புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
68 Posts - 53%
heezulia
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
15 Posts - 3%
prajai
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
9 Posts - 2%
jairam
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சட்டம் ஒழுங்கு! Poll_c10சட்டம் ஒழுங்கு! Poll_m10சட்டம் ஒழுங்கு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் ஒழுங்கு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 8:06 pm

மக்களுக்கு நீதி, நேர்மையுடன் கடமையாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்து, பட்டம் பெற்று, எஸ்.ஐ., பணிக்கு வந்தார் பிர்லா போஸ்.

ஆனால், தன் எண்ணத்திற்கும், நடைமுறை வாழ்க்கைக்கும், பெரிய இடைவெளி இருப்பது கண்கூடாகத் தெரிந்தது. அந்த போலீஸ் ஸ்டேஷனில், அவரைத் தவிர, மற்ற அனைவரும் ஏதோ ஒரு வகையில், கையூட்டு வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
இதுல, அந்த ஏரியா சமூக விரோத கும்பலிடமிருந்து, மாதா மாதம் பெரிய தொகை மாமூலாக வரும். இன்றும் அதே போல், வந்த தொகையை அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்ட போது, பிர்லா போசின் பங்கு தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் வந்தது.
ரைட்டர் சண்முகநாதன் தான், ரெகுலராக பணத்தை வாங்கி, அனைவருக்கும் பிரித்துக் கொடுப்பவர்.

பிர்லா போஸ், தனியாக இருக்கும்போது, அவரிடம் விஷயத்தைக் கூறி, பணத்தை நீட்டினார் சண்முகநாதன். அதைப் பார்த்து அதிர்ந்து, அவரை ஏறிட்டுப் பார்த்தார் பிர்லா. அவர் பார்வையின் அர்த்தம் புரிந்த சண்முகநாதன், ''இதில யாரையும் குறை சொல்ல முடியாது சார். இதில, 'டாப் டு பாட்டம்' எல்லாருக்குமே பங்கு இருக்கு. நீங்க இதை வேண்டாம்ன்னு சொல்லக் கூடாது. அது எல்லாரையுமே பாதிக்கும். இன்னும் தெளிவா சொல்லணும்னா... உங்க உயிருக்கே ஆபத்தாயிடும். உங்க நேர்மையான குணம் தெரிஞ்சதால தான், இதை சொல்றேன்,''என்றார்.

''நீங்க சொல்றது எனக்கு புரியுது சார். ஆனா, நான் இந்த பணத்த தொட விரும்பல. அதனால, இந்தப் பணத்த ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு நன்கொடையா கொடுத்துருங்க. இந்த விஷயம் மத்தவங்களுக்கு தெரிய வேணாம்,'' என்றார் பிர்லா.
''அப்படியே செய்துடுறேன் சார்.''

''அப்புறம் இன்னொரு விஷயம்... உங்களுக்கு தெரிஞ்சு, மாமூல் வாங்காத ஸ்டேஷன் எதாவது இருக்குதா?''என்று கேட்டார் பிர்லா.
''ஒரே ஒரு ஸ்டேஷன் இருக்கு சார். ஆனா, அங்க யாருமே போக விரும்ப மாட்டாங்க. அந்த ஸ்டேஷனுக்கு, பனிஷ்மென்ட் ஸ்டேஷன்னு பேரு.''

''அப்படின்னா... என்னை அங்க மாத்த, உங்களால ஏற்பாடு செய்ய முடியுமா?''
''அது ரொம்ப சுலபம் சார். அங்க இருக்கிற, எஸ்.ஐ., எப்படா வேற ஸ்டேஷனுக்கு போவோம்ன்னு காத்திருக்காரு. நீங்க சொல்லிட்டீங்க இல்ல. நான் பேச வேண்டியவங்கிட்ட, உங்க மன நிலைய எடுத்துச் சொல்லி, அங்கேயே டிரான்ஸ்பர் வாங்கி தர்றேன்,'' என்று, உறுதி கூறினார்.

அவர் சொன்னது போலவே, ஒரு மாதத்தில், அவர் விரும்பிக் கேட்ட ஸ்டேஷனுக்கு இட மாற்றம் கிடைத்து.
அன்று, பிர்லா போசுக்கு, ஒரு சோதனையான நாள் என்று தான் சொல்ல வேண்டும். மறுநாள், தேர்தல் நடக்கவிருப்பதால், பாதுகாப்பு குறித்து, மற்ற காவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு கான்ஸ்டபிள் உள்ளே வந்து, ''ஐயா... உங்களப் பாக்க, ம.கொ.,கட்சியின் மாவட்ட தலைவர் மாடசாமி வந்திருக்கார். இவரு போலீஸ் மந்திரிக்கு வலது கை மாதிரி,'' என்று, எச்சரிக்கை உணர்வோடு, விவரத்தைக் கூறினார்.

''சரி; நீங்க எல்லாரும், கொஞ்ச நேரம் வெளியே இருங்க. அவர வரச் சொல்லுங்க,'' என்றார் பிர்லா.
இதற்குள் மாடசாமியே உள்ளே வர, அனைவரும் கும்பிடு போட்டபடி வெளியேறினர்.
பந்தாவாக நாற்காலியில் அமர்ந்த மாடசாமி, ''நான் யாருன்னு சொல்லியிருப்பாங்களே,'' என்றார் தோரணையுடன்.
''ஆமா சொன்னாங்க; நீங்க வந்த விஷயத்த சொல்லுங்க.''

''தலைவர் இத உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாரு,'' என்று கூறி, சுற்று முற்றும் பார்த்தபடி, ஒரு பேப்பரை எடுத்து, அவரிடம் நீட்டினார்.
அதை, வாங்கிப் பார்த்த பிர்லா போசுக்கு, ஒன்றும் புரியவில்லை. அந்த ஏரியாவிலுள்ள பதினைந்து போக்கிரிகளின் பெயரும், அவர்களது முகவரியும் இருந்தது.மாடசாமி தொடர்ந்தார்...''சார், நாளைக்கு தேர்தல் நடக்கிற போது, இவங்க எல்லாருமே, மூணு ஏரியாவுல கலாட்டா செய்ய இருக்காங்க,''என்றார்.

''கவலப்படாதீங்க. அத்தன பேரயும் புடிச்சி உள்ள போட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்துடுறேன்,''என்றார்.
''நாசமா போச்சு; இவங்களெல்லாம் நம்ம ஆளுங்க சார். இந்த ஏரியாவுல, யாரும் நம்ப கட்சிக்கு ஓட்டுப் போடுறது இல்ல. அதனால, காலையிலேயே கலாட்டாவ ஆரம்பிச்சிட்டா, ஒரு பயலும் ஓட்டுப் போட வர மாட்டான். அதான், கலாட்டா செய்யப் போறவங்க லிஸ்ட உங்ககிட்ட கொடுத்திருக்கோம். யாராவது புகார் செய்தா, நீங்க இவங்க மேல நடவடிக்க எடுக்கக் கூடாது. அவங்க கலாட்டா செய்ற போது, நீங்க யாரும் அந்தப் பக்கமே போயிடக் கூடாது. அப்பத்தான் எங்க வேல ஈசியா முடியும்.''
''இது சட்டம் - ஒழுங்கு பிரச்னை. நீங்க செய்ய நினைக்கிறது சட்டப்படி குற்றமாச்சே சார்...''

''அதனால தான், சட்டத்த காக்க வேண்டிய உங்க உதவியோடு, இதை அரங்கேற்ற நினைக்கிறாரு நம்ம தலைவரு.''
இவன்கிட்ட பேசி, எந்த பயனும் இல்லை என்பதால், ''அப்படியே ஆகட்டும் சார். நீங்க போயிட்டு வாங்க,'' என்றார்.
நாற்காலியிலிருந்து எழுந்த மாடசாமி, ஏதோ ஞாபகம் வந்தவராக, மடியிலிருந்து, ஒரு கவரை எடுத்து, ''இதில ஒரு லட்ச ரூபா பணம் இருக்கு. எல்லாம் ஒரு சின்ன அன்பளிப்பு தான்,'' என்று கூறி, பெரிய கும்பிடு போட்டு வெளியேறினார்.

அவர் போனதும், காவலர்கள் அனைவரும், அவரது அறைக்கு வந்தனர். அவர்களில் சீனியர் ஒருவர், ''அவர் பேசினது, எங்க காதுல விழுந்தது சார். என்ன தான் பவர்ல இருந்தாலும், ஆட்சியைப் பிடிக்க இப்படியா செய்வாங்க...'' என்றார்.
''கவலைப்படாதீங்க சார். நாம சிவில் சர்வன்ட்ஸ்; ரிட்டையர் ஆகறவரை, நாம பதவியில இருப்போம். நாளைக்கே தேர்தல்ல தோத்தா, இவங்க இருக்குற இடமே தெரியாது. நம்ப ஒத்துழைப்பு இல்லாம, இவங்களால எதுவுமே செய்ய முடியாது. நியாயமும், தர்மமும் நம்ம பக்கம் இருக்ற போது, இவங்களுக்கு பணிஞ்சு போகணும்ன்னு அவசியம் இல்ல,''என்றார் மற்றொருவர்.
''இப்ப என்ன சார் செய்யப் போறீங்க?''என்று கேட்டார் ஒரு கான்ஸ்டபிள்.

''சொல்றேன்... இந்த பதினைஞ்சு பேரோட அலைபேசி எண்ணும் இதுல இருக்கு. இவங்க எல்லாரையும் இன்னைக்கு ராத்திரி, 10:00 மணிக்கு, நம்ப ஸ்டேஷனுக்கு, முக்கியமான விஷயம் பேசணும்ன்னு வரச் சொல்லுங்க. மேலிடத்திலிருந்து, அவங்களுக்கும் தகவல் போயிருக்கும். அதனால, கூப்பிட்ட உடனே வந்துடுவாங்க. அப்புறம் சட்டம் - ஒழுங்கை எப்படி கட்டுபடுத்தறேன்னு பாருங்க.''
பிர்லா போஸ், எதிர்பார்த்தபடியே எல்லா போக்கிரிகளும், இரவு 10:00 மணிக்கு, ஸ்டேஷனுக்கு வந்து விட்டனர்.
''நாளைக்கு, நீங்க கலாட்டா செய்யப் போற இடங்களோட விபரம் எல்லாம் தெரியும் தானே,''என்று கேட்டார் பிர்லா.
''தெரியும் சார். மந்திரி, பி.ஏ.,வே கூப்பிட்டு சொல்லிட்டாரு. போலீஸ் பாதுகாப்பு தருவீங்கன்னும் சொன்னாரு,'' என்றான் அவர்களுக்கு தலைவன் போன்றிருந்த ஒருவன்.

''அதுல தான் எனக்கு சந்தேகமே வருது. உங்க தலைவருக்குத் தெரியாம, எதிர்க்கட்சிகாரங்க வெளியூரிலிருந்து, 50 பேரை கொண்டு வந்து, கல்யாண மண்டபத்துல தங்க வச்சிருக்காங்க. நீங்க கலாட்டா ஆரம்பிக்கும்போது, உங்களப் போட்டுத் தள்ள, அவங்க ரெடியா இருக்குறதா எனக்குத் தகவல் வந்துருக்கு. இப்ப நான் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, உங்களயும் காப்பாத்தியாகணுமே...''என்றார்.
''அமைச்சர் கிட்ட பேசிப் பாக்கலாமா சார்.''

''வேண்டாம்; பிரச்னை இன்னும் பெரிசாயிடும். அவங்களுக்கு ஓட்டு தான் முக்கியம். உங்க உயிர் இல்ல. மக்கள் ஓட்டு போடுறத தடுக்கிறதுல, உங்களுக்கு எந்த லாபமும் இல்ல. லாபம் இல்லாத, ஒரு வேலையில இறங்கி, நீங்க ஏன், 'ரிஸ்க்' எடுக்கணும் என்கிறது தான், இப்ப என் யோசன,''என்றார்.
'அதானே...' என்றனர் கோரசாக.
''உங்க உயிரக் காப்பாற்ற நான் ஒரு ஐடியா சொல்றேன்; கேட்குறீங்களா?''
''சொல்லுங்க சார்...''

''இந்த கவர்ல, ஒரு லட்ச ரூபா இருக்கு. இத செலவுக்கு வச்சுக்கங்க. இந்த நிமிசத்துல இருந்து, உங்க அலைபேசியை, ஆப் செய்திடுங்க. இன்று இரவே, எல்லாரும் திருப்பதிக்கு போயிடுங்க. நாளை முழுவதும் அங்கேயிருந்துட்டு தேர்தல் முடிஞ்சதும் வாங்க.''
''நல்ல ஐடியா சார்; எங்க பேமிலியோட போகலாமா சார்.''
''அது இன்னும் பெட்டர். குடும்பத்தோடு போயிட்டு நிம்மதியா இருந்துட்டு வாங்க,'' என்று கூறி, வழியனுப்பி வைத்தார்.
அடுத்த நாள், தேர்தல் அமைதியாக நடந்தது.
காவலர்கள், பிர்லாவை பாராட்டினர்.

''சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, சில சமயங்களில் சமயோசிதமாக நடந்துக்கணும். ஏன்னா, நாம பொது மக்களோட சேவகர்கள்,'' என்று பிர்லா பேசிய போது, அனைவரும் கை தட்டினர்.
தேசத்தந்தை, புகைப்படத்தில் புன்னகைத்தபடி இருந்தார்.

மல்லிகை மணாளன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 06, 2014 8:16 pm

வரவு வந்த லட்ச ரூபாயில் கமிஷன்
எடுத்துகொள்ளாத நல்ல மனதுள்ள
போலீஸ்காரர்...!
-
 சட்டம் ஒழுங்கு! 3838410834 
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக