புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Poll_c10மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Poll_m10மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

kargan86

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

124 Posts - 53%

77 Posts - 33%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:21 pm

வெளியீடு :
இயக்குநர்,
செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 600 009.
பதிப்புரை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தையிலும் எழுத்திலும் பேச்சிலும் ஒளிர்ந்த கருத்துமணிகளைத் தொகுத்து “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்” எனும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் இந்த அழகிய சிறு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

மொழி, கல்வி, இலக்கியம், ஆன்மீகம், பொருளாதாரம், மகளிர் மேம்பாடு, அரசியல் போன்றவை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தனைப் பூங்காவில் மலர்ந்த வாசமிகு மலர்கள், இந்நூலை வாசிக்கும் வாசகர்களின் நெஞ்சங்களிலெல்லாம் நறுமணம் பரப்பும் என்பதில் ஐயமில்லை.

மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் கருத்துச் செல்வங்களை, அவர்கள் ஆற்றிய பல்வேறு உரைகளிலிருந்து எடுத்து,  சீரிய முறையில் தொகுத்து,
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்”
என்ற தலைப்பில்  நூலாக வழங்கியுள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு. மகேசன் காசிராஜன், இஆப அவர்களையும் இப்பணிக்கு உறுதுணை புரிந்த செய்தித்துறை அலுவலர்களையும் பாராட்டுகிறேன்.  

நவில்தொறும் நயம் படைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கருத்துச் செல்வங்களைத் தமிழக மக்கள் கருத்தூன்றிப்  படித்துப் பயன்பெற்றிட அன்புடன் விழைகின்றேன்.

மூ. இராசாராம், இஆப
அரசுச் செயலாளர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:23 pm

எனது இலட்சியம்
™
ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவியும் இலவசமாகத் தர வேண்டிய ஒரு அவசியம் இருக்கக்கூடாது. தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலை இருக்கக்கூடாது. அந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காணவேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதுதான் என்னுடைய இலட்சியம்.

தமிழகம் எதிலும் முதலிடம்
™
இந்தியாவிலேயே, முதலீட்டாளர்கள் நாடுகின்ற, முதன்மையான இடமாகத் தமிழகத்தை ஆக்குவதே இந்த அரசின் இலட்சியமாகும். முதலிடம் என்று நான் குறிப்பிடுவது முதலீட்டைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, மிக முக்கியமாக நம் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றிலும் முதலிடம் பெறுவதே எனது இலட்சியம்.

வாழ்க்கை முன்னேற்றம்

™ அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறுகின்ற பயனாளிகள் அனைவரும் அவற்றை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான அடிப்படையாகக் கருதி மேன்மேலும் உழைத்து, வாழ்க்கையில் முன்னேறி, எல்லா நலன்களையும் பெற வேண்டும்.

மக்களின் வெகுமதி

™ தமிழக மக்களிடம் நாங்கள் காட்டும் விசுவாசத்திற்கு கிடைத்த வெகுமதிதான், தமிழக மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை - எங்களுக்கு அளித்த மகத்தான ஆதரவு - எங்களுக்கு அளிக்கப்பட்ட ஆட்சிப் பொறுப்பு.

புனிதக் கடமை

™ என்னை நம்பி வாக்களித்தவர்களுக்கு, நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே என்னுடைய புனிதக் கடமையாகக் கருதுகிறேன். ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் ஒரு போதும் தவறியதில்லை.

உயர்ந்த இலட்சியம்
™
நமது இலட்சியம் உயர்வானது! நமது பார்வை தெளிவானது! நமது வெற்றி முடிவானது!

அரசின் குறிக்கோள்

™ தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடச் செய்ய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதும்தான், இந்த அரசினுடைய குறிக்கோள்.

முன்னுரிமை
™
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். அதே நேரத்தில், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதுடன் மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் அதாவது inclusive growthஅமையும் வண்ணம் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு மேற்கொள்ளும்.

மக்கள் நலன்

தமிழக அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்குண்டான திட்டங்களைத் தீட்டி மக்கள் வாழ்வு வளம் பெறவும், அவர்கள் நலன் பேணிப் பாதுகாக்கவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் காரணமாகத்தான் நான் முதலமைச்சராகப் பதவியேற்று கொண்ட அன்றே மக்கள் பயன் பெறத்தக்க திட்டங்களில் கையெழுத்திட்டேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:24 pm

முதன்மைத் துறைக்கு முன்னுரிமை
™
தொழில் துறை மற்றும் சேவைத் துறை ஆகிய இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை துறைகளை வலுப்படுத்தும் அதே வேளையில், முதன்மைத் துறையான விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எங்கள் அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும்.

உண்மையான மக்களாட்சி
™
மிக அதிகமானவர்களுக்கு மிக அதிக நன்மையைப் பயப்பது தான் உண்மையான மக்களாட்சி.

நமது கடமை
™
குழந்தைப் பருவம் குதூகலமாய், வண்ணத்துப் பூச்சிகளாய் விளையாடித் துள்ளித் திரியும் காலம். பள்ளி சென்று பயில வேண்டிய காலம். குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து, மேம்படுத்தி அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும்.

உறுதி ஏற்போம் !

™ நாம் அனைவரும் நம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப உறுதி ஏற்போம்! குழந்தைகள் பணிக்குச் செல்வதைக் கண்டால் அவர்களைத் தடுத்து பள்ளிக்கு அனுப்பி வைப்போம்!

சமூக அவலம் நீக்குவோம்
™
குழந்தைத் தொழிலாளர் முறை என்னும் சமூக அவலம் நீக்கப்பட சமுதாயத்தில் உள்ள அனைவரும் உறுதியேற்போம்! குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றிடுவோம்! குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம்!

பெண்கள் முன்னேற்றம்
™
ஆண்களோடு பெண்கள் சரிநிகர் சமமாக உயர வேண்டுமானால், அவர்கள் பொருளாதார ரீதியில் அதிகாரம் பெற்று தமது சொந்தக் கால்களில் நிற்கும் வலிமையையும், தன்னம்பிக்கையையும் பெற வேண்டும்.

வான்மழை சேமிப்போம்
™
வான் தந்த மழை நீரை முறையோடு சேமித்து நாம் வாழ்வதோடு, நமது சந்ததியினரும் மழை நீரின் அவசியம் பற்றி உணர்ந்து வாழ நாம் இப்போதே அதற்கு அடித்தளம் போட்டாக வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:25 pm

நீர்வளம் பெருக்குவோம்
™
மழை பெய்யும் போது அந்நீர் கடலில் சென்று வீணாகக் கலப்பதைத் தடுத்து முறையாகச் சேமித்து, பூமியில் செலுத்தினால் நிலத்தடி நீர் வளம் அதிகரிக்கும். கடல் நீர் உள்ளே புகாமல் நிலத்தடி நீரின் தரமும் உயரும், குடிநீர் ஆதாரமும் பெருகும்.

உலகு செழிக்க...
™
நீர் வளம் பெருகினால், நில வளம் பெருகும். நில வளம் பெருகினால், உலகம் செழிக்கும்.

அனைத்து வகையிலும் முன்னேற்றம்
™
தமிழ்நாடு ஓர் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெற வேண்டும். அதற்கு ஒவ்வொரு குடும்பமும், சமூக பொருளாதார வளர்ச்சியின் அனைத்து அம்சங்களிலும் முன்னேற வேண்டும்; வளர்ச்சி பெற வேண்டும். அடித்தள மக்கள் மேல் அளவற்ற அக்கறை ஏழை எளியோர், ஆதரவற்றோர், முதியோர், விதவைகள், நலிவுற்ற பிரிவினர், ஆகிய சமுதாயத்தின் அடித்தளத்து மக்களுக்குக் கைகொடுத்து, அவர்களை உயர்த்த வேண்டும் என்பதில், நான் அளவற்ற அக்கறை கொண்டுள்ளேன்.

தமிழ்மொழி பேணுவோம்
™
தொல் மொழிகளில் இன்று பேச்சு வழக்கில் இருந்து வருகின்ற ஒரே மொழி, நம் தமிழ் மொழியாகும். தமிழ் மொழியை நம் உயிரெனப் பேணிக் காத்து, எதிர்வரும் நூற்றாண்டுகளின் சவால்களை எதிர்கொள்கின்ற ஆற்றலையும் அறிவையும் அளிப்பதே, இன்றைய நமது கடமை.

ஆன்மீகப் பயிற்சி
™
கோயில்களுக்குச் சென்று வருவதையும், இறைவழி பாட்டில் ஈடுபட்டு வருவதையும், மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஆன்மீகப் பயிற்சியாக நமது முன்னோர்கள் கருதி வந்தார்கள்.

தனித்தன்மை மிக்க மொழி
™
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித் தன்மை இருப்பது உண்டு. ஆனால், நம் தமிழுக்கு இருக்கும் தனித் தன்மை வேறு மொழிகளுக்கு நிச்சயமாக இருக்காது. தான் சிதையாமல் மற்ற மொழிகளை வளர்க்கும் தனித் தன்மையும், ஆற்றலும் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.

உலகம் வியக்கும் தமிழ்
™
இளமை, இனிமை, தொன்மை, தெய்வீகத் தன்மை என்னும் அனைத்து நற்பண்புகளையும், முழுமையாகப் பெற்றுள்ள தமிழ் மொழி, ஒரு புறம் பழமைச் சிறப்புகளோடு விளங்குவதைப் போலவே, இன்னொரு புறம் இளமைத் துடிப்போடு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்து உலகம் வியக்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:26 pm

அருங்கலைகளின் இருப்பிடம்

™ தமிழகத்தைப் பொறுத்தவரையில், தொன்று தொட்டு திருக்கோயில்கள், அருங்கலைகளின் இருப்பிடங்களாகவும், நல்லொழுக்கத்தையும், நன்னெறிகளையும் போதிக்கின்ற கல்விச் சாலைகளாகவும், விளங்கி வந்துள்ளன.

ஆலயங்களின் அரும்பங்கு
™
பாரம்பரியச் சிறப்புமிக்க, சீரிய தமிழ்க் கலாச்சாரமும், பண்பாடும், இங்கு ஓங்கு சீர் புகழோடு விளங்குவதற்கு ஆலயங்கள் ஆற்றிய பங்கை நிச்சயமாகக் குறைத்து மதிப்பிட முடியாது.

சமுதாயத்தின் சொத்துக்கள்

™ ஆலயங்கள் சமுதாயத்தின் பொதுச் சொத்துக்களாகவும், சமூக, பொருளாதார வேறுபாடுகளால் பிரிவுபடாமல் அனைவரும் சமம் என்ற உணர்வை வளர்க்கும் புனிதத் தலங்களாகவும் திகழ்ந்து வருகின்றன.

நன்னெறிப் பாதை
™
நன்னெறிகளையும், நற்பண்புகளையும் வளர்த்து, மக்கள் மனங்களில் நியாய உணர்வுகள் மேலோங்கச் செய்கின்ற நல்வழி காட்டும் நன்னெறிப் பாதைகளாகத் திருக்கோயில்கள் தமிழகத்தில் செயல்பட்டு வந்துள்ளன.

தவிர்க்க முடியாத அங்கம்
™
திருக்கோயில்களைத் தங்கள் சமூக வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கங்களாகத் தமிழகத்து மக்கள் ஆண்டாண்டு காலமாகக் கருதி வருகின்றார்கள்.

உன்னத சமுதாயப் பணி
™
கோயில்கள் பொது மக்களின் சொத்துக்கள் ஜாதி, சமய வேறுபாடின்றி அனைவரும் கூடுகின்ற சமுதாயக் கூடங்கள், கல்விச்சாலைகள் என்கின்ற உணர்வோடு பார்க்கும் போது ஆலயத் திருப்பணி உண்மையிலேயே ஒரு உன்னத சமுதாயப் பணி என்பதில் சந்தேகம் இல்லை.

அனுபவச் சுரங்கம் தந்தை பெரியார்
™
தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு பலரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அனுபவச் சுரங்கம். இறக்கும்வரை சமூக மேம்பாட்டிற்காக உழைத்த ஒரு பெரிய தலைவர் நம்மிடம் உண்டென்றால் அது தந்தை பெரியார் தான்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 22, 2014 11:26 pm

சிவா wrote:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தையிலும் எழுத்திலும் பேச்சிலும் ஒளிர்ந்த கருத்துமணிகளைத் தொகுத்து “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்” எனும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் இந்த அழகிய சிறு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கோள் செய்த பதிவு: 1081557

அட போங்கப்பா, இந்த அம்மா புராணம் தாங்க முடியல, பேசாம தமிழ் நாட்டை அம்மா நாடு என்று பெயர் மாற்றம் செய்து விடுங்களேன்..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:27 pm

உலகத் தலைவர்கள் வரிசையில் முதலிடம்
™
பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றிப் பேசி அதற்காக உழைத்த உலகத் தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியார் அவர்களுக்கு முதலிடம் என்றைக்குமே உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.

பெரியாருக்கு பெண்மை தந்த சிறப்பு
™
நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருகிற மற்றொரு செய்தி, பெரியார் என்கிற சிறப்புப் பட்டம் 1938இல் சென்னையில் நடத்தப்பட்ட தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில்தான் அவருக்கு வழங்கப்பட்டது.

ஆசிரியர் - அரசு ஊழியர் கடமை
™
நாட்டிலேயே முதன்மையான மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற என்னுடைய கூர் நோக்கை மெய்யாக்குவதில் ஒவ்வொரு அரசுப் பணியாளரும், ஆசிரியரும் என்னோடு இணைந்துச் செயலாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும்.

தமிழ்நாட்டுப் பெண்களின் சாதுரியம்
™
ஒரு பெரியாரைக் கண்டுபிடிப்பதில் ஆண்களைவிடப் பெண்களுக்கு எப்படிப்பட்ட தொலைநோக்கு எண்ணம் இருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது இன்றும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதுவும் தமிழ்நாட்டுப் பெண்களுக்குத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கிற சாதுரியம், வேறு எந்த மாநிலப் பெண்களுக்கும் இல்லை என்றே கூற வேண்டும்.

பல்கலை வித்தகர் பேரறிஞர் அண்ணா
™
அரசியலில் கருத்து மாறுபட்டவர்களை அவர் வாழ்த்திய துணிவும், கட்சித் தொண்டர்களிடம் குடும்பப் பாசத்தைப் புகுத்திய திறனும், எழுத்தாற்றலில் பொருள் பொதிந்த அடுக்கு மொழிகளை அறிமுகப்படுத்திய விதமும், கலைத்துறையை முழுமையாக அரசியலுக்குப் பயன்படுத்தி வெற்றிகண்ட தன்மையும் அண்ணா ஒருவருக்கு மட்டுமே கைவரப்பெற்ற கலையாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:28 pm

அண்ணாவின் முழக்கம்
™
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்ற அவரது முழக்கம் என்றென்றும் அவர் வழி நடப்போர்களின் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

வன்முறை நாடா வரலாற்று நாயகர் - அண்ணா
™
அண்ணாவின் பெருந்தன்மை அகில உலகப் பெயர் பெற்றது. அண்ணாவின் சகிப்புத் தன்மை இமாலயப் பெருமை கொண்டது. உறுதியான கொள்கைப் பிடிப்புள்ள வலுவான தொண்டர்களின் தலைவரான அண்ணா வன்முறை நாடாத வரலாற்று நாயகர்.

ஏழைகளின் நம்பிக்கை நாயகர் புரட்சித்தலைவர்
™
கோடிக்கணக்கான ஏழைகளின் உதடுகளுக்குப் புன்னகையாகவும், புது நம்பிக்கையாகவும், தன் இளமைக் காலம் முதல், திரைப்படத் துறையிலும், அரசியல் வாழ்விலும் திகழ்ந்தவர் புரட்சித்தலைவர்.

வாரி வழங்கிய மன்னாதி மன்னன்
™
மக்களோடு பழகி, மக்களோடு வாழ்ந்து, மக்களுக்காக உழைத்து, மக்களுக்கு வாரி வழங்கி, மக்களுக்காகச் சிந்தித்து, ‘மக்கள் திலகமாய், ‘ மன்னாதி மன்னனாய்’, வாழ்ந்து மறைந்த அவரைத்தான், இன்று இலட்சோப இலட்சம் தமிழ் மக்கள், தங்கள் இதயக் கோயிலில் தங்க சிம்மாசனமிட்டு அமர்த்தி மகிழ்கிறார்கள். அவர் மக்களிடம் காட்டிய அன்பும், பரிவும் மக்கள் அவரிடம் காட்டிய ஆர்வமும், பாசமும், உலக வரலாறு காணாத அற்புதங்கள்.

எளிமை ஒளி வீசும் தலைவர் - காமராசர்
™
பெருந்தலைவர் காமராஜர் அவருடைய எளிமை தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே வசீகரித்தது. பெருந்தலைவர் காமராஜர் உடையில் மட்டுமல்ல; உணவில், பிறருடன் பழகுவதில், மேடை பேச்சு இப்படி எல்லாவற்றிலும் அவருடைய எளிமை ஒளி வீசியது. என்றும் நினைவில் வாழும் பெருந்தலைவர் ™ பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்து நூறாண்டுகள் கடந்த போதிலும் நம்முடைய நினைவிலே அவருடைய எளிமையால் தன்னலமற்ற தொண்டால் நாட்டுப் பற்றால் புரிந்த தியாகத்தால்- வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

பெருந்தலைவரின் வாழ்க்கை சுட்டிக்காட்டும் உண்மை

™ பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அத்தனை பண்பு நலன்களையும் கைக்கொள்ள முடியாவிட்டாலும், அவற்றில் ஒரு சிலவற்றையாவது இன்று அரசியலுக்கு வர விரும்புவோர் பின்பற்ற வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை நமக்குச் சுட்டிக் காட்டுகின்ற உண்மையாகும்.

உணவுப் பாதுகாப்பு தரும் உன்னதத் திட்டம்
™
இலவச அரிசி என்பது மக்களுக்கு உண்மையிலேயே உணவுப் பாதுகாப்பை அளிக்கக்கூடிய திட்டம்.

துறைதோறும் முதன்மை
™
ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தை முதன்மையான இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற இலக்கை நான் கொண்டுள்ளேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:29 pm

மனித வள மேம்பாட்டின் முழு முதல் நடவடிக்கை
™
மனித வளம் மேம்பாடு அடையச் செய்யும் நடவடிக்கைகளை எனது அரசு முனைப்போடு செயல்படுத்தும். மனித வள மேம்பாட்டில் முழு முதல் நடவடிக்கையாக பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கும் திட்டத்தை 1982-லேயே கொண்டு வந்தவர் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். அப்போது சத்துணவுத் திட்டத்தின் உயர் மட்டக் குழு உறுப்பினராக இருந்தவள் நான். எனவே தான், இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் காட்டிய வழியில் அவருடைய கொள்கைகளைக் கடைப்பிடித்து அரசின் கொள்கைகளை வகுத்து வருகிறோம்.

அயராது பாடுபடுவோம்
™
“நான் இந்த மக்களுக்காகவே வாழ்ந்த கொண்டிருக்கின்றேன். அவர்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தமிழக அரசு திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயல்படுத்தி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கவும், பெண்களுக்காகப் பல நலத்திட்டங்கள் உருவாக்கிச் செயலாக்கவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் எவருமே இருக்கக் கூடாது என்ற இலட்சியத்தை நிறைவேற்றிடவும் அயராது பாடுபடுவதே எனது குறிக்கோள்”

மக்களின் பக்கம் நாம்
™
மக்கள் நம் பக்கம் இருக்கிறார்களா என்பதை விட மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பதே எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது. என்னை நம்புகின்ற மக்களுக்கு என்ன என்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ அந்த வழிகளைப் பற்றியே நான் சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். அதனால்தான் என் அன்பிற்குரிய மக்களாகிய நீங்கள் எப்பொழுதும் என் பக்கம் இருக்கிறீர்கள்.

மழை பெற மரம் வளர்ப்போம்
™
மழை பெய்யும் போது மழை நீர் சேகரிப்பது என்பது ஒருபுறம் இருக்க, நல்ல மழை பொழிய வேண்டும் என்றால், அதற்கு எது ஆதாரம் என்பதையும், நாம் புரிந்து கொள்ள வேண்டும். மரங்களே மழைக்கு ஆதாரம். எனவே, “மரங்களை வளர்ப்போம்! மழையினைப் பெறுவோம்”

மரங்களைக் காப்போம்
™
மரங்கள், மனித குலத்துக்குச் செய்யும் நன்மைகள், அற்புதமானவை. அந்த மரம், செடி, கொடிகளைக் காப்பது, நமது மாபெரும் கடமை. எனவே, நம்மைக் காக்கும் மரங்களை நாம் காப்போம் என்று உறுதியெடுத்துக் கொள்வோம்.

நிச்சய வெற்றி பெற...
™
அரசு உதவிகளைப் பெற்றுக் கொள்கின்ற பயனாளிகள் அனைவருக்கும், ஒன்றை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எந்தத் தொழிலை நீங்கள் செய்தாலும் அதை நீங்கள் செம்மையாகச் செய்ய வேண்டும் அப்படிச் செய்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயமாக உங்களை வந்து அடையும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:30 pm

அனைத்துப் பிரிவினருக்கும் பாதுகாப்பு
™
சமூகத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சமுதாய நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகாண முடியும் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒற்றுமை காக்க உறுதி செய்வோம்
™
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளை விக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகளை இனியும் அனுமதிக்க முடியாது என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

நம்பிக்கை ஏற்படுத்துவோம்
™
மதச்சார்பற்ற கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக்கு வழி காண முடியும் என்ற ஒரு நம்பிக்கையையும் சிறுபான்மையினருக்கு ஏற்படுத்திட வேண்டும்.

பன்முகம் கொண்ட தொன்மை நாகரிகம்

™ நில இயலில், இனத்தில், கலாச்சாரத்தில், மதத்தில் பன்முகங்களைக் கொண்ட தொன்மையான நாகரிகம்தான் இந்தியா. நம் நாட்டின் பன்முகத் தன்மையைக் கருத்தில் கொள்ளும் போது உயிர்த்துடிப்பான மத நல்லிணக்கத்தின் மூலமே நம் நாட்டின் ஒற்றுமையைப் பேண முடியும்.

“சர்வ தர்மா சம்பவா”
™
நமது சமுதாயத்தில் உள்ள பல்வேறு சமூகங்களின் பலதரப்பட்ட கலாச்சார, மதக் கோட்பாடுகளின் கலவைதான் இந்தியாவின் மதச்சார்பின்மை. நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள பல்வேறு மதங்கள் ஒன்றாக வாழ்வதுதான் “சர்வ தர்மா சம்பவா” என்கிற தத்துவமாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் சாராம்சம்
™
நமது நாடு, பல மதங்கள் வேறூன்றி உள்ள நாடு என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு மதத்திற்கும் அதற்குரிய இடம் அளிக்க வேண்டும். ஒரு மதம் மற்றொரு மதத்தின் வழியில் குறுக்கிடக் கூடாது. பெரும்பான்மையின மக்கள், பெறும் அனைத்து சலுகைகளும், உரிமைகளும், சிறுபான்மையினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நமது மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தின் சாராம்சம்.

நாட்டின் இன்றைய தேவை
™
மத வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து, பல மத, கலாச்சார, மொழி பேசுபவர்கள் ஒன்றாகச் செயல்பட்டு, பரஸ்பர நம்பிக்கையும் ஒத்துழைப்பும் உருவாக்குவதே தற்போதைய நாட்டின் தேவை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக