தை இந்த திரியில் பதியுங்கள் தங்களின் பதிவு மற்ற உறவுகளுக்கு தாங்கள் அந்த புத்தகத்தை அறிமுகம் செய்ததைப் போல்  இருக்கட்டும்.
பதியும் முறை.  

1.புத்தகத்தின் பெயர் எழுதுயவரின் பெயருடன் (இது உங்கள் பதிவின் தலைப்பாக இருக்கட்டும்)

2. முன்னுரை (இது அந்த புத்தகம் எதை பற்றி பேசுகிறது என்றும், எந்த வகையில் அந்த புத்தகம் உங்களை பாதித்தது அல்லது எந்த கருத்து உங்களக்கு பிடித்தது என்றும் தங்களின் குறுகத்தறித்த வரிகளில் எழுதவும்.  முடிந்தால் ஒன்றிரண்டு  எடுத்துக் காட்டுகளை அந்த புத்தகத்தில் இருந்து எடுத்து காட்டலாம்)

3. முடிந்தால் அந்த புத்தகத்தின்  மின்னூலை இங்கு பதியுங்கள்

* ஆளுக்கு ஒரு புத்தகம் என்பதால் ஒரு புத்தகத்தோடு நிறுத்த வேண்டும் என்றல்ல, தாங்கள் எத்தனை புத்தகத்தை வேண்டுமானாலும் பதியலாம்.

*இது தாங்கள் தங்களின் வாழ்க்கையில் என்றோ வாசித்த புத்தகத்தை மீண்டும் திருப்பி பார்க்க ஒரு வாய்ப்பைத் தருவதாக இருக்கட்டும்

* உறவுகள் தங்கள் வாழ்த்தையும் பாராட்டையும் லைக் பொத்தான் மூலம் கூறவும், பதிவுகளில் வேண்டாம். இங்கு பதிவு என்றால் உங்களுடன் பயணித்த புத்தகம் பற்றியதாக இருக்கட்டும் என்பதை அன்புடன் கூறிக் கொள்கிறேன். பதிவருக்கு நன்றி கூறி பாராட்டியே  ஆக வேண்டும் என்றால் அவரின் தனி மடலில் கூறி விடுங்கள்  புன்னகை

*இந்த திரியை எனக்கு பிடித்த ஒரு புத்தகத்தோடு துவங்குகிறேன் கற்றோர் பலர் இருக்கும் இச்சபைதனில்

avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by பிஜிராமன் on Sun Jun 29, 2014 8:31 pm

அக்னிச்சிறகுகள் -திரு. ஆவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

இப்புத்தகம் யாவரும் அறிந்ததே அறிமுகம் தேவை இல்லை என்று நம்புகிறேன்.

எனக்கு பிடித்த இரண்டு கருத்துகள் இப்புத்தகத்தில் இருந்து, ஒரு கெட்ட மாணவன் சிறந்த ஆசானிடமும், ஒரு சிறந்த மாணவன் ஒரு கெட்ட ஆசானிடமும் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்பதும், ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பவர் வெற்றி தோல்வி சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இந்த புத்தகத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்


புத்தகம் தரவிறக்க : Agni Siragukal

தங்களின் பதிவுகளை தொடங்குங்கள் உறவுகளே
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by Dr.S.Soundarapandian on Mon Jun 30, 2014 12:35 pm

 மீண்டும் சந்திப்போம் 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4442
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by சதாசிவம் on Mon Jun 30, 2014 3:28 pm

[color:3db3=background: #ff0000]பயனுள்ள திரி தொடங்கியமைக்கு மிக்க நன்றி ராமன். புத்தகம் படிப்பது அரிதாகும் வரும் இவ்வேளையில் இதுபோன்ற பதிவுகள் மிகவும் அவசியம்.

சற்று வேலைப்பளு இருந்தும் தித்திக்கும் இப்பதிவில் என் பதிவை தங்களுக்கு அடுத்து பதிக்க விரும்புகிறேன்.

1997 களில் ஆனந்த விகடனில் வெளிவந்த லதா ரஜினிகாந்தின் கட்டுரைகளில் தொகுப்பாக வெளிவந்த "அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்" -பூம்புகார் பதிப்பகம் புத்தகத்தை பரிந்துரைக்க விரும்புகிறேன். நான் விரும்பி ரசித்து படித்த பல தொடர்களில் இதுவும் ஒன்று.

குழந்தை வளர்ப்பில் இந்தச் சமுதாயம், பெரியவர்கள், கல்விமுறை செய்யும் தவறுகளை நயமாக எடுத்துச் சொல்லும் புத்தகம் இது. என் நண்பர்களின் குழந்தைகள் பேசுவதில், கற்பதில் தாமதம் ஏற்படும் பொழுது அவர்களுக்கு நான் கூறும் முதல் அறிவுரை முதலில் நீங்கள் பாடம் படியுங்கள் குழந்தை வளர்ப்பது எப்படி என்று, பிறகு உங்கள் குழந்தையை படிக்கச் செய்யலாம். இப்புத்தகம் இதை அழகான கதைகளோடு மென்மையாக விளக்குகிறது.


என் வார்த்தைகளை விட இணையத்தில் இப்புத்தகம் குறித்த வார்த்தைகள். நன்றி omnibus .sasariri .com

இது குழந்தைகள் வாசிக்க வேண்டிய நூல் அன்று. குழந்தைகளைக் குழந்தைகளாக வாழவிடாமல் செய்ய பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பேசும் புத்தகம் இது. அந்தக் குழந்தைகள் இவ்வுலகில் குழந்தைகளாகவே உலவ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பேசுகிறது புத்தகம்.

Winning is Everything" என்னும் முரட்டுக் கலாசாரத்தைத்தான் நம் பள்ளிகள் கடைபிடிக்கின்றன. பெற்றோரான நாமும் அதனையே விரும்புகிறோம். நம் பெயரை நம் பிள்ளைகள் நம் சொந்த பந்தங்களிடையே காப்பாற்ற வேண்டும் என்று நாம் அவர்களை வீட்டினில் சாட்டை கொண்டு விரட்டுகிறோம். கல்வித்துறையில் தம் பள்ளியின் பெயரை நிலைநிறுத்த அதே சாட்டையைக் கொண்டு நம் பிள்ளைகளை இன்னொரு பக்கம் நின்றுபள்ளிகள் விரட்டுகின்றன. இந்த இரண்டு சாட்டைச் சொடுக்கல்களுக்கு இடையே நம் பிள்ளைகள் தவிப்பது பற்றிய லட்சியம் நம் இருவருக்குமே இல்லை.

இப்படியே பேசிக் கொண்டே போனால்? இவற்றுக்கெல்லாம் என்னதான் விமோசனம்? இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு ஒரு மாற்று சிந்தனையை மாற்று வடிவக் கல்விமுறையைக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?

அவற்றைப் பற்றியெல்லாம்தான் பேசுகிறது “லதா ரஜினி” 1997’ஆம் வருடம் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய “அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்”. தலைப்பே புத்தகம் பற்றிப் பேசிவிடுகிறது. சமூகத்தில் நாம் அவர்களுக்குத் தரமறுக்கும் அந்தஸ்தைப் பற்றி சொல்லிவிடுகிறது
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by சிவா on Mon Jun 30, 2014 4:08 pm

மிகவும் அருமையான திரி துவங்கியுள்ளீர்கள் பிஜிராமன்! நான் அதிகம் படிப்பது எம்.எஸ் உதயாமூர்த்தி மற்றும் சுகிசிவம் புத்தகங்கள்!

நிறைய புத்தங்களைப் படித்துள்ளேன்! அவற்றில் குறிப்பிட்டு ஒரு புத்தகம் கூற வேண்டுமெனில் உடனடியாக இயலவில்லை! மீண்டும் நன்கு நினைபடுத்தி வேறொரு நாள் கூறுகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by சதாசிவம் on Tue Jul 08, 2014 10:48 am

அடுத்த நான் சொல்ல இருக்கும் புத்தகத்தின் பெயர்
 
"ஆண்கள் செவ்வாய், பெண்கள் வெள்ளி" -
ஆசிரியர் - ரா கி ரங்கராஜன்
நர்மதா பதிப்பகம்.
 
Men  are  from  mars , women  are  from  venus  என்ற ஆங்கிலப் புத்தகத்தை தழுவி எழுதிய மொழிபெயர்ப்பு புத்தகம் இது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் உளவியல், உணர்வுரீதியான பிரச்னையை கையாள இப்புத்தகம் நன்கு உதவும்..
 
திருமணப் பரிசாக இப்புத்தகத்தை பல நண்பர்களுக்கு வழங்கியுள்ளேன்.
ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கும் அனைத்து கட்டுரைகளும் இடம் பெறாமல் போனாலும் அதன் சாரம்சத்தை ரா, கி ரா அழகாக வழங்கியுள்ளார்.
 
பருவ வயதில் இருக்கும் அனைவரும் படிக்கத் தகுதியான புத்தகம் இது.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by M.M.SENTHIL on Tue Jul 08, 2014 12:05 pm

எண்ணங்களை மேம்படுத்துங்கள் - Dr. எம்.ஆர். காப்மேயர்
"அமெரிக்காவின் வெற்றிகர - வெற்றிமுறை ஆலோசகர்"

தமிழி மொழி பெயர்த்தவர்: பி.சி. கணேசன்

இந்த புத்தகத்தைப் பற்றி:

---- இந்த நூலை நீங்கள் வாங்கினால் போதும் உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
---- இந்நூலில் என்பது அத்யாயங்கள் உள்ளன
---- அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்லவை
---- இன்னூலில் கூறப்படும் என்பது வழிமுறைகள் அனைத்தும் முன்பே நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள்
---- மாபெரும் சிந்தனையாளராக நீங்கள் மாற வேண்டுமா? வேண்டாமா? வேண்டும் என்றால் இதோ என்பது வழிகள் உங்களுக்காகவே திறந்து கிடக்கின்றன.

(இந்த நூலை நான் ஒருமுறை கோயமுத்தூர் ஒரு வேலையாக சென்றபோது வாங்கினேன், மிக மிக அற்புதமான கருத்துக்கள் அடங்கிய நூல், இதே நூலை எனது நண்பர்கள் எட்டு பேருக்கு பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளேன், விஜயா பதிப்பகத்தில் வாங்கியதாக நினைவு).


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by M.M.SENTHIL on Thu Jul 31, 2014 3:50 pm

ஒரு சிறகு போதும்

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை. இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆகவே, அவர்களுக்கும் வழிகாட்ட ஒருவர் தேவையாக இருக்கிறது. இளைஞர்கள் வாழ்க்கை ஆதாரத்துக்கு ஒரு வேலையைத் தேடிக்கொள்ளத்தான் வேண்டும். அவர்களும் வேலையைத் தேடி அலைகிறார்கள். ஒரு வேலைக்கு வேண்டிய ஆற்றல் என்னென்ன, ஒரு வேலையைப் பெறும் அளவுக்கு ஆற்றல்களை எளிதாக, சுலபமாக, அலட்டிக்கொள்ளாமல் வளர்த்துக் கொள்வது எப்படி, காம்படிட்டிவ் உலகத்தில் அதே ஆற்றலுடன் போட்டி போட்டுக்கொண்டு சக பந்தயக்காரர்கள் வந்தாலும் தாங்கள் ஒரு மாற்று அதிக பலத்துடன் வருவது எப்படி என்ற முன்னேற்ற வழிகளை நூல் ஆசிரியர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் பக்குவமாக எடுத்துச் சொல்கிறார். இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றப் பாதையைக் காட்டுகிறார். உண்மை, நேர்மை ஆகியவற்றை விட்டால்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்பதைத்தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அடிப்படைப் பண்புகளை விட்டு விடாமல் போட்டிகளில் ஜெயிக்க முடியும் என்று நம்பிக்கையை நூல் ஆசிரியர் ஊட்டுகிறார். அவர் ஏற்று நடத்திய பயிற்சிப் பாசறைகளில் இடம் பெற்ற கவர்ச்சியான போட்டிகள், அனுபவங்கள் ஆகியவற்றைக் கட்டுரையில் ஆங்காங்கே சொல்லியிருப்பது படிப்பதை விறுவிறுப்பாக்கி இருக்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by ayyasamy ram on Thu Jul 31, 2014 5:15 pm

 
-

-

-

செவ்வாய்க் கிரகத்தில இருந்த ஆண்கள் டெலஸ்கோப்
வைத்து வெள்ளிக் கிரகத்தைப் பார்த்தார்கள்.
அழகழகான பெண்களைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு
விண்வெளிக் கப்பலைத் தயார் செய்து வெள்ளிக்
கிரகத்தை அடைந்தார்கள்.

அங்கே கூடி மகிழ்ந்தவர்கள் பூமி என்கிற புதிய கிரகத்துக்கு
வந்தார்கள். ஆரம்பத்தில் எல்லாமே அற்புதமாயிருந்தது;
அழகாயிருந்தது. ஆனால் பூமியின் சுற்றுச்சூழல் அவர்களைப்
பாதித்தது. ஒருநாள் காலை விழிக்கையில் ‘அம்னீஷியா' என்ற
விசித்திரமான மறதி நோய் அவர்களைப் பற்றிக் கொண்டது.

செவ்வாய் ஆண்களுக்கும் சரி, வெள்ளிப் பெண்களுக்கும்
சரி தாங்கள் வெவ்வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்பது
மறந்து விட்டது. தங்களுடைய வேறுவேறு தன்மைகளை மீறி
நேசித்துக் கொண்டிருந்தது மொத்தமும் ஒரே இரவில் மறந்து
விட்டதில் அன்றுதொட்டு செவ்வாய் ஆண்களும்,
வெள்ளிப் பெண்களும் மோதிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.
-
இப்படி ஒரு தத்துவத்துடன் ஆரம்பிக்கிற புத்தகம்....
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by தமிழ்நேசன்1981 on Sat Sep 13, 2014 11:59 am

@ayyasamy ram wrote: 
-

-

-

செவ்வாய்க் கிரகத்தில இருந்த ஆண்கள் டெலஸ்கோப்
வைத்து வெள்ளிக் கிரகத்தைப் பார்த்தார்கள்.
அழகழகான பெண்களைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு
விண்வெளிக் கப்பலைத் தயார் செய்து வெள்ளிக்
கிரகத்தை அடைந்தார்கள்.

அங்கே கூடி மகிழ்ந்தவர்கள் பூமி என்கிற புதிய கிரகத்துக்கு
வந்தார்கள். ஆரம்பத்தில் எல்லாமே அற்புதமாயிருந்தது;
அழகாயிருந்தது. ஆனால் பூமியின் சுற்றுச்சூழல் அவர்களைப்
பாதித்தது. ஒருநாள் காலை விழிக்கையில் ‘அம்னீஷியா' என்ற
விசித்திரமான மறதி நோய் அவர்களைப் பற்றிக் கொண்டது.

செவ்வாய் ஆண்களுக்கும் சரி, வெள்ளிப் பெண்களுக்கும்
சரி தாங்கள் வெவ்வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்பது
மறந்து விட்டது. தங்களுடைய வேறுவேறு தன்மைகளை மீறி
நேசித்துக் கொண்டிருந்தது மொத்தமும் ஒரே இரவில் மறந்து
விட்டதில் அன்றுதொட்டு செவ்வாய் ஆண்களும்,
வெள்ளிப் பெண்களும் மோதிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.
-
இப்படி ஒரு தத்துவத்துடன் ஆரம்பிக்கிற புத்தகம்....
மேற்கோள் செய்த பதிவு: 1076729


இந்த புத்தகம் படித்திருக்கிறேன்..ரா.கி எழுத்துநடையில் படித்ததில்லை..ரா.கி-யின் இந்த புத்தகம் கிடைக்கும் முகவரி அறியத்தாருங்கள் நண்பர்களே..நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by சிவா on Tue Apr 14, 2015 11:35 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@ayyasamy ram wrote: 
-

-

-

செவ்வாய்க் கிரகத்தில இருந்த ஆண்கள் டெலஸ்கோப்
வைத்து வெள்ளிக் கிரகத்தைப் பார்த்தார்கள்.
அழகழகான பெண்களைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு
விண்வெளிக் கப்பலைத் தயார் செய்து வெள்ளிக்
கிரகத்தை அடைந்தார்கள்.

அங்கே கூடி மகிழ்ந்தவர்கள் பூமி என்கிற புதிய கிரகத்துக்கு
வந்தார்கள். ஆரம்பத்தில் எல்லாமே அற்புதமாயிருந்தது;
அழகாயிருந்தது. ஆனால் பூமியின் சுற்றுச்சூழல் அவர்களைப்
பாதித்தது. ஒருநாள் காலை விழிக்கையில் ‘அம்னீஷியா' என்ற
விசித்திரமான மறதி நோய் அவர்களைப் பற்றிக் கொண்டது.

செவ்வாய் ஆண்களுக்கும் சரி, வெள்ளிப் பெண்களுக்கும்
சரி தாங்கள் வெவ்வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்பது
மறந்து விட்டது. தங்களுடைய வேறுவேறு தன்மைகளை மீறி
நேசித்துக் கொண்டிருந்தது மொத்தமும் ஒரே இரவில் மறந்து
விட்டதில் அன்றுதொட்டு செவ்வாய் ஆண்களும்,
வெள்ளிப் பெண்களும் மோதிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.
-
இப்படி ஒரு தத்துவத்துடன் ஆரம்பிக்கிற புத்தகம்....
மேற்கோள் செய்த பதிவு: 1076729


இந்த புத்தகம் படித்திருக்கிறேன்..ரா.கி எழுத்துநடையில் படித்ததில்லை..ரா.கி-யின் இந்த புத்தகம் கிடைக்கும் முகவரி அறியத்தாருங்கள் நண்பர்களே..
மேற்கோள் செய்த பதிவு: 1087141

இந்தப் பதிவு தான் உள்ளது நேசன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by தமிழ்நேசன்1981 on Tue Apr 14, 2015 11:52 pm

நாவல் மழை- தொடர் பதிவு

இந்த தொடர் பதிவில் போட்டிருக்கிறேன் அண்ணா. அதை தனிப்பதிவாக பிரிக்க இயலுமா என்று தெரியவில்லையே.நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by selvibramma on Wed Apr 29, 2015 1:43 am

ப்ளீஸ் என்னையும் தமிழ்நேசன் ப்லொக்ச்பொட் ல்
இணைக்கவும்
avatar
selvibramma
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum