புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 19:42

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 19:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:32

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 19:29

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:52

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:32

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 15:09

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
44 Posts - 44%
heezulia
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
41 Posts - 41%
T.N.Balasubramanian
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
jairam
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
171 Posts - 50%
ayyasamy ram
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
127 Posts - 37%
mohamed nizamudeen
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
jairam
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_m10கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri 12 Sep 2014 - 13:01

First topic message reminder :

அகந்தை அழிந்தது எப்படி?
- தென்கச்சி சுவாமிநாதன்


அ து மிகவும் பழைமையான ஒரு கோயில். அங்கே அர்ச்சகர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே பிரம்மச் சாரிகள். ஆகவே, அவர்கள் உடலில் வலிவு இருந்தது. முகத்தில் பொலிவு இருந்தது.
ஒரு நாள் -
அந்த ஆலயத்தின் முன்னால் சில குதி ரைகள் வந்து நின்றன. அவற்றிலிருந்து சில வீரர்கள் கீழே இறங்கினார்கள். உள்ளே வந் தார்கள்.
‘‘நாங்கள் அரண்மனையிலிருந்து வருகி றோம்’’ என்றார்கள் அந்த வீரர்கள்.
‘‘வாருங்கள்’’ என்றனர் அர்ச்சகர்கள்.
‘‘மன்னர் எங்களை அனுப்பி வைத்தார்!’’
‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’
‘‘நீங்கள்தான் வேண்டும்!’’
‘‘அப்படியென்றால்?’’
‘‘உங்களை அழைத்து வரச் சொன்னார் மன்னர்!’’
அர்ச்சகர்கள் அலட்சியமாக அவர்களைப் பார்த்தார்கள். ‘‘அரசனை வேண்டுமானால் இங்கே வரச்சொல்லுங்கள்!’’
அழைக்க வந்தவர்கள் திகைத்துப் போனார்கள். திரும்பிப் போனார்கள். அரசனிடம் விவரத்தைச் சொன்னார்கள். அரசர், அமைச்சர்களை வரச் சொன்னார். ஆலோசனை நடத்தினார்.
‘‘அர்ச்சகர்களின் அகந்தை அடங்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?’’
ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி செய்தார்கள்.
அவ்வளவுதான். அதன் பிறகு அந்த அர்ச்சகர்களை அரண்மனைக்குக் கூப்பிட்டு அனுப்ப வேண்டிய அவசியமே வரவில்லை! அவர்களாகவே தேடி வர ஆரம்பித்தார்கள். ‘‘மன்னா! தங்களை ஆசீர்வாதம் பண்ண வந்திருக்கிறோம். இதோ அர்ச்சித்த மலர்களைக் கொண்டு வந்திருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள்!’’ என்றார்கள்.
கூடவே சில கோரிக்கைகளையும் வைத்தார்கள். ‘‘மன்னா! நாங்கள் வீடு கட்ட வேண்டும். வீடுகளில் சில விழாக்களையும் சடங்குகளையும் நடத்த வேண்டும். அதற்கு நீங்கள்தான் அருள் புரிய வேண் டும்!’’
அர்ச்சகர்களின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?
அரசன் என்ன செய்தார்?
வேறொன்றுமில்லை... அர்ச்சகர்கள் அத்தனை பேருக்கும் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார். அவ்வளவுதான். அதன் பின், சொன்னபடி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அர்ச்சகர்கள். இது, குருதேவர் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதை.
நண்பர்களே! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த உலகில் மூன்று வகைத் துறவுகள் இருப்பதாகச் சான்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தல் - சமயத் துறவு. அதிகாரத்துக்காக வெறுத்தல் - போர்த் துறவு.
பணத்துக்காக வெறுத்தல் - பணத் துறவு.
இந்த மூன்றாவது வகைத் துறவே இன்றைக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

தொடரும்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri 12 Sep 2014 - 16:28

சுறுசுறுப்பு டானிக்!


‘‘எ ன்ன... இப்படி சோர்ந்து போய் நடந்து வந்துக்கிட்டு இருக்கே?’’

‘‘நடக்கவே முடியலை... அவ்வளவு சோர்வு. உடம்பில் ஏதோ கோளாறு... டாக்டர்கிட்டே போகணும்!’’

‘‘அதுக்கும் முன்னாடி கடற்கரைப் பக்கம் போகலாம் வா!’’

‘‘அங்கே எதுக்கு?’’

‘‘அங்கே ஒருத்தன் ‘சுறுசுறுப்பு டானிக்’ விற்கிறான். தினமும் காலையிலேயே ஒரு ‘ஸ்பூன்’ சாப்பிட்டா போதும். நாள்பூரா உற்சாகமா இருக்கும். சுறுசுறுப்பு தானா வந்துடும்.!’’

‘‘அப்படியா சொல்றே?’’

‘‘ஆமாம்... நான் கூட வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன். நல்ல பலன் இருக்கு... நிறைய பேர் தினம் வந்து வாங்கிட்டுப் போறாங்க!’’

‘‘அப்படின்னா சரி... வா போகலாம்!’’

இருவரும் கடற்கரை நோக்கி நடந்தார்கள்.

அங்கே அவன் அந்த மருந்தை (டானிக்!) விற்றுக் கொண்டிருந்தான்.

அது அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தது.

இவனும் போய் ஒரு பாட்டில் மருந்து வாங்கிக் கொண்டான். அதன் பிறகு அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

என்ன ஆச்சரியம்!
சோர்வாக இருந்த உடம்புக்குள் சுறுசுறுப்பு தெரிய ஆரம்பித்தது.

உற்சாகமாக நடக்க ஆரம்பித்தான். நண்பனைத் தேடிப் போய் நன்றி சொன்னான், ஒரு நல்ல மருந்தை அறிமுகம் செய்து வைத்ததற்காக!

கொஞ்ச காலம் கழிந்தது.

கைவசம் இருந்த மருந்து தீர்ந்து போனது.
மறுபடியும் வாங்க வேண்டும்.
கடற்கரைக்குப் போனான்.

அங்கே அவனைக் காணவில்லை. மருந்து விற்பவன் என்ன ஆனான்? வேறு ஊருக்கு போயிருப்பானோ?

பல ஊர்களிலும் தேடிப் பார்த்தார்கள். பலன் இல்லை.
இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு நாள்- இவர்கள் கடற்கரைக்குப் போனபோது அங்கே அவன் இருந்தான்.

இப்போது அவன் மருந்து விற்பனை செய்யவில்லை. பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.
‘‘என்ன ஆச்சு உனக்கு... எங்கேயெல்லாம் உன்னைத் தேடுறது? அந்த ‘சுறுசுறுப்பு டானிக்’ இன்னும் கொஞ்சம் வேணுமே? அதுசரி... இவ்வளவு நாள் எங்கே இருந்தே?’’

‘‘ஜெயில்லே இருந்தேன்...!’’

‘‘ஜெயிலா? என்ன ஆச்சு?’’

‘‘போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் சிறைத் தண்டனை!’’

‘‘போலி மருந்தா... என்ன சொல்றே?’’

‘‘ஆமாம்... நான் உங்ககிட்டே விற்பனை பண்ணினது உண்மையிலேயே சுறுசுறுப்பு டானிக் இல்லை!’’

‘‘அப்படிச் சொல்லாதே! அதைச் சாப்பிட்டதும் எங்க உடம்பு சுறுசுறுப்பு ஏற்பட்டது உண்மை!’’

‘‘இருக்கலாம். அதுக்குக் காரணம் மருந்து இல்லை... நம்பிக்கை!’’

‘‘என்னப்பா சொல்றே?’’

‘‘நான் உங்ககிட்டே வித்தது வெறும் தண்ணிதான். உப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இதையெல்லாம் பொடி செய்து அதுலே கலந்திருந்தேன்... அவ்வளவுதான். இதைச் சாப்பிட்டதும் சுறுசுறுப்பு வந்துட்டதா நீங்க நினைச்சிட்டீங்க. உங்க நினைப்புதான் உங்களின் உந்து சக்தி!’’
இப்படி சொல்லிவிட்டு அந்த மனிதன் பலூன் விற்கப் போய்விட்டான்.

இவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒரு சிக்கலான கேள்விக்கு விடை கிடைத்தது.

கேள்வி: நமக்கு முக்கியம் கடவுளா? கடவுள் நம்பிக்கையா?
பதில்: கடவுளை விடவும் மேலானது கடவுள் நம்பிக்கை!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri 12 Sep 2014 - 16:31

‘என்னை அடையாளம் தெரிகிறதா?’

அ வன் ஒரு சராசரி மனிதன்தான்.
ஆனாலும் அடுத்தவர் களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவ வேண்டும் என்று நினைப்பவன். ஒரு நாள் அவன் கடை வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தான்.

அப்போது அவன் எதிரே ஒருவன் வந்து நின்றான். ‘‘ஐயா! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?’’ என்றான்.

‘‘இல்லையே...’’

‘‘என்னை உங்களுக்கு நினைவிருக்காது. ஆனாலும், உங்களை என்னால் மறக்க முடியாது!’’

‘‘என்ன சொல்கிறாய்?’’

‘‘பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊருக்கு நான் வந்திருந்தேன். அப்போது உங்களைச் சந்தித்தேன். உங்களிடம் கொஞ்சம் பணம் கேட்டேன். உடனே நீங்கள், ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து ‘ஒரு மனிதனை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல இது உதவியாக இருக்கட்டும்’ என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள்!’’

‘‘அப்படியா...?’’

‘‘ஆமாம். அதை நான் மறக்க முடியாது... எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தீர்கள்... அதை நன்றியோடு நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் உங்களைப் பார்த்து...!’’

‘‘அடடா! இதற்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. எப்படியோ நீ நல்ல படியா இருந்தால் அதுவே போதும்... இதற்காகவா இவ்வளவு தூரம் தேடி வந்தாய்?’’

‘‘அதுக்காக இல்லீங்க!’’

‘‘பின்னே... வேறே எதுக்கு?’’

‘‘இப்போ மறுபடியும் அது மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தர முடியுமானு கேட்கற துக்கு வந்தேன்!’’

அவ்வளவுதான், எதிரே இருந்தவர் மாயமாக மறைந்து போனார்!

ஏனென்றால், அவர் கடவுள் மாதிரி.

இன்றைக்குக் கடவுளின் நிலைமையும் இதுதான். திரும்பத் திரும்பத் தேடி வந்து உதவி கேட்கிற பக்தர்களே இன்றைக்கு அதிகமாகிப் போனார்கள்.

ஒரு நோயாளி மருத்துவமனைக்குப் போகிறான். நோய் குணமாகிறது. வீட்டுக்குத் திரும்பி வந்து விடுகிறான். மறுபடியும் மறுபடியும் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்று அவன் விரும்பக் கூடாது.

ஆலயத்துக்குப் போகிறவர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். அங்கு இருப்பவனே, நம்முள்ளேயும் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் அங்கே போகிறோம்.
அந்த உண்மை புரிந்துவிட்டால், அங்கே போக வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவர்களும் இதைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு நாம் வழிவிடலாம்.
ஆனால், இன்றைக்கு எவரிடமும் புரிந்துகொள்ளும் இந்தப் பக்குவம் இல்லை. எனவே, அங்கு செல்லும் அவசியம் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. அதனால்தான் ஆலயங்களில் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 12 Sep 2014 - 16:42

தென்கச்சியாரின் பேச்சுக்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்! அவருடைய பேச்சுக்களடங்கிய எம்பி3 நிறைய வைத்துள்ளேன்.

அவருடைய கதைகளை அள்ளித் தந்துள்ளீர்கள், இதைப் படிப்பவர்கள் அனைவருக்கும் இன்றைய நாள் மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பாராட்டுக்கள் தமிழ்நேசன்!



கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri 12 Sep 2014 - 16:44

ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!

ஆமாம்!
இப்போது டாக்டருக்கும் தலைவலி!

மதவாதிகளே!
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!

இன்றைய நிலையை சரியாக சொல்லியிருக்கிறார் .
அருமை




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri 12 Sep 2014 - 18:14

ஆலயத்துக்குப் போகிறவர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். அங்கு இருப்பவனே, நம்முள்ளேயும் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் அங்கே போகிறோம்.
அந்த உண்மை புரிந்துவிட்டால், அங்கே போக வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவர்களும் இதைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு நாம் வழிவிடலாம்.
ஆனால், இன்றைக்கு எவரிடமும் புரிந்துகொள்ளும் இந்தப் பக்குவம் இல்லை. எனவே, அங்கு செல்லும் அவசியம் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. அதனால்தான் ஆலயங்களில் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது!


மிகப்பெரிய தத்துவத்தை இப்படி சாதாரண சிறுகதை மூலம் சொல்லும் திறமை அவரையே சாரும்.
நன்றி !!! இந்த பதிவிற்கு !!!




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun 14 Sep 2014 - 22:38

கடவுளைக் காணவில்லை!


ஓ ர் ஆடம்பரமான மாளிகை. அங்கே ஒரு பாட்டி வாழ்ந்து வந்தாள். அந்தப் பாட்டிக்குப் பார்வை சரியில்லை.

ஒரு நாள் அந்தப் பாட்டி பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தாள். ‘‘என் பார்வையை மீட்டுத் தருகிறவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் தரத் தயார்!’’

ஒரு டாக்டர் வந்தார்.

‘‘உங்கள் பார்வையை நான் சரி செய்ய முடியும்!’’ என்றார்.

உடனே ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். சிகிச்சை ஆரம்பமாயிற்று.

டாக்டர் தினமும் வருவார். சிகிச்சை கொடுப்பார். திரும்பிப் போவார்.

ஒரு நாள் அங்கே இருந்த ஒரு கடவுள் சிலை அவர் கண்ணில் பட்டது.

அழகான சிலை. ஐம்பொன்னால் செய்யப்பட்டது. டாக்டர் மனதில் ஒரு சின்ன சபலம். ‘இந்த அம்மாவுக்குத்தான் பார்வை சரியில்லை... இந்த அழகான சிலையை நாம் எடுத்துக் கொண்டு போனால் என்ன?’

சபலம் ஒரு நாள் செயல் வடிவம் பெற்றது. பாட்டி வீட்டில் இருந்த கடவுள் சிலை காணாமல் போனது!

டாக்டர் வீட்டில் காட்சி கொடுக்க ஆரம்பித்தது அந்தச் சிலை.

சில மாதங்களில் சிகிச்சை முடிந்தது.

பாட்டி கண்களைத் திறந்தாள்.

பார்வை தெரிந்தது. விவரமும் புரிந்தது.

கடவுளைக் காணவில்லையே!

இது டாக்டருடைய வேலையாகத்தான் இருக்க வேண்டும்.

இருந்தாலும் எப்படி அதை நிரூபிப்பது?

டாக்டரிடமிருந்து சிகிச்சைக்கான பில் வந்தது. பாட்டி பணம் தர மறுத்தாள்.

டாக்டர் கோர்ட்டுக்குப் போனார்.

‘‘ஒப்பந்தப்படி பாட்டியின் கண்களைக் குணப்படுத்தினேன். பணம் கொடுக்க மறுக்கிறார்!’’ என்றார் டாக்டர்.

பாட்டி ஆரம்பித்தார்: நீதிபதி அவர்களே! அவர் சொன்ன மாதிரி என் கண்கள் குணமாகவில்லை. பார்வை திரும்பவில்லை. எனக்குப் பார்வை வந்திருக்குமானால், எனது வீட்டில் இருந்த கடவுள் சிலை கண்ணில் பட்டிருக்க வேண்டுமே! அதை என்னால் பார்க்க முடியவில்லையே...!’’

நீதிபதி புரிந்து கொண்டார்.

சிலையைத் திரும்பக் கொடுத்தார் டாக்டர்.

பாட்டி பணத்தைக் கொடுத்தாள்.
வழக்கு முடிந்தது.

இந்தப் பாட்டி, கடவுளின் இருப்பிடத்தைச் சரியாகக் கண்டுபிடிக்க எது காரணம்?
விழியின் வெளிச்சமா? அறிவின் வெளிச்சமா?

அகத்தே இருக்கிற ஒன்று, புறத்தே இருக்கிற ஒன்றுக்கு எப்படித் தெரியும்?
நண்பர்களே!

கடவுளைக் கண்களால் தேடாதீர்கள்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun 14 Sep 2014 - 22:40

வாலைப் பிடித்தால் வழி கிடைக்குமா?

ஆ ற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான்.

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.
போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’
தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகி றார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun 14 Sep 2014 - 22:42

ஓ ர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.
‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.
‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’
‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.

இப்போது அவன் சிரித்தான்.

‘‘ஏன் சிரிக்கிறாய்?’’

‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?’’

மக்கள் யோசித்தார்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப்பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம்.

இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது.

அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது?

அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டி ருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’

‘‘எது பொய் என்கிறாய்?’’

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’

நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.
அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டி ருக்கிறான்!’’



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun 14 Sep 2014 - 22:44

கோபத்தை விரட்ட என்ன செய்வது?

ஒ ருத்தர் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
‘‘என்னங்க இது?’’ என்றார் எதிரே வந்த நண்பர்
.
‘‘எல்லாம் கோபத்தினால் வந்த விளைவு!’’ என்றார் அவர்.

‘‘கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்?’’

‘‘குடும்பத்துல சண்டை. ஆத்திரப்பட்டு என்னமோ சொல்லிப்புட்டேன்... அதுக்காக ஏதோ ஒரு பாத்திரத்தை எடுத்து என் முகத்துக்கு நேரா வீசிப்புட்டா என் வீட்டுக்காரி... அவ்வளவுதான்!’’

‘‘குடும்பம்னு இருந்தா இதெல்லாம் சகஜம்தானே...!’’

‘‘உங்க வீட்டுலேயும் இப்படி நடக்கறது உண்டா?’’

‘‘தாராளமா உண்டு!’’

‘‘ஆனா, உங்க தலையில கட்டு எதையும் காணோமே..?’’

‘‘நாம கொஞ்சம் அனுசரிச்சு நடந்துகிட்டா எதுவும் பிரச்னை வராது!’’

‘‘எப்படி அனுசரிச்சுப் போறது...? அதைக் கொஞ்சம் எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்?’’

‘‘சொல்லிக் கொடுக்கறேன். அதுக்கு முன்னாடி ஓர் உண்மையைப் புரிஞ்சிக்கணும்!’’

‘‘என்ன அது?’’

‘‘கோபம்கறது ஒரு தற்காலிகப் பைத்தியம் தான்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். தற்காலிகமா ஒருத்தருக்குப் பிடிக்கிற பைத்தியம்தான் கோபம். அந்த நேரத்துலே அவரு மறைச்சு வெச்சிருக்கிற பைத்தியக்காரத்தனம் வெடிச்சிக்கிட்டு வெளியிலே வருது... அவ்வளவு தான்!’’

‘‘சரி.. இப்ப என்ன செய்யலாம்கறீங்க?’’

‘‘கோபம் வர்ற நேரத்துல நாம் ஒரு காரியம் செய்யலாம்.. அதாவது அஞ்சு தடவை நம்ம மூச்சை ஆழமா உள்ளே இழுத்து மெதுவா மெள்ள வெளியே விடணும்.’’

‘‘அப்படி செஞ்சா...?’’

‘‘மனசுலே கோபத்துக்குப் பதிலா சுவாசம் பத்தின சிந்தனை ஏறும். இதுக்கப்புறம் கோபம் வந்தா கூட அது தீவிரமா இருக்காது. இதைத் தொடர்ந்து செஞ்சா அது ஒரு பழக்கமாகவே ஆயிடும். ஆத்திரத்தை விரட்ட, ஆன்மிகம் சொல்லிக் கொடுக்கிற ஒரு சுலபமான வழி இது!’’
‘‘நீங்க இந்த வழியைத்தான் கடைப்பிடிக்கிறீங்களா?’’

‘‘இல்லை.. அது வேறே வழி!’’

‘‘எப்படி அது?’’

‘‘என் மனைவிக்குத் திடீர் திடீர்னு பயங்கரமா கோபம் வந்துடும். கோபம் வந்துட்டா கையிலே கிடைக்கிற பாத்திரத்தையெல்லாம் எடுத்து என் முகத்துக்கு நேரா வீசறது உண்டு!’’

‘‘அதை எப்படி சமாளிக்கிறீங்க?’’

‘‘அது ரொம்ப சுலபம்.. ஒரு தலையணையை எடுத்து என் முகத்துக்கு நேரா பிடிச்சுக்குவேன்..!’’


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun 14 Sep 2014 - 22:45

சாலையைக் கடந்தாரா பெரியவர்?

ஆ லயம் ஒன்றில் ஆன்மிக உபதேசம் நடந்து கொண்டிருந்தது.

‘‘அடுத்தவர்களுக்கு உதவுங்கள்... ஆண்டவன் உங்களுக்கு உதவுவார்!’’

கூட்டம் முடிந்ததும் மூன்று இளைஞர்கள் எழுந்து வந்தனர்.

‘‘ஐயா! உங்கள் உபதேசப்படி நடக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும்.... எப்படிச் செய்ய வேண்டும்.... சொல்லுங்கள்.... செய்கிறோம்!’’

‘‘எது வேண்டுமானாலும் செய்யலாம். இப்ப உதாரணத்துக்கு, வயசான ஒரு பெரியவர் சாலையைக் கடக்கறதுக்கு நீங்க உதவலாம்!’’

இளைஞர்கள் ஆர்வத்தோடு போனார்கள்.

அடுத்த வாரம் திரும்பி வந்தார்கள்.

பெரியவர் கேட்டார்.

‘‘என்ன... யாருக்காவது உதவி செய்தீர்களா?’’

‘‘செய்தோம்!’’ என்றார்கள் மூன்று பேரும்.

‘‘என்ன செய்தீர்கள்? ஒவ்வொருவராக வந்து சொல்லுங்கள்... பார்க்கலாம்!’’

முதல் இளைஞன் வந்தான்.

‘‘முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க நான் உதவினேன்!’’

பெரியவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

உபதேசத்துக்குத் தக்க பலன் கிடைத்ததாக உணர்ந்து பெருமைப்பட்டார்.

அடுத்த இளைஞனைக் கூப்பிட்டுக் கேட்டார்: ‘‘நீ என்ன செய்தாய்?’’

‘‘நானும் வயசான பெரியவர் ஒருவர் சாலையைக் கடக்க உதவினேன்!’’

பெரியவர் கொஞ்சம் யோசித்தார். அப்புறம் அடுத்தவனை அழைத்தார்:

‘‘நீ என்ன செய்தாய்?’’

‘‘நானும் முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க உதவினேன்!’’

பெரியவருக்குச் சந்தேகம்.

‘‘எப்படி இது... உங்க மூன்று பேருக்கும் மூன்று பெரியவர்கள் கிடைத்தார்களா?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை.. ஒரே பெரியவர்தான்!’’

‘‘என்னது... அந்த ஒருத்தர் சாலையைக் கடக்க நீங்க மூணு பேர் தேவைப்பட்டதா?’’

‘‘மூணு பேர் இருந்தும் அது சிரமமாத்தான் இருந்தது!’’

‘‘என்ன சொல்றீங்க?’’

‘‘அந்தப் பெரியவர் சாலையைக் கடக்க விரும்பலே... இருந்தாலும் வலுக்கட்டாயமா நாங்க அவரைத் தூக்கிக் கொண்டு போய் அடுத்த பக்கத்திலே விட்டோம்!’’

நண்பர்களே! ‘ஆண்டவனை உச்சரிக்கிற உதடுகளை விட அடுத்தவனுக்கு உதவுகிற கரங்கள் மேலானவை!’ என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

உண்மைதான்! ஆனாலும் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். திட்டம் போட்டுச் செய்கிற உதவி- அரசியல்.

திட்டம் போடாமல் செய்கிற உதவி- ஆன்மிகம்!


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக