ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

புதிய சமயங்கள்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்

View previous topic View next topic Go down

சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்

Post by சிவா on Thu Jul 17, 2014 2:58 am

'சுதாகரன் திருமணத்தை வாழ்த்த அழைக்கப்பட்டதால் ஜெயலலிதா சென்றார்!''


''சுதாகரன் கல்யாணத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி கரகாட்ட கோஷ்டிக்கு கொடுத்த தொகை முதல் கட்-அவுட்கள் வைக்க செலவு செய்த தொகை வரை பெண் வீட்டாரும், கட்சிக்காரர்களும் செலவு செய்தார்களே தவிர இந்தச் செலவுகளுக்கும் என் கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது''- பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் எடுத்துவைத்த இறுதி வாதம் இது.

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் அசோகன், சீனிவாசன், அன்புக்கரசு, பன்னீர்செல்வம் ஆகியோர் மூத்த வழக்கறிஞர் குமாருடன் அவருக்கான பாயின்ட்களை எடுத்துக் கொடுக்கிறார்கள். குமாரின் வாதம் முடிந்ததும் சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் தன்னுடைய இறுதி வாதத்தை தொடங்க இருப்பதால் அவர் அதற்கான ஆயத்தப் பணிகளில் மூழ்கியுள்ளார். அதனால் அவர் நீதிமன்றத்துக்கு வருவதில்லை. இந்த வழக்கின் போக்கை கவனித்து வந்த தி.மு.க வழக்கறிஞர்களும் இப்போது நீதிமன்றத்துக்கு வருவதே இல்லை. 17 நாட்களைக் கடந்தும் தொடரும் வழக்கறிஞர் குமாரின் வாதத்தில் இருந்து....

பாஸ்கரன் கொடுத்த வெள்ளித்தட்டு!

''சுதாகரனுக்கும், சத்தியலட்சுமிக்கும் 7.9.1995-ல் திருமணம் நடந்தது. அன்று மணமக்களை வாழ்த்துவதற்காக அப்போதைய தமிழக முதல்வராக இருந்த என் மனுதாரர் ஜெயலலிதா அழைக்கப்பட்டார். மணமக்களை வாழ்த்த அவர் அங்கு வருவதைத் தெரிந்துகொண்ட அ.தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் அவரை வரவேற்க சென்னை எம்.ஆர்.சி நகர் சாலைகளில் அலங்கார வளைவுகளையும், பேனர்களையும் வைத்ததோடு சில இடங்களில் விருந்து நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருமணப் பந்தலுக்கு 5,21,23,532 ரூபாய் செலவு ஆனதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த அலங்காரப் பந்தலை சினிமா துறையில் புகழ்பெற்ற சினி ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி அமைத்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. 1999-ல் வருமானவரித் துறை அறிக்கையில் தோட்டா தரணி, 'எனக்கு இரண்டு குடும்பத்தினரும் வேண்டப்பட்டவர்கள். அதனால் நான் பணம் எதுவும் வாங்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தொண்டர்களுக்கு வழங்கிய சாப்பாடு, மினரல் வாட்டர், தாம்பூலத்துக்கான செலவுகளை சிலர் ஏற்றுக்கொண்டதற்கு ஏற்கெனவே சாட்சியம் அளித்துள்ளனர். திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய வி.ஐ.பி-களுக்கு 100 வெள்ளித்தட்டுகளை சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன் வாங்கிக் கொடுத்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.''

ஏ.ஆர்.ரஹ்மான் பணம் வாங்கவில்லை!

''திருமணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியும், மாண்டலின் சீனிவாசனின் சங்கீத நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. சிவாஜி குடும்பத்து விழா என்பதால் அந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் பணம் எதுவும் வாங்கவில்லை என்று சாட்சியளித்துள்ளனர். கன்னியாகுமரி கரகாட்டக் கலைஞர்களுக்கு ராம்குமார் 7,000 ரூபாய்க்கு செக் கொடுத்துள்ளார். இப்படி திருமணத்துக்குப் பலரும் செலவு செய்திருக்க... அத்தனையும் என் கட்சிக்காரர் ஜெயலலிதா செய்ததாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பானது.''

''சிவாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டதா?''

''வி.என்.சுகாதரனின் திருமணத்துக்கு 6 கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது தவறானது. திருமணத்துக்கான செலவுகளை யார் செய்தது என்பதை கடந்த மூன்று நாட்களாக குறிப்பிட்டுள்ளேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத் திருமணம் என்பதால் அவரது குடும்பத்தினர் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினர். சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு சிவாஜியின் இரண்டாவது மகன் பிரபு நடித்த படங்களை வெளிநாடுகளில் விநியோகம் செய்ததன் மூலம் கிடைத்த பணம் முழுவதும் இந்தத் திருமணத்துக்காக செலவு செய்துள்ளனர். இதை அவர்கள் நீதிமன்றத்திலும் சாட்சியம் அளித்துள்ளனர்'' என்று குமார் சொல்லிக்கொண்டு போக... நீதிபதி குன்ஹா குறுக்கிட்டார். ''இந்தத் திருமணம் நடைப்பெற்ற சமயத்தில் சிவாஜி உயிரோடு இருந்தாரா?'' என்று கேட்டதும், குமார் சற்று தயக்கத்துடன் யோசித்தார். அரசு வழக்கறிஞர் மராடி எழுந்து, ''சிவாஜி உயிரோடு இருந்தார்'' என்றார். நீதிபதி, ''வழக்கு சம்பந்தமாக சிவாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டதா?'' என்று கேட்டார். அதற்கு குமார், ''இல்லை!'' என்று சொன்னார்.

''நகைகளை வைக்க தலைமை கழகத்தில் இடம் இல்லை!''

''என் கட்சிக்காரர் ஜெயலலிதாவிடம் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 871 விதமான தங்க ஆபரணங்கள் இருந்தது. 1987-88-ல் 7 கிலோ 56 கிராமும், 1988-89-ல் 1 கிலோ 26 கிராமும், 1989-90-ல் 4 கிலோ 312 கிராமும், 1990-91-ல் 8 கிலோ 385 கிராமும் வாங்கியிருந்தார். மொத்தம் 4 ஆண்டுகளில் 21 கிலோ 280 கிராம் தங்க ஆபரணங்கள் வைத்திருந்தார். ஆக, இந்த நகைகள் அனைத்தும் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை. இதற்கு முறையாக வருமான வரியும் கட்டியுள்ளார்.

வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, 30.3.1991-ல் 1 கிலோ 931 கிராம் தங்க ஆபரணங்கள் வைத்திருந்தார். இவையும் வழக்கு காலத்துக்கு முன்பு வாங்கப்பட்டது. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 468 வகையான நகைகளில் 1992-ம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு அப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தங்க படகும், செங்கோட்டையன் இரட்டை இலையும் , கண்ணப்பன், அழகு திருநாவுக்கரசு என 27 பேர் தங்க மாம்பழம், தங்கவேல் என்பவர் தங்க பேனா என 27 வகையான நகைகள் கொடுத்தார்கள். இதன் மதிப்பு 3 கிலோ 365 கிராம். இந்த நகைகள் அனைத்தும் கட்சிக்கு சொந்தமானது. தலைமைக் கழகத்தில் வைக்க இடம் இல்லை என்பதால் ஜெயலலிதா வீட்டில் வைத்திருந்தார்கள். எனவே இதையும் ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

சுதாகரனின் திருமணத்துக்கு ஜெயலலிதா பரிசாக 11,94,381.50 ரூபாய் மதிப்புள்ள 777 கிராம் தங்கம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறவர்கள் அதைக் கைப்பற்றவில்லை. கோர்ட்டில் குறியீடு செய்யவும் இல்லை. அதனால் இந்த வழக்கில் அந்தத் தொகையையும் கணக்கில்கொள்ளக் கூடாது. ஆக மொத்தத்தில் என் கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே 27 கிலோ 588 கிராம் தங்க நகைகள் இருந்தது என்பது தவறானது.''

''1250 கிலோ வெள்ளி ஜெயலலிதா வைத்திருந்தார்!''

''போயஸ் கார்டனின் 1116 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றியதாக கோர்ட்டில் ஒப்படைத்திருக்கிறார்கள். இதன் மதிப்பு 48,80,000 ரூபாய் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் என் மனுதாரரிடம் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 1250 கிலோ வெள்ளிப் பொருட்கள் வைத்திருந்தார். அதை வருமானவரித் துறையில் தாக்கல் செய்து வரியும் கட்டியுள்ளார். வருமானவரி தீர்ப்பாயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீர்ப்பும் வழங்கியுள்ளது'' என்று குமார் சொல்ல... நீதிபதி குறுக்கிட்டு, ''அந்த உத்தரவை வைத்து இந்த வழக்குக்குத் தடை வாங்கி இருக்கலாமே?'' என்று கேட்க, ''அந்த காலகட்டத்தில் தடை வாங்கவில்லை'' என்றார் குமார்.

''விவசாயம் செய்தார் ஜெயலலிதா!''

''நல்லம நாயுடு தலைமையில் செயல்பட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் என் கட்சிக்காரரின் சொத்து மதிப்பை மிகைப்படுத்தி காட்டினார்கள். ஆனால், அவருக்கு விவசாய நிலத்தில் கிடைத்த வருவாய்களை திட்டமிட்டு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.

ஹைதராபாத் திராட்சை தோட்டம் மற்றும் அதே மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பஷிராபாத்தில் உள்ள விவசாய நிலங்களில் விளைந்த திராட்சை, கத்திரி, வாழை, தேங்காய், மாம்பழம், சீத்தாபழம், பப்பாளி பழங்கள் விவசாயம் செய்ததில் 1992-93-ம் ஆண்டில் கிடைத்த வருமானம் 9,50,000 ரூபாய். 1993-94-ல் கிடைத்த வருமானம் 10,50,000 ரூபாய். 1994-95- ல் கிடைத்த வருமானம் 11,00,000 ரூபாய். 1995-96-ல் கிடைத்த வருமானம் 10,00,000 ரூபாய். 1996-97-ல் கிடைத்த வருமானம் 11,50,000 ரூபாய். ஆக வழக்கு நடைபெறும் ஐந்து ஆண்டுகளில் விவசாய நிலத்தில் கிடைத்த மொத்த வருமானம் 52,50,000 ரூபாய். ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 5 வருடங்களில் இந்த நிலங்களில் கிடைத்த வருமானமாக 5,78,340 ரூபாயாக குறைத்து மதிப்பிட்டுள்ளனர்'' என்று வாதிட்டார்.

அத்தனையும் உன்னிப்பாகக் கவனித்து குறித்துக்கொண்டார் நீதிபதி குன்ஹா. குமார் விவாதம் இன்னும் தொடர்கிறது!

விகடன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்

Post by யினியவன் on Thu Jul 17, 2014 10:09 am

கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி அம்மா விவசாயி புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்

Post by சதாசிவம் on Thu Jul 17, 2014 10:52 am

இச்சம்பவத்தை வருடாவருடம் நினைத்து நினைவு நாள் கொண்டாடுவதால் இவ்வுலகில் எதுவும் மாறிவிடாது.

அடிப்படை பாதுகாப்பு, தீ தடுப்பு, தீ அணைப்பு போன்ற தகவல்களை மக்கள் தேடியறிய வேண்டும். செல்போனில் என்ன என்ன இருக்கிறது என்று தேடித்திரியும் நாம், ஒரு சராசரி வீட்டில் என்ன என்ன பாதுகாப்பு கருவிகள் இருக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை. இன்றைக்கும் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தேவையான பாதுகாப்பு வசதிகள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை,

துருப்பிடித்த விளையாட்டுத் திடல், பாதுகாப்பற்ற மாடிப்படிகள், திறந்த பால்கனிகள், பழைய மின்சார ஒயர்கள் என்று பல பள்ளிக்கூடங்கள் இன்றைக்கைக்கும் செயல்படுகிறது. தினம் தினம் வழிபாட்டுப் பாடல்கள் நடத்தும் பள்ளியில், மாதம் ஒருமுறையாவது ஆபத்து கால வெளியேறும் பயிற்சிகள் நடைபெறுகிறதா ? பள்ளியில் முதலுதவி, தீயணைப்பில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை, போதுமான தீயணைப்பு கருவிகள் உள்ளதா என்று நமக்குத் தெரியுமா ?

பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் பொழுது ஒவ்வொரு பெற்றோரும் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு சேர்த்தாலே போதும். இதுபோன்ற பலிகள் குறையும்.

மெழுகுவர்த்திகளால் இப்பிஞ்சுகளின் ஆத்மா சாந்தி அடையாது.. இது போன்ற மற்றொரு நிகழ்வுகள் நடைபெறாத வகையில் நாடு வளர்ந்தால் மட்டுமே சாந்தி அடையும்.

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்

Post by ஈகரையன் on Thu Jul 17, 2014 1:00 pm

இன்னுமொரு சிந்துபாத் - கன்னித்தீவு கதை.
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum