புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10 
146 Posts - 57%
heezulia
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10 
9 Posts - 4%
prajai
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10 
1 Post - 0%
Geethmuru
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:12 am

First topic message reminder :

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 QzKZDftkRMOnYnAhqgg5+p19
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 SdpXBTNEQ3iYZ9MZ0CzE+image001

மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.

எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.

நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.

துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!

ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.

தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..

எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.

நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.

இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.

தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.

அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.

ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.

ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.

ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.

உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..

அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.

அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.

ஆனால்.. ஆனால்..

ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.

இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.

போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.

நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.

அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!

ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.

ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.

ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..

எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.

ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.

முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.

ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.

எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.

முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..

ம்! சொல்..

நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..

.........


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:43 am



''நீ உயிர்பிழைக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தினாலும் பயத்தினாலுமே, அந்தப் பையன் இருக்கும் இடத்தைக் காட்டத் துணிந்திருக்கிறாய். அவன், தன் பெற்றோரிடம் போய்ச் சேர வேண்டும் என்கிற எண்ணம் உனக்குத் துளி கூடக் கிடையாது. நீ மிகவும் கொடூரமானவள். நீயும் உன் கணவனும் இது போன்ற மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டிருப்பது அரசாங்கத் துக்குத் தெரிய வந்தால், உன்னை ஜெயிலுக்கு அனுப்பி, தீர்த்துக் கட்டி விடுவார்கள். அவர்கள் இல்லையென்றாலும் நிறைய நண்பர்கள் உண்டு. காபரோனில் அவர்கள் வந்து, போலீஸ§க்கு உதவுவார்கள். நான் சொல்வது உனக்கு புரிகிறதா?''

நேரம் சென்று கொண்டிருந்தது. கடைசியாக கால்நடைகள் இருக்கும் இடமும் சில மரங்களும் சில குடிசைகளும் தென் பட்டன.

''இதுதான் மந்தைகள் தங்குமிடம். அங்கே பாஸர்வா ஆணும் பெண்ணும், அந்தப் பையனும் இருக்கிறார்கள்.''

''அந்தப் பையன் ஓடி விட மாட்டானா..''

''சுற்றிலும் பார். அவன் எங்கே ஓட முடியும்? அவன் கொஞ்ச தூரம் போவதற்குள், அவனைப் பிடித்து விடுவார்கள்..''

ரமோட்ஸ்வேக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.. 'பையன் உயிருடன் இருந்தால், எலும்புத் துண்டு எப்படி, எங்கிருந்து வந்தது..?'

அவள், உடனே கேட்டாள்..

''காபரோனில் உள்ள ஒருவன், உன் கணவரிட மிருந்து எலும்பு ஒன்றை வாங்கியிருக்கிறான். அது எங்கே கிடைத்தது?''

அந்தப் பெண் ரமோட்ஸ்வேயை வெறுப் புடன் பார்த்தபடி, ''ஜோஹன்ஸ்பர்க்கில் எவ்வளவு எலும்பு வேண்டுமானாலும் வாங்கலாம். அது உனக்குத் தெரியாதா? விலை அதிகமில்லை..'' என்றாள்.

பாஸர்வா ஆணும் பெண்ணும் ஒரு குடிசையின் முன்னால் உட்கார்ந்தபடி, கரடு முரடான ஏதோ ஒன்றைக் கடித்துக் கொண்டு, கஞ்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் சிறிய, உலர்ந்த தோற்ற முடையவர்களாகவும், வேட்டையாடுபவர்கள் போல பெரிய கண்களை உடையவர்களாகவும் இருந்தனர். வந்தவர்களை வெறித்துப் பார்த்தனர். அந்த ஆண் எழுந்து, மந்திரவாதியின் மனைவிக்கு வணக்கம் செலுத்தினான்.

''ஆடு, மாடுகள் எல்லாம் நன்றாக இருக்கின் றனவா?'' - அவள் கடுமையாகக் கேட்டாள்.

அந்த மனிதன், நாக்கை மடித்து ஒரு மாதிரி ஓசை எழுப்பி, ''ஆம்.. ஒன்றும் சாகவில்லை. இங்குள்ள பசு நிறைய பால் தருகிறது'' என்றான்.

'ஸெட்ஸ்வானா' மொழியில் அவர்கள் பேசிய போதிலும், அதைப் புரிந்து கொள்ள சற்று கூர்ந்து கவனிக்க வேண்டியிருந்தது. கலஹாரியைச் சேர்ந்தவர்கள் பேசுவது போல அவர்களது உச்சரிப்பு இருந்தது.

''அந்தப் பையன் எங்கே?'' - மந்திரவாதியின் மனைவி கடுப்புடன் கேட்டாள்.

''அந்தப் பக்கம்'' என்றவள், 'அதோ பாருங்கள்' என சுட்டிக் காட்டினாள்.

புதரின் அருகில் அழுக்கு உடையுடனும் கையில் குச்சியுடனும் அந்தப் பையன் நின்ற படி, இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

''இங்கே வா..'' - மந்திரவாதியின் மனைவி அழைத்தாள்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:43 am



அந்தப் பையன், தன் முன்னால் குனிந்து பார்த்தபடி இவர்களை நோக்கி வந்தான். அவனது முன் காலில் தடிமனான கறுத்த தழும்பு காணப்பட்டது. உடனேயே அது சாட்டையினால் அடித்த வடு என்று ரமோட்ஸ்வேக்குத் தெரிந்து விட்டது.

ரமோட்ஸ்வே, தன் கையை அவனது தோளில் வைத்தபடி, ''உன் பெயர் என்ன.. நீதானா அந்த காட்ஸானா வாத்தியாரின் மகன்?'' என கேட்டாள்.

பையனின் உடம்பில் நடுக்கம் தோன்றியது.

''நான் இப்போது இங்கே வேலை செய்கிறேன். இவர்கள், என்னை மாடு மேய்க்க வைக்கிறார்கள்.''

''இந்த மனிதன் உன்னை அடித்தானா..?''

ரமோட்ஸ்வே குனிந்து, ரகசியமாக அந்தச் சிறுவனைக் கேட்டாள்.

''எப்போதும்..''

அவளை விடவும் மெதுவான குரலில் கூறிய பையன் கூடவே இதையும் சொன்னான்..

''நான் தப்பி ஓட முயன்றால், காட்டுக்குள் தேடிப் பிடித்து, கூர்மையான கம்பியினால் என்னைக் குத்திக் கொன்று விடுவதாகக் கூறுவான்..''

''நீ இப்போது பத்திரமாக இருக்கிறாய்.. நீ என்னுடன் வரப் போகிறாய்.. என் முன்னால் பேசாமல் நட.. நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்..''

அவன் பாஸர்வாக்களைப் பார்த்தபடி, காரை நோக்கிச் சென்றான். ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.

''நீ போய்க் கொண்டே இரு.. நான் உன் பின்னால் வருகிறேன்..''

அந்த மந்திரவாதியின் மனைவி, ''நில்.. நான் இவர்களிடம் சில சமாசாரங்களைப் பேசி விட்டு வருகிறேன். சற்று நேரம் பொறு'' என ரமோட்ஸ்வேயைப் பார்த்து கத்தினாள்.

ரமோட்ஸ்வே பையனை காரில் ஏற்றி விட்டு, டிரைவர் ஸீட்டில் உட்கார்ந்து, காரை அறைந்து சாற்றி விட்டு கிளம்பினாள். வண்டி ஒரு வட்டமடித்துத் திரும்ப, அந்தப் பெண்மணி, கத்தியபடியே வண்டியின் பின்னே ஓடி வந்தாள். ஆனால், புழுதிப் புகை அவள் கண்களை மறைத்ததனால், கல் தடுக்கி கீழே விழுந்தாள்.

ரமோட்ஸ்வே, பயத்துடனும் குழப்பத்துடனும் உட்கார்ந்திருந்த அந்தப் பையனைப் பார்த்தாள்.

''நான் உன்னை, உன் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். ஆனால், அது மிகவும் தொலைவில் இருக்கிறது. அதனால் ராத்திரி எங்காவது தங்கும்படி நேரிடலாம். காலையில் எழுந்தவுடன் சீக்கிரம் போய் விடலாம்..''

அந்தச் சிறுவன் கண்ணீர் மல்க தலையாட்டினான்.

ஒரு மணி நேரம் கடந்த பின், வண்டியை ஒரு வறண்ட நதிக்கரையோரம் நிறுத்தினாள். எங்கும் கும்மிருட்டு. நட்சத்திரங்களின் ஒளி, கீற்றுகளாக அவர்கள் மேல் படிந்தது. அந்தப் பையன் ஒரு போர்வைக்குள் நன்றாக சுருண்டு, இவள் கைகளின் மேல் தலையை வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:44 am



ஆகாயத்தை நோக்கியவாறு விழித்திருந்த ரமோட்ஸ்வேயும் சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தாள்.

காட்ஸானா கிராமத்தில், அந்தப் பள்ளி ஆசிரியர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, ஒரு வெள்ளை நிற கார் அவர் வீட்டின் முன்னே நின்று அதிலிருந்து ரமோட்ஸ்வே இறங்குவதைப் பார்த்தார்.

'இவள் யார்.. யார் அந்தக் குழந்தை? ஒருவேளை அந்தக் குழந்தையைப் பெற்றவளாக இருக்குமோ.. என்ன காரணத்துக்காக அழைத்து வருகிறாள்..?'

அவர் வீட்டை விட்டு வெளியே வந்து தனது வீட்டின் முன்பகுதி புல்வெளியைக் கடந்து 'கேட்'டைத் திறந்தார்.

''நீங்கள்தான் ஆசிரியர் 'ரா'வா?''

''ஆமாம். நான்தான். உங்களுக்கு என்ன வேண்டும் மேடம்?''

அவள், இதற்குப் பதிலளிக்காது, காரில் இருந்த சிறுவனுக்கு இறங்கி வரும்படி சைகை காட்டினாள்.

கார் கதவு திறந்து அவருடைய மகன் வெளிப்பட, ஆசிரியர் கதறி விட்டார். ஓடிச் சென்றவர், சற்று தயங்கி, 'இது உண்மைதானா..' என்பதுபோல ரமோட்ஸ்வேயைப் பார்த்தார். அவள் ஆமோதிப்பதுபோலப் புன்னகைக்க, மறுபடியும் ஓடி, கால் தடுமாறியபடி பையனை வாரி அணைத்தார். சிறுவன் மகிழ்ச்சியுடன் ஊர் முழுக்கக் கேட்கும்படியாகக் கத்தி, தான் திரும்பி வந்து விட்டதைத் தெரிவித்தான்.

ரமோட்ஸ்வேக்கு அவர்களது அந்தரங்கமான மகிழ்ச்சியைக் கெடுப்பதில் விருப்பமில்லை. ஆதலால், இடையூறு செய்யாமல் தன்னுடைய வண்டியை நோக்கிச் சென்றாள். அவளும் அழுதபடி தன் கையை இறுகப் பிடித்தபடியே, எப்போதோ வேறு உலகத்துக்குச் சென்று விட்ட தன் குழந்தையின் மறைவை நினைத்துக் கொண்டாள். ஆப்பிரிக்காவில் துன்பங்களுக்குப் பஞ்சமே இல்லை. தோளைக் குலுக்கியபடி அதை அலட்சியம் செய்து விட்டு நடக்கலாம் என்று தோன்றும்.

ஆனால், அது எப்போதுமே முடியாது.. அவளால் முடியாது..

மைல் கணக்காக, கஷ்டப்பட்டு நிற்காமல் ஓடிக் கொண்டிருந்த, அந்தப் புழுதி படிந்த வெள்ளை கார், அவ்வளவு தொலைவு தொந்தரவு கொடுக்காமல் ஓடியதே பெரிய விஷயம். டவுனுக்கு வந்தவுடன் திணற ஆரம்பித்து விட்டது.

நிச்சயம் இதுவும் புழுதி செய்த வேலைதான் எனத் தீர்மானித்தாள் ரமோட்ஸ்வே.

மட்கோனியைத் தொந்தரவு செய்ய விருப்பமின்றி, அவருடைய நிறுவனத்துக்கு போன் செய்தாள். காரிய தரிசி வெளியே சென்றிருந்ததால், அவரேதான் போனை எடுத்தார். காரைப் பற்றி அவள் கவலைப்பட வேண்டாம் என்றும், மறுநாள் சனிக்கிழமையாதலால் தானே வந்து சரிசெய்து விடுவதாகவும் அவர் கூறினார்.

''எனக்கு அப்படி, அதை சுலபமாகச் சரிசெய்து விட முடியும் என்று தோன்றவில்லை.. அது மிகவும் வயதான பசுமாடு மாதிரி இருக்கிறது. வந்த விலைக்கு விற்று விடுவது நல்லது என தோன்றுகிறது..'' - ரமோட்ஸ்வே கூறினாள்.

''அதற்குத் தேவையே இருக்காது. எது எப்படியானாலும் சரிசெய்து விடலாம்..'' என்ற மட்கோனி, தனக்குள் நினைத்துக் கொண்டார்..

'எப்படியானாலும் சரி செய்து விடலாம்.. எப்படி யானாலும்.. இதயமே இரண்டு துண்டானாலும் அதை சரிசெய்து விட முடியுமா? கேப் டவுனில் இருக்கும் டாக்டர் பெர்னார்ட்டிடம் கேட்க வேண்டும்.. தனிமை யினால் ரத்தம் வடிந்து கொண்டிருக்கும் மனிதனின் இதயத்தை சரி செய்ய முடியுமா என்று..'

ரமோட்ஸ்வே அன்று காலை மார்க்கெட்டுக்குப் போய் இருந்தாள். சனிக்கிழமை காலை என்றாலே அவளது முக்கிய மான வேலைகளில் ஒன்று - அங்காடிக்குச் சென்று மளிகை சாமான்கள் வாங்குவதும், வெளியில் உள்ள நடைபாதை கடைகளில் காய்கறிகளை வாங்குவதும்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:44 am



அன்றும் அப்படித்தான். பிறகு பிரசிடென்ட் ஹோட்டலுக்குச் சென்று காபி குடித்தாள்.

வீடு திரும்பி, செய்தித்தாளுடன் வெராந்தாவில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள். அவளுக்கு செய்தித் தாள்களில் வருகிற எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் படிக்க வேண்டும். இது துப்பறியும் தொழிலுக்கு மிகவும் அவசியம் என்று எண்ணுவாள். அரசியல்வாதி களின் பேச்சிலிருந்து, மாதா கோயில் அறிவிப்பு வரை..

வைரம் கடத்துபவர்கள் என்றால், ரமோட்ஸ்வே வரிசையாக அவர்கள் பெயர்களை ஒப்பிப்பாள்.

அவளுக்குப் புரியாததெல்லாம் ஒன்றுதான்.. இந்த மக்கள், தாங்கள் வாழும் ஊரிலும் நகரத்திலும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே எப்படி வாழ்கிறார்கள் என்பதுதான் அது!

மட்கோனி மாலை நான்கு மணி சுமாருக்கு, தன்னுடைய கம்பெனி பெயர் எழுதப்பட்ட நீல நிற காரில் வந்தார். வேலை செய்யும் உடையிலேயே வந்திருந்தாலும், அவரது உடை நன்றாகத் துவைக்கப்பட்டு, கசங்கல் இல்லாமல், அழகாக இஸ்திரி செய்யப்பட்டிருந்தது.

தன்னுடைய சின்ன வண்டியை, வீட்டருகில் நிறுத்தி இருந்தாள் ரமோட்ஸ்வே. அங்கே, அவரை அழைத்துச் சென்றாள். மட்கோனி, தன்னுடைய வண்டியிலிருந்து பெரிய வண்டி தூக்கி நிறுத்தும் கருவியை எடுத்து, உருட்டிச் சென்றார்.

''நான் உங்களுக்கு தேநீர் கொண்டு வருகிறேன். அதைக் குடித்துக் கொண்டே வண்டியைப் பார்க்கலாம்..''

ரமோட்ஸ்வே இதை சொல்லி விட்டு, தேநீர் கலக்க வர, சமையலறை ஜன்னல் வழியே அவள் பார்த்தபோது அவர் என்ஜினின் பாகங்களை எடுத்து தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். பின், டிரைவர் ஸீட்டில் உட்கார்ந்து என்ஜினை முடுக்கினார். அது சற்று உறுமி விட்டு பின் நின்றது. என்ஜினிலிருந்து கம்பிகளும் குழாய்களும் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய பாகத்தை வெளியே எடுத்தார்.

''இதுதான் வண்டியின் இதயம்போல இருக்கிறது.. பாவம்.. இத்தனை நாள் உழைத்து விட்டு, இப்போது பரிதாபமாகக் காணப்படுகிறது'' - ரமோட்ஸ்வே எண்ணினாள்.

மட்கோனி, அவருடைய வேனுக்கும் ரமோட்ஸ்வேயின் காருக்குமாக அலைந்து கொண்டிருந்தார். மூன்று கோப்பை தேநீர் குடித்தாயிற்று. வெயில் சுட்டெரித்தது. ரமோட்ஸ்வே, காய்களை அடுப்பில் வேக வைத்து விட்டு, பின்பு ஜன்னல் மேல் வைத்திருந்த சிறிய செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாள். மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந் தது. ஆகாயம் முழுவதும் பொன்னிறமாக மாறியிருந்தது. பறவைகளின் ஒலியும், பூச்சிகளின் கிறீச்சிடும் சத்தமும் நிறைந்த இதுபோன்ற மாலை நேரம் அவளுக்குப் பிடித்தமான ஒன்று. அந்த மங்கலான ஒளியில் மாடுகள் வீடு திரும்பிய பிறகு, குடிசைகளின் வாசலில் இரவு சமைப்பதற்கு விறகு அடுப்பு எரிய ஆரம்பிக்கும்..

ரமோட்ஸ்வே, மட்கோனி வேலை செய்ய இன்னும் கொஞ்சம் வெளிச்சம் தேவையா என்று பார்க்க வெளியே வந்தாள். அவர், இவளது வெள்ளை கார் அருகே நின்ற படி, கையை துணியில் துடைத்துக் கொண்டிருந்தார்.

''இப்போது எல்லாம் சரியாகி விட்டது. என்ஜினை படு ஜோராக்கி விட்டேன். அது இப்போது, தேனீ மாதிரி ரீங்காரமாக இருக்கிறது. பழைய சத்தமே இல்லை.''

ரமோட்ஸ்வே, உற்சாகமாகக் கை தட்டினாள்.

''இது ஒன்றுக்கும் உதவாத வண்டி என்று நான் நினைத்தேன்..''



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:45 am


அவர் சிரித்தார்.

''நான்தான் சொன்னேனே.. கிழட்டு வண்டியைக் கூட சரி செய்ய முடியும் என்று..''

அவர், அவளைத் தொடர்ந்தார். ரமோட்ஸ்வே கோப்பைகளில் சிக்கன் சூப் எடுத்து வர, இருவரும் வெராந்தாவின் போகன்வில்லா செடிக்குக் கீழ் அவளுக்குப் பிடித்தமான இடத்துக்கு சென்று அமர்ந்தனர். சற்று தொலைவில் யார் வீட்டிலிருந்தோ இனிமையான பழைய சங்கீதம் காற்றில் மிதந்து வந்தது.

சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது. இருட்டில் உட்கார்ந்தபடி, இரவு சத்தங்களை அனுபவித்தபடி இருவரும்.. தூரத்தில் ஒரு நாய் குரைத்தது. ஒரு கார் சீற்றத்துடன் கிளம்பியது. சூடான புழுதிக் காற்று, முள் மர வாசனையுடன் வீசியது.

அவர், அவளை அந்த இருட்டில் பார்த்தார். அவள் தான் அவருக்கு சகலமும் என மறுபடி தோன்றியது. ஒரு தாய், ஆப்பிரிக்கா, அறிவு, அன்பு, புரிந்து கொள்ளும் தன்மை, பூசணிக்காய், சாப்பிடும் நல்ல விஷயங்கள், கோழிகள், இளம் கன்றுகளின் வாசம், முடிவில்லாத முட்புதர், எல்லையற்று விரிந்து கிடக்கும் வானம், போட்ஸ்வானா, அவரது வீடு.. ஏன், அவரே கூட அவளுக்குள் அடங்கி இருப்பதாக உணர்ந்தார்..

இதெல்லாம் அவரது எண்ணங்கள். அவள் மனதில் இருப்பதை யார் அறிவார்கள்.. எப்போது அவர் தன் உள்ளத்தில் இருப்பதைக் கூற முயற்சித்தாலும் வார்த்தை களால் வர்ணிக்க முடியாது என்றே தோன்றுகிறது அவருக்கு.

ஒரு மெக்கானிக் கவிஞனாக முடியுமா?

அதனால், அவர் இதைத்தான் கூறினார்..

''நான், உன்னுடைய வண்டியை சரிசெய்ததற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். யாராவது, 'இதை சரி செய்ய முடியாது' என்று பொய் சொல்லலாம். அப்படிப் பட்ட மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்..''

''தெரியும். ஆனால், நீங்கள் அப்படிப்பட்டவர் இல்லை..''

அவர் ஒன்றும் பதில் பேசவில்லை. சில சமயங்களில் நாம் கண்டிப்பாகப் பேச வேண்டும். இல்லை என்றால் அதற்காக ஆயுள் முழுக்க வருந்தும்படி நேரிடும். ஒவ்வொரு முறையும் தன் மனதில் உள்ளதைக் கூற வரும்போதும், தயக்கத்தில் அந்த எண்ணத்தை கை விட்டு விடுவார். ஏற்கெனவே அவர் ஒரு முறை மணந்து கொள்ளும்படி கேட்டு, அது தோல்வியில் முடிந்ததே.. போதாதா? அது முதல் அவருக்கு மனிதர்களை விடவும் கார்கள் மீது நம்பிக்கை அதிகமாகி விட்டது. இருந்தாலும்.. இன்னும் ஒரு முறை கேட்டால்தான் என்ன..

அவள், 'சூப்'பை கரண்டியால் கலக்கிக் கொண்டிருந் தாள்.

''எனக்கு இப்படி, இங்கே உன்னோடு இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது..''

அவள், அவர் பக்கம் திரும்பினாள்.

''என்ன சொன்னீர்கள்?''

''என்னை மணம் செய்து கொள் ரமோட்ஸ்வே.. நான் வெறும் மட்கோனி.. அவ்வளவுதான். என்னை மணந்து, என்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ளேன்..''

வார்த்தைகளை முடிக்கும்போதே, உணர்ச்சிப் பெருக்கில் அவருக்குத் தொண்டை கம்மியது..

அவரையே பார்த்த ரமோட்ஸ்வே சொன்னாள்..

''செய்து கொள்கிறேன். நிச்சயமாக!''

- நிறைவுற்றது




நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dhivya Jegan இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:46 am

மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - மொழிபெயர்ப்பு மின்னூல்!
http://www.eegarai.net/t110853-1




நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சே.செய்யது அலி
சே.செய்யது அலி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 19/09/2018

Postசே.செய்யது அலி Wed Sep 19, 2018 9:33 pm

மிகவும் அருமை... பகிர்ந்தமைக்கு நன்றி

balki1949
balki1949
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 22/07/2018

Postbalki1949 Wed Sep 26, 2018 8:44 pm

ஒரு நல்ல சுவாரஸ்யமான கதை படித்த திருப்தி கிடைத்தது. இதனை பகிர்ந்தமைக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக