ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அன்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்!

View previous topic View next topic Go down

அன்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்!

Post by krishnaamma on Tue Sep 16, 2014 7:43 pm

செல்லமே...

‘செல்லம்..!’ இந்தக் கொஞ்சலுக்குள் ஒளிந்திருக்கிறது ஒருவரை எந்த வயதிலும் குழந்தையாக உணரச் செய்யும் மந்திரம். வயது கரைந்து, அகந்தை உடைந்து, கோபங்கள் உதிர்ந்து, அன்பு மிகுந்து வழுவழுப்பான கூழாங்கல்லாக மனம் மாறுவது எவ்வளவு இனிமை! அப்போது ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள இவ்வுலகில் முத்தம் மட்டுமே மிச்சமாக இருக்கும்.

யாழினிக்கு 10 வயது. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். பயங்கரமான வால். ஒருநாள் டியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்ததும் புலம்பத் தொடங்கினாள். ‘‘காலையில் எழுந்ததும் பரபரன்னு ஸ்கூலுக்குக் கிளம்பணும்... அதுக்கு திட்டு. அங்கே தோழிகள் டீச்சர்ட்ட போட்டுக் கொடுக்கறாங்க... மறுபடியும் திட்டு. டியூஷன்ல படிப்புல மட்டும் கவனமா இருக்கணும்... பேசினா திட்டு. வீட்டுக்கு வந்து, டி.வி. பார்த்தா ‘சீக்கிரம் தூங்கு’ன்னு திட்டு. எங்களை யாருமே புரிஞ்சுக்க மாட்டீங்களா? எங்களுக்கும் மனசிருக்கு, நாங்களும் மனுஷங்கதான்.

எங்களை யாரும் கொஞ்சவே மாட்டீங்களா?’’ - தொடரும் அவளது கேள்விகள் அழுகையில் முட்டி, அம்மாவின் மடியில் தலை சாய்க்கத் தூண்டுகின்றன. அம்மா, தலைகோதி முத்தமிட்டதும் அழுகை மெல்லக் கரைகிறது. ‘குழந்தைகளுக்கு எவ்வளவு செல்லம் கொடுக்கலாம்?’ யாழினியிடம் கேட்டால் இப்படி சொல்கிறாள்... ‘‘அது குழந்தையோட கேரக்டரை பொறுத்தது. என்னைப் போல அடம்பிடிக்கும் குழந்தைக்கு மீடியமா செல்லம் கொடுத்தா போதும்.

குழந்தை தப்பு செய்யும் போது திட்டுறது, அடிக்கறதுக்கு பதிலா மூணு முறை அன்பா எடுத்துச் சொல்லுங்க. அதுக்குள்ள குழந்தை தன்னைத் திருத்திக்கும். தயவு செஞ்சு எதுக்காகவும் திட்டாதீங்க. ‘உன் கூட பேச மாட்டேன்’னு சொல்லி காயப்படுத்தாதீங்க’’ -கெஞ்சுகிறது இந்தக் குழந்தை. ஒவ்வொரு குழந்தையும் நமக்கு செல்லம்தான். ‘அவர்களுக்கு எந்தளவுக்கு செல்லம் கொடுக்கலாம்’ என்பதை விளக்குகிறார் சண்முகா நர்சிங் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர் மரகதம்...

கருவிலேயே தொடங்கலாமே!

‘செல்லம் கொடுப்பது’ குழந்தைகள் மீது காட்டும் மிகை அன்பு. கருவில் இருக்கும்போதே குழந்தையுடன் உரையாட வேண்டியது அவசியம். ‘உன் வருகைக்காக யாரெல்லாம் காத்திருக்கிறார்கள் பார்! உனக்குப் பரிசளிப்பதற்காக என்னவெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன் தெரியுமா? நீ எப்படி இருப்பாய் என்று வீட்டிலுள்ளவர்கள் எப்படியெல்லாம்

கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள் தெரியுமா..?’ - மனதால் தாய் பேசுவதை கருவில் வளரும் குழந்தை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கும். உணர்வுகளால் குழந்தையைத் தொட தாய்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அனுபவத்தை எந்தப் பெண்ணும் தவறவிடக் கூடாது. இந்தச் சிறிய கவனிப்பு குழந்தையின் பண்பை ஒழுங்குபடுத்தும்.

அன்பு ஏ.டி.எம். மெஷினா?

அதிகபட்ச அன்பு, அதிகபட்ச கண்டிப்பு - இரண்டுமே தவறு. பெற்றோரில் ஒருவர் செல்லம் தருவதும் மற்றவர் கண்டிப்பதும் கூடாது. இரண்டுக்குமே அளவு இருக்கிறது. கண்மூடித்தனமான அன்பு குழந்தைகளுக்கு எதிரியாகவே அமையும். குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க அன்பு உதவ வேண்டும். அவர்களது சின்னச் சின்ன ஆசைகளைப் புரிந்து கொள்வது, விருப்பத்தை நிறைவேற்றுவது எனப் பலவிதங்களில் வெளிப்பட வேண்டும். அதே நேரத்தில், ‘குழந்தை கேட்டுவிட்டதே’ என தகுதிக்கு மீறிய விஷயங்களை செய்ய பெற்றோர் முயற்சிக்கக் கூடாது. அவரவர் குடும்ப, நிதிச்சூழலுக்கு ஏற்றதை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முடியாத நேரத்தில் ‘நோ’ சொல்லத் தயங்கக் கூடாது. அதிகம் செல்லம் பெறும் குழந்தை, பெற்றோரை ‘ஏ.டி.எம்.’ மெஷினாக பார்க்கிறது. ஆசைகளை வகைப்படுத்த வேண்டும். சரி-தவறுகளை புரிய வைத்து நியாயமானதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.

கசக்காது கண்டிப்பு!

வீட்டில் சுதந்திரம் கிடைக்கப்பெற்ற குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென இருப்பார்கள். உடைப்பது, தொலைப்பது, விழுவது என ஏதாவது ஒரு களேபரம் நடந்தபடி இருக்கும். அப்போதெல்லாம் பெற்றோர் எடுக்கும் ஆயுதம் ‘அடி’ அல்லது அட்வைஸ். ‘இத்தனை நாட்களாக செல்லம் கொடுத்த அப்பாவும் அம்மாவும் வில்லன்களாக மாறிவிட்டார்களே’ என்று குழந்தைகள் காயப்படுவார்கள். ராணுவத்தனமான கண்டிப்பால் குழந்தையைத் திருத்த நினைப்பது தவறான விளைவையே ஏற்படுத்தும். குறும்பு செய்வது குழந்தைகளுக்கு கரும்பு சாப்பிடுவது மாதிரி.

அதைத் தடுக்க வேண்டாம். குறும்பின் எல்லை எது என்பதை குழந்தையுடன் ஆலோசித்து முடிவு செய்யலாம். எதையாவது தான் உடைத்து விடும் போது குழந்தை பயப்படுகிறது, அதிகமாகத் திட்டும் போது வெறுப்படைகிறது. அந்த நேரத்தில் ஆதரவான அணுகுமுறை அவசியம். தூங்கப் போகும் நேரத்தில் அன்று நடந்த விஷயங்களை அசை போட்டு, அளவுக்கு மீறிய குறும்பால் ஏற்பட்ட இழப்பு, ஆபத்து பற்றிச் சொல்ல வேண்டும். ‘நாளையில் இருந்து இப்படிச் செய்யக் கூடாது. பத்திரமாக இருக்க வேண்டும். எல்லாம் உன் பாதுகாப்புக்காகத்தான்...’ என்றெல்லாம் புரிய வைத்தால் கண்டிப்பும் கசக்காது.

தொடரும்...................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: அன்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்!

Post by krishnaamma on Tue Sep 16, 2014 7:43 pm

திணிப்புத் தேவையில்லை!

பல பெற்றோர் தாங்கள் வளர்ந்த சூழலை, பழக்கங்களை குழந்தைகளிடம் வெளிப்படுத்துகிறார்கள். இன்றைய குழந்தைகள் நம்மைவிட பல மடங்கு மேம்பட்ட சிந்தனைக்கான வாய்ப்புக் கொண்டவர்களாக வளர்கிறார்கள். ஒரு விஷயத்தை அவர்கள் அணுகும் விதமே வித்தியாசமாக இருக்கும். தங்களது விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்ட வார்ப்புகளாக குழந்தைகளை உருவாக்க முயற்சிக்கும்போது குழந்தைகள் பெற்றோரை விட்டு விலகிச் செல்கிறார்கள். திணிக்கப்படும் விஷயங்கள் குழந்தைகளால் விரும்பப்படுவதில்லை. இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தை ஆளும் மூளையையும் மனதையும் கொண்டவர்கள். கண்டங்கள் தாண்டியும் பல தலைமுறைகளின் தோள்களில் நின்றும் சிந்திக்கும் வல்லமை படைத்தவர்கள். இதைப் புரிந்து கொள்வது நல்லது.

வெற்றிக்கான விதை!

அன்பும் கண்டிப்பும் குழந்தைகளின் ‘கேரக்டர்’ உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கல்வி, பழக்கவழக்கம் இரண்டிலும் வெற்றியாளராகத் திகழ வளர்ப்பு முறையில் சரியான அணுகுமுறை அவசியம். ஒரு விஷயத்தைச் சரியாக செய்தால் பிடித்ததைப் பரிசளிக்கலாம்... விரும்பிய இடத்துக்கு அழைத்துச் செல்லலாம்... கதை சொல்லலாம்... பிடித்த பொருளை சேர்ந்து உருவாக்கலாம்! ஒவ்வொரு முறையும் புதுமையான பரிசுகளைத் தர வேண்டும் (சாக்லெட் முழுமையான பரிசு அல்ல). தவறு செய்யும் போது, குழந்தை விரும்பாத வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. புன்னகையுடன் எடுத்துக் கூறும்போது கண்டிப்பும் இனிக்கும்.

அவனாக மாறு!

குழந்தைகள் செய்யும் தவறை விளையாட்டாக உணர்த்த, தவறின் பாதிப்பை உணரச் செய்ய ‘ரோல் பிளே’ விளையாட்டு உதவும். தாய் குழந்தையாகவும், குழந்தை தாயாகவும் மாறிக் கொள்ளலாம். அம்மா அடம் செய்வதையும் குறும்பு செய்வதையும் கண்டிக்க முடியாமல் திணறும் குழந்தை! அதன் மூலம் தன் தவறுகள் எப்படி பெற்றோரை பாதிக்கின்றன என்பதை புரிந்து கொள்ளும். குழந்தைகளை எல்லாச் சூழலையும் எதிர்கொள்ளப் பழக்க வேண்டும். பிரச்னை வரும் போது அதிலிருந்து தப்பிக்கும் வழிகளைக் கற்றுத்தர வேண்டும். ‘அவன் இடத்தில் நீ இருந்தால் என்ன செய்வாய்?’ என்பது போன்ற மாற்றுச் சிந்தனைகள் மூலம் மாற்றத்தை உருவாக்கலாம்.

குழந்தைகளின் எதிர்பார்ப்பு!

எது சரி, எது தவறு என வலியுறுத்தப்படுகிறதோ, அதை மற்றவர்களும் பின்பற்றுகிறார்களா என்று கவனிக்கிறது குழந்தை. பெற்றோர் கடைப்பிடிக்கும் ஒழுக்க விதிகளை ஏற்றுக் கொள்கிறது. பெற்றோரிடம் அன்பையும் தேவைகளுக்கான உதவியையும் எதிர்பார்க்கிறது. பிரச்னையான சூழலில் நட்பையும் ஆதரவையும் தேடுகிறது. குழந்தையின் தேவையை அறிந்து, அதற்கேற்ப அன்பை வழங்கலாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது செல்லம், கண்டிப்பு இரண்டுக்குமே பொருந்தும்.


நன்றி : குங்குமம் தோழி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: அன்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்!

Post by krishnaamma on Tue Sep 16, 2014 7:50 pm

//கருவிலேயே தொடங்கலாமே!

‘செல்லம் கொடுப்பது’ குழந்தைகள் மீது காட்டும் மிகை அன்பு. கருவில் இருக்கும்போதே குழந்தையுடன் உரையாட வேண்டியது அவசியம். ‘உன் வருகைக்காக யாரெல்லாம் காத்திருக்கிறார்கள் பார்! உனக்குப் பரிசளிப்பதற்காக என்னவெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன் தெரியுமா? நீ எப்படி இருப்பாய் என்று வீட்டிலுள்ளவர்கள் எப்படியெல்லாம்

கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள் தெரியுமா..?’ - மனதால் தாய் பேசுவதை கருவில் வளரும் குழந்தை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கும். உணர்வுகளால் குழந்தையைத் தொட தாய்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அனுபவத்தை எந்தப் பெண்ணும் தவறவிடக் கூடாது. இந்தச் சிறிய கவனிப்பு குழந்தையின் பண்பை ஒழுங்குபடுத்தும்.//


மேலே உள்ள எல்லாமே சூப்பர் என்றாலும்....இது...............நானும் follow செய்தது புன்னகை நாரதர் சொல்வதை ப்ரஹல்லாதனும், அர்ஜுனன் சொன்னதை அபிமன்யுவும் கேட்கலையா என்று நான் அந்த காலத்திலேயே வயற்றில் இருக்கும் 'கிருஷ்ணா' விடம் இப்படி இப்படி இருக்கணும் என்று சொல்வேன் புன்னகை it works புன்னகைஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum