புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10 
10 Posts - 53%
heezulia
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10 
52 Posts - 60%
heezulia
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:07 pm

First topic message reminder :

புகழ் மயக்கம்

புகழுக்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டா?
சமூக சேவகர் ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் கருப்பசாமி. அவருடைய அப்பா பெயர் எல்லப்பன். ஆகவே, எ.கருப்பசாமி! படாடோபம் இல்லாத எளிமையானவர்; காலுக்குச் செருப்புகூட போடமாட்டார். என்ன வெயில் அடித்தாலும், காலைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு போனாலும் போவாரே தவிர, செருப்பு போடமாட்டார்!
எ.கருப்பசாமியின் சமூக சேவைகளை அக்கம்பக்கத்தவர் புகழத் தொடங்கினர். 'எ.கருப்பசாமி என்றால் எளிமை கருப்பசாமி' என்று ஒரு கூட்டத்தில் யாரோ பேசி வைக்க, அவரது பெயர் எளிமை கருப்பசாமி என்றே ஆகிவிட்டது. பெயரில் எளிமை வந்து ஒட்டிக்கொண்டதால், முன்பைவிட அதிக எளிமையாக இருக்கத் தொடங்கினார் கருப்பசாமி. ஆரம்பத்தில் இயல்பான எளிமையுடன் இருந்தவர்... இப்போது, தனது ஒவ்வொரு செயலிலும் நடவடிக்கையிலும் எளிமை இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினார்.

இஸ்திரி போட்ட சட்டை போடமாட்டார். எப்போதும் துவைத்த வேட்டி-சட்டைதான். ஒருதடவை இவரது வேட்டி-சட்டையைச் சலவைக்குப் போட்டுவிட்டாள் இவரின் மனைவி. சலவையிலிருந்து வந்த அத்தனை துணிகளையும் தண்ணீரில் போட்டு நனைத்து, சுருக்கத்துடன்தான் போட்டுக்கொண்டார்!
அவர் எளிமையாக இருக்க இருக்க, அவரது புகழ் மேலும் பரவியது. நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் நின்றே தீரவேண்டும் என்று பேட்டைவாசிகள் அவரை வேண்டினர். எளிமை கருப்பசாமி முதலில் மறுத்தாலும், எல்லோரும் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டார்.
சுவரில் தனது பெயரை பெரிய எழுத்துக்களில் எழுதக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார். அப்பாவி சுவர் எழுத்தாளர் ஒருவருக்கு இது தெரியாமல், பெரிதாகக் கொட்டை எழுத்தில், 'எளிமை கருப்பசாமியை ஆதரிப்பீர்' என்று எழுதி வைத்துவிட்டார்.
இதைப் பார்த்து திகைத்த கருப்பசாமி, தாமே வீட்டிலிருந்து வாளியில் சுண்ணாம்பு கரைத்து எடுத்து வந்து எழுத்துக்களை அழித்தார். இதைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள், அவசர அவசரமாக வீடியோ கேமரா கொண்டு வந்து அந்தக் காட்சியைப் படம் பிடித்தனர்.
'தனது பெயரை தானே அழிக்கும் பிரமுகர்' என்று சில பத்திரிகைகளில் அவரது பெயரும் புகைப்படமும் வெளிவந்தன. ஏதோ ஒரு டி.வி. சேனலின் செய்தித் தொகுப்பில், அவர் சுண்ணாம்பு அடிக்கும் காட்சி ஒரு நிமிடம் வரக்கூடும் என்று தெரிந்தது. ஆனால், எந்தச் சேனலில், எந்த நேரத்தில் வரும் என்பது தெரியவில்லை. எல்லா சேனல்களையும் போட்டுப் போட்டுப் பார்த்தார். நண்பர்களிடமும், ஆதரவாளர்களிடமும் சொல்லி வைத்துத் தேடினார். ஆனாலும், பலனில்லை.
மிக சோகமாக இருந்தார். அப்போது அருகில் வந்தாள், அவரின் எட்டு வயது பேத்தி. ''தாத்தா! நீங்க என்ன பாக்கணும்... சேனலை மாத்திக்கிட்டே இருக்கீங்களே, ஏன்?'' என்று கேட்டாள்.
''நான் டி.வி-ல வருவேன்னாங்க! அதான்...''
''ஓகோ! நீங்க உங்களையே தேடுறீங்களாக்கும்! நீங்க இங்கதானே இருக்கீங்க; நீங்க செஞ்ச காரியமும் என்னான்னு உங்களுக்குத் தெரியும். அப்புறம் எதுக்கு தாத்தா சிரமப்படுறீங்க?'' என்று கேட்டாள் சிறுமி.
தாத்தா கருப்பசாமிக்கு வெட்கமாகிவிட்டது.
'என்னைப்போல எளிமையானவன் கிடையாது' என்று நினைப்பதும்கூட கர்வம்தான். 'அடியேன், அடியேன்' என்று பக்தர்கள் கூறிக்கொள்வது தங்களைத் தாழ்வுபடுத்திக்கொள்ளத்தான்.
குலசேகர ஆழ்வார் தமது 'முகுந்த மாலை'யில், ''லோகநாதா, உமது அடியார்க்கு அடியார் என்ற வரிசையில், ஏழாவது அடியேனாக என்னை நீர் நினைக்கவேண்டும்'' என்று தெய்வத்திடம் வேண்டுகிறார்.
'த்வத் ப்ருத்ய ப்ருத்ய, பரிசாரஹ ப்ருத்ய ப்ருத்ய, ப்ருத்யஸ்ய ப்ருத்ய, இதிமாம் ஸ்மர லோகநாத...'



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:45 pm

நம்ம ஆள் ஒருத்தர் பயங்கரமான வடைப் பிரியர். அவரது வாழ்க்கை லட்சியமே விதவிதமான வடைகளை வகை வகையாக ருசித்து, ரசித்துச் சாப்பிடுவதுதான்!
'இந்த ஓட்டலில் இந்த நேரத்துக்கு இந்த வடை போடுவான்; இன்ன நண்பர் வீட்டில் புதினா போட்ட மசால் வடை பிரமாதமாக இருக்கும். சங்கீத சீசனில், இன்ன சபாவுக்குப் போனால், கவிதை மாதிரி தயிர் வடை கிடைக்கும்’ என்றெல்லாம் வடை ஞானம் உள்ளவர்.
அவரது வடை மோகத்துக்குத் தடாலென தடை ஒன்று வந்தது. கிட்னி பகுதியில் வலிப் பதுபோல இருந்தது; மெடிக்கல் செக்கப்புக்குச் சென்றார். பரிசோதித்த டாக்டர், நண்பரின் தலையில் ஓர் இடியைப் போட்டார். ''பருப்பு வகையறாக்களில் புரோட்டீன் சத்து இருந்தா லும், ஓவராகச் சேர்த்தால், கிட்னியைப் பாதிக் கும்'' என்று எச்சரித்தார்.

மெடிக்கல் செக்கப்புக்கு செல்லும்போது, மனைவியை அழைத்துச்செல்வது மகா பிசகு. பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கிற கதைதான்!
வடைக்குத் தடை போட்டுவிட்டாள் நண்பரின் தர்ம பத்தினி. ரகசியக் 'கண்’காணிப்பு, 'காது’காணிப்பு, மூக்கு, வாய்காணிப்பு எல்லாம் தொடர்ந்தன!
நண்பர் பிரியத்துடன் சடை நாய் ஒன்றை வளர்த்து வந்தார். வடை நாய் என்றும் சொல்லலாம். காரணம், அதுவும், வடைப் பிரிய நாய்தான்!
தினமும் நாயை ஸ்பெஷல் சோப்பு போட்டுக் குளிப்பாட்டுவார். வாக்கிங் செல்லும்போது, கூடவே நாயையும் அழைத்துச் செல்வார்; வீடு வந்ததும், அதன் கால்களைக் கழுவிவிடுவார். கணவரின் இத்தனைப் பொறுப்பு உணர்ச்சி, மனைவியை ரொம்பவே கவர்ந்தது.
ஒருநாள், நண்பர் வெளியூர் போயிருந்தார். நாய் தனியே வாக்கிங் போய்விட்டு (ஊர் சுற்றிவிட்டு), எட்டு மணி வாக்கில் வீடு திரும்பியது. அதன் வாயில் எதையோ கவ்விக்கொண்டிருந்தது. எஜமானியம்மா, அதை அருகில் அழைக்க, கிட்டே வந்த நாய், அவள் முன் தான் கவ்வி வந்த பொட்டலத்தைப் போட்டது. பிரித்துப் பார்த்தாள். அதனுள்... முழு மசால் வடை!
வாக்கிங் அழைத்துச் செல்லும்போது, கடையிலிருந்து வடை வாங்கி வர, நாயை அருமையாகப் பழக்கி வைத்திருந்தார் மனிதர்! 'அடப்பாவி மனுசா! உன் மசால் வடை ஆசை, இத்தனைக் கேவலமானதா?!’ என்று இடிந்துபோனாள் மனைவி. 'ஒரு நாய்க்கு வாழ்க்கைப்பட்டதற்கு வெட்கப்படுகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுப் பிறந்தகம் சென்றவள்தான்; இன்றுவரை திரும்பினதாகத் தகவல் இல்லை.
நண்பரின் மசால் வடை ஆசை, மனைவியையே பிரித்துவிட்டது.
கீதையில் பகவான், அர்ஜுனனுக்குச் சொல்கிறார்... ''ஹே, அர்ஜுனா! மனம் என்பது அடக்குவதற்கு அரியது. அது நிலை யற்றது. அதில் சந்தேகமில்லை. ஆனால், பயிற்சியாலும் வைராக் கியத்தாலும் அதை அடக்க முடியும்!''
அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேனது கௌந்தேய வைராக்யேணச க்ருஹ்யதே
நண்பர் தன் நாய்க்குப் பயிற்சி கொடுத்துப் பழக்கியதற்குப் பதிலாக, தன் நாவுக்கும் மனசுக்கும் பயிற்சி கொடுத்துப் பழக்கியிருந்தால் பிரச்னையே இல்லையே!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:45 pm

'குழந்தை விடிய விடியப் படிக்கிறான்... சும்மா சொல் லக்கூடாது, பாவம்!'' என்கிறாள் தாய்.
''நல்ல பசி போலிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது பாவம், குழந்தை எட்டு இட்லி சாப்பிட்டான்!'' என்கிறாள் அதன் பாட்டி. குழந்தை எத்தனை இட்லிகளை விழுங்கினான் என்ற விவரத்தை இப்படி நைஸாக மற்றவர்களுக்குச் சொல்லிவிடும் பாட்டி, கூடவே அவன் பசியாக இருந்ததால்தான் அப்படிச் சாப்பிட்டான் என்ப தையும் குறிப்பிடுகிறாள்.
'சும்மா சொல்லக்கூடாது, பாவம்!’ என்கிற சொல்லடையை ஒரு தடவை உபயோகித்தால், குறைந்தபட்சம் நூறு கிராம் பொறாமையாவது குறையும் என்று பலர் நம்புகிறார்கள்.
''சும்மா சொல்லக்கூடாது பாவம், வர்ற மாசம் அவருக்கு ஆறு கச்சேரி! அது ஆனதும், கிளீவ்லாண்டில் மார்க்கண்டேய மகோத் ஸவம். சும்மா சொல்லக்கூடாது, பாவம்... என்னையும் கூட்டிண்டு போறேன்னு சொல்லியிருக்கார்'' என்று சங்கீத வித்வானின் பார்யாள் சொல்லும்போது, கேட்பவர் மனசில் பொறாமையே ஏற்படாது என்பது அவளின் நம்பிக்கை! பாவம், எவ்வளவு கஷ்டப் பட்டு விமானத்தில் ஏறிப் பறந்து, அவ்வளவு தூரம் போய் வியர்க்க விறுவிறுக்கக் கச்சேரி செய்துவிட்டு வருகிறார் என்று தான் கேட்கிறவர்களுக்கு நினைக்கத் தோன்றுமாம். பொறாமை என்பது கிஞ்சித்தும் ஏற்படவே படாதாம்!
அயல்நாட்டில் தன் பிள்ளை சம்பாதித்துக் கொழிப்பதை பிறத்தியாரிடம் சொல்லவேண்டும்; அதே நேரம், அவர்களின் வயிறு எரியாமல் நாசூக் காகவும் சொல்லவேண்டும். எப்படி? ஒரு மாமி இப்ப டிச் சொல்கிறாள்... ''எம் புள்ள ஆம்ஸர்டாமில்தான் ஏழெட்டு வருஷமா இருக்கான். சும்மா சொல்லக்கூடாது பாவம், மாசம் ஐம்பதாயிரம் டாலர் சம்பளம் வாங்கறான். அங்கேயே ஆபீசில் ஒரு வெள்ளைக்காரியை... சும்மா சொல்லக்கூடாது பாவம், ரொம்ப நல்ல பொண்ணாம். அவனுக்கு செக்ரெட்டரியாம். போன வாரம் அவளைக் கல்யாணம் பண்ணிண்டுட்டதாக போனில் தகவல் சொன்னான். சும்மா சொல்லக்கூடாது பாவம், அவளும் முப்பதாயிரம் டாலர் சம்பளம் வாங்கறாளாம்..!''
அந்தப் பெண்மணியிடம் ஒருமுறை, ''எதுக்காக மாமி இப்படி நீங்க வாய்க்கு வாய் 'சும்மா சொல்லக்கூடாது பாவம்’னு நீட்டி முழக்கிட்டிருக்கீங்க?'' என்று பளிச்சென்று கேட்டுவிட்டாள் ஒரு துடுக்குப் பெண்.
அதற்கு அந்த அம்மாள், ''நம்ம விஷயத்தில் பிறத்தியாருக்குப் பொறாமை ஏற்பட்டு, அந்தப் பொறாமை அவர்களுக்கே தீமையாக முடிந்துவிடக்கூடாதே என்கிற நல்ல எண் ணத்தினால்தான்!'' என்றாள்.
இதென்ன புதுக்கதை? பொறாமையால் பொறாமைப் படுகிறவர்களுக்கே தீங்கு நேருமா என்ன?
நேரும். பொறாமைக்காரனுக்குக் கேடு விளைவிக்க பேப்பரில் விளம்பரம் கொடுத்து ஆளைத் தேடவேண் டிய அவசியமில்லை; அவனுக்குக் கேடு விளைவிக்க அவனே போதும்! இதைத்தான் திருவள்ளுவர்,
'அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன்பது’
- என்று அழகாகச் சொன்னார்.
பொறாமைப்படாதிருப்பது கஷ்டமான காரியம்தான் என்றாலும், பொறாமைப்படாதிருக்க ஒரு சுருக்கு வழி உண்டு. தேவையானதெல்லாம் ஒரு புதுக் கண்ணோட்டம்தான்.
தாயுமானவரின் இரண்டு வரிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்...
'எங்கெங்கு பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங்கு இருப்பது நீயன்றோ பராபரமே’
இங்கே இருக்கும் உயிர்தான் அங்கேயும் இருக் கிறது; அதற்கு ஒரு நல்லது கிடைத்தால், இதற்கும் கிடைத்தது போலத்தானே! பின்னே, பொறாமை எதற்கு?


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:46 pm

தென்னாட்டில் உள்ள அநேக கோயில்களுக்கு என் நண்பன் நாராயணன் தன் குடும்பத்தோடு போய் வந்திருக்கிறான். முக்கியமாக, எங்காவது புதிதாக ஒரு கோயில் எழுப்பப்பட்டிருப்பது பற்றிக் கேள்விப் பட்டாலோ, அல்லது பத்திரிகைகளில் படித்துத் தெரிந்து கொண்டாலோ உடனே அதை தரிசனம் செய்யக் கிளம்பிவிடுவான். திரும்பி வந்ததும், அந்த அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துகொள்வான்.
அப்படித்தான், சமீபத்தில் போய் வந்த ஒரு பெருமாள் கோயிலின் அழகை வியந்து வியந்து என்னிடம் விவரித்தவன், ஒரு வேடிக்கையான விஷயத்தையும் சொன்னான்.

கோயிலில் பிரதான தெய்வமான நாராயணனின் சந்நிதிக்குப் போவது, ஏறக்குறைய திருப்பதி பெருமாளைத் தரிசிக்கச் செல்வது போன்றதுதானாம். நீண்ட கியூ, ஜெருகண்டி ஜெருகண்டி எல்லாம் உண்டு. கூடுதலாக, ஒரு சௌகரியமும் செய்திருக்கிறார்கள். நடக்கமுடியாத வயசாளிகளுக்கும் மற்றும் நடக்க இயலாதவர்களுக்கும் சக்கர நாற்காலி வசதி செய்திருக்கிறார்கள். சக்கர நாற்காலிக்குரிய கட்டணத்தைக் கட்டிவிட்டு, நம்முடன் வந்துள்ள முதியவரை நாற்காலியில் வைத்துத் தள்ளிச் செல்லலாம். அப்படி வருபவருக்கும், அவரது உதவியாளருக்கும் பிரத்தியேக சுருக்கு வழியில் சந்நிதிக்குச் செல்வதற்கான சலுகையும் உண்டு.
நாராயணன் தன் அனுபவத்தைத் தொடர்ந்து விவரித் தான். ''என்னால் நடக்கமுடியும். நடந்தே வருகிறேன் என்று எவ்வளவு சொன்னாலும், குமார் (அவனுடைய பிள்ளை) என்னை நடக்க அனுமதிக்கவில்லை. சக்கர நாற்காலியில் என்னை அமர்த்தி, தள்ளிக்கொண்டு வந்தான். 'கையும் காலும் திடமாக உருளைக்கிழங்கு மாதிரி இருக்கும் இந்த ஆளுக்கு என்ன கேடு? சக்கர நாற்காலியில் ஜம்முனு சவாரி செய்கிறானே!’ என்று பார்க்கிறவர்கள் நினைத்துக் கொள்ளப்போகிறார்களே என்று எனக்குக் கூச்சமாக இருந் தது. கூச்சத்தைவிட, மற்றவர்கள் பொறாமைப்படுவார்களே என்றும் ஒரு குறுகுறுப்பு தோன்றிக்கொண்டிருந்தது. அதனால் சட்டென்று ஒரு காரியம் செய்தேன். கையை வளைத்தாற் போல் வைத்துக்கொண்டு, பக்கவாதத்தால் தாக்கப்பட்ட கை மாதிரி அதை ஸ்வாதீனமில்லாததுபோல ஆட்டிக்கொண்டு பயணித்தேன்.
'பாகப் பிரிவினை’ சிவாஜியின் போஸில், 'ஆலயமணி’ சிவாஜி போன்று சக்கர நாற்காலியில் வந்துகொண்டிருந்த என் மேல், பார்க்கிறவர்களுக்கு ஓர் அனுதாபம் படர்வதை உணர முடிந்தது. பிறத்தியாருடைய பொறாமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது!'' - சொல்லிவிட்டுச் சிரித்தான் நாராயணன்.
அவன் செய்தது வேடிக்கைதான் என்றாலும், கோயிலில் போய் அப்படிக் குறும்பு செய்தது சரியல்ல என்றாலும், என்னைக் கொஞ்சம் சிந்திக்கும்படி செய்துவிட்டான்.
யாரைப் பார்த்தும் நாம் பொறாமைப்படக்கூடாது என்பது பொதுவான நீதி. நாம் பொறாமைப்படக்கூடாது என்பது மட்டுமல்ல; பிறத்தியாருடைய பொறாமையைத் தூண்டுவது போலவும் நடந்துகொள்ளக்கூடாது.
எவரால் உலகு இடர்ப்படுவதில்லையோ, உலகால் எவர் இடர்ப்படுவதில்லையோ, களிப்பு, சினம், பயம், மனக்குழப்பம் இவற்றிலிருந்து யார் விடுபட்டவரோ, அவரே எனக்குப் பிரியமானவர் என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பகவான், கீதையில்.
யஸ்மான்னோத் விஜதே லோகோ,
லோகான்னோத் விஜதே சய:
ஹர்ஷா மர்ஷ பயோத்வே கைர்
முக்தோய: ஸசமே ப்ரிய:


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:46 pm

நண்பர்கள் சிலர் கூடி ஒரு சத்சங்கத்தை உருவாக்கினார்கள். ஓரொரு கூட்டத்திலும் விவாத நேரமும், அனுபவப் பகிர்வுகளும் வெகு சுவாரசியமாக இருக்கும்.
ஒரு பணக்கார நண்பருக்கு எப்போதும் ஒரு சந்தேகம்; தீராத சந்தேகம். ''நான் இன்று காரில் வந்தபோது சிக்னலில் வண்டியை நிறுத்தினான் டிரைவர். உடனே ஒரு பிச்சைக்காரன் கார் ஜன் னல் அருகில் வந்து கையை உள்ளே நுழைத்து, 'ஐயா, தர்மம்!’ என்று குரல் கொடுத்தான்.
எனக்கு அவன்மீது பரிதாபம் ஏற்பட் டது. கடவுளின் பாரபட்சத்தை நினைத்து வருந்தினேன். 'நான் வசதியாகக் காரில் செல்கிறேன். இவனோ பிச்சை எடுக்கிறான். சாப்பாட்டுக்காகப் பரிதா பமாகக் கெஞ்சுகிறான். ஒரு சாப்பாடு 40 ரூபாய் ஆகிறது. இன்னும் எத் தனை பேரிடம் கையேந்தப் போகி றானோ? கடவுள் ஏன் சிலரைப் பணக்கார ராகவும், சிலரை ஏழையாகவும் படைத்துவிட்டான்? இந்தக் கேள்விக்கு யாராவது விடை சொன்னால் எனக்கு ஆறுதலாக இருக்கும்.''
இதே கேள்வியை அந்தப் பணக்காரர் அடிக் கடி எழுப்புவார். ஆளாளுக்குத் தங்களுக்குத் தெரிந்த பதிலைச் சொல்வார்கள். அவருக்குத் திருப்தி வராது. அடுத்த வாரமும் அதே கேள்வி யைக் கேட்பார்.

ஒரு தினம், சத்சங்கத்துக்கு ஒருவர் தனது பேரனையும் அழைத்து வந்திருந்தார். அன்று, பணக்காரர் தனது மாமூலான கேள்வியை நண் பர்கள் முன் வைத்தார். தவிர, தனக்கு அன்று நடந்த சம்பவம் ஒன்றையும் கூறினார்.
அன்று காலையில், அவரது வீட்டுக்கு ஒரு தம்பதியர் மகா ஆசாரமாகப் பளபளவென்று விபூதிப் பட்டையும் மஞ்சளும் குங்குமமாக பளிச் சென்று வந்தார்களாம். அந்தப் பெரியவர் கம்பீர மாக வடமொழியில் கடகடவென்று ஒரு சுலோகத் தைச் சொல்லிவிட்டு, 'ஆந்திராவிலிருந்து வரோம். எங்களுக்கு மத்தியான பி¬க்ஷயை உங்கள் கைங்கர்யமாகச் செய்தால் புண்ணியமாயிருக்கும். இரண்டு பேரும் சாப்பிட ஒரு 100 ரூபாயாவது எதிர்பார்க்கிறோம்’ என்றார்களாம்.
''அவர்களைப் பார்த்தால் வறுமையான வர்களாகத் தெரியவில்லை. இது மாதிரி விபூதி, குங்குமம் அணிந்து கௌரவப் பிச்சை கேட்பது இவர்கள் தொழில் போலும்! இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகளை ஆதரிக் கக் கூடாது என்று விரட்டிவிட்டேன். கடவுள் ஏன் தான் இப்படி ஒரு சிலருக்கு ஏமாற்றுகிற புத்தியைக் கொடுத்துவிடுகிறாரோ?'' என்று சபையினரிடம் கேட்டார்.
யாரும் எதுவும் பேசவில்லை. அவரது கேள்வி எல்லோரையும் சிந்திக்கச் செய்து, மௌனமாக்கிவிட்டது.
ஒரு சின்னக் குரல் மௌனத்தைக் கலைத்து, ஒலித்தது. ''என்ன மாமா நீங்க! அந்தப் பிச்சைக்காரனுக்கும் பைசா போடலே; இவங் களுக்கும் எதுவும் கொடுக்கலே. 'யாராவது கஷ்டம்னு வந்தா, நம்ம ளால முடிஞ்ச உதவியை நாம செய்யணும். ஏன் எதுக்கு, நல்லவனா கெட்டவனான்னெல்லாம் ஆராய்ச்சி பண்ணிண்டு, ஒண்ணும் கொடுக் காம இருந்திடக் கூடாது. பாவமோ, புண்ணியமோ அவனோட சேர்த்தி’ அப்படின்னு எங்க பாட்டி சொல்லுவா!'' என்றான் அந்தக் குட்டிப் பையன் வெடுக்கென்று.
அவனது பதிலைக் கேட்ட அனைவரும் பிரமித்துவிட்டனர்.
வாயில் வறட்டு வேதாந்தம் பேசிக்கொண்டு, நடைமுறையில் குணக் கேடனாக இருப்பவனை 'மித்தியாசாரன்’ (பொய்யழுக்கமுடையவன்) என்று விவரிக்கிறது கீதை.
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன் I
இந்த்ரியார்த்தான்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே II

நல்ல காரியங்களைச் செய்யாமலிருப்பதோடு, அப்படிச் செய்யா மலிருப்பதற்கு நல்லது போன்ற ஒரு காரணம் கற்பித்துக்கொள்வதும் பொய்யழுக்கம்தான். அடி மனத்தில் சுயநலத்தை அனுபவித்துக் கொண்டு, மேலுக்கு நல்லவன்போல் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவன் பொய்யழுக்கமுடையவன் என்று அழுத்தமாகக் கூறுகிறது கீதை.


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:47 pm

'கடவுள் ஒருவரே என்கிறீர்கள். அப்படியானால், அவர் எப்படி எல்லா இடத்திலும் நிறைந்திருக்க முடியும்?'' என்று என்னை வம்புக்கு இழுத்தான் என் மருமகன். ஹாஸ்டலில் தங்கி, ஐஐடி-யில் படிக்கிறான்.
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், சற்றுத் தடுமாறினேன். பிறகு, அவனைப் பார்த்து ''உங்க அப்பாவுக்கு எத்தனை மூக்கு?'' என்று கேட்டேன்.
குழம்பிய மருமகன், ''இதென்ன கேள்வி, ஒரு மூக்கு தான்'' என்றான்.
''எத்தனை மூக்குக் கண்ணாடி வைத்திருக்கிறார்?''
''ஒரே ஒரு மூக்குக் கண்ணாடிதான்.''
''ஆனால், அதைக் காணாவிட்டால் குளியல் அறை, சமையலறை, வாசல் வராந்தா, ஈஸிசேர் கைப்பிடி, படுக்கை அறை, டாய்லெட் ரூம், டி.வி. ஸ்டாண்ட், தனது தலை என எல்லா இடத்திலும் தேடுகிறார். எல்லாரும் அவருக்கு உதவியாக, அவரவருக்குத் தெரிந்த முறையில் தேடுகிறீர்கள். அழுக்குத் துணிக்கூடையில் உள்ள துணி களையெல்லாம் எடுத்து கீழே போட்டு, சட்டைப் பைகளில் தேடுகிறார் ஒருவர். 'நல்லா யோசனை பண்ணிப் பாருங்க. எழுந்ததிலிருந்து என்னென்ன பண்ணினீங்க? பேப்பர் படிச்சீங்களா?’ என்று கேட்டபடியே, பேப்பர்களையெல்லாம் உதறோ உதறு என்று உதறுகிறார் ஒருவர்.
மூக்குக் கண்ணாடி தொலைந்ததற்கும், பழைய பேப் பர்களை இப்படி உதறிக் குப்பையாட்டம் போடுவதற்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, மூக்குக் கண்ணாடி அதற்குள் ஒளிந்திருக்கலாமல்லவா?
ஆக, ஒரு பொருள் எல்லா இடத்திலும் இருக்கக்கூடும் என்பது கண்ணாடியைத் தேடுவதிலேயே தெரிகிறதல்லவா? பசுவின் பால் அதன் மடியில் மட்டுமா இருக்கிறது. உடம்பு முழுவதிலும்தானே? யோசனை பண்ணு!'' என்றேன்.
ஐ.ஐ.டி. அசரவில்லை. ''சரி, நீங்களோ எல்லாக் கடவுள் களையும் கும்பிடுகிற வழக்கம் உடையவர். அதனால், உங்க ளுக்கு ஒரு கஷ்டம் என்றால், 'பிள்ளையாரப்பா, முருகா, ஈஸ்வரா, பெருமாளே, ஐயப்பா, காளியம்மா... காப்பாற் றுங்கள்!’ என்று எல்லாத் தெய்வங்களையும் உத விக்கு அழைப்பீர்களா? அல்லது, ஒரே ஒரு தெய்வத்தை மட்டும் கூப்பிடுவீர்களா?'' என்று கேட்டான்.
''ஏன், எல்லாப் பெயரையும் சொல்லித்தான் கூப்பிடுவேன்,'' என்றேன்.
''சரி, ஒரே சமயத்தில் முருகனும் விஷ்ணுவும் உங்களுக்கு உதவக் கிளம்புகிறார்கள் என்று வைத் துக்கொள்ளுங்கள்; 'அவர்தான் காப்பாற்றப் புறப்படு கிறாரே! நாம் வேறு போக வேண்டுமா!’ என்று நினைத்துக் கொண்டு, இருவருமே புறப்படாமல் தங்கிவிட நேருமல்லவா?'' என்று மடக்கினான் அந்தப் பயல்.
தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இந்தக் கேள்விக்கு, ஒரு கூட்டத்தில் அளித்த பதிலை, மருமகனுக்குக் கூறினேன்.
''உலகில் ஒரு விபத்து அல்லது உடல்நலக் குறைவு ஒரே சமயத்தில் பல இடங்களில் உள்ளவர்களுக்கும் ஏற்படு வது உண்டுதானே? ஒரே கடவுளாக இருந்தால், அவர் யாரைக் கவனிக்க விரைவார்? நிறையக் கடவுளர் இருந்தால், 'நீ டெல்லிக்குப் போ, நீ பம்பாய்க்குச் செல், அமெரிக்காவில் ஏதோ தகராறாம்; நீ போய் அதைக் கவனி!’ என்று தலைமைக் கடவுள், தன் கீழ் உள்ள பல கடவுள்களையும் ஆங்கங்கே சென்று உதவ, உடனடியாக அனுப்பி வைப்பார். ஆகவே, பல கடவுள்கள் இருப்பது நல்லதுதான்!'' என்றேன்.
தொடர்ந்து, ''நீ ஐடி பையன் என்பதால், உனக்குப் புரிகிற மாதிரியே சொல்கிறேன்; ஓர் அலுவலகத்தில் எத்தனையோ சிஸ்டங்கள் இருக்கும்; பலர் அவற்றில் அமர்ந்து வேலை செய்வார்கள்; ஆனால், அத்தனைக்கும் பொதுவாக ஒரே ஒரு சர்வர்தானே இருக்கிறது! அதுபோல, பல வித கடவுள் களைக் கும்பிட்டாலும், ஒரே கடவுளைக் கும்பிடுகிற மாதிரி தான்! ஒரே கடவுளைக் கும்பிட்டாலும், பல கடவுள்களைக் கும்பிடுவது போலத்தான்'' என்றேன்.
'ஸர்வானன சிரோக்ரீவ: ஸர்வபூத குஹாயச’ என்கிறது உபநிஷத். 'எங்கும் முகத்தையும் தலையையும் உடையவன்; எல்லா உயிர்களின் உள்ளத்திலும் உள்ளவன்’ என்பது பொருள்.


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:47 pm

ஓர் உறவினர் வீட்டுக்குச் சமீபத்தில் சென்றிருந் தேன். டிபன் நேரம். ஆகவே, வழக்கமான காபியுடன், சுடச்சுட வெங்காய பஜ்ஜியும் ஒரு தட்டு நிறையச் சட்னி சகிதம் வந்தது.
பஜ்ஜியின் பொன்னிறமும், சூடும், தோற்றமும், வாசனையும் என்னை மயக்கினாலும், எண்ணெய் மிதந்துகொண்டிருந்ததால், தயங்கினேன். ''நிறைய எண்ணெய் குடிச்சிருச்சு போலிருக்கே!'' என்று என்னையும் மீறிச் சொல்லிவிட்டேன்.
உறவுக்காரர், ''ஸ்ரீமதி!'' என்று குரல் கொடுத்தார். அடடா, இது விஷயமாகத் தன் மனைவியை டோஸ் விடப் போகிறாரோ என்று சங்கடப்பட்டேன்.
அவரின் மனைவி, ''கூப்பிட்டீங்களா..?'' என்றவாறு வந்தாள். உறவினர் சிரித்தபடியே, ''ஸ்ரீமு! சாருக்கு பஜ்ஜி கொடுத்தே! சந்தோஷம்! ஆனா, என்னை மறந்துட்டியேம்மா. வாசனை மூக்கைத் துளைக்கிறது. நாக்குலேர்ந்து ஜலம் கொட்டறது. சீக்கிரம் எடுத் துண்டு வா!'' என்றார். பிறகு என்னிடம் திரும்பி, ''ஸ்ரீமு பஜ்ஜி போட்டாளானால், இந்தத் தெருவே வாசனை பிடிச்சிண்டு வந்துடும். பஜ்ஜி அண்ட் வெங்காய பக்கோடாவில் அவளை யாரும் அடிச் சுக்க முடியாது!'' என்றார்.
சமையலறைக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஸ்ரீமதி ஒரு கணம் நின்று என்னிடம், ''இவரே ஒரு நளச் சக்ரவர்த்தி! இவர்கிட்டே சர்டிஃபிகேட் வாங் கினா, சமையல் கலையிலே டிகிரி வாங்கினாப்பலே!'' என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்றாள்.
அந்த உறவுக்காரரின் வீட்டுக்குப் பல தடவை போயிருக்கிறேன். வீட்டுக்காரி செய்த ஒரு சாதாரண கறிவேப்பிலைத் துவையலைக்கூட ஆகா, ஓகோ என்று புகழ்வார். ''இன்னிக்குச் சமையலிலே ஒரு விசேஷம் பண்ணியி ருக்காள். கண்டுபிடியுங்க, பார்க்கலாம்!'' என்று புதிர் போடுவார்.
ஒன்றும் வித்தியாசமாக இருக்காது. தளதளவென்று தளராக எண்ணெய் விட்டு வதக்கப்பட்டிருக்கும். அவ்வளவுதான்!
''டிசம்பர் ஸீஸன்லே சபா காண்ட்டீன் ஒன்றிலே, இப்படிப் பண்ணியிருந்தார்களாம். விடாமல் துளைச்செடுத்து, ரகசியத்தைக் கறந்துண்டு வந்துட்டாள்!'' என்பார்.
மனைவியும் சளைத்தவள் அல்ல! ''அவர் ஸ்ரீருத்ரம் படிச்சுட்டுத் தான் தினமும் ராத்திரி சாப்பிடுவார்'' என்று, விட்டுக்கொடுக்காமல் கணவரைப் பற்றிப் பெருமையாக ஒரு தகவலை வெளியிடுவாள்.இப்படியாக மனைவியைக் கணவன் புகழ்வதும், கணவனை மனைவி புகழ்வதுமாக... அந்தத் தம்பதியைப் பார்க்கும்போது மனசில் கொஞ்சம் பொறாமை எழும். சில சமயம், இதென்ன வந்தவர்கள் முன்னால் பரஸ்பரத் தம்பட்டம் என்ற எரிச்சலும் உண்டாகும்.
நண்பன் நாராயணனிடம், என் உறவினர் வீட்டுத் தம்பட்டம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.
''அவர்கள் எப்பவாவது சண்டை போட்டுக்கொண்டோ, உர்ரென்ற முகத்துடனோ இருந்து பார்த்திருக்கியா?'' என்று கேட்டான்.
''இல்லை'' என்றேன்.
நாராயணன் சொன்னான்... ''மனிதரும் தேவரும் ஒருவரை யருவர் தாராளமாகப் புகழ்ந்துகொள்ளவேண்டும் என்று பகவானே கீதையில் சொல்லியிருக்கிறார், தெரியுமோ? உன் உற வினர் தம்பதி அந்தக் காரியத்தைத்தான் செய்கிறார்கள். சண்டை சச்சரவில்லாமல் இருக்கிறார்கள்.''
தேவான்பாவயதானேன, தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத
'நீங்கள் தேவர்களைப் போற்றிப் புகழுங்கள்; அவர்களுக்கு வேண்டியதைப் படைத்து மகிழுங்கள். தேவர்கள் உங்களைப் போற்றி, நீங்கள் வேண்டியதை வழங்கி மகிழட்டும். பரஸ்பரம் ஒருவரையருவர் போற்றி, மேலான சுகத்தை அடைவீர்களாக!’ என்று பகவான் சொல்கிறார். ஆகவே, ஒருவரையருவர்- முக்கிய மாகக் கணவனும் மனைவியும் தங்களைப் பரஸ்பரம் புகழ்ந்து கொள்வது நல்லதே!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:48 pm

''சேச்சேச்சே! ஒரு மனுஷன் நிம்மதியா ஒரு அரை மணி நேரம் பூஜை ரூம்ல உட்கார்ந்து ராம நாமம் ஜபிக்கலாம்னா முடியலையே!'' என்று வரும்போதே அலுத்துக்கொண்டு வந்தார் என் நண்பர். ''என்ன சார் விஷயம்?'' என்று விசாரித் தேன்.
''உங்க கிட்ட சொல்றதுக்கென்ன... எங்க வீட்ல நிம்மதியா உட்கார்ந்து, ஜபம் செய்றதுக்கு இடமே கிடையாது. கஷ்டப்பட்டு விடியற்காலை எழுந்து ஜபம் செய்ய முயற்சி பண்ணேன். ஆனா, நிம் மதியா ஜபிக்க முடியலை. அப்போ பார்த்துதான், பால்காரம்மா வந்து குரல் கொடுக்கிறா. இன்னொரு வயிற்றெரிச்சலைக் கேளுங்க... காலைல எழுந்ததுமே சில பேருக்குப் பசி ரொம்பக் கொடூரமா இருக்கும்போல! அதைத் தணிக்க, 'இடியாப்பேம்... இடியாப்பேம்!’ என்று சைக்கிளில் இடியாப்ப சப்ளைக்காரர்கள் நாலு தெருவுக்குக் கேக்கும்படி கர்ண கடூரமா குரல் கொடுத்துட்டுப் போறாங்க. கோல மாவு விற்கிற ஆட்களுக்கும் எனது ஜப நேரம்தான் குறி!
இதெல்லாமாவது அவங்க வயிற்றுப் பிழைப் புன்னு சொல்லலாம். இன்னொரு பெரிய இம்சை, கார் ஹாரன். நான் ஜபம் பண்ற நேரமா பார்த்துதான் பக்கத்து வீட்டுக்காரர் தனது அரதப் பழசுக் காரை ஷெட்டிலிருந்து வெளியே எடுப்பார். மியூஸியத்தில் இருக்கவேண் டிய அந்த யந்திரம், 'அய்யய்யோ... அப்பப்பா’ என்று ஒப்பாரி வைக்கிற மாதிரி பயங்கரமா அலறும். ஒரு பத்து நிமிஷம் ஆகும், அது ஆடி அடங்க! நீங்களே சொல்லுங்க சார், இத்தனை சத்தங்களுக்கு நடுவே ஒரு மனுஷன் எப்படி சார் நிம்மதியா ஜபம் பண்ண முடியும்?'' - நண்பர் அழாக் குறையாகக் கூறி முடித்தார்.
அமைதியான சூழ்நிலை என்பது நகர வாழ்க்கையில் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. ஆனால், ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர் தான் ஓர் அருமையான முறையைக் கையாண்டு, ஜப முயற்சியில் வெற்றி பெற்றதைக் குறிப்பிட் டிருக்கிறார். அவர் ஆரம்ப நாளில் தட்சிணேஸ்வரத்தில் ஜபம் செய்யும்போது, அருகில் இருந்த ஆலையின் சங்குகள் மணிக்கொரு தரம், மாறி மாறி ஊளையிட்டபடி இருக்குமாம். ஆனால், ஆழ்ந்து ஜபம் செய்துகொண்டிருக்கும் ஸ்ரீராம கிருஷ்ணரின் கவனம் மட்டும் சிதையவே சிதையாது.
எப்படி என்கிறீர்களா?
சங்கின் ஊளைச் சத்தத் திலேயே தனது ஜபத்தை இணைத்துவிடுவார் அவர். ஒரு சங்கின் ஊளைச் சத்தம் முடியும் வரை அவர் மனமும் ஜபம் சொல்லிக்கொண்டு இருக்கும். அது ஓய்ந்ததும், அவரது மனம் அடுத்த சங்கின் ஓசைக்காகக் காத்திருக்கும். அது கேட்டதும், பரமஹம்சரும் ஜபத்தைத் தொடங்கிவிடுவார். இப்படியாக எது கவனத்தைச் சிதறச் செய்கிறதோ, அதன்மீதே கவனம் வைத்து ஜபம் செய்தால், கவனம் கெடுகிறதே என்ற எரிச்சலோ அதிருப்தியோ ஏற்படாது என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
கீதையில் பலவகையான ஜப யக்ஞங்கள் கூறப்பட்டிருக் கின்றன.
ச்ரோத்ராதீனீந்த்ரியாண்யன்யே
ஸம்யமாக்னிஷ§ ஜுஹ்வதி
சப்தாதீன் விஷயானன்ய
இந்த்ரியாக்னிஷ§ ஜுஹ்வதி

'சிலர் சப்தம் முதலிய விஷயங்களைப் பொறிகளாகிற அக்னியில் ஹோமம் செய்கின்றனர். அதாவது- ஜபத்தின் போது எந்தச் சத்தம் எங்கிருந்து வந்தாலும், அதைச் சட் டென்று பிடித்து, உனது காதாகிய ஹோம குண்டத்தில் அர்ப்பணமாகப் போட்டுவிடு!’
ஆலைச் சங்கின் சத்தத்திலேயே தூங்கிப் பழக்கப்பட்டவர் கள், ஸ்ட்ரைக் நடந்து ஆலைச் சத்தம் நின்றுபோனால், அந்த அமைதியில் தூக்கமே வராமல் தவிப்பதுண்டு. அது மாதிரி, சத்தங்களையே பின்னணி இசையாகக் கொண்டு மனம் ஒன்றி ஜபம் செய்யப் பழகிக்கொண்டுவிட்டால், பின்பு அமைதி, அமைதி என்று மனம் அமைதியின்றி அலைபாயாது!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:49 pm

திருமழிசை ஆழ்வார் அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்க, கொங்கண தேசத்திலிருந்து ஒரு யோகி வந்திருந்தார் ('பார்க்க’ என்றால், ஒரு கை பார்க்க!).
'இந்த ஆழ்வாரைப் பற்றிப் பிரமாதமாக இந்தத் தேசம் புகழ் பாடுகிறதே... அப்படி என்னதான் செய்து இவர் கிழித்துவிட்டார்!’ என்பதைத் தெரிந்துகொள்ளும் எண்ணத்தில்தான் கொங்கண முனி, ஆழ்வாரைச் சந்தித்தார்.
ஆழ்வார் நீண்ட நேரம் குளித்துக்கொண்டிருந்தார். கொங்கண முனி பொறுமையாகக் காத்திருந்தார்.
குளித்துவிட்டு வந்த ஆழ்வார், கொங்கணரை வணங்கி, ''தாங்கள் எழுந்தருளியிருப்பது என் பாக்கியம். தங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டார், குளித்துவிட்டு வந்த தன் ஈர உடம்பைத் தேய்த்துவிட்டுக்கொண்டே.

அப்படி அவர் செய்யும்போது திரித் திரியாக அழுக்கு திரண்டது. குளித்தும்கூடப் போகாத அழுக்கு!
ஆழ்வார் அந்த அழுக்கைத் திரட்டி, ஒரு கொட்டாங்கச்சியில் போட்டார். கொங்கணருக்கு அந்தக் காட்சி மகா அருவருப்பையும் எரிச்சலையும் தந்தது. தான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு உடனே திரும்பிவிட நினைத்தார்.
தமது சக்தியை பிரகடனப்படுத்திக்கொள்ளும் வகையில், தாம் கொண்டுவந்திருந்த அபூர்வமான ஒரு மந்திரக் கல்லை ஆழ்வாரிடம் தந்தார். ''துறவியைப் பார்க்கப் போவதென்றால் வெறுங்கையுடன் போகலாகாது என்பார்கள். ஆகவே, ஒரு சிறு கல்லைக் கொண்டு வந்திருக்கிறேன். இது சாதாரணக் கல் அல்ல. நான் பல ஆண்டுகள் கடுந் தவம் செய்து, பல்வேறு சக்தியுள்ள கற்களை என் தவ வலிமையால் உருக்கி எடுத்த கலவைதான், இந்த ரசவாதக் கல். இந்தக் கல் உங்களைப் பெரும் செல்வந்தராக்கிவிடும். இதைக் கொண்டு எதைத் தொட்டாலும், அந்த வஸ்து தங்கமாகிவிடும்!'' என்றார்.
இதைக் கேட்டு ஆழ்வாருக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ''தங்கள் அன்புக்கு நன்றி!'' என்று கூறி, அந்தக் கல்லை வாங்கி ஒரு பாறை மீது வைத்தார். உடனே, அந்த பெரிய பாறை முழுவதும் தங்கமாக மாறிவிட்டது. ஆனால், அப்போதும் ஆழ்வார் முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லை.
சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, கொங்கண முனி விடைபெற்றுக் கொண்டார்.
''சற்று இருங்கள்'' என்று சொன்ன ஆழ்வார், பக்கத்தி லிருந்த கொட்டாங்கச்சியை எடுத்தார். தன் தேகத்தில் திரண்ட அழுக்கைச் சற்றுமுன் ஒரு கொட்டாங்கச்சியில் போட்டிருந்தாரல்லவா, அதே கொட்டாங்கச்சிதான். அந்த அழுக்கை எடுத்து நிதானமாக உருட்டி, உருண்டை பிடித்தார். கொங்கணருக்கு அந்தக் காட்சி குமட்டலை ஏற்படுத்தியது.
''இந்தாருங்கள்... இவ்வளவு தூரம் தேடி வந்து என்னைப் பார்த்த உங்களை வெறுங்கையாக அனுப்பலாமா? இதோ, என் அன்புப் பரிசைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று அந்த அழுக்கு உருண்டையை கொங்கண முனியிடம் தந்தார் ஆழ்வார்.
எரிச்சலும் கோபமுமாக கொங்கணர் அதை வாங்கி, பலம் கொண்ட மட்டும் வீசி எறிந்தார். அது போய் விழுந்து, உருண்டு சென்ற இடமெல்லாம் வைரக் கற்களாக மாறின. கண்ணைப் பறிக்கும் வைரக் கம்பளத்தை விரித்து வைத்தாற்போன்று, அந்தப் பகுதி முழுவதும் ஜொலிஜொலித்தது.
'ஆழ்வாரின் தேக அழுக்குக்கே இத்தனை சக்தியா!’ என்று எண்ணி வெட்கப்பட்டார் கொங்கணர்.
'தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்று அக மகிழ்க
தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக
கற்றதெல்லாம் எற்றே இவர்க்கு நாம்’
- என்கிறது பழந்தமிழ்ப் பாடல் ஒன்று.
அந்தக் கொங்கண முனி வேறு யாருமல்ல! 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’ புகழ் வாசுகி அம்மையிடம் முன்பொருமுறை வாங்கிக் கட்டிக்கொண்டவர்தான்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:50 pm

ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு ஒருமுறை, வாழைப்பழம் சாப்பிட வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது.
அவளது ஆசையை நிறைவேற்றுவதற்காக, பூலோகம் வந்து, சென்னை, மயிலாப்பூரில் ஒரு பழ வண்டிக் காரனை அணுகினார் பிரம்மா. முன் ஜாக்கிரதையாக, நம்மைப் போல ஒற்றைத் தலை மனிதனாக ரூபம் எடுத்து வந்திருந்தார்.
வண்டிக்காரனை நெருங்கி, ''பழம் என்ன விலைப்பா?'' என்று விசாரித்தார். ''ஒண்ணு அரை ரூபா'' என்றான் அவன். ''சரி, எனக்கு இரண்டு டஜன் வேணும். கொஞ்சம் நல்லா சுற்றிக் கொடு. தொலைதூரம் கொண்டு போகணும்'' என்றார். அவன் பழங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொடுத்தான்.

பிரம்மா, இரண்டு டஜன் வாழைப்பழத்துக்கான தொகையாக 12 ரூபாயை சில்லறையாக எடுத்து நீட்டிவிட்டு, நகரத் தொடங்கினார். கப்பென்று அவரது அங்கவஸ்திரத்தைப் பிடித்துவிட்டான் வண்டிக்காரன்.
''யோவ் பெர்சு! நீ பாட்டுல என்னா பன்னண்டு ரூபா கொடுத்துட்டு நழுவறே? மீதி 24 ரூபாயை உம் முப்பாட்டனா வந்து தருவான்?'' என்றான்.
பிரம்மா அசந்து போய்விட்டார். ''என்னப்பா... ஒண்ணு அரை ரூபாய் என்றால், ரெண்டு டஜன் பன்னிரண்டு ரூபாய்தானே?'' என்றார்.
''இன்னாது... ஒரு பழம் அரை ரூபாயா? தோடா! உனுக்கு இன்னா காது டப்ஸாவா? ஒண்ணரை ரூபான்னு சொன்னேன்யா!'' என்றான்.
பிரம்மாவுக்குத் தலை சுற்றியது. 'நல்லவேளை! ஒரு தலையோடு வந்தோம். மூன்று தலைகளோடு வந்திருந்தால் என் கதி என்ன ஆவது!’ என்று நினைத்தவராய், ''இல்லையில்லை. நீ ஒண்ணு அரை ரூபாய்னுதான் சொன்னே! தெளிவாக ஒரு பழம் ஒன்றரை ரூபாய்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே?'' என்றார் பழக்காரனிடம். அதற்குப் பதில் சொல்லாமல், ''காலங்காலைல பழம் வாங்க வந்த மூஞ்சியைப் பாரு! நகருய்யா அப்பால!'' என்று சிடுசிடுத்தான் அவன்.
பிரம்மா நொந்து நூடுல்ஸாகி, அங்கிருந்து வெளியேறி, தன் பிரம்மலோகத்தை அடைந்தவர், வண்டிக்காரனிடம் தான் பட்ட ஏமாற்றத்தையும் அவமானத்தையும் மனைவி சரஸ்வதிதேவியிடம் சொல்லி வருந்தினார். பிறகு, ''சேச்சே! பூலோகம் ரொம்பத்தான் கெட்டுப் போய்விட்டது. அரசியல் தலைவர்களிலிருந்து சாதாரண வாழைப்பழ வண்டிக்காரன் வரை ஏதாவது தில்லுமுல்லு பண்ணுகிறார்கள். பக்தர்கள்கூடப் பல சமயம் பண்ணுகிற
ஆர்ப்பாட்டத்தில் ஏமாந்துவிடுகிறோம். இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் தேவி!'' என்றார்.
''ஒரேயடியாக நொந்து போய்விடாதீர்கள். நியாய விலைக்கடை என்று பூலோகத்தில் பல கடைகள் திறந்திருக்கிறார்கள். அந்த மாதிரி, நிஜமான பக்தி உள்ளவர்களும் இருக்கத்தான் செய்கி றார்கள். நாம்தான் நமது சக்தியால் அசல் பக்தர்களைக் கண்டு பிடித்து, அருள்புரிய வேண்டும்'' என்றாள் சரஸ்வதிதேவி.
''அதெப்படிக் கண்டுபிடிப்பது?'' என்று கேட்டார் பிரம்மா.
''என்ன நீங்கள்... ரமண மகரிஷி சொல்லியிருக்கும் ஒரு சுலபமான வழி மறந்துவிட்டதா உங்களுக்கு?''
''அப்படியா... என்ன சொன்னார்?''
''எவனொருவன் கடவுளிடத்தில் தன்னையே தியாகம் செய்கிறானோ, அவனே உண்மையான பக்தன். ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவர் ஒருவரே அவ்வளவை யும் தாங்கிக் கொள்கிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேஸ்வர சக்தி நடத்திக்கொண்டு இருக்கிறபடியால், நாம் அதற்கு அடங்கியிராமல், இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்று சதா சிந்திப்பதேன்? ஒரு ரயில் வண்டி சகல பாரங்களையும் தாங்கிக்கொண்டு போகிறது. அதில் ஏறிக்கொண்டு போகும் நாம், நமது மூட்டைகளையும் அதில் போட்டுவிட்டுச் சுகமாய்ப் பயணிக்காமல், அவற்றை நம் தலையில் சுமந்துகொண்டு ஏன் கஷ்டப்படவேண்டும் என்று சொன்னாரா, இல்லையா?'' என்று புன்சிரித்தாள் சரஸ்வதிதேவி.
''அட, ஆமாம்!'' என்று தன் நான்கு தலைகளிலும் மென்மையாகத் தட்டிக்கொண்டார் பிரம்மா.


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:50 pm

சமீபத்தில், என் உறவினர் ஒருவரைப் பார்க்க மனைவியுடன் சென்றிருந்தேன். பெரிய பணக் காரர். சென்னையை விட்டு சற்றுத் தள்ளி, ஓர் ஆடம்பரமான அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். போன காரியம் முடிந்து, மாலை 7 மணிக்குத்தான் அங்கிருந்து புறப்பட்டோம். இரண்டு மூன்று தெரு தாண்டி, ஆட்டோ இல்லாத ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று கண்ணில் பட்டது. நாலு சந்தி பிரியும் இடமாக இருந்ததால், நட்ட நடுவில் நின்றுகொண்டு, எல்லா பக்கமும் கவனித்து, வருகிற போகிற ஆட்டோக்களைக் கைதட்டி அழைக்கச் சௌகரியமாயிருந்தது!
சில ஆட்டோக்கள், 'நிற்பதுவே... நடப்பதுவே...’ என்று மெதுவாகப் பக்கம் வந்து விலகின. சில நிற்கவே இல்லை. சிலதுகள் பேரம் படியவில்லை. ஆட்டோ பிடிப்பு இல்லையே தவிர, கொள்கைப் பிடிப்பு எங்களிடம் இருந்தது. 'என்ன ஆனாலும் சரி, நூறு ரூபாய்க்கு மேல் ஒரு பைசா தரக் கூடாது’ என்று பிடிவாதமாக இருந்தோம். ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு ஆட்டோவும் படியவில்லை. அப்போது, ''என்ன சார்... இன்னுமா ஆட்டோ கிடைக்கலை?'' என்று அருகில் ஒரு குரல் கேட்டது. திரும்பினால், அந்தப் பணக்கார உறவினரின் மகன்!

''ஆமாம்... ஹி... ஹி! ஆட்டோ கிடைக்கலை. அநியாயத்துக்குக் கேக்கறான். பகல் கொள்ளையாய் இருக்குது'' என்றேன்.
சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஓர் ஆட்டோ வட்டமடித்து வந்து நின்றது.
''எங்கே சார் போகணும்?''
''சேத்துப்பட்டு. என்ன கேட்கறே?''
''நைட் ஆயிடுச்சு சார்! 180 குடுங்க!''
''ம்ஹூம்! 100 ரூபாய். இஷ்டம்னா வா!''
''என்ன சார், படிச்சவங்க உங்களுக்கே தெரியும், பெட்ரோல் நேத்திக்கு என்ன விலை வித்துது, இன்னிக்கு என்ன விலை விக்குதுன்னு. படிக்காத ஜனங்கதான் பேரம் பேசுறாங்கன்னா நீங்களும் பேரம் பேசினா எப்படி சார்?'' - சலித்துக்கொண்ட ஆட்டோக்காரர், ''சரி, உக்காருங்க. ஒன் ஃபிஃப்டி கொடுங்க!'' என்றார்.
''நோ சான்ஸ்!'' என்று நான் மறுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போதே, உறவினரின் மகன் வெகு அலட்சியமாக, ''சார், இங்கே ஆட்டோ கிடைக்கிறது கஷ்டம். பேரம் பேசாம உடனே கிளம்புங்க!'' என்று அவசரப்படுத்தி, எங்களை ஏற்றிவிட்டான். வேறு வழியின்றி, அந்த ஆட்டோவில் ஏறிப் புறப்பட்டாயிற்று.
மனைவி அங்கலாய்த்தாள். ''நாம பேரம் பேசிக்கிட்டு நடு ரோட்டில் நிற்பது, உங்க உறவுக்காரரின் அந்தஸ்துக்கும் மதிப்புக்கும் கேவலமா தெரியுது போலிருக்கு! போங்க போங்கன்னு இந்த விரட்டு விரட்ட றானே!'' என்றாள்.
''வேறொண்ணுமில்லை, பணக்கார புத்தி! யானையின் ஒரு வாய் கவளம் ஆயிரம் எறும்புகளுக்கு உணவு. இவனுக்கு வேணா 150 ரூபா ஒரு பொருட்டா இல்லாம இருக்கலாம். நமக்கு அப்படியா! சே... பணக்கார சவகாசமே இப்படித்தான்!'' என்றேன்.
சட்டென்று ஆட்டோ டிரைவர் பின்பக்கம் திரும்பி, ''அய்யா, சட்டுனு ஒருத்தரைத் தப்பா எடை போட்டுடாதீங்க. உங்ககிட்டே ரூபா வாங்கக் கூடாதுன்னு அந்த ஐயாவே நீங்க பார்க்காத சமயம் ஆட்டோ சார்ஜை என்கிட்ட குடுத்துட்டாரு!'' என்று சட்டைப் பையிலிருந்து நூறு ஒன்றும், ஐம்பது ஒன்றுமாக எடுத்துக் காட்டினான். சுருக்கென்றிருந்தது!
கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் மான் வயிற்றில்
ஒள்அரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்லிலைய முத்தும் பிறக்கும் அறிவார் யார்
நல்லாள் பிறக்கும் குடி.
- விளம்பி நாகனார் 'நான்மணிக் கடிகை’யில் விளம்புகிறார் இப்படி.
'அகிற் கட்டை கள்ளி மரத்தின் நடுவில் உண்டாகும். அரிதாரம், மான் வயிற்றில் உண்டாகும். முத்துக்கள் பெரிய கடலிலும் பிறக் கும். நல்மக்கள் பிறக்கும் குடியை முன் கூட்டி அறிபவர் யார்? எக்குடியிலும் நன் மக்கள் தோன்றுவர்!’
நாம் பல நேரம் ஒரு மாமூல்தனத்தில் பேசிவிடுகிறோம்... பணக்கார புத்தி, பணக் கொழுப்பு, அது இது என்று! கெட்டதிலும் நல்லது உண்டு; நல்லதிலும் கெட்டது உண்டு.
வள்ளுவர் சொன்னது போல்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு!


Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக