ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருமணம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

ட்யூஷன் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வயசு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

கவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
 Meeran


 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரேசில் – ஜெர்மனி முதல் அரையிறுதியில் பலப்பரீட்சை

View previous topic View next topic Go down

பிரேசில் – ஜெர்மனி முதல் அரையிறுதியில் பலப்பரீட்சை

Post by saski on Tue Jul 08, 2014 6:44 pm

பிரேசில் – ஜெர்மனி முதல் அரையிறுதியில் பலப்பரீட்சைஉலகமே பெரும் ஆவலுடன் கண்டுகளித்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த உலக சாம்பியன் யார் என்ற கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.

மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை போட்டியில் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டீனா, நெதர்லாந்து ஆகிய பலம் வாய்ந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த அணிகள் அனைத்துமே இதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை.

புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பெலோ ஹாரிசோன்ட் நகரில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரேசில், ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்துள்ளது. உள்ளூரில் போட்டி நடைபெறுவதால் கோப்பையை வென்று தங்கள் நாட்டு ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பிரேசில் உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் திறமையும் வேகமும் அந்த அணிக்கு உண்டு என்பது முந்தைய போட்டிகளில் நிரூபணமாகியுள்ளது.

ஏனெனில் காலிறுதி ஆட்டத்தில் அதிகபட்சமாக 2 கோல்கள் அடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ள அணி பிரேசில் மட்டுமே. ஜெர்மனி, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகள் காலிறுதியில் ஒரு கோல் மட்டுமே அடித்து வெற்றி பெற்றன. நெதர்லாந்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதற்கு முந்தைய மோதல்கள்

இப்போது பிரேசில், ஜெர்மனி ஆகிய இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்றாலும் கால்பந்து வரலாறு பிரேசிலுக்கு சாதகமாகவே இருக்கிறது. இரு அணிகளும் இதற்கு முன்பு 21 முறை விளையாடியுள்ளன. இதில் பிரேசில் 12 ஆட்டங்களிலும், ஜெர்மனி 4 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக பிரேசில் 39 கோல்களை அடித்துள்ளது. ஜெர்மனி 24 கோல்களை எடுத்துள்ளது.

உலகக் கோப்பையில்..

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரு அணிகளும் இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் மோதியுள்ளன. ஜப்பானில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்று சாம்பியன் ஆனது. அந்த ஆட்டத்தில் ரொனால்டோ பிரேசிலுக்காக 2 கோல்களையும் அடித்தார்.

அதன் பிறகு இப்போதுதான் பிரேசிலும் ஜெர்மனியும் உலகக் கோப்பை போட்டியில் மோதுகின்றன. எனவே இந்த அரையிறுதி ஆட்டத்தில் அதற்கு பதிலடி கொடுக்க ஜெர்மனி வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள்.பெடரேஷன் கோப்பையில்..

பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியிலும் பிரேசில் அணிதான் ஜெர்மனியை இருமுறை வென்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புரீதியிலான ஆட்டத்தில் 9 முறை பிரேசில் வென்றுள்ளது. 5 முறை ஜெர்மனி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் கடைசியாக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியின் ஸ்டர்காட்டில் நடைபெற்ற போட்டியில் விளையாடின. இதில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.நீண்ட நாள் கனவு

இதற்கு முன்பு பிரேசில் அணி 5 முறை (1958, 1962, 1970, 1994, 2002-ம் ஆண்டு) உலகக் -கோப்பையை வென்றுள்ளது. ஜெர்மனி மூன்று முறை (1954, 1974, 1990-ம் ஆண்டு) உலக சாம்பியனாகியுள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அணி என்றாலும் உலகக் கோப்பையை வெல்வது என்பது 1990-க்குப் பின் ஜெர்மனி அணியின் நீண்ட நாள் கனவாக உள்ளது. மேலும் இப்போது 4-வதுமுறையாக ஜெர்மனி அரையிறுதிக்கு வந்துள்ளது.

இதற்கு முந்தைய இரு உலகக் கோப்பையிலும் (2006, 2010) ஜெர்மனியால் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அதற்குமுந்தைய உலகக் கோப்பையில் (2002) பிரேசிலிடம் உலகக் கோப்பையை நழுவ விட்டது. எனவே தங்கள் நாட்டின் கால்பந்து வரலாற்றில் இந்த அரையிறுதி போட்டி நடைபெறும் நாள் மிகவும் முக்கியமானது என்ற கவனத்துடன் ஜெர்மனி வீரர்கள் களமிறங்குவார்கள்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல் அடித்த அணிகள் பட்டியலில் பிரேசிலும்,ஜெர்மனியும் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இரு அணிகளும் இதுவரை 10 கோல்கள் அடித்துள்ளன. நெதர்லாந்து, கொலம்பியா அணிகள் தலா 12 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளன.ஜெர்மனியின் பலம்

முன்கள வீரர் தாமஸ் முல்லர், கேப்டன் பிலிப் லாம் ஆகியோர் ஜெர்மனி அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளனர். முல்லர் இதுவரை 4 கோல் அடித்து இந்த போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். பிரேசில் அணியின் நெய்மரும் இதுவரை 4 கோல் அடித்துள்ளார். ஆனால் காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் சகவீரர்கள் கோல் அடிப்பதற்கு உதவியாக பந்தை கடத்தி தருவதில் சிறப்பாக செயல்பட்டு வருவது ஜெர்மனி கேப்டன் ஜெர்மனி பிலிப் லாம். இதுவரை 408 “பாஸ்களை” அவர் சகவீரர்களுக்கு அளித்துள்ளார். இதில் 86.6 சதவீதம் மிகத் துல்லியமானதாக அமைந்தது. காய்ச்சலில் இருந்து விடுபட்டு காலிறுதியில் களமிறங்கிய மேட்ஸ் ஹம்மல்ஸ் பிரான்ஸுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இக்கட்டான நேரத்தில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்களை பெற்றுள்ளது ஜெர்மனியின் பலம்.

பிரேசிலின் சிக்கல்

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சொந்த மண்ணில் களமிறங்குவது பிரேசில் அணிக்கு மிகப்பெரிய பலம் என்றாலும், நட்சத்திர வீரர் நெய்மர், கேப்டன் தியாகோ சில்வா ஆகியோர் விளையாட முடியாத நிலை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பிரேசில் பெற்ற வெற்றிகளில் நெய்மர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அவர் 4 கோல்களை அடித்துள்ளார்.

கேப்டன் தியாகோ சில்வா இருமுறை மஞ்சள் அட்டை பெற்றுள்ளதால் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவரை களமிறக்க வேண்டும் என்ற நோக்கில் ஃபிபாவிடம் பிரேசில் அணி முறையீடு செய்துள்ளது. ஆனால் அவரை களமிறக்க அனுமதி கிடைக்காது என்றே தெரிகிறது.

பிரேசில் அணியை சுட்டிக்காட்டி ஜெர்மனியின் நடுகள வீரர் பாஸ்டியன் ஸ்வைன்ஸ்டைகர் அளித்துள்ள பேட்டியிலும் பிரேசில் அணியின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

“பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு சவாலானதுதான் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் 2002 உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் அணியில் அற்புதங்களை நிகழ்த்தும் வீரர்கள் (ரொனால்டோ, ரொனால்டினோ, ரிவால்டோ) இருந்தனர். ஆனால் இப்போது அதுபோன்ற வீரர்கள் இல்லை. சிறப்பாக விளையாடி வந்த நெய்மர் வெளியேறிவிட்டது, அவர்களுக்கு துரதிருஷ்டம்” என்று பாஸ்டியன் கூறியுள்ளார்.

எனினும் பிரேசில் அணி எளிதில் விட்டுக் கொடுத்துவிடக் கூடிய அணி அல்ல. ஹல்க், ஆஸ்கர், லூயிஸ், ஃபிரட் ஆகியோர் கடந்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியுள்ளனர். எதிர்பார்ப்புகளும் கணிப்புகளும் எப்படி இருந்தாலும், களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக ஆடும் அணிக்கே வெற்றி கிடைக்கும்.-ஏஎப்பி/ ராய்ட்டர்ஸ்

கோல் கீப்பர்கள்

ஒரு அணியின் வெற்றிக்கு கோல் அடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் எதிரணியை கோல் எடுக்கவிடாமல் தடுப்பது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பையில் கோல் கீப்பர்களின் திறமை அபரிமிதமாக வெளிப்பட்டுள்ளது. பல ஆட்டங்களில் கோல் கீப்பர்களே அணியைக் கரை சேர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜெர்மனி அணியின் கோல் கீப்பர் மானுவேல் நியார், பிரேசில் அணியின் ஜூலீயோ சீசர் ஆகியோர் அரையிறுதி ஆட்டத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கோல் கீப்பர் மானுவேல். பலம் வாய்ந்த பிரான்ஸ் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அந்த அணி வீரர்களின் அனைத்து கோல் முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்த பெருமைக்குரியவர் மானுவேல்.இதுவரை நடைபெற்ற 5 ஆட்டங்களில் மானுவேலை மீறி எதிரணியால் 3 கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே பிரேசில் அணிக்கு எதிராகவும் அவர் இரும்பு அரணாக செயல்பட்டு அணியைக் காப்பாற்றுவார் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரத்தில் பிரேசில் அணி அரையிறுதிவரை முன்னேற முக்கிய காரணமாக இருந்தவர் கோல் கீப்பர் ஜூலீயோ சீசர் என்றால் அது மிகையாகாது. முக்கியமாக சிலி அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் இரு கோல்களை தடுத்து அணியை காலிறுதிக்கு அழைத்துச் சென்றவர் ஜூலியோ சீசர். 34-வயதாகும் சீசர், அணியின் சகவீரர்களும், பயிற்சியாளரும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இதுவரை விளையாடி வந்துள்ளார். பிரேசிலின் பாதுகாப்பு அரணாக இருக்கும் அவரைத் தாண்டி இதுவரை 4 கோல்கள் மட்டுமே சென்றுள்ளன. இது தவிர சிலி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் சீசரை மீறி 2 கோல்களை அடித்துள்ளது.
avatar
saski
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum