ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம்

View previous topic View next topic Go down

கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Mon Jul 21, 2014 10:34 pm
கீதை 13 : 1 அர்ச்சுணன் கேட்கிறான் : கேசவா ! பிரகிருதி மற்றும் புருஷன் ; களம் மற்றும் துய்த்தறிகிறவன் மேலும் ஞானம் மற்றும் தெய்வீக அன்பில் திளைக்கிறவன் என்பவைகளைப்பற்றி ஆழமாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்

கீதை 13 : 2 கிரிஸ்னர் கூறினார் : களம் என்பது சரீரம் அதில் இயங்குகிற ஆத்மாவே துய்த்து அறிகிறவன் . ஞானம் என்பது முழுமையான தெளிவு . அதோடு ஒத்திசைந்து நாளுக்கு நாள் உள்விளையும் தெய்வீக அன்பை பெருக்குகிறவனே ஞேயன் – யோகி

கீதை 13 : 3 பாரத குலத்தோன்றலே ! சரீரத்தையும் அதிலிருந்து அறிந்துணர்கிறவனையும் ( ஜீவாத்மாவையும் ) உணர்ந்து கொள்வதே ஞானமடைதலாகும் . மேலும் எல்லா மனிதர்களின் சரீரங்களிலும் அறிந்துணர்கிறவனாக என்னை ( பரமாத்மாவாக ) உணர்ந்துகொள்வதே  மெய்ஞான விருத்தியாகும்  .

கீதை 13 : 4 சரீரத்தின் தன்மை என்ன ? அதிலிருந்து விகாரங்கள் எவ்வாறு உண்டாகிறது ? அதை உணர்ந்தறிகிறவன் யார் ? அவனுக்கு அதன் மீதுள்ள ஆளுமை என்ன ? என்பதைப்பற்றி உரைக்கிறேன் கேட்பாயாக !

கீதை 13 : 5 செயல்களின் களமான சரீரம் ; மற்றும் செயல்களை அறிந்துணர்கிறவனாகிய ஆத்மாவைப்பற்றிய அறிவு ; அறிவிற்சிறந்த முனிவர்களால் பற்பல வழிகளில் பல்வேறு மந்திரங்களில் உபதேசிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக வெளிப்படுத்தப்பட்ட இறை வேதங்களில் (ரிக் , யஜுர் , சாம , அதர்வண , தவ்ராத் , இன்ஜீல் மற்றும் குரான்) இவை நுணுக்கமாக காரணம் மற்றும் காரியங்களுடன் விளக்கப்பட்டுள்ளன .

கீதை 13 : 6 & 7 மகா (பஞ்ச) பூதங்கள் ; அவற்றின் சுயம் மற்றும் புலப்படாத குணங்களும் ;அவற்றால் உண்டான பஞ்சேந்திரியங்களும் (கண் ,காது , மூக்கு , நாக்கு & தோல்)அவற்றின் ஐந்து கோசாரங்களும் (குரல் , கால்கள் , கைகள் , ஆசனவாய் மற்றும் பாலுறுப்பு) அவற்றுடன் புலப்படாத மனமும் ஆக பதினொன்று இவைகளுடன் கூடியவை சரீரமாகும் ; இவற்றால் உண்டாகும் விருப்பு , வெறுப்பு , இன்பம் , துன்பம் ஆகிய பாதிப்புகள் மற்றும் அவை தொடர்பால் எழும்பும் சுயமுயற்சியும் சரீரத்தின் விகாரங்கள் எனப்படுகின்றன .

3 .ஞானம் மற்றும் நேயம்

கீதை 13 : 8 அடக்கம் , அத்துமீறாதிருத்தல் , சாத்வீகம் , சமாதானம் , எளிமை , குருவை அடுத்திருந்து கற்றுக்கொண்டே இருத்தல் , தூய்மை , தளராமை , ஆத்ம விழிப்பு

கீதை 13 : 9 ஐம்புலன்களையும் அடக்குதலில் தளராமை , சுயத்தை கடரும் மனநிலை இவைகளுடன் பிறப்பு , இறப்பு , முதுமை , நோய் , துன்பம் , களங்கம் ஆகியவைகளில் சாட்சியாக மட்டும் இருந்து கொண்டு

கீதை 13 : 1௦ பற்றுதலின்றி பட்டும்படாமல் குழந்தைகள் , மனைவி மற்றும் இதர பந்தங்களில் விடுபட்டு இருத்தல் ; விருப்பு வெறுப்புகளில் சமநிலை அடைதல் ;

கீதை 13 : 11 சதா ஆழ்ந்த யோகத்தில் நிலைக்க என்னை சரணடைந்த குருபக்தியும் ; தனித்தும் விழித்தும் ஜனத்திரளின் புகழில் பற்றின்றியும்

கீதை 13 : 12 ஆத்மாவில் விளையும் நித்தியானத்த போதத்தில் திளைத்தும் ; தத்துவ விசாரத்தில் தெளியும் தரிசனத்தை அடையும் இலக்கில் செயல்பாடும் ஆகிய இவையே ஞானமடைதல் என்கிறேன் ; இதிலிருந்து வேறுபட்டவை எல்லாம் மாயையே ஆகும் .

கீதை 13 : 13 மேலும் எதை அறிவதால் அமிர்தத்தை சுவைப்பாயோ அந்த தெய்வீக அன்பை (நேயம்) இப்போது விளக்குகிறேன் . அது பரப்பிரம்மம் – ஆதிமூலம் - கடவுள் . ஆரம்பம் இல்லாததும் எனக்கு கீழ்படாததும் இந்த ஜட இயற்கையின் (பிரக்ருதியின்) காரணம் (அடிப்படை- சத்) ; மற்றும் விளைவுகளுக்கும் (வெளிப்பாடுகள் – அசத்) அப்பாற்பட்டும் – பாதிப்பிலாமலும் இருக்கின்றது .

கீதை 13 : 14 எங்கும் அவரது கரங்களும் ; கால்களும் ; கண்களும் ; காதுகளும் ; முகங்களும் இருந்தாலும் இவ்வுலகத்தில் இல்லாதவரைப்போல திரையிட்டு எங்கும் விளங்குகின்றார் .

கீதை 13 : 15 சகல இந்திரியங்களின் குணாதிசயங்களுக்கும் மூலமாக அவரே இருந்தாலும் இந்திரியங்களிளிருந்து உருவாகும் விகாரங்களுக்கு அப்பாற்பட்டவர் . அனைத்தையும் அவரே பராமரிப்பவர் ஆனாலும் அவைகளால் பந்தப்படாதவர் . ஜட இயற்கையின் குணங்களுக்கும் அவரே எஜமானர் ஆனாலும் அவைகளால் பாதிப்படையாதவர் .

கீதை 13 : 16 படைப்பினங்கள் அனைத்திலும் உள்ளும் புறமும் உள்ளவர் . மேலும் அசைவன மற்றும் அசையாதனவற்றிலும் உள்ளவர் . புலன்களால் காணவோ அறியவோ முடியாத அருபமானவர் ஆனாலும் உணரக்கூடிய தெய்வீக அன்பால் நிறைந்தவர் . வெகுதூரத்தில் இருப்பவர் போல இருந்தாலும் நெருக்கமாகவே – உங்களுக்குள்ளேயே இருப்பவர் .

I யோவான் 4 :
தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.  அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் – வள்ளலார் . ஆன்மநேய ஒருமைப்பாடு நித்திய ஜீவர்களின் அடையாளமாகும் .ஒருவன் தன்னிலே வாசமாயிருந்து தன்னை அழிய விடாமல் காக்கும் உயிரின் அன்பை உணர்ந்து கொள்வானானால் ; அதே உயிர் வாசமாயிருக்கும் சகல உயிரினங்களின் மீதும் அபிமானம் பெருகுவதை தடுக்கவே முடியாது .

கீதை 13 : 17 படைப்பினங்கள் அனைத்திலும் பிரிந்து அவைகளுக்குள் நிலைபெற்று இருப்பதுபோல் இருந்தாலும் அவர் பிரிவின்றி எங்கும் நிலைத்திருப்பவர் . படைப்பினங்கள் அனைத்திலும் உயிராக இருந்து காப்பவர் என்றாலும் அவற்றை அழிப்பவரும் விருத்தி செய்பவரும் அவரே என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .

கீதை 13 : 18 பிராகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றின் ஒளியாக இருந்தாலும் மாயையின் இருளால் உணரமுடியாதவராகவும் இருக்கிறார் . ஞானத்தாலும் ஞானத்தின் விருத்தியாலும் உணரப்படவேண்டிய தெய்வீக அன்பாக சகலரின் இதயத்திலும் அவர் வீற்றிருக்கிறார் .

கீதை 13 : 19 இவ்வாறாக பிரபஞ்சம் ; பரமாத்மா ; சேத்ரம் (சரீரம் – செயல்களின் களம்) சேத்ரக்ஞன் ; ஞானம் ; தெய்வீக அன்பு ஆகியவை சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது . இவற்றை புரிந்து கொண்ட எனது சீடன் என்னைப்போலவே பாவனை அடைகிறான்

கீதை 13 : 2௦ பிரக்ருதியும் அதன் மையமான பரமபுருஷனும் நித்தியமானவை என்பதை அறிந்துகொள் . ஜட இயற்கையின் முக்குணங்களும் அவற்றிலிருந்து எழும்பும் விகாரங்களும் பிரக்ருதியால் உற்பத்தி செய்யப்படுபவை – அநித்தியமானவை என்பதையும் அறிந்துகொள் .
கீதை 13 : 21 படைப்புகளின் விசயத்தில் எல்லா செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் பிரக்ருதியே காரணமாகும் . அதுபோல அதனால் விளையும் இன்ப துன்பங்களை அனுபவித்து உணர்வது புருஷனே – ஆத்மாவே ஆகும் .

கீதை 13 : 22 ஆத்மா சரீரத்தின் ஜட இயற்கையில் நிலைபெற்று ஜட இயற்கையின் முக்குணங்களையும் அவற்றின் சங்கமத்தால் எழும்பும் பல்வேறு விகாரங்களையும் அனுபவித்து நன்மை தீமைகளை செய்கிறது . அதற்கேற்ற கர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் ஜனித்து வாழ்வை தொடர்கிறது .
கீதை 13 : 23 இருப்பினும் அந்த சரீரத்தில் பரமாத்மாவோடு தெய்வீகமான மற்றொருவரும் இருக்கிறார் . அவரே பரம உரிமையாளர் ; தலைவர் ; மேற்பார்வை செய்பவர் ; அனுமதிக்கிறவர் ; முற்றுயிராய் பரத்தில் நிறைந்த இறைவன் அவரே .

கீதை 13 : 24 (பிண்டத்தில்) உயிர் ; ஆத்மா ; சரீரம் (அதுபோல அண்டத்தில் கடவுள் ; பரமாத்மா ; பிரக்ருதி ) இவற்றோடு ஜட இயற்கையின் முக்குணங்களின் வர்த்தமானங்களால் உருவாகும் செயல்பாடுகள் மற்றும் இவைகளுக்கிடையான உறவுகளை செம்மையாக புரிந்துகொள்பவன் யாரோ அவன் நித்திய ஜீவனை – மரணமில்லா பெரு வாழ்வை நிச்சயம் அடைவான் .

கீதை 13 : 25 தியானத்தினால் தன்னை ஆத்மாவாக (ஜீவாத்மாவாவாக) உணர்ந்து அந்த ஆத்மாவின் மூலமாக பரமாத்மாவை கண்டுணரலாம் . மேலும் தத்வ விசாரத்தாலும் யோக அப்பியாசத்தாலும் கர்ம யோகத்தாலும் பரமாத்மாவை உணரலாம் .

கீதை 13 : 26 வேறு சிலர் ஆன்மீக ஞானத்தில் ஆழ்ந்த பயிற்சி இல்லாத போதிலும் ; அத்தகையோரின் (உபகுருக்கள்) உபதேசங்களை கேட்டதில் ஆர்வமுற்று பின்பற்றுவதால் மரணத்தின் வழியை கடக்கும் - நித்தியஜீவனுக்கான பாதையில் பயணிக்க தொடங்குகின்றனர் .

கீதை 13 : 27 பரதவர்களின் தலைவனே ! ஏதேனும் அசைவற்று இருக்கின்றதோ அல்லது எதுவெல்லாம் அசைவுற்று மாறிக்கொண்டே இருக்கின்றதோ அவையெல்லாம் ஷேத்ரம் (சரீரம்) மற்றும் ஷேத்ரக்ஞன் (ஆத்மா) இவைகளுக்கிடையிலான இயக்கங்களால் வெளிப்படுபவை என்பதை அறிந்து கொள்வாயாக .

கீதை 13 : 28 எல்லா உயிரினங்களிலும் ஆதி மூலமான கடவுள் (உயிராக) வசிப்பதை எவனொருவன் காண்கிறானோ அழிவுறும் சரீரத்தில் அழிவற்ற உயிரும் பரமாத்மாவும் வசிப்பதை யாரொருவன் காண்கிறானோ அவனே உண்மையை உணர்கிறவன் .

கீதை 13 : 29 எல்லா உயிரினங்களிலும் சமமாக வசிக்கும் (உயிராகிய) கடவுளையும் ; பரமாத்மாவே சமமாக எங்கும் ஜீவாத்மாவாக வசிப்பதையும் உணர்கிறவன் எதையும் இழிவுபடுத்துவதில்லை .இதனால் அவன் தெய்வீகத்தன்மையை அடைகிறான் .

I யோவான் 4 :
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனிடத்து அன்பு கூராதவன் ஒரு  பொய்யன்; தான் கண்ணில் கண்ட மனிதனிடத்தில் அன்புகூராதவன், தான் கண்ணில் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

கீதை 13 : 30 எவனொருவன் ஜட இயற்கையே (சரீரமே) சகல செயல்களையும் ஊக்கப்படுத்தி செய்விக்கிறது ; ஆத்மா அத்தேவைகளுக்கு அப்பாற்பட்டது என்ற பக்குவத்தை அடைகிறானோ அவனே எல்லா விதங்களிலும் உண்மையை உணர்கிறவன் .

கீதை 13 : 31 (அழிவுறும்)சரீரங்களின் தனிப்பட்ட அடையாளங்களை காண்பதை நிறுத்தி எல்லாவற்றிலும் பரந்துவிரிந்துள்ள (அழிவற்ற)பிரம்மத்தை –(உயிராகிய கடவுளையும் ; பரமாத்வாவாகிய நாராயணனையும்) உணர்கிறவனே அநுபூதி அடைகிறவன் .

கீதை 13 : 32 அழிவற்ற ஆத்மாவின் நித்தியத்தன்மையை உணர்ந்தவன் ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீகமான பரமாத்மாவை தன்னில் காண்கிறான் . அவன் சரீரத்தில் வீற்றிருந்தாலும் அதன் செயல்களால் பந்தப்படாத பக்குவத்தை அடைகிறான் .

கீதை 13 : 33 நுண்ணிய இயற்கையினால் உயிர் எங்கும் பரவி எதிலும் வீற்றிருந்தாலும் அவைகளால் களங்கப்படாமல் இருக்கிறதோ அப்படியே உயிரில் நிலைபெற்ற ஆத்மாவினால் உடலால் களங்கப்படாத தன்மையை அடையமுடியும் .

கீதை 13 : 34 அப்படிப்பட்ட ஆத்மா (உயிராகிய கடவுளில் நிலைபெற்ற ஆத்மா) ஒரே ஒரு சூரியன் இந்த உலகம் முழுவதையும் பிரகாசமாக்குவது போல முழு உடலையும் பிரகாசமாக்கும் .

கீதை 13 : 35 இவ்வாறு உடலுக்கும் (ஷேத்ரம்) உடலின் உரிமையாளனுக்கும் (ஷேத்ரக்ஞன்- ஜீவாத்மா) உள்ள வேறுபாட்டை ஞானத்தால் உணர்ந்து யாரெல்லாம் கடவுளில் நிலைக்கின்றார்களோ அவர்கள் ஜட இயற்கையின் பந்தத்திலிருந்து விடுபடுவார்கள் – அதாவது முக்தி அடைவார்கள் .

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எது முக்தி ? ஆன்மீக வட்டாரங்களில் முக்தி என்ற பதத்தை இறைவனோடு கலந்து இல்லாமல் போதல் – அதாவது சூன்யவாதம் போல பிரயோகப்படுத்துகிறார்கள் . ஆனால் பரமாத்மா இங்கே தெளிவுரை வழங்கி இருக்கிறார் . முக்தி என்பது இல்லாமல் போவதல்ல ; அழிவற்ற ஜீவாத்மா ; தான் உலகியலில் வாழ்ந்ததால் தொடர்பு கொண்டிருந்த ஜட இயற்கையின் முக்குனங்களிளிருந்து தன்னை விடுவித்து ; பந்தப்படாத தன்மையை அடைதலே முக்தி . அதாவது சகலமும் பரமாத்மாவின் விரிவாக இருந்தாலும் அவைகளால் பாதிப்பில்லாத இயல்பில் பரமாத்மா எவ்வாறு உள்ளாரோ அவரைப்போலவே ஜீவாத்மாவும் எவைகளாலும் பாதிப்பிலாத சுதந்திர நிலையை அடையும் .

வீடுபேறு – முக்தி – விடுதலை அடைதல் – இவையெல்லாம் ஆத்மா அடைகிற பரிபூரணத்துவத்தை குறிப்பதாகும் . இதற்கு ஜீவாத்மா உடலுடன் உறவுள்ள ஆத்மா என்ற நிலையிலிருந்து உயிருடன் உறவுள்ள ஆத்மாவாக பயிற்சித்தல் என்பதே வழி . ஏனென்றால் ஆத்மா என்பது பந்தப்படும் இயல்புள்ளது . ஆனால் உயிரோ எதனாலும் பந்தப்படாமல் எப்போதும் தூய்மையாகவே இருப்பது .
சகலவற்றிற்கும் சாட்சியாக தனது அன்பால் உயிரினத்தை வாழவைத்துக்கொண்டிருப்பது . தெய்வீக அன்பால் அது ஒரு உடலில் தங்கிக்கொண்டிருக்கும் வரை அந்த உடல் மரிக்காமல் இயங்கிக்கொண்டு விணை ஆற்றிக்கொண்டிருக்கும் . அது அன்பு மற்றும் சாட்சி நிலை மட்டுமே . அந்த உயிரினம் செய்யும் நன்மை தீமை எதனாலும் அது பந்தப்படுவதில்லை . இதுதான் விடுதலையின் ரகசியம் , இவ்வாறுதான் பரமாத்மாவும் எதனாலும் பந்தப்படாதவராக உள்ளார் . அதற்கு அவரும் கடவுளில் நிலைத்துள்ளார் . அதுவே ஜீவாத்மா கற்றுக்கொள்ளவேண்டியது ,அல்லது அநுபூதி .

வேதங்களின் சாரம் என்ன யுகபுருஷன் இயேசுவிடம் கேட்கப்பட்டது :

மத்தேயு 22:37. இயேசு அவனை நோக்கி: கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

38. இது முதலாம் பிரதான கட்டளை .

39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

40. இவ்விரண்டு கட்டளைளிலும் வேதங்கள் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum